GNANAMAYAM 18TH MAY  2025 SUNDAY BROADCAST SUMMARY

GNANAMAYAM 18TH MAY  2025 SUNDAY BROADCAST SUMMARY

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

Prayer by Mrs Jayanthi Sundar.

***

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London and Gomathi Karthikeyan from Chennai.

***

Mrs. Brahannayaki Sathyanarayan spoke on NAGAPPATTINAM SHRINE.

****

Professor S Suryanarayanan, Former Principal of Madurai Saraswathy Narayanan College spoke on Great Mathematician Ramanujan (in Tamil)

**** 

SPECIAL EVENT-

VARANASI KUMBABHISHEKAM BOOK REVIEW BY AUTHOR SRI SUBBU SUNDARAM FROM CHENNAI.

****

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

18-5-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சிநிரல்

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் .

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் மற்றும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயன்

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

தலைப்பு –  திருநாகைக்காரோணம் (நாகபட்டினம்)

****

சொற்பொழிவு:-

பேராசிரியர் எஸ். சூரியநாராயணன் , மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் முன்னாள் பிரின்சிபால் .

தலைப்பு — கணிதமேதை ராமானுஜன் வாழ்வில் சுவையான சம்பவங்கள்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு – திரு சுப்பு சுந்தரம், ஆசிரியர்  — காசி கும்பாபிஷேகம்

இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான சுப்பு சுந்தரம் நூல் 

விமர்சனம்.

சுப்பு சுந்தரம் எழுதிய காசி கும்பாபிஷேகம் எனும் நூல் பற்றி திரு சுப்பு சுந்தரம்,

*****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,18-5-2025, BROADCAST, PROGRAMME

சுப்பு சுந்தரம் எழுதிய காசி கும்பாபிஷேகம் (NEWS ABOUT THE BOOK LAUNCH IN JANUARY 2025)

.

சுப்பு சுந்தரம் எழுதிய காசி கும்பாபிஷேகம் எனும் நூலுக்கான வெளியீட்டு விழா. விழா 29/1/2025

சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் கடந்த 29-ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சுலந்துகொண்டு நூலை வெளியிட்டார். இந்திகழ்ச்சியில் ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்ட வி.ஐ.பிக்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் குருமூர்த்தி பேசும் போது. ஆன்மிகத்திற்காகவே பிறந்து அதற்காகவே வியாபாரம் செய்தவர்கள் நகரத்தார். தலைமுறை தலைமுறையாக வேதத்தையும் கோயில்களையும் பாதுகாத்தவர்களும் அவர்களே காசி பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆன்மிக பணி யாற்றிய நகரத்தாரின் தாழ்வுக்கு திராவிடம்தான் காரணம் திராவிட இயக்கத்தால் ஆன்மிகம் குறைந்ததால்தான். நகரத்தார் சமுதாயம் தாழ்ந்தது. காசி தமிழ் சங்கத்திற்கு வித்திட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இந்நூலை வெளியிட்டுள்ளதால், இந்நூலுக்கு இன்னும் பெருமை சேர்கிறது என்றார்.

விழாவில் ஆளுநர் ஆர்.எஸ். ரவி தனது உரையில் “ஆன்மிகத் தலமாக விளங்கும் காசியில் 40,000 தமிழக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆயிரம் ஆண்டு களுக்கும் மேலாக தமிழர்கள் காசியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் காசி, பாரதத்தின் ஆன்மிக ஈர்ப்பு மையம் ரிஷிகளால் பாரதம் உருவாக்கப்பட்டபோது, அவர்கள் சனாதன தர்மத்தை மட்டும் வழங்கவில்லை. நமது நாட்டின் பாரம்பரியமும் நமது ரிஷிகளால் உருவாக்கப்பட்டது. மேலும் ரிஷிகள் நாடு முழுவதும்

ஒரு கட்டமைடையும் உருவாக்கின செல்வத்தை உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமை துரதிரஷ்ட வசமாக சுதந்திரத்திற்குப் பிறகு நாம் திசையை இழந்தோம் பாரதத்தின் முக்கிய பலம் சனாதன தர்மமே பாரதத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு தேசியத் தலைவர் நமக்கு இருக்கிறார். சமூகத்தில் நடந்த தவறுகளை திருக்கி அவர் மீண்டும் பாரதத்தை மீட்டுக் கொண்டுவர் முயற்சிக்கிறார். அந்த வகையில் இந்தியா வரும் காலங்களில் தன்னிறைவு பெற்ற நாடாக மலரும் என்றபோது, எழுந்த பலந்த சுர கோஷம் மகிழ்ச்சியின் வெளிப்பாடு

காசிக்குப் போய்வந்த அனுபவத்தையும்; காசியிலே பல நூற்றாண்டுகள் வாழ்ந்த அனுபவத்தையும் இந்த நூல் தருகிறது. காசி எனும் பெயர் காரணம். , வரலாறு அதை ஆண்ட மன்னர்களின் பங்களிப்பு மக்களின் வாழ்க்கை காசி விஸ்வநாதர் ஆலயத்தின் சிறப்பு என விரிவாக எழுதப்பட்டுள்ளது. சில அற்புதங்கள் சிலரது கையால்தான் நிகழ வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். அப்படி சுப்பு சுந்தரத்தின் திருக்கரங்களால் நிகழ்த்தி வைக்கப்பட்டுள்ளது. 

—subaham—

Tags-Gnanamayam Broadcast, May 18, 2025,Summary

Pictures of 2500 Indian Stamps!- Part 42 (Post No.14,533)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,533

Date uploaded in London – –19 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 42

Stamps posted today include 1993, 1994 STAMPS,

People with stress, mental health, children on elephant, children s day, india tea, papal seminary, speed post letters, custom house wharf, Calcutta,  dr sampurnanad, kirkee miltary college,  ilo, ipta, drum beating,  statue of sepoy,  institute of mental health, madras regiment, sepoy statue,  human resources centre,  khuda bakhs library,  j r d tata, beghum Akhtar, international year of family, small family, baby, polio immunization, upasi centenary, ,  world of work, international cancer congress,  eigth triennale, heart care festival, sanchi stupi, satellite dish, otter, pune military engineering college,  new definitive series , Calcutta Blind School, Bombay GPO

–subham—

Tags– Pictures of 2500 Indian Stamps, Part 42, year 1993 , 1994, People with stress, mental health, children on elephant, children s day, india tea, papal seminary, speed post letters, custom house wharf, Calcutta,  dr sampurnanad, kirkee miltary college,  ilo, ipta, drum beating,  statue of sepoy,  institute of mental health, madras regiment, sepoy statue,  human resources centre,  khuda bakhs library,  j r d tata, beghum Akhtar,international year of family, small family, baby, polio immunization, upasi centenary, ,  world of work, international cancer congress,  eigth triennale, heart care festival, sanchi stupi, satellite dish, otter, pune military engineering college,  new definitive series , remount vetenary corps, Bombay GPO, Calcutta Blind School

ஞானமயம் வழங்கும்(18-5-2025) உலக இந்து செய்திமடல் (Post.14,532)

ஞானமயம் வழங்கும்(18-5-2025) உலக இந்து செய்திமடல்  (Post.14,532)

Written by London Swaminathan

Post No. 14,532

Date uploaded in London –  19 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

(Collected from Popular newspapers and edited for broadcast.)

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மே 18- ஆம் தேதி 2025-ம் ஆண்டு

*****

முதலில் வெளிநாட்டுச் செய்திகள்

கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்

வட அமெரிக்க நாடான கனடாவில் புதிய அமைச்சரவை அறிவிப்புக்கு பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சரானார்.

கனடாவில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இதில், ஆளும் லிபரல் கட்சி, எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் மற்றும் புதிய ஜனநாயக கட்சி ஆகியவை களமிறங்கியது. இத்தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.

கனடா பிரதமர் மார்க் கார்னி, புதிய அமைச்சரவை குறித்து அறிவிப்பு வெளியிட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சரானார்.

அனிதா ஆனந்த் பகவத் கீதை மீது கை வைத்து பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.

தமிழகத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த தாயாருக்கு பிறந்தவர் அனிதா ஆனந்த்(  57).

அனிதா ஆனந்தின் தந்தைவழி தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம்.

அனிதா ஆனந்த் கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை ஆனந்த், ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர். அம்மா பஞ்சாபி சரோஜ்,  மயக்க மருந்து நிபுணராக இருந்தவர்.

2019 ல் ஆக்வில்லா தொகுதியில் வெற்றி பெற்றதும், ட்ரூடோ அமைச்சரவையில் இடம்பெற்றார். போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆனார்.

* 2021ல் கனடா பாதுகாப்புத்துறை பதவி வகித்தார்.

* இவர் குயீன்ஸ் பல்கலையில், இளநிலை அரசியல் கல்வி, ஆக்ஸ்போர்ட் பல்கலையில் நீதித்துறை சார்ந்த படிப்பு, டல்ஹவுசி பல்கலையில் இளநிலை சட்டப்படிப்பு, டொரன்டோ பல்கலையில் முதுநிலை சட்டப்படிப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். இவர் 2019ல் அரசியலில் நுழைந்தார். இரண்டு சகோதரிகள் உள்ளனர்; அவர்களுடைய பெயர்கள் சோனியா, கீதா.

****

இனி வெளி மாநிலச்  செய்திகள்

10 லட்சம் முறை கோவிந்தா நாமம் – திருப்பதி திருமலையில் 3 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம்!

திருப்பதி திருமலையில் 10 லட்சம் முறை கோவிந்தா நாமத்தை எழுதி வந்த இளம் பெண் உட்பட 3 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்பட்டது.

இளைஞர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும், சனாதன தர்மத்தின் மீதான பக்தியை வளர்க்கவும், 10 லட்சம் முறை கோவிந்தா நாமத்தை எழுதி வரும் 25 வயதுக்குட்பட்ட பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும் எனத் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 10 லட்சத்து ஆயிரத்து 116 முறை கோவிந்தா நாமம் எழுதி வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா உட்பட 3 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்பட்டுள்ளது.

****

ராகுலுக்கு எதிராக வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

கடவுள் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் அண்மையில் உரையாற்றிய ராகுல் காந்தி ராமர் ஒரு புனைக்கதை கதாப்பாத்திரம் என்று கூறினார்.

இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்து மத நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தியதாகப் பலரும் குற்றம் சாட்டினர்.

ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் MAY 19-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

*****

இனி தமிழ்நாட்டுச் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத நிறைவையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளவிளக்கு பூஜை மற்றும் பெண்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சித்திரை மாத நிறைவையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.

இதையொட்டி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கூடினார்கள்.

பின்னர் அவர்கள் அங்கு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு விவேகானந்த புரம் சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, சன்னதி தெரு வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை அடைந்தார்கள்.அங்கு பஜனை, பெண்கள் மாநாடு மற்றும் ஆன்மீக சொற்பொழிவைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவின் அகில பாரத இணைப் பொதுச் செயலாளர் ரேகா தவே குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோவிலின் உட்பிரகாரம், வெளிப் பிரகாரம் ஆகிய இடங்களில் பெண்கள் அமர்ந்து திருவிளக்கு பூஜையை நடத்தினார்கள்.

***

கோனேரிராஜபுரத்தில் பரதம் ஆடி உலக சாதனை

மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் வந்திருந்த மொத்தம் 2,200 பரதநாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்து நடராஜருக்கு நாட்டிய சமர்ப்பணம் செய்தனர்.

நடராஜர் ஆலயம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தில்லை சிதம்பரத்தில் கோவில் கொண்டுள்ள நடராஜர் கோவில் தான். ஆனால் நடராஜர் சுயம்புவாக, உயிரோட்டமுள்ள திருமேனியாக காட்சி தரும் தலம் ஒன்று உள்ளது. அது தான் கோனேரிராஜபுரம். பலரும் அறிந்திடாத இந்த கோவிலில் நடராஜரின் திருமேனி, உளி கொண்டு செதுக்கப்படாதது. இதில் நகரங்கள், ரோமங்கள், நரம்புகள் உள்ளிட்டவைகள் மனித உடலில் இருப்பது போலவே காட்சி தரும். அதே போல் மன்னர் வாளால் வெட்டியதால் ஏற்பட்ட தழும்பும் நடராஜரின் வலது காலில் இன்றும் இருக்கும்.

இத்தகைய சிறப்பு பெற்ற திருத்தலம்தான் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள கோனேரிராஜபுரம் திருக்கோவில். இங்கு, தில்லை அம்பலம் என்ற பெயரில் மே 12ம் தேதி மாலை 4 மணிக்கு, மாபெரும் பரதநாட்டிய சாதனை நிகழ்ச்சி நடைபெற து.

இங்கு ஐந்து உயர ஐம்பொன்னாலான நடராஜர் அருள்பாலிக்கிறார். 

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி திருச்சி மொரைஸ் நகரில் இதேபோன்ற பரதநாட்டிய சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

****

ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பில் பண்பு பயிற்சி முகாம்

செங்கல்பட்டு அருகே ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பில் நடைபெற்ற பண்பு பயிற்சி முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

ராஷ்டிர சேவிகா சமிதி சார்பில் இந்து மகளிருக்குப் பண்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, செங்கல்பட்டு அண்ணா நகரில் இயங்கி வரும் சுனிலால் ஜெயின் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஏப்ரல் 30ஆம் தேதி பண்பு பயிற்சி முகாம் தொடங்கியது.

15 நாட்களாக நடைபெற்ற முகாமில் 16 பிராந்தியங்களைச் சேர்ந்த 75 பெண்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பெண்களின் பாதுகாப்புக்குத் தேவையான அடிப்படை பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன.

இறுதி நாள் நிகழ்ச்சியில் பெண்கள் சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளைச் செய்து காண்பித்தனர். இந்த நிகழ்வில் திருவண்ணாமலை சாரதா ஆசிரமம் பூஜினிய ஸவாமினி கிருஷ்ண பெரியாம்பா, மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

****

கண்ணகி கோயில் தொடர்பாக கேரளாவுடன் பேச்சுவார்த்தை

கண்ணகி கோயில் தொடர்பான பிரச்னை குறித்து இருமாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், கூடலூர் அருகே விண்ணேற்றிப்பறை மலையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி முழுநிலவு திருவிழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கண்ணகி கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

வண்ணத்திப்பாறை பகுதிக்கு இரு மாநிலம் உரிமை கொண்டாடுவதால் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும், கண்ணகி கோயில் பிரச்சனை தொடர்பாக இருமாநில அரசும் ஆய்வு செய்து பேச்சுவார்த்தை நடத்த கேரள மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

****

கோபியில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்கள் பயிற்சி முகாம்!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பஜ்ரங்கள் பண்பாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற இளைஞர்கள், தாங்கள் கற்றுக் கொண்ட சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளை நிர்வாகிகள் முன்னர் செய்து காண்பித்தனர்.

கோபிசெட்டிபாளையத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் இளைஞர்களுக்கான பஜ்ரங்கள் பண்புப் பயிற்சி முகாமும், பொறுப்பாளர்களுக்கான பரிஷத் முகாமும் தொடங்கியது.

இதில் பங்கேற்ற இளைஞர்களுக்கு தியானம், பிரார்த்தனை, சிலம்பம், கராத்தே, யோகா, வில்வித்தை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பயிற்சியின் நிறைவு நாளான புதன்கிழமையன்று விஷ்வ இந்து பரிஷத்தின் வட தமிழ்நாடு தென் தமிழ்நாடு மாநில அமைப்பு செயலாளர் பாலாஜி, வட தமிழக பஜ்ரங்கள் பொறுப்பாளர் கிரண், மாநில அமைப்பு செயலாளர் ராமன் ஆகியோர் முகாமுக்கு வருகை தந்தனர். அவர்கள் முன்னிலையில் இளைஞர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட பயிற்சிகளை செய்து காட்டினர்.

******

சாமி கும்பிடுவதில் சாதிய பாகுபாடு நடப்பதாக வழக்குகள் தொடரப்படுவது வேதனை அளிக்கிறது – உயர் நீதிமன்றம்

சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளை நெருங்கும்போதும் கூட சாமி கும்பிடுவதில் சாதிய பாகுபாடு நடப்பதாக வழக்குகள் தொடரப்படுவது வேதனை அளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் சாமி கும்பிடுவதில் பட்டியலின மக்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக இரு தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர், மண்டல ஐஜி மற்றும் எஸ்.பி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் சாதிய பாகுபாடு தொடர்பாக எந்தவித புகார்களும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளை நெருங்கும்போதும் கூட இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கலாவது வேதனையளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், அரசின் கொள்கைகள் அனைத்தும் பேப்பர் வடிவில் மட்டுமே இருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சமூகத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

அத்துடன் இந்த விவகாரத்தில் அரசு அலுவலர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு அமைத்து இதே நிலை தொடராத வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் எனவும்,  விரைவில் இந்த வழக்குகளில் உரிய தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

****

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட வழக்கு – சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில், அனைத்து சிசிடிவி பதிவுகளையும் சமர்பிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை வடகாடு மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனிநபர் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார்.

அப்போது சம்பவத்தன்று மாவட்ட ஆட்சியர் ஏன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கோயில் மற்றும் சம்பவம் நடந்த இடத்தின் மே 4 முதல் 7-ம் தேதி வரையிலான சிசிடிவி பதிவுகளை சமர்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

******

பிரதமர் மோடி, இந்திய ராணுவம் நலமுடன் இருக்க சிறப்பு பிரார்த்தனை!

.பிரதமர் மோடியும், இந்திய ராணுவ வீரர்களும் நலமுடன் இருக்க வேண்டி கோட்டி விஷ்ணு நாம பாராயண கமிட்டி சார்பில் கோவையில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

பிரதமர் மோடியும், இந்திய ராணுவ வீரர்களும் நலமுடன் இருக்க வேண்டி, விஷ்ணு நாம பாராயண  கமிட்டி சார்பில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் வேத மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டன.

மேலும் இதில் முன்னாள் கர்னல் சதீஷ்குமார் மற்றும் ராணுவத்தில் பங்காற்றியவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

*****

மதுரை சித்திரைத் திரு விழா நிறைவு ;அழகர்கோவில் வந்தடைந்தார் கள்ளழகர்!


திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் என்னும் கள்ளழகர்.,   திருவிழா முடிந்து மீண்டும் அழகர் கோவிலுக்கு வந்தடைந்தார்.

சித்திரை திருவிழாவின் போது, வைகை ஆற்றில் எழுந்தருள மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.. சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 10ஆம் தேதி மாலை தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர்கோயிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார்.

11ம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. மே 12ல் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மே 13ல் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.

மே 14ல் மோகன அவதாரத்தில் பக்தி உலாவுதல், கள்ளழகருக்கு விடிய விடிய தசாவதாரம் நடைபெற்றது. மே 15ல் பூப்பல்லத்தில் எழுந்தருலினார்

பின்னர் கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலை நோக்கி புறப்பட்டார். இந்த விழாவில் ,ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கடச்சனேந்தல், காதக்கிணறு, சுந்தரராஜன்பட்டி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி, பொய்கைகரைப்பட்டி வழியாக வந்த கள்ளழகர் நேற்று காலை 10.30 மணிக்கு மேல் தனது இருப்பிடமான அழகர்கோவில் வந்தடைந்தார்.

கள்ளர் திருக்கோலத்தில் அழகர்கோவிலுக்கு வந்தடைந்த கள்ளழகருக்கு வண்ணமலர்கள் தூவி வரவேற்பு அளிக்கபப்ட்ட தோடு, கற்பூரம் ஏற்றி சுவாமியை மூன்று முறை சுற்றி 21 திருஷ்ட்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டது.

இதற்கு முன்னர் மீனாட்சி கோவிலில் பத்து நாட்களுக்கு நடந்த விழாவில் மீனாட்சி கல்யாணம், தேரோட்டம் முதலியன நடந்தன. ஆக சிவன் , விஷ்ணு கோவில் இரண்டிலும் நடக்கும் விழாவினை சித்திரைத் திருவிழா என்று அழைப்பார்கள்

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு

ஜூன்  மாதம் முதல் தேதி 

லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

மே மாதம் 25ஆம் தேதி ஒளிபரப்பு இல்லை என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டுகிறோம்.

வணக்கம்.

—SUBHAM—-

Tags, Gnanamayam News, 18 5 25, Broadcast ஞானமயம், உலக இந்து செய்திமடல் .

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலுக்கிய அதர்வண வேதம்! வேத அறிஞருக்கு சிறை! (Post.14,531)

Written by London Swaminathan

Post No. 14,531

Date uploaded in London –  19 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலுக்கிய அதர்வண வேதம்! வேத விற்பன்னருக்கு சிறைத் தண்டனை !

Shripad Damodar Satwalekar (19 September 1867 – 31 July 1968)

श्रीपाद श्रीदामोदर सातवळेकर

101 ஆண்டுகள் வாழ்ந்து வேதத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்திய ஸ்ரீபாத அம்ருத சாத்வலேகர் பற்றிய சில சுவையான செய்திகளைக் காண்போம்.

இவர் இந்தி மொழியில் இந்து மத வேதங்களைப் பற்றி பல நூல்களை எழுதினார் ; சொற்பொழிவுகள் மூலம் சாதாரண மக்களுக்கும் வேதத்தின் சாரம் தெரியவேண்டும் என்று பாடுபட்டார் ; வெறும் வேத அறிஞர் மட்டுமல்ல ஓவியரும் கூட .

வேதங்களைப் பற்றி அவர் பத்திரிக்கைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார்; அதர்வண வேதத்தில் பூமி சூக்தம் என்ற அற்புதமான கவிதை உள்ளது ; உலகில் வேறு எந்த மொழியிலும் இதற்கு நிகரான தேச பக்திக் கவிதை இல்லை! அதாவது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ! தாய் நாடு -தேச பக்தி பற்றி எவ்வளவோ கவிதைகளை- குறிப்பாக பாரதியார் போன்றோர் கவிதைகளை நாம் இன்று படிக்க முடிகிறது . சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமித் தாயை வணங்கிய முதல் மனிதர் அதர்வண வேதப் பூமி சூக்தத்தை எழுதியவர்தான்! (பூமி சூக்தம் பற்றி பல தமிழ், ஆங்கிலக் கட்டுரைகளை இந்த ‘பிளாக்’கில் நான் எழுதியுள்ளேன்).

****

சாத்வலேகர் , நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அதர்வண வேத பூமி சூக்தத்தை வெளியிட்டு அதற்கு விளக்கங்களையும் இந்தி மொழியில் எழுதியிருந்தார் . இதன் மொழிபெயர்ப்பினை அறிந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அதிகாரிகள் நடுங்கினர் . பாரதி பாடல்களைக் கண்டு நடுங்கியது போல் ! உடனே அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர் . ராஜத்துரோக குற்றம் சாட்டி சிறையில் அடைத்தனர் .

பின்னர் அன்னி  பெசன்ட் அம்மையார் போன்ற பலர் தலையிட்டு சாத்வலேகரை விடுதலை செய்தனர் . வாழ்நாளில் பெரும்பகுதியை வேதம் பற்றி பாமர மக்களுக்கு சொல்வதையே தம் பணியாகக் கொண்டார் . பிரிட்டிஷாரின் தொல்லைக்கு அஞ்சி நகரம் நகரமாக ஓடி ஒளிந்து வாழ நேரிட்டது ; இதிலும் இவர் நம்மை பாரதியாரை நினைவுபடுத்துகிறார்.

பாரதி பாடல் புஸ்தகக்ங்களை பிரிட்டிஷார் கைப்பற்றியவுடன் அனல் பறக்கும் சொற்பொழிவினை மதராஸ் மாகாண அசெம்பிளியில் அறிஞர் சத்திய மூர்த்தி ஆற்றிய உரையை முன்னரே இங்கே எழுதியுள்ளேன் .

****

அறிஞர் சாத்வலேகரின் வாழ்க்கைக் குறிப்பினைக் காண்போம்:

பிறந்தது — மகாராஷ்டிரத்தில் கோல்காவன் என்னும் இடம் .

தந்தையின் பெயர்- தாமோதர பட்ட, தாயின் பெயர் லட்சுமி பாய். தாமோதர பட்ட ரிக்வேத அறிஞர், புரோகிதர்; அவரிடமிருந்து சாத்வலேகரும் சிறு வயதிலேயே வேதம் கற்கத் துவங்கினார் .இவர் வாழ்நாளில் பாகிஸ்தானின் லாகூர், மூல்தான்  முதல் பம்பாய், ஹைதராபத், ஆமதாபாத் பரோடா, நாசிக் மஹாராஷ்டிரத்தின் பல்வேறு நகர்கள் வரை வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டே வந்தார்.

வேதத்தில் உள்ள ஒரு மந்திரத்தை பிராமணர்கள் தினமும் சொல்கிறார்கள்; அதில் நூறு ஆண்டுக் காலம் வாழ்க என்று வரி உள்ளது; வேத வாழ்வைக் கடைப்பிடித்த சாத்வலேகர் அதன்படி நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார்  . நானூறு புஸ்தகங்களுக்கு மேல் எழுதினார்;  கைப்பட எழுதிய பெரிய அளவு காகிதங்கள்- 60,000 பக்கங்கள்!

Satvalekar painting

**** 

ஆர் எஸ் எஸ் தலைவர்

ஆர்ய சமாஜம் நிறுவிய தயானந்த சரஸ்வதியால் ஊற்றுணர்ச்சி பெற்ற இவர் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் சேர்ந்து பதினாறு ஆண்டுகளுக்கு அவுந்த் நகர (சதாரா ஜில்லா, மஹாராஷ்டிர மாநிலம்)  சங்கசாலக் பொறுப்பில் இருந்தார் ; இவரது நூற்றா ண்டு விழாவில் ஆர் எஸ் எஸ் தலைவர் மாதவ சதாசிவ கோல்வால்கர் கலந்து கொண்டார்.

எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் சாத்வலேகரின் சம்ஸ்க்ருத, வேத, ஆயுர்வேத, யோகாசன தொண்டினைப் பாராட்டி அவர் இருப்பிடத்துக்கு வந்தனர். திருமதி இந்திராகாந்தி ,மொரார்ஜி தேசாய் உள்படப் பலரும் வந்தனர்; அவர் சுவாத்தியாய மண்டல் என்ற அமைப்பினை நிறுவி இந்தப் பணிகளைச் செய்தார்; வேத மந்திர் என்ற கோவிலைக் கட்டி எல்லா மத நூல்களையும் அங்கே வைத்தார்.

இவருக்கு நிறைய நிறுவனங்கள் டாக்டர் பட்டத்தை அளித்தன. அரசாங்கத்தின் பத்ம பூஷன் விருதும் கிடைத்தது .

இவர் வெளியிட்ட முக்கிய நூல்கள் – ரிக்வேத சம்ஹிதை, சுபோத பாஷ்ய, சம்ஸ்க்ருத ஸ்வயம் சிக்ஷக் , இந்தி மொழி உரையுடன் அதர்வண வேதம், பகவத் கீதை பேருரை, மஹாபாரத மொழிபெயர்ப்பு .

இவர் வெளியிட்ட சம்ஸ்க்ருத ஸ்வயம் சிக்ஷக் நூலும் பகவத் கீதை உரையும் இன்று வரை வரவேற்பினைப் பெற்று வருகிறது.

குஜராத்தில் கில்லாபார்தி என்னும் இடத்தில் வேத ஆராய்ச்சி நிறுவனத்தை அமைத்தார்; அதைத் துவக்கும் போது அவருடைய வேண்டுகோளுக்கிணங்கக நாடு முழுதும் கோடி காயத்ரீ மந்திரத்தை மக்கள் உச்சரித்தனர் அவரும் காயத்ரீ ஹோமத்துடன் தனது நிறுவனத்தைத் துவக்கினார் .

சம்ஸ்க்ருதத்தில் சாயனர் எழுதிய வேத பாஷ்யத்தைத்தான் பெரும்பாலோர் பின்பற்றுகின்றனர்; அதே போல இந்தி மொழியில் 4 வேதங்களுக்கு சாத்வலேகர் எழுதிய உரையும் புகழ் பெற்றது. 

****

ஆங்கிலேயரை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்

அதர்வ வேத பூமி சூக்த உரைக்காக இவர் சிறையில் இருந்தபோது ஒரு ஆங்கிலேய அதிகாரி சிறையை மேற்பார்வையிட வந்தார் . விலங்கும் சிறைக்கு கம்பிகளும் உங்களைத் துன்புறுத்துகின்றனவா? என்று பேச்சுவாக்கில் கேட்டார் . அவை என் உடம்புக்கு அப்பால்தானே இருக்கின்றன எப்படி துன்புறுத்த முடியும்? என்று சாத்வலேகர் பதில்கொடுத்தார் ஆங்கிலேய அதிகாரி அப்படியே திகைத்து நின்றார். சாத்வலேகர் ஒரு யோகியாக வாழ்ந்தார்.

புருஷார்த்த போதினி என்று ஆங்கில மொழியில் இவர் வெளியிட்ட பகவத் கீதை உரை இன்றுவரை மிகவும் வாசிக்கப்படுகிறது

குஜராத்தி, மராத்தி, இந்தி, ஆங்கில மொழி களில் நூல்களையும், கட்டுரைகளையும் எழுதினார் .ஓவியங்களுக்காக இரண்டு முறை தங்கப்பதக்கமும் பெற்றார்

இவரது வேத விளக்கங்கள் ஆணித்தரமாகவும் தர்க்கரீதியிலும் பாமர மக்களுக்குப் புரியும் விதத்திலும் உள்ளது 

—SUBHAM—

TAGS-

அதர்வண வேதம், பூமி சூக்தம், ராஜத் துரோகம் சிறைத் தண்டனை, சாத்வலேகர், ஸ்வாத்யாய மண்டல் ,வேத மந்திர்

ஆலயம் அறிவோம்: திரு நாகைக் காரோணம் (Post No.14,530)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 530

Date uploaded in London –19 May 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

18-5-2025 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பட்ட உரை 

ஆலயம் அறிவோம்

 வழங்குவது பிரஹண்நாயகி சத்யநாராயணன்

நிருத்தனை நிமலன் தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்க

விருத்தனை வேதவித்தை விளைபொருள் மூலம் ஆன

கருத்தனைக் கடல் சூழ் நாகைக்காரோணங் கோயில் கொண்ட

ஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே

                 – திருநாவுக்கரசர் திருவடி போற்றி 

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருநாகைக்காரோணம்

திருத்தலமாகும். சோழநாட்டில் காவிரியின் தென்கரைத் தலங்களில் 82வது தலமாகும் இது. 

மூலவர் : காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர்

இறைவி : நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி

தல விருட்சம் : மாமரம்

தீர்த்தங்கள் : சர்வ தீர்த்தம், தேவ தீர்த்தம், புண்டரீக தீர்த்தம்

இத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகளும் மகான்கள் அற்புதங்கள் நிகழ்த்திய சம்பவங்களும் உண்டு.

 பல ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்பதால் இறைவன் ஆதிபுராணர் என்றும், ஆதிசேஷனால் பூஜிக்கப்பட்டதால் நாகை என்றும், புண்டரீக முனிவர் இறைவனை தன் உடம்பில் ஆரோகணம் செய்து கொண்டதால் காயாரோகணம் என்றும் இறைவன் பெயர் பெற்றார். நாகப்பட்டிணம் என்று பேச்சு வழக்கில் இந்தத் தலம் இன்று அறியப்படுகிறது.

ஆதிபுராணம், சிவ ராஜதானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம் என்ற வேறு பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.

இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

அகஸ்திய முனிவருக்கு இறைவன் இந்தத் தலத்தில் தான் திருமண கோலத்தில் காட்சி அளித்தார்.

சப்த ரிஷிகளுக்கும் இறைவன் மூல லிங்கத்திலிருந்து சோமாஸ்கந்தராய் காட்சி அளித்த தலமும் இதுவே தான்.

 சாலிசுக மன்னனுக்குத் திருமணக் கோலம் காட்டும் பஞ்சகுரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறும் தலமாகவும் இது அமைகிறது.

 சுந்தரர் பற்றிய இந்தத் தலத்துடன் தொடர்பு கொண்ட வரலாறு ஒன்று உண்டு.

திருவாரூரிலிருந்து திருநாகைக்காரோணம் அடைந்த சுந்தரர் சுவாமி தரிசனம் செய்து பதிகங்களைப் பாட இறைவன் அவருக்கு குதிரை, உடைவாள், முத்துமாலை, நவமணிகள், பட்டு, சாந்தம், சுரிகை முதலானவற்றை வழங்கி அருளினார். ஆகவே அன்று முதல் இந்தக் கோவிலில் குதிரை வாகனவிழா சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கே நடைபெறுவதாகப் புராணம் கூறுகிறது.

 நகரின் மத்தியில் 180 மீட்டர் நீளமும் 75 மீட்டர் அகலமும் கொண்டு இரு பிரகாரங்களுடன் கம்பீரமாக இந்தக் கோவில் காட்சி தருகிறது.

 கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த சிவாலயத்தில் கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நாகாபரண விநாயகர், சுதையால் ஆன நந்தி, முக்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். இங்கு கயிலை மற்றும் காசியில் உள்ளது போல முக்தி மண்டபம் அமைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

 ஐந்து நிலை கொண்டது கோபுரம். உள்ளே தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. அருகே கொடிமரம் உள்ளது. சுவாமி சந்நிதியில், பிரகாரத்தில் தியாகராஜ ஸ்வாமி சந்நிதியும் எதிரில் சுந்தரரும் இருப்பதைப் பார்க்கலாம். தியாகராஜர் சந்நிதியில் சுந்தரவிடங்கரையும் தரிசிக்கலாம்.. இதே பிரகாரத்தில் அறுபத்து மூவர், புண்டரீக முனிவர், சாலீசுக மன்னன், முருகன், கஜலக்ஷ்மி, தசரதன் ஸ்தாபித்த சனீஸ்வரர், நடராஜர், பிக்ஷாடனர், அதிபத்தர் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

தல விருட்சமான மாமரத்தின் அடியில் மாவடிப் பிள்ளையார் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

 சர்வ தீர்த்தம் என்னும் புண்டரீக தீர்த்தம் கோவிலின் மேற்கிலும் சிவகங்கை என்னும் தேவதீர்த்தம் முக்தி மண்டபத்தில் அருகிலும் தேவநதியாகிய உப்பாறு ஊருக்கு மேற்கிலும் உள்ளன.

கடலும் சிறந்த தீர்த்தமாக அமைவதால் விசேஷ நாட்களில் பக்தர்கள் இதில் நீராடி வருகின்றனர்.

இந்தத் தலத்தில் தான் அதிபத்த நாயனார் அவதரித்து வழிபட்டு முக்தி அடைந்தார். இவரது திருவுருவச் சிலை கோவிலில் உள்ளது.

 ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பதிகங்கள் அருளப்பட்ட தலம் இது.

அருணகிரிநாதர் “நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்மனைக் களைந்த நாகபட்டினத்தமர்ந்த பெருமாளே” என்று இந்தத் தலத்தில் திருப்புகழ் பாடலைப் பாடி அருளியுள்ளார்.

 நாகைக்காரோணப் புராணம் என்ற நூலை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றி 1860ம் ஆண்டில் அரங்கேற்றினார். இது 61 படலங்களையும் 2506 பாடல்களையும் கொண்டது. இப்புராணத்தின் அருமை பெருமைகளை மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கரான டாக்டர் உ.வே.சுவாமிநாத ஐயர் விரிவாக விளக்கியுள்ளார்.

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காயாரோகணேஸ்வரரும் அன்னை நீலாயதாட்சியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

அஸ்ஸாமின் எழில்மிகு பாரம்பரிய இடங்கள்! (Post No.14,529)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,529

Date uploaded in London – –19 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

3-5-25 மாலைமலைர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

இந்திய சுற்றுலாத் தலங்கள்

அஸ்ஸாமின் எழில்மிகு பாரம்பரிய இடங்கள்! 

ச. நாகராஜன் 

அழகிய அஸ்ஸாம் – இமயமலைக் காட்சிகள்பிரம்மபுத்திரா நதியோட்டம்தேசீயப் பூங்காக்கள்நீர்வீழ்ச்சிபிரம்மாண்டமான ஆலயங்கள் …அப்பப்பா! 

 பிரபல ஆங்கில நாளிதழான நியூயார்க் டைம்ஸின் 2025ம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் அஸ்ஸாம் மாநிலம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 

இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள இந்த மாநிலம்  இமயமலையின் தெற்குப் பகுதியில் உள்ளது. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கும் இதையொட்டியே உள்ளது.  ஈடு இணையற்ற இடம் என்ற சிறப்புப் பெயரை இது பெற்றுள்ளது.

 இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

 காஸிரங்கா தேசிய பூங்கா

இது அஸ்ஸாமின் தலைநகரான கௌஹாதியிலிருந்து 105 மைல் தூரத்தில் உள்ளது.

 காஸிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் அபூர்வமான வன விலங்குகளையும் பறவைகளையும் கண்டு களிக்கலாம். இங்கு ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், நீர்யானை, சிறுத்தை, சிங்கம், புலி என எல்லா மிருகங்களையும் காணலாம்.

வடதுருவத்தில் இருந்து வரும் அபூர்வமான பறவைகள் இங்கு வந்து மரக்கிளைகளில் அமர்ந்து ஓய்வெடுக்கின்றன. ஆண்டுக்கு இரு முறை பல்லாயிரம் கிலோமீட்டர் தாண்டி உலகெங்கிலுமிருந்து இந்தப் பறவைகள் வருவது குறிப்பிடத் தகுந்தது. யுனெஸ்கோ இதை பாரம்பரிய தளமாக அறிவித்திருக்கிறது.

 ஜீப் சஃபாரி

பூங்காவைத் திட்டமிட்டபடி சுற்றிப் பார்க்க வசதியாக ஜீப்பில் செல்லும் ஜீப் சஃபாரி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் உண்டு. இரண்டு மணி நேரம் ஜீப்பில் சென்று இந்தப் பகுதியைக் கண்டு ரசிக்கலாம்.

யானை சஃபாரி

யானை மீதமர்ந்து காண்டாமிருகம் உள்ளிட்ட மிருகங்களைப் பார்ப்பது என்பது தனி ஒரு அனுபவம் தான். ஒரு மணி நேரம் நீடிக்கும் இந்த யானை மீதான சவாரிக்குக் கட்டணம் உண்டு.

 ககோசாங் நீர்வீழ்ச்சி 

காஸிரங்கா தேசிய பூங்காவிலிருந்து 47 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அருமையான ககோசாங் நீர்வீழ்ச்சி. போககாட் என்ற நகரிலிருந்து இது 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. காஸிரங்கா தேசிய பூங்காவிற்குச் செல்வோர் இதையும் திட்டத்தில் சேர்த்து திட்டமிடலாம். தேவையான உணவுப் பொருள்களைத் தயார் செய்து எடுத்துச் செல்ல வேண்டும். ட்ரெக்கிங் உள்ளிட்ட மலைப் பிரதேசத்திற்கே உரித்தான பொழுதுபோக்கிற்கு உகந்த இடம் இது.  தேயிலைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள், ரப்பர் காடுகள் உள்ளிட்டவற்றை இங்கு பார்த்து மகிழலாம். 116 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. நீர்வீழ்ச்சியையொட்டி அமைந்துள்ள குளத்தில் குளிக்கலாம். ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடம் இது. 

அகர்டோலி மலைத்தொடர்

காஸிரங்கா தேசிய பூங்காவின் கிழக்கு வாயிலிலிருந்து அருகில் உள்ளது அகர்டோலி மலைத்தொடர். இங்கு ஒரு ஜீப்பில் ஏறி அமர்ந்து இரண்டு மணி நேரம் சுற்றிப் பார்க்கும்படியான திட்டங்கள் உள்ளன.

புத்தகங்களில் மட்டுமே படித்திருக்கும் வண்ண வண்ண அழகிய பறவைகளை இங்கு காணலாம். இங்கு செல்லவும் சுற்றிப் பார்க்கவும் விசேஷ அனுமதியை இங்குள்ள அலுவலகத்தில் பெற வேண்டும். கட்டணமும் உண்டு. 

மஹாபைரவ ஆலயம்

காஸிரங்கா பூங்காவிலிருந்து 83 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது மஹாபைரவ் ஆலயம். பாணாசுரன் என்னும் அசுரன் சிவனுக்கு ஒரு கற்களால் ஆன கோவிலைக் கட்டினான். சிவராத்திரியன்று ஏராளமான பக்தர்கள் திரண்டு இங்கு வருவது வழக்கம்.

இந்தக் கோவிலில் ஒரு மாபெரும் அதிசயம் உண்டு. இங்குள்ள சிவலிங்கம் உயிருள்ள கல்லால் அமைக்கப்பட்ட ஒன்றாகும். அதாவது வருடங்கள் ஆக ஆக இந்த லிங்கம் வளர்ந்து கொண்டே இருக்கும். பாணாசுரனின் வலிமைக்கும் வளத்திற்கும் அவன் இந்த இடத்தில் சிவபிரானை வழிபட்டதே காரணம் என்பது ஐதீகம்.

இங்கு பிரசாதமாக தரப்படும் லட்டு ஒரு விசேஷமான தயாரிப்பாகும். 

பிஸ்வநாத் காட்

காஸிரங்கா தேசீயப் பூங்காவிலிருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பிஸ்வநாத் காட். பிரம்மாண்டமாகப் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதிக் கரையில் உள்ள பிஸ்வநாதர் ஆலயம் குப்த காசி என்று அழைக்கப்படுகிறது. அதாவது காசிக்கு நிகரான மகிமை பொருந்திய ஆலயம் இது என்பது பொருள். இயற்கைக் காட்சிகள் ஒரு பக்கம் பிரமிக்க வைக்க இங்கு ஆலயத்தில் உள்ள  கட்டிட மற்றும் சித்திர வேலைப்பாடுகள் நம்மை இன்னும் அதிகம் பிரமிக்க வைக்கும்.

நகர்ப்புற வாழ்க்கையை ஒதுக்கி விட்டு அமைதியான இயற்கை சார்ந்த இடத்தில் ஓய்வெடுக்க விரும்புபவர்களுக்கான இடம் பிஸ்வநாத் கிராமமாகும். இது இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலா கிராமம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

மானஸ் தேசிய பூங்கா 

இது கௌஹாதியிலிருந்து 137 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.\யுனெஸ்கோ இதை பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.

இதற்கும் காஸிரங்கா தேசிய பூங்காவிற்கும் இடையில் உள்ள தூரம் 274 கிலோமீட்டர். இதை அடைய புகைவண்டி வசதி உண்டு. காரிலும் செல்லலாம். இது புலிகளிள் மற்றும் யானைகளின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இமயமலை அடிவாரத்தையொட்டி பூடானின் எல்லையோரத்தில் அமைந்துள்ளது இது. பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியான மானஸ் நதி இந்தப் பூங்காவின் நடுவே பாய்ந்து செல்கிறது. அதையொட்டி இந்தப் பூங்கா மானஸ் தேசீய பூங்கா என்ற பெயரைப் பெறுகிறது. 

அஸ்ஸாமில் உள்ள இதர சுற்றுலா இடங்கள்

தெற்கு இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள பிரம்மபுத்திரா மற்றும் பாரக் ஆகிய ஆறுகள் பாய்ந்தோடும் பள்ளத்தாக்கையும் அழகிய மலைத்தொடரையும் கொண்டுள்ள மாநிலம் அஸ்ஸாம். இதன் பரப்பளவு 78438 சதுர கிலோமீட்டரகள். தேயிலைக்குப் பெயர் பெற்ற மாநிலம் இது.

மஹாபாரதத்தில் ப்ரக்ஜ்யோதிஷா என்ற பெயரால் குறிப்பிடப்படும் இந்த மாநிலம் பழம்பெரும் வரலாற்றைக் கொண்டது. இங்குள்ள 33 மாவட்டங்களிலும் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. 

ஓவ்வொரு இடத்தையும் அது அமைந்திருக்கும் இடம், தூரம், சிறப்பு ஆகியவற்றை முன்னமேயே நன்கு தெரிந்து கொண்டு சுற்றுலாத் திட்டத்தை வடிவமைக்க வேண்டுவது அவசியம். 

அஸ்ஸாமில் நிச்சயம் பார்க்க வேண்டிய இன்னும் சில இடங்களை மட்டும் இங்கு பார்ப்போம்: 

காமாக்யா ஆலயம்

சக்தி பீடங்களில் ஒன்று இது. நிலாச்சல் மலையில் அமைந்துள்ள இந்த துர்க்கையம்மன் ஆலயம் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.

 மஜுலி தீவு

பிரம்மபுத்திரா ஆற்றில் அமைந்துள்ள அற்புதமான தீவு இது. இதன் பரப்பளவு சுமார் 880 சதுர கிலோமீட்டர். படகில் சென்று இங்குள்ள இயற்கைக் காட்சிகளையும் தாவர பறவை இனங்களையும் பார்ப்பது ஒரு அதிசயமான அனுபவமாகும். 

சிவசாகர்

அஸ்ஸாமின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிவசாகர் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் அடித்தள நகரமாகும். கௌஹாதியிலிருந்து இது சுமார் 360 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்குள்ள சிவசாகர் நீர்த்தேக்கம், அஹம் அரசர்களின் கல்லறைகள் உள்ளிட்டவை பார்க்கத்தக்க இடங்களாகும்.

 கௌஹாதி

வடகிழக்கின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் இந்த நகரம் அஸ்ஸாமின் தலை நகரமாகும். இங்குள்ள தேசியப் பூங்கா மிகவும் பிரபலமானது. 2405 மைல் நீளம் ஓடும் பிரம்மபுத்திரா நதிக் கரையோரம் அமைந்துள்ளது இது.

 ஜோர்ஹாட்

கலையழகு பொருந்திய நகரம் ஜோர்ஹாட் அஸ்ஸாமின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது. இங்குள்ள ஏராளமான ஆலயங்களும் தேயிலைத் தோட்டங்களும் அனைவரையும் ஈர்க்கின்றன.

இன்னும் ஹாஃப்லாங் ஏரி, ஜம்பு மலை மற்றும் பல்வேறு அருங்காட்சியகங்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ள மாநிலம் அஸ்ஸாம்.

 வடகிழக்குப் பகுதிக்கு வாருங்கள் என அழைக்கும் அஸ்ஸாமின் புகழுக்கு ஈடு இணையில்லை என்பதை அது நியூயார்க் டைம்ஸ் இதழில் நான்காவது இடத்தைப் பிடித்ததிலிருந்தே தெரிகிறல்லவா?

***

Thiruppugaz Festival in London (Post No.14,528)

Written by London Swaminathan

Post No. 14,528

Date uploaded in London –  18 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Annual Thiruppugaz Festival was held in London Murugan Temple Hall on 17-5-2025. Mrs Jayanthi Sundar has been teaching Arunagirinatha’s Thiruppugaz to young and old disciples for decades. Every year her group assemble in London and do Puja to Lord Muruga. They sing selected verses in chorus.Apart from the main Puja,  Padapuja of Kanchi Shnkaracharya is also done.

On Saturday Mrs Jayanthi Sundar led her group singing Thiruppgaz verses  for more than hour. An added attraction was that  little boys and teenagers were also give an opportunity to show their talents. Mr Sundar spoke about the significance of New Kanchi Acharya’s initiation event.

Over 100 people attended the Saturday event. And Mahaprasad was distributed at the end. Gift and Sweet packets were also given to the participants.

–subham—

Yags- London, Thiruppugaz, Festival, Mrs Jayanthi Sundar, Arunagirinathar

Dravidachariyar Ramakrishna Swami in London (Post No.14,527)

Written by London Swaminathan

Post No. 14,527

Date uploaded in London –  18 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Sri Ramakrishna Swami came to London from India and stayed here for two days. He addressed a small group of people in Harrow on 17-5-2025. After a brief introduction by Mr M Rajagopalan, Swamiji spoke and insisted that Sandhyavandanam is an essential ritual, and one should ask any questions only after doing the basic duty. He insisted that Gayatri recitation will clear many of our doubts. Swamij quoted from many Upanishads and scriptures while answering many questions.

Questions were asked about rituals for the departed souls, a place for doing such Apara karmas, clash of dates in celebrating Hindu festivals between different Mutts as well between Sri Lankans and Indian Tamils. Swamiji answered that he was happy to note they are at least interested in celebrating the festivals and there is nothing wrong in doing it. Even in India different Panchangs are followed in different parts.

Another problem that was raised about cremating dead bodies a week or two after the person’s death. He said that the soul will be released from the place of death when the Karma is done. In India the body is cremated within 24 hours.  He narrated many anecdotes to make his point. Discussion about Advaita and Vishistadvita also came up. Swamiji was a strong follower of Advaita.

Swamiji also related his personal experience in Rishikesh and current ashram or residence in Tamil Nadu. He is widely read and well versed in Hindu scriptures. He has written books in Tamil and English.

 He was in London on his way to Scotland from Ireland.

At the end of the session Sri Kalyansundara Sivachariar thanked Swamiji for his speech and Rajagopalan for organising it.

Prasad was distributed at the end.

Please see the attachments for his websites and his Ashram in Tamil Nadu.

–subham—

Tags—Dravidacharyar, Ramakrishna Swami, London meeting, Q and A session.

யாக குண்டத்தில் தோன்றிய மீனாட்சியும் திரவுபதியும்-5 (Post.14,526)

Goddess Meenakshi coming out of Yaga Kunda. 

Written by London Swaminathan

Post No. 14,526

Date uploaded in London –  18 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-5

யாக குண்டத்தில் தோன்றிய மீனாட்சியும் திரவுபதியும்

யாகம் செய்தால் குழந்தை பிறக்கும் என்ற செய்தி குறைந்தது மூன்று பெரிய நிகழ்ச்சிகள் மூலம் நமக்குத் தெரிகிறது

1.தசரத மாமன்னனுக்கு புத்திரப்பேறு  இல்லாதபோது புத்ர  காமேஷ்டி யாகம் செய்து ராமலெட்சுமண பரத சத்ருக்குனன் என்ற  நான்கு குழந்தைகளை மூன்று மனைவியர் மூலம் பெற்றார் . 

2.பாஞ்சால மன்னனான த்ருபதனுக்கு குழந்தைகள் இல்லாதபோது யாகம் செய்து திரவுபதியையும் சகோதரன் த்ருஷ்டத்யும்னனையும் பெற்றார்.

3.இதே போல பாண்டியநாட்டினை ஆட்சிசெய்த மலையத்வஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் குழந்தை இல்லாமல் தவித்தபோது ரிஷி,முனிவர்களின் சொற்படி யாகத்தைச் செய்தார்கள்; அந்தத் தடவில், அதாவது யாக குண்டத்திலிருந்து, மீனாட்சி என்ற பெண் அவதரித்தார் . அந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில் ஒரு புதிய பிரச்சனையும் தோன்றியது ; பிறந்த பெண் குழந்தைக்கு மூன்று முலைகள் இருந்ததைக் கண்டு ராஜாவும் ராணியும்    கவலையுற்றனர்; அப்போது ஒரு அசரீரி கேட்டது; இவள் மணம் முடிக்கும்போது — அதாவது உரிய கணவனைக் காணும்போது – மூன்றாவது முலை  மறைந்துவிடும்  என்று அசரீரி கூறியது .

****

Draupdi coming out of Yaga Kunda

அதை பரஞ்சோதி முனிவர் பாடிய  பாடல்களில் காணலாம் :

மனு நீதிப்படி ஆட்சி ; தமிழ் சம்ஸ்க்ருதப் புலமை

மனுவற முவந்துதன் வழிச்செல நடத்தும்

புனிதன்மல யத்துவசன் வென்றிபுனை பூணான்

கனியமுத மன்னகரு ணைக்குறையுள் காட்சிக்

கினியன்வட சொற்கட றமிழ்க்கட லிகந்தோன்.

   பொருள்

மலயத்துவசனென்பான், மனுதருமமானது மகிழந்து தனதுவழி நடக்கும்படி செங்கோலோச்சும் தூய்மையன்;  வெற்றியையே தான் அணியும் பூணாகவுடையவன்;  சுவை முதிர்ந்த அமுதத்தைப் போலும்,  அருளுக்குத் தங்குமிடமானவன்;  காண்டற்கு எளியனாய் இன்முகத்தை யுடையவன்; வடமொழிக்  கடலையும் தென்மொழிக் கடலையும்  கடந்தவன் .

“தென்சொற் கடந்தான் வடசொற்கடற் கெல்லை தேர்ந்தான்”

எனக் கம்பர் ராமாயணத்தில் கூறுவது இங்கு நோக்கற் பாலது.

*****

சூரசேன மன்னன் புதல்வி காஞ்சனமாலா

வேனில்விறல் வேள்வடிவன் வேட்கைவிளை பூமி

ஆனமட வார்கள் பதி னாயிரிவ ருள்ளான்

வானொழுகு பானுவ வந்தொழுகு சூர

சேனன்மகன் காஞ்சனையை மன்றல்வினை செய்தான்.

வேனிற்காலத்து வெற்றிகொள்ளும் மதவேள் போலும் வடிவத்தையுடையவன்; காமப் பயிர் விளைகின்ற பூமியாகிய,

காமக் கிழத்தியர்கள் பதினாயிர வரை உடையவன்; வானிற் செல்லாநின்ற,சூரியன் மரபில் தோன்றி, அறத்தின் வழி ஒழுகும் சூரசேனனது, புதல்வியாகிய காஞ்சனமாலையை மணஞ்செய்தவன்.

நன் பொருள் விரும்பினை அதற்கு இசைய ஞாலம்

இன்புறு மகப்பேறு மகத்தினை இயற்றின்

அன்பு உறு மகப் பெறுதி என்று அமரர் நாடன்

தன் புலம் அடைந்திடலும் நிம்ப நகுதாரான்.

நூறு அஸ்வமேத யாகங்கள் செய்தால் தனது பதவி போய்விடுமென்று அஞ்சிய இந்திரன் மன்னனிடம் வந்து மகப்பேறு யாகத்தைச் செய்க என்றான்.

ஆசற மறைப் புலவர் ஆசிரியர் காட்டும்

மாசு அறு சடங்கின் வழி மந்திரம் முத்தாத்த

ஓசை அனுத்தாத்த சொரிதந்து அழுவ ஓதி

வாசவன் இருக்கையில் இருந்து எரி வளர்ப்பான்.

வைதீகர்கள் சொல்லியபடி உதாத்தம், அநுதாத்தம் ஒலிகளுடன் மந்திரங்களைச் சொல்லி நெய்யும் பொரியும் சமித்துகளும் தீயில் வார்த்து யாகம் செய்தான்.

வள்ளல் மலையத் துவசன் மீனவன் வலத்தோள்

துள்ள மனை காஞ்சனை சுருங்கிய மருங்குல்

தள்ள எழு கொங்கைகள் ததும்ப நிமிர் தீம்பால்

வெள்ள மொழுகக்கு அரிய வேல் கணிட ஆட. 11

அந்த வேள்வியில் புகை ஆகாசமும் பூமியும் திசைகளும் பரவி போர்வை போல மறைத்தது. பின்னும் குடம் குடமாக நெய்யும் பொரியும் சமித்துக்களும் தேவர்க்குப் ப்ரீதியாக தேவாமிர்தம் போல ஆகுதி கொடுத்தான் . பரமசிவன் திருவாய் மலர்ந்தருளிய வாக்கியப்படியே நெய் நிரம்பப்பெய்து அக்கினியை அதிகப்படுத்தியபோது; காஞ்சனமாலா கொங்கைகள் ததும்பித் தீம்பால் வெள்ளம் பெருக்கவும் இடக்கண் துடித்தது .

530.     இவ்வுலகம் அன்றியும் உலகு ஏழும் மகிழ்வு எய்தச்

சைவ முதல் ஆயின தவத் துறை நிவப்ப

ஓளவிய மறம் கெட அறம் குது கலிப்பத்

தெய்வமறை துந்துபி திசைப் புலன் இசைப்ப.    12

பாண்டிய நாடு மட்டுமின்றி எல்லா இடங்களிலும்  மகிழ்ச்சி பெருகியது.  சைவம் முதலிய தவ மார்க்கங்கள் உயர்ந்தன ; பாபங்கள் கெட்டு புண்ணியங்கள் வளர்ந்தன. தெய்வ வேதங்களும் தெய்வ துந்துபியும் திசை எல்லாம் முழங்கின. தேவ அரம்பையர்  ஆடினார். மதுரை நகரில் உள்ளோர் ஆனந்தக் கூத்தாடினார்கள்.

531.     மைம் மலர் நெடும் கண் அர மங்கையர் நடிப்ப

மெய்ம் மன மொழிச் செயலின் வேறு படல் இன்றி

அம்மதுரை மா நகர் உளர் ஆக மகிழ்ச்சி

தம்மை அறியாதன தலைத்தலை சிறப்ப.   13

Yaga Devata coming out of Putra Kameshti Yaga in Ramayana.

532.     மாந்தர் பயின் மூவறு சொல் மாநில வரைப்பில்

தீம் தமிழ் வழங்கு திரு நாடது சிறப்ப

ஆய்ந்த தமிழ் நாட அரசளித்து முறை செய்யும்

வேந்தர்களின் மீனவர் விழுத்தகைமை எய்த.     14

18 பாஷைகள் வழங்குகின்ற நாடுகளில் தமிழ் நாடு சிறப்படைய மூவேந்தர் ஆளும் நாடுகளில் பாண்டியநாடு மென்மேலும் பெருமை அடைந்தது. அக்கினிதேவன் இதுவரை செய்த தவத்தின் பயனை அடைந்தான்.

533.     நொய் தழல் எரிக் கடவுள் நோற்ற பயன் எய்தக்

கொய் தளிர் எனத் தழல் கொழுந்து படு குண்டத்

தைதவிழ் இதழ்க் கமலம் அப்பொழுது அலர்ந்து ஓர்

மொய் தளிர் விரைக் கொடி முளைத்து எழுவது                                                     என்ன.     15

534.     விட்டு இலகு சூழியம் விழுங்கு சிறு கொண்டை

வட்ட மதி வாய்க்குறு முயல் கறையை மானக்

கட்டி அதி நாற்றிய கதிர்த் தரள மாலை

சுட்டி அதில் விட்டு ஒழுகு சூழ் கிரணம் ஒப்ப.  16

535.     தீங்கு தலை இன் அமுதம் மார்பின் வழி சிந்தி

ஆங்கு இள நிலா ஒழுகும் ஆர வடம் மின்ன

வீங்கு உடல் இளம் பரிதி வெம் சுடர் விழுங்கி

வாங்கு கடல் வித்து உரும மாலை ஒளி கால. 17

536.     சிற்றிடை வளைந்த சிறு மென் துகில் புறம் சூழ்

பொன் திரு மணிச் சிறிய மேகலை புலம்ப

வில் திரு மணிக் குழை விழுங்கிய குதம்பை

சுற்று இருள் கடிந்து சிறு தோள் வருடி ஆட.    18

537.     தெள் அமுத மென் மழலை சிந்து இள மூரல்

முள் எயிறு அரும்ப முலை மூன்று உடையது ஓர்                                                      பெண்

பிள்ளை என மூ ஒரு பிராய மொடு நின்றள்

எள் அரிய பல் உயிரும் எவ் உலகும் ஈன்றாள். 19

538.     குறும் தளிர் மெல் அடிக்கிடந்த சிறு மணி நூபுர                                         சதங்கை குழறி ஏங்க

நறும் தளிர் போல் அசைந்து தளர் நடை ஒதுங்கி                                மழலை இள நகையும் தோன்றப்

பிறந்த பெரும் பயன் பெறு பொன் மாலை மடி இருந்து                                    ஒரு பெண்பிள்ளை ஆனாள்

அறம் தழுவு நெறி நின் றோர்க்கு இகம் போகம் வீடு                                   அளிக்கும் அம்மை அம்மா.      20

மாந்தளிர்போல நெருப்பு வீசுகின்ற அந்த யாக குண்டத்தில் நெருங்கிய தளிர்களுடைய ஒரு வாசனைக்கொடி  அநேக இதழ்களுடைய  தாமரை மலர் முளைத்தெழுந்தது போல அம்மையார் தோன்றினார். தரும வழியில்  செல்வோருக்கு இகபர சுகம் தரும் அவள் கொண்டையுடன் தோன்ற அதில் தொங்கிய முத்துமாலை சந்திரன் ஒளி போல இருந்தது . அவள் அணிந்த பவள மாலை சூரியப் பிரகாசத்தை வென்றது. இடையில் சிற்றாடையும் நவரத்தின மேகலையும் அசைந்தாடின ; காதிலணிந்த குண்டலமும் குதம்பையும் இருளை போக்கினை. அமுதம் போல மழலை சிந்த மூன்று வயதுள்ள பெண்பிள்ளை மூன்று ஸ்தனங்களுடன் தோன்றினாள். மெல்லடியில் அணிந்த சதங்கையும் சிலம்பும் ஒலித்தன ; உமையே பெண்ணாகத் தோன்றினாள்.    

—subham—-

Tags– யாக குண்டம், மீனாட்சி, திரவுபதி , திருவிளையாடல் புராணம், ஆராய்ச்சிக் கட்டுரை-5

ஒடிஸாவில் காணலாம் இந்திய பொக்கிஷம்! (Post No.14,525)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,525

Date uploaded in London – –18 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 3-5-25 இதழில் வெளியான கட்டுரை! 

சுற்றுலாப் பயணம்

ஒடிஸாவில் காணலாம் இந்திய பொக்கிஷம்! 

ச.நாகராஜன்

 இந்தியாவின் பொக்கிஷம் என்று சொல்லப்படும் ஒடிஸா மாநிலத்தில் பார்ப்பதற்கும் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி கொள்வதற்கும் ஏராளமான இடங்கள் உள்ளன.

அதன் தலைநகரமான புபனேஷ்வர் இந்தியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் கம்பீரமாக அமைந்திருக்கிறது.

மஹாநதியின் தென்மேற்கு கரையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. பழைய காலத்தில் இதன் பெயர் கலிங்க தேசம்.

 புகழ்பெற்ற புனிதமான புரியைச் சுற்றியுள்ள சில இடங்களை இங்கு பார்ப்போம்.

 புரி ஜகந்நாதர் ஆலயம் 

புனிதமான இந்தத் தலம். புவனேஸ்வரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

இந்தத் தலம் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. ஜரா என்ற வேடனின் அம்பால் உயிர் துறந்த கிருஷ்ணரின் உடல் கடலில் ஒரு மரம் போல் மிதக்க, கிருஷ்ணர் கனவில் கூறியவாறு அதை, புரியை ஆண்டு வந்த இந்திரதுய்மன் என்னும் மன்னன் எடுத்து, ஒரு சிலையை அமைக்க ஏற்பாடுகள் செய்தான்.

பெருமாளே ஒரு முதிய தச்சர் வேடத்தில் தோன்றி 21 நாட்கள் யாரும் தான் வேலை செய்யும் அறையைத் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் சிற்ப வேலையை ஆரம்பித்தார். 

 15 நாட்கள் அறையிலிருந்து சத்தம் கேட்டது. அதன் பின்னர் கேட்கவில்லை. மூன்று நாட்கள் பொறுத்த மன்னன் பின்னர் அவசரப்பட்டு அறைக் கதவைத் திறந்தான். தச்சர், “21 நாட்கள் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையை  நீ  ஏன் மீறினாய். ஆகவே அரைகுறையாக உள்ள சிலையை அப்படியே பிரதிஷ்டை செய். இதை தரிசிக்க வருவோர் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடைவர்” என்று கூறினார். அங்கிருந்த பலராமர், சுபத்ரா, ஜெகந்நாதர் ஆகிய சிலைகளை முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் நிலையில் அரசன் பிரதிஷ்டை செய்தான்.

 கால கிரமத்தில் இந்தக் கோவிலை 1135ஆம் ஆண்டு ஆனந்தவர்மன் என்ற அரசன் புதுப்பித்தான். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்குள்ள மரத்தினாலான திருமேனிகள் புதுப்பிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் புரி ஜகந்நாதரின் ரத யாத்திரை பல லட்சம் மக்களை ஈர்க்கும் உலகப் பெரும் தேர்த்திருவிழா ஆகும். பத்து லட்சம் மக்கள் இந்த ரத யாத்திரையில் கலந்து கொண்டு ஜெகந்நாதரின் அருளுக்குப் பாத்திரமாகின்றனர்.

 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு மஞ்சள் நிறத் தேரில் புரி ஜெகந்நாதரும், 14 சக்கரங்கள் கொண்ட சிவப்பு பச்சை நிறமுடைய தேரில் பலபத்ரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் தேர்வலம் வருவர்.

 ஒவ்வொரு தேர்ச்சக்கரமும் 7 அடி குறுக்களவு கொண்டது. ஜகந்நாதரின் தேரின் உயரம் 45 அடி ஆறு அங்குலம்; அகலம் 34 அடி ஆறு அங்குலமாகும். இந்தத் தேர்கள் வருடா வருடம் புதிதாக செய்யப்படுகின்றன. தேர் கட்டுவதில் வல்லவர்களான தச்சர்களால் குறிப்பிட்ட மரங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை மஹாநதியில் மிதக்கவிடப்படுகின்றன. அவற்றை புரி அருகே எடுத்து குறிப்பிட்ட முறைப்படி இந்த விசேஷமான தேர்கள் அமைக்கப்படுகின்றன.

 தேரோடும் வீதியை தங்கத் துடைப்பத்தால் மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்வதுப் பாரம்பரியமாக இன்றளவும் நடைபெற்று வருகிறது.

முதலில் பலபத்ரர் தேர், அடுத்து சுபத்ரா தேவி தேர், பின்னர் இறுதியில்  நந்திகோஷ ரதம் எனப்படும் புரி ஜெகந்நாதர் தேர் முறையாகப் புறப்படும். ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கும் இந்த உற்சவம் தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். குண்டிச்சா கோவில் நோக்கிப் புறப்படும் இந்த ரத யாத்திரை மவுசிமா கோவில் வழியே செல்லும். அங்கு ஜெகந்நாதர் ஓய்வு எடுப்பார். பின்னர் மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகந்நாதர் கோவிலை அடையும்.

 புரி கோவிலில் முதலில் சிங்க த்வார் வழியே நுழைந்து 22 படிகள் ஏறி சந்நிதிக்குச் செல்ல வேண்டும். உள்ளே நுழைந்தவுடன் தீபத்தை வழிபடுதல் மரபு. ஜகந்நாதர் சந்நிதிக்கு இடது பக்கம் சுபத்ராவும் பலபத்ரரும் இருந்து அருள் பாலிக்கின்றனர். கோவில் கூரையில் கிருஷ்ண லீலை ஓவியங்கள் அழகுறத் திகழ்கின்றன.

 இறைவனுக்கு 56 வகையிலான பிரசாதங்கள் நைவேத்யம் செய்யப்பட்ட பின் இந்த மஹா பிரசாதம் அனைத்து பக்தர்களுக்கும் இங்கு வழங்கப்படுகிறது.

 சிலிகா ஏரி 

பூரியிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிலிகா ஏரி ஆசியாவிலேயே மிகப் பெரிய உப்பு ஏரியாகும் இதை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது. இது மூன்று மாவட்டங்களை உள்ளடக்கி 1100 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள ஏரியாகும். இது டால்பின்களைக் கண்டு களிப்பதற்குப் பெயர் பெற்ற ஏரியாகும். சடப்படா நகரத்தில் அமைந்துள்ள இந்த ஏரியில் பல்வேறு இடங்களிலிருந்தும் வரும் காட்வால், முள்வால் பறவை உள்ளிட்ட ஏராளமான பறவைகளையும் காணலாம். பேரிக்காய் வடிவத்தில் உள்ள இந்த ஏரியுடன் 52 ஆறுகள் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு தங்குவதற்கு எராளமான ஹோட்டல்கள் உள்ளன. 

கொனார்க் சூரியன் கோவில் 

பூரி நகரிலிருந்து வடகிழக்கில் 35 கிலோமீட்டர் தூரத்தில் கொனார்க் உள்ளது. இங்குள்ள கோவில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். சிவப்பு மணல்கற்களாலும் கருங்கற்களாலும் அழகுற அமைக்கப்பட்ட இந்தக் கோவிலை ஐரோப்பிய மாலுமிகள் கறுப்பு கோயில் – ப்ளாக் பகோடா என்று அழைத்தனர்.

நூறு அடி உயரமுள்ள ரதமானது  24 சக்கரங்கள் கொண்டதாகவும் ஆறு குதிரைகள் இழுத்துச் செல்வதாகவும் இருக்கும் படி அமைக்கப்பட்டது.

இந்த தேரின் சக்கரத்தை வியப்புடன் அனைவரும் பார்ப்பது வழக்கம்.

 “இங்கே கல்லின் மொழி மனிதனின் மொழியையும் தாண்டிச் செல்கிறது“ என்று நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வியந்து போற்றுகிறார்.

 யுனெஸ்கோ இதை பாரம்பரியக் கலைச்சின்னமாக அறிவித்துள்ளது.

 சந்திரபாகா கடற்கரை:

 பூரியிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சந்திரபாகா கடற்கரை. இது உலகப் பிரசித்தி பெற்ற கொனார்க் சூரியதேவன் கோவில் தலத்திற்கு 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு ஏராளமானோர் வந்து சூரிய தேவனை வழிபடுகின்றனர்.

 எண்ணற்ற மக்கள் இந்த கடற்கரைக்கு,  ரத சப்தமி தினத்தன்று வந்து கூடுகின்றனர்; சூரியனைத் தொழுகின்றனர். இங்கு நீர் விளையாட்டுக்கள் பிரபலம். படகு சவாரி உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும்.

சூரியதேவன்கோவிலுக்கு உலகின் பாரம்பரிய தளம் என்ற அந்தஸ்தை யுனெஸ்கோ வழங்கியுள்ளது.

 ராம்சண்டி ஆலயமும் கடற்கரையும் 

குசபத்ரா நதி கடலுடன் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது ராம்சண்டி ஆலயம். கொனார்க் சூரிய கோவிலிலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தேவி ராம்சண்டி இங்கு கோவிலில் குடியிருந்து அருள் பாலிக்கிறாள். தேவி ஒரு தாமரை மலரின் மீது வீற்றிருக்கிறாள்.  கோவிலின் பின் பக்கம் ஓடும் குசபத்ரா நதி கண்ணுக்கு இனிமையான காட்சியைத் தரும். இங்கு தசரா விழா சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள கடற்கரையும் மிகவும் பிரபலமான ஒன்று.

 இவை தவிர பார்க்க வேண்டிய ஆலயங்களும் பூங்காக்களும் அருங்காட்சியகங்களும் நிறையவே இந்தப் பகுதியில் உள்ளன.

 அவரவர் பட்ஜெட்டிற்கும் ஓய்வெடுக்க உள்ள காலத்தையும் பொறுத்து இந்த இடங்களுக்குத் திட்டமிட்டுப் பயணிக்கலாம்; புத்துணர்ச்சியைப் பெறலாம்!

 பழம்பெரும் ஆலயங்கள், அழகிய கடற்கரைகள், அடர்ந்த வனாந்திரங்கள், புகழ் பெற்ற பண்டைய வரலாறு, மனதை ஈர்க்கும் இயற்கை வனப்பு கொண்ட ஒடிஸா இந்தியாவின் பொக்கிஷம் என்று சொல்வது சரிதானே!

***