ரிக்வேதத்தில் இந்திரனுக்குத்தான் அதிகத் துதிப்பாடல்கள் உள்ளன . தமிழின் பழைய நூலான தொல்காப்பியமும் இந்திரனையும் வருணனையும் தமிழ் மக்களின் வழிபடு தெய்வங்களாகச் சொல்கிறது; இது மாக்ஸ்முல்லர் கால்டுவெல் கும்பலுக்கு செமை அடி கொடுக்கிறது ; ஆரிய –திராவிட வாதம் பேசி இரண்டு இனத்தவரும் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்று கால்டுவெல் மாக்ஸ்முல்லரும் பரப்பியதோடு ஆரியர் வேறு திராவிடர் வேறு என்று சாகும் வரை பிரசாரம் செய்தனர்; அந்த இரண்டு கும்பல்களைத் தொல்காப்பியர் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்! ஆனால் செத்த பாம்பை அடிக்கும் சில “வீரர்கள்” இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர்!!
தமிழ் நாட்டில் இந்திர விழா கொண்டாடப்பட்டது சங்க இலக்கிய நூல்களில் உள்ளது. ஒருவன் அடியோடு சாய்ந்தான் அல்லது விழுந்தான் என்பதற்கு வால்மீகி ராமாயணம் அடிக்கடி பயன்படுத்தும் உவமை இந்திர விழா தூண் சாய்க்கப்பட்டது போல என்பதாகும் ஏனெனில் அக்காலத்தில் நீண்ட நாள் நடந்த இந்திர விழா முடிந்த பின்னர் அந்த தூணை மக்கள் எல்லோரும் சேர்ந்து சாய்ப்பார்கள் . பிற்கால தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்களில் இந்த விழா பற்றியோ, தூண் பற்றியோ எதையும் காணமுடியாது .
இதிலிருந்து என்ன தெரிகிறது?
இந்திரன் மற்றும் இந்திர விழா பற்றிய நூல்கள் அனைத்தும் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னர் எழுதப்பட்டவை என்பது தெளிவாகிறது .
இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்; ராஜ+ இந்திர! இன்றய இந்தியாவின் பிரதமரும் இந்திரனே! நர+ இந்திர மோடி= நரேந்திர மோடி ! இந்தியாவின் எந்த மாநில டெலிபோன் டைரக்டரி மட்டுமல்ல, ஆசிய நாடுகள் அத்தனையிலும் இந்திரன் பெயர் இருக்கும்! ஆங்கிலத்தில் இதை ஆண்ட்ரூ ANDREW என்பார்கள் தமிழ் சங்க இலக்கியத்தில் உள்ள ஆய்+ அண்டிரன் என்ற பெயரிலிருந்து ஆண்ட்ரூ வந்தது. ஆய் அண்டிரனின் உண்மைப் பெயர் அஜேந்திரன் !
ஆயிரம் கண்கள் உடையவன் – முருகு.155; , கலி.105-15; பரி.9-9
வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தியவன் -புறம்241; கலி.105-15; பரி.18-30;
நெடியோன் -புறம்.241;
இந்திரர் அமிழ்தம் – புறம்.182
இந்திரன் வில் – பரி.18-39; புறம்.20; அகம்.84;192; பெரும்பா.292;
இந்திரன், பூசை; இவள் அகலிகை …. பரி.19-50/3
(திருப்பரங்குன்ற ஓவியத்தைக் கண்ட பட்டிகாட்டுப் பெண்ணுக்கு வான் கணவன் இந்திரன்-அகலிகை கதையைச் சொன்ன காட்சி; பூசை=பூனை
இந்திரவிழாவின் பூவன்ன –
புன்தலைப்பேடை வரிநிழல் அகலவும் – ஐங்குறு.62-1/2
பதிற்று .30-14;
அமிழ்தம் என்ற சொல்லும் மூன்று வித ஸ்பெல்லிங்க்குகளுடன் தமிழ்ச் சங்க நூல்களில் பயிலப்படுகின்ற்ன .
Indra in South East Asian Countries
திருமுருகாற்றுப்படை 155….
நூற்றுப்பத்தடுக்கியநாட்டத்துநூறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்
தீரிரண் டேந்திய மருப்பி னெழினடைத்
தாழ்பெருந் தடக்கை யுயர்த்த யானை
எருத்த மேறிய திருக்கிளர் செல்வனு
160நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகங் காக்கு மொன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் முவருந் தலைவ ராக
பொருள்
(155-159) (நூறைப் பத்தால் பெருக்கினால் வரும்) ஆயிரம் கண்களுடனும் நூற்றுக்கு மேற்பட்ட பல வேள்விகளே இயற்றி முடித்த—பகைவரை முன்னேறி அழித்த வெற்றிச் சிறப்புடனும் (விளங்கி ), நான்காக அமைந்த மருப்புகளையும் (தந்தங்களையும்) அழகிய நடையினையும் உடைய—தாழ்ந்து தொங்கும் பெரிய நீண்ட துதிக்கையைத் தூக்கி மேலே உயர்த்திய வெள்ளையானையின் பிடரியின் மேல் அமர்ந்து வரும் — திருமகளின் விளக்கம் பெற்ற செல்வனாகிய இந்திரனும்,
(Throughout South Asia, Indra’s Elephant is shown with many trunks and many tusks)
Indra in Laos stamps (Phra= Sri)
மூவர் வருகையின் காரணம்
(160-165) இந்திரன், நான்முகன். திருமால், உருத்திரன் என்னும் நான்கு பெரிய தெய்வங்களுள் (முருகனால் சிறைப்பட்டுக் கிடக்கும் நான்முகன் நீங்கலாக ). நல்ல திருப்பதிகள் நிலைபெற்றுள்ள உலகினைக் காக்கும் ஒப்பற்ற செயல் புரியும் கொள்கை கொண்ட —பலரும் புகழும் திருமால், உருத்கிரன், இந்திரன் ஆகிய மூவரும் தாம் தத்தம் தலைமையினைப் பெற வேண்டியும்………………
*****
இந்திரன் இடம்பெறாத தமிழ் நூல்களே இல்லை என்று சொல்லிவிடலாம். புறநானூற்றில் உண்டு. திருக்குறளில் உண்டு. ஐங்குறு நூற்றிலும் இருக்கிறது. தேவலோக அமிழ்தம், நிறைய இடங்களில் வருகிறது.
மிகவும் வியப்பான விஷயம்! பாபிலோனிய ஜில்காமேஷ் போன்றோர் உலக மியுசியங்களில் ஒளிந்து கொண்டுவிட்டனர். ஆனால் இந்திரனையோ இன்றும் பிராமணர்கள் முக்கால சந்தியாவந்தனத்தில் தினமும் வழிபடுகின்றனர். உலகம் முழுதும் உள்ள இந்துக் கோவில்களில் தினசரி பூஜைகளில் இந்திரனும் வருணனும் வழிபடப்படுகின்றனர். இந்திரன் பெயர் இல்லாத இனம் இந்தியாவில் எங்குமே இல்லை. இந்தியாவின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் முதல் தமிழ்நாட்டின் நாகேந்திரன், கண்ணாயிரம் வரை எல்லாம் இந்திரன் பெயர்கள்தான்.
இன்றும்கூட குச்சிப்புடி முதலிய நடனங்களில் மேடையில் இந்திரன் கொடி வைக்கப்படுகிறது. சிலப்பதிகார, மணிமேகலை புகழ் மாதவிக்குக் கொடுக்கப்பட்ட தலைக் கோல் இந்திரன் மகன் ஜயந்தனுடன் தொடர்புடையது.
நேபாளத்தில் இந்திர விழா
இன்றுவரை இந்திர விழாவை பழந்தமிழ்நாடு போலக் கொண்டாடும் நாடு நேபாளம். அதன் தலை நகரமான காத்மண்டுவில் ஆண்டுதோறும் அரசாங்கத் திருவிழாவாக நடைபெறுகிறது. தமிழ் நாடு போலவே கொடி ஏற்றி ஆடல் பாடலுடன் இந்திர தேவன் ஊர்வலத்துடன் விழா நடைபெறுகிறது.
தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, பர்மாவில் ஏப்ரல் மாத புத்தாண்டு தினத்தில் நடைபெறும் நீர் விழாவும், இன்று இந்தியா முழுதும் நடை பெறும் ரக்ஷா பந்தனும் (கையில் சகோதரிகள் கட்டிவிடும் காப்பு) இந்திரன் தொடர்புடைய விழக்களே.
பொங்கலுக்கு முதல் நாளன்று தமிழர்கள் கொண்டாடும் போகிப் பண்டிகை இந்திர விழாவின் ஒரு பகுதியே. போகி என்பது இந்திரனின் பெயர்களில் ஒன்று.
****
வேதத்தில் எண்கள் முப்பது, நூறு, ஆயிரம் என்ற எண்களின் ஸம்ஸ்க்ருதச் சொற்களை இந்திரனைக் குறிக்கப் பயன்படுத்துவார்கள். ஏனெனில் அவன் 33 தேவர்களுக்குத் தலைவன்; நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்தவன்; ஆயிரம் கண்களை உடையவன். இதைத் தமிழிலும் காளிதாஸனிலும் காண்கிறோம்.
To be continued…………………….
Tags- காளிதாசன், காவியங்கள் இந்திரன், சங்கத் தமிழ் நூல்கள், ஒப்பீடு! – 1
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
புதிய தொடர்!
அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! –4
ச. நாகராஜன்
5
ஸ்வாமிஜி: எங்கும் சஞ்சரித்து எதையும் பார்க்க வல்லவர்!
இருந்த இடத்திலிருந்தே அனைத்தையும் பார்க்கவல்ல ஆற்றல் படைத்தவர் ஸ்வாமிஜி. ஆயக்குடியில் அவருடன் இருக்கும் போது எங்கள் வீட்டில் நடப்பதைச் சுட்டிக் காட்டி எதற்காக தங்கையுடன் வம்புச் சண்டை போடுகிறீர்கள்” என்று ஒருமுறை அவர் கேட்டார்.
“இல்லையே, அப்படி போடவில்லையே” என்று மறுத்தவுடன் விவரங்களைத் தெளிவாகக் கூறலானார். உடனே அவர் கூறுவது அனைத்தும் சரிதான் என்று ஒப்புக் கொண்ட நாங்கள், “இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டோம்.
பெரிய ரகசியங்கள் சிறிய விஷயங்களிலிருந்தே வெளிப்படுகின்றன.
“என் கண்ணை மூடிக் கொண்டால் பிலிம் போல எல்லாம் ஓடும்டா” என்றார் அவர்.
பழனியில் நடந்த ஒரு சங்கீதக் கச்சேரியை (ஆயக்குடியில் இருந்த இடத்திலிருந்தே) தான் கேட்டு ரசித்தது பற்றியும் ஒரு முறை கூறினார்.
இதனால் அவர் எங்கும் எப்போதும் சஞ்சரிக்க வல்லவர் என்பது புரிந்தது. ரமண மஹரிஷி வாழ்விலும் இது போன்ற ஏராளமான சம்பவங்களைக் காணலாம்.
வருங்காலத்தைத் தெளிவாகப் பார்க்கும் ஆற்றல் உள்ளவர் அவர்.
ஒரு முறை அனைவரும் ஆயக்குடியில் அவரது வீட்டின் கூடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது எதிர்காலம் பற்றிய பேச்சு வந்தது. உடனே அவர் என் தந்தையாரை நோக்கி, “சந்தானம், சமுத்திரம் இங்கே வந்துடும்” என்றார். அவர் கை அருகில் ஒரு அடி தூரத்தைக் காண்பித்தது.
அனைவரும் அரண்டு போனோம்.
திகைப்பில் ஆழ்ந்த எங்களைப் பார்த்து அவர், “பயப்பட வேண்டாம். உங்களுக்கு ஒன்றுமில்லை” என்றார்.
“சமுத்திரம் இங்கே வந்துடும்” என்பதை தினமும் விவாதித்து விவாதித்து நாங்கள் குழம்பிப் போனோம்.
சில தினங்களில் ராமேஸ்வரம அருகே கடல் பொங்கி உள்ளே நுழைந்தது. தனுஷ்கோடியே மூழ்கிப் போனது. அப்போது தான் அவர் கூறியதன் அர்த்தம் விளங்கியது!
“கடைசியில் நீயும் நானும் தான் சந்தானம்” என்றார் அவர் ஒரு முறை எனது தந்தையைப் பார்த்து!. சாமான்ய அறிவு கொண்ட எனக்கு அவர் அப்படி கூறியதன் அர்த்தம் இன்று வரை புரியவில்லை.
அவ்வளவு நெருக்கமாக என் தந்தையை அவர் நேசித்தார்.
யாரையும் எளிதில் நம்பாத ஒருவர் மாதவன் நாயர். அவர் கேரள அரசில் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி.
அச்சன்கோவிலுக்கு சரியான சாலை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலிக்க அவர் நேரடி இன்ஸ்பெக்ஷனுக்காக அச்சன்கோவிலுக்கு வந்தார். கரடுமுரடான மண்பாதையில் ஜீப் போய்க்கொண்டிருந்தது.
“ஸ்வாமிஜியை நோக்கிய அவர், இதையெல்லாம் என்னால் நம்ப முடியாது. எல்லாம் ஐயப்பன் செய்வார் என்றால் ஒரு புலியை இங்கே வரச் சொல்லுங்கள் பார்ப்போம்” என்றார்.
ஸ்வாமிஜி மௌனமாக இருந்தார்.
அடுத்த சாலை வளைவில் சாலையை முழுதுமாக அடைத்துக் கொண்டு ஒரு பெரிய புலி நின்று கொண்டிருந்தது. அலறிய மாதவன் நாயர், “நம்புகிறேன். நம்புகிறேன். புலியைப் போகச் சொல்லுங்கள்” என்று கூச்சலிட்டார். புலி அகன்றது.
சற்று தூரம் சென்றவுடம். “இது ஒரு கோ இன்சிடென்ஸ். இன்னொரு தரம் புலி வருமா, என்ன?” என்றார்.
அடுத்த வளைவில் இன்னொரு புலி நின்றது. சிரித்தது.
அலறிய மாதவன் நாயர் அந்தக் கணம் முதல் ஸ்வாமிஜியின் அத்யந்த பக்தராக ஆனார்.
இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்?
தென்காசி கோவிலில் கோபுரம் இடிந்திருந்தது. அதையெல்லாம் செப்பனிட்டு பிடிராஜன் தலைமையில் ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்வாமிஜியின் முன்னணியில் இது நடைபெற்றது.
அதில் கலந்து கொள்ள சந்தானம் குடும்பமும் சென்றது,
அனைவரும் தென்காசி டிராவலர்ஸ் பங்களாவில் தங்கி இருந்த போது அங்கு அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாதவன் நாயருடன் நான் பேச்சுக் கொடுத்தேன்.
அவர் மனம் திறந்து கூறிய வார்த்தைகள் தாம் இவை.
எங்களை அவர் பார்த்து, “நீங்கள் எல்லாம் பாக்கியம் செய்தவர்கள்” என்று கூற அவரை நாங்கள், “நீங்கள் ஒரு அதிசய மனிதர். ஸ்வாமிஜியையே டெஸ்ட் செய்தவராயிற்றே” என்றோம்.
அனைவரும் சிரித்தோம்.
ஸ்வாமிஜிக்கு உடல்நிலை சரியில்லாத போது அவர் மதுரை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அட்மிட்டாக நேர்ந்தது.
அவருக்கென ஒரு ஸ்பெஷல் வார்டு. அங்கு ஆஸ்பத்திரி டீன், மதுரை டி.எஸ்.பி.யாக இருந்த அச்சுதன் நாயர் ஆகியோர் தினமும் வருவர்.
எங்களது வீட்டிலிருந்தும் இன்னொரு எளிய பக்தர் வீட்டிலிருந்தும் மட்டுமே சாப்பாடு கொண்டு போகப்படும். என் தாயார் திருமதி ராஜலெக்ஷ்மி அம்மாள் பக்தி சிரத்தையுடனும் “மடி”யாகவும் சமைத்த உணவை மட்டுமே அவர் சாப்பிடுவார்.
ஏழை பணக்காரன் என்பதெல்லாம் அவருக்குக் கிடையாது. மன சுத்தமும், நேர்மையும் பக்தியுமே அவருக்கு முக்கியம்.
இதை அந்த அவரது ஆஸ்பத்திரி வாசம் உணர்த்தியது. எனது தந்தையார் உள்ளிட்டோர் அங்கு வார்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முதலில் முக்கிய சொற் பிரயோகத்தை அறிவோம் ; பிரம்மம் வேறு, பிரம்மா வேறு, பிராமணன் வேறு ; நிறைய பேருக்கு இந்த வேறுபாடு தெரியாது ; ஆங்கிலத்திலும் இந்தியிலும் வடக்கத்தியர்களின் பேச்சு வழக்கிலும் ‘பிரம்மன்’ குழப்பம் உண்டானது .
பிரம்மா என்பவர் படைப்புத் தெய்வம் ; அவர் த்ரி மூர்த்திகளின் ஒருவர் – பிரம்மா விஷ்ணு சதாசிவம் என்று மும்மூர்த்திகளை அழைக்கிறோம் .
பிரம்மாவுக்கு நான்கு தலைகள் ; அவருக்கு நான்கு கைகள் ; அவருடைய மனைவி சரஸ்வதி; அவர்கள் வசிக்கும் இடம் சத்ய லோகம். அவர்கள் இருவருக்கும் வாஹனம் அன்னம் என்னும் பறவை ; பிரம்மாவின் வாயிலிருந்து வேத முழக்கம் வந்துகொண்டே இருக்கும். மனிதனின் பேச்சு, அறிவு, விவேகத்திற்கான கடவுள் சரஸ்வதி; இந்தக் கருத்துக்கள் வேத காலம் முதல் இமயம் முதல் குமரி வரை வழங்கி வருகிறது . பிரஜாபதி என்பது பிரம்மாவின் இன்னுமொரு பெயர் ஆகும்.
பிரம்மாவின் நான்கு கைகளில் கமண்டலம் என்னும் தண்ணீர் பாத்திரம் , ருத்ராக்ஷ மாலை , வேத புஸ்தகம், யாகத்தில் நெய் அல்லது சாதத்தைப்போட உதவும் ஸ்ருவம் என்னும் கரண்டி ஆகியன இருக்கின்றன. வேதமும் வேள்வியும் படைப்பு முதலே உள்ளன என்பதை இவை குறிக்கும் .
இந்துக் கடவுளர் எல்லோரும் தண்ணீருடன் சம்பந்தப்பட்டவர்கள் ; இது ஆரிய -திராவிட வாதம் பேசும் மாக்ஸ்முல்லர் கும்பலுக்கு செமை அடி கொடுக்கிறது சிவன் தலையில் கங்கை; விஷ்ணு இருப்பதோ கடல் நடுவில்; பிரம்மா வைத்திருப்பது தண்ணீர் பாத்திரம்; வேத கால முக்கிய நதியின் பெயரோ சரஸ்வதி ; பனி நிறைந்த மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் வந்திருந்தால் ஆப்ரஹாமிக் மதங்கள் (யூத, கிறிஸ்தவ முஸ்லீம்) போல தண்ணீர் வாசனையே இல்லாமல் இருக்கும். இந்துக்கள் இந்த நாட்டிலியேயே தோன்றி இந்த நாட்டிலேயே வளர்ந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை வேத புராண இதிகாசங்களும் சங்கத் தமிழ் நூல்களும் தெளிவாகச் செப்புகின்றன.
****
சங்கத் தமிழ் நூல்களில் பிரம்மா
நீலநிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டிற் காண் வரத்தோன்றி — பெரும்பாணாற்றுப்படை வரிகள் 402-404
***
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவர் கட்டி — முருகு. வரிகள் 164-5
***
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ– பரி 5-22
இதை முதல் திருக்குறளில் வள்ளுவன் பயன்படுத்தயுள்ளார்
***
தொடங்கற்கண் தோன்றிய முதியவன் – கலி 2-1
இது அப்படியே காளிதாசனின் மொழிபெயர்ப்பு .
படைப்புத் தொழில் துவங்குவதற்கு முன்னர் தோன்றியதால் அவன் ஆதி அந்தணன்..
பிரம்மா வாயிலிருந்து வேதங்கள் ஒலித்த வண்ணம் இருக்கும்…
மாநில மியலா முதன்முறை அமையத்து
நாம வெள்ள நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனோடு மலர்ந்த தாமரை…………….. பரி 3-91/4
இதில் மலர்மிசை ஏகினான் பிரம்மா என்ற வள்ளுவர் கருத்தினைக் காணலாம் ; எல்லோரும் காளிதாசனிலிருந்து எடுத்திருக்கலாம்
***
உலகு படைத்தோன் என்ற கருத்து –குறள் 1062, பரி. கலி 106-17; 129-2. நற்றிணை 240 , புறம்.194 ஆகியவற்றில் பல இடங்களில் வருகிறது.
பூவினுட் பிறந்தோன் என்ற கருத்து பரிபாடலில் பல இடங்களில் உள்ளது..
****
காளிதாசன் குமார சம்பவத்தில்தான் பிரம்மா பற்றி அதிகம் பாடியிருக்கிறார் ; ரகு வம்ச காவியத்தில் பிரம்மா இருக்கிறார்.
ஆத்ம பூ , ஸ்வயம்பு, கமலாசன / மலர்மிசை ஏகினான் , பிதாமஹ, பிரஜாபதி , வாகீச, விஸ்வயோநி முதலிய பெயர்களை காளிதாசன் பயன்படுத்தியுள்ளார்.
தமிழில் திருக்குறளில் மூன்றாவது குறளிலேயே இவருடைய பெயர் (மலர்மிசை ஏகினான்) வருவது குறிப்பிடத் தக்கது.
இமய மலையை வருணிக்கும் காளிதாசன் அதுதான் வேத விளைவிக்க பொருள்களை அளிக்கிறது என்றும் அவைகளை பிரம்மாவே சோதித்து வேள்வியின் பலனை இமவானுக்கும் அளித்தார் என்கிறார் — குமார சம்பவம் 1-17
தாரகன் என்ற அசுரன் தேவர்களைத் துன்புறுத்தியவுடன் அவர்கள் பிரம்மாவிடம் சென்றனர்.
****
तेषामाविरभूद्ब्रह्मा परिम्लानमुखश्रियाम्|
सरसां सुप्तपद्मानां प्रातर्दीधितिमानिव॥ २-२
பிரம்மா ஒளியிழந்த தேவர்கள் முன்னர் தோன்றினார் ; பிரேமா என்ற சொல் இங்கே பயிலப்படுகிறது
teṣāmāvirabhūdbrahmā parimlānamukhaśriyām |
sarasāṁ suptapadmānāṁ prātardīdhitimāniva || 2-2
***
अथ सर्वस्य धातारं ते सर्वे सर्वतोमुखम्|
वागीशं वाग्भिरर्थ्याभिः प्रणिपत्योपतस्थिरे॥ २-३
இந்த ஸ்லோகத்தில் அவர் நான்கு முகம் உடையவர், எல்லாவற்றையும் படைப்பவர் , சொற்களுக்கு இறைவன் என்றும் அவர் தோன்றியவுடன் எல்லோரும் துதித்தனர் என்றும் சொல்லப்படுகிறது
MaduraiV.Santanam, Freedom Fighter and News Editor Dinamani News paper, , passed away on the Independence Day 15-8-1998, after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.
4
யாருடனும் பகைமை பாராட்டாத பண்பாளர்
சந்தானம் அவர்கள் யாருடனும் பகைமை பாராட்டாத பண்பாளர். அவருக்கு எதிராக செயல்கள் செய்தவர்கள் பலர் உண்டு. என்றாலும் கூட அவர் யாருக்கும் ஒரு போதும் தீங்கு செய்ய மனதால் கூட நினைக்காதவர். பழிவாங்கும் மனப்பான்மை என்பது அறவே அவர் வாழ்வில் கிடையாது.
அவரை ‘அசைக்க முடியாது” என்று ஸ்வாமிஜி கிருஷ்ணா அவர்கள் கூறியது அப்படியே நடந்தது. இறுதி வரை “சந்தானத்தை யாராலும் அசைக்க முடியவில்லை!”
எல்லோருக்கும் உபகாரம் செய்து அவர்களை உயர்த்தி விடுவது சந்தானத்திற்கு பிறப்பிலிருந்தே வந்த பழக்கம்.
ஸ்வாமிஜியின் அனுக்ரஹத்திற்கு பலரையும் ஆளாக்கி அவர்களை மேம்பட வைத்தார் அவர். பல சம்பவங்கள் உள்ளன. எடுத்துக்காட்டிற்காக சிலவற்றைப் பார்ப்போம்.
இந்தியன் எக்பிரஸ் குழும ஜெனரல் மேனஜராகத் திகழ்ந்தவர் திரு டி.கே.தியாகராஜன். டி.கே.டி என்று அவரை அன்புடன் அனைவரும் அழைப்பார்கள். அவரது இல்லம் மதுரையில் திருநகரில் இருந்தது. அவரது இல்லத்தில் கணபதி ஹோமம் நடந்தது. அவரது மகள் மாதங்கியை இந்தியன் பேங்க் ஏஜண்டாக சிறப்புடன் இருந்த திரு சங்கர ஐயர் அவர்களின் மகனான திரு எம்.எஸ். வெங்கட் ராமனுக்கு மணமுடித்தனர்.. எம்.எஸ். வெங்கட்ராமன் ஸ்வாமிஜியின் அத்யந்த சீடராக ஆனார்.
அவருக்கு ஸ்வாமிஜியின் அனுக்ரஹம் பரிபூரணமாகக் கிடைத்தது. கணபதி ஹோம உபதேசமும் கிடைத்தது. தனது நீண்ட வாழ்நாள் முழுவதும் அவர் இந்த ஹோமத்தைச் செய்து வந்தார் – சாஸ்த்ரோக்தமாக.
Mr V Santanam and Mrs Rajalakshmi Santanam .
ஒரு நாள் சங்கர ஐயர் வீட்டில் கணபதி ஹோமம் கோலாகலமாக நடந்தது. எல்லோரும் வீற்றிருந்தோம். தீபாராதனை சமயம்.
திடீரென்று ஸ்வாமிஜி ஆகாயத்தைப் பார்த்தார். அனைவரையும் விழுந்து நமஸ்கரிக்கச் சொன்னார்.
உடனே அனைவரும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தோம். அங்கு ஹோமத்தைப் பார்க்க குழந்தையானந்த ஸ்வாமிகள் வந்திருந்தாராம்.
அவரை மேலே கண்ணுற்ற ஸ்வாமிஜி அனைவரையும் நமஸ்கரிக்க வைத்து குழந்தையானந்த ஸ்வாமிகளின் ஆசீர்வாதத்தையும் வாங்கித் தந்தார்.
குழந்தையானந்த ஸ்வாமிகளின் அணுக்க பக்தரான ஶ்ரீ ராமலிங்க ஐயர் அடிக்கடி சங்கர ஐயர் வீட்டிற்கு வருவது வழக்கம். யாரேனும் வேண்டிக் கொண்டால் ராமலிங்க ஐயர் கையில் அதற்கான பதில் எழுத்துப்பட தோன்றும். கலியுகத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்து வியந்தோர் ஏராளம்.
ஸ்வாமிஜி தினமணி பத்திரிகைக் குடும்பத்திற்கு நெருங்கியவராக ஆகி விட்டார்.
ஜே.எஸ். மணி என்பவர் மதுரைக்கு மேனேஜராக இருந்தார். நெடுநாளாக அவருக்குக் குழந்தை இல்லை. எனது தந்தையாரால் ஸ்வமிஜியின் அனுக்ரஹம் அவருக்குக் கிடைக்க, கணபதி ஹோமம் நடைபெற அவருக்குக் குழந்தைப் பேறு உண்டாயிற்று, நீண்டகாலமாக குழந்தைப் பேறுக்கு ஏங்கிய அவர் அடைந்த சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை.
கீர்த்திவாஸ் என்பவர் இந்தியன் எக்ஸ்பிரஸின் மதுரைப் பதிப்பு ஆசிரியர். அவருக்கு அவ்வளவாக ஸ்வாமிஜியின் மீதெல்லாம் பக்தி இல்லை. ஒரு சமயம் தந்தையார் அவரை ஆயக்குடிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு ஹோமம் முடிந்தது. வரிசையாக தனிப்பட ஒவ்வொருவருக்கும் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் ஸ்வாமிஜி.
கீர்த்திவாஸ் என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்பதில் எங்களுக்கு உற்சாகம் மிகுந்திருந்தது.
அவர் முறை வந்தது. உள்ளே போனார். சில நிமிடங்கள் கழித்து வந்த
அவர் திகைப்புடன் காணப்பட்டார்.
ஸ்வாமிஜி ஒரு போடு போட்டு விட்டார் என்று நாங்கள் பேசிக் கொண்டோம். உண்மைதான். யாருக்குமே தெரியாத அந்தரங்க விஷயங்களை ஸ்வாமிஜி பிட்டுப் பிட்டு வைத்ததோடு அவருக்கு அனுக்ரஹமும் செய்தார். பிறகென்ன, அவரும் ஒரு சிறந்த பக்தராக ஆனார்.
எம்.ஏ. கிருஷ்ணமூர்த்தி என்பவர் வக்கீல்புதுத் தெருவில் வாழ்ந்து வந்த ஒரு பணக்காரர். அவரது ‘சகவாச தோஷத்தை’ எல்லாம் ஒதுக்கி விட்டு தந்தையாரிடம் வந்தார். தான் மதுரை நகரசபை கவுன்ஸில் தேர்வுக்கு நிற்க ஆசைப்படுவதாகத் தெரிவித்தார்.
அனைவருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட தந்தையார் அவரை ஆய்க்குடிக்கு அழைத்துச் சென்றார் – ஸ்வாமிஜியின் ஆசீர்வாதம் வாங்க! ஜெயிக்க வேண்டுமல்லவா?
தந்தையார் அவரை அறிமுகப்படுத்தி வைக்க ஸ்வாமிஜி திரும்பிக் கொண்டார். மீண்டும் முயற்சி செய்தார் தந்தையார். மீண்டும் திரும்பல்.
கடைசியில் ஒருவாறாக ஆசீர்வாதத்தை தந்தையாரின் வலுக்கட்டாயத்தினால் அவர் பெற்றார்.
டஃப் பைட் – மதுரையில். 47 ஓட்டுகளில் அவர் ஜெயித்தார்.
ஸ்வாமிகள் அவரை ஜெயிக்க வைத்தார் என்று பேசிக் கொண்டோம்.
இப்படி ஏராளமான சம்பவங்கள் நடைபெற்றதால் இதைப் பற்றிப் பேசுவதே எங்களுக்கெல்லாம் ஒரு “தொழிலாக” மாறியது!
அந்த நாட்கள் போல இனி ஒரு நாள் வருமா?
***
Tags- V Santanam, News Editor, Freedom fighter, Part 3