Pictures are takn from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
collected from popular national dailies and edited for broadcast.
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 31-ம் தேதி 2025-ம் ஆண்டு .
warning to Kerala, Tamil Nadu Chief Ministers
Brass Plate Ganesh
Annamalai warning to Anti Hindu Politicians
****
15சதவீதம் சரிவை கண்ட ஹிந்து மக்கள் தொகை: சம்பல் வன்முறை விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி
சுதந்திரத்திற்கு பின்னர் உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் ஹிந்து மக்கள் தொகை, 15 சதவீதம் சரிவை கண்டுள்ளதாக, 2024- சம்பல் வன்முறை குறித்த குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பல் வன்முறையை விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தேவேந்திர அரோரா தலைமையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஏ.கே. ஜெயின் மற்றும் அமித் பிரசாத் உறுப்பினர்களாக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த விசாரணைக்குழு, தனது அறிக்கையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பித்துள்ளது. 450 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, நவம்பர் 24, 2024 மோதல்களை மட்டுமல்ல, சம்பலில் நடந்த கலவரங்களின் வரலாறு, சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் வகுப்புவாத அரசியலின் பங்கு ஆகியவற்றையும் உள்ளடக்கி குறிப்பிடப்பட்டிருந்தது.
விசாரணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
1947 முதல் இப்பகுதியில் ஹிந்து மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்தின் போது, சம்பல் நகராட்சிப் பகுதியில் ஹிந்துக்கள் 45 சதவீதம் பேர் இருந்தனர். அது தற்போது15 லிருந்து 20 சதவீதமாக சரிந்துள்ளது. சுதந்திரத்தின்போது, 55 சதவீதமாக இருந்த முஸ்லிம்கள், தற்போது 85 சதவீதம் பேர் உள்ளனர்.
1947 முதல் சம்பல் 15 கலவரங்களைக் கண்டுள்ளது,
சம்பலில் ஒரு காலத்தில் 68 புனித யாத்திரைத் தலங்களும் 19 புனித கிணறுகளும் இருந்ததாகவும், அவற்றில் பல காலப்போக்கில் ஆக்கிரமிக்கப்பட்டது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம் அவற்றை மீண்டும் கட்டுவதற்கான திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
*****
பெரிய கோயில்களில் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் – சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களில் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கோபுரம் முன்பு, 6 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்ட அறநிலையத் துறை அனுமதியளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில், வணிகவளாகம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட போவதில்லை என அறநிலையத்துறை ஏற்கனவே உத்தரவாதம் அளித்திருந்தது.
இந்த வழக்கு விசாரணையில், திருவண்ணாமலை ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது குறித்த மாற்றுத் திட்டத்தின் அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அறநிலையத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்று 2 வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், கோயிலுக்கு அருகே அரசு புறம்போக்கு நிலமாகவே இருந்தாலும் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களில் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என இந்து சமய அறநிலையத்துறைக்கு அறிவுறித்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
****
எந்த கோவில் நிதியிலிருந்தும் கட்டடங்கள் கட்டுவது.. கூடாது! ஐகோர்ட் உத்தரவு
மதுரை : பழனி தண்டாயுதபாணி கோவில் நிதியில் இருந்து திருமண மண்டபம் கட்டும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த ஐகோர்ட் கிளையின் உத்தரவை சுட்டிக்காட்டி, ‘கோவில் நிதியை, அரசு நிதியாக கருத முடியாது. அந் நிதியை மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கோவில்களுக்கு சொந்தமான நிதியிலிருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் என, பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்களை அமைக்கும் தமிழக அறநிலையத்துறையின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
கோவில்களுக்கு சொந்தமான நிதியிலிருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அமைக்க அறநிலையத்துறை, 2021 – 2022ல் அறிவிப்பு வெளியிட்டது; இது அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது.
கோவில் நிதியை, ஹிந்து மத கொள்கைகளை பரப்புதல், அர்ச் சகர், ஓதுவார் பள்ளிகளை நிறுவுதல், ஹிந்து மதம், தத்துவம் அல்லது சாஸ்திரங்கள் ஆய்வு அல்லது கோவில் கட்டடக்கலை பயிற்றுவிக்கும் பல்கலை, கல்லுாரியை நிறுவுதல், ஹிந்து குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் இல்லங்கள், பக்தர்களின் நலனுக்கான மருத்துவமனைகள், மருந்தகங்கள் நிறுவ பயன்படுத்த வேண்டும்.
திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அமைக்கும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதுபோல், மேலும் சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து கோவில்களுக்கு நிதி வசூலிக்கப்படுகிறது. மத நோக்கங்களுக்காக அல்லது திருவிழாக்கள் நடத்த அல்லது கோவில்களின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக நன்கொடை வழங்கப்படுகிறது.
கோவில் நிதியை பொது அல்லது அரசு நிதியாக கருத முடியாது. அதை பொது நோக்கங்களுக்காக அரசின் நிதியாக பயன்படுத்த முடியாது.
எந்த கோவில் நிதியிலிருந்தும் கட்டடங்கள் கட்டுவது.. கூடாது!
****
குருவாயூர் கோவில் குளத்தில் முஸ்லீம் பெண் கால் கழுவி வீடியோ வெளியிட்டார்
குருவாயூர்: மாற்று மதத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கோவில் குளத்தில் இறங்கி வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிட்டதை தொடர்ந்து குருவாயூர் கோவிலில் பரிகார பூஜை தொடங்கியுள்ளது
.குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்தக் கோவில் புனித குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜாஸ்மின் ஜாபர் என்ற இளம் பெண் ரீல்ஸ் பதிவு செய்து வெளியிட்டார்.சோசியல் மீடியா பிரபலமான அந்தப் பெண் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். குருவாயூர் கோவிலில் ஹிந்து அல்லாத பிற மதத்தவர்களுக்கு அனுமதி கிடையாது.
அப்படி இருந்தும் ஜாஸ்மின் ஜாஃபர் ரீல்ஸ் பதிவு செய்து வெளியிட்டது பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலில் வெவ்வேறு வகையான பரிகார பூஜைகள் நடந்து வருகின்றன. இதனால் மதியம் வரை பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆறு நாட்களுக்கு இந்த பூஜை தொடரும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிகார பூஜை நடக்கும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
.
***
அய்யப்ப சங்கமத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு: பாரதீய ஜனதாக கட்சி எதிர்ப்பு
கேரள மாநிலம், பம்பையில்செப்டம்பர் 20ஆம் தேதி நடக்கும் உலக அய்யப்ப சங்கமத்தில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த அம்மாநில அரசுக்கு பாரதீய ஜனதாக கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
,அடுத்த மாதம் 20ல் கேரளாவின் பம்பையில் உலக அய்யப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைக்கிறார்.
‘இந்த விழாவில் பங்கேற்க அண்டை மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்’ என தேவசம் போர்டு அமைச்சர் வாசவன், கடந்த 21ல் தெரிவித்திருந்தார்.
இதையொட்டி, சென்னை வந்த கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அய்யப்ப சங்கம விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
இதற்கு கேரள பாரதீய ஜனதாக கட்சி தலைவர் ராஜீவ் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
********
1 லட்சம் ஏக்கர் கோவில் சொத்துகளை இழந்துள்ளோம்: அண்ணாமலை
”1986 ஆம் ஆண்டிலிருந்து இப் போது வரை 1 லட்சம் ஏக்கர் கோவில் சொத்துக்களை நாம் இழந்துள்ளோம். திருச்செந்தூரில் கோவிலுக்கு கொடுத்த 16 ஆயிரம் மாடுகளைக் காணவில்லை,” என தமிழக பாரதீய ஜனதாக கட்சி முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. விழாவில் அண்ணாமலை பேசியதாவது:
விநாயகர் சிலையை உடைத்தவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவில் சாதி பார்ப்பது கிடையாது. பணக்காரன் பார்ப்பது கிடையாது. அனைவரையும் ஒருங்கிணைக்கும் விழாவாக உள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் கேரள மாநிலம் பம்பாவில் அனைத்துலக ஐயப்பன் மகாநாட்டினை கம்யூனிஸ்ட் அரசு நடத்துகிறது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினர். அவரை கேரளாவில் கால் வைக்க விட மாட்டோம் என்றோம். உடனே ஒரு அரசு விழாவை ஏற்பாடு செய்து எனக்கு பதிலாக அமைச்சர் தியாகராஜன் கலந்து கொள்வார் என ஸ்டாலின் சொல்கிறார்.
4.78 லட்சம் ஏக்கர் கோவில் சொத்தினால் வரக்கூடிய வருமானம் குறித்து தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் ஹிந்து அறநிலைத்துறை இதுவரை சி.ஏ.ஜி.க்கு எந்த ஆவணமும் கொடுக்கவில்லை. ஆய்வு நடத்தப்படவில்லை. கோவில்களில் தங்கம் எவ்வுளவு உள்ளது போன்ற சொத்துக்களின் விவரங்களை யும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். என்று அண்ணாமலை கூறினார்.
****
திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனை : குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கானது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோயிலுக்குள் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், கோயிலில் கூடுதல் காவலர்களைப் பணியமர்த்த தூத்துக்குடி எஸ்.பி-க்கு உத்தரவிட்டதோடு, சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
****
பித்தளைத் தட்டுகள் மூலம் விநாயகர்ச் சிலை !
சென்னை கொளத்தூரில் பித்தளைத் தட்டுகள் மூலம் செய்யப்ப்டட விநாயகர் சிலைக்கு பூஜை நடத்தப்பட்டது.
2 ஆயிரத்து 300 பித்தளைத் தட்டுகள், ஆயிரத்து 500 குங்கும சிமிழ்கள் மூலம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட 42 அடி விநாயகர்ச் சிலை வைக்கப்பட்டுப் பூஜை செய்யப்பட்டது.
இந்து இளைஞர் எழுச்சி நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுச் சாமி தரிசனம் செய்தனர்.
***
ஆந்திராவில் விநாயகர் சதுர்த்திக்காக மாநிலம் முழுதும் அமைக்கப்பட்டுள்ள 15,000 விநாயகர் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்க, மாநில அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
இவ்வாறு நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது பற்றி சுவையான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
xxxx
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
TAGS- World Hindu news bulletin, 31-8-25, Gnanamayam Broadcast
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
31-8-25 அன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை
திருப்பெருந்துறை
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட
முழுதும் தருவோய் நீ,
வேண்டும் அயன் மாற்கரியோய் நீ, வேண்டி
என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீயாதருள் செய்தாய், யானும்
அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும்
உன்றன் விருப்பன்றே
மாணிக்கவாசகர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது திவ்வியத் திருத்தலமான திருப்பெருந்துறை தலமாகும்.
இன்று இது ஆவுடையார் கோவில் என்று வழங்கப் பெற்று வருகிறது. இத்திருத்தலம் மயிலாடுதுறை – காரைக்குடி புகைவண்டிப் பாதையில் அறந்தாங்கிக்குத் தென்கிழக்கில் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
இதற்கு அநாதி மூர்த்தித் தலம், ஆதிகைலாயம், உபதேசத் தலம், குருந்தவனம், சதுர்வேதபுரம், ஞானபுரம், திரிமூர்த்திபுரம், தட்சிண கைலாயபுரம் உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு. இத்தலத்தை திருவாசகம், சிவபுரம் என்று குறிப்பிடுகிறது.
இறைவன் திருநாமம் : ஶ்ரீ ஆத்மநாதர்
இறைவி : ஶ்ரீ யோகாம்பிகை
தல விருக்ஷம் : குருந்த மரம். வெளி மதிலை ஒட்டினால் போல அமைந்த திருமாளிகைப் பகுதியில் இரண்டு குருந்த மரங்கள் உள்ளன.
தீர்த்தம் : சிவ தீர்த்தம், அக்னி தீர்த்தம்,தேவ தீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம், அறுபத்துநான்கு கோடி தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டி தீர்த்தம், உள்ளிட்டவையாகும்.
இந்தத் திருக்கோவிலில் பல தனிச் சிறப்புகள் உள்ளன. இங்கு உருவம் இல்லை. கொடி மரம் இல்லை. பலி பீடம் இல்லை. நந்தி இல்லை. சண்டேசர் சந்நிதியும் இல்லை.
இங்கு தீப ஆராதனை சமயத்தில் மற்ற கோவில்கள் போலத் தொட்டு வணங்கும் பழக்கமும் இல்லை. மணிவாசகர் ஜோதியில் கலந்துள்ளார் என்பதால் இந்தப் பழக்கம் இங்கு இல்லை.
இங்கு மூலஸ்தானத்தில் அமுது மண்டபத்தில் ‘படை கல்’ என்னும் ஒரு திட்டுக்கல் உள்ளது. இதன் உயரம் 3 அடி. நீளம் 7 அடி. அகலம் 6 அடி ஆகும். இது ஒரே பாறைக்கல்லால் ஆனது. இங்கு தான் ஆறு கால பூஜைக்கும் உரித்தான அமுதை படைத்து வடித்து ஆற வைக்கின்றனர்.
மற்ற ஆலயங்கள் போல பச்சை அரிசி அல்லாமல் இங்கு புழுங்கல் அரிசியே நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஆறு கால பூஜைக்கும் தொடர்ந்து நைவேத்திய அமுது படைத்துக் கொண்டே இருப்பதால் இங்குள்ள அடுப்பு அணைந்ததே இல்லை.
இத்திருத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
சிவபிரான் மஹாவிஷ்ணுவிற்கு ‘வேதம் நானே’ என்று உபதேசித்த தலம் இது.
அகத்திய முனிவர் உள்ளிட்ட ஏராளமான முனிவர்கள் போற்றி வணங்கிய தலம் இது.
மணிவாசகருக்கு அருள் புரிந்த திருவிளையாடலாலும், சிற்ப வேலைப்பாடுகளாலும் மிகவும் பிரசித்தி பெற்ற தலம் இது.
ஶ்ரீ ஆத்மநாதரின் திருக்கோவில் தெற்கு நோக்கி உள்ளது. உள்ளே மூன்று பிரகாரங்கள் உள்ளன. இறைவன் உருவம் இல்லாமல் அருவமாகவே எழுந்தருளியிருக்கிறார்.
ராஜகோபுரம் ஏழு நிலைக் கோபுரமாக அமைந்துள்ளது.
இங்கு ராஜகோபுர வாயிலுக்கு வெளியே அதனை ஒட்டினாற் போல ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இதன் தெற்கு முகப்புத் தூண்களில் நரசிம்மர், காளி, ஊர்த்வ தாண்டவர், பிட்சாடனர், வேலேந்திய முருகன், ரிஷபாந்தகர், சங்கரநாராயணர் ஆகிய ஏழு சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் தெற்கில் உள்ள இரண்டு பெரிய தூண்களில் அகோர வீரபத்திரர், அக்கினி வீரபத்திரர் சிற்பங்கள் உள்ளன. வடக்கில் துவாரபாலகர் சிலைகளும், மற்றுமுள்ள நான்கு தூண்களில் நான்கு குதிரை வீரர்களின் சிற்பங்களும் உள்ளன.
மூன்றாம் பிரகாரத்தில் நான்கு கால் மண்டபத்தில் வெயிலுகந்த விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவரை முதலில் வணங்கிய பிறகே கோவிலுக்குள் சென்று வழிபட வேண்டும் என்பது மரபாகும்.
இங்குள்ள தியாகராஜ மண்டபம், ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டபம், பஞ்சாட்சர மண்டபம் ஆகியவை பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளன.
மூன்றாம் பிரகாரத்தில் மணிவாசகரின் மூலவர் கோவில் உள்ளது.
இன்னும் தில்லை மண்டபம், சுந்தரபாண்டியன் மண்டபம் ஆகிய மண்டபங்களையும் இங்கு காணலாம்.
தில்லை மண்டபத்தை அடுத்து முதல் பிரகாரத்தின் மத்தியில் ஆத்மநாதரின் மூலக்கோவில் உள்ளது. கர்பகிருஹத்தில் ஆவுடையார் பீடம் அமைந்துள்ளது. ஆவுடையாருக்குப் பின்புறச் சுவரில் 27 நட்சத்திர தீபங்களும் அதற்கு மேல் சூரிய, சந்திர, அக்கினி ஆகிய மூன்று தீபங்களும் சுடர்விடுகின்றன.
ஆத்மநாதரின் கர்பகிருஹத்திற்கு வடமேற்கில் முதல் பிரகாரத்தில் ஶ்ரீ யோகாம்பிகை அம்மனின் சந்நிதி உள்ளது. இங்கு அம்மனின் யோகபீடமும் அதன் மேல் அம்பிகையின் பாதங்களும் உள்ளன. அம்பிக்கைக்குத் திருவுருவம் இங்கு கிடையாது.
இந்தக் கோவிலை பூத கணங்கள் கட்டின என்பது ஐதீகம். கோயிலின் தாழ்வாரத்தில் உள்ள கொடுங்கைகள், சிற்ப அற்புதமாகும். ஒரே கல்லினால் ஆன கற்சங்கிலி காண்போரை வியக்க வைக்கும் சிற்பப் படைப்பாகும்.
இதர ஆலயங்களை அமைக்க வரும் பின்காலத்திய சிற்பிகள் ஆவுடையார் கோவில் சிற்பம் தவிர மற்றவற்றைத் தாங்கள் அமைப்பதாக உறுதி கூறியதிலிருந்தே ஆவுடையார் கோவில் சிற்பகளின் சிறப்பை உணரலாம்.
மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் ஒன்பதாம் நூற்றாண்டில் திருவாதவூரில் அவதரித்த சைவ சமயக் குரவர் ஆவார். பாண்டிய மன்னன் இரண்டான் வரகுண பாண்டியனின் முதல் அமைச்சராக அவர் பணி புரிந்து வந்தார்.
ஒரு சமயம் நல்ல குதிரைகள் கீழைக் கடற்கரைக்கு வந்துள்ளதை அறிந்த பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரிடம், ‘நமது பொக்கிஷத்திலிருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொண்டு சென்று குதிரைகளை வாங்கி வாருங்கள்” என ஆணையிட்டான்.
மாணிக்கவாசகரும் நிறையப் பொருளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். திருப்பெருந்துறை தலம் வந்தவுடனேயே அவர் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார். அங்கேயே தங்கி சிவத்தொண்டில் ஈடுபட்டு கொண்டு கையில் கொண்டு வந்திருந்த பொருளை எல்லாம் திருப்பணியில் செலவிட்டார். இதை அறிந்த மன்னன் உடனே அவரை வருமாறு அழைத்து அவரிடம் ‘குதிரைகள் எங்கே’ என்று கேட்க, ‘ஆவணி மூல நாளில் வரும்’ என்று பதில் உரைத்தார் மாணிக்கவாசகர்.
இறைவன் திருவிளையாடலால் நரிகள் எல்லாம் பரிகளாக மாற்றப்பட்டு அரசனிடம் காண்பிக்கப்பட்டன. ஆனால் நடுநிசியில் குதிரைகள் நரிகளாக மாற மன்னன் மாணிக்கவாசகரை சுடுகின்ற வெயிலில் நிறுத்தினான்.
அப்போது உடனே வைகை ஆற்றில் பெருவெள்ளம் தோன்றியது. ஆற்றின் கரையை அடைக்க மன்னன் அனைவரையும் வருமாறு அழைக்கவே சிவபிரான் பிட்டுக்கு மண் சுமந்த லீலையை நடத்தினார். கூலியாளாக வந்த சிவபிரான் உறங்குவதைக் கண்ட மன்னன் அவரை பிரம்பால் அடிக்க அது உலகில் வாழும் அனைவரின் மீதும் பட்டது. அப்போது வானிலிருந்து எழுந்த அசரீரி ஒலி இறைவனது திருவிளையாடலை உணர்த்த பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரின் பெருமையை உணர்ந்தான்.
அவரும் இறைவனின் திருவிளையாடலை எண்ணி மகிழ்ந்து போற்றி இறைப்பணியில் ஈடுபடலானார்.
மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்துள் 51 பகுதிகள் உள்ளன. அவற்றில் 20 பகுதிகள் இந்தத் தலத்திலிருந்தே அருளிச் செய்யப்பட்டவையாகும். இந்தத் தலத்தில் அருணகிரிநாதர் மூன்று திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். ஶ்ரீ சாத்திரம் சாமிநாதப் புலவர் என்பவர் 1270 செய்யுள்கள் அடங்கிய திருப்பெருந்துறைப் புராணத்தை இயற்றியுள்ளார்,
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து அருளும் ஶ்ரீ ஆத்மநாதரும் ஶ்ரீ யோகாம்பிகையும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
தினமணி 17-8-25 நாளிதழில் கொண்டாட்டம் பகுதியில் பிரசுரமாகியுள்ள கட்டுரை!
TRENDING SPACE NEWS
தலைக்கு மேலே சுற்றுகின்ற சாடலைட்டுகள் எத்தனை தெரியுமா?
ச. நாகராஜன்
இன்று நம் தலைக்கு மேலே சுற்றுகின்ற சாடலைட்டுகள் எத்தனை தெரியுமா?
2025 மார்ச் மாத கணக்குப் படி 14904 சாடலைட்டுகள் விண்ணில் ஏவி விடப்பட்டு சுற்றி கொண்டிருக்கின்றன.
எல்லாமே எர்த் ஆர்பிட் எனப்படும் பூமியின் சுற்றுப்பாதையில் சுழலவில்லை. சில சந்திரனுக்கும், சூரியனுக்கும், எரிநட்சத்திரங்களுக்கும் இதர கிரகங்களுக்கும் சென்று கொண்டிருக்கின்றன.
விண்வெளிக்கு மொத்தமாக இதுவரை 20985 விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன
2021ல் மட்டும் 30 நாடுகளால் அனுப்பப்பட்ட 4550 சாடலைட்டுகள் பூமியின் ஓடுபாதையில் சுற்றிக் கொண்டிருந்தன. இதில் அமெரிக்கா 2804 சீனா 467, யுனைடெட் கிங்டம் 349 ரஷியா 168, ஜப்பான்93, இந்தியா 61 என்ற எண்ணிக்கையில் சாடலைட்டுகளை விண்ணில் பறக்கவிட்டிருந்தன.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாடலைட்டுகள் எதற்காக விண்ணில் ஏவப்படுகின்றன?
டெலி கம்யூனிகேஷன் எனப்படும் தகவல் தொடர்புக்காகவும், பூமியை இடைவிடாது கண்காணிக்கவும், தொழில்நுட்ப மேம்பாட்டிற்காகவும்,பூமியில் ஆங்காங்குள்ள இடங்களுக்கு வழிகாட்டவும், பாதையைக் காட்டி வழி நடத்திச் செல்லவும், தொழில்நுட்பங்களை டெமோ செய்து காட்டவும், பூமி பற்றிய அறிவியலுக்காகவும், விண்வெளியை ஆராயவும், விண்வெளி அறிவியலுக்காகவும் இவை செலுத்தப்படுகின்றன.
இவற்றில் 63 சதவிகிதம் தகவல் தொடர்புக்காக அனுப்பப்பட்டவையே.
எல்லா சாடலைட்டுகளும் இயங்குகின்றனவா?
சொல்ல முடியாது. பல செயலற்று விட்டன. சில பூமிக்கு குறிப்பிட்ட காலக் கெடுவில் திரும்பி வருகின்றன. இப்படி பல காரணங்கள் உண்டு.
கடந்த 63 மாதங்களில் 56.95 சதவிகிதம் சாடலைட்டுகள் அதாவது 11951 சாடலைட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன!
ஏன் இந்த அளவுக்கு சமீப வருடங்களில் அதிகமாக சாடலைட்டுகள் விண்ணில் ஏவப்பட்டன?
இதற்கான காரணம் க்யூப்சாட்ஸ் என்னும் மிக குட்டி சாடலைட்டுகள் மற்றும் சிறிய சாடலைட்டுகள் தயாரிக்கப்பட்டதால் தான்.
முதல் முதலாக ஸ்புட்னிக் விண்ணில் ஏவப்படும் போது அதன் எடை 183, 9 பவுண்டாக இருந்தது. ஆனால் தொழில்நுட்பம் மேம்பட்டு விட்டதால் இப்போது 100 மிலிமீட்டர் அதாவது நான்கு அங்குல அளவில் கூட க்யூப்சாட் எனப்படும் சாடலைட்டுகள் உருவாக்கப்படுகின்றன. எடையோ வெறும் 4.4 பவுண்டுகள் தான்!
இவற்றை உருவாக்கும் செலவும் குறைவு தான்!
ஒரு கியூப்சாட்டை தயாரிக்க ஆகும் செலவும் 50000 டாலரிலிருந்து ஒரு லட்சத்தி ஐம்பதினாயிரம் டாலர் வரை ஆகிறது. (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 87.60 ரூபாய் ஆகும்.
குறிப்பிடத்தக்க அளவில் சாடலைட்டுகளை விண்ணில் ஏவுவது ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் தான்.
சரி, இந்தத் தகவல்களை எல்லாம் திரட்டித் தருவது யார்?
யுனைடெட் நேஷன்ஸ் ஆபீஸ் ஃபார் அவுடர் ஸ்பேஸ் அஃபேர்ஸ் எனப்படும் ஐக்கிய நாடுகளின் விண்வெளி விவகாரங்களுக்கான அலுவலகம் தான் (UNOOSA)!
விண்வெளியில் ஏற்படக்கூடிய குப்பைகள் என்னென்ன சேதத்தை விளைவிக்கக் கூடும் என்று 1978ல் ஆராய்ச்சி நடத்திய நிபுணரான டான் கெஸ்லர் என்பவர் ஒன்று இன்னொன்றுடன் மோதி ஏராளமான அளவில் குப்பைகள் சேரும்; இது பூமிக்கே அபாயம் என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கு கெஸ்லர் சிண்ட்ரோம் (Kessler Syndrome) என்று பெயர்.
அது விரைவில் வந்து விடுமோ என்று உலக விஞ்ஞானிகள் பயப்படுகின்றனர் இப்போது!
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது!
தலைக்கு மேலே அபாயம் சுற்றிக் கொண்டே இருக்கிறது என்றால் யாரால் தான் தூங்க முடியும், சொல்லுங்கள்!***
(எட்டு சர்க்கங்களுக்கு மேலுள்ள குமார சம்பவ சர்க்கங்கள் பிற்காலத்தில் வேறு புலவர்களால் சேர்க்கப்பட்டது என்பது அறிஞர்களின் கூற்று . ஆயினும் நான் மேலே கொடுத்துள்ளேன்.)
Sura/Deva+ Aaaranangu/beauty
அணங்கு , நங்கை, சுராங்கனி (தேவ லோக அழகி, நங்கை)
சுர + ஆரணங்கு= சுராங்கனி
அணங்கே விலங்கே கள்வர் தம் இறை என
பிணங்கல் சாலா அச்சம் நான்கே (தொல்காப்பியம் 1202)
உரை
சூர் அர மகளிர் ஆரணங்கே (சுராங்கனி )- யாப்பருங்கல விருத்தி உரை மேற்கோள்
***
अमुम्सहासप्रहितेक्षणानि
व्याजार्धसंदर्शितमेखलानि।
नालम्विकर्तुम्जनितेन्द्रशङ्कम्
सुराङ्गनाविभ्रमचेष्टितानि॥ १३-४२ ரகுவம்சம்
சுதீக்க்ஷ்ண முனிவரின் தவத்தைக் கலைக்க இந்திரன் சுராங்கணாக்களை அனுப்பினான். அவர்கள் புண் சிரிப்புடன் பார்த்தனர் இடையில் உள்ள மேகலைகள் நழுவுவது போல பாவனை செய்து இடையைக்காட்டினர் அப்படியும் அந்த சுராங்கணாக்கள் / அணங்குகள் முனிவரின் தவத்தை கலைக்க முடியவில்லை .
அணங்கு என்ற சொல் சங்க இலக்கியத்தில் எண்ணற்று இடங்களில் வருகிறது ; கடல், மலை, நீர் நிலைகள், இசைக்கருவிகள் முதலியவற்றில் வருத்தத்தைத் தரக்கூடிய அணங்குகள் வசிப்பதாக சங்கத் தமிழர்கள் நம்பினார்கள் . இவர்களை தேவ லோக நங்கைகளுடன்தான் ஒப்பிட முடியும்
மதுரை மருதை ஆவது போல குதிரை குருதை ஆவது போல அங்கணா, அணங்கு ஆகும்
அங்க என்பது நங்கை, அணங்கு என்றும் மாறி இருக்கலாம்
எடுத்துக்கட்டாக சுரா= தேவலோக ;அங்கணி = அழகி= சுரா ங்கணி என்று காளிதாசரும் சிங்கள மக்களும் பயன்படுத்துகின்றனர்.
***
பாட்டு
சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா
சுராங்கனி
சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா
மாலு மாலு சுராங்கனிகா மாலு கெனவா
சுராங்கனி என்றால் தேவ லோக அப்சரஸ் போன்று அழகுடைய பெண்; .இதைத் தமிழில் அர மகளிர் அல்லது சூரர மகளிர் என்று பயன்படுத்தியுள்ளனர் காளிதாசன் அப்படியே சுராங்கனி என்று பயன்படுத்தியுள்ளான்.
அவுணர் – KURU-1, THIRU 59;PATHI 11-4; PARI 5-7; 8-8; PURAM 174,; MADU 590; PARI 3-56; KALI 2-3
Pictures are takn from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
30 One Thousand Proverbs on Women, Wives and Daughters- part 30
Why do I publish 1000 proverbs on women collected from different cultures? This is to teach a lesson to the Anti Manu Smrti idiots in the universities. Millions of women were burnt alive during the witch hunting by Christians. But the world knows only one Joan of Arc. In the whole wide world, greatest Tamil poet Bharati is the only one who never criticised women but praised them sky-high. Next comes Manu Smriti.
Hence men who seek (their own) welfare, should always honour women on holidays and festivals with (gifts of) ornaments, clothes, and (dainty) food.—(59)
(Manu also said women’s all body parts are always pure)
901.
A good husband may have a bad wife, and a bad husband may have a good wife.
When a faithful wife finds a good thing, she will keep it for her husband.
Hunger is preferrable to eating food given without good feeling, a demoness is better than an unkind wife.
A hasty man loses the produce of this field, and the jealous man his wife.
It is said that the wife of a mat-maker died on the bare ground.
Like obtaining a wife for Ganesha.
A sumptuous cloth is not required in one’s native village, nor a tali where one is known as a wife.
Like the younger brother of the husband, rebuking him for beating his wife.
As the man who had no wife embraced a demoness.
A cuff for the man who left his wife at her mother’s.
911
Fettered with a wife, and muzzled with a child.
Enough of taking a wife and suffering the consequences.
Having gone to take a wife, can you turn back because marriage is expensive?
For a wife, a mother-in-law, for a boy, a tutor.
Did she give one a wife, or did she give one her eye ?
Are you content to lose your mother in order to pardon your wife?
Having married a wife the boy has become a fool, having given birth to a child the damsel has become mean in appearance.
Not knowing that his wife is affected with dropsy, he has fixed upon a day for the performance of her simantham ceremony. A ceremony relating to the first pregnancy, including bathing, the parting of the hair in the middle of the forehead, putting jewels, &c., &c
One may take a demon but not take a wife.
921
It is said that when a brahman who was equal to a mountain was dying, his wife was weeping for his tuft of hair.
A wife gets up before day-break and looks after her domestic affairs.
Do not disclose your secrets to your wife, nor trust an enemy at any time.
A stubborn wife, a mat rolled up.
The one that nursed and brought up the child is Mudevi, the wife is Shridevi.
(Goddess of wealth= Sri Devi; Goddess of Misfortune= Muudevi.)
A bamboo mat, and an obstinate wife.
Live with your wife.
She who was looking at the mouth, became a widow : and he who watched the house, lost his wife.
If in the house she is bell-metal wife, if she goes abroad, she is a slumbering wife.
A wife gives beauty to a house.
931.
Another name for a wife is the mistress of the house.
The wife is a margosa tree, the mistress sugar-cane.
Enjoy the convenience of a house after building it, and the happiness of the conjugal state, after marrying a wife.(meaning is Both are difficult to do)
Shame in a prostitute, and want of modesty in a wife, are equally out of place.
Are a maid servant and a wife, on an equality?
A wife not liked offends, whether she touches with the hand, or with the foot.
Being without work, the barber is said to have shaved his wife’s head.
****
PROVERBS ON DAUGHTERS
Having ascertained the character of the family give your daughter.
Though again and again forbidden, Patti-a strumpet-brought forth only daughters.
941. The daughter reproached her mother and went astray.
Look at the mother before you take her daughter in marriage.
If the mother leaps seven feet, the daughter leaps eight.
That which is the mother’s, is the daughter’s. This may refer to prosperity, temper, &c.
Can the conception of an unmarried daughter be concealed from her mother?
The mother is dead, the daughter is destitute.
Who will approve of a daughter that is undutiful to her own mother?
She herself desires to prosper, and wishes that her first-born daughter may become a widow.
Daughter, if you find him rich, cling to hire.
O, my daughter-in-law, who art – entertaining me sumptuously, I dreamt that thou wast being dissected by a pariah.
951.
Give alms to the worthy, and your daughter to one of a good family.
Do you propose giving your daughter in marriage to one who came to ask alms?
The rat lives to see its grand-sons and grand-daughters in a place where there is a cat.
Though the daughter-in-law is made of gold, she must have a mother-in-law made of earth.
The mother, having given advice to her daughter, played the harlot.
The daughter is dead, the mother is become destitute.
If the daughter die her remains are regarded as a pinam; if the son, his corpse is a savam.
No matter if my son should die, it will suffice if the arrogance of my daughter-in-law is checked.
If broken by the mother-in-law it is an earthen vessel, if by the daughter-in-law, it is a golden vessel.
Like the wailing of a daughter-in-law, on account of the death of her mother-in-law.
961.
When the daughter who lives in affluence pays a visit, let her be seated on a fine mạt; when she who is reduced to poverty comes seat her on an old ma
Why, my daughter, are you crying there for kanji ? come hither and you may fly as the wind. Spoken of a proffered change which may be for the worse.
If my elder brother has a daughter, my paternal aunt becomes an alien.
While the hawk snatches away the father’s waist-cloth his daughter is crying for a silk dress.
Said in reproof when wishes are entertained beyond one’s means.
Why enquire after the relationship of the daughter of one’s maternal uncle ?
unexceptionable course of life gave his daughter in marriage to the village Pariah.
No matter how skilled a woman may be in numbers and letters, her judgment will be second rate.
971.
My daughter bathes once a week, my son-in-law bathes at depaveli (once a year).
My daughter, why is your hand in the basket while you embrace and weep?
-Tamil Proverbs
To be continued……………………..
Tags- Proverbs on women, 1000, Tamil, Part 30, Manu, Hindu Views.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Festivals:
· Onam – September 5
· Chandra grahana-lunar eclipse -7
· Pitru Paksha Shradh Begins – September 8
· Bharatiyar Memorial Day 11
· Mahalaya Amavasyai – September 21
· Navratri Begins – September 22
· Durga Ashtami – September 30
Pitru Paksha is a 16-day period dedicated to honouring ancestors.
Ekadasi fasting days- 3,17; Auspicious day -4;
****
Quotes are taken from website; for more quotations please go to the website.
September 1 Monday
Beauty is spoiled by an immoral nature; noble birth by bad conduct; learning, without being perfected and wealth by not being properly utilised.
***
September 2 Tuesday
Low class men desire wealth; middle class men both wealth and respect; but the noble, honour only; hence honour is the noble man’s true wealth.
***
September 3 Wednesday
Those base men who speak of the secret faults of others destroy themselves like serpents that stray onto anthills.
***
September 4 Thursday
The power of a king lies in his mighty arms;that of a brahmana in his spiritual knowledge; and that of a woman in her beauty youth and sweet words.
***
September 5 Friday
Swans live wherever there is water, and leave the place when water dries up; let not a man act so — and comes and goes as he pleases.
***
September 6 Saturday
Accumulated wealth is saved by spending just as incoming fresh water is saved by letting out stagnant water.
***
September 7 Sunday
He who has wealth has friends and relations; he alone survives and is respected as a man.
***
September 8 Monday
She is a true wife who is clean (suci), expert, chaste, pleasing to the husband, and truthful.
***
September 9 Tuesday
When one is consumed by the sorrows of life, three things give him relief: offspring, a wife, and the company of the Lord’s devotees.
***
September 10 Wednesday
Learning is like a cow of desire. It, like her, yields in all seasons. Like a mother, it feeds you on your journey. Therefore learning is a hidden treasure.
***
September 11 Thursday
As long as your body is healthy and under control and death is distant, try to save your soul; when death is imminent what can you do?
***
September 12 Friday
He who runs away from a fearful calamity, a foreign invasion, a terrible famine, and the companionship of wicked men is safe.
***
September 13 Saturday
Do not keep company with a fool for as we can see he is a two-legged beast.Like an unseen thorn he pierces the heart with his sharp words.
***
September 14 Sunday
At the time of the pralaya (universal destruction)the oceans are to exceed their limits and seek to change, but a saintly man never changes.
***
September 15 Monday
He who befriends a man whose conduct is vicious, whose vision impure, and who is notoriously crooked, is rapidly ruined.
***
September 16 Tuesday
Avoid him who talks sweetly before you but tries to ruin you behind your back, for he is like a pitcher of poison with milk on top.
***
September 17 Wednesday
Even if a snake is not poisonous, it should pretend to be venomous.
***
September 18 Thursday
Never make friends with people who are above or below you in status. Such friendships will never give you any happiness.
***
September 19 Friday
As soon as the fear approaches near, attack and destroy it.
***
September 20 Saturday
The earth is supported by the power of truth; it is the power of truth that makes the sun shine and the winds blow; indeed all things rest upon truth.
***
September 21 Sunday
The world’s biggest power is the youth and beauty of a woman.
***
September 22 Monday
Purity of speech, of the mind, of the senses, and the of a compassionate heart are needed by one who desires to rise to the divine platform.
***
September 23 Tuesday
When there are many enemies, treaty should be entered into with one.
***
September 24 Wednesday
A thing may be dreaded as long as it has not overtaken you, but once it has come upon you, try to get rid of it without hesitation.
***
September 25 Thursday
The learned are envied by the foolish; rich men by the poor; chaste women by adulteresses; and beautiful ladies by ugly ones.
***
September 26 Friday
Learning is a friend on the journey; a wife in the house; medicine in sickness; and religious merit is the only friend after death.
***
September 27 Saturday
The poor wish for wealth; animals for the faculty of speech; men wish for heaven; and godly persons for liberation.
***
September 28 Sunday
By means of hearing one understands dharma, malignity vanishes, knowledge is acquired, and liberation from material bondage is gained.
***
September 29 Monday
Time perfects all living beings as well as kills them; it alone is awake when all others are asleep. Time is insurmountable.
***
September 30 Tuesday
He who gives up shyness in monetary dealings, in acquiring knowledge, in eating and in business, becomes happy.
–Subham-
Tags-Sayings , Arthasastra , Chanakya, Kautilya, Quotations, September 2025, Calendar
உலகின் அரிய கடல் வாழ் உயிரினமான நீலத் திமிங்கிலத்தின் பாடல் ஓசை குறைந்து கொண்டே வருகிறது. திடுக்கிட வைக்கும் இந்த உண்மையைக் கூறும் விஞ்ஞானிகள் உடனடியாக இந்த உயிரினத்தைக் காப்பாற்ற தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.
உலகளாவிய விதத்தில் சுமார் 25000 நீலத் திமிங்கிலங்கள் வாழ்கின்றன என்று இண்டர்நேஷனல் யூனியன் ஃபார் கன்ஸர்வேஷன் ஆஃப் நேச்சரின் அறிக்கை கூறுகிறது.
திமிங்கிலத்தின் எண்ணெய்க்காக அவற்றைக் கொல்வது கடந்த நூறாண்டுகளில் அளவுக்கு அதிகமானது. சுமார் 3,80,000 திமிங்கிலங்கள் இதற்காகக் கொல்லப்பட்டன என்பது திடுக்கிட வைக்கும் ஒரு உண்மை.
இப்போது கடல் முழுவதும் புவி வெப்பமயமாதலால், -உஷ்ண அலைகளால் பாதிக்கப்படுவதால் – மீன்கள் கூட்டம் அருகி விட்டது.
இதனால் நீலத் திமிங்கிலங்களுக்கு உணவுப் பற்றாக்குறை வேறு ஏற்பட்டு விட்டது.
ஒரு திமிங்கிலத்தின் எடை சுமார் 200 டன்கள் ஆகும் .பிறந்த குட்டித் திமிங்கிலத்தின் எடை 2700 கிலோகிராம் ஆகும். நீளம் 8 அடி. ஆகும். வளர்ந்த போது இதன் நீளம் 108 அடியாக இருக்கும். இதன் ஆயுள் காலம் 90 முதல் 110 வருடங்கள் ஆகும். மணிக்கு 31 மைல் வேகத்தில் இது நீந்தும். இதற்கு சுவாசிப்பதற்காக மனிதனுக்கு இருப்பது போல உடலின் மேல் ஒரு துவாரம் இருக்கிறது. இதன் வாயில் உணவு உண்ணும் போது போகும் நீர் மட்டும் 5000 கிலோகிராம் எடை இருக்கும். இதன் நாக்கு ஒரு யானை அளவு இருக்கும்.
இதன் ஓசை தான் உலக விலங்கு வகைகளிலேயே அதிக ஓசை ஆகும். அதாவது 188 டெசிபல் என்ற அளவில் இருக்கும். நீருக்கடியில் எழுப்பும் இந்த ஓசையை மனிதன் கேட்க முடியாது. ஒரு ஜெட் எஞ்ஜின் எழுப்பும் சத்தமாகும் இது. லோ ப்ரீக்வென்சி எனப்படும் குறைந்த அதிர்வெண் ஓசை என்பதால் 1600 கிலோமீட்டர் வரை இது கேட்கும்.. அதன் இதயம் ஒரு காரின் அளவு போல இருக்கும், அதன் இதயத் துடிப்பை இரண்டு மைலுக்கு அப்பால் இருந்தும் கேட்கலாம்.
நீலத் திமிங்கிலத்தின் பாடல் ஓசை மிகவும் பிரபலமான ஒன்று ஆனால் இந்த ஓசை இப்போது அருகி விட்டதால் விஞ்ஞானிகள் பெரிதும் கவலைப்படுகின்றனர்.
புவி வெப்பமயமாதலாலும், திமிங்கிலத்தை அதன் எண்ணெய்க்காக வேட்டையாடும் போக்கினாலும் அவை அருகி வருகின்றன.
ஒரு திமிங்கிலத்தின் விலை என்ன தெரியுமா? பல்லாயிரக்கணக்கான மரங்களின் விலை தான் அது. சுமார் இருபது லட்சம் அமெரிக்க டாலர்கள் தான் அதன் விலை. (பதினேழுகோடியே ஐம்பது லட்சத்து நாற்பத்தியிரண்டாயிரம் இந்திய ரூபாய்கள்!)
அறுபது வருடங்களில் ஒரு திமிங்கிலம் 33 டன் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி வைத்துக் கொள்கிறது. அது இறந்து கடலுக்கடியில் மூழ்கி விட்டால் அந்த கார்பன் டை ஆக்ஸைடு பல நூறு ஆண்டுகள் பூட்டி வைக்கப்பட்ட நிலையை அடைகிறது. இதனால் மனித குலத்திற்கு எவ்வளவு நன்மை!
உணவு சங்கிலித்தொடரை நிலையாக நிலை நிறுத்துவதும் நீலத் திமிங்கிலங்களே. சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதும் அவை தான்.
ஆகவே தான் திமிங்கிலத்தின் பாடலைத் தொடர்ந்து கேட்க உலகம் ஆசைப்படுகிறது.
ஒவ்வொருவரும் இதற்காகப் பாடுபடவேண்டும்; குரல் கொடுக்க வேண்டும். செய்வோமா?