காளிதாசன் நூல்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் சங்கீதம்—3 (Post No.14,902)

Written by London Swaminathan

Post No. 14,902

Date uploaded in London –  25 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சங்க காலத்துக்குப் பின்னர் வந்த உரைகளில் நிறைய சங்கீதச் செய்திகள் இருந்த போதிலும் இந்தக் கட்டுரையில் சங்க காலம் பற்றி மட்டுமே  எழுதுகிறேன்

பாணர்கள் பாடிக்கொண்டே மன்னர்களிடம் பரிசுகள் பெறச் சென்ற பாடல்கள் நிறைய உள்ளன. மன்னரை எழுப்புவதற்கு அரண்மனை முன்னர் அதிகாலையில் மன்னர் குலத்தின் பெருமைகளை பாடியதையும் அறிகிறோம். கூத்து என்னும் நாடகத்துடன் இசையும் கலந்து வந்தது

குறிஞ்சி நிலத்தோர் கிளிகளை விரட்டுவதற்கு தெண்டகப் பறையை ஒலித்தனர் .நற்றி. 104; அகம்118;

ஆகுளி என்ற கருவியை முழவொடு சேர்த்து பயன்படுத்தினர் . இதன் குரல் ஆந்தையின் குரல் போல இருக்கும்- மலைபடு-140/1

தினைப்புனத்தில் கிளிகளை ஓட்டுவதற்குப் பயன்படுத்திய தட்டை என்னும் கருவியின் லி, தேரையின் ஒலி போல இருக்கும் .குறுந்.193;

எல்லரி என்ற பாறைக்கு சல்லி என்ற இன்னும் ஒரு பெயரை நச்சினார்க்கினியர் தருகிறார் பாணர்கள் பயன்படுத்திய தடாரி என்னும் தோற்கருவிக்கு ஆமை வடிவு இருந்ததாகப் புலவர்கள் பாடுகின்றனர்

பகுவாய்த் தேரை  தட்டைப்பறையிற்

கறங்கும் நாடன் – குறுந்.193;

அரிக்குரல்  தடாரியின் ஆமை மிளிர – புறம் 249

அந்த தடாரி சந்திரன் போல வட்டமாக இருந்ததாம்.

மதியத்தன்ன வென் அரிக்குரல் தடாரி –   புறம் 398

காளிதாசனும் சங்கப்புலவர்களும் எல்லா இசைக்கருவிகளின் ஒலியும் பறவைகள் அல்லது பிராணியின் சப்தம் போல இருந்ததாகக் கூறுவது அவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தியத்தைக் காட்டுகிறது .

புல்லாங்குழல் செய்யும் முறையைப் பெரும்பாணாற்றுப்படை கூறும் – 177-180

ஞெலிகோல் கொண்ட பெரு விறல் ஞெகிழி
செம் தீ தோட்ட கரும் துளை குழலின்
இன் தீம் பாலை முனையின் குமிழின் . . . .[180]

புழல் கோட்டு தொடுத்த மரல் புரி நரம்பின்
வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி

இடையன் தானே குழல் செய்துகொண்டு இசைப்பான். அது சலித்து  விட்டால் பொந்துள்ள குமிழ மரத்தில் யாழ் செய்துகொண்டு இசைப்பான். தனக்கு வேண்டிய புல்லாங்குழலைத் தானே செய்து கொள்வான். ஞெலிகோலின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு தீயில் காய்ந்து கனப்புடன் இருக்கும் ஞெகிழியால் மிகுந்த வலிமையோடு மூங்கிலில் அழுத்தித் துளை போடுவதற்காக அவன் கையால் முயன்று அழுத்தும் போது அவிர்புகை கமழும். புல்லாங்குழலில் அவன் பாலைப் பண்ணை இனிமையாகப் பாடுவான். அதில் சலிப்பு தோன்றினால் [முனையின்] யாழிசை மீட்டுவான். யாழும் அவனே செய்து கொண்டதுதான். குமிழ மரத்தின் கொம்பை வளைத்து மரல் என்று சொல்லப்படும் பெருங்குரும்பையின் நாரை முறுக்கி நரம்பாக்கிக் கட்டி வில்யாழ் செய்துகொள்வான். அதில் விரல்களால் தெறித்துக் குறிஞ்சிப்பண் பாடுவான். அதன் ஓசை பல்கால் பறவை என்று சொல்லப்படும் வண்டின் குரல் போல இனிமையாக இருக்கும்.

****

வயிர் என்னும் கருவி போர்க்களத்தில் முழங்கிய கொம்பு வாத்தியங்களில் ஒன்றாகும் அதன் ஒலி அன்றில் பறவையின் ஒலியைப் போன்றது  ,

ஏங்குவயிர் இசையை கொடுவாய் அன்றில் – குறிஞ்சி.219

மயில், நாரை ஆகியவற்றின் குரலையும் இதற்கு ஒப்பிட்டுள்ளனர் அகம்.40, 177;

முழவு என்னும் கருவியை ஆடவரின் தோளுக்கு உவமையாகப் பயன்படுத்துவர் -மலை2,3; .

காளை மாட்டின் தோலால் செய்யப்பட பல வகை முரசுகள் இருந்தன .மதுரை.732/3; புறம்.63

ஒருபுறம் மட்டும் ஒலிக்கும் கருவி- பதலை புறம்.152 மலை.11

இந்தச் செய்திகளைத் தரும் பாடல் வரிகள் :—

பண்ணமைத்துத் திண்வார் விசித்த முழவொடு – மலைபடு.2-3;

மண்ணமை முழவு – பொருநர்..109;

கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது  போர்த்த மாக்கண் முரசம்-மதுரை.732/3;

விசித்து வினைமாண்ட மயிற்கண் முரசம் – புறம்.63; 

பதலையொரு கண் பையென இயக்குமின் -புறம்152;

நொடித்தரு பாணியை பத்தலை- மலை11.

பதலை என்ற கருவி மாத்திரையின் அளவினை வரையறுக்கப் பயன்பட்டது.

****

இசைக்கருவிகளின் ஒவ்வொரு சொல்லையும் அவர்கள் பயன்படுத்திய பாடல்களைக் கணக்கிட்டால் அவை பல நூறு அல்லது ஆயிரத்தைத் தாண்டிவிடும்! 450 புலவர்கள் பாடிய 2500  பாடல்களில் இப்படி இருப்பதில் வியப்பில்லை! ஆனால் காளிதாசன் ஏழே நூல்களில் இசையைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

காளிதாசனின் மூன்று நாடகங்களும் இசை முழக்கத்துடன் துவங்குகின்றன . மாளவிகாக்நிமித்ரம் நாடகத்தில் மாளவிகா, நடனப் பயிற்சியுடன் நாடகம் துவங்குகிறது .

முதல் காட்சியில் முரசொலிக்கு மயில்கள் ஆடுவது குறிப்பிடப்படுகிறது  இரண்டாவது காட்சியில் சர்மிஷ்டா இயற்றிய பாடல் வருகிறது இதனால் பெண்கள் ஆடலிலும் பாடலிலும் புலமை பெற்றதும் முறையாக ஆசிரியர்களிடம் பயின்றதும் காணக்கிடக்கிறது. சங்கீதம் முதலிய கலைகளில் அரசன் அதிக நேரம் செலவிடுவதை ராணி குறைகூறுகிறாள்.

****

WHO IS A GOOD WIFE?

ரகுவம்சத்தில் 8-67 மனைவி என்பவர் யார்? என்ற வருணனை வருகிறது

गृहिणी सचिवः सखी मिथः प्रियशिष्या ललिते कलाविधौ|

करुणाविमुखेन मृत्युना हरता त्वाम् वद किम् न मे हृतम्॥ ८-६७

You were my wife, my counsellor, my beloved companion in private, my favourite pupil in the practice of the fine arts: now tell me what has not been snatched away from me by ruthless death while taking you away from me. [8-67]

நீ எனக்கு குடும்பத்தை நடத்திச் செல்லும் மனைவியாகவும், ஆலோசனை கூறும் மந்திரியாகவும் தனிமையில் தோழியாகவும் லலிதமான கலைகளை பயின்று என்னை மகிழ்விக்கும் மாணவியாகவும் இருந்தாய் ; இப்போது உன்னை எமன் கவர்ந்து சென்றதால் எனக்கு இனி மந்திரி இல்லை, துணைவி இல்லை, மாணவி இல்லை , மனைவி இல்லை.

( முன்னால் வந்த ஸ்லோகத்தில் இந்துமதி இசை பயின்ற செய்தியும் உளது.)

gṛhiṇī sacivaḥ sakhī mithaḥ priyaśiṣyā lalite kalāvidhau|

karuṇāvimukhena mṛtyunā haratā tvām vada kim na me hṛtam || 8-67

****

மேகதூத காவியத்தில் குறைந்தது 4 பாடல்களில் இசைக்குறிப்புகள் உள்ளன இதன் மூலம் கோவில்களிலும் வீடுகளிலும் சங்கீதம் ஒலித்தது தெரிகிறது 

अप्यन्यस्मिञ्-जलधर महाकालमासाद्य काले

स्थातव्यं ते नयनविषयं यावदत्येति भानुः ।

कुर्वन् संध्याबलि-पटहतां शूलिनः श्लाघनीयां

आमन्द्राणां फलमविकलं लप्स्यसे गर्जितानाम् ॥ १.३६॥ 36

மேகமே சூரிய அஸ்தமனத்துக்கு முன்னால், மஹாகாலத்துதுக்கு / உஜ்ஜைனி சிவன் கோவிலுக்குப் / போய்விட்டால் சூரியன் மறையும் வரை தங்கி இரு.; அப்போது உனது மேக கர்ஜனை சிவ பூஜைக்கான படக / மிருதங்க ஒலியாக இருக்கட்டும்.

शब्दायन्ते मधुरमनिलैः कीचकाः पूर्यमाणाः

संसक्ताभिस्त्रिपुरविजयो गीयते किंनरीभिः ।

निर्ह्रादस्ते मुरज इव चेत् कन्दरेषु ध्वनिः स्यात्    (निर्ह्रादी ते)

सङ्गीतार्थो ननु पशुपतेस्तत्र भावी समग्रः ॥ १.५८॥ 58

***

மூங்கில் ஓட்டை வழியாக வரும் காற்று இனிமையாக  சுருதி போல ஒலிக்கும் ; சிவ பெருமானின் முப்புர வெற்றியை கின்னரப் பெண்கள் பாடுவார்கள் ;உன்னுடைய கர்ஜனை குகைகளுக்குள் நுழைந்து  எதிரொலயாக வருவது மிருதங்க ஓசை போல இருக்கும் . அப்போது, சுருதி, பாட்டு, தாளம் மூன்றும் சிவன் பூஜைக்கு கிடைத்து  விடும்!

காடுகளில் கீசக/ மூங்கில் ஓட்டைகளில் புகும் காற்று குழல் ஓசையாக வருவதை கபிலரும் பாடியுள்ளார்.

****

विद्युत्वन्तं ललितवनिताः सेन्द्रचापं सचित्राः

सङ्गीताय प्रहतमुरजाः स्निग्ध-गम्भीरघोषम् ।

अन्तस्तोयं मणिमयभुवस्तुङ्गमभ्रंलिहाग्राः

प्रासादास्त्वां तुलयितुमलं यत्र तैस्तैर्विशेषैः ॥ 66॥

மேகத்தை முத்தமிடும் உயரமான கட்டிடங்கள் உன்னைப்போல உயரத்தில் இருக்கும். அங்குள்ள ரத்தினம் பதிக்கப்பட்ட அரண்மனை தரையானது மழைத்துளி பிரகாசிப்பது போல இருக்கும். சுவர் ஓவியங்களின் வண்ணங்கள் உனது வானவில்லுடன் போட்டிபோடும் மின்னலின் வர்ண ஜாலங்களுக்கிணையாக கன்னியர் நடனம் ஆடுவார்கள்; ஆட்டத்துக்கேற்ற தாளத்துடன் மிருதங்கம் முழங்கும்; அது உனது மேக கர்ஜனைக்கு ஒப்பாகும் .

இதில் சங்க இலக்கியம் போல இயற்கை ஆர்க்கெஸ்ட்ரா  வை காளிதாசன் பாடுகிறான்.

****

अथ रोधसि दक्षिणोदधेः श्रितगोकर्णनिकेतमीश्वरम्|

उपवीणयितुम् ययौ रवेरुदयावृत्तिपथेन नारदः॥ ८-३३

தென் கடலின் கரையில் கோகர்ண க்ஷேத்ரம் உளது ; அங்கே கோயில் கொண்டுள்ள சிவபெருமானைத் துதி பாடி நாரதர் வீணையை இசைத்தவாறு  வடக்கிலிருந்து சென்று கொண்டிருந்தார்

atha rodhasi dakṣiṇodadheḥ śritagokarṇaniketamīśvaram|

upavīṇayitum yayau raverudayāvṛttipathena nāradaḥ || 8-33

சிலப்பதிகார காவியத்தில்தான் தமிழில் முதல் தடவையாக நாரதர் வீணை என்ற சொற்கள் வருகின்றன. அதே போல காளிதாசன் சொல்லும் உஜ்ஜைனி ஜோதிர்லிங்க தலமும் சிலப்பதிகாரத்தில்தான் வருகிறது; காளிதாசனின் தாக்கத்தைச் சிலம்பில் மேலும் பல இடங்களில் காணலாம்.

****

இசையின் தாக்கம் பற்றி ருது சம்ஹாரத்திலும் 1-8 பாடுகிறார்; இசை காம உணர்வினையும் தூண்ட வல்லது என்கிறார். சிலப்பதிகாரத்தில் மாதவியின் இசைக்கு கோவலன் மயங்கியதைக் காணலாம்.

இங்கே காளிதாசன் சொல்கிறான் ,

சந்தன நீர் தெளித்த விசிறியின் காற்றும், முத்துமாலை அணிந்த  பெண்களின் மார்பகங்களும் பெண்கள் வாசிக்கும்  வல்லகி என்னும் யாழ் இசையும் ஆண்களிடத்தில் தூங்கிக்கிடக்கும் காம  உணர்வுகளைத் தட்டி எழுப்பும் .

ஆக இசை என்பது இறைவனிடத்தில் இட்டுச் செல்லும்; இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் உதவும் என்பது காளிதாசனின் கருத்து.

—SUBHAM—

TAGS-   இசை,  காளிதாசன், கருத்து, சங்கத் தமிழ் நூல்கள் , சங்கீதம்,   பகுதி –3

GNANAMAYAM 24th AUGUST 2025 BROADCAST PROGRAMME SUMMARY

Tripurasudaamani

பெங்களூர் எஸ் நாகராஜன்

Gnanamayam24/08/25ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் –தலைப்பு- பிள்ளையார்பட்டி ஆலயம்

Gnanamayam உலக இந்துமத செய்தி மடல்-லண்டன் மாநகரிலிருந்து லதா யோகேஷ் வழங்கும் செய்தி செய்தி மடல்.

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

****

Prayer -Mrs. Jayanthi Sundar Team – Akash Ramesh, Reading Town

***

NEWS BULETIN

Latha Yogesh  from London presented World Hindu News in Tamil

****

Brhannayaki Sathyanarayanan from Bengaluru spoke on PILLAIYAPATTI TEMPLE

****

Mr S Nagarajan spoke on Siddhar BOGAR

****

SPECIAL EVENT-

Dr THIRIPURA SUDAMANI spoke on

Siddha Medicine in Seevaka Chintamani, Tamil Epic.

******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 24-8-2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் – திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்- Akash Ramesh, Reading Town

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து லதா யோகேஷ வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

சொற்பொழிவு– தலைப்பு- பிள்ளையார்பட்டி ஆலயம்

****

பெங்களூர் எஸ் நாகராஜன் சொற்பொழிவு—

தலைப்பு- சித்த மருத்துவர் போகர்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு — டாக்டர் திரிபுர சூடாமணி

தலைப்பு- சீவக சிந்தாமணியில் சித்த மருத்துவக் குறிப்புகள்

****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags-Gnanamayam Broadcast, 24-8- 2025, summary

ஞானமயம் வழங்கும் 24-8-2025  உலக இந்து செய்திமடல் (Post.14,901)

Written by London Swaminathan

Post No. 14,901

Date uploaded in London –  25 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

collected from popular dailies and edited for broadcast.

ஞானமயம் வழங்கும் (24 -8-2025) உலக இந்து செய்திமடல்

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  லதா யோகேஷு வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 24-ம் தேதி  2025-ம் ஆண்டு .

****

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்மும்பையில் ரூ. 474 கோடிக்கு இன்சூரன்ஸ்

மஹாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரூ.474 கோடியில் மும்பையைச் சேர்ந்த கணேஷ் மண்டல் என்ற அமைப்பு இன்சூரன்ஸ் செய்துள்ளது.இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் இந்தப் பண்டிகை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, மும்பையைச் சேர்ந்த கணேஷ் மண்டல் என்ற அமைப்பு, இந்த ஆண்டு பண்டிகைக்காக ரூ.474 கோடியில் இன்சூரன்ஸ் செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.400 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்த நிலையில், இந்த ஆண்டு தொகை சற்று அதிகரித்துள்ளது.

விநாயகர் சிலைகளைஅலங்கரிக்கும் தங்க மற்றும் வெள்ளி ஆபரணங்களின் மதிப்பு உயர்வும் அதிக தன்னார்வலர்கள்,பூசாரிகள்சமையல்காரர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் இந்த காப்பீட்டின் கீழ் சேர்க்கப்பட்டதும் இவ்வளவு பெரிய தொகைக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ள இந்த ஆல்-ரிஸ்க்‘ இன்சூரன்ஸ் திட்டமானதுதங்கம்வெள்ளி மற்றும் விலைமதிப்புள்ள கற்கள்தனிப்பட்ட விபத்துக் காப்பீடுதீ மற்றும் பூகம்பப் பேரிடர் காப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஜிஎஸ்பி சேவா மண்டலத்தின் தலைவர் அமித் பாய் கூறுகையில், ‘தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு உயர்வே இதற்கு முக்கிய காரணம். தன்னார்வலர்கள் மற்றும் பூசாரிகளும் காப்பீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்‘ என்றார்.

****

கோயில் நிதியில் திருமண மண்டபம் அமைக்கும் அரசாணை ரத்து; உயர் நீதி மன்றம் உத்தரவு

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

கோயில் நிதி மூலம் திருமண மண்டபங்கள் அமைக்கும் அரசாணைகளை ரத்து செய்தது

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான வாகீஸ்வரர் கோயில், திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோயில் உள்ளிட்ட 5 கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் ரூ.22 கோடியே 20 லட்சத்தில் திருமண மண்டபங்கள் அமைக்க தமிழக அறநிலையத்துறை 2023 மார்ச் 3 ல் அரசாணை வெளியிட்டது. இப்பணியை அந்தந்த கோயில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் அமைக்கப்படுகிறது. இதற்கு மாநகராட்சியிடம் கட்டட அனுமதி பெறவில்லை.

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயில். வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.6 கோடியே 30 லட்சத்தில் திருமண மண்டபம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி அறநிலையத்துறை மே 16 ல் அரசாணை வெளியிட்டது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபரி நிதியிலிருந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கம்பராயப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.3 கோடியே 75 லட்சத்தில் திருமண மண்டம் அமைக்கப்படும். உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் மற்றும் நரசிங்கப்பெருமாள் கோயில் நிலத்தில் ரூ.4 கோடியே 54 லட்சத்தில் திருமண மண்டபம் அமைக்க 2024 டிசம்பரில் அறநிலையத்துறை முதன்மை செயலர் அரசாணை வெளியிட்டார்.

இவை அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது. கோயில் நிதியை ஹிந்து மத கொள்கைகளை பரப்புதல், அர்ச்சகர், ஓதுவார் பள்ளிகளை நிறுவுதல், ஹிந்து மதம், தத்துவம் அல்லது சாஸ்திரங்கள் ஆய்வு அல்லது கோயில் கட்டடக்கலை பயிற்றுவிக்கும் பல்கலை அல்லது கல்லுாரி நிறுவுதல், ஹிந்து குழந்தைகளுக்கான அனாதை இல்லங்களை நிறுவுதல், பக்தர்களின் நலனிற்காக மருத்துவமனைகள், மருந்தகங்களை அமைக்க பயன்படுத்த வேண்டும். திருமண மண்டபம் அமைக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்தார்

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள் முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் அருண் சுவாமிநாதன் ஆஜரானார்.

ஹிந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் கோயில்களில் திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் திருமண மண்டபங்கள் அமைக்கப்படுகின்றன. அதற்கு மிகக்குறைந்த தொகை வாடகையாக வசூலிக்கப்படுகிறது. அத்தொகை கோயில் பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் வணிகநோக்கம், விதிமீறல் இல்லை  என்று   அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கோயில் நிதி என்பது அரசின் பொது நிதி அல்ல. பக்தர்கள், நன்கொடையாளர்கள் நிதி வழங்குகின்றனர். அதை அன்னதானம், பிரசாதம் வழங்குதல், கோயில் மேம்பாடு உள்ளிட்ட மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமணம் என்பது வாழ்க்கை ஒப்பந்தம். இதில் அனைத்து மதங்களும் வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்றுகின்றன.

மதச்சார்பற்ற அரசு கோயில் நிதியிலிருந்து வணிக நோக்கில் திருமண மண்டபம், வணிக கட்டடங்கள் அமைக்கும் என எதிர்பார்க்கவில்லை. வாடகைக்கு விடும் வகையில் கோயில் நிதியில் திருமணம் மண்டபங்கள் அமைப்பது அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது. மதச்சார்பற்ற அரசு பாகுபாட்டுடன் நடந்து கொள்ளக்கூடாது.

மன்னர்களின் ஆட்சியில் பல கோயில்கள் அமைக்கப்பட்டன. அவை மதிப்பு மிக்கவை. நம் கலாசாரம், கட்டடக்கலையின் அடையாளமாக திகழ்கின்றன. அவற்றிற்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோயில்களை மேற்பார்வையிட்டு முறைப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. மத நடைமுறைகள், பழக்கவழக்கங்களில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. கோயில் நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என அந்தந்த கோயில் நிர்வாகங்கள்தான் முடிவெடுக்க இயலும்.

சட்டசபையில் அரசு அறிவிப்பு வெளியிட்டதன் அடிப்படையில் கோயில் நிதியில் திருமண மண்டபங்கள் அமைக்க அறநிலையத்துறை அரசாணைகள் வெளியிட்டது ஏற்புடையதல்ல. அவை ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கோயில் நிதியில் வணிக வளாகம், கல்வி நிறுவனம், திருமண மண்டபங்கள் அமைக்கும் அரசாணைக்கு எதிராக நிலுவையிலுள்ள பிற வழக்குகளில், மனுதாரர்கள் தரப்பிற்கு அரசாணையின் நகல் வழங்க அரசு தரப்பிற்கு அறிவுறுத்தி விசாரணையை ஆக.25 க்கு ஒத்திவைத்தனர்.

*****

ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது; நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதம்

திருப்பரங்குன்றத்தில், ஒட்டுமொத்த மலையும் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது. மலையின் எல்லையை அளவீடு செய்வதற்கு, தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை’ என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையை, ‘சிக்கந்தர் மலை’யாக மாற்ற முயற்சிப்பதாக, ஹிந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில், ‘மலை மீதுள்ள சிக்கந்தர் தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, தர்கா செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர, மற்ற பகுதிகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானவை. ஆங்கிலேயர் ஆட்சியின்போதே, இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. எனவே, ஆடு, கோழி பலியிட்டு, சிக்கந்தர் மலையாக மாற்றும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டார்.

இதுபோல, கட்சியின் மாநில அமைப்பு செயலர் ராமலிங்கம், ‘பக்ரீத் பண்டிகையையொட்டி, திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான பாதையை மறைத்து, நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என, மனு தாக்கல் செய்தார். இதுபோல, ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகளில், நீதிபதி நிஷாபானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்; நீதிபதி ஸ்ரீமதி, மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தார். இதனால், மூன்றாவது நீதிபதி விஜயகுமார் முன்பு மனுக்கள் மாற்றப்பட்டன. அதன் மீதான விசாரணை, நேற்று நடந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், ‘ஒட்டுமொத்த மலையும் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது. மலையில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால்தான் எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும். மலையை, ‘ட்ரோன்’ மூலம் அளவீடு செய்ய, விமான நிலைய ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அளவீடு செய்தால் தான் எல்லையை நிர்ணயிக்க முடியும். ஆனால், தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை’ என வாதிட்டார்.

தர்கா தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ‘தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதை ஹிந்து அமைப்புகள் தடுக்க முடியாது. திருப்பரங்குன்றம் மலையை, ‘ஸ்கந்தர் மலை, சிக்கந்தர் மலை’ என வருவாய்த்துறை ஆவணங்களில் இருப்பது குறித்து, கடந்த 1923ல் மதுரை சார்பு நீதிமன்றம், கடந்த 1931ல் லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்புகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள வெயிலுக்குகந்த அம்மன் கோவிலில், ஆடு, கோழி பலியிடும் வழக்கம் உள்ளது. மேலும், தர்கா பகுதி, முஸ்லிம்களுக்கு சொந்தமானது. அங்கு வழிபாட்டு உரிமையை தர்கா நிர்வாகம் தான் முடிவு செய்யும். வெளியிலிருந்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது’ என வாதிட்டார்.

இந்த விவாதங்களைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஆக., 25ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

****

ஒரு வேளை உணவுக்கு கூட போதாத 33 ரூபாய் சம்பளம்கோயில் பூஜாரிகள் வேதனை

தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 19,000 கோயில்கள் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ளன.

இவற்றில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பூஜாரிகளுக்கு மாத சம்பளமாக 1000 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. அதாவது தினசரி 33 ரூபாய்; இன்றைய விலைவாசியில் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட இந்த தொகை போதாது.

துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலுக்குட்பட்ட கோயில்களில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு ஓய்வுக்குப்பின் துறை சார்ந்த ஓய்வூதியம், பொங்கல் கருணைக்கொடை, பி.எப்., உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் உள்ளன.

ஆனால் ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களில் வேலை பார்ப்பவர்கள், ‘மாற்றாந்தாய் பிள்ளைகள்’ போல் கருதப்படுகின்றனர்.

பணி நிரந்தரமும் செய்யப்படாமல் பணிக்காலத்தில் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு தேவையான ஊதியமும் கிடைக்காமல் அர்ச்சகர்கள், பூஜாரிகள் குடும்பங்கள் பரிதவித்து வருகின்றன.

இவர்களது மாத சம்பளத்தை உயர்த்த வேண்டும். பணி நிரந்தரம் செய்வதுடன் ஓய்வூதியம், பி.எப்., மற்றும் குடும்ப நல நிதி ஆகிய பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

*****

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆகம விதிகள் மீறப்படுகிறதா ?

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் ஆகமவிதிகளுக்கு முரணாக தரிசன நேரம் நீட்டிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இக்கோயிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. திருவிழா காலங்கள், சபரிமலை சீசன், தொடர் விடுமுறை போன்ற சமயங்களில் பல மணி நேரம் காத்திருந்து தரிசிக்கும் வகையில் கூட்டம் இருக்கும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ‘நடை அடைக்கப்பட்டு விட்டது’ என்றுக்கூறி தரிசன டிக்கெட் தராமல் ஆகமவிதிகளை காத்து இருந்தனர்.

ஆனால் சமீபகாலமாக கூட்டத்தை சமாளிக்கவும், பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் ஆகமவிதிகளை மீறி நடைசாத்தப்படாமல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பட்டர்கள் சிலர் கூறியதாவது: ஆகமவிதிப்படி உச்சிக்கால பூஜை முடிந்து மதியம் 12:30 மணிக்கு நடைசாத்த வேண்டும். மீண்டும் மாலை 4:00 மணியளவில் சாயரட்சை பூஜையின்போது நடைதிறக்கப்படும். ஆனால் சிறப்பு தரிசன டிக்கெட் அதிகமாக வழங்குவதால் சில சமயம் மதியம் உச்சிக்கால பூஜை முடிந்து 3:00 மணி அல்லது 3:30 மணி வரை நடை திறந்து வைக்கப்படுகிறது.

இதை ‘பூத காலம்’ என்பர். இந்நேரத்தில் பூஜையும், பக்தர்கள் தரிசனமும் செய்யக்கூடாது. செய்தால் அதற்குரிய பலன் கிடைக்காது. ஆனால் இரவு நடைசாத்த 11:30 மணியாகி விடுகிறது. என்று பட்டர்கள் கூறினார்கள்.

*****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  லதா யோகேஷ வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு ஆகஸ்ட் மாதம் 31- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

TAGS- Hindu news bulletin, 24-8-25

ஆலயம் அறிவோம்! பிள்ளையார்பட்டி (Post No.14,900)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 14, 900

Date uploaded in London – 25  August 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

24-8-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை

பிள்ளையார்பட்டி

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

அடி அமர்ந்து கொள்வாய் நெஞ்சமே!,  அப்பம்
இடி அவலொடு எள்ளுண்டை கன்னல் – வடிசுவையில்

தாழ்வானை, ஆழ்வானைத்,  தன்னடியார் உள்ளத்தே

வாழ்வானை, வாழ்த்தியே வாழ்!

கபிலதேவ நாயனார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி திருத்தலமாகும்.

இந்தத் தலம் காரைக்குடி நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குன்றக்குடி முருகன் கோவிலில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மூலவர் : கற்பக விநாயகர்

தல விருட்சம் : மருத மரம்

பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவில் இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் குடையப் பெற்று அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலின் அமைப்பு பல்லவர் கால குடைவரைக் கோவிலை நினைவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பிள்ளையார் பட்டி விநாயகர் சிற்பம் தான் தமிழ்நாட்டின் முதல் பிள்ளையார் என்று கூறுகின்றனர்.

இக்கோவிலில் பத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.                    

ஒரு கல்வெட்டுத் தகவலின் படி ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்ற சிற்பியால் பிள்ளையார் உருவமும் சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன என்று அறிய முடிகிறது.

கல்வெட்டுக்களீல் தேசி விநாயகர் என்று இந்த விநாயகரின் திருநாமம் குறிக்கப்பட்டுள்ளது. ஒளிமிக்க விநாயகர் என்பது இதன் பொருள்.

இது இரு பகுதிகளாக அமைந்திருக்கிறாது, ஒரு பகுதி குடைவரைக் கோவிலாகவும் இன்னொரு பகுதி கற்றளி எனவும் அமைந்துள்ளது.

இத்தலத்திற்கு எருக்காட்டூர்,  மருதங்குடி,  திருவீங்கைக்குடி,  கணேசபுரம் உள்ளிட்ட பல பெயர்கள் வழங்கி வந்துள்ளன.

ஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகர் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருப்பதால், பிரகார வலம் இங்கு கிடையாது.

பிள்ளையார் வடக்கு நோக்கி காட்சி தருகிறார். அவரது தும்பிக்கை வலது புறமாகச் சுழித்து வலம்புரி விநாயகராக உள்ளார்.  அதிலும் வடக்கு நோக்கி இருக்கும்  வலம்புரி விநாயகர் இவர் ஒருவரே என்பது தனிச்சிறப்பாகும்.

ஒன்பது நவக்கிரகங்களும் கற்பக விநாயகரைச் சுற்றி ஒன்பது

தூண்டா மணிவிளக்குகளாக அமைந்திருந்து சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்து அருள் பாலிக்கின்றன.

இங்கு கிழக்கு நோக்கி அமைந்துள்ள மகாலிங்கம் திருவீசர் எனப்படுகிறார். இவருக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு.வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சி தருகிறார்.

இங்கிருந்து சற்று தூரத்தில் மருதீசர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

கர்பக்ருஹத்தில் வட்ட வடிவமாக உள்ள ஆவுடையாரின் மீது லிங்க வடிவில் மருதீசர் காட்சி அளிக்கிறார்.

கோவிலின் மேல் சுற்றுப் பிரகாரத்தில் வடகிழக்குப் பகுதியில் தெற்கு நோக்கி வாடாமலர் மங்கை காட்சி தருகிறார். பத்ம பீடத்தில் இரு கைகளுடன் நின்ற கோலத்தில் அம்மன் காட்சி தருகிறார்.

வடக்கு கோபுர வாயிலில் சிவகாமி அம்மன் சந்நிதியும் மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராஜர் சபையும் உள்ளது.

பிள்ளையார் பட்டி கோவிலின் கோபுரத்திற்கு எதிரே விசாலமாக திருக்குளம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு சதுர்த்தியின் போது விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வருகிறார்.

இந்தக் கோவில் நகரத்தார்களால், மிகச் சிறப்பாக, ஆகம முறை தவறாது, நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கோவிலின் சுத்தம் அனைவராலும் பாராட்டப்படும் ஒன்று.

கோவிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன்  அமைந்துள்லது.  கற்கப விநாயகர் சந்நிதியின் முன்பாக உள்ள கோபுரம் மூன்று நிலைகளுடன் அமைந்துள்ளது.

கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா பத்து நாட்களுக்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்பதாம் நாள் விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பத்தாம் நாள் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்கிறது.

விநாயக சதுர்த்தியன்று 18 படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை விநாயகருக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவும், மார்கழி மாதத்தில் திருவாதிரைத் திருநாளன்று சிவகாம சுந்தரி சமேதராக நடராஜப் பெருமான் திருவீதி வலம் வருதலும் மிகச் சிறப்பாக இங்கு நடைபெறுகின்றன.

இங்குள்ள ஒரு விநாயகரின் ஓவியம் நாம் எங்கு நின்றாலும் நம்மையே நோக்குவது போல உள்ள விழிகளோடு அமைந்திருக்கிறது.

தென்னகத்தில் உள்ள நான்கு அர்ஜுன வனத் தலங்களில் இதுவும் ஒன்று. ஏனைய தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்புடைமருதூர், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவுடை மருதூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஶ்ரீ சைலம் ஆகிய தலங்களாகும்.

திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கல்வி சிறக்கவும் வாழ்வு வளம் பெறவும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். இங்குள்ள மலைப்பாறையில் அரசமரமும் வேப்பமரமும் இணைந்து ஒன்றாக வளர்ந்துள்ளன. அரசமரத்தில் மஞ்சள் கயிறு, தொட்டில் ஆகியவற்றைக் கட்டி வைத்து வழிபாடு செய்து பிள்ளைப்பேறு அடைகின்றனர் பிள்ளைப்பேறு இல்லாதவர்கள்.

மண்ணுலகத்தினில் பிறவி மாசற

எண்ணிய பொருள் எலாம் எளிதின் முற்றுற

கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்

பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்!

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கற்பக விநாயகர் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.

***

ரெய்கி : உலகளாவிய ஆற்றல் மூலம் தரப்படும் சிகிச்சை முறை! (Post No.14,899)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,899

Date uploaded in London – 25 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

28-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

மாற்று மருத்துவம்!

ரெய்கி : உலகளாவிய ஆற்றல் மூலம் தரப்படும் சிகிச்சை முறை! 

ச. நாகராஜன் 

ரெய்கி என்பது ஒரு ஜப்பானிய வார்த்தை. 

இதற்கு உள்ளார்ந்த அர்த்தங்கள் நிறைய உண்டு. 

ரெய் என்றால் ஆன்மா என்பதில் ஆரம்பித்துப் பல அர்த்தங்கள் உண்டு. கி என்றால் வலிமையான ஆற்றல் என்ற பொருளில் ஆரம்பித்துப் பல அர்த்தங்கள் உண்டு. ரெய்கி என்றால் மர்மச் சூழல் என்றும் அற்புத அடையாளம் என்றும் கூறுவர். சுருக்கமாகச் சொல்லப் போனால் உலகளாவிய ஆற்றல் வாய்ந்த ஒரு சக்தியைப் பயன்படுத்தி அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் ஒரு சிகிச்சை முறை என்று ரெய்கிக்கான திரண்ட அர்த்தமாகக் கொள்ளலாம்.

இந்த ரெய்கியைக் கண்டுபிடித்தவர் மிக்காவோ உசுய் என்பவர். (பிறப்பு 1865, ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி மறைவு: 1926, மார்ச் மாதம் 9ம் தேதி)

மவுண்ட் குராமா என்ற மலை உச்சியில் தியானத்தில் ஆழ்ந்திருந்த மிக்காவோவுக்கு இருபத்தியோராம் நாள் ஒரு அசாதாரணமான ஆற்றல் தலைக்கு மேல் வந்தது. இதை அவர் உணர்ந்து தனது ரெய்கி முறையைக் கண்டுபிடித்தார். 

உடல், உள்ளம் மற்றும் உணர்ச்சி சார்ந்த நோய்களுக்கு ரெய்கி சிகிச்சை முறை நல்ல பலனைத் தருகிறது. மிக்காவோ தனது வாழ்நாளில் இதை இரண்டாயிரம் பேருக்குக் கற்பித்தார். இவர்களில் பதினாறு பேர்கள் மாஸ்டர் என்ற உயரிய நிலையை அடைந்தனர்.

 இந்த ரெய்கி சிகிச்சை முறையில் நிபுணரான மாஸ்டர் இரு விதமாக தனது சிகிச்சை முறையைச் செய்வார். ஒன்று எவர் இந்த சிகிச்சைக்கு உட்படுகிறாரோ அவரை படுத்துக் கொள்ளச் சொல்வார். அவரது உடலைத் தேவையான் அங்கங்களில் தன் உள்ளங்கையை வைத்துத் தடவி தன் ஆற்றலைப் பயன்படுத்துவார்.

 அல்லது சிகிச்சைக்கு உட்படுபவரைத் தொடாமலேயே உடலுக்கு மேலே இருந்து உள்ளங்கை மூலமாகத் தன் ஆற்றலைப் பிரயோகிப்பார்.

 இந்த சிகிச்சை முறையால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை என்பது இந்த சிகிச்சை முறையை அனைவரும் நாடுவதற்கான ஒரு நல்ல காரணமாகும்.

 அறிவியல் ரீதியாக இந்த சிகிச்சை முறையை ஆராய்ந்து பார்த்ததில் இதன் பயனை அறிவியல் சோதனைகள் நிரூபிக்க முடியவில்லை.

ஆனாலும் உலகெங்கும் 800 பிரபலமான மருத்துவமனைகளில் இந்த முறை கையாளப்படுகிறது! அமெரிக்காவில் மட்டும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரெய்கியை மேற்கொள்கிறார்கள் என்பது வியப்பூட்டும் ஒரு உண்மை.

 தூக்கமில்லாமல் இரவில் தவித்தல், தலைவலி, வயிற்றுவலி, சுளுக்கு, விளையாட்டுகளில் ஏற்படும் காயங்கள், மனச்சோர்வு உள்ளிட்டவை இந்த ரெய்கி சிகிச்சையை மேற்கொண்டவுடன் போய் விடுகிறது.

 இன்னும் நாட்பட்ட டயபடீஸ் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளையும் ரெய்கி தீர்க்கிறது. 

ரெய்கியின் பயன்கள் என்ன? 

உடல் ரீதியாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. உடல் வலிமை கூடுகிறது. அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் சீக்கிரமே தமது பழைய வலுவைப் பெறுகின்றனர். வலியை உடனடியாகத் தீர்க்கிறது. வயது ஆவதால் வரும் ஆற்றல் குறைவைப் போக்குகிறது.

உளவியல் ரீதியாக மனச்சோர்வை நீக்குகிறது. விடாப்பிடியாக நீடிக்கும் தவறான பழக்கங்களைப் போக்குகிறது. கூரிய புத்தியையும் தெளிவான மனத்தையும் உறுதிப்படுத்துகிறது. ஆழ்மன சக்தியை ஊக்குவித்து வெளிப்படுத்துகிறது.

உணர்வு ரீதியாக மனதையும் மனம் சார்ந்த உணர்ச்சிகளையும் சமனப்படுத்துகிறது. மன அமைதி ஏற்படுகிறது. மனநிலை மாறுபாடுகள் ஏற்படாமல் கவலை, ஏமாற்றம் உள்ளிட்டவை போய் அனைவரும் விரும்பும் ஒரு ஆளுமையைத் தருகிறது.

கர்ம வினைகளைப் போக்கி ஆன்மீகத்தில் உயர்நிலையை ஏற்படுத்துகிறது.

ஒரே ஒரு எச்சரிக்கை: இதை நல்ல ஒரு தேர்ந்த மாஸ்டரிடம் (நிபுணரிடம்) சென்று சிகிச்சையை எடுக்க வேண்டும். அவரிடமே இதைக் கற்கவும் செய்யலாம்.

**

Man is the Head and Woman is the Hat—Part 23 (Post No.14,898)

Written by London Swaminathan

Post No. 14,898

Date uploaded in London –  24 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

One Thousand Proverbs on Women, Wives and Daughters- part 23

441.Of glass is woman made.

442. The more a woman looks at herself the more she destroys the home.

443. From the sea, salt; from woman, much evil.

444. Don’t trust a silent woman, nor a dog without a bark.

445.Tell a woman she is handsome, she will run mad.

446.One woman spoils the wisest man.

447. Man is a fire and woman tow; the devil comes and sets them in a blaze.

448. A hen that crows and a woman who knows Latin never come to a good end.

449. A woman with a beard salute from a distance.

450.A woman’s advice is never worth having, but no one but a fool refuses to follow it.

451. A woman’s honour is a ship at sea without a rudder.

452. A woman’s honour consists in the good opinion the world has of her.

453. Between a woman’s YES and NO, I wouldn’t venture to stick the point of a pin.

454. Women and an orchard don’t want more than one master.

455. Women and cherries adorn themselves to their own undoing.

456. Women and glass are always in danger.

457. They that are hold with Women are never bold with men.

458. Women ever like to cover their foolishness by ingratitude.

459. Only he is fortunate with Women of whom they take no notice.

460. It is the nature of Women to disdain those who love them and to love those who abhor them.

461.Women undervalue what is given to them and die for what is denied to them.

—Spanish proverbs

462.A woman’s beauty is her own perdition and the perdition of others.

—Catalonian

463. Taking an eel by its tail and a woman at her word leaves little in the hand.

464. Woman has long hair and short sense.

465. Man is the head and woman is the hat.

466. A woman’s heart sees more than ten men’s eyes.

–Swedish proverbs

467. He who beats his wife gives her three holidays to her and three fasting days to him.

468. You should not take one wife if you cant keep two.

469. He who wants a wife must look for the bride’s looking glass in the kitchen.

470. A fire, a woman, a game never say “it is too much”.

471. Best a pint of wine and keep away from women.

472. Old houses and old women always need repairing.

473. He who has to do with women and pigs finds himself in a great turmoil.

474. He to whom women are unkind and bees are kind will be rich.

475. Night, love and women give wrong ideas.

476.If there are more women than hearths in the house, there is no peace in it.

—Swiss proverbs.

477. If a man is too good for the world, he is bad for his wife.

478. When an old man takes a young wife, the man becomes young and the woman old.

479. Don’t cast words amongst women.

480. Pray to God to preserve you from bad women, and preserve yourself from the good ones.

481. Women have nine measures of talk.

—Yiddish proverbs.

To be continued……………………..

 tags- proverbs, on woman, women, part 23

காளிதாசன் நூல்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் சங்கீதம் –2 (Post No.14,897)

Written by London Swaminathan

Post No. 14,897

Date uploaded in London –  24 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்கத் தமிழர்கள் கர்நாடக இசையை வளர்த்த செய்தியை பரத முனிவரும் சம்ஸ்க்ருதத்தில் எழுதிவைத்துள்ளார் :

தத்ர தாக்ஷிணாத்யாஸ் தாவத் ப்ஹுந்ருத்த

கீதா வாத்யா கைசிகீ  ப்ராயாஹா சதுர

மதுர லலிதாங்காபிநயச்ச………………

தக்ஷிணஸ்ய சமுத்ரஸ்ய   ததா விந்த்யஸ்ய  சாந்தனே

பொருள்

பல்வகையான நடனங்களும் , மதுரமான வாய்ப்பாட்டும், வாத்திய சங்கீதமும் , லலிதமான அங்க அபிநயங்களும் நிறைந்த இந்நாடு , தெற்கு சமுத்திரத்தால் சூழப்பட்டு விந்திய பர்வதத்துக்குத் தெற்கேயுள்ளது. 

–பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி

இதையெல்லாம் ஆதரிக்கும் வகையில் சங்க காலத்தை அடுத்து வந்த மகேந்திர பல்லவனின் (600 CE) குடுமியாமலை  இசைக்கல்வெட்டு சப்த ஸ்வரங்களை சொல்கிறது .

அரச்சலூர் கல்வெட்டுகள்

கொங்கு நாட்டில் ஈரோடு—காங்கயம் பாதையில் அரச்சலூர் என்னும் இடத்தில் மூன்று பழைய கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் எழுத்தமைதியைக் கொண்டு இவை இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று மதிப்பிடுகின்றனர். இதை எழுதியவன் தேவன் சாத்தன் என்று மூன்றாம் கல்வெட்டில் பெயர் உள்ளது. இது ஒரு இசைக் கல்வெட்டு. முதல் இரண்டு கல்வெட்டுகளில் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் காணலாம். இதோ முதல் கல்வெட்டு:

த தை தா தை த 

தை தா தே தா தை

தா தே தை தே தா

தை தா தே தா தை

த தை தா தை த

****

சங்கத் தமிழ் இலக்கியத்தில் இசைக்குறிப்புகள்

யாழ் என்ற கருவி எண்பது இடங்களுக்கு மேலாகவும் முரசு என்ற கருவி ஐம்பது இடங்களுக்கு மேலாகவும் சங்க நூல்களில் காணக்கிடக்கிறது

விழாக்காலங்களில் மக்கள் ஆடலையும் பாடலையும் கண்டு மகிழ்ந்த செய்தி மதுரைக் காஞ்சியில் உள்ளது ,

சேரிதோறும்

உரையும் பாட்டும் ஆட்டும் விரை இ

வேறு வேறு கம்பலை வெறிகொள்பு மயங்கி  -616-618

யாழும் குழலும் இசைத்து ஆடினார்கள், பாடினார்கள்,

ஆடல் பாடல் வரும் இடங்கள்

அகம்-4, 61, 206, 397; புறம்-29; பதிற்று-29, 56, 65; மதுரை-327/9;

****

ஏழிசை /சப்த  ஸ்வரங்கள்

ஸ -குரல் – ஆ -DO

ரி -துத்தம் – ஈ -RE

க – கைக்கிளை – ஊ -MI

ம-உழை – ஏ -FA

ப -இளி – ஓ – SOL

த – விளரி- ஐ -LA

நி- தாரம் -ஒள- TI

***

சட்ஜம் – மயிலின் ஒலி

ரிஷபம்- மாட்டின் ஒலி

காந்தாரம் – ஆட்டின் ஒலி

மத்திமம்- கிரவுஞ்சத்தின் ஒலி

பஞ்சமம்- குயிலின் ஒலி

தைவதம் – குதிரையின் ஒலி

நிஷாதம்- யானையின் ஒலி

உரைகாரர்கள் உரை எழுதுகையில் அந்தந்தப் பிராணிகளை ஏன் அந்த இடத்தில் கவிஞர் சொன்னார் என்று எழுதுகையில் இதைத் தொடர்புபடுத்துகின்றனர்.

****

 இப்போது கிடைக்காமல் போன பல இசை நூல்களை உரைகாரர்கள் மேற்கோள் காட்டுவர். அவற்றின் பட்டியல் இதோ:

இறையனார் களவியல் உரை: முதுநாரைமுது குருகு.

அடியார்க்கு நல்லார் உரை: இசை நுணுக்கம்பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம்

அரும்பத உரை ஆசிரியர்: பதினாறு படலம்

யாப்பருங்கல விருத்தி உரை: வாய்ப்பியம்குலோத்துங்கன் இசை நூல்

இவைகளுக்கு ஏன் நாரை, குருகு என்று பறவைப்பெயர்களை பயன்படுத்தினர் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்  

****

 சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் பேரி யாழ்மகர யாழ் சகோட யாழ் செங்கோட்டு யாழ் ஆகிய  பல வகை  யாழ்களைக் குறிக்கிறார். இவை முறையே 21, 19, 14, 7 நரம்புகளை உடையன.

****

இசைக்கு மயங்கிய யானை

மலைச் சாரல் பகுதியில் தினைப் பயிரைத் திண்ண ஒரு காட்டு யானை வந்தது. அங்குள்ள குறத்தி அழகான குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள். அதைக் கேட்டு மெய் மறந்து நின்ற யானை பயிரைச் சாப்பிட மறந்து போனதாம்:

ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி

பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்

குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது

படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென

மறம்புகல் மழகளிறு உறங்கும் (அகம்.102)

****

இசை என்பது கொடுமையை அகற்றி சாந்தத்தை உண்டு பண்ணும்

பாலை நிலத்தில் வாழும் கள்வர்கள் அவ்வழியாகச் செல்வோரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்வர். அப்பேற்பட்ட கல் நெஞ்சுடையோரும் பாலைப் பண்ணைக் கேட்டுக் கொலைத் தொழிலை மறந்தனராம்:

ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறு தலை பெயர்க்கும் மறுவின் பாலை (பொருந. 21-22)

****

 பேயையும் நரியையும் விரட்டும்

புண் பட்ட போர் வீரர்களை பேய்களிடம் இருந்து காப்பாற்ற காஞ்சிப் பண்ணையும், நரியை விரட்ட விளரிப் பண்ணையும் பாடியதாக புறநானூறு கூறுகிறது (பாடல் 281- 291)

***

தமிழ் மொழியை இசை, இயல், நாடகத் தமிழ் என்று பிரித்து முத்தமிழ் எனப் பெயரிட்டனர். யாழ், பறை, யாழ் பற்றிய நூல் ஆகியவற்றை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

****

 பரிபாடல்-12 வையை நதி பற்றிய பாடல்.

ஒத்த குழலின் ஒலி எழ முழவிமிழ்

மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்தளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்

என்ற வரிகளில்  மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, முழவு ஆகிய வாத்தியங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

****

காளிதாசனில் வரும் இசைக் குறிப்புகள்

इक्षुच्छायनिषादिन्यस्तस्य गोप्तुर्गुणोदयम्|

आकुमारकथोद्धातं शालिगोप्यो जगुर्यशः॥ ४-२० ரகு வம்சம்

நெல் வயல்களைக் காக்கும் பெண்கள் மன்னன் ரகுவின் புகழைப் பாடினார்கள் ; அவனது இளம் வயது தொடங்கி அவனது நற்குணங்கள் வரை எல்லாவற்றையும் பாடி மகிழ்ந்தார்கள் .

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் தினைப்புனத்தைக் காக்கும் பெண்கள் பாடிய செய்திகள் வருகின்றன .

ikṣucchāyaniṣādinyastasya gopturguṇodayam|

ākumārakathoddhātaṁ śāligopyo jaguryaśaḥ || 4-20

****

பெண் கள்தான் இசையை வளர்த்தனர் ;திருமண காலங்களில் மங்கள இசைப்பாடல்களை பாடினார்கள்

ஒரு அழகான காட்சியைக் காளிதாசன் வருணிக்கிறார் ன் . பெண்கள் தாளத்துக்கு மயில்கள் ஆடினவாம்

tīrasthalībarhibhirutkalāpaiḥ

prasnigdhakekairabhinandyamānam |

śrotreṣu saṁmūrcchati raktamāsām

gītānugam vāri mṛdaṅgavādyam  || 16-64

तीरस्थलीबर्हिभिरुत्कलापैः प्रस्निग्धकेकैरभिनन्द्यमानम्।

श्रोत्रेषु संमूर्च्छति रक्तमासाम् गीतानुगम् वारि  मृदङ्गवाद्यम् ॥ १६-६४

பெண்கள் ஆற்றுத் தண்ணீரில் கைகளை அடித்துத் தாள ஓசையை உண்டாக்கி விளையாடினார்கள் அவர்கள் பாடிய பாட்டுக்கு அது மிருதங்க இசையாக அமைந்தது . அதைக்கேட்ட மயில்கள் மேக முழக்கம் என்று எண்ணி அகவல் ஒலி எழுப்பி ஆடத் துவங்கின

இவ்வாறு இடி ஓசைக்கு மயில்கள் ஆடுவது தமிழிலும் உண்டு; சென்ற பகுதியில் கொடுக்கப்பட்ட கபிலர் பாடலுடன் இதை ஒப்பிடலாம்.

அதுமட்டுமல்ல இந்து வணிகர்கள் பாபிலோனியாவுக்கு மயில்களைக் கொண்டு சென்று மத்தளம் முழக்கி மயில்களை ஆடச் செய்தவுடன் மன்னர்கள்  அசந்துபோன செய்தி ஜாதகக்  கதைகளிலும் உள்ளது.

ஜாதகக் கதைகளை பாலி மொழியில் சங்க காலத்துக்கு முன்னர் எழுதப்பட்டவை

TO BE CONTINUED……………………….

TAGS– காளிதாசன் .சங்கத் தமிழ், இசை  நூல்கள்,  சங்கீதம் PART2

சிறுநீரகக் கோளாறா? மாலெகைட் இருக்கிறதே! (Post.14,896)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,896

Date uploaded in London – 24 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

28-5-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!

சிறுநீரகக் கோளாறாமாலெகைட் இருக்கிறதே!

ச. நாகராஜன் 

சிறுநீரகக் கோளாறினால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு மாற்றுவழி மருத்துவம் இருக்கிறது. மாலெகைட் என்ற உபரத்தினத்தை அணிவது தான் அது.

கோளாறு படிப்படியாக நீங்க உடனே வழி பிறக்கும். மூட்டு வீக்கம், ஆஸ்த்மா போன்ற நோய்களையும் நீக்கும் ஆற்றல் படைத்தது மாலெகைட்.

ஆழ்ந்த பச்சை வர்ணத்தில் சுருள் சுருளான வட்டங்களுடன் இருக்கும் இந்த உபரத்தினக் கல் இதை அணிபவரின் வாழ்வில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தும்.

நாளை என்ன நடக்குமோ என்று கதிகலங்கிப் பயப்படுவர்களுக்கான அதிசயக் கல் இது. அணிந்தவுடன்  உள்ளும் புறமும் மாற்றத்தை ஏற்படுத்தும்!

இது எதிர்மறை ஆற்றலை நீக்கி உடனடியாகப் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும். நம்பிக்கையை உருவாக்கும். செல்வத்தையும் வளத்தையும் ஈர்க்கும்.

மாலெகைட் என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை. இதன் பொருள் பச்சை என்பதாகும். மயில்தோகையில் பார்க்கும் பச்சை நிறத்தை இது ஒத்திருக்கும். இது மயிலின் கூரிய கண்களையும் ஒத்திருக்கும்,

பழங்கால எகிப்தியர்கள் இதை ‘ காட் ஸ்டோன்’ – கடவுளின் ரத்தினம் – GOD STONE-   என்றே அழைத்தனர்.

அரிதாகக் கிடைப்பது என்பதால் இதன் விலையும் சற்று அதிகம் தான்.

ஆன்மீக சாதகர்களுக்கு இது ஒரு விசேஷமான ரத்தினக் கல். அனாஹத என்ற இதய சக்கரத்தையும் (HEAR CHAKRA) விசுத்தி சக்கரத்தையும் (THROAT CHAKRA) இது தூண்டிவிட்டு ஆன்மீக வாழ்க்கையில் ஒளி ஏற்றும்.

சீன வாஸ்து கலையான பெங்சுயி படி இது உடல் மற்றும் உள்ளரீதியாக பிராண சக்தி எனப்படும் சி’ யை   (CHI) தரும்.

மாலெகைட் மோதிரம்மாலெகைட் கங்கணம்மார்பில் சங்கிலியில் பதித்துக் கொள்வது போன்று இப்படி எப்படி வேண்டுமானாலும் இதை அணிந்து கொள்ளலாம்.

அதிகமாகப் பயணப்படுபவர்கள் அதனால் பாதிக்கப்படுபவர்கள் என்றால் அவர்கள் இதை அணிந்து நிவாரணம் பெறலாம்.

ஒருமுனைப்படுத்தும் சக்தி இல்லாதவர்கள் தங்கள் மேஜையில் இதை வைத்துக் கொள்ளலாம். பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இது நல்ல அதிர்வலைகளை உடனடியாக தோலுக்குள் புகுத்தி விடும்.

கவசம் போன்ற இதை அணிந்தால் நினைக்கின்ற நல்ல விளைவுகளை இது ஏற்படுத்தும் என்பதே இதைப் பற்றிய சுருக்கமான விளக்கமாகும்!

***

CARTOONS FROM DECCAN CHRONICLE UP TO 23-8-2025

 CARTOONS FROM DECCAN CHRONICLE UP TO 23-8-2025.

POSTED BY LONDON SWAMINATHAN.

AMERICAN BUFFOON DOMINATES THE CARTOONS..

—SUBHAM—-

TAGS- CARTOONS ,DECCAN CHRONICLE,  23-8-2025

If you want a fine wife don’t pick her on a Sunday- Part 22 (Post No.14,895)

Written by London Swaminathan

Post No. 14,895

Date uploaded in London –  23 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

One thousand proverbs on woman, wife- part 22

421.If you want a fine wife don’t pick her on a Sunday.

422. Who hath a wife hath also an enemy.

423. The first wife is a broom, the second a lady.

424. When your wife tells you to jump off a roof, pray God that it is a low one.

425. Wring a wife’s and a hen’s neck if you want them good.

426. A woman and a hen as far as my neighbour’s house.

427. Confide to a woman and to a magpie what you want spreading in the market-place.

428. A woman and a mule must be made handsome by the mouth.

429. The woman and the pear, the one that falls is good.

430. Take heed of an ill woman and trust a good one with nothing.

431. Beware of the wicked woman and trust not at all in the good one.

432. A mule and a woman do that which is expected of them.

433. To tell a woman everything  she may not do is to tell her what she can do.

434. For the chaste woman god suffices.

435. Woman is a pill, and she must be gilded when taken in.

436. Woman is as hard to know as melon.

437. Woman is as little to be trusted as a magpie.

438. A nightingale will cease to sing before a woman is in want of words.

439. Woman is like your shadow follow her, she flies; fly from her she follows.

440.The counsel of a woman is not worth much, but he does not take it, is worth nothing.

–Spanish proverbs

*****************************

Why do I publish 1000 proverbs on women collected from different cultures? This is to teach a lesson to the Anti Manu Smrti idiots in the universities. Millions of women were burnt alive during the witch hunting by Christians. But the world knows only one Joan of Arc. In the whole wide world, greatest Tamil poet Bharati is the only one who never criticised women but praised them sky-high. Next comes Manu Smriti.

Here is what Manu says:

यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः ।
यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्राफलाः क्रियाः ॥ ५६ ॥

yatra nāryastu pūjyante ramante tatra devatāḥ |
yatraitāstu na pūjyante sarvāstatrāphalāḥ kriyāḥ || 56 ||

Where women are honoured, there the gods rejoice; where, on the other hand, they are not honoured, there all rites are fruitless.—(56)

****

शोचन्ति जामयो यत्र विनश्यत्याशु तत् कुलम् ।
न शोचन्ति तु यत्रैता वर्धते तद् हि सर्वदा ॥ ५७ ॥

śocanti jāmayo yatra vinaśyatyāśu tat kulam |
na śocanti tu yatraitā vardhate tad hi sarvadā || 57 ||

Where the female relations live in grief, the family soon wholly perishes; but that family where they are not unhappy ever prospers.—(57)

****

जामयो यानि गेहानि शपन्त्यप्रतिपूजिताः ।
तानि कृत्याहतानीव विनश्यन्ति समन्ततः ॥ ५८ ॥

jāmayo yāni gehāni śapantyapratipūjitāḥ |
tāni kṛtyāhatānīva vinaśyanti samantataḥ
 || 58 ||

The houses on which female relations, not being duly honoured, pronounce a curse, perish completely, as if destroyed by magic.—(58)

****

तस्मादेताः सदा पूज्या भूषणाच्छादनाशनैः ।
भूतिकामैर्नरैर्नित्यं सत्कारेषूत्सवेषु च ॥ ५९ ॥

tasmādetāḥ sadā pūjyā bhūṣaṇācchādanāśanaiḥ |
bhūtikāmairnarairnityaṃ satkāreṣūtsaveṣu ca
 || 59 ||

Hence men who seek (their own) welfare, should always honour women on holidays and festivals with (gifts of) ornaments, clothes, and (dainty) food.—(59)

(Manu also said women’s all body parts are always pure)

To be continued………………………….

Tags– One thousand, proverbs on woman, wife, part 22, spanish