சங்க இலக்கியத்திலும் காளிதாசன் நூல்களிலும் பிறை வழிபாடு (Post No.14,886)

Written by London Swaminathan

Post No. 14,886

Date uploaded in London –  20 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சூரியனையும் சந்திரனையும் மன்னருக்கு ஒப்பிடுவதை தமிழில் புறம் 6, 38, 56  மற்றும் மதுரைக்காஞ்சி 7,8 , கலி 100  ஆகிய பாடல்களில் காணலாம். மன்னரின் ஆண்மைக்கும் இருள் அகற்றி ஒளி தரும் ஆற்றலுக்கும் சூரியனை ஒப்பிட்டனர். சந்திரனை குளுமையான ஒளிதரும் தன்மைக்கு மன்னர்களை ஒப்பிட்டனர்.

நிலவினை பாம்பு விழுங்குதல்– கிரகணம்–நிலவில் குறு முயல் இருத்தல் போன்றவற்றையும் புலவர்கள் குறிப்பிட்டனர் . ஆயினும் சந்திரனை வழிபடும் வழக்கம் தனிச் சிறப்பானது; சுமேரியாவில் நன்னா என்ற பெயரில் வழிபட்டனர் இந்துக்கள் மட்டும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தனர் அதாவது பிறைச் சந்திரனையும், அதைத் தலை முடியில் சூடிய சிவனையும் ஒரே நேரத்தில் வணங்கினர்.

திங்கள், மதியம், பாற்கதிர் , நிலவு, நிலா என்ற பெயர்களில் சந்திரனைப் போற்றுகின்றனர்

தமிழில் பிறை வழிபாடு பற்றிய பாடல்கள்: குறு.178, நெடும் பல்லியத்தனார்; குறு. 307-கடம்பனூர் சாண்டில்யன்; அகம் 239,எயினந்தை மகன் இளங்கீரனார்; மதுரைக்கஞ்சி.வரி193,மாங்குடி மருதன்; சிலம்பு 2-38; புறம் 1, பாரதம் பாடிய பெருந்தேவனார்; முழு நிலவு-புறம் 60.

****

அயிரை பரந்த அம்தண் பழனத்து

ஏந்தெழில் மலர தூம்புடைத் திரள்கால்

ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்குஇவள்

இடைமுலைக் கிடந்தும் நடுங்க லானீர்

தொழுதுகாண் பிறையின் தோன்றி யாம்நுமக்கு

அரியம் ஆகிய காலைப்

பெரிய நோன்றனிர் நோகோ யானே.– குறுந்தொகை 178

தொழுதுகாண் பிறை = கன்னிப்பெண்கள் தொழுது காத்திருந்து பார்க்கும் மூன்றாம் பிறை.

****

வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச்

செவ்வாய் வானத் தையெனத் தோன்றி

இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ

மறந்தனர் கொல்லோ தாமே களிறுதன்

உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது

நிலையுயர் யாஅந் தொலையக் குத்தி

வெண்ணார் கொண்டு கைசுவைத் தண்ணாந்

தழுங்க னெஞ்சமொடு முழங்கும்

அத்த நீளிடை அழப்பிரிந் தோரே–. குறுந்தொகை 307

 சங்கு வளையல் உடைந்ததைப் போன்ற தோற்றத்தோடுபலரும் தொழசிவந்த வானத்தில்மாலைநேரத்தில்மூன்றாம் பிறை விரைந்து பிறந்து தோன்றியது.

***

திங்கள்/நிலவு  அவர் வருகையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது) என் சுணங்கணி மார்பிலுள்ள முத்தாரம் போலவும், சிலம்பில் வழியும் அருவி போலவும் திங்கள் தரும் நிலா வெளிச்சம் உள்ளது என்கிறாள் தலைவி. —அகம் 362

***

மதுரைக்காஞ்சி

அரசியல் பிழையா தறநெறி காட்டிப்

பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது

குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்

வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம்

குணமுதல் தோன்றிய ஆரிருள் மதியின் . . . .[195]

மேற்கில் தோன்றும் பிறைநிலா வளர்வது போல் உனது வெற்றிமுகம் வளரட்டும். கிழக்கில் தோன்றும் முழுநிலா தேய்வது போல உன் பகைவரும் அவர்களின் செல்வமும் தேயட்டும்.

****

புறம் 27.

தேய்த லுண்மையும் பெருக லுண்மையும்

மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும்

அறியா தோரையு மறியக் காட்டித்

திங்கட் புத்தே டிரிதரு முலகத்து

வல்லா ராயினும் வல்லுந ராயினும் —என்ற வரிகள் மூலம்

உறையூர் முதுகண்ணன் சாத்தனார், வாழ்க்கையின் உண்மை இயல்பினை எடுத்துரைக்கிறார் . இதில் புத்தேள் என்ற அடைமொழி மூலம் சந்திரனின் தெய்வத்  தன்மையையும் எடுத்துக்காட்டுகிறார்.

****

पितुः प्रयत्नात्स समग्रसंपदः शुभैः शरीरावयवैर्दिने दिने|

पुपोष वृद्धिं हरिदश्वदीधितेरनुप्रवेशादिव बालचन्द्रमाः॥ ३-२२

சூரியனின் கதிர்கள் பட்டு நிலவின் பிறை நாளுக்கு நாள் வளருவது போல தந்தை திலீபனின் கவனிப்பால் அஜன் வளர்ந்தான் ; இதை மேலே சொன்ன முதுகண்ணன் சாத்தனார் பாடலுடன் ஒப்பிடலாம்

pituḥ prayatnātsa samagrasaṁpadaḥ śubhaiḥ śarīrāvayavairdine dine|

pupoṣa vṛddhiṁ haridaśvadīdhiteranupraveśādiva bālacandramāḥ || 3-22

***

தமிழ் இலக்கியத்திலும் காளிதாஸனிலும் பெண்கள்தான் பிறையை வழிபட்ட செய்தி வருகிறது ; காளிதாசன் எழுதிய விக்ரம ஊர்வசீயத்தில் மஹாராணி நிலா வழிபாட்டுக்கான பூஜைப் பொருட்களைக் கொண்டுவரச் சொல்கிறாள் ; தோழிமார் சந்தனம் , பூ, இனிப்புகளைக் கொண்டுவருகிறார்கள். பூஜை முடிந்தவுடன் இனிப்புகளை மாணவகன் என்பவரிடம் கொடுக்கச் சொல்கிறாள் – (விக்ரம ஊர்வசீயம்- மூன்றாவது காட்சி)

***

सुते शिशावेव सुदर्शनाख्ये

दर्शात्ययेन्दुप्रियदर्शने सः।

मृगायताक्षो मृगयाविहारी

सिंहादवापद्विपदम् नृसिंहः॥ १८-३५

இந்துக்கள் உள்ளதை உள்ள படியே எழுதுவார்கள். த்ருவஸந்தி என்ற மன்னனை சிங்கம் அடித்துக் கொன்றுவிட்டது இதே போல வீர பாண்டியன் என்ற மன்னனை புலி அடித்துக் கொன்றதைத் திருவிளையாடல் புராணத்தில் காண்கிறோம் பரீட்சித் மன்னனை பாம்பு கடித்து  இறந்ததாக பாகவத புராணம் சொல்கிறது . இந்த ரகுவம்ச பாடலில் வேட்டையாடும்போது த்ருவஸந்தி என்ற மன்னனை சிங்கம் கொன்றதைச் சொல்லும்போது அவனுக்கு அப்போதுதான் காணுதற்கினிய பிறை சந்திரன் போல ஒரு மகன் பிறந்தான் என்று காளிதாசன் சொல்கிறான் . இது சுக்ல பக்ஷ பிறை தரிசனத்தைக் காட்டுகிறது

sute śiśāveva sudarśanākhye

darśātyayendupriyadarśane saḥ |

mṛgāyatākṣo mṛgayāvihārī

siṁhādavāpadvipadam nṛsiṁhaḥ || 18-35

இதே கருத்து ரகுவம்ச 2-73 பாடலிலும் உள்ளது

****

குமார சம்பவத்தில் உமையம்மையை வருணிக்கையில் சந்திரனுடன் ஒப்பிடுகிறார் ; அங்கே சிவ பெருமானிடத்தில் ஏற்கனவே ஒருபிறைச் சந்திரன்  இருப்பதையும் குறிப்பிடுகிறார்.

உமாவுக்குத் திருமண அலங்காரம் செய்யும் தோழி காலில் செந்நிறச் சாயம்பூசி விட்டு உன் கணவன் சிவன் தலை  மீதுள்ள சந்திரனை இதனால் அடி/ தொடு என்று ‘ஜோக்’ JOKE அடிக்கிறாள் . உடனே உமா அவளை ஒரு மலர்ச் சீண்டினால்  அடிக்கிறாள் — குமார சம்பவம்  7-19

***

“atha nayanasamutthaṃ jyotiratreriva dyauḥ surasaridiva tejo vahniniṣṭhayūtaimaśam |

marapatiku labhūtyai garbhamādhatta rāñjī gurubhirabhiniviṣṭaṃ lokapālānubhāvaiḥ || ”- Raghuvaṃśa of Kālidāsa: II/ 75

**

“tadanvaye śuddhimati prasūtaḥ śuddhimattaraḥ |

dilīpa iti rājendurinduḥ kṣīranidhāviva || ”- Raghuvaṃśa of Kālidāsa: I/ 12

Here both of the śloka says that the genesis of moon from the eyes of Atrī and the oceans.

சந்திரன் என்பது அத்ரி முனிவரின் கண்களிலிருந்து பிறந்ததாகவும் கடல் கடைந்த போது பாற்கடலிலிருந்து தோன்றியதாகவம் இரண்டு கதைகள் உண்டு இரண்டினையும் பாடல்களில் குறிப்பிடுகிறான் கவி; இவைகளும் நிலவின்  தெய்வீகத் தோற்றத்தைக் காட்டுகின்றன

****

பெண்களை வருணிக்கும் போது அவளுடைய முகம் சந்திரன் போல இருந்ததாக வருணிப்பது சங்கத் தமிழ் மற்றும் காளிதாசன் நூல்களில் வருகிறது

– 3-25- குமார சம்பவம், சாகுந்தலம்   Act 2-10,11, ருது சம்ஹாரம்  3-24/26`

தமிழ் :-கலி.  55, 56 ; இந்தக் குறிஞ்சிக் கலியை கபிலன் பாடியுள்ளார்

***

சந்திரனுக்கு நெருக்கமான பெண் ரோகிணி என்றும் தமிழர்கள் அந்த நாளில் கல்யாணம் செய்ததாகவும் அகநானூற்றில் காண்கிறோம். இதையும் காளிதாசன் விக்ரம ஊர்வசீயத்தில் சொல்கிறான் ; ஆக நல்ல நாள் பார்த்துக் கல்யாணம் செய்வது அந்தக்காலத்திலேயே இருந்துள்ளது. இவையெல்லாம் நிலவினை தெய்வ நிலைக்கு உயர்த்தியத்தைக் காட்டும் சான்றுகள் ஆகும்

***

சுமேரியர்கள் நன்னா என்று பெயரில் சந்திரனை வணங்கினர் . சங்கத் தமிழ்  நன்னன் என்ற  மன்னர் பெயர் இருக்கிறது 1300  ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ராஷ்டிர கூட மன்னரின் பெயர் நன்ன ராஜன் !

—subham—–

Tags- பிறை வழிபாடு, நிலவு, நன்னன், காளிதாஸன், moon worship

மதுரையில் உள்ள ஸத்சங்கங்களுக்கு ஆதரவு!- Part 13 (Post No.14,885)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,885

Date uploaded in London – 20 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

புதிய தொடர்!

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 13 (Last Part) 

ச. நாகராஜன்

மதுரையில் உள்ள ஸத்சங்கங்களுக்கு ஆதரவு! 

17

மதுரையில் ஏராளமான ஸத்சங்கங்களும், ஆன்மீக சபைகளும், மன்றங்களும், பஜனா மண்டலிகளும் உள்ளன.

இவை அனைத்தையும் தந்தையார் ஆதரித்து ஊக்குவித்ததால் இவற்றை நடத்தும் நல்லோர்கள் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதற்காக, உரை நிகழ்த்த அல்லது தலைமை தாங்குவதற்காக அல்லது நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்தச் செய்தியை தினமணியில் பிரசுரிப்பதற்காக இவர்கள் வருவது வழக்கம். பிரசாதங்களைத் தருவதற்காக கோவிலிலிருந்து பட்டர்கள், பூசாரிகள் வருவர்.

 தெற்காடிவீதியில் உள்ள திருப்புகழ் சபையைப் பற்றிப் பார்த்தோம்.

அடுத்து அங்கு மிக நன்றாக இயங்கி வந்த தெய்வ நெறிக் கழகம் பற்றிப் பார்ப்போம்.

 தெய்வநெறிக் கழகம்

ரிஷிகேசத்தில் உள்ள சிவானந்த ஆசிரமத்தை அமைத்து அங்கிருந்து தெய்வ நெறியைப் பரப்பியவர் சுவாமி சிவானந்தர். இவர் பத்தமடையைச் சேர்ந்தவர். இவர் பால் ஈடுபாடு கொண்ட எனது தந்தையார் இவரது புத்தகங்களை அனைத்தையும் கரைத்துக் குடித்தார். வாரந்தோறும் தெற்காடிவீதியில் ஞாயிறு அன்று நடக்கும் சத்சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்; பேசுவார். 

அதை நடத்தி வந்த திருநெல்வேலி சகோதரர்களான திருவாளர்கள் வானமாமலை, சேஷன், தி.கி. நாராயணன், சுந்தரம் ஆகியோர் மதுரைக்கே வந்து குடிபுகுந்தனர். வானமாமலைக்கு தினமணியின் உதவி ஆசிரியர் வேலையைக் கொடுத்தார் என் தந்தையார். சில காலம் தினமணியில் வேலை பார்த்த இவர் பின்னர் முழுநேர ஆன்மீகப் பணியில் ஈடுபடலானார். பின்னர் துறவியாக ஆனார்.

செப்டம்பர் முதல் வாரத்தில் நடக்கும் ஜெயந்தி விழாவில் நிச்சயமாக என் தந்தையார் ஒரு நாள் தலைமை உரை ஆற்றுவார்.

இங்கு ஹிந்தி வகுப்புகளும் சம்ஸ்கிருத வகுப்புகளும் இலவசமாக மாலை வேளைகளில் நடக்கும். திருமதி சந்தானம்ஜி என்பவர் மிகவும் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் பல வருடங்கள் இதை நடத்தி வந்தார்.18

பன்னிருதிருமுறை மன்றம்

அடுத்து தெற்கு ஆடி வீதியில் சைவ நெறி பரப்பி சிறப்பாகச் செயல்பட்ட மன்றம் பன்னிருதிருமுறை மன்றம் ஆகும். இதை நடந்த்தி வந்த ந.சீ.சுந்தரராமனும் அவரது தகப்பனாரும் என் தந்தை மீது அன்பும் மரியாதையும் கொண்டவர்கள்.

 பன்னிருதிருமுறை மன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோடு மன்றத்திற்கு உரிய ஆதரவையும் தந்து வந்தார் எனது தந்தையார்.

19

திருப்பாவை இசைப்பள்ளி

ராஜம்மாள் சுந்தரராஜனிடம் பயிற்சி பெற்ற விசாலாக்ஷி தெற்காடிவீதியில் திருப்பாவை இசைப்பள்ளி நடத்தலானார். இதற்கும் உரிய ஆதரவை வழங்கினார் எனது தந்தையார்.

20

சேதுராம் பஜனை மண்டலி

தானப்பமுதலித் தெருவில் சேதுராம் பஜனை மண்டலி நடந்து வந்தது.

வாரந்தோறும் ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து நெடுநேரம் நடக்கும் பஜனையில் உற்சாகமாக எங்கள் குடும்பம் ஈடுபடும். இதை சிறப்பாக நடத்திய குண்டுராவ் ஒரு வங்கியின் உயர் அதிகாரி

21 

இது தவிர மதுரையின் தெற்குப் பகுதியில் உள்ள ஏராளமான சத்சபைகள் பக்தியில் சிறந்த சௌராஷ்டிரப் பெருமக்களால் நடை பெற்று வந்தன. அதில் ஏராளமானோர் பங்கு பெறுவது வழக்கம்.

மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் நடன கோபால நாயகி மந்திர் சிறப்பாக அமைந்திருந்தது.

 இதையெல்லாம் நடந்தி வந்த பெருமக்கள் அடிக்கடி எங்கள் இல்லத்திற்கு வருவது வழக்கமானது.

 பிரசாதங்களை சிரத்தையுடன் கொண்டு வந்து தருவதில் முன்னணியில் இருந்தார் மொட்டை கோபுர முனியாண்டி கோவில் பூசாரி.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தலைமை பட்டர் திரு ம.க.சுந்தரேச பட்டர் .அடிக்கடி எங்கள் வீட்டில் பார்க்கப்படும் முக்கியஸ்தர். 

தினமும் மீனாட்சிஅம்மன் கோவில் போவது எங்களுக்கு வழக்கமானது. அதே போல் வடக்குமாசிவீதி மேலமாசிவீதி தெருமுனை சந்திப்பில் அமைந்துள்ள  நேருஆலால சுந்தர விநாயகர் கோவிலுக்கும் தினமும் போவது கட்டாயப் பழக்கமானது.

மொத்தத்தில் மதுரையை ஆன்மீக மதுரையாக ஆக்கியதில் ஒரு சிறப்பான பங்கு எனது தந்தையாருக்கு உண்டு.

ஒரே ஒரு கட்டுரை எழுதலாம் என்று எண்ணி ஆரம்பிக்கப்பட்டது இது.

இப்போது 21 பகுதிகளை அடைந்து விட்டது.

ஒரு அதிசய புருஷரைப் பற்றி விவரிப்பதென்றால் இது சரிதானே!

இதைப் பொறுமையுடன் படித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.

முற்றும்

******

Tags– அதிசய புருஷர், திரு வெ.சந்தானம் – 13

When a girl is born all four walls weep –Part 18 (Post No.14,884)

Written by London Swaminathan

Post No. 14,884

Date uploaded in London –  19 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

One Thousand Proverbs on Woman, Wife and Daughter –Part 18

341. A girl’s honesty is like snow; when it melts the whiteness is no longer seen.

342. Who beats his wife beats his own head; who beats his mule beats his purse.

343.A tent without a wife is like a fiddle without a string.

344. You will never find father and mother again, but wives as many as you like.

345. A woman cuts her wisdom teeth when she is dead.

346. When God made the woman, he put beside her the distaff to distinguish from man.

347. Woman’s eyes are at one’s purse.

348. A woman’s petticoat is the devil’s binder.

349.It is not good to be the driver of the white horses or the servant of women.

 350. Even the best of women has still a devil’s rib in her.

351.Women learn how to weep in order to lie.

—Romanian

3512. That which a girl does not know adorns her.

353. When a girl is born all four walls weep.

354. A girl is like a shadow; follow her she runs; flee from her, she follows you.

355. A girl may be allowed to sin, otherwise she would have nothing to repent.

356. A girl is only born when she is fit to get married.

357. A girl’s shame only reaches the threshold, directly she steps over she forgets it.

358. Freedom spoils a good wife.

359. Having a good wife and a rich cabbage soup, other seek not.

360. Do not wish for any other blessing  than a good wife and rich soup.

—Russian proverbs

To be continued……………………..

Tags- One Thousand Proverbs, on Woman, Wife and Daughter , Part 18

THE QUEEN AND THE PRINCE – BEAUTIFUL SANSKRIT POETRY IN NEPAL PILLAR EPIGRAPH (Post No.14,883)

Written by London Swaminathan

Post No. 14,883

Date uploaded in London –  19 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 THE CHANGU NARAYAN PILLAR INSCRIPTION , NEPAL 464 CE

THE QUEEN AND THE PRINCE

His wife was the grand sree Rajyavatii

She was the offspring of a pure family, a Lakshmii

To his Visnu with all her virtues. And he loved her

More than life itself.

… he had shed the lustre of his fame over this whole world, but then he left

For the realm of the gods—it was peaceful like a trip

To a pleasure garden—but his wife suddenly collapsed

Wild with the fever of grief… utterly immobilised—

A woman before her separation from her husband

Was ever busy with rites and rituals and the feeding of the gods

Now this Queen Rajyavatii—called the king’s wife

But really his royal power incarnate

Was about to follow her husband,

Her thoughts fixed on the other world.

She came to her son, Prince Maanadeva, a man

Of faultless conduct, in beauty like autumn moon

And like the moon a delight to all the people

The words catching in her throat, drawing sighs

So slowly her, her face stained with tears she shed,

With deep emotion, “Your father has gone to Heaven

O my son, there is no reason for me to live,

Now that your father has passed away. My dear son,

Rule the kingdom, I will take the path,

My husband took, before the day is out.

How could I live without my husband, held back by the hope—

Which long years of mutual pleasure still arouse

Of being reunited with him, when that never could be

More than a dream or mirage? I am going “ she said

With determination. But then her broken hearted son

Touched his head to her feet in devotion and firmly spoke.

“What use would I have for pleasures, what possible joy

In living if I parted from you?

First I willgiveup my life—and only then

Can you go from this world to heaven”. These words of his

Moistened with tears  from his lotus eyes, were the cords

Of a net that trappedher like a bird. And trapped she she stayed….

Sheldon Pollock

Sheldon Pollock has translated the Sanskrit poem into English  The inscription shows Kalidasa’s influence.

This epigraph and earlier Kumara Gupta’s Sanskrit epigraphs clearly show Kalidasa’s influence over a vast area from Madhya Pradesh to Nepal. More over irt shows that Kalidasa must have lived several centuries before these poems. Tha proved Art Historian Sivaramamurti’s view that Kalidasa lived before Gupta period because we could see his influence in Gupta sculptures.

The important points to be noted here are similes used by the poet. Kalidasa used similes mostly in good auspicious context. Here similes are not missed even it is about king’s death and queen’s grief.

Around the same time, we have over 1000 Sanskrit inscriptions from Central Asia to Southeast Asia. We know that Sanskrit is spoken or understood over a vast area. Moreover, Vedic sacrifices and Vedic Gods are also mentioned in those inscriptions.

***

The Cangu Narayan Pillar Inscription is a significant ancient inscription found in Nepal, primarily documenting the reign of King Mānadeva and his lineage. It is located at the Cangu Narayan Temple, a UNESCO World Heritage site. The inscription is divided into three sections, each etched on a different side of the pillar. These sections provide insights into the political, social, and religious landscape of the Licchavi period in Nepal.  

Key aspects of the inscription: 

  • King Mānadeva’s Reign:

The inscription details King Mānavanadeva’s lineage, his mother Queen Rājyavatī, and his accomplishments. 

  • Social and Religious Context:

It sheds light on the social structure, religious beliefs, and practices of the time, including references to deities like Vishnu (Hari), Lakshmi, and the concept of sati (widow immolation). 

  • Political Events:

The inscription also records military campaigns and territorial conquests during Mānadeva’s reign, particularly his western expedition. 

  • Licchavi Dynasty:

The inscription provides valuable evidence about the Licchavi dynasty, which played a crucial role in Nepali history. 

Specific details from the inscription sections:

  • East Side:

Describes King Vṛṣadeva, his virtues, and his rule, highlighting his prowess and the well-behaved nature of his sons. 

  • North Side:

Focuses on Queen Rājyavatī, her grief over her husband’s death, and her son Mānadeva’s ascension to the throne. 

  • West Side:

Narrates Mānadeva’s military expedition to the western lands, his victory over a rebellious feudatory, and his generosity towards Brahmins. 

The inscription is a crucial historical document for understanding the Licchavi period in Nepal, offering valuable information about the political, social, and religious landscape of the time. 

–subham— 

Tags- Nepal, Changu Narayan Pillar, Sanskrit, Poetry inscription, Queen and Prince,

அம்மா  நீ போய்விட்டால் ,நானும் இறந்து விடுவேன்! அற்புதக் கல்வெட்டு! (Post.14,882)

Written by London Swaminathan

Post No. 14,882

Date uploaded in London –  19 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நேபாளநாட்டில் அற்புத ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு ஒன்று இருக்கிறது  அதை சங்கு நாராயணன் தூண் கல்வெட்டு என்று அழைப்பர். 1600 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருத மொழியில் கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளது இதே காலத்தில் இந்தோனேஷியாவின் போர்னியோ தீவின் அடர்ந்த காட்டிற்குள் பூர்ண வர்மனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டும் மத்திய ஆசியாவில் பல கல்வெட்டுகளும் வியட்நாமில் இதற்கு முன்னரே ஸ்ரீமாறன் என்ற பாண்டியனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டும் இருக்கின்றன.  1600 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருத மொழிக் கல்வெட்டு உலகின் பெரும்பகுதியில் இருப்பதால் பல லட்சம் சதுரமைல் பரப்பில் சம்ஸ்க்ருத மொழி அறிவு இருந்தது தெளிவாகிறது; சுமார் இருபது நாடுகளில் அப்போது சம்ஸ்க்ருத மொழி பேசப்பட்டிருக்கிறது அலெக்ஸ்சாண்டர் ஆக்கிரமித்த கிரேக்கப்  யிரதேசங்களில் கூட இவ்வளவு கிரேக்கக் கல்வெட்டுகள் கிடையாது!

தென்  கிழக்காசியாவில் ஏழு நாடுகளில் மட்டும் 800  கல்வெட்டுகள் கிடைத்து நூலாகவும் வெளிவந்துள்ளதால் கல்வெட்டு இலக்கியத்தில் ஸம்ஸ்க்ருதத்தை மிஞ்சும் மொழி உலகில் இல்லை. தமிழ் மொழியில் 60,000+++ கல்வெட்டுகள் இருப்பது உண்மைதான்; ஆனால் அவை காலத்தால் பிந்தியவை; பெரும்பாலும் கோவிலில் உள்ள இந்து சமயக் கல்வெட்டுகள்தான். ஒரு வரி இரண்டு வரிகளில் உள்ள 30, 40 பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் சுத்தத் தமிழில் இல்லாமல் பிராகிருதம் கலந்த கொச்சை மொழிக் கல்வெட்டுகளாகவே உள்ளன

இதோ சங்கு நாராயண கல்வெட்டில் மஹாராணிக்கும் இளவரசனுக்கும் இடையே நடந்த உரையாடல்:

அவரது மனைவியோ மாண்புமிகு மஹாராணி ராஜ்யவதீ,

உயரகுலப் பெண்மணி லெட்சுமி போன்ற அவரது குணநலங்கள் விஷ்ணுவுக்கு (அரசனுக்கு) வாய்த்தது. அவரோ உயிரினும் மேலாக அவளை நேசித்தான்.

அவர் தனது புகழ ஒளியை பூமி முழுதும் பரப்பினார் பின்னர் இறைவன் உலகத்துக்குச் சென்றுவிட்டார் – அமைதியான பயணம் அது- தேவலோக நந்தவனத்துக்குச் செல்வது போல — ஆயினும் மனைவியோ மூர்ச்சித்து விழுந்து விட்டாள்.

துயரம் எனும் நோய் அவளைப் பீடித்தது – செயலிழந்து போனாள்

கணவனைப் பிரிவதற்கு முன்னர் செயல் வீரர் அவள் அல்லும் பகலும் இறைவனுக்குரிய சடங்குகளில் நேரம் செலவிட்ட பெருமகள்!  

இப்போது மஹாராணி என்ற இந்த ராஜ்யவதீ,

அவர் விட்டுச் சென்ற ராஜ்யத்துக்கு அதிபதி ,

அவரைப் பின்தொடர்ந்து செல்ல  மேலுகத்தின் மீது

சிந்தனையைத் திருப்பினாள்.

மகன் மானதேவனிடம் வந்தாள்அவன் மாசுமருவற்ற தூய ஒழுக்க சீலன்சரத் சந்திரகால நிலவு போன்ற முகமுடையோன்நிலவு போலவே காண்போருக்கு மகிழ்ச்சியும் தந்தோன் .

வார்த்தைகள் தொண்டையை அடைத்தன;பெருமூச்சு எழுந்தது,

கண்ணீர் ததும்பிய முகத்துடன் செப்பினாள்:

என்னருமை மகனே ! இனி நான் வாழ்வதற்கு இயலாது ;

உனது தந்தை மேலுலகம் சென்றுவிட்டார் ,

என் இனிய மகனேநாட்டை ஆள்வாயாகுகநானும் அவர் சென்ற பாதையில் செல்வேன். பொழுது விடிவதற்குள் புறப்படப் போகிறேன் .கணவன் இல்லாதபோது காரிகை வாழ்வது முடியாது . நீண்ட காலம் இணைந்து நடாத்திய இன்பமயமான இல்லற வாழ்வு கானல் நீராகி விட்டது;கனவாகப் போய்விட்டது ;

இதோ போகிறேன் — உறுதியான சொற்களை உதிர்த்தாள்.

மனமுடைந்து போன மகன் பயபக்தியுடன் அவனது தலையைத் தாழ்த்தி அவளது பாத கமலங்களைத் தொட்டான்.

அம்மா உன்னைப் பிரிந்து நான் என்ன சுகம் காணப்போகிறேன் பிரிந்த பின்னர் என்ன இன்பம் கிடைக்கப் போகிறது முதலில்  நான் உயிர் துறக்கிறேன் ,அதற்குப் பின்னர்தான் நீ சுவர்க்கத்துக்குச் செல்ல முடியும் என்று அவன் புலம்பவும்  அவனது தாமரைக் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் உதிர்ந்தன ;அவையே  பறவைகளை பிடிக்க உதவும்  வலையாக மாறி அந்தப் பெண்மணியையும் சிக்க வைத்தது;  அவள் (பூவுலகில்) தங்கிவிட்டாள்.

(ஷெல்டன் பொல்லாக் என்ற சர்ச்சைக்குரிய அமெரிக்க சம்ஸ்க்ருத அறிஞர் இந்தக் கவிதைக் கல்வெட்டினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்._

  இந்தக் கல்வெட்டு நேபாள நாட்டு ராஜ வம்சத்தினரின் ஸம்ஸ்க்ருதப் புலமையைத் தெரிவிப்பதோடு குடும்ப உறவுகளையும் காட்டுகிறது ;பூதப் பாண்டியன் தேவி என்ற மஹாராணி, கணவன் இறந்தபோது தீப்பாய முனைந்தாள்; அறவோர் பலர் தடுத்துப்பார்த்தனர் ; அவள் கேட்கவில்லை அந்தப் பாண்டிய மஹாராணி தீப்பாய்ந்து உயிர்நீத்த செய்தியைப் புறநானூற்றுக்குப் பாடல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன  . இப்போது எனக்கு ஒரு கருத்து தோன்றுகிறது; தசரதன் இறந்தபோது அவனது மனைவிகள் உயிர் துறக்கவில்லை; மஹாபாரதத்தில் குந்தி தேவியும்  சதி முறையில் தீப்பாய்ந்து இறக்கவில்லை; ஆகையால் மகன்கள் இருந்தால் அவர்களுக்காகத் தாய்மார்கள் உயிர் வாழ்ந்தது தெரிகிறது பூதப் பாண்டியனைத் தீப்பாயாதே என்று சொன்னவர்கள் பட்டியலில் மகன் பற்றிய குறிப்பு இல்லை.

–subham—

Tags- நேபாள கல்வெட்டு, சங்கு நாராயணன் தூண் கல்வெட்டு, சம்ஸ்க்ருத மொழி

மதுரை ஆதீன கர்த்தர் ஶ்ரீ சோமசுந்தர தேசிகர் (Post.14,881)- Part 12

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,881

Date uploaded in London – 19 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

   Madurai V.SantanamFreedom Fighter and News Editor Dinamani News paper,  passed away on the Independence Day  15-8-1998, after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.

 புதிய தொடர்!

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 12 

ச. நாகராஜன்

ஶ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதரின் ராதா கல்யாணம்!

V Santanam and Sri Gopalakrishna Bhagavathar 

14

சைவ சமயத்தை வளர்க்கும் எல்லா ஆதீனங்களின் ஆதீனகர்த்தர்கள் எனது தந்தையாரிடம் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தார்கள். முக்கியமாக திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் ஏராளமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.

இவற்றில் திருமந்திர மாநாடு நடக்கும் போது அதைத் துவக்கி வைத்தும் சொற்பொழிவு ஆற்றியும் வருவது எனது தந்தையாரின் வழக்கம்.

அவரது உரைகள் திருமந்திர மாநாட்டு மலரில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

நானும் எனது தந்தையுடன் கூடவே செல்வேன். அந்தக் காலத்தில் ரயில் பயணம் மிக மெதுவாக இருக்கும். ஒரு பை, ஒரு கூஜாவில் தண்ணீர், ஒரு பெட்ஷீட், தலையணை ஆகியவற்றுடன்  பயணம் சொகுசாக இருக்கும்.

ஆதீனங்களில் மிக நல்ல வரவேற்பு கிடைக்கும்.

நிறைய புத்தகங்களை எனது தந்தையார் வாங்குவது வழக்கம்.

அது இன்றளவும் எங்கள் வீட்டின் புத்தக அலமாரியில் சிறந்த பொக்கிஷங்களாக உள்ளன.

15

மதுரை ஆதீன கர்த்தர் ஶ்ரீ சோமசுந்தர தேசிகர் சைவ சித்தாந்த விளக்கத்தில் தேர்ந்தவர். மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் கூட்டு வழிபாடு நடத்துவது வழக்கம்.

அவர் எனது தந்தையாருக்குச் சிறந்த பட்டம் அளித்து கௌரவித்தார்.

அவருடனான எனது தொடர்பு வெகுவாக வலுப்பட்டது.

யாரையும் உணவருந்தும் போது அவர் அனுமதிப்பதில்லை. ஆனால் அவர் என்னை வரச்சொல்லி நீ எல்லாம் வரலாம் என்றார். அப்படி ஒரு கருணை. அவரை சேலத்தில் நடந்த ஹிந்து ஆலயப் பாதுகாப்பு மாநாடு விஷயமாக அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அந்த மாபெரும் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.

என்னை கவலூரிலிருந்த நாடி ஜோசியருக்கு அவர் மடத்திற்கு வந்த போது அறிமுகப்படுத்தி என்னை அவரைப் பார்க்குமாறும் அறிவுறுத்தினார்.

விருதுநகர் அருகே உள்ள கவலூருக்குச் சென்றேன். ஒரே கூட்டம்.

ஆனால் நாடி ஜோதிடர் என்னைக் கண்டவுடன் அருகில் அழைத்து எனது முன் ஜென்மம் உள்ளிட்ட பல அரிய விஷயங்களைக் கூறி கடுக்காய் மையில் எழுதியும் தந்தார்.

‘அன்னை அணிவிரல் மோதிரம் மால் உறங்கும் பஞ்சணை அரசன் என்னும் திருநாமம் – நாகராஜன் – ‘என்று என் பெயரைக் கூறிய அவர் தீர்க்கமாக நான் பிறந்த வருடம்  மற்றும் முன் ஜென்மம் பற்றி விரிவாகக் கூறினார். இது அதிசயமாக இருந்தது.

மதுரை ஆதீனகர்த்தரிடம் சென்று என் நன்றியைத் தெரிவித்தேன்.

அவர் இறந்தவர்களுடன் பேசும் பிளாஞ்செட் பேப்பரையும் அதில் ஆர்வமுள்ளவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

எங்களுக்கும் அதில் ஆர்வம் பிறக்கவே மிகத் தீவிரமாக அதில் ஈடுபடலானோம்.

தினமும் இறந்த ஒருவரிடம் பேசலானோம். நூற்றுக்கணக்கான சம்பவங்கள் உண்டு.

இரண்டை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

ஒரு முறை என் தாயாரின் தந்தையாரை – எனது தாத்தாவை அழைத்தோம். ஒரு குறிப்பிட்ட கருத்தைச் சொன்ன போது அவர், “அசட்டு பிசட்டுன்னு பேசாதே” என்றார்

இதைக் கேட்ட எனது தாயார் இது என் அப்பா வழக்கமாகச் சொல்லும் வார்த்தை” என்று குறிப்பிட்டார். எங்கள் அனைவருக்கும் இந்த வார்த்தையே தெரியாது. ஆக வந்தவர் எனது தாத்தாவே என்பது தெரிந்தது.

இன்னொரு சம்பவம்.

எனது தந்தையாரின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். தீவிர கம்யூனிஸ்ட். பல நூல்களை எழுதி இலக்கிய உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்.

நாங்கள் சிறுவர்களாக இருந்த போது அவர் வீட்டில் விளையாடப் போவோம் அடிக்கடி.

ஒரு நாள் அவர் வீட்டு வாசலில் நின்று எங்களை அழைத்திருக்கிறார்.

நாங்கள் உள்ளே வாசலே தெரியாத ஒரு இடத்தில் இருந்து பிளாஞ்செட்டில் பேசிக் கொண்டிருந்தோம்.

திடீரென ஒரு செய்தி வந்தது பிளாஞ்செட்டில்.

“வாசலில் எஸ்.ஆர். கே நிற்கிறார் பார். அவரை உள்ளே வரச் சொல்” எஸ். ஆர். கே என்பது எஸ்.ராமகிருஷ்ணனை சுருக்கமாக உலகம் அழைக்கும் விதம்.

ஆச்சரியப்பட்ட நாங்கள் வாசலுக்கு விரைந்தோம். அவர் நின்று கொண்டிருந்தார்.

:என்னடா செய்றீங்க” என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தார்.

நாங்கள், “இதோ பாருங்கள் பிளாஞ்செட். நீங்கள் வருவதைக் கூட இப்போது இதில் தான் செய்தி வந்தது” என்று வியப்புடன் கூவினோம்.

“இதெல்லாம் வைக்கக் கூடாதுடா” என்று அவர் எங்களிடம் கூற பிளாஞ்செட்டில் செய்தி வந்தது.

“முதலில் அவரை வணக்கம் சொல்லச் சொல்”

இதைப் பார்த்த அவர் வெளியே சென்று விட்டார். அவருக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.

இப்படி ஏராளமான அனுபவங்கள்.

மதுரை ஆதீனம் சிறந்த பேச்சாளர். நுணுக்கமான தெய்வீக தத்துவங்களை காலத்திற்கேற்றபடி விளக்குபவர். அவரது பேச்சுக்கள் தினமணியில் வெளியாகும். தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள அவரது மடத்திற்கு அடிக்கடி போவது வழக்கமானது.

 V Santanam Speaking; P T Rajan is also in the picture.

16

ஆவியுடன் பேசிய அனுபவத்தைக் கூறும் போது இன்னொரு சம்பவத்தின் நினைவும் வருகிறது.

மதுரையில் தெற்கு ஆடி வீதியில் முதலில் உள்ள சபை திருப்புகழ் சபை, இதைத் திறம்பட நிர்வகித்து ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தியவர் திருப்புகழ் தியாகராஜன். இவர் தந்தையாரின் மிக் மிக நெருங்கிய நண்பர்.

திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவை இவரே ஏற்பாடு செய்வார். பல்லாயிரக் கணக்கில்  மக்கள் திரள் திருப்புகழ் சபை மண்டபத்தில் ஆடி வீதியில் கூடும். பல நிகழ்ச்சிகளுக்கு என் தந்தையார் தலைமை வகித்திருக்கிறார்.

வாரியார் சுவாமிகள் தந்தைக்கு நெருக்கமானவர். அவரது நீண்ட சொற்பொழிவுகளும் தினமணியில் தவறாது இடம் பெறும்.

வாரந்தோறும் தவறாமல் வெள்ளிக்கிழமை அன்று திருப்புகழ் சபையில் திருப்புகழ் பஜனை மிக மிக அருமையாக நடைபெறும் இதில் தவறாது எனது தந்தை, தாய், சகோதரர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

நிறக, ஒரு சோகமான சம்பவம் நடந்தது. திருப்புகழ் தியாகராஜனின் மூத்த குமாரர் – வயதில் இளைஞர் திடீரென மரணமடைந்தார்.

இதை அவரால் தாஙகவே முடியவில்லை.

அவரது துக்கத்தைத் தணிக்க யாராலும் முடியவில்லை.

இரவு சுமார் ஒன்பது மணிக்கு கோபாலகொத்தன் தெருவில் இருந்த அவர் வீட்டிற்கு அடிக்கடி செல்வது என் தந்தையாரின் வழக்கம். அவருக்கு ஆறுதல்  கூறச் சென்ற போது இந்த பிளாஞ்செட் அனுபவம் அவருக்குத் தெரிய வரவே தனது மகனுடன் அவர் பேசலானார். இதனால் அவருக்குப் பெரிய் ஆறுதல் கிடைத்தது.

எனது தந்தையுடன் நானும் சென்றதனால் இதைப் பார்க்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

நீண்ட காலம் திருப்புகழ் பாடுவதிலும் அதைப் பரப்புவதிலும் ஈடுபட்ட நல்லவர் திருப்புகழ் தியாகராஜன்.

பின்காலத்தில் ஆவிகளுடன் அதிகத் தொடர்பு கூடாது என்று பல பெரியோர்களும் கூறவே நாங்கள் பேசுவதை விட்டு விட்டோம்.

அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடரின் ஒரு பாகத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்றே எண்ணுகிறேன்.

ஓரிரு கட்டுரை எழுதப் போய் இப்போது 12 கட்டுரைகள் ஆகி விட்டன.

***

அழகிகளுக்கு பட்டுப்புடவை கொடுத்தது யார்? Beautiful Mandasor Epigraph (436 CE)- Post.14,880

Written by London Swaminathan

Post No. 14,880

Date uploaded in London –  18 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Before going into my Tamil translation let us look at the English translation of Sheldon Pollock ; He is a controversial American Sanskrit scholar born in 1948; his outbursts against the ruling BJP and Hindutva politics during his tenure with Colombia university landed him in a big controversy; Other scholars like Rajiv Malhotra rebutted his accusations.

Poetry from Inscriptions (from A Treasury of Sanskrit Poetry by A N D Haksar)

The Mandasor Epigraph (436 CE) in Sanskrit

The Weavers of Lata

…in the Land of Laata, the tress bend

Under the weight of heir flowers

There are beautiful temples, royal halls, holy monasteries;

But the world-famous craftsmen of Laata

Left the land of theirs and its wooded mountains.

Attracted by the good king of this region.

Despite the hardships of the journey,

They came with great hopes to Dasapura—at first

Ony in their daydreams, and then with children and kin.

They formed close associations

With their neighbours; day by day friendship grew.

The kings treated them as their own sons

And they lived happily in Dasapura.

A girl can be young and pretty

Gold at neck, flowers in her hair and

Etel in her mouth-yet the real beauty only comes

When she puts on her pair of silks.

And makes the silk that adorns

The land far and wide-soft silk,

With a riot of colours, a true delight to see?

These craftsmen from Laata.

Yet knowing that the life of man and wealth

However vast, are far more fragile,

Than a petal blown from the ear of forest spirit

They made a firm and good decision.

While King Kumara Gupta was ruling the Earth

And Bandhuvarman was the Lord

Protecting the rich town of Dasapura.

With the wealth acquired from their craft

The guild of slik weavers  would have a temple built

A noble temple like no other, in honour of the blazing Sun

In the year four hundred ninety three

From the founding of the Malawa tribe

During the time of the year

When clouds begin to rumble

In the month of Sahasya, in the white fortnight

The lucky thirtent day, this place was opened, with hymns  of praise.

As long as Lord Siva bears his high pile

Of matted yellow hair and pure crescent moon within;

As long as the bright lotus garland hangs

At Vishnu’s shoulder, this noble house will last.

By order of the guild and with true devotion

Thie House of the Sun (temple) was built;

And with great care the above was composed

By Vatsabhatti.

–translated from Sanskrit by Sheldon Pollock

*****

Mandsaur Inscription of Kumaragupta (in Madya Pradesh)

  • It was written by Vatsabhatta during the period of Kumaragupta (5th century).
  • The starting of the inscription praises the sun god and asks for his blessings.
  • The Mandsaur inscription refers to Kumara Gupta ‘reginging over the whole earth’ (kumaragupte prithvim prasasti).
  • It mentions about many silk weavers migrating from Lata (Gujarat) to Dasapura.
  • Some took up other occupations, while those who kept to their original craft formed a guild.
  • Tantuvaya was the name given to the guild mentioned in Kumargupta’s Mandsore inscription.
  • During his reign, the guild of silk-weavers built a temple dedicated to Surya in Dashapura in the Malava Samvat (436 CE). The same guild repaired this temple in 473 CE.

****

அழகிகளுக்கு பட்டுப்புடவை கொடுத்தது யார்? குப்தர் கால கல்வெட்டு தரும் செய்தி

மாண்டசூர் என்னும் ஊர் மத்தியப் பிரதேசத்தில் உள்ளது . அங்கு குமார குப்தனின் (436 CE) கல்வெட்டு இருக்கிறது அவர் 1600 ஆண்டுகளுக்கு முன்னர். ஆட்சி செய்த மாபெரும் மன்னர்.  அவரது ஆட்சிக் காலத்தில் வத்ஸப்பட்டி என்பவர் சம்ஸ்க்ருத மொழியில் கவிதை நடையில் எழுதிய அழகான கல்வெட்டுப் பாடல் இரண்டு முக்கிய செய்திகளைத் தெரிவிக்கிறது

1.சூரியன் கோவில்  கட்டப்பட்ட செய்தி.

2.நெசவாளர்களின் சங்கம்.

இதோ கல்வெட்டின் சாரம் :

குஜராத்தில் உள்ள லாட தேசத்திலிருந்து மத்தியப்பிரதேசத்தில் வந்து குடியமர்ந்த நெசவாளர்கள் சொல்கிறார்கள் ,

எங்கள் லாட தேசத்தில்  பூக்களின் சுமை தாங்காமல் மரங்கள்

தலை வணங்கி நிற்கின்றன

அழகான கோவில்களும் அரண்மனை மண்டபங்களும் புனிதமான மடங்களும் அங்கே உண்டு.

ஆயினும் உலகப்புகழ்பெற்ற லாட நாட்டுப் பட்டுத்துணி நெசவாளர்கள்  (நாங்கள்)

காடுகள் சூழ்ந்த மலைகளையும் , சொந்த நாட்டையும் விட்டு இங்கே  வந்தோம்  .

இந்த நாட்டு நல்ல அரசன் எங்களை ஈர்த்தான் ; எத்தனையோ இடர்ப்பாடுகளைக் கடந்து தாசபுரத்துக்கு

பெரும் நம்பிக்கையுடன் வந்தோம்.

முதலில் கனவாக இருந்த விஷயம் பின்னால் பிள்ளைக்குட்டிகளுடன் புறப்படும் விஷயம் ஆனது.

அங்குள்ள மக்களுடன் நெசவாளர்கள் நெருங்கிய தொடர்பு வைத்ததால் நாளுக்கு நாள் நட்புறவு ஓங்கியது ;

மன்னர்களோ தங்களுடைய சொந்தக் குழந்தையைப்போல

மக்களை நடத்தினார்கள்; எல்லோருக்கும் இடையறாது இன்பமே கிட்டியது.

ஒரு பெண் அழகாகப் பிறக்கலாம் ,

தலையில் பூச்சுடலாம்,கழுத்தில் தங்க நகை அணியலாம் ;

வாயில் வெற்றிலை மணக்கலாம் —  ஆயினும் எப்போது உண்மை அழகு வருகிறது என்றால் ….

அவள் உடல் மீது இரண்டு பட்டுத்துணிகளைப் போர்த்தும் போதுதான் !

நீண்ட நெடு நிலப்பரப்பு கொண்ட நாடு முழுவதற்கும் அழகூட்டும் பட்டுத்துணிகளை யார் நெய்கிறார்கள் ?

கண்களுக்கு விருந்து ! வண்ணங்களோ (கலர்களோ) எக்கச்சக்கம் !

லாட நாட்டு நெசவாளர்கள் தான் !

மனிதனின் வாழக்கையும் செல்வமும் எவ்வளவு அதிகம் இருந்தாலும், அவை எல்லாம் கானக தேவதையின் காதிலிருந்து பறந்து வந்த ஒரு மலரின் இதழ் போல

அழியக்கூடியதே என்பதை அறிந்தும் அவர்கள் ஒரு நல்ல முடிவு எடுத்தனர்.

குமாரகுப்தன்  ஆளும்  நாட்டில்  , தாசபுரம்  என்னும் செல்வமிகு நகரினை பந்துவர்மன் ஆளும் நாளில்

வெசவாளர் வணிகக்குழுவினரின் தொழில் மூலம் கிடைத்த

பணத்தைக்கொண்டு வேறெங்க்கும் இல்லாத அளவுக்கு ஒரு ஒப்பற்ற கோவிலை — ஒளிதரும் சூரிய தேவனுக்கு – எழுப்ப வேண்டும் என்று!

மாளவவம்சம் தோன்றியது முதல்  நாநூற்று தொன்நூற்று மூன்று அந்த ஆண்டு

அப்போது சஹஸ்ய மாதத்தில்  மேகங்கள் முழங்கத்துவங்கின ; அது சுக்கில பக்ஷத் திரயோதசி நாள்

அதாவது அதிர்ஷ்டமிக்க பதின்மூன்றாவது நாள் ;

துதிகள் முழங்க இந்தக் கோவில் திறக்கப்பட்டது .

சிவ பெருமானின் செஞ்சடை மேல் பிறைச் சந்திரன் ஒளிரும்வரை ,

விஷ்ணு மூர்த்தியின் தோள்களில் தாமரை மலர்மாலை அலங்கரிக்கும் வரை

இந்தப் புனித இடம்/ கோவில் வாழும்

நெசவாளர்களின் வணிகச் சங்கம் எடுத்த முடிவின்பேரில் பக்தியுடன் எழுப்பப்பட்டது சூரியனார் கோவில் ;

இதை மிகக்கவனத்துடன் பாடலாக வடிக்கிறேன் அடியேன் வத்ஸபட்டி

–வத்ஸப்பட்டி

எவ்வளவு அருமையான பாடல் ! கவிதையின் ஒவ்வொரு வரியும் ஒரு தகவலைத் தருகிறது; கவி காளிதாசனின் செல்வாக்கினைப் பாடலில் காணலாம்.

ஆதி சங்கரர் ஆறு சமயத்தை வகுத்துக்கொடுத்து அசிங்கமான இந்து சமயப்பிரிவுகளுக்குச் சாவுமணி அடித்தார் ; அவர் வகுத்த காணாபத்யம்   என்னும் பிள்ளையார் வழிபாடு , கெளமாரம் என்னும் முருகன்வழிபாடு, சாக்தம் என்னும் சக்தி வழிபாடு,   சைவம் என்னும் சிவன் வழிபாடு, வைணவம் என்னும் விஷ்ணு வழிபாடு, செளரம்  எனப்படும்  சூரியன் வழிபாடு ஆகிய ஆறு பிரிவுகளில் கடைசி மூன்றும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. நெசவாளர் ஜாதியினரும் இந்து க்கடவுளரைப் போற்றி வணங்கியதையும் வத்ஸபட்டி கூறுகிறார். தலையில் பூச் சூடும் வழக்கம் வெற்றிலைப் பாக்கு என்னும் தாம்பூல வழக்கம் ஆகியவற்றோடும் பெண்கள் பட்டுத்துணிகள் இரண்டு அணியும் வழக்கம் , நெசவாளர்கள் சங்கம் அமைத்த செய்தி,  குஜராத் மாநிலத்திலிருந்து மத்தியப்பிரதேசத்துக்கு குடியேறிய செய்தி, கோவில்கள்  என்று ஏராளமான தகவலைத் தருகிறது வத்ஸபட்டியின் கவிதைக் கல்வெட்டு .

ஆங்கில மொழியில் இந்தக் கல்வெட்டினை சர்ச்சைக்குரிய , அமெரிக்க சம்ஸ்க்ருத அறிஞர் ஷெல்டன் போலாக், அருமையாக மொழிபெயர்த்துள்ளார் ; அவர் இந்துத்துவாவை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு பாரதீய ஜனதாக்கட்சியைச் சாடியதால் சர்ச்சைக்குள்ளானார் அவருக்கு ராஜீவ் மல்ஹோத்ரா  போன்றோர் பதிலடி கொடுத்தனர்.

–subham—

Tags-

அழகிகளுக்கு பட்டுப்புடவை, கொடுத்தது யார், Beautiful Mandasor Epigraph, குப்தர் கால, கல்வெட்டு, மாண்டசூர், குமார குப்தன்

The devil swallowed a woman, but he could not digest her- 17 (Post No.14,879)

Written by London Swaminathan

Post No. 14,879

Date uploaded in London –  18 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 One Thousand Proverbs on Woman, Wife and Daughter –Part 17

 321.What a woman brings up and a monk educates, is fit for the devil.

322. The devil swallowed a woman, but he could not digest her.

323. The devil cannot go as far as a woman can.

324. In partnership with a woman even the devil has been the loser.

325. A fire scorches from near; a beautiful woman from near and from afar.

326. A woman goes mad twice; when she loves and when she begins to go  to go grey.

327. One woman in a town makes more noise than two hundred men.

328. When a woman is marrying, she holds seven devils under her arm.

329. The peasant wants lands;

The nobleman honours;

The soldier war;

The merchant money;

The farmer peace;

The artisan work;

The painter beauty

And woman the whole world.

330. Do not trust the dog that sleeps, the Jew who swears, the drunken man who prays, , and the woman who weeps.

331. No fish without bones; np woman without a temper.

332. A woman’s knees, a peasant’s chest, an aristocrat’s ears and a Jews heels are never cold.

333. It is easier to make hundreds watch agree than two women.

334. A hundred women- a hundred counsels.

335. There are only two good women in the world- one is lost, and the other cannot be found.

336. Children, chickens, priests and women never have enough.

337. The fewer women, the less trouble.

338. Water, fire and women will never say enough

–Polish Proverbs

339. The woman who loves two, deceives both

340. Women are supernumerary  when present and missed when absent.

–Portuguese proverbs

—subham—

Tags– One Thousand Proverbs, on Woman, Wife and Daughter ,Part 17  

GNANAMAYAM 17th AUGUST 2025 BROADCAST PROGRAMME SUMMARY

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

****

Prayer -Mrs. Jayanthi Sundar Team – MS NISHKATA SATTANATHAN, ANTVERP, BELGIUM.

***

NEWS BULETIN

Vaishnavi Anand and Latha Yogesh  from London presented World Hindu News in Tamil

****

Mrs. Chitra  Nagarajan spoke  on – DHARMAPURAM Temple

****

PROFESSOR S SURYANARAYANAN SPOKE ON THE MISUNDERSTOOD TAMIL PROVERBS.

****

SPECIAL EVENT-

Talk by Mr N .GANESH RAAJA PRESENTED HIS

HISTORICAL RESEARCH.

Ganesh Raaja. N hails from Tamil Nadu. He completed his engineering in 2003 and has more than twenty years of experience in the software industry.

He was attracted towards ‘History of India’ after noticing a defaming article in an Indian magazine. He has spent more than eight years researching on this subject. He has read vast number of books related to ancient Sanskrit literature, ancient Tamil literature, scientific evolution etc. written by eminent Indian and foreign scholars.

Each book he referred to catered to a specific aspect of Indian life. After understanding them, a natural interest arose in him to reconcile and chronologically arrange them in a ‘holistic’ and ‘interesting’ way. This is a first attempt at narrating India’s story ‘as-it-happened’.

The result is the book, titled, “The Jambū Island”. This book chronologically organizes the Rishiskingsliterary evolutionpeople’s lives, and scientific progress based on Sanskrit and Tamil literature. It aims to eliminate myths, interpolations, and exaggerations. It strives to present the story in a logical and captivating narrative, with many pictures.

This book covers the period from roughly 6000 BCE to 3138 BCE, narrating significant events including the rendering of the Vedic mantras by the Rishis, the Aryan clan split towards Iran resulting in the formation of the Zōrōastrians, the atrocities and defeat of the Haihaya clan, fusion of Nāgās and other native tribes into the Vedic religion, Āryan colonization of South India, and the Bharata battle at Kurukshetra.

Post launching his book, Ganesh has started an Youtube channel in Tamil to share his learnings. The goal of this channel to spread awareness about the greatness of our country and Hindu religion, to create a counter-narrative to the popular Dravidian ideology of Tamil Nadu.

Youtube channel: https://www.youtube.com/@ArivomInaivom    

Amazon book: https://tinyurl.com/rsdsr5y5   

******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 17-8-2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் – திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர் NISHKALA SATTANATHAN, BELGIUM

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

சொற்பொழிவு– தலைப்பு- தர்மபுரம் கோவில்

****

பேராசிரியர் எஸ். சூர்யாநாராயணன்சொற்பொழிவு–

(முன்னாள் கல்லூரி பிரின்சிபால்)

தலைப்பு : உருமாறிய பழமொழிகளின் உண்மைப் பொருள்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு –கணேஷ் ராஜா அவர்களின் வரலாற்று ஆராய்ச்சி உரை. 

என்.கணேஷ் ராஜா , பொறியியல் பட்டதாரி , வரலாற்றில் ஆராய்ச்சி செய்து ஜம்புத்வீப உண்மை வரலாற்றினை கால வரிசைப்படி நூலாக  எழுதியவர்; திலகர் முதலானோர் பற்றி யூ டியூப் வீடியோ தயாரித்தவர் . அவரது வரலாற்று ஆராய்ச்சியை இன்றைய சொற்பொழிவில் விளக்குவார் .

****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags-Gnanamayam Broadcast, 17-8- 2025, SUMMARY

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் (Post No.14,878)

Written by London Swaminathan

Post No. 14,878

Date uploaded in London –  18 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் (17 -8-2025) உலக இந்து செய்திமடல்

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த்  வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 17-ம் தேதி  2025-ம் ஆண்டு .

****

முதலில்  தேசியச் செய்திகள்

ஃபாஸ்டேக் FAST TAG இல்லாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் வாகனங்களுக்கு 15-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் (FASTTag) கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தெரிவித்துள்ளது.

ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் திருமலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்டேக் இல்லையென்றால், அலிகிரி சோதனைச் சாவடியில் உள்ள வசதியைப் பயன்படுத்தி அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டும் அனுமதிக்க திட்டம்

வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, எதிர்காலத்தில் திருமலைக்குள் எலக்ட்ரிக் வாகனங்களை (EV) மட்டுமே அனுமதிக்கவும் தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது. இதற்காக, திருப்பதி மற்றும் திருமலையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

****

சபரிமலை பக்தர்கள் யாத்திரை: இலங்கை அரசு புதிய முடிவு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, தங்கள் நாட்டு பக்தர்கள் செல்வதை புனித யாத்திரையாக அங்கீகரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவின் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை விழா நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும். அதன் பிறகு, ஜனவரியில் முடிவடையும் மகரவிளக்கு யாத்திரைக்காக கோவில் திறக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர்.

இதை சிறப்பிக்கும் வகையில், இலங்கையின் அதிபராகியுள்ள அனுரா திசநாயகேவின் அமைச்சரவை, ஒரு முக்கிய முடிவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.:

நீண்ட காலமாக, கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்கள்,  சென்று வழிபட்டு வருகின்றனர்.

இந்த அடிப்படையில், ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் யாத்திரையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால கலாசார மற்றும் மத பிணைப்பை அங்கீகரிக்கிறது. இனி சபரிமலை யாத்திரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விழாவாக கருதப்படும்..இவ்வாறு இலங்கை அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

****

அடுத்ததாகத் தமிழ்நாட்டுச் செய்திகள்

முருகன் வரலாறு’ என்ற பெயரில் ஸ்டாலின் புகழ்பாடும் நுால் விற்பனை

முருகன் வரலாறு’ என்ற பெயரில், முதல்வர் ஸ்டாலின் புகழ்பாடும் நுால், பக்தர்களிடம் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், கடந்த 2024 ஆகஸ்ட் 24, 25ம் தேதிகளில், ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ நடந்தது.

இந்த மாநாட்டில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆற்றிய உரைகள், ஆதீனங்களின் ஆசியுரைகள், வெளிநாட்டினரின் கட்டுரைகள், விருது பெற்றவர்களின் சிறப்புகள், ஆய்வரங்கில் வாசித்ததில் சிறந்த கட்டுரைகள், பேச்சாளர்களின் வாழ்த்துரைகள் போன்றவை அடங்கிய சிறப்பு மலரை, அறநிலையத் துறை தயாரித்துள்ளது.

இதை கடந்த ஜனவரி 4ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். 288 பக்கங்கள் கொண்ட இந்நுாலின் விலை, 2,750 ரூபாய்.

பா.ம.க., தலைவர் அன்பு மணி: பழனி முருகன் கோவிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம், ‘முருக பெருமான் வரலாறு’ என்று கூறி, 2,700 ரூபாய் விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப் படுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்று கூறியுள்ளார்

ரசீது தரவில்லை

ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார்: ஓசூர் பா.ஜ., நிர்வாகி நாகராஜ், பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய, கடந்த 8ம் தேதி சென்றுள்ளார்.

கோவில் அலுவலகத்தில் சிறப்பு தரிசன டிக்கெட் கேட்ட அவரிடம், 2,750 ரூபாய் கொடுத்து, முருகன் மாநாடு சிறப்பு மலர் வாங்கினால், ஐந்து பேர் சிறப்பு தரிசனம் செய்யலாம் எனக் கூறியுள்ளனர் .

அதன்படி புத்தகத்தை வாங்கிய அவருக்கு ரசீது தரவில்லை.

விற்பனையாகாத முருகன் மாநாட்டு புத்தகத்தை கட்டாயப்படுத்தி விற்பது கண்டனத்திற்குரியது. இந்த மலரில் முருகன் புகழ் பாடியதை விட, முதல்வர் ஸ்டாலினைதான் அமைச்சர் சேகர்பாபு அதிகம் புகழ்ந்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

****

அர்ச்சகர்களின் வாரிசுகள் மேற்படிப்புக்கு தலா ரூ.10,000 வழங்கினார் முதல்வர்

:சென்னை: அர்ச்சகர்களின் வாரிசுகள் 600 பேருக்கு, தலா 10,000 ரூபாய் உதவித்தொகையை, முதல்வர் வழங்கினார்.* ஒருகால பூஜை திட்டம் செயல்படுத்தப்படும் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் வாரிசுகளுக்கு, மேற்படிப்பு கல்வி உதவித் தொகையாக, 600 பேருக்கு தலா, 10,000 ரூபாய் வீதம், 60 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

****

பழநி கோயிலில் பால்குடம் எடுத்து நேரத்திக்கடன் செலுத்திய ஜப்பானியர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயிலில் ஜப்பானியர்கள், தமிழர் பாரம்பரிய உடையில் பால்குடம் எடுத்து நேரத்திக்கடன் செலுத்தினர்.

உலக நலன் வேண்டி முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று ஜப்பானியர்கள் வழிபாடு மேற்கொள்ள உள்ளனர். அதன்படி ஜப்பானிலிருந்து வந்த முருக பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பழநி மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பால்குடம் எடுத்து கிரிவல பாதையில் அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்தினர்.

****

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடு : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடால் பக்தர்கள் பெரிதளவு பாதிக்கப்படுகின்றனர் என்றும் இதனை வேடிக்கை பார்க்கிறது இந்து சமய அறநிலையத் துறை என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று வரை இக்கோவிலின் வேலைகள் முழுமை பெறாமல் தற்போதும் நடைபெற்று வருகிறது. தங்களது சுய விளம்பரத்திற்காக எவ்வித வேலைகளையும் முழுமையாக முடிக்காமல் அவசர கதியில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனம் போல அவசரகதியில் கும்பாபிஷேகத்தை நடத்தியதை சென்னை உயர்நீதிமன்றமும் கடிந்து கருத்து தெரிவித்தை சுட்டிக் காட்டுகிறோம்.

பொது தரிசன வரிசையில் வரும் பக்தர்களையும் மூத்த குடிமக்கள் வரிசையில் வரும் பக்தர்களையும் கோவில் உள்ளே நுழைந்த உடன் ஒரே வரிசையாக இணைத்து அனுப்புகின்றனர். இதனால் கடும் நெரிசல் சிக்கி பக்தர்கள் பலர் மூச்சு திணறலுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, கேரள மாநிலத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த பக்தர்களிடம் ஒரு நபர் தரிசனம் செய்வதற்கு 11 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் நான்கு நபர்களுக்கு சுமார் 44 ஆயிரம் ரூபாய் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட காணொளிகளும் அனைத்து செய்தி ஊடகங்களில் வந்து பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது; இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவ்வாறு நடப்பது இது முதல் முறையல்ல, அதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே உடந்தையாக இருந்து, முறைகேடாக கட்டணம் வாங்கிக் கொண்டு தரிசனத்துக்கு வரும் பக்தர்களை குறுக்கு வழியில் அனுப்புகின்றனர். இதற்காக தனியாக சில வாட்சப் குரூப் இயங்குவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது போன்ற முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருத்தணியிலும் இதுபோல் சம்பவம் நடந்து , பல ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது. 

கோவிலில் இருந்து வரும் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படாமல் அங்கு வரும் பக்தர்களின் நலனையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, பாதுகாப்பு ஏற்பாடுகளை ,உடனடியாக செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசினை இந்து முன்னணி வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

***

கமல் மீது நடவடிக்கை ஏன் இல்லை? ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி

”சனாதன ஹிந்து தர்மத்தை இழிவுபடுத்திய கமல் மீது நடவடிக்கை எடுக்காமல், அதைக் கண்டித்த நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க முனைவதா?” என்று ஹிந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.அகரம் அறக்கட்டளை’ விழாவில் பேசிய எம்.பி., கமல், திட்டமிட்ட ரீதியில் சனாதன ஹிந்து தர்மத்தை இழிவுபடுத்தியுள்ளார்.

மத வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசுவோர் மீது போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிய வேண்டும் என கோர்ட் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, கமல் மீது பல முறை ஹிந்து முன்னணி புகார் அளித்துள்ளது. கடவுள் ராமரை வைரமுத்து இழிவுபடுத்தியுள்ளார். வரலட்சுமி நோன்பு குறித்து சினிமா இயக்குனர் கரு.பழனியப்பன் இழிவாகப் பேசியுள்ளார்.

கடவுள் அய்யப்பன் பற்றி இழிவாகப் பாடிய இசைவாணி, ஹிந்து மத அடையாளங்களை கொச்சைப்படுத்திய பொன்முடி என பட்டியல் நீளுகிறது.

ஹிந்து மதத்தை இழிவுபடுத்திய இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், கமலை கண்டித்த ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை என்ற ஹிந்து விரோத மனப்பான்மையை தி.மு.க., அரசு கைவிட வேண்டும். ரவிச்சந்திரனுக்கு ஹிந்து முன்னணி துணை நிற்கும்.

இவ்வாறு ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

****

ஹிந்து கோவிலில் நாச வேலைஅமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்

அமெரிக்காவில் உள்ள ஹிந்து கோவிலில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த நாச வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஜான்சன் கவுண்டியில் உள்ள ஒரு நகரமான இன்டியானாவின் கிரீன்வுட்டில், ஹிந்து பக்தர்கள் அதிகம் வழிபடும் கோவில்கள் உள்ளன. இப்பகுதியில் செயல்படும் காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள், ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா கோவில் சுவர்களில் இந்தியாவிற்கு எதிரான மற்றும் மோடிக்கு எதிரான வாசகங்கள் எழுதி வைத்துள்ளனர். ஒரு வருடத்திற்குள் நான்காவது முறையாக, இந்த கோவிலில், காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு  ஆகஸ்ட் மாதம் 24- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—- 

TAGS- Hindu news bulletin, 17-8-25