Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் அசபை என்ற ஒரு அத்தியாயமே நாலாம் தந்திரத்தில் உள்ளது அதைத் தொடர்ந்து வரும் திருவம்பலச் சக்கரம் என்ற அத்தியாயத்தில் தான் விட்ட எழுத்து விடாத எழுத்து பற்றித் திருமூலர் ரிக்வேதம் போல விடுகதை பாஷையில் பாடு கிறார்.
அசபை — இது அஜபா என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; நாம் வாயால் சொல்லாமலேயே நம் மனது முனுமுனுக்கும் மந்திரம்; இதை ஹம்சம் என்றும் சொல்லுவார்கள்; அதை உணர்ந்தவர்களை பரம ஹம்சர் என்று அழைப்போம். வெளியேறும் மூச்சின் ஒலி – ஹம் ; உள்ளே இழுக்கும் மூச்சின் ஒலி- சம் .பிராணாயாமம் செய்வோர் இதை ஊமை எழுத்து என்றும் சிவோஹம் என்றும் சொல்லுவர்.
இந்த விட்ட எழுத்து விடாத எழுத்து பற்றி மூன்று விளக்கங்களை மூன்று புஸ்தகங்கள் கூறுகின்றன. சி +வ என்று சைவசித்தாந்த திருமந்திரம் நூல் கூறுகிறது . ஆங்கிலத்தில் திருமந்திரத்தை வெளியிட்ட இணையதளம் ஓ +ம் என்று கூறுகிறது. ,மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேக (2009 )மலரில் ஒரு கட்டுரையில் ஹம் +சம் என்று ஒருவர் எழுதியுள்ளார்.
இதற்குப்பின் வரும் ஒரு பாடலில் அவ்வுண்டு சவ்வுண்டு என்ற பாடலுக்கும் வெவ்வேறு விளக்கங்கள் கூறப்படுகிறது ஆனால் இது அம் +சம் (ஹம் +சம்) என்னும் அஜபா மந்திரம் என்பதே சரி.
மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவல் லாருயிர் காக்கவல் லாரே.
918: Significance of Letter Om
They know not how the Lord
Became conjoint with Her,
Who, on the blooming lotus sits;
They who chant the letter aspirated “O”
Conjoint with the letter unaspirated “m”
May well preserve their life ever.
*****
அவ்வுண்டு சவ்வுண்டு அனைத்தும் அங்கு உள்ளது,
சவ்வுண்டு நிற்கும் கருத்தறி வார்இல்லை,
கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வாளர்க்குச்,
சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே.
English translation of verse 933:
There is Letter Hau
There is Letter Sau
In them are comprehended all;
How they entwined are,
None knows;
They who know this union mystery
Are indeed blessed
Of both, Sakti and Sadasiva.
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 2. திருஅம்பலச் சக்கரம் > பாடல்: 933 எங்கே அகாரமும், சகாரமும் உள்ளனவோ அங்கே அனைத்துப் பொருள்களும் உள்ளனவாம். இவ்வாறு, இந்த இரண் டெழுத்துக்களில் எல்லாப் பொருளும் அடங்கிநிற்கின்ற நுட்பத்தை அறிபவர் உலகில் இல்லை. அதனை அறியவல்லவர்க்குச் சத்தி வடி வாகிய சிவன் சகாரத்திலே உளனாய்த் தோன்றுவான்.
****
இதை அவ்வையார் விநாயகர் அகவலில் காணலாம்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
****
பரமஹம்ச
ஹம்சம் என்பதற்கும் இது போல வேதாந்திகள் விளக்கம் தருவர்.
ஹம்சம் என்றால் அன்னப் பறவை (swan) என்று பொருள்.
இதை
அஹம் = நான் = ஜீவாத்மன்
ச: = அவனே + பரமாத்மன்
அஹம்+ச; = அம்ச (ஹம்ச)
இது அத்வைதத்தின் உயர்நிலை; அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி என்பதற்குச் சமம்.
இந்த உண்மையை உணர்ந்தவர் பரமஹம்சர் என்று அழைக்கப்படுகிறார்கள் . ராமகிருஷ்ண பரமஹம்சர், பரமஹம்ச யோகாநந்தர் ஆகிய பெரிய மஹான்களின் பெயர்களை நாம் கேட்டிருக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
6-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை
அதிசயிக்க வைக்கும் ஐஸ் மனிதன் விம் ஹாஃப்
(WIM HOF– THE ICEMAN)
ச. நாகராஜன்
இறைவனின் படைப்பில் நாம் காணும் அதிசய ஆற்றல்கள் கொண்ட மனிதர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.
கடும் குளிரைத் தாங்கும் மனிதரும் உண்டு என்பதை நிரூபிக்க விம் ஹாஃப் என்னும் ஐஸ் மனிதர் இருக்கிறார்.
நெதர்லாந்தில் லிம்பர்க்கொல் சிட்டார்ட் என்னும் இடத்தில் 1959-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி இவர் பிறந்தார். இப்போது இவருக்கு வயது 65.
இவருடைய பதினேழாம் வயதில் ஒரு அதிசய சம்பவம் நடைபெற்றது. பீட்ரிக்ஸ்பாக்ஸ் என்னும் கால்வாயில் கடும் குளிர் நீரில் திடீரென அவர் குதித்து நீந்தத் தொடங்கினார். குளிர் அவர் உடலை பாதிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து குளிரான சூழ்நிலை அவரைப் பாதிக்காமல் இருப்பதைக் கண்ட விஞ்ஞானிகள் அவரை ஆராயத் தொடங்கினர். 2024ல் எட்டு ஆய்வுகள் நடைபெற்றன; அவரது தனித்துவம் வாய்ந்த ஒரு வழி அவரைக் குளிரிலிருந்து காக்கிறது என்று முடிவை அறிவித்தன.
தனது வழியை விம் ஹாஃப் மெதேட் (WIM HOF METOD) என்று அவர் கூறுகிறார்.
இமயமலையில் உள்ள யோகிகளும், திபெத்திய லாமாக்களும் இமயமலையில் கடும் குளிரில் போர்வை கூட போர்த்திக் கொள்ளாமல் இருப்பதை பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
ஆனால் விம் ஹாஃப் வழி தனி வழி!
26 உலக ரிகார்டுகளை அவர் பெற்றிருக்கிறார்.
வெறும் காலுடன் இரண்டு மணி நேரம் 16 நிமிடம் 34 வினாடிகள் அவர் பனிக்கட்டிகளின் மீது ஓடியது ஒரு உலக சாதனையாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த சாதனை பின்லாந்தில் 2007ம் ஆண்டு ஜனவரி 26ம் நாளன்று நிகழ்த்தப்பட்டது.
2000, மார்ச் மாதம் 16ம் நாளன்று ஐஸுக்கு அடியில் நீந்தி அவர் கின்னஸ் சாதனையைப் படைத்தார்.
மவுண்ட் எவரெஸ்டில் வெறும் சாதாரண உடையுடன் அவர் ஏறி அனைவரையும் வியக்க வைத்தார்.
அவரைப் பற்றிய டாகுமெண்டரி படங்களும் வெளியாகியுள்ளன. யூ டியூபிலும் அவரைப் பற்றிய படம் உண்டு.
தனது சாதனைகளின் அடிப்படையில் அவர் உணர்வூக்கம் கொடுக்கும் மோடிவேஷன் பேச்சாளராக மிளிர்ந்து அனைவருக்கும் ஊக்கமூட்டி வருகிறார்.
அவரது ஊக்கமூட்டும் பொன்மொழிகளில் சில இதோ:
நமக்குள்ளே சக்தி இருக்கிறது. நமக்குள்ளே சென்று எதையும் வென்று விடலாம்.
உங்கள் மூளையைக் கட்டுக்குள் கொண்டு வரும் போது நம்பிக்கை வருகிறது.
நாம் இயற்கையிலிருந்து வெளியே வந்து விட்டோம். குளிரானது நாம் இழந்த ஒன்றிற்கு நம்மை திருப்பி இட்டுச் செல்லும் வலிமை கொண்டது.
இது போன்ற ஊக்கமூட்டும் ஏராளமான கருத்துக்களை அவர் கூறி இளைய சமுதாயத்தினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Mitraseva UK conducted its Third Maha Rudra Japa Yajnam in Harrow (London ) on Sunday 25th May 2025. It was their third successful Homam with over 700 participants. They recited the Rudram and Chamakam Mantras of Yajur Veda 11 times while the priests conducted Homam (Havan). The stage was decorated with a beautiful Mont Kailash image. At the end of each recitation there was arti and abishekam to the beautiful crystal Shiva Linga on the stage.
It is significant that even many boys recited the Rudra- Chamaka by heart. Women folk made Prasad and decorations.
Last evening, a prayer session was held by women.
Sri Kalyanasundara Sivacharya lead the priests, and he dedicated each recitation to all the famous Hindu Shiva Shrines in India.
Mitraseva organisers Sri M Rajagopalan, Mrs Uma Rajagopalan, Mr Raj Iyer, Mr Subramanyam (Subbu Iyer ) and Mrs Gayatri Subramanyam and scores of volunteers made elaborate arrangements. After the Poorna Ahuti prasad was given to all the participants.
Another significant thing is the participants travel from far off cities in the Uk to participate in the event. Now the Rudra Mahayajnam has become a permanent annual event of Mitra seva. It has been conducting Radha Kalyanam in November every year with Sri Udaiyalur Dr Kalyana Raman team. Over thousand people attend its annual Radha Kalyanam .
Mitraseva is a registered charity and people can contribute to it if they can’t attend the events personally. Their web site has the bank details. They have a WhatsApp group through which you can get event details in advance.
–subham—
Tags- Maharudra Japam, Yajnam, London, Mitraseva, May 2025
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஸ்ரீ அனந்தராம தீட்சிதரை அறியாத தமிழர் இருக்க முடியாது . காரணம்? சொற்பொழிவாற்றுவதில் அண்ணாதுரை , தி.மு.க கட்சிக்கு எப்படி ஒரு தனி பாணியை ஏற்படுத்தினாரோ அதுபோல உபன்யாச சக்கரவர்த்தியான சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் தனக்கு என ஒரு பாணியை ஏற்படுத்தினார் ; கணீரென்ற குரலில் தமிழ் சம்ஸ்க்ருத வசனங்களை சொல்லக்கூடிய ஒரே பெரியவர் என்ற பெயரை எடுத்தார். அவர் மூலம் ராமாயணம் பரவியது போல வேறு எவராலும் ராமாயணம் பரவவில்லை .
அவர் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேக மலரில் எழுதிய கட்டுரையின் சுருக்கத்தைத் தருகிறேன் (அந்த மலரின் ஆசிரியர் குழுவில் எனது தந்தை தினமணி பொறுப்பாசிரியர் வெ. சந்தானம் முக்கிய உறுப்பினர் ; ஆகையால் மலரை மிகவும் கவனமாக பாதுகாத்து வருகிறேன்)
இதோ தீட்சிதரின் சொற்கள் :
எங்கும் சக்தியே
தெய்வங்களே நமது குறைகளை நீக்கவேண்டும் .அப்படி நீக்குபவர் கள் தேவர்கள் எனப்படுவர். அத் தேவர்களுக்கு ஏற்படும்குறைகளை நீக்கும் தெய்வம் ஸ்ரீ சக்தி எனப்படும். இந்த சக்தியுடன் சேர்ந்து இருப்பதே சிவபெருமானுக்கு பெருமை. சக்தியுடன் சேராமல் இருந்தால் சிவனும் வெறும் சிவன்தான் . ஆதலால்தான் உலக வழக்கிலும் வைஷ்ணவர் முதலிய யாராயிருந்தாலும் எனக்கு எழுந்துவர சக்தி இல்லை என்று கூறுவார்களேயாகில் , அவர்களை சிவனே என்றிரு எனக்கூறுவது வழக்கம் . ஆதலால்தான் ஆதி சங்கரரும் பரமேஸ்வரனுக்கு காரியங்களை செய்வதற்குத் தகுதியை அளிக்கும் பராசக்தி இவளேதான் ; ஆகையால் பிரம்மா, விஷ்ணு முதலியோரும் வணங்கும் சக்தியை நமஸ்கரிக்கவோ துதிக்கவோ புண்யமில்லாதவருக்கு இயலாது . இச்சக்தியில்லையேல் அசைவதற்கும் இயலாது , என்று துதித்திருக்கிறார் . இப்படிப்பட்ட பராசக்திதான் ஸ்ரீ மீனாட்சி, அவளேதான் காமாட்சி, புவனேஸ்வரி என்ற பெயரால் விளங்குகிறாள் .
இவ் வுலகில் ஸ்த்ரீ ரூபமாக தெய்வத்தைக்கூறும் மதம் நம் இந்துமதம் ஒன்றுதான் . அதனாலேயே பெண்களுக்கு நம்மதத்தில் சிறந்த பெருமை கொடுக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமல்ல, தெய்வங்களாகக் கூட பெண்களை பூஜித்து வருகிறோம். அம்மாதிரி பூஜித்து புடவை, குங்குமம், மஞ்சள் , புஷ்பம், தாம்பூலம் இவற்றைக்கொடுத்து அலங்கரித்து , அன்னமிட்டு வணங்குவதை சுமங்கலிப் பிரார்த்தனை என்று சொல்கிறோம். இப்பூஜை யை விஷ்ணுமதத்தைச் சேர்ந்தோரும் செய்துவருகிறார்கள். இந்த சுமங்கலிப்பூஜை யை ஏதோ ஒரு காரணத்தால் நடத்தாத குடும்பங்களில் தோன்றும் சந்ததியினருக்கு சந்திரன், சுக்கிர, ராகு முதலிய கிரஹங்கள் ஜாதகத்தில் தோஷமுள்ளவர்களாகின்றன. மனதும் சுவாச கோஷமும் பாதிக்கப்படுகின்றன. ஆதலாலேயே லலிதா சஹஸ்ரநாமத்தில் ஓம் ஸுவாஸின்யை நமஹ , ஓம் ஸுவாஸின் யர்ச்சினப் ப்ரீதாயை நமஹ என்ற நாமங்களால் ஸ்ரீ சக்தியை ஸுவாஸினி ரூபிணியாகவும் , ஸுவாஸினிகளை அர்ச்சிப்பதால் சந்தோஷப்படுகிறவளாகவும் கூறப்பட்டுள்ளது இப்படிப் பெண்களைத் தெய்வமாகத் நினைத்துப் பூஜிப்பது நம் பெரியோர்களது சம்பிரதாயமாக இருந்து வந்திருக்கிறது . இவ்வுணர்ச்சி அவர்களுக்கு இருந்ததால்தான் இந்நாளில் உள்ள , சாஸ்திரத்தை உணராத சிலர் கூட , பெண்களிடத்தில் பொது ஸ்தலங்களில் மரியாதையும் கருணையும் காட்டுகின்றனர் .
தீட்சிதர் குறிப்பிட்ட செளந்தர்ய லஹரி ஸ்லோகம்
शिवः शक्त्यायुक्तो यदि भवति शक्तः प्रभवितुं
न् चेदेवं देवो न खलु कुशलः स्पन्दितुमपि ।
अतस्त्वामाराध्यां हरिहरविरिञ्चादिभिरपि
प्रणन्तुं स्तोतुं वा कथमकृतपुण्यः प्रभवति ॥१॥
சிவ: சக்த்யா யுக்த: யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திதுமபி ;
அதஸ் த்வம் ஆராத்யாம் ஹரி-ஹர -விரிஞ்சாதிபிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத -புண்ய: ப்ரபவதி
பொருள்
சகல உலகங்களையும் படைக்கும் ஈசன், சக்தியாகிய உன்னுடன் இணைந்தால்தான் இந்த உலகத்தை படைக்க முடியும்.சக்தி இல்லாமல் சிவனால் செயல்படமுடியாது . மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு,பிரம்மா ஆகியோர் ,துதிக்கின்ற உன்னை முன் ஜென்ம புண்ணியம் இல்லாவிட்டால் துதிக்கவும், வணங்கவும் முடியுமோ ?
பராசக்தியான அம்பாளின் ஸ்வரூபம் எங்கும் வியாபித்துள்ளது . ஆதலால்தான் மது கைடபர்களை விஷ்ணு வதம் செய்தார் என சில புராணங்களும் ஸ்ரீ அம்பாளே வதைத்தாள் என சில புராணங்களும் கூறுகின்றன. இதற்குக் காரணம் விஷ்ணு முதலிய யாவரும் பராசக்தியின் ஸ்வரூபமாக இருப்பதேதான் . அதனால்தான் ஆதிசங்கரர் ஸ்ரீ சக்ரம் முதலிய யந்த்ரங்களையும், சக்தி ஸ்வ ரூபங்களான சாரதா, காமாட்சி முதலிய பிம்பங்களையும் ஆங்காங்கு பிரதிஷ்டை செய்திருக்கிறார். அப்படிப்பட்ட ஸ்தலங்களில் சக்திக்கு முக்கியத்துவம் அளித்த க்ஷேத்ரம் மதுரையே ஆகும் . இங்கே விளங்கும் பராசக்தியான ஸ்ரீ மீனாட்சியும் ஸ்ரீ சுந்தரேஸ்வரரும் பக்தர்களுக்கு கற்பக வ்ருக்ஷம் போன்றவர்கள். அவர்களின் அருளை பெற்றவர்களுக்கு சோகமே கிடையாது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது.
–SUBHAM—
TAGS–செளந்தர்ய லஹரி ஸ்லோகம், பெண்கள், இந்துக்கள் பூஜிப்பது ஏன்? அனந்தராம தீட்சிதர் , மதுரை ஸ்ரீ மீனாட்சி,ஸ்ரீ சுந்தரேஸ்வரர் , கோவில், கும்பாபிஷேகம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
எப்படி சாப்பிட வேண்டும்? ஆயுர் வேதம் தரும் அறிவுரை!
ச. நாகராஜன்
ஒவ்வொரு மனிதனும் பூரண ஆரோக்கியத்துடனும் நீடித்த ஆயுளுடனும் வாழ வேண்டும் என்பது ஆயுர்வேதத்தின் குறிக்கோள்.
உணவைப் பற்றிய ஆயுர்வேத குறிப்புகள் மிக முக்கியமானவை.
எப்படி சாப்பிட வேண்டும் என்பதை ஆயுர்வேதம் தெளிவாக விளக்குகிறது.
காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக இரண்டு மணி நேரத்திற்கு முன்பு எழுந்திருப்பது சிறந்தது.
உடனடியாக பல் துலக்கி விட்டு வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை கொண்டவன் என்பதால் உடலில் உள்ள வாத, கப, பித்த தோஷம் பற்றி முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
இதற்குத் தக உணவுத் திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும்.
சிலருக்கு புரோட்டின் அதிகமாக வேண்டியிருக்கும். இன்னும் சிலருக்கோ கார்போஹைட்ரேட் தேவையாக இருக்கும்.
சூடாக இருக்கும் பண்டங்களை உண்ணுதல் சிறந்தது.
குளிர்ந்த பானத்தையோ அல்லது ஐஸ் வாட்டரையோ நிச்சயமாக சாப்பிடும் முன்னர் குடிக்கக் கூடாது. இது ஜீரணத்தை வெகுவாகப் பாதிக்கும்.
உணவை மிகவும் மெதுவாகவோ அல்லது மிக வேகமாகவோ சாப்பிடாமல் நிதானமாக நன்கு கடித்து சாப்பிட வேண்டும்.
வயிறு முட்ட சாப்பிடாமல் சிறிது வெற்றிடம் வயிறில் இருக்குமாறு குறைத்துச் சாப்பிட வேண்டும்.
பசித்த பின்னரே சாப்பிட வேண்டும்.
நடந்து கொண்டோ, வண்டியை ஓட்டியவாறோ, படித்துக்கொண்டோ, டி.வி. பார்த்தவாறோ சாப்பிடக் கூடாது.
உணவு உண்ணுவது ஒரு புனிதமான செயல் என்பதை உணர்ந்து உண்ண வேண்டும்.
அன்புடன் சமைத்து பரிமாறுபவரிடமிருந்தே உணவைச் சாப்பிட வேண்டும்.
நெய் மிக மிக முக்கியமானது. சாப்பிடும் போது சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளுதல் நலம் பயக்கும். இது வயதாவதால் வரும் பாதிப்புகளைத் தடுக்கும்.
சாப்பிட்ட பின்னர் சிறிது ஓய்வு தேவை.
இரவு சாப்பிட்ட பின்னர் சிறிது நடக்க வேண்டும். சத பதம் என்று சரகர் இதைக் கூறுகிறார். சத பதம் என்றால் நூறு அடி நட என்று அர்த்தம்.
சாப்பிடும் போது அதிகமாக தண்ணீரை அருந்தக் கூடாது.
சாப்பாட்டுடன் ஒருபோதும் பாலைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.
புதிதாக உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலுக்கு நலம் பயக்கும்.
இஞ்சியை உணவில் சேர்ப்பது நல்லது.
யோகா மற்றும் தியானம் மிகவும் சிறந்தது. சாப்பிடும் முன்னர் உடலை நெளிய வைக்கும் பயிற்சிகளைச் செய்யலாம். சாப்பிட்டு முடித்த பின்னர் ஓய்வான நிலைகளைக் கொண்ட படுக்கும் நிலை கொண்ட பயிற்சிகளைச் செய்யலாம்.
காலையில் செய்யப்படும் உடல் பயிற்சிகள் உடல் வலுவைக் கூட்டுகிறது. தொப்பையைக் குறைக்கிறது.
ஒரு போதும் புகை பிடித்தல் கூடாது.
வாத உடம்பைக் கொண்டோர் ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை சாப்பிட வேண்டும்.
காலை உணவை ஆறிலிருந்து பத்து மணிக்குள்ளும், மதிய உணவை பத்து மணீயிலிருந்து இரண்டு மணிக்குள்ளும் இரவு உணவை ஏழு மணியிலிருந்து எட்டு மணிக்குள்ளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஆயுர்வேத நிபுணரை அணுகி ஒருவர்,. வாத, கப, பித்தம் ஆகிய மூன்றில் எந்த வகை உடம்பு தன்னுடையது என்பதை அறிய வேண்டும். தனது உடலுக்கு ஒவ்வாதவை எவை என்பதைக் கேட்டு அறிதல் வேண்டும்.