அவர்கள் நடந்து வந்த பாதை; சொல்லும் கீதை! (Post No.14,469)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,469

Date uploaded in London – –4 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அவர்கள் நடந்து வந்த பாதை; சொல்லும் கீதை!

ச. நாகராஜன்

பெரும் ரிஷிகள், மகான்கள், தலைவர்கள், கவிஞர்கள், சாதனையாளர்கள் ஆகியோர் அனுபவித்து நடந்து வந்த பாதையைப் பார்க்க ஆவலாக இருக்கிறதா, அந்தப் பாதை சொல்லும் கீதை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

அவர்கள் பாதையில் நாமும் நடைபோட்டு நல்லனவற்றைப் பெறலாமே என்ற ஆசை நல்ல ஆசை தான்!

இதோ பார்க்கலாமே அவர்கள் வந்த பாதையையும் பாதை சொல்லும் கீதையையும்!!

வியாசர்

பரோபகாரம் புண்யம் பாபாய பரபீடனம்

(மற்றவருக்கு உதவி செய்வதே புண்ணீயம்

மற்றவருக்குத் தீங்கு செய்வதே பாவம்)

ஆதி சங்கரர்

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் மூடமதே!

(கோவிந்தனைத் துதி கோவிந்தனைத் துதி கோவிந்தனைத் துதி மட நெஞ்சே!)

பதஞ்சலி முனிவர்

யோக: சித்த விருத்தி நிரோத:

(மனம் அலைபாய்வதை நிறுத்துவதே யோகம்)

அரிச்சந்திரன்

சத்யமேவ ஜயதே! (சத்தியமே வெற்றி பெறும்)

புத்தர்

மனதைச் சாந்தமுறச் செய்; ஆன்மா பேசும்!

திருஞானசம்பந்தர்

வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம்  நமச்சி வாயவே

அப்பர்

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

நமச்சிவாயவே நானறி விச்சையும்

மாணிக்கவாசகர்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

சுந்தரர்

மன்னே மாமணியே அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே

திருமூலர்

ஒன்றே குலம் ஒருவனே தேவனும்

சேக்கிழார்

உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

கம்பர்

அலகிலா விளையாட்டுடையான்

அவன் தலைவன்

அன்னவர்க்கே சரண் நாங்களே

தாயுமானவர்

பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே

அருணகிரிநாதர்

மொழிக்குத் துணை முருகா என்னும் திருநாமம்

சிவவாக்கியர்

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.

அபிராமி பட்டர்

நல்லன எல்லாம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

வள்ளலார்

சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்

சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்

திருமங்கை ஆழ்வார்

நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்!

ஆண்டாள்

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம்

உனக்கே நாம் ஆட்செய்வோம்!

பகவான் ரமண மஹரிஷி

‘நான் யார்’ என்று விசாரம் செய்து அறி!

ஶ்ரீ ஷீர்டி சாயிபாபா

ச்ரத்தா சபூரி (சிரத்தையும் பொறுமையும்)

ஶ்ரீ சத்யசாயி பாபா

மை லைஃப் இஸ்  மை மெசேஸ் – MY LIFE IS MY MESSAGE! (என் வாழ்வே எனது உபதேசம்)

கணியன் பூங்குன்றனார்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

மஹாத்மா காந்தி

அஹிம்ஸா பரமோ தர்ம: (அஹிம்சையே உயர்ந்த தர்மம்)

ஸ்வாமி விவேகானந்தர்

எழுமின்! விழிமின்! குறிக்கோளை அடையும் வரை தளராது செல்மின்!

மகாகவி பாரதியார்

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணித்திருநாடு

பங்கிம் சந்திரர்

வந்தே மாதரம் வந்தே மாதரம்

சுஜலாம் சுபலாம் மலயஜ சீதலாம் சஸ்ய சியாமளாம் மாதரம்

வந்தே மாதரம்!

சாக்ரடீஸ்

உன்னையே நீ அறிவாய்!

ஐன்ஸ்டீன்

மனோ கற்பனையே அனைத்தும் தரும்

டென்சிங்

ஏறு ஏறு ஏறு உயரத்தில் ஏறு

ப்ரூஸ் லீ

பயிற்சி செய்! பயிற்சி செய்!! பயிற்சி செய்!!!

***

Hindu Festival Akshaya Trtyai in Bullet Points (Post No.14,468)

Written by London Swaminathan

Post No. 14,468

Date uploaded in London –  3 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Akshaya Trtyai (Tritiya) has become synonymous with buying gold jewels. But the festival facts are different from it.

***

This year 2025 saw the gold sales jumping to Rs 12,000 crores. Hindus buy gold on that day because it will be everlasting wealth. Akshaya means that which is indestructible, never diminishing, ever growing.

***

It was the birthday of Lord Parasurama , one of ten incarnations of Vishnu.

***

Akshaya Tritiya is celebrated during Shukla Paksha Third day in the month of  Vaisaka (In Tamil calendar it was the month of Chitra, because one tradition is the new month begins on Amavasyai/ new moon day; Tamils don’t follow it)

***

This year 2025 had added significance because of New Shankaracharya taking over as the 71st Peedaathipathi in the famous Kanchi Mutt in Tamil Nadu. New Shankaracharya was named as Satya Chandra Sekarendra Saraswathy.

***

Every year 12 Vishnu Murtis assemble in Kumbakonam in Tamil Nadu on this holy day. They come in Garuda Vahanas and stay at one place enabling devotees to have darshan at one go..

***

In Varaha Lakshmi temple a Simhachalam in Andhra Pradesh the sandal paste is removed from the Lakhmi Narasimha Murti only on this day. On other days the idol is covered with sandal paste and it looks like Shiva Linga.

***

In Odisha the Rath Construction begins on this day. Every year the famous Jagannath Temple gets a new Chariot/Ratha.

It is the most famous Rath Yatra which is done by Hare Krishna Devotees around the world now. We got the English word Juggernaut from this deity.

Juggernaut (modern meaning)

/ˈdʒʌɡənɔːt/

noun

a huge, powerful, and overwhelming force.

“the juggernaut of public expenditure”

British

a large, heavy vehicle, especially an articulated lorry.

“the juggernaut thundered through the countryside”

***

Chandan yatra also begins on this day.

ISKCON temples start their 21 day Chandan Yatra on this holy day.

***

Akshaya trtyai is very important for Saivites and Vaishnavites. Kedarnath temple, one of the 12 Jyotirlinga Shrines, and Badrinath temple, one of the 108 Holy Vishnu temples, open for six months on this day. Along with them Gangotri and Yamunotri shrines also open on this day.

***

Hindus believe Ganga River descended to earth on this day; also poorest of the poor Sudhama visited Lord Krishna on this day. Both these show that endless benefits will accrue if something is done on this day. Sudhama became rich the moment he gave handful of pounded rice to Lord Krishna.

***

Another interesting thing in Hindu botany is that Barley was discovered on this day. Also known as Yava in Vedic period, it is used in Yagas and Yajnas.

–subham—

Tags- Akshatya Trtyai, importance, gold, Parasurama, Rath Yatra,

Pictures of 2500 Indian Stamps!- Part 27 (Post No.14,467)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,467

Date uploaded in London – –3 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 27

Stamps posted today include

VINOBA BHAVE, HEMU KALANI, MAHDEV DESAI, NEHRU, NANDALAL PAINTING, PROJECT TIGER, BRD, SIBERIAN CRANE, DET, STAG, KANHA NATIONAL PARK, FRANKLIN ROOSVELT, CHARLES DARWIN, FATHER HERAS, ST FRANCIS OF ASSISSI, MEERA BEHN, TWO MONKEYS, LANGUR, MACAQUE, QUIT INDIA RESOLUTION, NAO ALGNED, SEVEN NAATION CONFERENCE, KARL MARX, CAVALRY, MAN’S FIRST FLIGHT, NEHRU, GANDHI, GOANESE COUPLE, CHILDREN’S DAY, SIMON BOLIVAR, MOUNTAINEERING FEDERATION, JAT REGIMENT, DECCAN HORSE, SURENDRANATH BANERJEE, NATURAL HISTORY SOCIETY,SEVENTH LIGHT CAVALRY, ANTARTIC EXPEDITION, IOC SESSION, COMMONWEALTH DAY , ASIATIC SOCIETY, KRISHNA KANTA HANDIQUEetc.

–Subham—

Tags Part 27, 2500 Indian Stamps, VINOBA BHAVE, HEMU KALANI, MAHDEV DESAI, NEHRU, NANDALAL PAINTING, PROJECT TIGER, BRD, SIBERIAN CRANE, DET, STAG, KANHA NATIONAL PARK, FRANKLIN ROOSVELT, CHARLES DARWIN, FATHER HERAS, ST FRANCIS OF ASSISSI, MEERA BEHN, TWO MONKEYS, LANGUR, MACAQUE, QUIT INDIA RESOLUTION, NAO ALGNED, SEVEN NAATION CONFERENCE, KARL MARX, CAVALRY, MAN’S FIRST FLIGHT, NEHRU, GANDHI, GOANESE COUPLE, CHILDREN’S DAY, SIMON BOLIVAR, MOUNTAINEERING FEDERATION, JAT REGIMENT, DECCAN HORSE, SURENDRANATH BANERJEE, NATURAL HISTORY SOCIETY,SEVENTH LIGHT CAVALRY, ANTARTIC EXPEDITION, IOC SESSION, COMMONWEALTH DAY, K K HANDIQUE etc.

GNANAMAYAM 4th  MAY, 2025 SUNDAY BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

4-5-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time . 

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team:

***

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London and Gomathi Karthikeyan from Chennai.

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on TIRU KOKARNAM TEMPLE near PUDUKKOTTAI 

****

Song by Sathyarthi Chandrasekharan , Japanese- English- Tamil translator, Interpreter; On line Music Teacher, Guildford, UK

Professor S Suryanarayanan, Former Principal, Madurai Saraswathy Narayanan College  speaks on God seen by Three Great Saints.

****

SPECIAL EVENT-

English Talk by Sri Prasanna Lakshmi Narasimha, London.

I T Leader and Scholar in Vedic Scriptures

Topic- Adi Sankara- A great Philosopher  

****

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்:

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் மற்றும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயன்

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

தலைப்பு –புதுக்கோட்டை அருகில் உள்ள திருக்கோகர்ணம்

****

பாடல் – சத்யார்த்தி சந்திரசேகரன் , ஜப்பானிய- ஆங்கில- தமிழ் மொழிபெயர்ப்பாளர், ஆன் லைன் சங்கீத ஆசிரியர் , லண்டன்.

***

சொற்பொழிவு நிகழ்த்துபவர் –

பேராசிரியர் எஸ். சூர்யநாராயணன் , முன்னாள் பிரின்சிபால், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி, தலைப்பு – கடவுளைக் காட்டிய மூவர்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி: லண்டனிலிருந்து ஆங்கில சொற்பொழிவு நிகழ்த்துபவர்-

திரு. பிரசன்னா லெட்சமி நரசிம்மா

ஐ டி அதிகாரிஇந்துசமய அறிஞர்.

தலைப்பு —  மாபெரும் தத்துவ ஞானி ஆதிசங்கரர் 

*****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,4-5-2025, BROADCAST, PROGRAMME

உடல்நலத்தைப் பேணுவது எப்படி? குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-5 (Post No.14,466)

Written by London Swaminathan

Post No. 14,466

Date uploaded in London –  3 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

உடல்நலத்தைப் பேணுவது எப்படி? குருபாததாசர் அறிவுரை

குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-5 

(குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை 1 TO 4  மார்ச் மாதம் வெளியாகின ; நாலாவது கட்டுரை டாக்டர் யார்புலவர் யார்? அறிஞன் யார்? குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை -4 (Post.14,293)

என்ற தலைப்பில் 12 March 2025 ஆம் தேதி இந்த பிளாக்கில் வந்தது. இனி மேலும் சில பகுதிகளைக் காண்போம்).

PART 5

உடல்நலத்தைப் பேணுவது எப்படிகுருபாததாசர் அறிவுரை

குமரேச சதகம் இயற்றிய குருபாததாசர் நல்ல ஆரோக்கிய வாழ்வுக்கு சில அறிவுரைகளை வழங்குகிறார்;  இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் செப்பியது  இன்றும் பொருந்தக்கூடிய அறிவுரைகள்தான்!

19. உடல்நலம்

மாதத் திரண்டுவிசை மாதரைப் புல்குவது,

     மறுவறு விரோசனந்தான்

வருடத் திரண்டுவிசை தைலம் தலைக்கிடுதல்

     வாரத் திரண்டுவிசையாம்

மூதறிவி னொடுதனது வயதினுக் கிளையவொரு

     மொய்குழ லுடன்சையோகம்

முற்று தயிர் காய்ச்சுபால் நீர்மோர் உருக்குநெய்

     முதிரா வழுக்கையிள நீர்

சாதத்தில் எவளாவா னாலும்பு சித்தபின்

     தாகந் தனக்குவாங்கல்

தயையாக உண்டபின் உலாவல்லிவை மேலவர்

     சரீரசுகம் ஆமென்பர்காண்

மாதவகு மாரிசா ரங்கத்து தித்தகுற

     வள்ளிக்கு கந்தசரசா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

என்ன சொல்கிறார் என்று விளக்குகிறேன்

1 . பெண்களுடன் , அதாவது மனைவியுடன் உடலுறவு கொள்வது மாதத்துக்கு இரண்டு முறை மட்டுமே இருக்க வேண்டும்.

2. அப்படிப்பட்ட மனைவி கரிய கூந்தலுடன் வயதில் இளையவராக இருக்க வேண்டும்¬

இதில் கரிய கூந்தல் என்பதை அடிக்கோடிட வேண்டும். ஏனெனில் பல பெண்கள் நரைத்த முடியை மறைக்க சாயம் பூசுவது– அதாவது டை அடிப்பது இப்போது அதிகம் உளது . யுவதி போல தோன்றுவர்; அப்படி இல்லை என்பதே உண்மை.

3.வயிற்றிலுள்ள அசுத்தங்களை அகற்ற வருடத்துக்கு இரண்டு முறை பேதி மருந்து சாப்பிட வேண்டும் ; இந்தக் காலத்தில் இது அறவே இல்லை.

4.வாரத்துக்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்; இதுவும் நகர்ப்புறங்களில் அழிந்துவிட்டது .

சனி நீராடு என்று ஆத்திச் சூடியில் அவ்வையார் கூறினார் . இதற்கு அந்தக் காலத்தில் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக்குளி என்று பொருள் எழுதினார்கள் . இப்போது சனை: என்ற சம்ஸ்க்ருத பதத்தைப் பயன்படுத்தி மெதுவாக செல்லும் ஆற்றில் குளி என்றும் சன்னி/ ஜன்னி / குளிர்ச்சி என்று ஸம்ஸ்க்ருதச் சொல்லை பயன்படுத்தி குளிர்ந்த நீரில்  குளிக்க வேண்டும் என்றும் புதிய விளக்கம் சொல்கிறார்கள் தமிழில்  என்னும் எழுத்திலோ ஜ என்னும் எழுத்திலோ சொற் கள்வர முடியாது என்பது தொல்காப்பியவி தி.

குருபாததாசர் எழுதியது என்னெவென்றால் ஆண்கள் புதன் சனிக்கிழமைகளில் தலைக்கு குளிக்க வேண்டும் – தைலம் தேய்த்து- பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு குளிக்க வேண்டும் என்பதே .

கேரளத்தில் வசிப்போர் தினமுமே தேங்காய் எண்ணெய்யைத் தடவிக்கொண்டு குளிப்பதால் அவர்களின் முடிகருப்பு நிறத்தில் இருக்கிறது .

5.வெப்ப நாடான இந்தியாவில் வாழ்வோர் தினமும் கெட்டித் தயிர், மோர், உருக்கிய நெய், வழுக்கை உள்ள இளநீர், காய்ச்சிய  பால்  ஆகியவற்றையும் தினசரி உணவில் சேர்க்க வேண்டும். மேலை நாடுகளில் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள்; தண்ணீர் அல்லது அதுபோன்ற ஆரோக்கியமான திரவம் (பழ ரசம் போன்றவை) உடலுக்குள் சென்றாலும் சரிதான்.

6.அடுத்து  அவர் சொல்லுவது எவ்வளவு தாகம் இருந்தாலும் உணவைச் சாப்பிட்டு முடித்த பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்பதாகும்; இதில் விஞ்ஞான்  உண்மையும் இருக்கிறது மள  மளவென்று தண்ணீரைக் குடித்து அரை வயிற்றை  நிரப்பிவிட்டோமானால் உணவுப் பண்டங்கள் சாப்பிடுவது குறைந்து விடும்; ஆனால் சிறிது நேரத்தில் பசி எடுக்கத் துவங்கிவிடும் ஆகையால் சாப்பிட்டு முடித்தவுடன் நீரை அருந்துக!.

மோரின் சிறப்பு பற்றி முன்னரே கண்டோம் .

ஒரு கவி மோரின் பெருமையைப்  புகழ்கையில் , அது இந்திரனுக்கும் கூட கிடைக்காது என்கிறார் .

அம்ருதம் துர்லபம் ந்ருணாம் தேவானாம் உதகம் ததா

பித்ரூணாம் துர்லபஹ புத்ரஹ தக்ரம் சக்ரஸ்ய துர்லபம்

பொருள்:-

மனிதர்களுக்கு அமிர்தம் கிடைப்பது  அரிது.

தேவர்களுக்கு தண்ணீர் கிடைப்பது  அரிது.

தந்தையருக்கு நல்ல மகன்கள் கிடைப்பது அரிது.

இந்திரனுக்கு மோர் கிடைப்பது அரிது.

உணவில் மோர் சேர்ப்பதன் அவசியத்தை கவிஞர் இப்படி வலியுறுத்துகிறார் போலும்.

7.கடைசியாக அவர் சொல்லுவது இன்று மிக மிக முக்கியமானதாகிவிட்டது மேலை நாடுகளில் Apple Watch ஆப்பிள் வாட்ச்சைக்  கட்டிக்கொண்டு – தினமும் பத்தாயிரம் ஸ்டெப் 10,000 Steps per day நடக்கும் பைத்தியங்களைப் பார்க்கலாம் ; பைத்தியம் என்று சொல்லக்கூடாதுதான் . அதாவது அவர்கள் மன அமைதியுடன் நிதானமாக உலவப்போக வேண்டும் என்று குமரேச சதகம் சொல்லுவதே சரி. கடற்கரையில், பூங்காவில், புழுதி இல்லாத மைதானத்தில், உலாவுவது Jogging, Running  ஜாக்கிங் போவதைவிட மேல்தான்; இதை 200 ஆண்டுகளுக்கு முன்னரே தனது பாடலில் குருபாததாசர் முத்ததாய்ப்பாக வைத்திருப்பது வாக்கிங் Walking பற்றிய சிறப்பினை உணர்த்துகிறது.

—Subham—

Tags- உடல்நலம் , குருபாததாசர், குமரேச சதகம், கட்டுரை 5

கோரோங்கோரோ எரிமலை வாய்! உலகின் அதிசய இடங்கள்! (Post No.14,465)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,465

Date uploaded in London – –3 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

உலகின் அதிசய இடங்கள்! 

கோரோங்கோரோ எரிமலை வாய்!

பிளவுப் பள்ளத்தாக்கில் ஒரு வனவிலங்கு சரணாலயம்!!

 NGORONGORO CRATER 

ச. நாகராஜன் 

வடக்கு டான்ஜானியாவில் அமைதியின் உறைவிடம் என்று வர்ணிக்கப்படும் பெரிய நகரான தார் எஸ் சலாமுக்கு வடமேற்கே 350 மைல் தொலைவில் அமைந்துள்ளது கொரோங்கோரோ எரிமலை வாய்!

ஆப்பிரிக்காவின் அற்புதமான பல்வகை வனவிலங்குகளின் இருப்பிடம் இதுவே தான்.

எரிமலையின் கீழே உள்ள செழுமையான புல்வெளிப் பகுதி தான் 30000 மிருகங்களுக்குச் சொர்க்கமாகத் திகழும் இடம்.

ஆப்பிரிக்காவின் பூர்வீகக் குடியினர் மஸாய் குடியினர் ஆவர். இவர்கள் இந்தப் பகுதியில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தவர்கள். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தான் இங்கிருந்து வெளியேறினர். இவர்கள்

கோரோங்கோரோவைப் பெரிதும் பூஜித்தனர்.

கடும் பஞ்சகாலத்திலும் கூட அவர்கள் இந்த இடத்தை விட்டு நகரவில்லை. தாகத்தைத் தணித்துக் கொள்ள அங்குள்ள நீரூற்றுகள் அவர்களுக்கு உதவின.

கிழக்கு ஆப்பிரிக்காவின் செயலிழந்த எரிமலைகளுள் கோரோங்கோரோவும் ஒன்று. இரண்டரை கோடி வருடங்களுக்கு முன்னர் இது பொங்கி எழுந்து கொண்டிருந்தது. ஜாம்பியா நதியிலிருந்து தெற்கே 4060 மைல் நீளம் நீண்டிருந்த இந்த எரிமலைப் பகுதி உருவானது.

ஒரு காலத்தில் பூமியின் கீழ் உள்ள டெக்டோனிக் தகடுகளில் இரண்டு அசையவே பெரும் வெடிப்புகள் இரண்டு உருவாயின. அவற்றுள் ஒன்றினால் உருவானது தான் இந்த ஆப்பிரிக்க கொரோங்கோரோ எரிமலை!

அந்தக் காலத்தில் இதன் உச்ச பட்ச உயரம் பிரமிக்க வைக்கும் 15000 அடியாகும். இதன் அடிப்பரப்பு மட்டும் நூறு சதுரமைல்களாகும்.

மற்ற எரிமலைப் பகுதிகள் போலல்லாமல் அதிர்ஷ்டவசமாக இந்தப் பகுதியில் எப்போதும் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. ஆகவே கூட்டம் கூட்டமாக விலங்குகள் இந்தப் பகுதியை நோக்கி வந்தன.

மூங்கே  மற்றும் லோன்யோகி (MUNGE AND LONYOKIE)

ஆகிய  இரு நதிகள் நீரைக் கொண்டு வந்து இங்கு சேர்க்கின்றன. நீல நிறமுள்ள ஒரு அற்புதமான ஏரி இங்கு உருவாகிவிட்டது.

அரிய இனமான இரண்டு வகை ஃப்ளெமிங்கோ பறவைகள் இங்கு வளர ஆரம்பித்தன. நீர்யானைகளும், யானைகளும் ஏராளமாக இங்கு வசிக்க ஆரம்பித்தன.

இங்கு ஏராளமான செடிவகைகளும் மூலிகைகளும் உள்ளதால் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள அவற்றின் கீழே காண்டாமிருகங்கள் ஓய்வெடுக்கின்றன. இவற்றையே அவை தனது உணவாகவும் எடுத்துக் கொள்கின்றன!

அற்புதமான பெரிய ஏரி, அருகில் பரந்த சமவெளி ஆகியவை இருப்பதால் உற்சாகத்துடன் இங்கு சிங்கங்கள் விளையாடுகின்றன.

எரிமலைப் பகுதியில் ஒரு வனவிலங்கு சரணாலயம் அமைந்திருப்பது உலகத்திலேயே இந்த ஒரு இடத்தில் தான் என்பதால்

கோரோங்கோரோ ஒரு தனிச் சிறப்பைப் பெற்றுள்ளது!

**

Ramayana Quiz: Some difficult Questions! (Post No.14,464)

Written by London Swaminathan

Post No. 14,464

Date uploaded in London –  2 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Here are some difficult questions from the Hindu epic Ramayana (I Posted them in Tamil in 2012 in this blog; Tamil version is given below the English version.)

1.What was the name of Janaka’s minister?

2.Can you name the wives of Lakshmana, Bharata and Shatrughna.?

3.Who built Rama Setu- the sea bridge to Lanka?

4.Sita was the princess of which country? What was the capital of the country?

5.Who were the father and mother of Ravana?

6.Who were Ravana’s ministers?

7.Name the father of Vali and Sugreeva.

8.Where did Valmiki give Shatrughna importance?

9.Who advised Rama to make friendship with one person and who was that person?

10.Can you name the wives of Vali and Sugreeva?

11.What is the similarity or commonality between Arjuna and Vali?

12.Surpanakha was in love with Lakshmana? Who was the other woman that went after Lakshmana? Where did it happen?

13.Who performed the Putra Kameshti Yaga for the benefit of King Dasaratha?

14.What were the birth stars of Rama, Lakshmana Bharata and Shatrugna?

15.Do you remember their zodiac signs according to Hindu astrology?

16.How many Grahas/planets were in exaltation in Rama’s horoscope ?

17.Can you tell the significance of numbers 2, 7 and 14 in Rama’s life?

ANSWERS

1.Rishi Sadanand;

2.Rama’s wife Sita; Bharata’s wife Mandavi; Lakshmana’s wife Urmila and Shatrugna’s wife Shrutakirti.

3. Two engineers Nalan and Neelan did the blueprint for the bridge and Vanara Sena/ Monkey battalion did  help in building it.

4. Sita was the princess of Videha and its capital was Mithila;

5.Ravana’s father was Brahmin Visravas and his mother was Kaikasi  from the Rakshasa tribe;

6.Mahodaran and Malyavan;

7. Riksharajan;

8.Lavanasura was killed by Rama and his kingdom Mathurapuri  was annexed to Rama’s empire. Shatrugna was made the king of that country.

9.Demon Kabandha advised Rama to meet the Monkey King Sugreeva and get his  help  to find Sita.

10. Vali’s wife Tara; Sugreeva’s wife Ruma.

11. Both Arjuna and Vali were born with the grace of Indra.

12.Ayomukhi; she fell in love with Lakshmana in Mathanga Muni’s Ashram.  Demoness  Ayomukhi became impressed by Lakshmana and captured him in her embrace saying that he is her lover. Lakshmana cut off her nose, one ear and a breast. The demoness ran away

13.Rishyasrnga .

14.Rama- Punarvasu; Lakshmana and Shatrugna- Ayilyam/Ashlesha and Bharata -Pusam/Pushya

15.  According to  Hindu astrology the zodiac signs of Lord Rama – Cancer, Lakshmana – Gemini, Shatrughna – Gemini, and Bharata – Taurus. 

16.In the birth chart of Lord Rama, five planets were in exaltation: Sun (in Aries), Jupiter (in Cancer), Saturn (in Libra), Mars (in Capricorn), and Venus (in Pisces). This configuration is a significant aspect of his horoscope, suggesting a powerful and auspicious birth chart

17.Kaikeyi used two boons granted by King Dasharatha to demand that her son Bharata be crowned king and that Rama be exiled to the forest for fourteen years .Rama got the friendship of Sugreeva only after piercing Seven trees in one shot.

****

Following Tamil version is from my previous post:

1.ஜனக மகாராஜனுடைய மந்திரியின் பெயர் என்ன?

2.லெட்சுமனன், பரதன். சத்ருக்னன் ஆகியோரின் மனிவியர் பெயர் என்ன?

3.ராம சேது எனப்படும் கடல் பாலம் அமைத்த பெருமை யாரைச் சாரும்?

4.சீதை எந்த நாட்டு இளவரசி? அந்த நாட்டின் தலை நகரம் எது?

5.ராவணனுடைய தாய் தந்தையர் யார்?

6.ராவணனுடைய மந்திரிகள் பெயர் என்ன?

7.வாலி, சுக்ரீவர்களுடைய தந்தையின் பெயர் என்ன?

8.ராமாயணத்தில் சத்ருக்னனுக்கு எந்த இடத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது?

9.சீதையைக் கண்டு பிடிப்பதர்காக சுக்ரீவனிடம் நட்புகொள்ள வேண்டிய அவசியத்தை ராமனுக்கு சுட்டிக்காட்டியவன் யார்?

10.வாலி, சுக்ரீவர் மனைவியர் பெயர்கள் என்ன?

11.வாலி, அர்ஜுனன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

12. லெட்சுமணனிடம் ஒருதலைக் காதல்கொண்ட ஒரு பெண் சூர்ப்பநகை. மற்றொரு பெண் யார்? எங்கே நடந்தது?

13.தசரதர் ஏற்பாடு செய்த புத்ர காமேஷ்டி யாகத்தை முன்னின்று நடத்தி வைத்த முனிவர் யார்?

14.ராம,லெட்சுமண பரத சத்ருக்னர் பிறந்த நட்சத்திரங்கள் எவை?

15. அவர்களுடைய லக்னங்கள் அல்லது ராசி என்ன?

16. ராமர் ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சம்?

17.ராமர் வாழ்வில் எண் 2, 7, 14 ஆகியன மறக்க முடியாதவை ஏன்?

விடைகள்:

1.சதாநந்தர் 2. முறையே ஊர்மிளை, மாண்டவி, ஸ்ருகீர்த்தி 3. நளன் நீலன் ஆகிய வானர சகோதரர்கள 4.விதேஹ நாட்டின் இளவரசி, தலை நகர் மிதிலை 5.விஸ்ரவஸ் என்ற முனிவர், கைகசி என்ற அரக்கி 6.மகோதரன், மால்யவான் 7.ரிக்ஷராஜன் 8.மது என்ற அரக்கனின் மகனான லவணாசுரனைக் கொன்று அவனுடைய மதுராபுரியை ராமராஜ்யத்தில் சேர்த்தான் ராமன். பிறகு அதற்கு அரசனாக சத்ருனனை பட்டம் சூட்டினான்.9.கபந்தன் என்னும் அரக்கன் 10.தாரா, ருமா 11. இருவரும் தேவேந்திரனின் அருளால் பிறந்தவர்கள் 12.அயோமுகி என்னும் அரக்கி, மதங்க முனிவரின் ஆஸ்ரமத்தில் 13.ரிஷ்யஸ்ருங்கர் 14.ராமன்—புனர்வசு/ புனர்பூசம், லெட்சுமணன்—ஆயில்யம், பரதன்—பூசம், சத்ருக்னன்- ஆயில்யம் 15. ராமன்—கடக லக்னம், லெட்சுமணன்—சிம்ம ராசி , பரதன்—மீன லக்னம், சத்ருக்னன்- சிம்ம ராசி.16.ஐந்து கிரகங்கள் 17. இரண்டு வரங்கள் மூலம் காட்டுக்கு அனுப்பப்பட்டான், பரதன் ஆள்வதற்கு அனுமதித்தான், ஏழு மரா மரங்களைத் துளைக்கும் போட்டியில் வெற்றி பெற்றவுடனேயே வானரசேனை உதவி கிட்டியது, பதினான்கு ஆண்டு வனவாசம் .

—Subham—

Tags-Ramayana Quiz, in English and Tamil

Pictures of 2500 Indian Stamps!- Part 26 (Post No.14,463)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,463

Date uploaded in London – –2 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 PART 26

Stamps posted today include

Martyr Day, B C Roy, Purushothamdas Tandon, Darjeeling Rail, Asian Games 1982, Civil Aviation, Inpex, Asian Games, 1982, Arjuna Shooting Circling Fish, Oil Exploration, Apple Satellite, Communication Indi-USSR, Four Flowers of India, Children s Day 50p, Kashmir Stag, Indian Airforce, Police Patrol, M F Hussain Painting etc.

–Subham—

Tags Part 26, 2500 Indian Stamps, B C Roy, Purushothamdas Tandon, Darjeeling Rail, Asian Games 1982, Civil Aviation, Inpex, Asian Games, 1982, Arjuna Shooting Circling Fish, Oil Exploration, Apple Satellite, Communication Indi-USSR, Four Flowers of India, Children s Day 50p, Kashmir Stag, Indian Airforce, M F Hussain Painting etc.

QUIZ அக்ஷய திருதியை பத்து QUIZ (Post No.14,462)

Written by London Swaminathan

Post No. 14,462

Date uploaded in London –  2 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1.அக்ஷய திருதியை என்றால் என்ன அர்த்தம் ? ஒவ்வொரு ஆண்டும் எப்போது வரும் ?

1.அக்ஷய அழிவில்லாத ; திருதியை = மூன்றாவது நாள்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் ( அம்மாவாசையில் அடுத்த மாதம் துவங்குவதாக எண்ணுவோருக்கு வைகாசி மாதம் ) வளர்பிறையில் மூன்றாம் நாள் அட்சய திருதியை கொண்டா டப்படுகிறது.

****

2.இந்த 2025 ஆம் ஆண்டு (30.04.25 புதன்கிழமை)  அக்ஷய திருதியை நாளில் ஏற்பட்ட கூடுதல் சிறப்பு என்ன ?

2. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா பொறுப்பேற்றார்

சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இவருக்கு அட்சய திருதியை நாளில் ,காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, சன்யாச தீட்சை வழங்கினார். அதன்பின், ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற பெயர் இவருக்கு சூட்டப்பட்டது.

****

3.அக்ஷய திருதியை தினத்தில் மக்கள் தங்க நகைக்கடைகளுக்கு படை எடுப்பது ஏன்?

3.இந்த ஆண்டு அட்சய திருதியை ஒட்டி 12 ஆயிரம் கோடி ரூபாய்க்குத் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக அனைத்து இந்திய நகைக் கடை உரிமையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அக்ஷய என்ற சமஸ்க்ருதச் சொல்லுக்கு அழியாதது என்று பொருள்; அந்த தினத்தில் எதைச்  செய்தாலும் .எதை  வாங்கினாலும் அதாற்கு அழிவு கிடையாது என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் அன்று நகைகளையும் ரத்தினங்களை வாங்குகிறார்கள் .

தங்கத்தின் விலை  நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்துக்  காணப்படும்  நிலையிலும், அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண விற்பனை அதிகரித்தே காணப்பட்டது.

****

4.அக்ஷய திருதியை நாளுக்கும் கும்பகோணத்துக்கு என்ன தொடர்பு?

4.அட்சய திருதியை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் 12 பெருமாளின் கருட சேவை உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

கும்பகோணம் நகரைச் சுற்றிலும் 12 பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. அட்சய திருதியையொட்டி 12 கோயில்களிலிருந்தும் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா செல்வார்கள். மேலும் ஒரே மண்டபத்தில் தங்கி பக்கதர்களுக்குத் தரிசனம் தருவார்கள்.

****

5.ஆந்திரத்திலுள்ள சிம்மாசலம் கோவிலில் இந்த தினத்தில் என்ன நடக்கும் ?

5.ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினம் அருகில் சிம்மாசலம் மலையிலுள்ள வராஹ லெட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்மர் மீதுள்ள லிங்க வடிவிலுள்ள சந்தனப் பூச்சு இந்த ஒரு நாள் மட்டும் அகற்றப்படும் அப்போது சுய உருவில் நரசிம்மரைத் தரிசிக்கலாம்

முன்னொரு காலத்தில் அசரீரி ஒன்று ஒலித்து விக்ரஹத்தின்  மேனியைச் சந்தனத்தால் பூசி மேனியைக் காண முடியாமல் செய்ய வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே உண்மை உருவத்தைக் காண வேண்டும் என்று சொல்ல அப்படியே மேனி சந்தனத்தால் பூசப்பட்டது.

****

6.இமய மலை புனிதத் தலங்களில் இந்த தினத்தில் என்ன நடக்கும்?

6.பத்திரிநாத்திலுள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில் குளிர் காலங்களில் நடையடைத்து அட்சய திரிதியை சுபதினத்தில் மீண்டும் பக்தர்கள் தரிசிப்பதற்காக கோவில் நடை திறக்கபடும். கேதார் நாத் ஜோதிர்லிங்க கோவிலும் பத்ரிநாத் பத்ரி நாராயணர் கோவிலும் திறக்கப்படுகிறது .

****

7.அக்ஷய திருதியை நாள் குறித்து இந்துக்கள் கொண்டுள்ள வேறு நம்பிக்கைகள்  என்ன ?

7.பரசுராமர் அவதரித்த திருநாள்; கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த

திருநாள்; பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள்;  பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்; வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது. திரேதாயுகம் தொடங்கிய நாள்; கனகதாரா ஸ்தோத்ரம்” ஆதிசங்கராச்சாரியாரால் இயற்றப்பட்டது.

****

8.எந்த தானியத்துடன் அக்ஷய திருதியை இணைத்துப் பேசப்படுகிறது ?

8.அரிசி, கோதுமை அல்லது பார்லியை யாகக்கிரியைகளில் இந்துக்கள் பயன்படுத்துவார்கள்; வட இந்திய குளிர்ப்பிரதேசங்ககளில் பார்லி எளிதில் விளைகிறது .பார்லி தோன்றிய நாள் இதுதான் .

***

9.ஒரிஸ்ஸா மாநிலத்தில் அக்ஷய திருதியை ஏன் முக்கிய நாளாகக் கருதப்படுகிறது ?

9.ஒரிஸ்ஸா மாநிலத்தில் பூரி நகரில் ஜகந்நாதர் கோவில் உள்ளது; அங்கு நடக்கும் ரத யாத்திரைதான் உலகப் பிரசித்திபெற்றது; ஆக்ஸ்போர்டு அகராதியில் ஜக்கர்நாட் juggernaut என்ற சொல்லை உருவாக்கியது .

இன்றைய தினத்தில்தான் ரதம் அமைக்கும் பணிகளும் சந்தன் யாத்ரா சடங்குகளும் தொடங்குகின்றன

juggernaut

/ˈdʒʌɡənɔːt/

noun

a huge, powerful, and overwhelming force.

“the juggernaut of public expenditure”

British

a large, heavy vehicle, especially an articulated lorry.

“the juggernaut thundered through the countryside”

***

10.ஹரே கிருஷ்ணா இயக்கக ISKCON temples  கோவில்களில் என்ன நடக்கும்?

10.கோவிலில் உள்ள மூர்த்திகளுக்கு சந்தனத்தைச் சார்ந்தும் விழா துவங்கும் இது 21 நாள் நடைபெறும்; சேவைப் பணிகளில் தொண்டர்கள் இறங்குவார்கள் விஷேஷ பூஜைகளும் பிரசாதமும் முக்கிய அம்சங்கள்.

–subham—

Tags- அக்ஷய திருதியை , ரத யாத்திரை, ஜெகன்நாத், பரசுராமர், கங்கை நதி , தங்கம் , காஞ்சி மடம்

இகிகை! வாழ்வாங்கு வாழ உதவும் கை! (Post No.14,461)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,461

Date uploaded in London – –2 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 கல்கிஆன்லைன் 26-3-25 இதழில் பிரசுரமான கட்டுரை! 

இகிகைவாழ்வாங்கு வாழ உதவும் கை! 

ச. நாகராஜன் 

ஏதோ பிறந்தோம் எப்படியோ வாழ்ந்தோம் என்று வாழ்க்கையைக் கழிப்பதை மாற்றி உயிருடன் இருப்பதற்கான காரணத்தை அறிவது தான் இகிகை.

இகிகை வாழ்க்கையை நன்கு வாழ்வதற்கான ஒரு ஜப்பானிய வழி!

இகிகை என்பதை . அப்படியே மொழி பெயர்ப்பது என்றால் “நீ காலையில் விழித்தெழுவதற்கான காரணம்” என்று சொல்லலாம்.

எதற்காக வாழ்கிறோம் என்ற நம்பிக்கையும்  வாழ்க்கை என்பதற்கு நாம் தரும் மதிப்புகளுமே இகிகை. 

ஜப்பானில் உள்ள ஓகினாவா தீவில் தான் இகிகை தோன்றியது. அங்கு தான் உலகில் நூறு வயதை எட்டிய ஏராளமானோர் இருக்கின்றனர். நூறு வயது வாழ்வை அடைய இகிகை தான் காரணமா? கான்ஸர், மாரடைப்பு, மனச்சோர்வு, இதர பயங்கர வியாதிகள் எதுவும் ஒகினாவா மக்களுக்கு ஏற்படுவதில்லை.

காரணம் – இகிகை.

இகிகை என்பது மூன்று விஷயங்களைக் கொண்டது.

§  நீங்கள், உங்கள் வாழ்க்கை என்பதற்குத் தரும் ஆதாரமான மதிப்புகள் 2) நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்கள் 3) நீங்கள் சிறந்து விளங்கும் விஷயங்கள். இவை இணைவது தான் உங்களின் இகிகை.

உங்கள் குறிக்கோளை நீங்கள் வாழ்க்கையில் இழந்து விட்டால் அது மிகவும் மோசமான விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது என்பது பல ஆய்வுகளின் முடிவுகள்.

உங்களுக்கு இயல்பாக அமைந்த திறமைகள் தான் உங்களுக்கு (இறைவனால் ) அளிக்கப்பட்ட வரங்கள்! 

உங்களுக்கு உங்களின் இகிகை- ஐக் கண்டுபிடிக்க ஆவலாக இருக்கிறதா?

அதற்கு நான்கு முக்கிய விஷயங்கள் உள்ளன:

§  நீங்கள் எதை மிக மிக அதிகமாக விரும்புகிறீர்கள்? (வெறித்தனமான ஆசை என்கிறோமே அது தான்)

§  உலகத்தின் தேவை என்ன? (அதற்கான உங்களது பணி)

§  நீங்கள் எதில் மிகவும் சிறந்து விளங்குகிறீர்கள்? (உங்களது திறமை)

§  எந்தப் பணியில் நீங்கள் சம்பாதிக்க முடியும்? (உங்கள் தொழில்)

இந்த நான்கும் இணைந்தது தான் உங்களது இகிகை!

இதை மட்டும் நீங்கள் கண்டுபிடித்து விட்டால் சந்தோஷமாக நீண்ட காலம் நீங்கள் வாழலாம். அதாவது உங்கள் இகிகை-ஐ கண்டுபிடிப்பது உங்களின் முதல் காரியமாக இருக்க வேண்டும்!

அதை எப்படிக் கண்டுபிடிப்பது?

நான்கு கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்:

§  எதை நான் விரும்புகிறேன்?

§  எதில் நான் சிறந்து விளங்குகிறேன்?

§  இப்போது எந்த வேலையில் எனக்குப் பணம் கிடைக்கிறது?

§  உலகத்தின் இன்றைய தேவை என்ன?

இந்த நான்கையும் இணைத்து உங்களின் இகிகை எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

அதன் வழியில் உங்களின் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளுங்கள். நீண்டகாலம் அமைதியாக சந்தோஷமாக வாழலாம். இது தான் ஜப்பானிய ரகசியம்!

இகிகையால் வெற்றி பெற்றோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஒரே ஒரு எடுத்துக்காட்டை  மட்டும் இங்கு காண்போம். குட் ஆல் (Goodall) என்ற பெண்மணிக்கு விலங்குகள் என்றால் ஒரு பிரியம். அதிலும் குறிப்பாக குரங்குகளின் மீது அவருக்கு ஒரு அபார ஈடுபாடு உண்டு. குரங்களைப் பற்றி ஆராய ஆரம்பித்த அவர் ஏராளமான அபூர்வ ரகசியங்களைக் கண்டுபிடித்தார். அவற்றைப் புத்தகங்களாக எழுதினார். உலக பிரசித்தி பெற்றார். அவரது உரைகளைக் கேட்க ஏராளமானோர் கூடினர். பணமும் புகழும் அவருக்குப் பெருகியது.

ஆக இந்த இகிகையை கடைப்பிடித்து நமது வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதோடு செலவமும் புகழும் பெற்று நீடித்த ஆயுளைக் கொண்டு திருப்திகரமான வாழ்க்கையை வாழலாம்.

இகிகை – மனிதர்கள் வாழ்வாங்கு வாழ ‘உதவும் கை’!

***