அம்மா! அம்மா!! அம்மா!!! (Post No.2792)

mother-and-baby-portrait-drawing-kate-sumners

Translated by london swaminathan

 

Date: 8 May 2016

 

Post No. 2792

 

Time uploaded in London :–  6-32 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

இந்தப் பகுதியில், அன்னை (மாதா) பற்றிய பழமொழிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

 

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருத பழமொழிகள்- பகுதி-7

(பகுதி 6 ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது)

mother baby

104.கா நாம மாதா புத்ரக அஸ்ய அபராதம் ந மர்ஷயதி – பிரதிமா நாடக

தனது குழந்தையின் தவறை மன்னிக்காத தாயும் உண்டோ?

 

105.குபுத்ரோ ஜாயதே க்வசித் அபி குமாதா ந பவதி –தேவி அபராதக்ஷமாஸ்தோத்ரம்

கெட்ட மகன்கள் இருக்கலாம், கெட்ட தாயார் கிடையவே கிடையாது.

 

106.ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரீயசீ

-கஹாவத்ரதனாகர்

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே

 

107.ஜீவன் மாத்ருக ஏவ நூனம் அதுலம் ப்ருங்தே சுகம் ஸ்வாலயே-கஹாவத்ரதனாகர்

தாய் உயிரோடிருக்கும் வரைதான்  வீட்டில் சுகம்.

 

108.து: கம் ஹி ஜனனீனாம் சுதுஸ் சுகம் –ப்ருஹத் கதா மஞ்சரி

அம்மாக்கள் படும் துயரம் கொஞ்சநஞ்சமல்ல.

 

109.துஹிது: ப்ரதானகாலே து:கசீலா ஹி மாதர:

பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து அனுப்புகையில் தாயார் மனம் தவிக்கும்.

mother rangoli

110.ந மாது: தைவதம் பரம்- சாணக்ய நீதி

அம்மாவுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை (தாயினும் பெரிய கோயில் இல்லை)

 

111.பதிதா குரவஸ்த்யாஜ்யா நது மாதா கதாசன

மேலிருந்து கீழே வீழ்ந்த பெரியோரை விட்டுவிடலாம், ஆனால் அம்மாவை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது.

 

112.பாததே ந நிஜ ஆபத்யம் மார்ஜாரீ தசன ஆவலி.

தாய்ப் பூனையின் பற்கள், பூனைக்குட்டிகளுக்கு தீங்கு செய்யா (கோழி மிதித்து குஞ்சுகள் சாகா)

 

113.மாதா கில மனுஷ்யாணாம் தேவதானாம் ச தைவதம் – மத்யமவ்யாயோக

எல்லா மனிதர்களுக்கும் அம்மாவே தெய்வத்தின் தெய்வம்.

 

114.மாதா பித்ருப்யாம்  சப்தஸ்ஸன்ன (சப்த:+சன்+ ந) ஜாது சுகமஸ்னுதே – கதாசரித்சாகரம்

பெற்றோர்களின் சாபத்துக்குள்ளான பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழமுடியாது.

 

115.மாத்ரு ஜங்காஹி வத்சஸ்ய ஸ்தம்பீ பவதி  பந்தனே – ஹிதோபதேசம்

அம்மாவின் கால்களே, குழந்தைகளைத் தாங்கும் தூண்கள் (தாயார்தான் ஆதரவு தரும் கொழுகொம்பு)

 

116.மாத்ரு தேவோ பவ பித்ருதேவோ பவ- தைத்ரீயோபநிஷத்

தாயை தெய்வமாக வணங்கு; தந்தையை தெய்வமாக வணங்கு.

 

117.மாத்ருதோஷோ ந தோஷ: -ப்ரதிமா நாடக

அம்மாவிடமுள்ள குறை, குறையாகாது

 

118.மாத்ரா சமம்  நாஸ்தி சரீர போஷணம் – சுபாஷிதாவலி

தாயைப்போல உடம்பைக் கவனிப்பவர் எவருமிலர்.

 

தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை!

119.யாத்ருசீ ஜனனீ லோகே புத்ரீ பவதி தாத்ருசீ

— கஹாவத்ரதனாகர்

தாய் எப்படியோ அப்படியே மகள் இருப்பாள் (தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை).

mother_love_

120.ஸஹஸ்ரம் து பித்ரூன் மாதா கௌரவேனாம் அதிரிச்யதே—மனுஸ்மிருதி 2-145

தந்தையைவிட ஆயிரம் மடங்கு கௌரவுத்துக்குரியவர் தாய்.

 

121.ஹஸ்த ஸ்பர்சோ ஹி மாத்ரூணாம் அஜலஸ்ய ஜலாஞ்சலி: -ப்ரதிமா நாடக

தாயின் அரவணைப்பு, தாகத்தால் தவிப்பவனுக்குக் கிடைத்த தண்ணீர் போல சுகம் தரும்.

 

 

–சுபம்–

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 5 (Post No.2791)

2srirangam

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 8 May 2016

 

Post No. 2791

 

Time uploaded in London :–  5-36 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்..

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 5

 

.நாகராஜன்

 

IMG_9630 (2)

ஏகாதசி –  சிந்தாமணி என்ற காவேரியில் ஏகாதசியில் ஸ்நானம்.

ஜம்புகேஸ்வரம், மாத்ருபூதம் ரங்கநாதர் இம்முவர்களுடைய வீக்ஷண்யம் இருப்பதால் சிந்தாமணி என்று பெயர் வந்தது. எல்லா ஏகாசதியும் விசேடமே. மார்கழி ஏகாதசி மிகவும் விசேடம். சிதம்பரம் வடமேற்கில் ஏகாதசி விசேடம்

 

துவாதசி – ஐம்பு தீர்த்தம்,  ஸ்ரீரங்கம் லட்சுமி ஸந்நிதானத்தில் உள்ள தீர்த்தம்

 

திரயோதசி – கோகர்ணம் கோடி தீர்த்தம்

 

சதுர்த்தசி – கோகர்ணம்,  ஸ்ரீகாளஹஸ்தி, கேதாரம்,காசி, மத்யார்ச்சுனம், திருவையாறு, மாயூரம் ஆகிய தலங்களில் சிவராத்திரி சதுர்த்தசி தவிர மாயூரத்திலும் கேதாரத்திலும் நாக சதுர்த்தசி விசேடம். தீபாவளியோடு கேதார பூஜை முடிவு பெறும்.

திருவையாறு: காவேரி வடகரையில் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இதற்கு தக்ஷிண கைலாஸம் என்று பெயர்.பஞ்சநத க்ஷேத்திரம். தர்மஸம்வர்த்தனி சமேத பஞ்சநாதேசுவரர் ஆலயம். அப்பருக்கு கைலாஸ தரிசனம் கொடுத்த தலம்.இந்திரன், வாலி ஆகியோரும் பூஜித்த தலம்.

 

 

மாயூரம்: காவேரி தென்கரையில் ஒரு மைல் தூரத்தில் உள்ள தலம். ஒரு அசுரன் காவேரி ஜலத்தைக் குடிக்க ஆரம்பித்தான். பரமசிவன் அவனை வதம் செய்து, தான் அந்த தீர்த்தத்திலேயே வசித்தார். மயூர நாதர் கோவில் உள்ளது. தேவி மயில் ரூபம் எடுத்து ஈஸ்வரனை பூஜித்த தலம்.இந்திராணியும் இங்கு பூஜித்தாள்.

 

அமாவாசை, பௌர்ணமி – காளத்தி, மல்லிகார்ஜுனம் (சிவராத்திரி) அமாவாசை, பௌர்ணமி. ஸகலதீர்த்தம், மாயூரம், அர்த்தோதயம். மஹோதயம்.

 

 

வாரங்கள் பூஜித்த தலங்கள்

 

ஞாயிறு:  திருநாகேஸ்வரம், ஸ்ரீ வாஞ்சியம், திருத்தானமுடையார் கோயில், சாயாவனம்

திங்கள்: திருக்கடையூர்,(திருக்கடவூர்), சிவபுரம், திருவாலவாய், காசி

1859 tiruvaiyaru ther

செவ்வாய்: வைத்தீசுவரன் கோவில், அத்திப்புலியூர், இலந்துறை

புதன்: வெண்காடு (சந்திர புஷ்கரணி)

 

வியாழன்: பெருஞ்சேரி, திருக்கொண்டீசுவரம், கச்சி, கழுக்குன்றம்

வெள்ளி: காஞ்சி (வாமதீர்த்தம்)

சனி: திருநள்ளாறு, ஆரூர்

 

மாதங்களும் பர்வங்களும் பூஜை செய்த இடங்களை ஆகமங்கள் மூலம் அறியலாம்.

 

மேலே கண்ட குறிப்புகளை ஆழ்ந்து ஊன்றி கவனித்து அவரவர்கள் தங்கள் தங்களுக்குரிய தலங்களுக்குச் சென்று வழிபடலாம்.

 

mahamakam tank view

தலங்கள் பற்றிய அபூர்வ புத்தகங்கள்

தல முறை பற்றி அபூர்வமான புத்தகங்கள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியாகி உள்ளன.

 

 

திரு இராமசுவாமிப் பிள்ளை அவர்கள் தலமுறைப் பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் பயனபடுத்தியது போலவே  ஸ்ரீ உ.வே.சாவும் தொடர் எண்ணிட்டு தலங்கள், தீர்த்தங்கள், விமானங்கள் ஆகியவற்றின் சிறப்புகளைத் தொகுத்துள்ளார். 8135 என்ற தொடர் எண்ணை இவரது குறிப்புகளில் காணும் போது எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட எத்துணை விஷயங்களை இவர் சேர்த்திருக்கிறார் என்ற பிரமிப்பு ஏற்படுகிறது. ஆனால் அவை என்னவாயின?!! வருங்காலம் மீட்டுத் தருமா?

 

 

இது தவிர காசியைப் பற்றிய அபூர்வ விவரங்களை காஞ்சி பரமாசார்யாள் ஆசியுடன் தொகுத்துள்ளவர் திரு ரா.வீழிநாதன். (1987)

 

இன்னொரு தலங்களைப் பற்றிய குறிப்பிடத் தகுந்த அபூர்வமான புத்தகம்  ஸ்ரீகாவேரி ரஹஸ்யம் (1962) என்ற நூலாகும்.காஞ்சி பரமாசார்யாள், தமது தொடர்ச்சியான முயற்சியின் மூலம் பல பக்தர்களிடமும் அரிய தல விஷயங்களைச் சேகரிக்குமாறு ஆணையிட்டார். இந்த அபூர்வமான குறிப்புகள் அனைத்தும் ஓய்வு பெற்ற கல்வி இலாகா அதிகாரியான  ஸ்ரீ ஈ.வி. கோபாலையரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர் காவேரி நதியை ஒட்டி உள்ள வடபுற க்ஷேத்திரங்கள், தென்புற க்ஷேத்திரங்கள், காவேரி வளர்த்த மகான்கள், காவேரி ப்ரதக்ஷிண விதி, ஸ்நான முறை, காவேரி பற்றிய இலக்கியக் குறிப்புகள், புராணக் குறிப்புகள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களைத் தொகுத்து காவேரி கலைக் களஞ்சியமாக ஒரு நூலை வெளியிட்டார்.

 

 

ஆன்மீக அன்பர்கள் தல விசேடங்களைப் பற்றிய உண்மையான தொன்மக் குறிப்புகளை அறிய வேண்டுமெனில் இது போன்ற புத்தங்களையும் இது பற்றி நன்கு அறிந்த வல்லாரையும் நாட வேண்டும்.

ganga-arati-modi-abe

Prime Minister of Japan Shinzo Abe and Indian Prime Minister Narendra Modi performing Ganga Arti at Dhashvmegh Ghat in Varanasi on saturday.Express photo by Vishal Srivastav 12.12.2015

வைக்கோல்போரில் ஊசியைக் கண்டெடுத்தவர்கள் நமது தேடலைச் சுலபமாக்கி விட்டார்கள். அவர்களுக்கு வரும் காலமெல்லாம் நன்றி சொல்லும்!

–Subham–

********

 

திருடர்கள் இரண்டு வகை! ஞானம் இரண்டு வகை (Post No.2790)

obbery324-600

Compiled by london swaminathan

Date: 7 May 2016

Post No. 2790

Time uploaded in London :– 12-56

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
திருடர்களைப் பற்றி ஒரு சம்ஸ்கிருத பழமொழியைப் படித்தேன். உடனே இந்திய அரசியல்வாதிகள், குறிப்பாக தமிழ்நாட்டுக் கட்சிகளின் அரசியல்வாதிகளின் படம் என் மனக் கண் முன்னால் ஓடியது. நீங்களும் படியுங்கள்; பகற்கொள்ளையர்களின் படங்கள் உங்கள் கண்களுக்கு முன்னால் தெரியும்:–

“ப்ரகாசாஸ்ச அப்ரகாசாஸ்ச த்வி வித அஸ்தி தஸ்கரா: ஸ்ம்ருதா:” (திருடர்கள் இரண்டு வகை என்று சொல்லப்படுகிறது; தெரிந்தும், தெரியாமலும் (ஒளிந்து) திருடுபவர்கள்)

பகல் ஒளியில் பகிரங்கமாகத் திருடுபவர்கள் (ப்ரகாச), இருட்டில் யாருக்கும் தெரியாமல் திருருடுபவர்கள் (அப்ரகாச) என்று இரண்டு வகை! திருடர்களைக் கூட அக்காலத்திலேயே வகைப்படுத்தியது மட்டுமின்றி திருடர்கள், திருட்டுத்தொழில் பற்றி ஒரு சம்ஸ்கிருத நூலும் உள்ளது!

 

1900 வேதபாடசாலை

ஞானம் இரண்டு வகை
ஞானம் து த்வி விதம் ப்ரோக்தம் சாப்திகம் ப்ரதமம் ஸ்ம்ருதம்
அனுபவாக்யம் த்விதீயந்து ஞானம் தத் துர்லபம் ந்ருப
–தேவீ பாகவதம் 15-52
ஞானம் இரண்டு வகையாகச் சொல்லப்படுகிறது: 1. முதலாவது, வேத சாஸ்திரம் மூலம் கிடைக்கும் அறிவு (சாப்திகம்= சப்தம்/ஒலி மூல அறிவு) 2.இரண்டாவது, அனுபவ அறிவு, அதாவது பட்டறிவு. அரசனே! இவை இரண்டும் அரிதானவை.

என்னதான் படித்தாலும் அனுபவ அறிவுக்கு ஈடாகாது. அதனால்தான் ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்றனர். ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழியும், மருத்துவம், ஜோதிடம் போன்ற தொழில்களில் அனுபவ அறிவே முக்கியம் என்பதைக் காட்டுகிறது.

 

படிப்பறிவு மூலம் மட்டும் ஒருவன் ஞானியாவதல்ல. விட்டகுறை தொட்ட குறையாக – பூர்வ ஜன்ம புண்ணியம் காரணமாக—ஞான வேட்கை இருப்பவனே ஆன்மீகப் பாதையில் அடிவைக்கிறான். பின்னர் குரு மூலம் சந்தேகம் தெளிகிறான்.அப்போது மேலும் மேலும் பல நூல்களைக் கற்கிறான் அல்லது கேட்டு அறிகிறான்.

asceticww2

–Subham–

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 3 (Post No.2785)

meenakshi base view

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 6 May 2016

 

Post No. 2785

 

 

Time uploaded in London :–  5-51 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்..

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 3

 

.நாகராஜன்

 

மூலம்மதுரை

மதுரை: தத்தன் என்னும் பாண்டியன் அரசாளுகையில் சமணர் அனுப்பிய நாகம் உமிழ்ந்த விஷத்தின் கொடுமை சிவபெருமானுடைய சடையில் இருந்த சந்திரனிடத்துள்ள அமுதத்துளியால் சமனதமுற்று மதுரமாயிற்று. அதனால் இந்தத் தலம் மதுரை என்ற பெயரைப் பெற்றது. திருவாலவாய், திரு நள்ளாறு, திரு முடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு மாடங்கள் கூடும் இடமாகையால் நான்மாடக் கூடல் என்ற பெயர் பெற்றது.சிவபெருமானின் அழகிய வடிவைக் கண்டு மகிழ்ந்த இந்திரன் சிவனுக்குச் சொக்கன் என்ற திருநாமம் சாத்தித் தொழுதான்.பாண்டியனுக்காக கால் மாறி ஆடிய திருவிளையாடல் உள்ளிட்ட 64 திருவிளையாடல்களின் அற்புதத் தலம்.

 

 

பூராடம்திருச்செந்தூர்

 

திருச்செந்தூர்: முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக அமைந்த கடற்கரைத் தலம். வள்ளி தெய்வானையுடன் முருகன் வீற்றிருக்கும் திருத்தலம். சூரபத்மனை போரில் வென்ற தலமும் இதுவே. ஐப்பசி மாதம் நடக்கும் சூரசம்ஹாரத் திருவிழா பிரபலமான ஒன்று. நாழிக் கிணறு தீர்த்தம் கடலின் அருகே இருந்த போதும் உப்புக் கரிக்காமல் சுவையாக இருப்பது விந்தைக்குரிய ஒன்று.

 murugan senthiandavan

 Tiruchendur Skanda

உத்திராடம்சஙகரநயினார் கோவில்

 

சங்கரநயினார் கோவில் : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தலம். இறைவன்: சங்கரலிங்க ஸ்வாமி இறைவி: கோமதி அம்மன் என்னும் ஆவுடையம்மன். உக்கிரபாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பழம் பெரும் கோவில். ஆடி மாதத்தில் நடக்கும் ஆடித்தவசு திருவிழா பிரபலமானது. அம்மன் சிவனை வேண்டி ஊசிமுனையின் மேலிருந்து தவம் புரியும் திருத்தலம். அம்மனின் வேண்டுகோளை ஏற்று சங்கரநாராயணராக இறைவன் காட்சி கொடுத்த திருத்தலம். உடம்பில் கட்டி உள்ளிட்ட நோய்களிலிருந்து காக்கும் அரும் தலம்.

திருவோணம் – அர்த்தோதயம், மகோதயம்

 

 

அவிட்டம், சதயம்காளஹஸ்தி, மல்லிகார்ஜுனம், கோகர்ணம் (சிவராத்திரி)

 

காளஹஸ்தி: இறைவன்: காளத்திநாதர் இறைவி: ஞானப் பூங்கோதை.கண்ணப்பர் அருள் பெற்ற தலம். சிலந்தி, பாம்பு, யானை வழிபட்டுப் பேறு பெற்ற தலம், பொன்முகலி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது சிறந்த ராகு- கேது க்ஷேத்திரமாகும்.

கோகர்ணம்: வடநாட்டில் அமைந்துள்ள தலம். இறைவன்: மஹாபல நாதர் இறைவி: கோகர்ண நாயகி தீர்த்தம்  :கோடி தீர்த்தம்

 

 

பூரட்டாதி, உத்திரட்டாதி – திருவாரூர் (தேவதீர்த்தம்)

 

ரேவதி – திருக்கடையூர் (அமிருத தீர்த்தம், திருவாவடுதுறை  (மாஸம் பூர்வ பட்சத்தில் ஆரம்பமாகி அமரபட்சத்தில் தீர்த்தம் – அமரபட்சம்.

 

-தொடரும்

 

 

 

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 2 (Post No.2782)

Zodiac-Barocius-1585

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 5 May 2016

 

Post No. 2782

 

 

Time uploaded in London :–  5-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

 

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்.

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.

Star-Chart-Black

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 2

 

.நாகராஜன்

 

 

மிருகசீர்ஷம், திருவாதிரைசிதம்பரம், சிவகங்கை

 

சிதம்பரம் : கோயில் என்று சிறப்பாகச் சொல்லப்படும் தலம்.இறைவன் : திருமூலட்டானேசுவரர் இறைவி: உமையம்மை. தில்லை என்றும் பூலோக கைலாயம் என்றும் சிறப்பாக அழைக்கப்படும் தலம். பஞ்சபூத தலங்களுள் ஆகாய தலம் இது. பாடல் பெற்ற சிவ தலங்களில் முதலாவது தலம். பதஞ்சலி, வியாக்கிரபாதர், திருமூலர் ஆகியோர் வழிபட்ட தலம். கிழக்கு கோபுரத்தில் 108 பரத நாட்டிய நிலைகளைக் காண முடியும். பொன் கூரை வேய்ந்திருப்பதால் பொன்னம்பலம் என்ற சிறப்புப் பெயர் உண்டு.

 

புனர்பூசம்இராமேஸ்வரம் முதலான இராமதீர்த்தம்

இராமேஸ்வரம்: பாண்டிய நாட்டுத் தலம். இறைவன்: இராமநாதர் இறைவி: மலைவளர் காதலி (பர்வதவர்த்திநி) அக்நி தீரத்தம் உள்ள கடற்கரைத் தலம்.இராவணனைக் கொன்ற தோஷத்திற்கு இராமன் பூஜித்த தலம். இராமநாதர் எழுந்தருளி இருக்கும் இடம் திருக் கந்தமாதனம் என்னும் மலையாகும்.இராமநாதர் திருமேனி சீதையால் வெண் மணலாற் செய்த திருவுருவமாக ஸைகத லிங்கமாக அமைக்கப் பெற்றது.

 

பூசம் – பிரசித்தம் ( பிரசித்தம் என்றால் ஏராளமான தலங்கள் என்று பொருள்)

ஆயில்யம் – வழுவூர், மாகாளம்

 

மகம், பூரம் – பிரசித்தம்

 

 

உத்திரம்பங்குனி உத்திரம்திருவாரூர்

 

திருவாரூர்: பஞ்சபூதத் தலங்களுள் பிருதுவி தலம். தேவர்கள் கறையான் வடிவு கொண்டியற்றிய புற்றை இடமாகக் கொண்டு இறைவன் சிவலிங்கப் பெருமானாக எழுந்தருளிய இடமாகையால் வன்மீகபுரம் என்ற பெயரும் உண்டு.சப்தவிடங்கத் தலங்களுள் முதன்மையான இது காசிக்கும் தில்லைக்கும் மேலானது.அம்பிகை தவம் செய்த தலமாதலால் பராசக்தி தலம். திருமகள் வழிபட்ட தலமாதலால் கமலாலயம். வீதி விடங்கராகிய தியாகேசர் எழுந்தருளி இருப்பதால் வீதிவிடங்கம் என்ற பெயரும் உண்டு.அகத்தியர், அரிச்சந்திரன் சனகாதி நால்வர் என்று இங்கு வழிபட்டுப் பேறு பெற்றோர் ஏராளம்.

ஹஸ்தம் – திருவாரூர்

சித்திரை – பிரசித்தம்

 

சுவாதிகேதாரம் (தீபாவளி)

கேதாரம் : வடநாட்டுத் தலம். இமயமலைச் சாரலில் ஹரிதுவாரத்திலிருந்து 253 கிலோமீட்டரில் உள்ள தலம். இறைவன்: கேதாரநாதர் இறைவி: கேதார கௌரியம்மை. கேதாரம்: வளைந்த பூமி இங்குள்ள லிங்கம் எருமையின் பின்புறம் போன்ற வடிவில் இருப்பதாக அருணாசல புராணம் கூறுகிறது.

 

விசாகம் – (வைசாகம்) பிரசித்தம்

 

அநுஷம்திருநெல்வேலி

 

திருநெல்வேலி: பாண்டிய நாட்டுத் தலம். இறைவர்: நெல்லையப்பர்.  இறைவி:காந்திமதியம்மை. தீர்த்தம்: தாமிரவருணி

 

 

கேட்டைஎலந்துறை, திருநெல்வேலி

-தொடரும்

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் -1 (Post No 2779)

hindu-zodiac

Date: 4 May 2016

 

Post No. 2779

 

 

Time uploaded in London :–  6-12 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்.

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.ஆ

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் -1

 

.நாகராஜன்

star2

நட்சத்திர தலங்கள்

ஹிந்து அற நூல்கள் காட்டும் வழிகாட்டுதலின் படி 27 நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்களே. அவரவரக்கு உரிய காலத்தில் உரிய பலனை வழங்கும் அற்புத ஆற்றலை அவை கொண்டிருக்கின்றன.

இந்த 27 நட்சத்திரங்களும் பூஜித்த தலங்கள் இந்தியாவெங்கும் உள்ளன. இவற்றைத் தனது இடையறாத ஆய்வால் கண்டு தமிழ்த்தாத்தா ஸ்ரீ உ.வே.சாமிநாதையர் குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார்.

அதிகாரபூர்வமான ஆய்வு என்பதால் இதில் உள்ள சிறப்பை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

நட்சத்திரங்கள் பூஜித்த தலங்கள் வருமாறு:-

 

அசுவதி –  திருக்கடையூர்

மயிலாடுதுறைதரங்கம்பாடி இரயில் கிளைப்பாதையில் 22 கிலோமீட்டரில் உள்ள தலம். இறைவன்: அமிர்தகடேசர். இறைவி அபிராமி அம்மை. அமிர்த புஷ்கரணி உள்ள தலம். எம சம்ஹாரம் நடந்த தலம். சித்திரை மாதம் 18 நாட்கள் நடக்கும் விழாவில் மக நட்சத்திரத்தில் இத்திருவிழா சிறப்புற நடக்கும்.

 

பரணிஸ்ரீ வாஞ்சியம்

ஸ்ரீ வாஞ்சியம்: கங்கை குப்தமாக (மறைவாக) வசிக்கப்பெற்ற தலம்.சுவாமி சூலத்தால் குத்தி உண்டாக்கப்பெற்றது. சூலம் குத்திய அடையாளமாக மூன்று கிணறுகள் இங்கு உண்டு. யமன் அக்கினி மூலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். லட்சுமி திருமாலை அடைவதற்குத் தவம் செய்த தலம். சந்தன விருட்சம் பிரகாரத்தில் இருக்கிறது. கோவிலின் வடக்கில் உள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்நானம் செய்வது விசேஷம். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு யம வாதனை இல்லை. கோவிலில் யமனுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. சுவாமிக்கு யமவாகனம் உள்ளது.காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் தென்னாட்டுத் தலங்கள் ஆறினுள் ஒன்று. (இதர ஐந்து தலங்கள்: திருவெண்காடு, திருவையாறு, மாயூரம், திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு)

 

கார்த்திகைசரவணப் பொய்கை, காசி, அருணாசலம்

காசி:மோட்சபுரிகள் ஏழில் நடு நாயகமாக விளங்கும் தலம். இந்தப் பிறவியிலேயே முக்தி தரும் சிறப்புடைய தலம். பிரளய காலத்தில் மூலப் பொருள், அனைத்தையும் ஒரு குடுக்கையில் அமுதம் கலந்து அடைத்து விடுகிறது. அதைப் பத்திரப்படுத்தும் இடம் காசி. சாலோக்யம், சாரூப்யம், சாந்நித்யம் சாயுஜ்யம் என்ற நான்கு வகை முக்திகளில் இறைவனே ஆதல் என்ற சாயுஜ்ய  முக்தி தரும் தலம். ஜைன மதத்தைத் தோற்றுவித்த பார்சுவநாதர் பிறந்த இடமும் இதுவே.

 

ரோஹிணி – ஆனைக்கா, எல்லா விஷ்ணு தலங்களும்

திரு ஆனைக்கா : காவிரியின் வடபுறம் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் அப்புலிங்க தலம்.சுவாமி பெயர் – ஜம்புகேஸ்வரர். அம்பாள்: அகிலாண்டேஸ்வரி.இங்கு ஒரு யானையும் ஒரு சிலந்தியும் பூஜை செய்து கொண்டு வந்தன.வெயில் படாமல் இருப்பதற்காக சிலந்தி லிங்கத்தின் மேல் கூடு கட்டும். யானை தினமும் காவேரி ஸ்நானம் செய்து துதிக்கையில் காவேரி தீர்த்தம் ஏந்தி ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும். சிலந்தி கட்டிய கூடு கலைந்து விடும். இதைக் கவனித்து வந்த சிலந்தி ஒரு நாள் கோபம் கொண்டு யானையின் துதிக்கையினுள் நுழைந்து கடிக்கவே  யானை வலி பொறுக்க முடியாமல் புரண்டு துடித்து மரணம் அடைந்ஹது. சிலந்தியும் மாய்ந்தது.இச்சிலந்தி மறு ஜன்மத்தில் கோச்செங்கணான் சோழனாகப் பிறந்தது. கோட்செங்கச் சோழன் யானை ஏறி வர முடியாதபடி 54 மாடக் கோவில்களைக் கட்டுவித்தான்.

இங்கு தவம் செய்து வந்த ஜம்பு மஹரிஷி தலையில் நாக மரம் உண்டாயிற்று. தவம் செய்து வந்த இடத்தில் லிங்கம் இருந்த படியால் இது ஜம்புகேஸ்வரம் என்ற பெயரைப் பெற்றது. இந்த தலத்தை ஜம்புகேஸ்வரம் என்று அழைப்பர். பஞ்ச பிரகாரங்கள் உள்ள இந்தக் கோவிலில் அம்பாள் கன்னிப் பெண்ணாகவே தவம் செய்வதாக ஐதீகம். இரண்டாம் பிரகாரத்தில் ராமபிரானால் கட்டப்பட்ட பெரிய மண்டபம் உள்ளது.

தொடரும்

கந்தபுராணத்திருந்து ‘ரஸவாதி ஏமாற்றிய கதை’ (Post No 2777)

கந்தபுராணம் 1

Compiled by london swaminathan

 

Date: 3 May 2016

 

Post No. 2777

 

Time uploaded in London :– 10-41 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கந்தபுராணத்திலுள்ள ரசவாதி கதையைப் படித்தபோது சிறு வயதில் அம்புலிமாமா பத்திரிக்கையில் படித்த கதைகள் நிணைவுக்கு வந்தன. கந்த புராணத்திலும் இப்படி ஒரு கதை இருப்பது பிரிட்டிஷ் நூலகப் புத்தகத்திலிருந்துதான் தெரியவந்தது.

 

irandu1

 

நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான சி.ப. வேங்கட ராம ஐயர் எழுதிய ‘இளமையும் ஒழுக்கமும் அல்லது இரண்டு பிள்ளைகள்’ என்ற புத்தகத்தில் (ஆண்டு 1915, சென்னை), பழைய தமிழில் இந்தக் கதையை எப்படி சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்.

 

irandu22

 

irandu23

 

irandu24

 

irandu25

 

irandu26

 

irandu27

மாண்டவ்ய மகரிஷி கதை (Post No.2776)

mahabharata pile

Compiled by london swaminathan

 

Date: 3 May 2016

 

Post No. 2776

 

Time uploaded in London :– 10-10 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மாண்டவ்ய மஹரிஷி என்றும் ஆணி மாண்டவ்யர் என்றும் அழைக்கப்படும் முனிவரின் சரிதம், நிறைய பேரால் சொல்லப்பட்டிருக்கிறது. மஹாபாரதத்திலுள்ள இக்கதையை ஒவ்வொருவரும் தனக்கே உரிய பாணியில் சொல்லி, தனக்குப் பிடித்த வியாக்கியானமும் செய்திருக்கிறார்கள்.

 

நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான சி.ப. வேங்கட ராம ஐயர் எழுதிய ‘இளமையும் ஒழுக்கமும் அல்லது இரண்டு பிள்ளைகள்’ என்ற புத்தகத்தில் (ஆண்டு 1915, சென்னை), பழைய தமிழில் இந்தக் கதையை எப்படி சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்

இதற்கு முன் நான் சுருக்கமாக இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறேன்; இதோ அந்தப் பதிவின் பெயர்:

பிராமணன் மீது நஷ்ட ஈடு வழக்கு! ஒரு பழைய சுவையான கதை!

Article No.1734; Date:- 20th March, 2015.

 

irandu1

 

irandu18

 

irandu19

irandu20

 

irandu21

–subham–

 

கருமிகளை கடலில் தள்ளுக! மஹாபாரதம் அறிவுரை!! (Post No.2774)

desrt nd sea

Written  by london swaminathan

 

Date: 2 May 2016

 

Post No. 2774

 

Time uploaded in London :– 11-58 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் ஒரு அருமையான ஸ்லோகம். இதே கருத்தை வள்ளுவனும் பிற்காலத்தில் எழுதியிருக்கிறான்:–

 

த்வாவம்பசி நிவேஷ்டவ்யோ கலே பத்வா த்ருடாம் சிலாம்

தனவந்தமதாதாரம் தரித்ரம் ச தபஸ்வினம்

–மஹாபாரதம், உத்யோக பர்வம் 33-60

 

அதாத தனிக – பணமிருந்தும் கொடுக்க மறுப்பவன்

அதபஸ்வி தரித்ர – (கடவுள்) நம்பிக்கையற்ற ஏழை

த்வா- இருவரும்

கலே பத்வா த்ருடாம் சிலாம்- கழுத்தில் கல்லைக் கட்டி

அம்பசி நிவேஷ்டவ்ய = கடலில் மூழ்கடிக்கப்படவேண்டியவர்கள்.

 

வெறுமனே கடலில் தூக்கிப்போட்டால், ஒருவேளை நீந்திக் கரை சேர்ந்துவிடுவார்களே என்றெண்ணி, கழுத்தில் கல்லைக் கட்டி கடலில் தூக்கி எறிக என்கிறது மஹாபாரதம்.

 sugarcane

வள்ளுவனும் இப்படி சுடு சொற்களையே பெய்கிறான்: கையை முறுக்கு, தாடையில் ஓங்கி அடித்து நொறுக்கு, கரும்பை நசுக்கிப் பிழிவது போல கருமியை நசுக்கு – என்பான் வான் புகழ் வள்ளுவன்!!

 

 “வள்ளுவனும் வன்முறையும்”, “பாரதியும் வன்முறையும்” என்று 24 ஜூலை, 2013ல் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இதோ:

 

மரண தண்டனைக்கு ஆதரவு

 

மரண தண்டணைக்கு ஆதரவு தருபவன் வள்ளுவன். அவன் தீவிர அஹிம்சாவாதி அல்ல. தீயோரை அழிப்பது பயிர்களின் களைகளை நீக்குவது போல என்று அழகான உவமை தருகிறான். இதோ அந்தக் குறள்:

 

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனோடு நேர் (550)

 

பொருள்: நாட்டில் உள்ள கொடியோரை மரண தண்டனை கொடுத்து அழிப்பது, பயிர்கள் நன்றாக வளர உழவர்கள் களை எடுப்பது போல் ஆகும்.

 

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும் (264)

 

கீதையில் ‘’பரித்ராணாய சாதூணாம் விநாசாய ச துஷ்க்ருதாம்’ என்று கண்ணன் சொன்னதன் எதிரொலி இது. ‘’தீயோரை அழிப்பதும் நல்லோரைக் காப்பதும் என் குறிக்கோள்’’ என்று பகவான் கண்ணன் சொன்னதை, தவமுடைய யாரும் செய்ய முடியும் என்பதை வள்ளுவன் ஒப்புக்கொள்கிறான்.

twists

கன்னத்தில் அடி, கையை முறுக்கு, கரும்பு போல நசுக்கு

 

அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்

கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)

பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.

இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ் (1078)

 

பொருள்: சான்றோர்கள் சொன்ன மாத்திரத்திலேயே பிறர்க்கு உதவி செய்வர். கயவர்கள் மட்டும் கரும்பு போல் கொன்று பிழிந்தால்தான் பயன்படுவார்கள்.

 

வள்ளுவன் கோபக்காரனும் கூட. சோற்றுக்கே அலையவேண்டிய நிலை இருக்குமானால் பிரம்மாவே பிச்சை எடுக்கட்டும் என்று அவனைச் சபிக்கவும் தவறவில்லை.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகு இயற்றியான் (1062)

பொருள்: உலகில் சிலர் பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழவேண்டும் என்றால், அந்த பிரம்மாவே பிச்சை எடுத்து அழியட்டும்.

ஆக தேவையானபோது வன்முறையைப் பிரயோகிக்கலாம்; அதர்மம் செய்வோருக்கு எதிராக மட்டும் வன்முறையைக் கையாளலாம்.

 

Sugar cane-23

–சுபம்–

 

 

உள்ளத்தனையது உயர்வு; உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! (Post No 2772)

cartoon-ladder-5

Compiled by london swaminathan

 

Date: 1 May 2016

 

Post No. 2772

 

Time uploaded in London :– 21-49

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

HitchYourWagonToAStar-jpg

அமெரிக்கக் கவிஞரும் கட்டுரையாளருமான ரால்ப் வால்டோ  எமர்சன் (1803-1882) ஒரு கட்டுரையில் எழுதிய வாசகம் ஆங்கில நூல்களில் ‘ஊக்கமுடைமை’ பற்றிய சிறந்த மேற்கோளாகப் பயன்படுத்தப்படுகிறது. உனது வாகனத்தை (பிறர் உதவியுடன்) நட்சத்திரத்தை நோக்கி நகர்த்து ‘Hitch your wagon to a star’ என்றார். இதன் உட்பொருள் உயர்ந்த குறிக்கோள் உடையவனாக இரு. ஏற்கனவே வெற்றி பெற்றவரின் பாதையைப் பின்பற்று என்பதாகும்

 

இதில் வியப்பான விஷயம் என்ன வென்றால் இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே சோழ மன்னன் கோபெருஞ்சோழன் சொல்லியிருக்கிறான்:–

புறம் 214 (கோப்பெருஞ் சோழன்): யானை வேட்டைக்குப் போகிறவன் வெல்வான். யானையுடன் திரும்பி வருவான். குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது இல்லாமலும் திரும்புவான். உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய உயர்ந்தோனாக விளங்குக. இமயம் போல் புகழ் அடைக.

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு (புறம் 214)

 

ஆங்கிலப் பழமொழிகள்

இதை வேறு சில ஆங்கிலப் பழமொழிகளிலும் காணலாம்.

 

He who aims at the moon may hit the top of a tree; he who aims at the top of a tree unlikely to get off the ground.

நிலவை எட்டிப் பிடிக்க முயல்பவன் மரத்தின் உச்சியையாவது தொடுவான்; மரத்தின் உச்சியை அடைய முயல்பவன், தரையை விட்டுக்கூட எழுதிருப்பது சந்தேகமே- என்கிறது ஆங்கிலப் பழமொழி.

See mickle, and get something; seek little and get nothing (mickle = much)

இன்னொரு பழமொழியும் இதை வலியுறுத்தும். ‘நிறையக் கேட்டால் கொஞ்சமாவது கிடைக்கும்; கொஞ்சம் கேட்டால் ஒன்றும் கிடைக்காது’ என்று சொல்கிறது இப்பழமொழி!

 

நன்கொடை வசூலிக்கப் போகிறவர்களுக்கு இது நன்கு விளங்கும். ஆயிரம் ரூபாய் நன்கொடை கேட்டால், கொடுப்பவன் பாதியாவது கொடுப்பான். விற்பனையாளர் தந்திரமும் இதுதானே! ஒரு பொருளின் விலையை ஆயிரம் ரூபாய் என்பான். நாம் நூறு ரூபாய்க்குத் தருகிறாயா? என்போம். கடைசியில் 500 ரூபாயில் பேரம் முடிவடையும். ஆக வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள் இருந்தால்தான் நாம் முன்னேறுவோம். குறிக்கோளே இல்லாதவர் இறந்தர்க்குச் சமம். மரக்கட்டையும் அவர்களும் ஒன்றே என்பான் வள்ளுவன் (குறள் 600).

வள்ளுவனும் ஊக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் இரண்டு குறள்களில் மிக அழகாகச் சொல்கிறான்:

2lotus bloom

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

 

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளாமை தள்ளினும் நீர்த்து– குறள் 596

ஆனால் மேற்கூறிய எல்லா மேற்கோள்களுக்கும் முன்னதாகவே கண்ணபிரான் இக்கருத்தை பகவத் கீதையில் முன்வைத்துவிட்டான்:-

 

உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.

புறநானூற்றில் இமயம் போல உயர்ந்து புகழ் அடைவாயாக (பாடல் 214) என்பது கீதையிலும் இருக்கிறது

(கீதை 11-33) எழுந்திரு ! புகழடை!! உத்திஷ்ட ! யசோ லப !!

 

எனது முந்தைய கட்டுரைகள்:–

மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள் …(31 Mar 2012) என்ற பதிவிலும், புறநானூற்றில் பகவத் கீதை- பகுதி 2-லும் (31-3-2012) இக்கருத்துகளை முன்னரே தொட்டுக்காட்டி இருக்கிறேன்

 

–சுபம்–