சுவாமி இந்து குறுக்கெழுத்துப் போட்டி-1(Post No.5550)

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 17 October 2018

 

Time uploaded in London – 6-39 AM

(British Summer Time)

 

Post No. 5550

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

விடை அடுத்த குறுக்கெழுத்துப் போட்டியில் வெளியாகும்

குறுக்கே

3.மலைமகளின்  நாமம்

5.கண்ணன் அருளியது

6.வேதகால இலக்கியம்

9.பாக்களின் பெயர் கொண்ட பாவை

11.காவிரியை உண்டாக்கிய முனி

13.செல்வ தேவதைகள் 8

14.இறந்தோருக்கு அளிப்பது

15.அயோத்திமன்னன் கதை

16.சிவனின் மனைவி

17.சர்ச்சைக்குரிய குந்தி மகன்

18.காற்றுக்கு அதிபதி

19.கடலுக்கு அதிபதி

20.தேவனின் எதிரி

25.நாட்டின், நூலின் பெயர்

26.கடவுளின் வாஹனம்

28.தீ வழிபாடு

  1. தீயின் அதிபதி

 

கீழே

1.ராமனின் மனைவி

2.முதல் தெய்வம்

3.பாவம் செய்தவன்

4.சிவனின் படை

7.கிருஷ்ணன், காதலி திருமணம்

8அன்னைக்கு அடுத்த தெய்வம்

9.சிவன் கழுத்தில் இருப்பது

12.நெற்றியில் வைப்பது

13.வேத கால பெண் தெய்வம்

14.நீத்தார் நினைவு தினம்

20.ராமனின் கால்பட்டு எழுந்தவள்

21.தேவலோக நர்த்தகி

22.விஷ்ணுவும் சிவனும்

23.ஐந்தெழுத்து

  1. ஓரெழுத்து மந்திரம்

27.முனிவர்கள் செய்வது

30.கலைமகள்.

 

–சுபம்–

யானை பொம்மை பற்றிய ‘மூட நம்பிக்கை’! (Post No.5546)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 October 2018

Time uploaded in London – 7-04 AM

(British Summer Time)

Post No. 5546

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

யானை பொம்மை பற்றிய ‘மூட நம்பிக்கை’! (Post No.5546)

மூட நம்பிக்கைகள் பற்றிய ஒரு ஆங்கிலப் புஸ்தகம் லண்டன் பல்கலைக் கழக லைப்ரரியில் கிடைத்தது. அதில் பல விநோத நம்பிக்கைகள். ஒன்று யானை பற்றியது. நான் இதுவரை கேள்விப் பட்டத்தில்லை. லண்டனில் என் வீட்டிலும் நிறைய மர யானை பொம்மைகள்  உண்டு. அவை ஒவ்வொன்றும் நவக் கிரஹங்கள் போல ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றன. இப்படி நிற்கக் கூடாதாம். வெள்ளைக்காரர்கள் சொல்கிறார்கள்.

“மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை”

என்னும் திருமூலர் பாடலின் தத்துவம் பற்றி காஞ்சி பரமாசார்யார் சொல்லிவிட்டார். அதற்கு மேல் நாம் சொல்ல என்ன இருக்கிறது?

இருந்த போதிலும் திருமூலர் காலத்திலிருந்து மர யானை பொம்மைகள் தமிழ் நாட்டில் இருந்தது தெரிகிறது. எங்கள் மதுரையில் புகழ்பெற்ற கல் யானை கூட உண்டு. ஆண்டுதோறும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பவனி வந்து கல்யானைக்கு கரும்பு கொடுத்த திருவி  ளையாடல் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

யானையின் அபார ஞாபக சக்தி, பழி வாங்கும் குணம், உ.வே.சாமிநாத ஐயர், காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சொன்ன யானக் கதைகள், சங்க இலக்கியத்தில் தமிழ்ப் பெண்ணின் பாடலுக்கு மயங்கி தானியக் கதிர்களைச் சாப்பிடாமல் நின்ற யானை, புத்தர், மஹாவீரர் ஆகிய பெரியோர்களின் தாய்மார்களின் கனவில் தோன்றிய

யானைகள், புத்தர் முன் மண்டியிட்ட யானை, யானை லத்தி காப்பிக் கொட்டை ஸ்பெஷல் காப்பி, கஜ சாஸ்திரம், கோவில்களில் கஜ பூஜை, யானைக்கு உள்ள பல பெயர்கள்– என்று நூற்றுக் கணக்கான யானை புராணங்களை எழுதிய எனக்கு நேற்று ஆங்கிலப் புஸ்தகத்தில் படித்த செய்தி வியப்பு அளித்தது.

அதாவது வீட்டில் யானை பொம்மையோ, வரைபடமோ, காலண்டரோ எது இருந்தாலும் அது வாசல் கதவை நோக்கிய வண்ணமாக இருக்க வேண்டுமாம்! அப்படியில்லாவிடில் துரதிர்ஷ்டமாமம்!!!

 

ஒரு லண்டன் வாசி எழுதுகிறார்,

என் வீட்டில் மர யானை பொம்மைகள் உண்டு. நண்பர் ஒருவர் என் வீட்டுக்கு வந்தார். நான் சொன்னேன்; நான் சரியான அதிர்ஷ்டக் கட்டை. ராமே ஸ்வரம் போனாலும் சனைஸ்சரன் விட மாட்டான் என்ற பழமொழி போல எனக்கு யானை பொம்மை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லை. உடனே என் ஆங்கில நண்பர் சொன்னார்:– அட, உங்களுக்குத் தெரியாதா? யானை பொம்மையை வாசலை நோக்கி வரவேற்பது போல வைக்க வேண்டும் என்று.

அன்று முதல் யானை பொம்மையை வாயில் திசை நோக்கி வைத்தேன். பின்னர், ஒரே அமோகம் தான்.

 

யானை முடி தாயத்து!

இன்னொரு பெண்மணி எழுதுகிறார்– யானை பொம்மை, யானை முடி தாயத்து– இவை எல்லாம் அதிர்ஷ்டச் சின்னங்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? ஆனால் பொம்மை வாசலை நோக்கி இருக்க வேண்டும்.

இன்னொரு பெண்களுக்கான பத்திரிக்கையில் ஒரு குறிப்பு:

எனது அப்பா திடீரென்று இறந்து போனார். பின்னர்தான் தெரிந்தது. எதேச்சையாக யாரோ கை பட்டு எங்கள் வீட்டு யானை பொம்மை திசை மாறித் திரும்பி இருந்தது என்று. அதாவது அவர் மரணம் அடையப் போவதை, யானை முன்னரே தெரிந்து கொண்டுவிட்டது.

இன்னொரு அன்பர் பத்திரிக்கையி     எழுதுகிறார்; அவர் கிண்டல் செய்கிறாரோ, உண்மையைச் செப்புகிறாரோ; துப்பு எதுவும் கிடைக்கவில்லை. அவர் மப்புடன் எழுதியது இதுதான்:

உங்களுக்குத் தெரியாதா?

யானைக்கு என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டால் மதம் பிடித்துவிடும். ஆகையால் வாயிற் கதவுகளை நோக்கி வையுங்கள்.

 

மற்றொரு பெண்மணி யானை முடி தாயத்து  அதிர்ஷ்டம்

அளிக்கும் என்கிறார். நான் குருவாயூர்

அருகில் உள்ள யானை முகாமுக்கு சென்றிருந்தேன். அங்கு 50, 60 யானைகளைப் பராமரிக்கிறார்கள்.

சிலர் யனைப் பாகனுடன் ‘கிசு கிசு’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன என்று கேட்ட போது தமிழும் மலையாளமும் அறிந்த ஒருவர் எனக்கு விளக்கினார். யானை முடி வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டுமாம். அவர் கண்ணுக்கு முன்னால் யானையின் வால் முடியைப் பிடுங்கி நமக்குக் கொடுப்பாராம். எனக்கு அதிர்ஷ்டமும் வேண்டாம்; யானை முடியைப் பிய்த்து அதைக் கொடுமைப் படுத்திய பாவமும் வேண்டாம் என்று சொல்லி விட்டு நைஸாக நகர்ந்து விட்டேன்.

இதில் வேடிக்கை என்ன வென்றால், யானையை உலகிற்குக் காட்டியவனே இந்தியந்தான். ஆப்பிரிக்கவின் புகழ்மிகு எகிப்திய ஓவியங்களில் யானையே இல்லை. தென் கிழக்காஸிய நாடுகள் முழுதும் இந்திரனின் அதிர்ஷ்டக்கார வெள்ளை யானை ஐராவதம்தான் சி   லைகளிலும், கொடிகளிலும்!!! தாய்லாந்து போன்ற நாடுகளின் அரசாங்க சின்னங்களிலும் உளது.  தமிழ்நாட்டுக் கோவில்களில் பூமியைக் காக்கும் அஷ்ட திக் கஜங்கள் என்னும் எட்டு யானைகள் கர்ப்பக்கிரஹத்தைச் சுற்றிலும் உள. சங்க இலக்கியப் பாடல்களில் யானைக் குறிப்புகள் பற்றி ஒரு ஆராய்ச்சி புஸ்தமே உளது. ஸரஸ்வதி மஹால் லைப்ரரி (தஞ்சாவூர்) யில் கஜ சாஸ்திரம் இருக்கிறது.

ஸிந்து-ஸர்ஸ்வதி நாகரீக முத்திரையில் யானைப் படம் உளது; ஆயினும் ஆப்பிரிக்காவில் தந்த சிற்பங்கள் உள. யானைப் படமோ சிலையோ இல.

யானை என்னும் பிராணி வெப்ப மண்டல நாட்டுப் பிராணி. அது ஐரோப்பியா சென்றது 2000 ஆண்டுகளுக்கு முன்னர்தான். டேரியஸ், அலெக்ஸான்டர் ஆகியோர் படை எடு  , ப்புக்கு முன்னால் அவர்கள் யானையைப் பார்த்தது இல்லை. மாமூத் போன்ற யானையின் மூதாதையர் இருந்ததோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் அப்படி இருந்தும் யானை பொம்மை பற்றி இவ்வளவு நம்பிக்கைகள் எப்படிப் பரவின என்பது ஆரய்ச்சிக்குரிய விஷயம்.

(யானை பற்றிய என்னுடைய ஆங்கிலக் கட்டுரையில் வெள்ளைக்காரர்களின் பெயர்களையும் புஸ்தகம், பத்திரிக்கைகளின் பெயரையும் கொடுத்துள்ளேன்)

“பொம்மையில் மறைந்தது மாமத யானை

பொம்மையை மறைத்தது மாமத யானை”– ஆங்கிலத் திருமூலர்.

யானைகள் வாழ்க!!

–SUBAHM–

அதர்மம் செய்பவன் குடும்பதோடு அழிவான்- மநு பயங்கர எச்சரிக்கை! (post No.5542)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 15 October 2018

 

Time uploaded in London – 8-39 am

(British Summer Time)

 

Post No. 5542

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மநு நீதி நூல்- PART 29

மநு என்பவர் வேத காலத்தில் வாழ்ந்தவர் என்பது ரிக் வேத துதிகள் மூலம் தெரிகிறது. அப்படியானால் இற்றைக்குக் குறைந்தது 3500 ஆண்டு முதல் 8000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும். ஆயினும் இன்று நம்மிடம் இருக்கும் மநு தர்ம சாஸ்திரம் பல முறை மாறுதல்களுக்கு, இடைச் செருகல்களுக்கு, உள்ளாக்கப்பட்டுள்ளது. 2600 ஸ்லோகங்களுக்கு மேல் உள்ள மநு தர்ம நூலில் 40 + ஸ்லோகங்கள் சூத்திரர்களுக்கு எதிராக உள்ளது. திராவிடங்களும் மார்கஸீயங்களும், யாரும் பின்பற்றாத இந்த மநு நூலை வைத்துக் கொண்டு அவ்வப்போது கூச்சல் போடுவது நகைப்பை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்ல அந்தக் கும்பல்களுக்கு பணம் கொடுக்கும் பேர்வழிகள், மதம் மாற்றக் கும்பல்கள் யார் என்பதையும் வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. பெண்களைப் பாராட்டி மநு எழுதிய ஸ்லோகங்களை வெளி உலகிற்குக் காட்டாமல் மறைப்பதால் இவர்கள் பெண்களை எதிர்க்கும் அயோக்கியக் கும்பல் என்றும் புரிகிறது. 2600+ ஸ்லோககங்களில் இடைச் செருகலாக வந்த ஸ்லோகங்களைப் பார்க்கையில் உலகம் கண்டறியாத மஹா ‘ஜீனியஸ்’ மநு என்றும் புரிகிறது.

 

அது மட்டுமல்ல. பிராஹ்மணர் அல்லாத எல்லோரையும் சூத்திரர் என்று திராவிடங்களும் மார்கஸீயங்களும் முத்திரை குத்தி இந்தியாவிலுள்ள நூறு கோடிப்பேரை சூத்திரர் என்றும் காட்டி வருகிறது. வெள்ளைக்காரன் எழுதிய புத்தகங்களில் ‘ஆர்ய’ என்ற சொல்லை இனச் சொல்லாகக் காட்டப்பட்டுள்ளது. ‘படித்தவர்கள்’, ‘பண்பாடு உடையவர்கள்’ என்ற உரிச்சொல்லை இனப் பெயர்ச் சொல்லாக பயன்படுத்தி மக்களை திசை திருப்பியுள்ளனர். ஆக ஒவ்வொருவரும் 2600 ஸ்லோகங்களையும் படித்து அதில் இக்காலத்துக்கு உரிய விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

சொல்லப்போனால்  அடிமைகளையும் பெண்களையும் ஐரோப்பியர்கள் மிருகங்களாக நடத்திய காலத்தில்—(நமது காலத்திலேயே தென் ஆப்ரிக்காவிலும், அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் கறுப்பர்களையும் பழங்குடி மக்களையும்– மிருகங்களாக நடத்தியதை நாம் அறிவோம்). —அப்படியில்லாமல் 2500 அல்லது 8000 ஆண்டுகளுக்கு முன் இந்து சமுதாயம் எப்படி இருந்தது  என்பதைப் பார்க்கையில் நாம் வெட்கப்பட எதுவுமே இல்லை. முழு மானவ தர்ம சாஸ்திரத்தையும் படிப்பவர்கள் இதை அறிவர். அரை வேக்காடுகள், தனக்குப் பிடித்த 40, 50 இடைச் செருகல்களைக் காட்டி கூத்தடிப்பர்.

அதர்மம் செய்பவன் குடும்பதோடு அழிவான்- மநு பயங்கர எச்சரிக்கை! (post No.5542)

 

மநுநீதி நூலின் நாலாவது அத்தியாயத்தைத் தொடர்ந்து காண்போம்..

முதலில் சுவையான, முக்கியமான விஷயங்கள்

 

(ஸ்லோகங்கள் 4-154 முதல் காண்போம்.)

 

ஸ்லோகங்கள் 4-156- 158 யார் நீண்ட காலம்   வாழ்வான் என்று கூறுகிறது

ஸ்லோகங்கள் 160-162

வேலையில் எது  இன்பம் தரும்,  எது துன்பம் அளிக்கும் என்றும் விளக்குகிறார்.

எது நல்லது எது கெட்டது என்பதை  விளக்குகையில் மனதுக்கு இன்பம் பயக்கும் எல்லா நல்ல விஷயங்களும் நல்லது என்கிறார்

அடிமை போல வேலை செய்வது நல்லதல்ல; மனச் சாட்சிப்படி நடப்பதே மகிழ்ச்சி தரும் என்று மநு சொல்வதைப் பார்க்கையில் பெரும் அனுபவசாலி, உளவியல் நிபுணன் என்பது புலப்படும்

 

4-166 பிராமணர்களை பிராமணன் கூடத் தாக்கக் கூடாது; அப்படி தாக்கினால் நரகம், 21 பிறவிகள் ஏற்படும் என்பார்.

 

ஸ்லோகம் 172-174 கெட்டது செய்வோரை தெய்வம் நின்று கொல்லும், அதுவும் குடும்பத்தை வேரோடு சாய்த்து விடும். முதலில் நல்லது நடப்பது போலத் தோன்றினாலும் இறுதியில் அழிந்தே போவான் என்று எச்சரிக்கிறார். அரசன் “அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்” என்னும் தமிழ்ப் பழமொழியை நினைவு படுத்துகிறார்.

 

கெட்டது செய்தோர் உலகில் நன்றாகதானே இருக்கிறார்கள்; தருமமே பொய்யோ என்று வியக்கிறோம். இதை மநுவும் அறிவார். பசு புல்லைத் தின்னுவீட்டு உடனே பால் தருவது போல   இல்லை இது. மெதுவாக ஒருவனை அதர்மம் கொல்லும். முதலில் நன்றாக இருப்பது போலத் தோன்றி பரம்பரையோடு அழிவான் என்று  பயங்கர எச்சரிக்கை கொடுக்கிறார்.

இங்கே பசு உவமை போல, பல இடங்களில் பூனை போல நடப்பவனையும் எச்சரிக்கிறார்.

4-178 பெரியோர் போட்ட பதையைப் பின்பற்று என்று கூறுகிறது.

 

4-179 முதல் 4-185 வரையுள்ள ஸ்லோககங்களில் சடுகுடு விளையாடும் சிறுவர் முதல் குடுகுடு கிழவனார் வரை- மனைவி மக்கள், உறவினர், வேலைக்காரர்கள் ஆகியோரை மதிக்கச் சொல்லிவிட்டு யார் யார் என்ன லோகத்துக்கு அதி தேவதை என்றும் பின்னர் மொழிவார்.

4-180, 4-185 வேலைக்கார்களை எப்படி மதிக்க வேண்டும் என்று காட்டும்

4-186 பிராஹ்மணர்களை தானம் பற்றி எச்சரிக்கிறது. அதிக தானம் வாங்கிப் பழகாதே; அதற்கு அடிமையாகிவிடாதே என்று சொல்கிறது.

 

4-196,197 ருத்ராக்ஷப் பூனை,பஞ்ச தந்திர கொக்கு- நண்டு கதைகளைப் போல ஒருவன் இருக்கக்கூடாது என்கின்றது

கொக்கு-நண்டு கதை பஞ்ச தந்திரக்கதைகளில் உள்ளது. ருத்ராக்ஷப் பூனை சிலை மஹாபலிபுரத்தில் அர்ஜுனன் தபஸ் சிற்பத்தில் உளது. மேலும் பல ஸம்ஸ்க்ருத நூல்களிலும் உளது ( முன்னர்

எழுதிய எனது கட்டுரையில் விவரங்கள் உள.

 

4-203, 204-ல் மற்றொருவனுடைய அனுமதியின்றி அவனது கிணறு, கார், வண்டி வாஹனங்கள், தோட்டம், சோஃபா முதலிய ஆசனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது இக்காலத்துக்கும் பொருந்தக் கூடியது. அலுவலகத்திலும், பிற இடங்களிலும் இது எவ்வளவு பெரிய சச்சரவுகளுக்கு வழிவகுக்கிறது என்பதை நாம் அறிவோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

xxxxxxxxxxxxxxxxxxxxxx

 

 

 

 

வைச்ச பொருள்?! – 2 (Post No.5541)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 15 October 2018

 

Time uploaded in London – 6-33 AM (British Summer Time)

 

Post No. 5541

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

ஆய்வுக் கட்டுரைகளை காப்பி அடித்து தங்கள் பெயரில் போட்டுக் கொள்ள வேண்டாம். சிலர் கட்டுரைகள் வெளியான தளம், எழுதியவர் பெயர் இல்லாமல் நண்பர்களுக்கு அனுப்ப அவர்கள் தங்கள் பெயரில் அனுப்பி வெளியிடுகிறார்கள். எழுதியவர் பெயர், வெளியிட்ட இணையதளமான www.tamilandvedas.comஇன் பெயர் ஆகியவற்றையும் நண்பர்களுக்கு இணைத்து அனுப்புங்கள்.

வைச்ச பொருள்?! – 2

 

.நாகராஜன்

5

பொருள் என்பதைச் செல்வம் என்ற அர்த்தத்தில் வள்ளுவர் கையாளும் போது பல சிக்கல் நிறைந்த விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறார், வெவ்வேறு குறட்பாக்களில்.

அருள், பொருள் ஆகிய இரண்டு வார்த்தைகள் தமிழ் தந்த அரும் வார்த்தைகள். அருள் என்ற வார்த்தைக்கு ஈடு இணையான இன்னொரு வார்த்தை எந்த மொழியிலும் கிடையாது.

 

பால் பிரண்டன் உள்ளிட்ட மேலை நாட்டோர் வியந்து போற்றிய வார்த்தை இது. பொருள் என்பதும் அதே போன்ற அருமையான வார்த்தை.

 

இந்த இரண்டையும் சீர் தூக்கிப் பார்க்கும் வள்ளுவரின் பான்மை வியத்தற்குரியது.

 

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்  பொருட்செல்வம்

பூரியார் கண்ணு முள  – குறள் 241

 

மிகத் தெளிவாக அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் என்றும் பணத்தால் பெறப்படும் சகல சௌகரியங்களும் அற்பர்களிடத்தும் உள்ளன என்கிறார்.

 

ஆனால் அந்தப் பொருளைக் கொண்டே அருளைப் பெறலாம் என்பதும் அவர் முடிபு.

 

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு – குறள் 757

அன்பானது பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் செவிலித் தாயால் வளரும்.

பெற்ற பணத்தை நல்ல வழியில் செலவழித்தால் அருளை அடையலாம்.

 

பொருளற்றார் பூப்பர் ஒரு கால் அருளற்றார்

அற்றார் மற்றாதல் அரிது   – குறள் 248

பணம் இல்லாவிட்டாலும் கூட ஒருவேளை பின்னால் வரக் கூடும்; ஆனால் அருள் இல்லையெனிலோ ஒன்றுமே இல்லாதவர்கள் தாம் அவர்கள்; அவர்கள் வளத்தைப் பெறுதல் அரிது.

 

ஆனால் அந்த அருள் மறு உலகத்தில் செல்லுபடியாகும் ஒன்று; பொருள் இல்லையெனில் இவ்வுலக வாழ்க்கை இல்லை! அருள் அவ்வுலகிற்குத் தேவை;பொருள் இவ்வுலகத்திற்குத் தேவை!

 

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு   – குறள் 247

 

 

இந்தப் பொருள் இருந்தால் பொருளற்றவர் கூடப் போற்றப்படுவர். பொருளற்றவர் என்றால் இங்கு மதிக்கவே தகாதவர் என்று அர்த்தம்.

 

பொருளற்றவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்  – குறள் 751

அருமையான இந்தக் குறளில் பொருள் என்னும் வார்த்தை பல பரிமாணங்களைக் காட்டுகிறது.

 

உலகியல் ரீதியான பொருள் தான் – பணம் தான் – சிறப்புடைய பொருள். அதுவன்றி வேறு எதுவும் ஒரு பொருள் அல்ல. மதிக்கத் தகாதவரைக் கூட மதிக்கும்படி வைக்கும் ஒரு அற்புதம் செல்வமே.

 

காசே தான் கடவுளடா!

பொருள் என்னும் பொய்யாவிளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று    -குறள் 753

பொருள் மட்டும் இருந்தால் போதும். அதுவே நந்தா விளக்கு. நினைத்த தேசத்திற்கெல்லாம் சென்று வெல்வதோடு இருளை ஒழித்து விடும். இருள் என்பது இங்கு பகை உள்ளிட்ட பல அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது.

 

ஆகவே வள்ளுவரின் கட்டளை ‘செய்க பொருளை

எப்படியாவது பணத்தை சம்பாதித்துக் கொள். பகைவரின் கர்வத்தை அடக்க வல்ல  கூர்மையான வாள் அதை விட வேறில்லை.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரியது இல்     – குறள் 759

 

 

ஆனால் இந்தப் பொருளை நியாயமான வழியில் சம்பாதிக்க வேண்டும்.பிறரை அழவைத்துப் பெற்றால் நீ அழப்போவது நிச்சயம் (குறள் 659)

 

சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமட்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்றுகுறள் 660

சலத்தால்கெட்ட வழியால்வஞ்சனையால்பொருளைப் பெற்றால் அது நிலைக்காது; அது பச்சை மண்பாண்டத்தில் நீரை ஊற்றி வைப்பதற்குச் சமம்.

 

சம்பாதித்த பணம் குறையாமல் இருக்க ஒரு வழி உண்டு.

பிறனுடைய கைப்பொருளைக் கைப்பற்றாமல்கவராமல்வஞ்சனையால் அடையாமல் இருத்தல் வேண்டும்.

 

இப்படி வழி காட்டும் குறள் இது:-

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன் கைப்பொருள்  – குறள் 178

ஆனால் இப்படிப் பெரும் செல்வத்தை சம்பாதித்து என்ன பிரயோஜனம்? அதனை நன்கு அனுபவிக்க அல்லவா வேண்டும்?

 

அனுபவிக்காமல் செத்துப் போனால் அந்தச் செல்வத்தைக் கொண்டு செத்தபின் அவன் என்னதான் செய்யப் போகிறான்?

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்   – குறள் 1001

 

சேர்த்த பணத்தால்செல்வத்தால்எல்லாம் அடையலாம் என்று எண்ணி அதைச் சேர்த்து வைத்து யாருக்கும் கொடுக்காமல் செத்தொழிந்தால் அடுத்த பிறப்பு இழிந்த பிறப்பாகவே அமையும்.

 

பொருளானாம் எல்லாம் என்று ஈயாது இவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு   – 1002

அப்பாடா!

தலை சுற்றும் அளவுக்குப் பொருளைப் பற்றிய பொருள் வாய்ந்த குறள்கள் இவை.

செல்வம் என்ற அர்த்தத்தில் எப்படிப் பொருளைச் சேர்க்க வேண்டும், அப்படிச் சேர்ப்பது எவ்வளவு முக்கியம், அதைக் காக்கும் வழி என்ன, அடுத்த பிறவி நல்லதாக அமைய வழி என்ன என்பன உள்ளிட்ட அற்புத உண்மைகளை அள்ளிக் கொட்டுகிறார் வள்ளுவப் பிரான்.

இதில் அப்பர் கூறிய வைச்ச பொருள் பற்றி நமக்குத் தெரியவில்லை.

 

அதற்கு இன்னும் பல குறட்பாக்களை ஆராய வேண்டும்.

ஆராய்வோம்!

                     –தொடரும்

 

 

***

 

 

 

 

செருப்பால் அடி — தமிழ்ப் பாடல் (Post No.5539)

written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 14 October 2018

 

Time uploaded in London – 10-31 am (British Summer Time)

 

Post No. 5539

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

தற்காலத்தில் சில சொற்களைப் பயன்படுத்த நாம் தயங்குகிறோம். உதாரணமாக மயிர், செருப்பு. ஆனால் அந்தக் காலத்தில் அப்படி இல்லை. மயிர் , செருப்பு முதலிய சொற்களைத் தேவைப்பட்ட இடத்தில் பயன்படுத்துவர்.

 

மேலும் வள்ளுவர் போன்றோர் அஹிம்ஸை முதலியவற்றில், தேவையில்லாமல் நம்ப மாட்டார்கள். ‘ஆடுற மாட்டை ஆடி கற; பாடுற மாட்டைப் பாடிக் கற’ என்பது அவர்களின் பாலிஸி. மரண தண்டனை இருந்தல்தான் சமூகம் சிறக்கும் என்பது அவர்கள் கூற்று. வள்ளுவரே மரணதண்டனைப் ப்ரியர். அது மட்டுமல்ல. கஞ்சப் பயல்களைக் கண்டால் ஓங்கி தாடையில் ஒரு குத்து விட்டு கையை  முறுக்கி காசு வாங்கு என்கிறார்.

 

முதலில் செருப்படிப் பாடலைப் பார்த்துவிட்டு குறளுக்குப் போவோம்.

பொருட்பாலை விரும்புவார்கள் காமப்

பாலிடை மூழ்கிப் புரள்வர் கீர்த்தி

அருட்பாலா மறப்பாலைக் கனவிலுமே

விரும்பார்கள் அறிவு ஒன்றில்லார்

குருபாலர் கடவுளர்பால் வேதியர்பால்

புரவலர்பால் கொடுக்கக் கோரார்

செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே

கோடி செம்பொன் சேவித்தீவார்

–விவேக சிந்தாமணி (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)

 

பொருள்

செல்வத்தில் அதிக விருப்பம் கொள்பவர்கள் அருளாகிய செல்வத்தைத் தரும் தருமத்தைக் கனவிலும் விரும்பமாட்டார்கள் ஆசிரியருக்கும். கடவுளுக்கும், பிராஹ்மணர்களுக்கும், புரவலர்க்கும் ஒரு பொருளும் தர மாட்டார்கள். கோடி செம்பொன்னாக இருந்தாலும்   செருப்   பால் அடித்துப் பறிப்போருக்கே சலாம் போட்டுக் கொடுப்பார்கள்.

xxx

 

கன்னத்தில் அடி, கையை முறுக்கு, கரும்பு போல நசுக்கு!

 

தமிழ் வேதம் ஆகிய திருக்குறள் சொல்லும்:

 

அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்

கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)

 

பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.

 

பரிதியார் உரை:  கொறடாலே அடிப்பவர்க்குக் கொடுப்பர்

காளிங்கர் உரை: கொடிறு போல இடுக்கிப் பிடித்து உடம்பை உடைக்கும் திறமையால் கூனிய கையினை உடையோர்.

 

இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ் (1078)

 

மரண தண்டனைக்கு ஆதரவு

மரண தண்டணைக்கு ஆதரவு தருபவன் வள்ளுவன். அவன் தீவிர அஹிம்சாவாதி அல்ல. தீயோரை அழிப்பது பயிர்களின் களைகளை நீக்குவது போல என்று அழகான உவமை தருகிறான். இதோ அந்தக் குறள்:

 

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனோடு நேர் (550)

 

பொருள்: நாட்டில் உள்ள கொடியோரை மரண தண்டனை கொடுத்து அழிப்பது, பயிர்கள் நன்றாக வளர உழவர்கள் களை எடுப்பது போல் ஆகும்.

 

காதலர் இல்வழி மாலை கொலைகளத்து

ஏதிலர் போல வரும் – குறள் 1224

 

காதலர் இல்லாத மாலைப் பொழுது , கொலைக்களத்தில் மரணதண்டனையை  நிறைவேற்ற வரும்  ஆளைப் போல வருகிறது

பாரதியும் பாடுகிறான்

பாதகம் செய்பவரைக் கண்டால்—நாம்
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

 

‘’வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்

நெஞ்சகத் தருக்குடை நீசர்கள் இன்னோர்

தம்மொடு பிறந்த சகோதரர் ஆயினும்

வெம்மையோடொறுத்தல் வீரர் தம் செயலாம்’’.

 

வாழ்க வள்ளுவன்!! வளர்க வன்முறை!!!! (அயோக்கியர்களுக்கு எதிராக)

 

–subham–

 

 

கண் துடிப்பது நல்லதா? கெட்டதா? (Post No.5535)

Research Article Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 13 October 2018

 

Time uploaded in London – 10-29 am (British Summer Time)

 

Post No. 5535

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

காளிதாஸன், கபிலன், ஷேக்ஸ்பியர் செப்புவது என்ன?

கண் துடிப்பதற்கு டாக்டர்கள் கொடுக்கும் விளக்கமும், ஸம்ஸ்க்ருத, தமிழ் இலக்கியம் கொடுக்கும் விளக்கமும் வேறு பட்டுள்ளன. ஆயினும் இந்துக்கள் சொன்ன விளக்கமே சரி என்பது போல புகழ் பெற்ற விஞ்ஞான சஞ்சிகைகளில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மேலும் காளிதாஸ மஹா கவி, சங்க இலக்கிய காலத்துக்கு முன்னர் வாழ்ந்தவர் என்பதற்கு மேலும் ஒரு சான்று கிடைத்துள்ளது. கொஞ்சம் ஆராய்ச்சி செய்வோம்; வாருங்கள்.

 

டாக்டர்கள் மொழிவது என்ன?

கண் துடிப்பது சர்வ சாதரணமாக நிகழும். இது சில நாட்களோ, வாரங்களோ, சில மாதங்களுக்கோ கூட நீடிக்கலாம். அதுவாக வரும்; அதுவாகப் போகும்; இதில் ஒரு தீங்கும் இல்லை. ஆயினும் நீண்ட காலத்துக்கு இது நீடித்தால் நரம்புக் கோளாறாக இருக்க வாய்ப்பு உளது; ஆகவே மருத்துவரைப் போய்ப் பாருங்கள்.

 

கண் துடிப்பது ஏன்?

களைப்பு, தூக்கமின்மை, கஃபைன் (caffeine) அதிகமுள்ள காப்பி முதலிய பானங்களை அதிகம் பருகுவது, சிரமப்பட்டு (strain) படிப்பது, தூக்கமின்மை முதலியன சில காரணங்கள் என்று மருத்துவ நூல்கள் புகல்கின்றன.

 

ஆனால் சங்கத் தமிழ் நூல்களும், அதற்கு முந்தைய ஸம்ஸ்க்ருத நூல்களும் செப்புவதோ வேறு!

 

மேலை நாடுகளில் கண் (twitching, throbbing) துடிப்பு பற்றிப் பேசாமல் கண் அரிப்பு (Itching) நமைச்சல் பற்றிப் பேசுகின்றனர்.

 

கிரேக்க நாட்டு அறிஞர் துவங்கி ஷேக்ஸ்பியர்,ஜோனதன் ஸ்விப்ட் வரை ஒரே குரலில் பேசுகின்றனர்.

 

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான சஞ்சிகை ஸைன்டிபிஃக் அமெரிக்கனில் (Scientific American)  வெளியான கருத்து, நம்மவர் செப்புவதில் பசை இருப்பதாகக் காட்டுகிறது.

முதலில் கிரேக்க அறிஞர் செப்பியது என்ன?

 

தியோக்ரிட்டஸ் (கி.மு.275) என்ற கிரேக்க கவிஞர் சொல்கிறார்:

 

என் வலது கண் அரிக்கிறது, என் காதலியை நான் காணலாமா? (Idylls ஐடில்ஸ் என்னும் நூலில்).

 

உலக மஹா ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பியர் (1604ம் ஆண்டு) உரைப்பது:

என் கண்களும் அரிக்கின்றன; நான் அழப்போகின்றேன் என்பது இதன் பொருளோ! (ஒதெல்லோ Othello நாடகத்தில் காட்சி 4- டெஸ்டிமோனாவின் வசனம்)

 

டாக்டர் நதானியல் ஹோம்ஸ் (1650ஆம் ஆண்டு) பகர்கிறார்:

அவர்களின் வலது கண்ணீல் நமைச்சல் எடுத்தால் அவர்கள் விரைவில் அழப்போகிறார்கள் என்பது அர்த்தம்; இடது கண் அரிப்போ

எதிர்கால இன்பச் சிரிப்பை முன் அறிவிக்கிறது.

 

ஜோனதன் ஸ்விப்ட் (1738) சொல்கிறார்

என் வலது கண்ணில் அரிப்பு; நான் அழப்போகிறேன்

 

இதற்குப் பின்னரும் இப்படி வலது, இடது கண்களின் சோகம், சந்தோஷம் பற்றி எழுதியுள்ளனர். ஆக 2300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கண்களின் மாற்றத்தை அறிந்துள்ளனர்.

 

ஆனால் இதற்கும் முன்னர் சங்கத் தமிழ் இலக்கியமும், ஸம்ஸ்க்ருத இலக்கியமும் கண் துடிப்பு பற்றி பேசுகின்றன.

 

உலக மஹா கவி, நாடக ஆசிரியன் காளிதாஸன் சொல்கிறான்:-

 

சாகுந்தலம், காட்சி 5-12

 

சகுந்தலை- ஏதோ அபசகுனம் போல் இருக்கிறதே! அடக்கடவுளே! என் வலது கண் துடிக்கிறதே. என்ன கஷ்டமோ

 

(பெண்களுக்கு வலக் கண் துடித்தல் கெட்டது. இடக் கண் துடித்தால் நல்லது நடை பெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை; இதைத் தமிழிலும் காணலாம்)

 

மேகதூதம் 94

 

மேகமே! நீ அருகில் சென்றதும் அந்த மான் விழியாளின் கண் துடிக்கும் (இதற்கு உரைகாரர்கள் இடக் கண் துடிக்கும் என்று எழுதியுள்ளனர்- சகுன சாஸ்திரத்தின் அடிப்படையில்)

அதாவது கணவன் வரபோகிறான் என்ற நற்செய்தி கிடைக்கும்

 

ரகு வம்ஸம் 14-49

(ராம பிரானின் உத்தரவின் பேரில், சீதையை லக்ஷ்மணன் ஒன்றும் சொல்லாமல் காட்டில் விட்டபோது)

 

சீதையின் வலது கண்கள் துடித்தன (இனி வரப்போகும் துக்கத்தை முன் அறிவிக்கும் முகமாக)

 

இதே காளிதாஸன் ரகு வம்ஸத்திலும், விக்ரமோர்வஸீயத்திலும் ஆண்களின் வெற்றியைக் குறிக்க வலது தோள்கள் துடித்ததாக எழுதுகிறான்.

 

ஆக ஆண்களுக்கு வலது கண், வலது தோள்– சுப சகுனம். பெண்களுக்கு  அவ்வாறு இல்லை.

ஐங்குறு நூறு என்னும் சங்க நூலில் பிராஹ்மணப் புலவன் கபிலன் பாடுகிறான்:-

 

தோழி நன் நிமித்தம் பற்றிப் பாடுவது:–

நுண்ணேர் புருவத்த கண்ணும் ஆடும்

மயிர்வார் முன்கை வளையும் செறூ உம்

……….. (218)

 

தலைவியே! என் இடக் கண் துடிக்கிறது. கை வளையல்கள் விம்முகின்றன (ஆகையால் கவலைப் படாதே; தலைவன் வருவது உறுதி)

 

இங்கும் உரைகாரர்கள் இடது கண் என்று எழுதுவதைக் காணலாம். இதற்கு அடிப்படை சகுன சஸ்திரம்.

 

கபிலர்தான், அதிகமாக காளிதாசன் உவமைகளை சங்கத் தமிழ் நூல்களில் பயன்படுத்துகிறார். இந்த இரண்டு வரிகளில் கூட புருவம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லைக் காணலாம்.

 

கலித்தொகையில் பாலைபாடிய

பெருங் கடுங்கோவும் சோழன் நல்லுருத்திரனும் பாடுகின்றனர்:

 

மனைவயின் பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன

நல் எழில் உன் கணும் ஆடுமால், இடனே

–பாலைக் கலி  10/20-23 (பெருங் கடுங்கோ)

 

பொருள்

பல்லியும் நான் சொல்லுவதை ஆமோதிப்பது போல ஒலி செய்கிறது. இடக்கண்ணும் துடிக்கிறது. ஆகவே மனம் தேறுவாயாக.

இங்கும் இடக் கண் துடிப்பு என்பது பழைய உரை.

 

 

முல்லைக் கலியிலும் இது போலக் காண்கிறோம். பிற்காலப் புலவர்கள் யாத்த நூல்களிலும் கண் துடிப்பைக் காண முடிகிறது.

 

எனது கருத்து

கண் துடிப்போ கண் நமைச்சலோ — எதுவானாலும் அது வருங்கால நிகழ்ச்சிகளை உணர்த்தும் சகுனம் என்று மேலை நாட்டினரும் கீழை நாட்டினரும் நம்பினர்.

 

மேலும் இடப்பக்கம் துடித்தல் பெண்களுக்கு நல்லது, வலப்பக்கம் துடித்தல் ஆண்களுக்கு நல்லது என்ற காளிதாசன் கருத்தைக் கபிலர் முதலானோர் கையாண்டது காளிதாஸனின் காலத்தை நான் சங்க காலத்துக்கு முன் வைக்கக் கிடைத்த இன்னும் ஒரு சான்று.

 

பாரதத்தில் இமயம் முதல் குமரி வரை ஒரே கருத்து, பண்பாடுதான் இருந்தது.ஆங்காங்கே சிறிய விஷயங்களில் வேறு பாடு  இருக்கலாம் என்பதற்கு இது இன்னும் ஒரு சான்று.

 

கடைசியாக இதில் விஞ்ஞானக் கருத்தும் இருக்கலாம் என்பது என் ஊகம். ஆயினும் ஆழமான ஆராய்ச்சி தேவை.

 

மூளையில் இரண்டு பகுதிகள் உள; அவற்றில் வலப்பக்க மூளை மனிதனின் இடது பகுதி உறுப்புகளையும், இடப்பக்க மூளை மனிதனின் வலது பகுதி உறுப்புகளையும் கட்டுப்படுத்துகின்றன என்பதெலாம் இப்பொழுது உறுதி செய்யப்பட்டுவிட்டன.

 

 

பெண்களுக்கு சில திறன்கள் அதிகம்; ஆண்களுக்கு சில திறன்கள் அதிகம் என்பதும் பென்ஸில்வேனியா பல்கலைக் கழகப் பேராசிரியர் ராகினி வர்மா செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. பெண்கள் உணர்ச்சிப்படுபவர்கள்; கலைகளில் வல்லவர்கள், கவனிப்பதில் வல்லவர்கள்.

ஆண்கள் அஹங்காரம் உள்ளவர்கள், நல்ல கணக்குப் போடுபவர்கள்; ஒளிமயமான முடிவுகளை எதிர்பர்ப்பவர்கள் என்று ஆராய்ச்சிகளில் தெரிய வருகிறது. இதை வைத்துப் பார்க்கையில் ஆண்களுக்கு ஏன் வலது பக்கத் துடிப்பு என்பது விளங்குகிறது. ஆயினும் இதை மெய்ப்பிக்க மேலும் ஆராய்ச்சி தேவை. ஒரு ஆளின் இடது கண்ணோ, வலது கண்ணோ துடிக்கையில் மூளையின் எந்தப் பகுதியில் என்ன நிகழ்கிறது என்பதை ஆராய்ந்தால் மட்டுமே உறுதிபடப் பேச முடியும். தற்போது இட, வல தொடர்புக்கு வாய்ப்பு இருப்பது மட்டும் ‘பட்டும் படாமலும்’ தெரிகிறது.

 

ஆராய்ச்சிகளைத் தொடர்வோம்.

 

–சுபம்–

வேத நிலாவின் பவனி! (POST No.5530)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 12 October 2018

 

Time uploaded in London – 6-59 AM (British Summer Time)

 

Post No. 5530

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

வேத நிலாவின் பவனி!

 

.நாகராஜன்

 

வேத நிலாவின் பவனி – தம்பீ

வீறுபெற் றெழுந்ததைக் கவனி – ஓதும்

நாத ஒலியின் சக்தி – நமக்கு

நல்கிடும் பரசிவ முக்தி

 

நாயென வாழ்ந்தது போதும் – இதோ

ஞாலத் தலைமையென ஓதும் – இன்னும்

பேயென வாழ்க்கை புரிவையோ  – அன்றி

பீடுடை அரியென நடப்பையோ

 

இந்திரன் அக்கினி வளியுடன் – மீண்டும்

அனைவரு மெழுந்தனர் உயிருடன் – ஆஹா

மந்திர வித்தைகள் பாரடா – அதன்

மகிமைகள் ஓர்ந்து தேரடா

 

பட்ட மரம் தளிர்க் குதடா – பருந்துமே

பாம்பை அணைக் குதடா- ஆஹா!

சுட்டவை உயிரோ டாடுதடா – இங்கு

சுடர்ப்பொறி சுழித்துப் பாடுதடா

 

சொல்லவும் குளிருது இதயம் -இங்கு

சுதந்திர ஞானம் உதயம் – தம்பீ

மெல்லெனத் தென்றல் வீசுது – எனது

மேனியும் சிலிர்த்து ஆடுது

 

பாரத நாடிது உயர்ந்தது – அந்தப்

பார்த்தனின் வீரம் மீண்டது – சொல்லினி

பாரதி ஆரிய வாணி – அவளே

பாரினை ஆளும் ராணி!

 

***

களி, துயர் ஒன்றெனக் கருதுவோம்!

 

.நாகராஜன்

 

சிலமலர் வாடி உதிரும்

சிலமலர் தெய்வம் சேரும்

நிலவுல கிதனில் நேர்ந்த

நிலையெலாம் எண்ணி மாய்ந்தால்

கலங்கி நா மழிவோ மன்றோ!

கவலையை விரட்டி ஒழித்தே

உலகியல் களிதுயர் இரண்டும்

ஒன்றெனக் கருதி வாழ்வோம்!

***

வேற்றுமையில் ஒற்றுமை

 

.நாகராஜன்

 

வேற்றுமையில் ஒற்றுமை

விளங்குகின்ற நாடு

நேற்றுமின்றும் நாளையும்

நிலைத்திருக்கும் நாடு   . . பாரத நாடு

 

ஹிந்து முஸ்லீம் சீக்கியர்

புத்தர் ஜைனர் கிறிஸ்தவர்

எந்த மதத்தோர் ஆயிலென்?

இணைந்திருக்கும் நாடு    … பாரத நாடு

 

தமிழ் தெலுங்கு வங்கம்

சிந்தி மராட்டி ஹிந்தி

அமிழ் தினைப் போல் மொழிகள்

அனைத்தும் இங்கே ஒன்றாம் ..  பாரத நாடு

 

உடுத்திடும் உடைகள் வேறு

உண்டிடும் உணவுகள் நூறு

அடுத்திடும் சடங்குகள் பலவாம்

ஆயினும் உணர்வோ ஒன்றாம்  … பாரத நாடு

 

இதுவே பூமியில் சொர்க்கம்

இதுவே அமைதியின் நிலையம்

இதுபோல் ஏதொரு நாடு

இணையிலா இன்ப வீடு   … பாரத நாடு

***

 

வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது-கல்வி (Post No.5528)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 11 October 2018

 

Time uploaded in London –14-36 (British Summer Time)

 

Post No. 5528

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 
வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது-கல்வி (Post No.5528)

 

பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து 16, 17, 18, 19, 20 எண்ணிட்ட ஸ்லோகங்களைத் தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு மகிழ்வோம்

 

हर्तुर्याति न गोचरं किम् अपि शं पुष्णाति यत्सर्वदा‌உप्य्
अर्थिभ्यः प्रतिपाद्यमानम् अनिशं प्राप्नोति वृद्धिं पराम् ।
कल्पान्तेष्वपि न प्रयाति निधनं विद्याख्यम् अन्तर्धनं
येषां तान्प्रति मानम् उज्झत नृपाः कस्तैः सह स्पर्धते ॥ 1.16 ॥

 

ஹர்துயாதி ந கோசரம் கிம் அபி சம் புஷ்ணாதியத் ஸர்வதாப்ய

அர்த்திப்யஹ   ப்ரதிபாதயமானம் ஐசம் ப்ராப்னோதி வ்ருத்திம் பராம்

கல்பாந்தேஷ்வ்பி ந ப்ரயாதி நிதனம் வித்யாக்யம் அந்தர் தனம்

யேஷாம் தான்ப்ரதி மானம் உஜ்ஜத் ந்ருபாஹா கஸ்தைஹை சஹ  ஸ்பர்ததே

 

திருடர்களால் காணமுடியாதது;

எப்போதும் பேரின்பம் நல்குவது;

கொடுத்தாலும் குறைவு படாமல் அதிகரிக்கும்;

யுகமுடிவிலும் அழியாதது எதுவோ அதுவே கல்வி.

மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர்.

அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்?

 

 

இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்

 

வெள்ளதால் /வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது

 

கொடுத்தாலும் நிறைவன்றிக்

குறைவுறாது

கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது

கல்வியென்னும்

உள்ளத்தே பொருளிருக்க உலகெல்லாம் பொருள்தேடி

உழல்வதென்னே

 

XXXX

 

 

இன்னுமொரு பாடல்

अधिगतपरमार्थान्पण्डितान्मावमंस्थास्
तृणम् इव लघु लक्ष्मीर्नैव तान्संरुणद्धि ।
अभिनवमदलेखाश्यामगण्डस्थलानां
न भवति बिसतन्तुर्वारणं वारणानाम् ॥ 1.17 ॥

 

அதிகத பரமார்த்தான் பண்டிதான்மாவ மம்ஸ்தாஸ்

த்ருணம் இவ லகு லக்ஷ்மீர்நைவ தான் ஸம்ருணததி

அபிநவமதலேகா ஸ்யாமகண்டஸ்தலானாம்

ந பவதி பிஸந்துர் வாரணம் வாரணானாம்

எல்லோரிடமும் கருணை காட்டும் அறிவாளிகளை

அவமதிக்காதீர்கள். செல்வம் என்பது புல்லுக்குச் சமம். அது கற்றோருக்கு அணைபோட முடியாது; மத நீர்ச் செறிவால்

முகம் கருத்த யானைக ளை    தாமரை மலர்த் தண்டால் கட்டிப்போட யாரே வல்லார்?

 

 

xxx

 

இன்னுமொரு பாடல்

 

अम्भोजिनीवनविहारविलासम् एव
हंसस्य हन्ति नितरां कुपितो विधाता ।
न त्वस्य दुग्धजलभेदविधौ प्रसिद्धां
वैदग्धीकीर्तिम् अपहर्तुम् असौ समर्थः ॥ 1.18 ॥

 

அம்போஜினீவன விஹார விலாஸம் ஏவ

ஹம்ஸஸ்ய ஹந்தி நிதராம் குபிதோ விதாதா

 

ந த்வஸ்ய துக்தஜல பேதவிதௌ ப்ரசித்தாம்

வைதக்தீ கீர்த்திம் அபஹர்தும் அசௌ ஸமர்த்தஹ

பிரம்மாவுக்குக் கோபம் வந்தால் தாமரைத் தடாகத்தில் செல்லும் அன்னப் பறவைகளைத் தடுத்து மகிழ்ச்சியைக் கெடுக்கலாம். ஆனாலும் பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னத்தின் அபூர்வ சக்தியை விதியாலும் மாற்ற முடியாது.

 

XXX

केयूराणि न भूषयन्ति पुरुषं हारा न चन्द्रोज्ज्वला
न स्नानं न विलेपनं न कुसुमं नालङ्कृता मूर्धजाः ।
वाण्येका समलङ्करोति पुरुषं या संस्कृता धार्यते
क्षीयन्ते खलु भूषणानि सततं वाग्भूषणं भूषणम् ॥ 1.19 ॥

 

 

கேயூராணி ந பூஷயந்தி புருஷம் ஹாரா ந சந்த்ரோஜ்வலா

ந் ஸ்நானம்ந விலேபனம் நகுஸுமம் நாளங்ருதா மூர்த்தஜாஹா

வாண்யேகா சமலங் கரோதி புருஷம் யா ஸம்ஸ்க்ருதா தார்யதே

க்ஷீயந்தே கலு பூஷணானி ஸததம் வாக் பூஷணம் பூஷணம்

மனிதனுக்கு அழகூட்டுவது கங்கணமன்று;

நிலவொளி போன்ற மாலைகளும் அழகு சேர்ர்க்காது.

நீர் முழுக்கோ, சந்தனப் பூச்சோ,பூக்களோ, சிகை அலங்காரமோ

ஒருவனுக்கு அழகு அல்ல; பண்பட்ட பேச்சே அழகு தரும்.

ஏனைய எல்லாம் வாடி வதங்கும், உதிர்ந்தும்,உலர்ந்தும் போம்.

நல்ல பேச்சு உண்மையான அணிகலனாக நிற்கும்.

 

இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்

 

குஞ்சியகுங் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சளழகும் அழகல்ல- நெஞ்சத்து

நல்லம் யாமென்னும் நடுவுநிலைமையால்

கல்வியழகே அழகு- நாலடியார்

 

சிகை அலங்காரமோ, கரை போட்ட ஆடை அலங்காரமோ, மஞ்சள் முதலிய அலங்காரப் பூச்சுகளோ அழகல்ல. கல்வி கற்று நடு நிலையில் நிற்பதே அழகு.

 

இணரூழ்த்தும் நாறா மலரணையர் கற்றது

உணர விரித்துரையாதார் – குறள் 650

 

கற்ற விஷயங்களை மற்றவர்களுக்கு விளக்கமுடியாதவர்கள்

மலர்ந்தும் மணம் வீசாத மலர்களைப் போன்றவர்கள்.

 

சொல் அழகு

 

மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர் வனப்பும் காதின் வனப்பும்செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு

–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)

பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்றமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்

நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ

டெழுத்தின் வனப்பே வனப்பு

–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)

பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.

சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்

மண்மாண் புனை பாவை அற்று

–திருக்குறள் 407 (திருவள்ளுவர் இயற்றியது)

XXXX

 

विद्या नाम नरस्य रूपम् अधिकं प्रच्छन्नगुप्तं धनं
विद्या भोगकरी यशःसुखकरी विद्या गुरूणां गुरुः ।
विद्या बन्धुजनो विदेशगमने विद्या परा देवता
विद्या राजसु पूज्यते न तु धनं विद्याविहीनः पशुः ॥ 1.20 ॥

 

வித்யா நாம நரஸ்ய ரூபமதிகம் ப்ரச்சன்னகுப்தம் தனம்

வித்யா போககரீ ய்ஸ்ஹ ஸுககரீவித்யா குரூணாம் க்ருஹு

வித்யாம் ப்ந்துஜனோ விதேச கமனே வித்யா பராதேவதா

வித்யா ராஜஸு பூஜ்யதேந து தனம் வித்யா விஹீனஹ பசுஹு

 

கல்வி என்பது ஒருவனுக்கு அழகு சேர்க்கிறது;

அவனுடைய ரஹஸிய செல்வம் அது;

வளமும், மகிழ்ச்சியும், புகழும் நல்குவது.

‘குரு’க்களுக்கு எல்லாம் ‘குரு’ கல்வி;

வெளி நாடு சென்றால் தெரியாத மக்களிடையே இருக்கையில் அது ஒருவனுக்கு நண்பன்;

கல்வியே உயர்ந்த கடவுள்.

மன்னர்களிடையே செல்வத்துக்கு மதிப்பு இல்லை; ஆனால் கற்ற கல்விக்கு மதிப்பு உண்டு. கல்வி கற்காதவன் ஒரு விலங்கு.

 

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்– குறள் 410

பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)

XXXX SUBHAM XXX

 

 

கடற் கொள்ளையர் பற்றிக் கம்பன் தகவல் (Post No.5521)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 9 October 2018

 

Time uploaded in London –7-39 am (British Summer Time)

 

Post No. 5521

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

கடற் கொள்ளையர்கள் பற்றி சங்க இலக்கியத்திலும் கம்ப ராமாயணத்திலும் வரும் தகவல்கள் தமிழர்களின் கடல் ஆதிக்கத்தைக் காட்டுகிறது. கம்பனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசனும் கடலில் கப்பலுடைந்த காட்சி பற்றிப் பேசுகிறான். அதற்கும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ரிக் வேதத்தில் கடலில் கப்பல் உடைந்து தத்தளித்த ஒருவனை அஸ்வினி தேவர்கள் காப்பாற்றிய செய்தி பல ரிஷி முனிவர்களால் பாராட்டப் படுகிறது. சிந்து-ஸரஸ்வதி நதி தீர நாகரீகத்தில் கப்பல் திசை காணும் பறவை உட்கார்ந்து இருக்கும் முத்திரை கிடைத்துள்ளது. இந்தோநேஷியாவில் போரோபுதூர் சிற்பங்களில் தமிழ்க் கப்பல் காட்சி தருகிறது.

சாதவஹனர் நாணயங்களில் கப்பல் படம் பொறிக்கப்பட்டுள்ளது. அராபியக் கடல்களில் அட்டூழியம் செய்த யவன (ரோமானிய) கடற் கொள்ளையர்களை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பிடித்து வந்து, தலையை மொட்டை அடித்து, எண்ணையைத் தலையில் ஊற்றித் தண்டித்த காட்சி சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கடம்பர் என்னும் கடற் கொள்ளையர்களை அழித்து அவர்களுடைய காவல் மரத்தை வெட்டி வீழ்த்தியது சூரபன்மனின் காவல் மரத்தை முருகன் அறுத்தைப் போன்றது என்றும் சங்கநூலான பதிற்றுப்பத்து பாடும்.

 

கம்பனோ போகிற போக்கில் ஒரு பாடலில் கடற் கொள்ளையர்களை உவமையாகப் பயன்படுத்துவது, அந்தக் காலத்தில் கடல் பயணம் எவ்வளவு நிகழ்ந்தது, என்ன என்ன பேரிடர்களை  அவர்கள் சந்த்தித்தனர் என்று காட்டுகிறது.

 

இதோ கம்ப  ராமாயண யுத்த காண்டப் பாடல்:-

 

மீயவர் யாவரும் விளிய வெங்கரி

சேயிருங் குருதியில் திரிவ சோர்வு இல

நாயகர் ஆள் எலாம் அவிய அம்பிகள்

பாயொடும் வேலையில் திரியும் பண்பு என

–படைத் தலைவர் வதைப் படலம்

பொருள்

யானை மீது இருந்த அனைவரும், வில்லால் தாக்குண்டு இறந்தனர். அப்பொழுது யானைகள் மட்டும் கொடிகளுடன் ரத்த வெள்ளத்தில் அங்கும் இங்கும் திரிந்தன; வெளியேற வழியில்லாமல் திகைத்தன; இது எப்படி இருந்தது என்றால் மாலுமிகள் உள்பட அனைவரும் கடற் கொள்ளையர்கள் தாக்குதலில் இறந்து போனபின்னர் பாய்மரத்துடன் கடலில் திரியும் கப்பல்கள் போலக் காட்சி தந்தன.

 

என்ன அருமையான ‘கடல்- கப்பல்’ காட்சியை கம்பன் நம் கண் முன் நிறுத்துகிறான் பாருங்கள்.

 

ஒரு விஷயத்தை உவமையாகப் பயன்படுத்த வேண்டுமானால், அது எல்லோருக்கும் ஸர்வ சாதாரணமாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதை உவமையாகப் பயன்படுத்த முடியும். அந்தக் காலத்தில் வங்கக் கடலில் நடந்த கடல் தாக்குதல் இது. அதையும் சமாளித்து ராஜ ராஜ சோழனும் ராஜேந்திரனும் மாநக்கவாரம், மாயிருடிங்கம், மாபூப்பாளம்,சாவகம், புட்பகம்,சிங்களம் எனப் பல தீவுகளை வென்றனன்.

வாழ்க தமிழ்!!  வளர்க தமிழன் பெருமை!!

 

–subham–

 

ஒரு வழக்கை எப்படி வாதாடுவது? (Post No.5517)

WRITTEN BY S NAGARAJAN

Date: 8 October 2018

 

Time uploaded in London – 6-42 AM (British Summer Time)

 

Post No. 5517

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

ஒரு வழக்கை எப்படி வாதாடுவது?

 

ச.நாகராஜன்

 

ஒரு வழக்கை எப்படி வாதாடுவது? இதற்கு எடுத்துக்காட்டான வழக்காக எப்போதும் ஒரு வழக்கைச் சொல்வதுண்டு.

அந்த வழக்கும் அது கையாளப்பட்ட விதமும் இது தான்.

ஒரு வாதி, பிரதிவாதி ஒருவருக்கு ஐநூறு ரூபாய் கொடுத்ததாகவும் அதற்கு புரோநோட்டு இருப்பதாகவும் அதை அவர் திருப்பித் தரவில்லை என்றும் வழக்குத் தொடுத்திருந்தார்.

அப்பாவியான பிரதிவாதி அந்த புரோநோட்டு செல்லுபடியான புரோநோட்டே இல்லை என்று ஆன மட்டும் கதறிப் பார்த்தார்.

வழக்கு விசாரணைக்கு வந்தது.

 

அப்பாவியான பிரதிவாதிக்கு ஒரு புத்தி கூர்மையுள்ள வக்கீல் வாதாட வந்தார்.

குறுக்கு விசாரணை ஆரம்பித்தது. வாதியை நோக்கி வக்கீல் தனது கேள்விகளைத் தொடுத்தார்.

வக்கீல் : உங்கள் வயது என்ன?

வாதி : 53

வக்கீல் :எங்கு நீங்கள் வசிக்கிறீர்கள்?

வாதி : அங்கி வாடியில்

 

வக்கீல் : அங்கு அடிக்கடி திருட்டு நடப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேனே!

வாதி : (சிறிது குழப்பமடைந்தவராக) ஆம்

வக்கீல் : உங்கள் வீட்டிற்கு வாட்ச்மேன் வைத்திருக்கிறீர்களா?

வாதி : (இன்னும் குழப்பமடைந்தவராக ) இல்லை

வக்கீல் : வீட்டில் லாக்கர் உண்டா?

வாதி : இல்லை

 

வக்கீல் : நீங்கள் பெரிய பணக்காரர் இல்லை, அப்படித்தானே?

வாதி : ஆமாம்

வக்கீல் : உங்களுக்கு பேங்க் அக்கவுண்ட் உண்டா?

வாதி : இல்லை

வக்கீல் : அப்படியானால் உங்கள் பணத்தை எங்கே வைத்திருப்பீர்கள்?

 

வாதி ; போஸ்ட் ஆபீஸில் ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருக்கிறேன்.

வக்கீல் : ஓ! அந்த அக்கவுண்டில் தான் உங்கள் பணம் எல்லாம் இருக்கிறதா?

வாதி : ஆமாம்

வக்கீல் : நீங்கள் பிரதிவாதிக்குக் கொடுத்த பணம் அந்த போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்டிலிருந்து எடுக்கப்பட்ட பணம் தானே!

வாதி : ஆமாம்

வக்கீல் : பிரதிவாதிக்கு ஐநூறு ரூபாயை எப்படிக் கொடுத்தீர்கள்?

வாதி : ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளாகக் கொடுத்தேன்

வக்கீல் : இந்த ஐநூறு ரூபாயை உங்கள் பெயரில் உள்ள போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்டிலிருந்து தான் எடுத்தீர்கள், இல்லையா?

வாதி : ஆமாம்

வக்கீல் : பிரதிவாதிக்குக் கொடுப்பதற்கு முன்னர் இந்த ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை நீங்கள் போஸ்ட் ஆபீஸ் சென்று உங்கள் அக்கவுண்டிலிருந்து எடுத்து வந்து இதை பிரதிவாதிக்குக் கொடுத்தீர்கள், அப்படித்தானே!

 

வாதி : (மிகுந்த உற்சாகத்துடன்) ஆமாம், ஆமாம்

வக்கீல் : அதாவது இந்த ஐநூறு ரூபாயை ஒரே நாளில் எடுத்து அதே நாளில் பிரதிவாதிக்குக் கொடுத்தீர்கள், சரியா?

வாதி : ஆமாம்

வக்கீல் : இது நிச்சயம் தானே?

வாதி ; நிச்சயம் தான்

 

வக்கீல் : இந்த ஐநூறு ரூபாயைக் கொடுத்து விட்டு புரோநோட்டை வாங்கினீர்கள், அப்போது மணி என்ன?

வாதி : மாலை ஆறு மணி இருக்கும்.

வக்கீல் : அதாவது அந்த நாளில் தான் நீங்கள் போஸ்ட் ஆபீஸ் சென்று பணத்தை எடுத்து வந்திருக்கிறீர்கள்!

வாதி : ஆமாம்

வக்கீல் : பணத்தை எடுக்க எத்தனை  மணிக்கு போஸ்ட் ஆபீஸ் சென்றீர்கள்?

வாதி:  மதியம் ஒரு மணிக்கு

 

வக்கீல் : ஆக ஒரு மணிக்கு எடுத்த பணத்தை அதே நாள் மாலை ஆறு மணிக்கு பிரதிவாதியிடம் அளித்து புரோநோட்டையும் பெற்றுக் கொண்டீர்கள், சரிதானே!

வாதி: மிகச் சரியாகச் சொன்னீர்கள்

வக்கீல் : இது தவிர பிரதிவாதிக்கு நீங்கள் வேறு எந்தப் பணத்தையும் கொடுக்கவில்லை, சரிதானே?

வாதி : சரிதான், வேறு எந்தப் பணத்தையும் கொடுக்கவில்லை

வக்கீல் : மிக்க நன்றி, அவ்வளவு தான்.

குறுக்கு விசாரணை முடிந்தது.

 

குறுக்கு விசாரணை செய்த பிரதிவாதியின் வக்கீல் நீதிபதியிடம் அந்த புரோநோட் எழுதிய தேதியைச் சுட்டிக் காண்பித்தார்.

அது ஆகஸ்ட் 15ஆம் தேதி.

 

வாதியின் வழக்குப்படி அவர் அதே நாளில் எடுத்த பணத்தை அன்று மாலையே பிரதிவாதியிடம் தந்திருக்கிறார்! அதுவும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று!

 

அது போஸ்ட் ஆபீஸுக்கான விடுமுறை தினம்!

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பிரதிவாதி விடுவிக்கப்பட்டார்!

 

எந்த வித ஓட்டையும் இல்லாமல் பிரதிவாதிக்காக வாதாடி அவரை வெளியில் கொண்டு வந்த வக்கீலின் வாதம் எடுத்துக்காட்டான வாதமாக இன்றும் இளம் வக்கீல்களுக்குக் காட்டப்படுகிறது.

 

அடுத்து ஆபிரஹாம் லிங்கன் வாதாடிய வழக்கு ஒன்றைப் பார்ப்போம்.

 

அதற்கான முன்னோடிக் கட்டுரை தான் இந்தக் கட்டுரை!

***