பென்ஸில்வேனியா பல்கலைக் கழகம் ஆய்வு ஒன்றை
மேற்கொண்டது – எப்படி மூட நம்பிக்கைகள் எனப்படும் சூப்பர்ஸ்டிஷன் பரவுகிறது என்பது
பற்றி.
ஒரு நம்பிக்கையும் இல்லாதவரும் கூட, ஒரு அமைப்பில்
இன்னொருவர் செய்வதைப் பார்த்து அதையே தானும் செய்கிறார். பலரும் இதை வழக்கமாகச்
செய்யும் போது அது ஒரு அர்த்தமில்லாத – மூட நம்பிக்கைப் பழக்கமாக மாறுகிறது;
பரவுகிறது.
திராவிடத் தம்பிகள் கோவிலில் மணி அடிப்பது,
தெய்வச் சிலைகளுக்கு மாலைகளை அணிவிப்பது, கோபுரத்தை நோக்கிக் கும்பிடுவது,
அர்ச்ச்னை செய்வது உள்ளிட்ட ஏராளமான வழிபாட்டு வழக்கங்களைக் கிண்டல் செய்வது
வழக்கம்.
ஆனால் என்ன ஆயிற்று?
தலைவர் சமாதிக்குச் செல்லும் போது செருப்பைக்
கழட்டி விட்டுத் தான் உள்ளே செல்ல வேண்டும்.
ஊதுபத்தி ஏற்றி வைக்கலாம் சமாதியில்.
கும்பிடலாம் – கையெடுத்து.
அந்தச் சிலைகளைப் பார்த்து ஆனந்திக்கலாம்; கண்ணீர்
வடிக்கலாம்.
அதை மதிப்புடன் நோக்கலாம்; வழிபடலாம்.
அதற்கு ஒருவர் அவமரிதையாக ஏதேனும் செய்து விட்டால்
அவ்வளவு தான் – ஊரே களேபரம் அடையும்.
அட, நீங்கள் தானே சொன்னீர்கள், சிலையை இழித்துப்
பேசினால் சிலை என்ன பேசவா செய்யும் என்று.
ஊது பத்தி எதற்கு, செருப்பை ஏன் அவிழ்க்க வேண்டும்
என்று நீங்கள் தானே சொன்னீர்கள்?
ஆனால் பகுத்தறிவு மழுங்கி, புதிய மூட நம்பிக்கைகளை மேற்கொண்டு விட்டீர்களே!
இரண்டு வண்ணக் கொடி எதற்கு, ஒரு சின்னம் தான்
எதற்கு? அதற்கு வணக்கம் தான் ஏன், அதை மதிப்பது தான் எதற்கு?
ஏன் பேச்சில் கூட அனைவரும் ஒரே பாட்டர்னைப்
பின்பற்றுவது தான் ஏன்? “வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டு” ஊரிலுள்ள அனைத்துப் பெயர்களையும் விளித்து
அழைத்து … அடடா, எத்தனை மணித்துளிகள் வேஸ்ட்!
மூட நம்பிக்கைகளை ஒழிக்கப் பிறந்த பகுத்தறிவுத்
தம்பிகள் வளர்க்கும் புதிய மூட நம்பிக்கைகள்!
இது முந்தையதை விட மோசமானது.
அங்கு மனிதனைத் துதி பாடவில்லை.
இங்கு “செத்து மாயும்” மனிதனைத் தெய்வமாக்கி விடுகிறார்கள்!
அடடா, என்ன ஒரு பகுத்தறிவு!
இதைத் தான் பென்ஸில்வேனியா ஆய்வு நன்கு ஆராய்ந்து
தனது முடிவைச் சொல்கிறது.
“ஒருவனை இன்னொருவன் பார்க்கிறான்; அதன் படி
நடக்கிறான்; அது நாளடைவில் ஒரு பழக்கமாக நம்பிக்கையாக மாறுகிறது.”
ஆனால் ஹிந்து மதத்தில் ஏற்பட்டுள்ள பழக்க
வழக்கங்கள் உள்ளுணர்வினால் உந்தப்பட்டு மந்திரங்களைக் கண்ட மஹரிஷிகளால்
ஏற்படுத்தப்பட்டவை.
இவை பற்றிய ஆய்விற்கு அறிவியல் வரவில்லை; வந்தால்
ஒரு வேளை, வியத்தகும் விஷயங்கள் வெளியாகலாம்.
அதனால் தான் விவேகானந்தர் கூறினார் “நமது
மஹரிஷிகள் காலத்தினால் மிகவும் முற்பட்டவர்கள்; அவர்களை சரியாக் அறிந்து கொள்ள
வெகு காலம் ஆகும்” என்று.
அறிவியல் வளர வளர ஹிந்து மதத்தின் நம்பிக்கைகள்,
பழக்க வழக்கங்கள் வியப்பை ஊட்டுகின்றன. அதை அறிவியல் விளக்கும் போது
பிரமிக்கிறோம்.
பகுத்தறிவுகளின் புதிய மூட நம்பிக்கைகள் காலத்தால்
அழிந்து படுபவை. ஆனால் மாறாத நியதிகள் உடைய ஹிந்து பாரம்பரியப் பழக்கங்கள்
உள்ளர்த்தம் கொண்டவை, நீடித்து நிலைப்பவை! இது தான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்!
இவற்றைப் போற்றி அதன் படி நடப்பது நமக்குச்
சிறப்பை அளிக்கும்!
வத்தக்குழம்பு வைப்பது எப்படி? (Post No.6286) by S Nagarajan
யாருடி போன்? திருப்பித் திருப்பி ஆஃப் செய்றே?
“அது தான் என் ஃபிரண்டும்மா. லக்ஷ்மிம்மா. வெளியூர்லேர்ந்து வந்திருக்கே. பசிங்கறே! இப்ப அவளோட பேச ஆரம்பிச்சா நீ சாப்ட்ட மாதிரி தான். அதான் அப்பறம் பேசிக்கலாம்னு போனை ஆஃப் பண்றேன்.”
“அட, லக்ஷ்மியா! அவளை ஏண்டி கட் பண்றே! அப்படி என்ன பேசுவா, அவ?”
“வத்தக்குழம்பு எப்படி வைக்கறதுன்னு கேட்பா. மோர்க்குழம்பு எப்படி செய்றதுன்னு கேட்பா! அப்பறம் நாளைக்கு விடிஞ்சு போகும்.”
“சீ! அபத்தமா பேசாதடி. அஞ்சு நிமிஷத்திலே நான் சொல்லிக் கொடுத்திடுவேன். அவளைக் கூப்பிடு. அவள் க்ஷேமமா இருக்காளான்னு கேட்ட மாதிரியும் இருக்கும்”
“அம்மா, உனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைன்னு நெனக்கிறேன். நீ இன்னிக்கி பசிலே மயக்கம் போட்டு விழப்போற. எதுக்கும் டாக்டர் இருக்காரான்னு செக் பண்ணிக்கறேன்.”
“எந்த பிராண்டு மாமி. பிஸ்லேரி தான் ஒசத்திங்கிறா. ஆனா என்கிட்ட பட்டர்பிளை தான் வரது”
“பட்டர்பிளையா! அது பறக்கலையோன்னோ. பறக்காம இருந்தா சரி, அதையே வச்சுக்கோ. கொதிக்க வை”
“மாமி எத்தனை டம்ளர்னு சொல்லலையே மாமி”
“உத்தேசமா நாலு டம்ளர் எடேன்”
“டம்ளர் எத்தனை மில்லி லிட்டர் மாமீ?”
“ஓ, அதைக் கேட்கறயா, 150 மில்லி லிட்டர் டம்ளர்லே எடேன்”
கொதிக்க வை.
“மாமி, டெம்ப்ரேச்சர் எவ்வளவு இருக்கணும் மாமி?”
“இதென்னடிம்மா, கேள்வி. கொதிக்கணும் அவ்வளவு தான்!”
“டெம்பரச்சர் சொன்னா சௌகரியமா இருக்கும்”
‘ஒரு நூறு டிகிரி வச்சுக்கோயேன்”
“மாமீ, பாரன்ஹீட்டா, செண்டிக்ரேடா”
“நல்ல வேளை, கெல்வினை விட்டுட்டயே. எனக்குக் கொஞ்சம் தலை சுத்தறது. கொதிக்க வச்சயா இல்லையா?”
“மாமி, கோபிச்சுக்காதேள். நல்ல விவரமா சொல்றேள். அப்பறம்?”
“புளியைத் தனியாக் கரை”
‘எந்தப் புளியை மாமி, கொட்டை இருக்கறதா, இல்லை, கொட்டை எடுத்ததா? மங்களூர் புளியா இல்லை, பிராண்டட் புளியா?”
“ எது கிடைக்கறதோ அதை எடுத்துக்கோ. நன்னா, கரை.’
“எப்படி கரைக்கறது மாமி. வெறும் கையாலயா, க்ளவுஸ் போட்டுக்கணுமா?”
“ஏண்டீ, நீ லாஸ் ஏஞ்சலஸ்லேர்ந்து எப்ப வந்தே? அங்கே ஏதோ கோர்ஸ் படிச்சயாமே, அங்க எப்படி கரைக்கச் சொன்னா?”
“மாமீ! கோபிச்சுக்காதேள். சில சமயம் க்ளவுஸ் போட்டுக்கணும். சில சமயம் கூடாது. சரி புளியைக் கரைக்கறேன். எவ்வளவு கிராம்னு சொல்லலை. அதை உருட்டணுமா, ஸ்குய்ரா போடணுமா, ரெக்ட் ஆங்கிளா ஆக்கணுமான்னும் சொல்லலே!”
“அடி லக்ஷ்மீ! அம்மா மயக்கம் போட்டுட்டா. புளியை கரைச்சு வச்சுக்கோ. ஞாபகமா அடுப்பை ஆஃப் பண்ணிடு. எப்படி ஆஃப் பண்ணணும்னு ஆரம்பிச்சுடாதே. சௌகரியப்பட்டபடி ஆஃப் பண்ணு. இப்ப நான் போனை ஆஃப் பண்றேன்.”
கோபால
கிருஷ்ணபாரதியார் ஒரு யோகி, கவிஞர், சங்கீத
மேதை.
அவர்
நரிமணம் என்னுமிடத்தில் 1811ம் ஆண்டில் பிறந்து புகழ் கொடி
நாட்டியவர்.
அவர்
பற்றிய சுவையான இணைப்பைப் படிப்பதற்கு முன் சில் வார்த்தைகள்:–
அவர்
வாழ்நாள் முழுதும் பிரம்மச்சாரி.
தந்தை
பெயர்—
ராமசாமி பாராதியார்
தாத்தா
பெயர்–
கோதண்டராம ஐயர்
குருவின்
பெயர்– கோவிந்த
சுவாமி ஐயர், மாயூரம்
சீடர்களில்
முக்கியமானவர்- மாயவரம் முனிசீப் வேத நாயகம் பிள்ளை
இறந்த
ஆண்டு- 1896
நந்தனார்
சரித்திரம் நூலாக வர உதவியவர் – பிரெஞ்சு அதிகாரி- சீசய்யா.
கோபால
கிருஷ்ண பாரதியார் ,
தனது
படைப்பில் பல புதுமைகளையும் சேர்த்தார்.
பெரியபுராணம், நம்பியாண்டாரின் திருத்
தொண்டத்தொகையில் மிகச் சுருக்கமாக நந்தன் சரித்திரம் உளது. அதில் அந்தணர்ர்-
நந்தன் வாக்குவாதம்,
இரவில்
சிவ பெருமானே விவசாய வேலைகளைச் செய்து அந்தண நில உரிமையாளரை வியக்கச் செய்தது
முதலிய சில அம்சங்களை கோபால கிருஷ்ண பாரதியார் சேர்த்தார். பிற்காலத்தில் அவரது
கீர்த்தனைகள் தண்டபாணி தேசிகர் முதலிய சங்கீத மேதைகளால் பாடப்பட்டதாலும்
திரைப்படப் பாடல்களாக வந்ததாலும் மிகவும் பிரபலமாகின.
ஏப்ரல் 2019 கோகுலம் கதிர் மாத
இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
தங்கம் தரும் மயக்கம்!
ச.நாகராஜன்
தங்கத்தின் சக்தி தான் எப்படிப்பட்ட சக்தி! தங்கம் என்றவுடன்
அனைவரும் மகிழ்ந்து புன்னகை பூத்து மகிழ்வர்.
உலகம் முழுவதும் நாடு, மதம், இனம், பால், மொழி, அந்தஸ்து ஆகிய
எந்த வித பேதமும் இன்றி அனைவராலும் போற்றப்படும் ஒரு வசீகர சக்தி தங்கம் தான்!
நாம் தங்கத்தைப் பிடித்திருக்கிறோமா அல்லது தங்கம் நம்மைப் பிடித்து ஆட்டுகிறதா என்பது தான் தெரியவில்லை என்று பீட்டர் எல்பெர்ன்ஸ்டீன் தனது நூலான ‘தி பவர் ஆஃப் கோல்ட்’-இல் கூறுகிறார்.
தாலிக்கு கொஞ்சமேனும் தங்கம் இல்லா வாழ்க்கை பாரதப் பெண்களைப்
பொறுத்த மட்டில் வாழ்க்கையே இல்லை.
உலகில் எவ்வளவு தங்கம் இருக்கிறது தெரியுமா? பூமியில் உள்ள நிலப்பரப்பு
முழுவதையும் மூடினால் முழங்கால் அளவுக்குத் தங்கம் இருக்கிறதாம்!
இதற்கு மதிப்பு எல்லா நாட்டிலும் இருந்தாலும் நமது நாட்டில்
இதற்கு மவுசு ஒரு படி கூடத்தான்!
இந்தியாவில் எல்லா இல்லங்களிலும் இருக்கும் தங்கம் எவ்வளவு என்று
யாருக்கும் தெரியாது, அவ்வளவு தங்கம்! என்றாலும் கூட ஒரு உத்தேச மதிப்பீட்டின் படி
சுமார் மூன்று லட்சம் டன் தங்கம் இந்தியாவில் இருக்கிறதாம்..
அழகுக்கு அழகு செய்கிறது;ஒரு கம்பீரத்தையும் கௌரவத்தையும் தருகிறது.
பணம் இருக்கிறது என்கிற அந்தஸ்தைக் காட்டுகிறது; ஆபத்துக் காலத்தில் கை கொடுத்து உதவுகிறது;
எப்போது வாங்கினாலும் நாள் செல்லச் செல்ல மதிப்பு கூடிக் கொண்டே போகிறது.
ஆகவே தான் தங்கம் சிறந்த முதலீடு என்று கருதப்படுகிறது.
பிக்ஸட் டெபாசிட், ம்யூச்சுவல் ஃபண்ட், ஷேர், வெள்ளியில் முதலீடு,
ஆங்காங்கே நிலம் அல்லது வீடு வாங்கல் ஆகிய எந்த முதலீட்டை எடுத்துக் கொண்டு பார்த்தாலும்
தங்கத்தில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை என்பது உண்மை தான்!
உலகெங்கும் இதுவரை 1,65,446 டன்கள் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு ஒலிம்பிக் அளவிலான இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பி விடலாம். இதில் ஐம்பது சதவிகிதம் சென்ற 50 ஆண்டுகளில் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு லட்சம் டன்னுக்கு மேல் தங்கம் பூமியில் புதைந்து கிடக்கிறது.
பல விசித்திர குணாதிசயங்களைக் கொண்டுள்ள ஒரு உலோகம் என்பதால்
இதை அறிவியல் அறிஞர்கள் கூட சற்று மயக்கத்துடன் தான் பார்க்கிறார்கள்.
இதன் அடர்த்தி எண் மிக அதிகம்.இது மிக கனமான உலோகமும் கூட! தண்ணீரை
விட 19.3 மடங்கு அதிகம். அதே சமயம் இதை எப்படி வேண்டுமானாலும் நீட்டிக்கலாம்; பல்வேறு
வடிவங்களாக அமைக்கலாம். மற்ற உலோகங்களை ஒப்பிடுகையில் இது மிக மிருதுவானதும் கூட! ஒரு
கிராம் தங்கத்தை ஒரு சதுர மீட்டர் தங்கத் தகடாக மாற்றலாம். அந்தத் தகடில் ஒளி ஊடுருவிப்
பாய்ந்து தகதகத்து நம்மை மயக்கும்; மகிழ்விக்கும்!
31 கிராம் தங்கத்தை மெல்லிய கம்பியாக மாற்றினால் அது 100 கிலோமீட்டர்
தூரம் இருக்கும்!
தங்கத்தின் மீது எந்தக் கெமிக்கலும் தன் “வேலையைக்” காண்பிக்க முடியாது.
மிகச் சில இரசாயனங்களே தங்கத்தைத் “தாக்க” முடியும்..
ஆயிரக் கணக்கான ஆண்டுகள் மண்ணுக்குள் புதைந்து கிடந்தாலும் கூட
அதன் பளபளப்புப் போகாது.
அழகான சிவந்த மங்கையரின் மார்பிலும் தலையிலும் இடையிலும் காலிலும்
வெவ்வேறு ஆபரணமாக மாறி அது தவழும் போது அதன் மதிப்பும் தனி தான்; அதை அணியும் அழகியின்
மதிப்பும் தனி தான்!
ஒரு நாட்டின் பணத்தின் மதிப்பு பண வீக்கத்தால் மாறுபடலாம்; அரசியல்
மாற்றங்களால் செல்லாமல் போய் விடலாம். அரசாங்கம் நோட்டுக்களை ‘டீமானிடைசேஷன்” செய்து மதிப்பிழக்கச்
செய்யலாம்.
நிலம், வீடு போன்றவை இயற்கைச் சீற்றத்தால் அழிந்து படலாம்; மதிப்புக் குறையலாம்.
ம்யூச்சுவல் ஃபண்ட், ஷேர்கள் நூற்றுக் கணக்கான காரணங்களால் மதிப்பை
இழந்து முதலீட்டு விலையை விடக் குறையலாம், ஏன் ஜீரோ என்ற அளவிற்கு தாழ்ந்து போகலாம்.
ஆனால் தங்கம் ஒன்று மட்டுமே தன்னம்பிக்கை தரும் ஒரு பாதுகாப்பான
இன்வெஸ்ட்மெண்டாக காலம் காலமாக இருந்து வருகிறது. மதிப்பும் குறையாது; மானத்தையும்
இழக்க விடாது!
வீட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் தங்கம் உதவுவதில்லை;
நாட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் கூட உதவிக்கு ஓடி வருவது தங்கம் தான்!
சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் ஒரு பிரச்சினை எழுந்த
போது அந்த நாட்டின் பிரதமர் மஹாத்திர் முஹம்மது அந்த நாட்டு மக்களிடம் தங்களிடம் உள்ள
தங்கத்தை அரசாங்கத்திடம் தற்காலிகமாக முதலீடு செய்து தங்கப் பத்திரத்தைப் பெற்றுக்
கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார். மலேசிய மக்களும் அவரது வேண்டுகோளை ஏற்றுத் தங்கத்தை
முதலீடு செய்து தங்கப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டனர். தங்கம் அரசின் பொக்கிஷத்தை
நிரப்பிய போது நிலைமை சீர் திருந்தியது. உடனே மலேசியா அரசாங்கம் தங்கத்தை மக்களிடம்
திருப்பித் தந்தது.
பெரு நாட்டில் ஏராளமான தங்கச் சுரங்கங்கள் உள்ளன. அதில் சுரங்க
வேலை செய்யச் செல்வோர் கிளம்பும் போது வீட்டாரிடம், “அல் லேபர் மில் வாய் நோ சே சி
வொல்வேர்” என்று சொல்வார்களாம். அதாவது, “வேலை செய்யப் போகிறேன். திரும்பி
வருவேனோ வரமாட்டேனோ தெரியாது” என்பது இதன் பொருள். இப்படிச் சொல்லி விட்டு சுரங்க வேலைக்குச்
சென்றால் ஒரு வேளை இறந்து விட்டாலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஏராளமான நன்மை
வந்து சேருமாம்.
தங்கத்திற்காக உயிரை விடக் கூடத் தயார் என்பதையே இது காட்டுகிறது.
பெரு நாட்டில் மட்டுமல்ல; நமது நாட்டிலும் கூட எதை இழந்தாலும்
இழக்கத் தயார்; ஆனால் தங்கத்தை இழக்கத் தயாரில்லை” என்பது தான்
நிலை.
அப்படிப்பட்ட அருமையான மஞ்சள் உலோகத்தை ‘இன்வெஸ்ட்மெண்ட் டாப்’ என்று சொல்வதில்
என்ன தவறு இருக்கிறது?