Post No. 14,429
Date uploaded in London – –24 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நூல் அறிமுகம்
கந்தபுராணத்தில் சிவபரத்துவம் – தொகுதி 1
நூலாசிரியர் : சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம்
கந்தபுராண ஞானஸபை,, கள்ளக்குறிச்சியின் வெளியீடாக வந்துள்ள நூல் கந்தபுராணத்தில் சிவபரத்துவம் – தொகுதி 1
23 கட்டுரைகள் அடங்கியுள்ள இந்த நூலை எழுதியவர் சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம் அவர்கள்.
ஶ்ரீமத் கச்சியப்ப சிவாசாரியார் பாடியருளிய கந்தபுராணம் முருகப்பெருமானது அவதாரச் சிறப்பையும், சிவபெருமானின் பரத்துவத்தையும் மேன்மையையும் தெள்ளிய தமிழ்ச் செய்யுள்களில் அருளும் நூலாகும்.
முதல் தொகுதியாக வெளிவரும் இந்த நூலில்,உள்ள அத்தியாயங்கள் கீழ் வருமாறு:
ஶ்ரீமத் கச்சியப்ப சிவாசாரியார் சிவபரத்துவம் உரைத்தல்.
அனாதி ஈசன் என்று ஶ்ரீமத் கச்சியப்ப சிவாசாரியார் சிவபரத்துவம் உரைத்தல்
ஶ்ரீ நந்தியம்பெருமான் சிவபரத்துவம் உரைத்தல்
திருமால் முதலிய பிரமாதி தேவர்கள் சிவபரத்துவம் உரைத்தல்
பிரம்மதேவன் சிவபரத்துவம் உரைத்தல்
திருமால் சிவபரத்துவம் உரைத்தல்
மன்மதன் சிவபரத்துவம் உரைத்தல்
பிரம்மன் முதலிய இந்திராதி தேவர்கள் சிவபரத்துவம் கூறல்
மால் அயன் முதலிய தேவர்கள் சிவபரத்துவம் உரைத்து வேண்டுதல்
மார்க்கண்டேயர் சிவமே பரம் என உணர்தல்
சுக்ராச்சாரியார் சிவபிரான் ஒருவரே குற்றமற்றவர் என்று சிவபரத்துவம் கூறுதல்
சிவபெருமான் ஒருவராலேயே குறை தீர்க்க முடியும் என்று ஜயந்தன் சிவபரத்துவம் உரைத்தல் (பகுதி 1)
ஜயந்தன் சிவபரத்துவம் உரைத்தல் (பகுதி 2)
சிங்கமுகாசுரன் சிவபரத்துவம் உரைத்தல்
கந்தபுராணத்தில் முருகனின் சிவதரிசன தலங்கள்
எல்லா வணக்கமும் சிவபெருமானையே அடையும் என சிவபரத்துவம் உரைத்தல்
இவ்வுலகம் சிவபெருமான் அசைவுக்குக் கட்டுப்பட்டது என்று உரைத்தல்
எவர்க்கும் மேலான ஈசன்
முப்புரமேல் நடந்தருளும் முக்கண் மூர்த்தி
சிவபெருமான் உமையோடு இல்லறம் கொண்டது உயிர்கள் பொருட்டே என்று உரைத்தல்
ஞானப்பொடி புனையும் நாதன்
பொன்தாலிதனை அளித்தோன் புகழ் போற்றி
கந்தபுராணத்தில் சிவபரத்துவத் தொடர்கள்
கந்தபுராணத்தில் சிவபெருமானின் சிறப்புமிகு திருநாமங்கள்
கந்தபுராண ஞானஸபை ஆற்றிவரும் பணிகள் மற்றும் தொண்டுகள் பற்றிய ஒரு குறிப்பையும் நூலின் இறுதியில் காணலாம்.
கந்தபுராணத்தில் சிவபரத்துவத் தொடர்கள் அத்தியாயத்தில் 436 சிவபரத்துவத் தொடர்களைக் கண்டு பிரமிக்கலாம்.
கந்தபுராணத்தில் சிவபெருமானின் சிறப்புமிகு திருநாமங்கள் அத்தியாயத்தில் 118 அருமையான சிவபிரானின் நாமங்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது.
கந்தபுராண செய்யுள்கள் ஆங்காங்கே மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளது.
கந்தபுராணத்தை நன்கு ஆராய்ந்து காலத்திற்கேற்றபடி இப்படி ஒரு நூலைத் தொகுத்து வழங்கியுள்ள சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம் அவர்கள் நமது பாராட்டுக்கு உரியவர்.
இந்நூலுக்கு அருள்வாழ்த்துரையை கல்யாணபுரி என்கிற கூனம்பட்டி ஆதீனம் 57வது குருமஹா சந்நிதானம் அவர்களும், பெங்களூர் ஶ்ரீஶ்ரீ வேதாகம ஸம்ஸ்கிருத மஹா பாடசாலை முதல்வர் அவிநாசி சிவஶ்ரீ எஸ். சுந்தரமூர்த்தி சிவாசாரியார் அவர்களும், திருப்பனந்தாள் காசித் திருமடம் ஶ்ரீலஶ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் அவர்களும் தந்து சிறப்பித்துள்ளனர்.
அணிந்துரையை குளித்தலை சீகம்பட்டி சைவ.சு.இராமலிங்க ஐயா அவர்கள் அளித்துள்ளார்.
நூலின் விலை ரூ 150 பக்கங்கள் 144
கிடைக்குமிடம்: கந்தபுராண ஞானஸபை, கள்ளக்குறிச்சி, 606213
தொலைபேசி எண்: 97518 48933
**





















































































































