ஆலயம் அறிவோம்! தருமபுரம் ஆலயம் (Post No.14,877)

WRITTEN BY Mrs Chitra Nagarajan

Post No. 14, 877

Date uploaded in London – 18 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

17-5-25 அன்று லண்டனிலி\ருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை

தருமபுரம் 

ஆலயம் அறிவோம்!

வழங்குவது சித்ரா நாகராஜன்

மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது ஓர்

    நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர்,

பூத இனப் படை நின்று இசை பாடவும் ஆடுவர்,

    அவர் படர்சடை நெடுமுடி ஓர் புனலர்

வேதமொடு ஏழ் இசை பாடுவர், ஆழ்கடல் வெண்திரை

    இரை நுரை கரை பொருது விம்மி நின்று, அயலே

தாது அவிழ் புன்னை தயங்கு மலர்ச் சிறைவண்டு அறை

    எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது சோழமண்டலத்தில் காவிரியின் தென்கரைத் தலங்களில் 51வது தலமாக அமைந்துள்ள திரு தருமபுரம் ஆகும்.

இத்திருத்தலம் தஞ்சை – காரைக்கால் பேருந்து வழியில் காரைக்காலை அடுத்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

இறைவர் : யாழ்மூரிநாதர், தருமபுரீஸ்வரர் 

இறைவி : தேனமிர்தவல்லி, மதுரமின்னம்மை,மதுரதடிதாம்பிகா, மதுராமிருதவல்லி, அபயாம்பிகா 

தீர்த்தம் : விஷ்ணு தீர்த்தம், பிரம தீர்த்தம். தர்ம தீர்த்தம். இவை கோவிலின் வடபுறமும் முன்புறமும் உள்ளன; 

தல விருட்சம் : வாழை 

மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்குவதற்காக இங்கு யமன் வந்து வழிபட்டான். அதனால் இத்தலம் தருமபுரம் என்ற பெயரைப் பெற்றது.

பஞ்ச பாண்டவர்களின் தருமபுத்திரர் வழிபட்ட தலமாதலால் இது தர்மபுரம் என்ற பெயரைப் பெற்றது என்றும் கூறுவர்.

 இத்தலத்தைப் பற்றிய சரித்திர வரலாறு ஒன்று உண்டு. 

திருநீலகண்ட யாழ்ப்பாணர் இந்தத் தலத்தில் தான் அவதரித்தார். இங்கு ஒரு முறை திருஞானசம்பந்தர் வந்தார்.  அவருடன் அவரது பதிகங்களை யாழில் பாடி வரும்  திருநீலகண்ட யாழ்ப்பாணரும் வந்தார். இந்தத் தலம் திருநீலகண்டரின் தாயார் பிறந்த இடமும் ஆகும், திருஞானசம்பந்தர் வந்த போது திருநீலகண்டரின் உறவினர்கள் அனைவரும் அவர் யாழ் வாசிப்பதனால் தான் சம்பந்தரது பாடல்கள் சிறந்து விளங்குகின்றன என்றனர். இதைக் கேட்டு வருத்தமுற்ற திருநீலகண்டர் சம்பந்தரிடம் முறையிட்டார். உடனே சம்பந்தர்,

“மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது ஓர்

    நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர்

என்று தொடங்கும் பதிகத்தைப் பாடலானார். இது திருநீலகண்டரின் யாழிசையில் அடங்காமல் போகவே பாணர் யாழையும் உடைக்கச் சென்றார். ஆனால் சம்பந்தர் அவரைத் தடுத்து இயன்ற வரையில் வாசிக்குமாறு கூறினார். இறைவனும் யாழ்மூரிநாதர் என்ற பெயரைப் பெற்றார்.

சுவாமி சந்நிதி முகப்பு வாயிலின். மேலே நடுவில் ரிஷபாரூடர் இருக்க, சம்பந்தர் பாட, நீலகண்ட யாழ்ப்பாணர் யாழ் வாசிக்க அவர் மனைவி அருகில் இருக்க, இதைச் சித்தரிக்கும் அருமையான சுதை வேலைப்பாடு உள்ளது.

இன்னொரு புறம் சம்பந்தர், யாழுடன் பாணர், அருகில் அவர் மனைவி இருப்பது போலவும் சுதை வேலைப்பாடு உள்ளது.

இந்தக் கோவில் தருமையாதீனத்தின் நிர்வாகத்தில் உள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோவிலுக்கு 5 நிலை ராஜகோபுரம் உண்டு.  அடுத்து உள்ள் மூன்று நிலை கோபுரத்திற்கு முன் நந்தி மண்டபம் மற்றும் பலிபீடம் அமைந்துள்ளன. இதையடுத்து உள்ளே சென்றால் வெளி பிரகாரத்தில் மதுரமின்னம்மை அம்பாள் சந்நிதி உள்ளது. வெளிபிரகார மேற்குச் சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதியின் முன் மண்டபத் தூணில் துவார விநாயகரும் சுப்ரமண்யரும் காட்சி அளிக்கின்றனர். வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நவகிரக சந்நிதி உள்ளது. இரண்டாம் கோபுர வாயிலுக்கு நேரே பதினாறு கால் மண்டபத்தைக் காணலாம். இதை அடுத்து உள்ள கர்பக்ருஹத்தில் யாழ்மூரிநாதர் சிறிய பாணத்துடன் நாகாபரணம் சார்த்தப்பட்டு கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.

கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன கணபதி, தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேஸ்வரர் சந்நிதியை அடுத்து,  தக்ஷிணாமூர்த்தி அருகே இரு புறமும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்க முயலகன் மீது காலை ஊன்றியபடி லிங்கோத்பவர் காட்சி தருகிறார்.  இவருக்கு இருபுறமும் மஹாவிஷ்ணுவும் பிரம்மாவும் உள்ளனர்.

தெற்குப் பிரகாரத்தில் ஶ்ரீ மேதா தட்சிணாமுர்த்தி காட்சி அளிக்கிறார். உற்சவ மூர்த்தியாக ஶ்ரீ யாழ்மூரிநாதரின் திருவுருவம் உள்ளது.

இங்கு கர்பக்ருஹத்தில் சுவாமி எப்போதும் வெள்ளிக் கவசத்துடன் காட்சி அளிக்கிறார்.

இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் அருளிய ஒரு பதிகம் உள்ளது. வைகாசி மாதத்தில் மூல நட்சத்திர தினத்தன்று சம்பந்தருக்கு இங்கு குருபூஜை நடக்கிறது. அன்று சிவபிரான் வீதி உலா வந்து சம்பந்தருக்குக் காட்சி அளிக்கிறார்.

இங்குள்ள தருமபுர ஆதீனம் சைவ சமயத்தை வளர்க்கும் மடங்களுள் சிறப்பான ஒன்று. இது குரு ஞானசம்பந்தரால் துவங்கப்பட்டது. தர்மபுர ஆதீன பரம்பரையை திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் என்று அழைப்பர். தருமை ஆதீனம் என்று அழைக்கப்படும் இதன் கட்டுப்பாட்டில் 27 கோவில்கள் திறம்பட நிர்வகிக்கப்படுகின்றன. 

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் யாழ்மூரிநாதரும், தேனமிர்தவல்லி தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

ஶ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதரின் ராதா கல்யாணம்! (Post 14,876)- Part 11

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,876

Date uploaded in London – 17 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

புதிய தொடர்!

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 11 

ச. நாகராஜன்

ஶ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதரின் ராதா கல்யாணம்! 

12

மதுரையில் எனது தந்தையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர்களுள் ஒருவர் ஶ்ரீ லக்ஷ்மண ஐயர். இவர் ஒரு பெரிய வக்கீல். தந்தையின் நண்பர்; தூரத்து உறவினரும் கூட!

இவரால் எங்கள் குடும்பத்தினருக்கு இரண்டு சிறந்த அறிமுகம் ஏற்பட்டது.

 ஒன்று ஶ்ரீ கோபால கிருஷ்ண பாகவதரின் தொடர்பு. இன்னொன்று ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் தொடர்பு.

 ஒரு நாள் இவர் எங்கள் இல்லத்திற்கு வந்து ஶ்ரீ கோபால கிருஷ்ண பாகவதரின் ராதா கல்யாண நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார்.

இவர் மதுரையில் மிகவும் பிரசித்தமான செல்லத்தம்மன் கோவிலுக்கு எதிரில் இருந்த தெருவில் முதல் இல்லத்தில் குடியிருந்தார். 

அவர் எங்கள் வீட்டில் உள்ள கடம்ப மர பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு அதிசய சங்கத்தைப் பற்றி விளக்கினார்.

தேசபக்தி சங்கமான அதில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அவர்கள் கூடும் போது கூடுவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னால் மைதானம் காலியாக இருக்கும். சரியாக குறிப்பிட்ட நிமிடத்தில், மணியில் கூடுவார்கள். நிகழ்ச்சி முடிந்தவுடன் அடுத்த நிமிடம் மைதானம் காலியாக இருக்கும். அவர்கள் உணவு அருந்தினால் கூட அங்கு அப்படி அருந்திய சுவடே தெரியாது. அவ்வளவு சுத்தமாக இருக்கும்-

 இப்படி ஒரு ஒழுக்கம், கட்டுப்பாடு கொண்ட தேசபக்தர்கள் கொண்ட அதிசய சங்கத்தின் கிளை மதுரையில் இருக்கிறதா என்று கேட்டோம். அவர் பக்கத்தில் இருந்த மாபெரும் வக்கீலான தக்ஷிணாமூர்த்தி அவர்களைப் பார்க்கச் சொன்னார்.

 அண்ணாஜி என்று அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப்பட்ட அவரைப் பார்த்த போது மிகவும் சந்தோஷப்பட்டார். ஆர் எஸ் எஸ் சிம்மக்கல் கிளை பற்றிச் சொன்னார். எனது குடும்பமே ஆர் எஸ் எஸ் பணியில் ஈடுபட்டது. அவரும் என் தந்தையாரைச் சந்தித்தார். சுமார் ஐம்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக பல பெரிய ஸ்வயம்சேவகர்களுடன் பழகும் நல் வாய்ப்பும் கிடைத்தது.

நிற்க, ஶ்ரீ கோபால கிருஷ்ண பாகவதருக்கு வருவோம். அவரது ராதா கல்யாண வைபவம் அற்புதமான ஒரு நிகழ்ச்சி.

 பல மணி நேரம் நீடிக்கும் அந்த நிகழ்ச்சியில் ராதையின் பிரேமை பற்றி நன்கு விளங்கிக்கொள்ளலாம். இதில் இடம் பெறும் அஷ்டபதி கீதங்கள் மிக மிக அருமையானவை. இதில் ஆண்கள் மற்றும் பெண்களின் நடனமும் உண்டு. குத்துவிளக்கைச் சுற்றிச் சுற்றி அனைவரும் நடனமாடுவது பார்க்கவே அழகாக இருக்கும்; பக்தியை வளர்க்கும். கிருஷ்ண பக்தி அதிகரிக்கும்.

 இதை எங்கள் வீட்டிலும் நடத்த ஆர்வம் கொண்டார் என் தந்தை.

ராதா கல்யாணம் நடந்தது; ஆனால் ஒரு நிகழ்ச்சியோடு இது முடியவில்லை.

இந்தியன்பேங்க் ஏஜண்டாக இருந்த சங்கர ஐயர் வீட்டில் ஒரு வாரமும் அடுத்த வாரம் எங்கள் வீட்டிலும் இப்படி மாறி மாறி பல வருடங்கள் இதை நடத்தி வந்தோம்.

 இரவில் நிகழ்ச்சி முடிந்தவுடன் தானப்ப முதலித் தெருவில் இருந்த சங்கர ஐயர் குடும்பத்தை வழி நடத்தி அவர்கள் வீட்டிற்குக் கொண்டு விடுவோம். அவர்கள் வீட்டில் நடக்கும் போது அவர்கள் எங்களை எங்கள் வீடு வரை வந்து கொண்டு விடுவார்கள் சில சமயம், கூட ஒரு தடவை இந்த நடைப் பயணம் தொடரும். இப்படி மாறி மாறிப் போய்க் கொண்டிருந்தால் பொழுது விடிந்து விடும் என்று நாங்கள் கிண்டலும் செய்வோம். சங்கர ஐயர், அவர் மனைவி பிடில் வாசிப்பதில் வல்ல சரஸ்வதி சங்கரன்,  அவர்களது  மகன் எம்.எஸ், வெங்கட்ராமன், அவர் மனைவி மாதங்கி உள்ளிட்டோர் இதில் ஆர்வத்துடன் பக்தி சிரத்தையுடனும் பங்கேற்பர்.

 மறக்க முடியாதா நாட்களாக அவை அமைந்தன.

Gopalakrishna Bhagavathar with Sankara Iyer in Madurai.

Mr V Santanam with Vibhuti on his forehead.

Mr M S VENKAT RAMAN WITH BHAGAVATHAR.

13

கூத்தனூர் ஶ்ரீ சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள் நிகழ்த்திய உபந்யாசங்கள் 

கூத்தனூர் ஶ்ரீ சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஒரு வேத விற்பன்னர். ரிக்வேதம் முழுவதையும் ஓதி காஞ்சி பெரியவாளிடம் பரிசைப் பெற்றவர். 7000 ரூபாய் பரிசு என்பது அந்தக் காலத்தில் மகத்தான பரிசாகும். அதைப் பெற்றவர். காஞ்சி பெரியவரின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவர்.

என் தந்தை மீது மாறாத அன்பும் மிக்க மரியாதையும் கொண்ட, அவர் மதுரைக்கு வர ஆரம்பித்தார். ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் உள்ளிட்ட மாபெரும் இதிஹாஸ புராணங்களில் வல்லவரான அவர் சூட்சுமமான ரகசிய அர்த்தங்களை விளக்கிக் கூறுவார்.

பெரும்பாலும் கிருஷ்ணாராயர் தெப்பக்குளத் தெருவில் உள்ள ஹனுமார் கோவிலில் அவர் உபந்யாசங்கள் இடம் பெறுவது வழக்கம்.

தங்குவது எங்கள் இல்லத்தில் தான். ஏராளமான நல்ல பக்தர்கள் காலை நேரத்தில் இவரை எங்கள் இல்லத்தில் சந்திப்பது வழக்கம். அவரைப் பலரும் தங்கள் இல்லங்களுக்கு வருமாறு அழைப்பது வழக்கம்.

இவரது உபந்யாச உரைகள் மறுநாள் தினமணியில் தவறாது வெளியாகும்.திருச்சியில் பல காலம் அவர் வாழ்ந்து வந்தார். அவருடன் காலை வேளைகளில் பேசிக் கொண்டிருப்பது வழக்கமானது. காலையில் பூஜை பெரிதாக நடக்கும். பேசும் போது பல ரகசியார்த்தங்களையும் சுவையான சம்பவங்களையும் அவர் கூறுவார்.

எடுத்துக்காட்டிற்காக ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.

காஞ்சி பெரியவரின் அன்புக்குப் பாத்திரமான அவர் மடியில் காஞ்சி பெரியவர் தலையை வைத்துப் படுப்பது வழக்கம்.

ஒரு நாள் சாஸ்திரிகளிடம் அருகில் இருந்த அக்ஷதைக் கிண்ணத்திலிருந்து அரிசி மணிகளைக் “கொஞ்சம்” எடுத்துத் தருமாறு கூறினார். சாஸ்திரிகளும் சில அக்ஷதை மணிகளை எடுத்து அவரிடம் தந்தார். அதை ஜாக்கிரதையாக வாங்கிய பெரியவாள் அதில் எத்தனை இருக்கிறது என்று எண்ணச் சொன்னார்.

விநோதமான இந்த ஆணையால் சாஸ்திரிகளும் கையில் தரப்பட்ட அரிசி மணிகளை எண்ணி அந்த எண்ணிக்கையைப் பெரியவாளிடம் சொன்னார். “ஆஹா, நூறு வருகிறது” என்றாராம் பெரியவர்.

சாஸ்திரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன அர்த்தமோ இதற்கு? என்று அவர் பெரியவாளைக் கேட்க அவர்,”இப்பொது எனக்கு ஆகும் வயதுடன் இந்த மணிகளைக் கூட்டினால் நூறு வருகிறது. நான் நூறு வயது இருப்பேன் போலும்” என்று பதில் அளித்தார்.

இதைச் சொல்லிய சாஸ்திரிகள், “எனக்கு ஒரே ஆனந்தம். பெரியவாளுக்கு ஆயுஸ் நூறு” என்றார்.

இதைக் கேட்டு நாங்கள் சாஸ்திரிகளிடம் கோபப்பட்டோம். இன்னும் கொஞ்சம் கூட அரிசி மணிகளைப் போட்டிருக்கக் கூடாதா நீங்கள்?’ என்று கோபத்துடன் நாங்கள் சொல்ல அவர் ஹோவென்று பெரிதாகச் சிரித்து, “எனக்கு எப்படித் தெரியும் அவரது சங்கல்பம்? தெரிந்திருந்தால் நான் நிறையப் போட்டிருக்க மாட்டேனா என்ன?” என்றார்.

பெரியவாள் நூறு வயது வரை வாழ்ந்தது உண்மை!

இப்படிப் பற்பல சம்பவங்களை அவர் கூறுவார்.

இந்த உபந்யாசத் தொடர்பு நெடுங்காலம் நீடித்தது. 

அடுத்து மதுரையில் இருந்த பல சத்சங்கங்களையும் அவற்றை என் தந்தையார் ஆதரித்ததையும் பார்க்கலாமா?

**

It is safer to tease a dog than a woman. (Post.14,875)

Written by London Swaminathan

Post No. 14,875

Date uploaded in London –  17 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

One Thousand Proverbs on Woman, Wife and Daughter –Part 16

301.Two women and two geese make a sair.

302. Water and women will run as men direct them.

–Montenegro

303.Select a groom on horse back and a girl at a dance.

341.Put  in a good word for a bad girl; for a good one say what you like.

305. The dog that intends to bite growls; the bee that intends to sting hums; but a girl only makes her eyes sparkle.

306. The woman cries before the wedding and the man after.

307. A wife, a razor and a horse are things not to be lent.

308. The first wife is a slave; the second a companion; the third a master.

309. A wife is like mint; the more you chop sweeter it smells.

310. A young wife is to an old man the horse he rides on to hell.

311. He that drinks will get fat; he that loves will be healthy; and he that beats his wife will be saved.

312. It is easier to reconcile a hundred husbands than two wives.

313. It is safer to tease a dog than a woman.

314. You have to get up early to be able to deceive a woman.

315. When the devil is at his wits end, he sends a woman.

316. Selling your soul to the devil is the same as selling  it to a woman.

317.The devil is no match for a woman.

318. Approach a woman and a horse from the front.

319. A grey haired man is to a woman as a hedgehog to a dog.

320. Woman- as small as your finger and as evil as a viper.

POLISH PROVERBS

TAGS- woman, proverbs, part 16

DECCAN CHRONICLE CARTOONS UP TO 17-8-2025


DECCAN CHRONICLE CARTOONS UP TO 17-8-2025

POSTED BY LONDON SWAMINATHAN 

–SUBHAM—

CARTOONS, DECCAN CHRONICLE, 17-8-25

ஶ்ரீ சத்ய சாயிபாபா அழைப்பு! ஒரே மேடையில் பேச்சு!! (Post No.14,874)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,874

Date uploaded in London – 17 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

புதிய தொடர்!

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 10 

ச. நாகராஜன்

11

ஶ்ரீ சத்ய சாயிபாபா அழைப்பு! ஒரே மேடையில் பேச்சு!! 

காலம் செல்லச் செல்ல ஸ்ரீ சத்யசாயிபாபாவின் மஹிமை உலகெங்கும் பல நாடுகளிலும் தெரிய ஆரம்பித்தது.

உலகெங்கும் பல நாடுகளிலும் சத்யசாயி சமிதி ஆரம்பமானது.

பாபா கோடைக்காலங்களில் மதுரைக்கு அருகில் உள்ள கொடைக்கானலுக்கு வருகை புரிந்தார்.

ஒரு நாள் சத்யசாயிபாபா மதுரை நகருக்கு விஜயம் செய்யப் போவதாக செய்தி வந்தது.

மதுரையே விழாக் கோலம் பூண்டது. அவர் சத்தியசாயி நகரில் உள்ள திரு சுப்பிரமணியம் செட்டியார் இல்லத்தில் தங்கவிருக்கிறார் என்பதனால் பெரிய பந்தல் அங்கு போடப்பட்டது.

பாபா உரை நிகழ்த்தலானார். டி.வி.எஸ் நிறுவனம் விசேஷ பஸ்களை பல்வேறு இடங்களிலிருந்தும் சத்யசாயி நகருக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்திருந்தது.

ஆயிரக் கணக்கில் பக்தர்கள் பந்தலில் திரண்டனர்.

பாபா வழக்கம் போல தெலுங்கில் உரை ஆற்றினார். அதை ஶ்ரீ சுத்தானந்த பாரதி தமிழில் மொழிபெயர்த்தார்.

பாபாவின் உரையில் இருந்த வேத சாஸ்திர தத்துவங்களைக் கண்ட சுத்தானந்த பாரதியார் தன்னையே மறந்தார். ஆஹா, இது இந்த வேதம் அது அந்த வேதம் என்றெல்லாம் மகிழ்ந்து மொழிபெயர்ப்பில் ஆங்காங்கே சொல்ல ஆரம்பித்தார். பாபா பார்த்தார். சிரித்தவாறே ‘மொழிபெயர்த்தால் போதும்’ என்று சொல்லவே அரங்கத்தில் ஒரே சிரிப்பு.

அற்புதமான உரைகளை சுத்தானந்த பாரதியார் தமிழில் தர அனைவருக்கும் ஒரே உற்சாகம். இவை அனைத்தும் தினமணியில் பிரதானமாகப் பிரசுரிக்கப்பட்டன.

பாபாவை அருகிலிருந்து தரிசிக்கும் பாக்கியம் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் கிடைத்தது.

பின்னர் மதுரையிலிருந்து மக்களிடம் பிரியாவிடை பெற்றார் பாபா.

சென்னை ஆபட்ஸ்பரி கட்டிடத்தை சாயி சமிதி உரிமைப் படுத்தியது.

திடிரேன்று ஒரு நாள் ஒரு போன். பாபாவுடன் ஆபட்ஸ்பரி விழாவில் வந்து பேசவேண்டும் என்று சமிதியின் முக்கியஸ்தர் கூறவே எனது தந்தையாருக்குச் சற்று வியப்பு.

உடனே அவர், அது நானாக இருக்க முடியாது.  கே.சந்தானத்தை அவர் குறிப்பிட்டிருப்பார் என்றார்.

ஆனால் பேசியவரோ, “இல்லை, இல்லை, தினமணி சந்தானம் என்று பாபா குறிப்பிட்டதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டே தான் நாங்கள் பேசுகிறோம்” என்று கூறவே எனது தந்தையார் உடனே விமானத்தில் கிளம்பினார்.

விழாவில் ஒரே மேடையில் பாபா முன்னிலை வகிக்க எனது தந்தையார் பேசினார்.

அடுத்து இன்னொரு சமயம் பாபா மதுரை விஜயத்தின் போது குட்ஸ் ஷெட் தெருவில் இருக்கும் ஆர் ராமநாதன் செட்டியார் வீட்டிற்கு வந்தார்.

எனது தந்தையார் பக்தர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்தார். கூட்டத்தில் இருந்த தந்தையை பாபா கவனித்தவுடன் நேராக அவரிடம் வந்தார். தந்தை எழுந்திருக்க அருளாசி தந்தார்.

சத்யம் சிவம் சுந்தரம் நூலை எழுதிய திரு கஸ்தூரி மதுரை வரவே அவரது பாபாவைப் பற்றிய உரை கிருஷ்ணாராயர் தெப்பக்குளத் தெருவில் உள்ள ஹனுமார் கோவிலில் ஏற்பாடு ஆனது. ஏராளமானோர் திரண்டர். அவர் எங்கள் இல்லத்திற்கும் வந்து எங்களைக் கௌரவப்படுத்தினார்.

இப்படிப் பல அனுபவங்கள் தொடர்ந்து ஏற்படலாயின.

V Santanam’s Foreword for his book Sai Geethangal in Tamil.

இதைத் தொடர்ந்து எங்கள் இல்லங்களில் வாரம் தோறும் சாயி பஜனை நடைபெறலாயிற்று.

நானும் சேவாதள உறுப்பினரானேன். பின்னர் அதில் முக்கிய பொறுப்பும் வகித்தேன். 

மதுரையைப் பொறுத்த மட்டில் சாயி சர்க்கிளில் ஒரு முக்கிய பங்கை எனது தந்தையார் ஆற்றினார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

அடுத்து எங்கள் இல்லத்திற்கு வருகை புரிந்த புதுக்கோட்டை ஶ்ரீ கோபால கிருஷ்ண பாகவதரின் தொடர்பைப் பார்ப்போமா?

**

The Devil himself doesn’t know where the Women sharpen their knives (Post No.14,873)

Written by London Swaminathan

Post No. 14,873

Date uploaded in London –  15 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

One Thousand Proverbs on Woman, Wife and Daughter -Part 15

281. The man who has a quiet house has no wife.

282. A woman either loves or hates.

283. Woman is an evil, but a necessary one.

284. When a woman is openly bad, then at least she is honest.

285. When a woman thinks by herself, she thinks of mischief.

–Latin proverbs

286.A husband is the head of his wife; a wife is her husband’s key.

287.One’s wife and one’s stove stay at home.

288. A white mare needs washing; a pretty wife watching.

289. The mind of a woman is like the wind and the water.

290. By the time a woman’s who passes, four fathoms of green ash wood are burnt.

291. The devil himself doesn’t know where the women sharpen their knives.

Latvia proverbs.

292. A woman can carry out in her lap more than a man carry in a cart load.

293. A woman has long hair and short reason.

–Livonian

294. A man is twice happy when he marries and when he buries his wife.

295. My wife is my mule.

296. You may carry your wife on your back all your life, but if you once set her down, she will say I am tired.

297. It is easier to keep guard over a bush full of hares than over one woman.

298.Wherever trouble- there is a woman.

299. Trust not a weeping man, still less a woman who speaks of her chastity.

300. A woman will change one hundred religions to obtain her heart’s desires

–Montenegrin .

To be continued…………………………

Tags- Woman, Women, Proverbs, wife , part 15, lady macbeth

சூரிய எப்படி ஹீலியோஸ் என்று மாறியது ? SUN DISC IN BRITISH CITY BATH (Post.14,872)

Sun God Denmark

Sun god in British city Bath

Written by London Swaminathan

Post No. 14,872

Date uploaded in London –  15 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

New Sculpture of SUN in BATH city hall.

ஹிட்டைட்ஸ் HITTITES  இனத்தினர் சிரியாவிலும் துருக்கியிலும் சூரியனை சூரியோஸ் என்ற பெயரில் வணங்கியதை 3800 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கல்வெட்டு காட்டுகிறது. சூரிய என்ற பெயரை இன்றும் சிரியா தாங்கி வருகிறது துரக என்ற குதிரையின் பெயரை இன்றும் துருக்கி பயன்படுத்திவருகிறது

கிரேக்க நாட்டில் ஹீலியோஸ் என்ற பெயரில் சூரியனை வணங்கினர் . கிரேக்க மொழியில் ச – வர்க்க எழுத்துக்கள் இல்லாததால் நம்மை சிந்து நதி நாகரீகத்தினர் என்பதற்குப் பதிலாக ஹிந்து என்று அழைத்தனர்  அதே போல சூ என்பது ஹீ என்று மாறி ஹீலியோஸ் என்ற பெயரில் கிரேக்கர்கள் வணங்கினர் அவர்களிடமிருந்து ரோமானியர்களுக்குப் பரவி, பிரிட்டனிலும் ரோமானிய சின்னங்கள் உள்ள பாத்/  BATH முதலிய நகரங்களில் சூரியன் சிற்பங்கள் உள்ளன . பிரிட்டனில் பாத் நகரில் மிகப்பெரிய சூரியன் சிற்பத்தை  பாத் நகர அசெம்பிளி ஹாலில் வைத்துள்ளனர் இது இந்த 2025 ஆண்டு, நாடு முழுதும் காட்சிக்கு எடுத்துச் செல்லப்படும்.

என்னை பி பி சி காரர்கள் இந்தியாவிலிருந்து  1987-ஆம் ஆண்டு லண்டனுக்கு அழைத்து வந்த பின்னர், பாத் நகரில் பிரிட்டிஷ் தேர்தல் பிரசாரத்தைப் பார்த்து கட்டுரை எழுத அனுப்பினர் அப்போது நான் ரோமன் பாத் ROMAN BATH எனப்படும்  குளியல் தொட்டி மற்றும்  அங்குள்ள சூரியன் சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தேன் . இந்தக் குளியல் வெப்ப நீர் ஊற்று காரணமாக இந்த நகருக்கே இன்று வரை பாத் என்றே பெயர்!

***

ர என்ற எழுத்து ல  என்று மாறுவது சம்ஸ்கிருதம் மூலம் உலகம் முழுதும் பரவியது . சாஸ்க்ருத மொழியில் இது ஒரு சூத்திரமாகவே இருக்கிறது. தமிழ் மொழியில் நாம் இன்றும் இதை பயன்படுத்துகிறோம் .

பல் +பொடி=  பற்பொடி

கல் +கண்டு = கற்கண்டு

இது போல நூற்றுக்கணக்கில் தமிழில் உள்ளன. இதையே கிரேக்கர்களும் சூரிய என்பதில் ரி என்பதை லி என்று உச்சகரித்தனர் .

SU=H E

RI= L I

YA= Y A

ஆக இந்துக்கள் பரப்பிய சூரிய வழிபாடு ஐரோப்பா மட்டுமின்றி தென் அமெரிக்க மாயன், இன்கா நாகரீகத்திலும் பின்பற்றப்பட்டது ;அந்த நாகரிக சின்னங்களில் ஸ்பானிய கிறிஸ்தவர்கள் அழித்தது போக எஞ்சியுள்ள சிற்பங்களிலும் தங்க விக்ரகங்களிலும் இன்றும் சூரியனைக் காணலாம் . அவை மியூசியங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளன . பெரும்பாலான தங்கச் சின்னங்களை கிறிஸ்தவ பாதிரிகள் உருக்கி ஸ்பானிய மன்னருக்கு கொடுத்துவிட்டனர் .

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை சூரியனை இந்துக்கள் வழிபட்டதால் ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஆறு சமயங்களில் செளரம் என்ற சூரிய வழிபாட்டினையும் சேர்த்தார் ; இன்று எல்லோரும் சூரிய நமஸ்காரத்தில் சூரியனின் பெயர்களை சொல்லி நமஸ்காரம் செய்கின்றனர்; காயத்ரீ என்ற பெயரில் சூரியனையும் நாள்தோறும் வழிபடுகின்றனர் .

பாரதியாரும் காயத்ரீ மந்திரத்தைச் சூரிய வழிபாடு என்று காட்டுகிறார் . அந்த மந்திரத்தைச்

செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்

எங்கள் அறிவினைத் தூண்டி நடந்துக  —

என்று எளிய தமிழில் செப்பினார்.

****

According to information on Tamil and Vedas, the Hittite word “Suriyos” is related to the Sanskrit word “Surya,” meaning Sun God. The Hittites, who ruled parts of modern Syria and Turkey, are believed to have worshipped the Sun God. The very name “Syria” is said to derive from the Sanskrit word “Surya”. The website also suggests that the Hittites, who spoke an old form of Sanskrit, worshipped Surya and other Hindu deities like the Twelve Adityas, Goddess Nayanatara, and Varuna.

SUN DISC IN BRITISH CITY BATH

A giant model of the Sun has been installed at the Bath Assembly Rooms in Somerset.

Created by Bristol artist Luke Jerram, the sculpture is named Helios after the god who represents the Sun in Greek mythology.

The 7-metre (22ft) sculpture follows Jerram’s series of astronomical artworks, Museum of the Moon, Gaia and Mars.

It will be on display until the 23rd of February before touring around the UK’s National Trust sites.

–SUBHAM—

TAGS- SURIYOS, HITTITES, HELIOS, GREEK, BATH, SUN DISC,  ON TOUR, ஹிட்டைட்ஸ், சூரியோஸ், ஹீலியோஸ், கிரேக்க, பாத் /BATH

சங்க இலக்கியத்தில், காளிதாசன் நூல்களில் சூரியன் வழிபாடு—3 (Post No.14,871)

Written by London Swaminathan

Post No. 14,871

Date uploaded in London –  15 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சூரியனையும் சந்திரனையும் இருசுடர் என்று புறநானூறு (65 ) போற்றுகிறது

நிறைமதி நாளில் ஒரு சுடர் (ஞாயிறு) மறைய

ஒரு சுடர் (திங்கள்) தோன்றுவது போல,

சேரன், சோழன் ஆகிய இருவரில் ஒருவன் வெளிப்பட

மற்றொருவன் மறைந்தான்.

உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து,

இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்

புன்கண் மாலை மலை மறைந்தாங்கு,

இது அப்படியே குமார சம்பவ நூலில் எட்டாவது சர்க்கப்   பாடல்களில் வருகிறது.

***

சூரியன் எழ, சந்திரன் மறையும் காட்சி – சாகுந்தலம் 4-12

ரகு வம்சம் 8-15

ராமன் சூரியன், பரசுராமன் சந்திரன் 11 -82  ரகு

***

சூரியன் -தாமரை, சந்திரன்- அல்லி – ரகு 17-75

சூரியனைக் கண்டால் பாவம் அழியும் – ரகு17-74

பகவான் சூர்ய – விக்ரம 3-18; 4

புறநானூற்றில் நிலவும் கதிரவனும் வரும் பாடல்கள்

சூரியன் சந்திரன் – இரு கண்கள் 365;

6, 8, 25, 231, 362, 365, 376, 27, 55, 56, 59, 65, 174.

தண் கதிர் மதியம் போலவும், தெறு சுடர்

ஒண் கதிர் ஞாயிறு போலவும்,

மன்னிய, பெரும! நீ நிலமிசையானே! –6

xxx

 அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்

வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத்

தண் கதிர் மதியம் போலவும்,

நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!—56

xxx

ஒரு புலவர் சூரியனை எழச் செய்யும் ஆற்றலும் உடையவன் மன்னன் என்று புகழ்கிறார்

செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,

வெண் திங்களுள் வெயில் வேண்டினும்,

வேண்டியது விளைக்கும் ஆற்றலைஆகலின்,—38

***

சேரமான் கடுங்கோ வாழியாதன் என்பவன் சூரியனைப் போலவே செயல்படுகிறான் என்கிறார் கபிலர்.

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக,

போகம் வேண்டி, பொதுச் சொல் பொறாஅது,

இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,

ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகை,

கடந்து அடு தானைச் சேரலாதனை

யாங்கனம் ஒத்தியோ? வீங்கு செலல் மண்டிலம்!

பொழுது என வரைதி; புறக்கொடுத்து இறத்தி;

மாறி வருதி; மலை மறைந்து ஒளித்தி;

அகல் இரு விசும்பினானும்

பகல் விளங்குதியால், பல் கதிர் விரித்தே.–8

****

சூரியன் முன் இருள் போல- சாகுந்தலம் 5-15; புறம் 90, 4; முருகு 1/2

***

விக்ரம ஊர்வசி நாடகத்தில் சூரியனைக் கடவுள் என்று கூறுவதைத் தமிழர்களும் ஞாயிற்றுப்புத்தேள் என்று கலித்தொகையில் 108-13 குறிப்பிடுகின்றனர் .

xxx

அகநானூற்றில்

விளங்கு பகல் உதவிய பல் கதிர்  ஞாயிறு  என்று போ  றப்படுகிறார் -99

ஞாயிற்றுக்கு ஒரு சக்கரத் தேர்- 360

xxx

கிரகணங்களைப்பற்றி வரும் இடங்களில் எல்லாம் சூரியனும் சந்திரனும் பாம்பால் விழுங்கப்படுவதாகக் கூறும் கதை சங்க நூல்களிலும் காளிதாசன் நூல்களிலும் வருகிறது ; இதில் சந்திரன் பெயர்தான் அதிகம் அடிபடுகிறது .

***

பத்துப்பாட்டிலும்  எட்டுத் தொகையிலும் கதிரவன் வரும் இடங்கள் எண்ணிலடங்கா. இவற்றைத் தொகுத்து காளிதாசன் நூல்களுடன் ஒப்பிட்டால் தனி புத்தகமே தேவைப்படும்

***

நிலவு, கதிரவன் செய்திகளை காளிதாஸனிலும் சங்கநூல்களிலும் ஒப்பிட்டு ஆராய நிறைய விஷயங்கள் உள்ளன . நான் இந்தக் கட்டுரையில் விரிவாக எழுதவில்லை.

***

உலகில் சூரியனுக்குப் பல இடங்களில் கோவில்கள் உண்டு ஆனால் ஒரிஸ்ஸாவில் கொனாரக், காஷ்மீரில் மார்த்தாண்ட், குஜராத்தில் மதெரா முதலிய 13 சூரியன் கோவில்களில் பூஜைகள் நடைபெற்றன. இவைகளில் பல முஸ்லீம்களின் தாக்குதலால் அழிந்தன; பூஜைகள் நின்றன. ஆயினும் இந்துக்களின் சூரிய வழிபாடு நிற்கவில்லை.

சந்தியாவந்தன மந்திரத்தில் சூரியன்

1.பிராமணர்கள் நாள்தோறும் மூன்று முறை வேத மந்திரங்களைச் சொல்லி சூரியனை வழிபடுகின்றனர். அதற்கு த்ரி கால சந்தியா வந்தனம் என்று பெயர்.

2.சூரியனார் கோவில் முதலிய கோவில்களில் இன்றும் வழிபாடு நடக்கிறது. எல்லா தென்னிந்திய கோவில்களிலும் சூரிய, சந்திரர், நவக் கிரஹ சந்நிதிகள் உண்டு.

3.சூரிய சஞ்சாரம்: இது எல்லா ஜாதியினருக்கும் முக்கியமானது. சூரியனின் வடதிசைப் பயணத்தை (உத்தராயண புண்ய காலம்/மகர சங்கராந்தி/ பொங்கல்)  எல்லோரும் கொண்டாடுகிறோம். சூரியனின் தென் திசைப் பயணத்தையும் (தட்சிணாயன புண்ய காலம்) எல்லோரும் கொண்டாடுகிறோம். இந்த இரண்டு நேரங்களில் தை, ஆடி அமாவசைகளில் எல்லா ஜாதியினரும் புனித நதி, கடற்கரைகளில் நீத்தாரை நினைந்து நீர்க்கடன் செலுத்துவர். தமிழர்கள் இன்று வரை இதைச் செய்துவருகின்றனர்.

இதே தான் ஸ்டோன்ஹெஞ்ச்சிலும் நடை பெற்றது. பிரிட்டன் என்பது குளிர் நாடாகையால் தட்சிணாயன புண்ய காலத்தை (தென் திசைப் பயணம்) பெரிதாகக் கொண்டாடினர். இப்பொழுதும் மிக நீண்ட பகல் பொழுதுடைய ஜூன் 21–ஆம் தேதி த்ரூய்ட்ஸ் என்ற பெயரில் வெள்ளாடை தரித்த ஒரு குழு விநோதச் சடங்குகளைச் செய்கின்றது.இந்துக் கோவில்கள் பெரும்பாலும் சூரியன் உதிக்கும் கிழக்கு திசையாஇ நோக்கியே இருக்கும்.

நவக்கிரஹ சந்நிதிகள் வரும் முன்னரே சூரியன், சந்திரன் சந்நிதிகள் நம் கோவில்களில் உள.

மேலும், ஒரு கோவில் தட்சிணாயணத்திலோ, உத்தராயணத்திலோ கட்டப்பட்டால் அதற்குத் தக முகப்பு, சந்நிதிகளை அமைக்கும் வழக்கமும் உண்டு.

யாக சாலை பூஜைகளில் காலையில் துவங்கும் போது சூரிய பூஜை முதலில் செய்ய்ப்படும்.

இவை அனைத்தும் இன்று வரை நாம் செய்யும் சூரியவழிபாட்டுக்கு சான்று பகரும்.

****

சூரியனார் கோவில் குலோத்துங்க சோழன் காலத்தில் உருவானது; ஆனால் ஆந்திரத்துள்ள அரசவல்லி சூரியநாராயணன் கோயில் (Arasavalli Sun Temple) என்பது  ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் ஆகும் .கதார்மல் சூரியக் கோயில் (Katarmal) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில்அமைந்த புகழ்பெற்ற பழமையான கோவில் ஆகும்

அதர்வண வேதத்தில் சூரியனுக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பு பற்றிய பாடலில் வெள்ளைக்காரன் Ralph T H Griffith கிரிப்பித் கூட சாக்ரடீசும் இதைச் சொல்லியுள்ளார் என்று அடிக்குறிப்பில் சொல்கிறார்.

***

இதோ அதர்வண வேத மந்திரமும்  Griffith கிரிப்பித் விமர்சனமும்

காண்டம் 5; துதி 9 (சூக்தம் எண் 151)

மந்திரம் 7

“சூரியன் என் கண் ; காற்று என் பிராணன்; வானம் என் ஆத்மா; பூமி என் உடம்பு; எனக்கு வெல்லப்படாதவன் என்ற பெயர் உண்டு ; அப்படிப்பட்ட நான் என் ஆத்மாவை பாதுகாப்பதற்காக பூமிக்கும் வானத்துக்கும் அளிக்கிறேன்”.

நம்முடைய ஆராய்ச்சிக்கு தேவையான வரி “சூரியன் என் கண்”; இது பல இடங்களில் வேதங்களில் வருகிறது ; ரிக் வேத மந்திரங்களில் மிகவும் பிரசித்தமானது புருஷ சூக்தம் (10-90) இதை கோவிலில் அபிஷேக காலத்தில் சொல்லுவதால் எல்லோருக்கும் தெரிந்த மந்திரம். அதில் கடவுளின் கண்களில் இருந்து சூரியன்  பிறந்ததாக வருகிறது. மேலும் இறுதிச் சடங்கு மந்திரம் (10-16-3) ஒன்றிலும் கண்களை சூரியன் எடுத்துக்கொள்ளட்டும் என்றும் வருகிறது . இது தவிர ஏனைய வேதங்களில் ‘’சூரியன்- கண்’ தொடர்பு  காணக்கிடக்கிறது

கிரிப்பித் Griffith Footnote அடிக்குறிப்பு

சாக்ரடீஸ் கூறுகிறார்:எல்லா புலன்களுக்கும் கண்களையே நான் சூரிய ன் போல ஒளி உள்ளதாகக் கருதுவேன் :

இது அக்காலத்திலேயே பிளாட்டோ எழுதிய Republic  ரிபப்ளிக் என்ற நூலில் உளது

அக்காலத்திலேயே,  வேதங்கள் பல இடங்களில் கூறும் விஷயத்தை சாக்ரடீசும் குறிப்பிடுவது அவருக்கு இந்துமத கருத்துக்களைப் பரப்புவதில் இருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது.

***

My articles on the same subject:—

சூரியனைப் பற்றி 6 கண்டு பிடிப்புகள் வேதத்தில் உள்ளது!(Post No.10,301)

Post No. 10,301

Date uploaded in London – –   5 NOVEMBER  2021         

DATE OF RIG VEDA THROUGH SOLAR ECLIPSE-3000 BCE …

https://tamilandvedas.com › 2017/12/08 › date-of-rig-v…

8 Dec 2017 — Solar eclipses narrated in the Veda cannot be overlooked. In passage 10-138-4 of the Rig Veda, it is said Indra ‘maseva suryo vasu puryam adade’ …

Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature

https://tamilandvedas.com › tamil-arti…

29 Dec 2011 — Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature … ‘Mr One Thousand’ in Rig Veda and Tamil Literature (Post No.10,179) …

Was Jayadratha killed by a Solar Eclipse? | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/…/…

· 

3 Jan 2012 — The earliest reference to a solar eclipse occurs in the Rig Veda. Atri Maharishi speaks of the wonders of the solar eclipse (RV5-40-5).

TWO RARE VEDIC HYMNS TO CURE SICKNESS – Tamil and …

https://tamilandvedas.com › two-rare…

· Translate this page

4 Jan 2020 — TWO RARE VEDIC HYMNS TO CURE SICKNESS– Part 1(Post No.7418). Research article Written by London Swaminathan.

TWO RARE VEDIC MANTRAS TO CURE SICKNESS

https://swamiindology.blogspot.com › 2020/01 › two-r…

4 Jan 2020 — TWO RARE VEDIC MANTRAS TO CURE SICKNESS– Part 1(Post No.7418) · Research article Written by London Swaminathan · Uploaded in London on – 4 JANUARY …

TWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422) – Tamil …

https://tamilandvedas.com › 2020/01/05 › hydrotherap…

5 Jan 2020 — Acupressure in Rig Veda HYDROTHERAPYACUPRESSUREMONSOON IN THE RIG VEDATWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422) Research article 

–subham—

Tags- சங்க இலக்கியத்தில், காளிதாசன் நூல், சூரியன் வழிபாடு, Part 3

ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளாசி பெற்றவர் திரு சந்தானம்! (Post No.14,870)

V.SANTANAM SPEAKING IN CHENNAI AT THE INVITATION OF BABA.

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,870

Date uploaded in London – 15 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

   Madurai V.SantanamFreedom Fighter and News Editor Dinamani News paper,  passed away on the Independence Day  15-8-1998, after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.

புதிய தொடர்!

இன்று 15-8-2025. இதே நாளில் 1998ம் ஆண்டு அமரரான திரு வெ.சந்தானத்திற்கு எங்கள் உளம் நிறைந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 9 

ச. நாகராஜன் 

10

ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளாசி பெற்றவர் திரு சந்தானம்! 

1965ம் ஆண்டு.

மதுரையில் பெரும் வணிகராகத் திகழ்ந்த திரு சுப்பிரமணியம் செட்டியார் ஶ்ரீ சத்யசாயிபாபாவின் அணுக்கத் தொண்டர்.

அவர் பாபாவைப் பற்றிச் சொன்னதோடு சத்யம் சிவம் சுந்தரம் உள்ளிட்ட புத்தகங்களையும் தந்தார்.

என் தந்தையாருக்கு இப்படிப்பட்ட அவதார புருஷர் மேல் ஒரு ஆர்வம் ஏற்பட்டது.

நவம்பர் 23ஆம் தேதி பாபாவின் பிறந்த நாள் புட்டபர்த்தியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

ஶ்ரீ சுப்ரமணிய செட்டியார் எனது தந்தையிடன் பல அன்பர்களும் மதுரையிலிருந்து காரில் புட்டபர்த்தி செல்ல இருப்பதாகவும் எனது தந்தையும் கலந்து கொண்டால் பாபாவை நேரில் தரிசிக்கலாம் என்றும் சொன்னார்.

அந்தச் சமயம் பார்த்து ஒரு நாள் பிரபல நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலத்தின் மாப்பிள்ளை பழநியைச் சேர்ந்த திரு மௌனகுருசாமி என் இல்லத்திற்கு வந்து தந்தையைப் பார்த்துப் பேசினார்.

பேச்சுவாக்கில் புட்டபர்த்தி செல்ல இருப்பதாக அவருக்குத் தெரியவரவே அவர் தன் காரில் தான் புட்டபர்த்தி செல்ல வேண்டும் என்று வற்புறுத்திக் கூறி காரையும் அதை ஓட்டிச் செல்ல தனது டிரைவரையும் அனுப்பி வைத்தார்.

ஏராளமான கார்கள். சுப்ரமண்ய செட்டியார், அவரது குடும்பம், தங்க நகைக் கடை வைத்திருந்த திரு ஆர். ராமநாதன் செட்டியார், எல் ஐ சி ஜோனல் மேனேஜர் திரு கெ ஆர் கே பட் உள்ளிட்டவர்கள் கார்களில் வந்தனர். எங்கள் குடும்பமும் காரில் சென்றது.

பங்களூரில் பிரபல ஹோட்டலை கார்கள் அடைந்த போது திடீரென்று பாண்ட் வாத்தியம் கேட்டது.

எங்களை பாண்ட் வாத்திய கோஷ்டி வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து புட்டபர்த்தி சென்றோம்.

1965ல் புட்டபர்த்தி அவ்வளவாக வளர்ந்திருக்கவில்லை.

பாபா இருக்கும் மந்திர் உண்டு. கீழே பிரதான பஜனை மண்டபம் உண்டு.

அருகில் உள்ள இடத்தில் கொட்டகைகள் போடப்பட்டு அதில் தான் கஸ்தூரி உள்ளிட்டோர் தங்கி இருந்தனர்.அவரை நாங்கள் எல்லோரும் அங்கு தான் சந்தித்தோம். பாபாவுக்கு மதுரை குழுவினர் வந்ததை அவர் தெரிவித்தார்.

புட்டபர்த்திக்கு வருவோர் காலையும் மாலையும் வரிசையாக பிரதான மண்டபத்தின் முன் அமர வேண்டும். பாபா வருவார். பேட்டிக்கு உரியவர்களை அவரே தேர்ந்தெடுப்பார்.

அவர்கள் மண்டப தாழ்வாரத்தில் அமர வேண்டும். வரிசையாக ஒவ்வொருவரையாக அழைத்து அந்தரங்கமாகப் பேட்டி தருவார் பாபா.

இந்த முறை பேட்டியில் ஒரு அதிசயத்தைக் கண்டோம். பேட்டிக்கு கே ஆர் கே பட்டின் டிரைவர் அழைக்கப்பட்டார். மற்ற எல்லோரும் பின்னால் தான் அழைக்கப்பட்டனர்.

இங்கு அந்தஸ்து, ஜாதி, மத பேதமெல்லாம் கிடையாது. யாருக்கு முதல் தேவை இருக்கிறதோ அவரே அழைக்கப்படுவார்.

பட்டின் டிரைவரிடம் பாபா, “உனக்கு வேறு வேலை தயாராக இருக்கிறது. மதுரை போனவுடன் கிடைக்கும்.” என்றார். இது எங்கள் எல்லோருக்கும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.

பாபா கூறியது போலவே அவருக்கு மதுரை போனவுடன் வேலை கிடைத்தது. பட்டோ மதுரையை விட்டு புட்டபர்த்திக்கே வந்து தங்கி விட்டார்.

எங்கள் முறை வந்த போது பாபா எங்கள் அனைவரையும் தனி அறைக்குள் வரச் சொன்னார்.

தனது கையைச் சுழற்றினார். அருமையான விஸிடிங் கார்டு ஒன்று வந்தது. அதை எனது தந்தையார் கையில் கொடுத்தார். ஆசி அருளினார்.

எங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசி கூறினார்.

இது தான் முதல் சந்திப்பு.

எனது தந்தையார் சாயி மீது அவ்வப்பொழுது கீதங்களை இயற்றி வந்தார். அதைப் பற்றிச் சொன்ன போது அது இயற்றிய போதே அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்றார்.

பதங்கள் பரதநாட்டியம் பொலத் துள்ளிக் குதித்துச் செல்கின்றன என்று அவர் கூறியபோது அனைவருக்கும் சந்தோஷம் உண்டானது.

அங்கிருந்த ஒருவர் இரண்டு இரண்டு பாடல்களாக எழுதி பகவானின் பாதகமலங்களில் வைத்து அங்கீகாரம் பெற்றிருக்கலாம் என்று கூறிய போது பகவான் குறுக்கிட்டு, ஒவ்வொரு கீதமும் புனையப்பட்ட போதே

முன்னரேயே சமர்ப்பித்தாகி விட்டது என்றார்.

நூறு நாள்களில் நூற்றெட்டு கீதங்கள். ராகம், மெட்டு ஆகியவற்றுடன்  உருவாகின.

புட்டபர்த்தியிலிருந்து மதுரை வந்தோம். ஏராளமான பாடகர்கள் இந்த கீதங்களை மேடை கச்சேரிகளில் பாட ஆரம்பித்தனர்.

திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமியின் சகோதரர் திரு எம்.எஸ். சக்திவேல் சிறந்த பாடகர். அவர் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் கச்சேரிகளில் பாடல்களை இசைத்தனர். வீட்டில் தினமும் ஒரு பாடகர் வாத்தியங்களுடன் வருவார். பாபாவின் கீதங்களுக்கான கச்சேரி நடக்கும்.

நவராத்திரி சமயத்தில் சத்யசாயி நகரில் ஷீர்டி பாபா கோவிலில் பெரிய உற்சவம் நடக்கும். அதிலும் கச்சேரிகள் நடத்தப்பட்டன.

எனது இல்லத்திற்கு ஏராளமான பாபா பக்தர்கள் வந்து என் தந்தையாரைப் பார்ப்பது வழக்கமாகி விட்டது.

திரு எஸ்.என்.கே. சுந்தரம் பிரபலமான பாண்டியன் பேங்கை நடத்தியவர். பின்னால் இந்த பெரிய பேங்க் கனரா பேங்குடன் இணைந்தது.

இவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து பாபாவின் அருமை பெருமைகளைப் பேசுவார். ஒரு குட்டி புத்தகத்தில் பாபாவின் லீலைகளை ஆங்கிலத்தில் எழுதி அதை வெளியிட்டார்.

பூதலூரில் அவர் ஒரு பிரம்மாண்டமான சாயி பஜனை மண்டபத்தைக் கட்டி அதனுடைய திறப்பு விழாவிற்காக எனது தந்தையை  அழைத்தார். எனது தந்தை சந்தோஷமாக ஒப்புக் கொண்டார். நானும் உடன் சென்றேன். பிரமாதமாக விழா நடந்தது.

எனது தாயார் பஜனைகளில் ஹார்மோனியம் வாசித்தவாறே சாயி பகவானின் பாடல்களைப் பாடினார்.

அந்தக் காலத்தில் தான் ஒரு அமர்க்களம் நடந்தது. ஆங்காங்கே பல வீடுகளில் பாபாவின் திருவுருவப் படத்திலிருந்து விபூதி கொட்ட ஆரம்பித்தது.

அந்த வீடுகளுக்குச் சென்று அதை அதிசயத்துடன் பார்க்க பெரும் கூட்டமும் கூடியது. 

கீழே சாயி கீதங்கள் புத்தகத்திற்கு எனது தந்தையார் தந்த முகவுரையைப் பார்க்கலாம். 

அடுத்து இன்னும் சில நிகழ்வுகளைப் பார்க்கலாமா?

to be continued……..

–subham—

 tags – ஶ்ரீ சத்ய சாயிபாபா, அருளாசி,  சந்தானம்,

GNANAMAYAM 17th AUGUST 2025 BROADCAST PROGRAMME SCHEDULE

Mr N Ganesh Raja

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

****

Prayer -Mrs. Jayanthi Sundar Team .

***

NEWS BULETIN

Vaishnavi Anand and Latha Yogesh  from London presents World Hindu News in Tamil

****

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on – DHARMAPURAM Temple

****

Professor S Suryanarayanan speaks on the Tamil Proverbs and thier mis interpretation.

****

SPECIAL EVENT-

Talk by Mr N .GANESH RAAJA

ON HIS HISTORICAL RESEARCH.

 Ganesh Raaja. N hails from Tamil Nadu. He completed his engineering in 2003 and has more than twenty years of experience in the software industry.

He was attracted towards ‘History of India’ after noticing a defaming article in an Indian magazine. He has spent more than eight years researching on this subject. He has read vast number of books related to ancient Sanskrit literature, ancient Tamil literature, scientific evolution etc. written by eminent Indian and foreign scholars.

Each book he referred to catered to a specific aspect of Indian life. After understanding them, a natural interest arose in him to reconcile and chronologically arrange them in a ‘holistic’ and ‘interesting’ way. This is a first attempt at narrating India’s story ‘as-it-happened’.

The result is the book, titled, “The Jambū Island”. This book chronologically organizes the Rishiskingsliterary evolutionpeople’s lives, and scientific progress based on Sanskrit and Tamil literature. It aims to eliminate myths, interpolations, and exaggerations. It strives to present the story in a logical and captivating narrative, with many pictures.

This book covers the period from roughly 6000 BCE to 3138 BCE, narrating significant events including the rendering of the Vedic mantras by the Rishis, the Aryan clan split towards Iran resulting in the formation of the Zōrōastrians, the atrocities and defeat of the Haihaya clan, fusion of Nāgās and other native tribes into the Vedic religion, Āryan colonization of South India, and the Bharata battle at Kurukshetra.

Post launching his book, Ganesh has started an Youtube channel in Tamil to share his learnings. The goal of this channel to spread awareness about the greatness of our country and Hindu religion, to create a counter-narrative to the popular Dravidian ideology of Tamil Nadu.

Youtube channel: https://www.youtube.com/@ArivomInaivom    

Amazon book: https://tinyurl.com/rsdsr5y5   

******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 17-8-2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் – திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்-

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

சொற்பொழிவு– தலைப்பு- தர்மபுரம் கோவில்

****

பேராசிரியர் எஸ். சூர்யாநாராயணன்சொற்பொழிவு–

(முன்னாள் கல்லூரி பிரின்சிபால்)

தலைப்பு : உருமாறிய பழமொழிகளின் உண்மைப் பொருள்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு –கணேஷ் ராஜா அவர்களின் வரலாற்று ஆராய்ச்சி உரை. 

என்.கணேஷ் ராஜா , பொறியியல் பட்டதாரி , வரலாற்றில் ஆராய்ச்சி செய்து ஜம்புத்வீப உண்மை வரலாற்றினை கால வரிசைப்படி நூலாக  எழுதியவர்; திலகர் முதலானோர் பற்றி யூ டியூப் வீடியோ தயாரித்தவர் . அவரது வரலாற்று ஆராய்ச்சியை இன்றைய சொற்பொழிவில் விளக்குவார் .

****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags-Gnanamayam Broadcast, 17-8- 2025, SUMMARY