Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
காளிதாசன் காவியங்களில் மஹா விஷ்ணு; சங்க இலக்கியத்துடன் ஒப்பீடு- PART 2
முந்தைய கட்டுரையில் விஷ்ணுவைக் கடல் என்று வருணித்த காளிதாசன் ராமனையும் ராவணனையும் கடலுடன் ஒப்பிடுகிறான் .
விஷ்ணுவுடன் ஒப்பிட்ட போது கடலின் ஆழம், வர்ணம், பரப்பு ஆகியவற்றை ஒப்பிட்டு பெருமைப்படுத்தினான்
ரகுவம்சத்தில் எல்லை மீறும் சுனாமி பேரலை போன்றவன் ராவணன் என்றும் ரத்தினங்கள் நிறைந்த கடல்போன்றவர் விஷ்ணு என்றும் வருணிக்கிறான் ; அப்போதுதான் ராமாவதாரம் எடுக்கப்போகும் செய்தியை விஷ்ணு அறிவிக்கிறார்.
stutibhyo vyatiricyante dūrāṇi caritāni te || 10-30
கடலிலுள்ள ரத்தினங்களைக் கணக்கிடமுடியாது ; சூரியனின் ஒளிக்கதிர்களை அளவிட முடியாது . அதைப்போல மனதிற்கும் வாக்கிறகும் எட்டாத உமது செயல்கள் தோத்திரங்களுக்குள் அடங்காது..
xxx
अनवाप्तमवाप्तव्यम् न ते किञ्चन विद्यते।
लोकानुग्रह एवैको हेतुस्ते जन्मकर्मणोः॥ १०-३१
anavāptamavāptavyam na te kiñcana vidyate।
lokānugraha evaiko hetuste janmakarmaṇoḥ || 10-31
விஷ்ணு ஏன் அவதாரம் எடுக்கிறார் ?
“இதுவரை உமக்கு அடையப்படாதது எதுவுமில்லை ; அடைய வேண்டியதும் எதுவுமில்லை உலகிற்கு நலம் செய்தல் ஒன்றே உமது பிறப்பிற்கும் செயலுக்கும் காரணம்” என்று சொல்லி விஷ்ணுவைத் தேவர்கள் துதித்தார்கள்
மும்மூர்த்திகளில் காக்கும் தொழில் விஷ்ணுவுடையது ஆகையால்தான் அவருக்கு மட்டும் அவதாரம் செய்யும் கட்டாயம் உள்ளது என்பதை கவிஞன் அழகாக எடுத்துரைக்கிறான்.
xxxx
துதிகள் தோத்திரங்கள் ஏன் ஒரு அளவோடு நின்றுவிடுகின்றன என்பதற்கு அடுத்த ஸ்லோகத்தில் காரணமும் சொல்கிறான் காளிதாசன் .உமது பெருமைகள் அனைத்தையும் யாராலும் முழுதும் சொல்லமுடியாது அதனால் மனிதர்கள் களைப்படைந்து உன்னைப்பு கழ்வதை நிறுத்திக்கொள்கிறார்கள்!
महिमानम् यदुत्कीर्त्य तव सम्ह्रियते वचः।
श्रमेण तदशक्त्या वा न गुणानामियत्तया॥ १०-३२
mahimānam yadutkīrtya tava samhriyate vacaḥ।
śrameṇa tadaśaktyā vā na guṇānāmiyattayā || 10-32
xxxx
தேவர்களின் புகழுரையைக்கேட்ட விஷ்ணு நீங்கள் எல்லோரும் செளக்கியமாக இருக்கிறீர்களா? என்று வினவினார் . இதைக்கேட்ட தேவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஆஹா நமது கோரிக்கை நிறைவேறப்போகிறது என்று எண்ணி சொன்னார்கள் ,
“பிரளய காலம் வரும் முன்னரே (சுனாமி போல) கரை தாண்டி ஊருக்குள் நுழையும் ராக்ஷச கடல் ஒன்றுதான் அச்சம் தருகிறது என்று சொன்னார்கள்.
இது நல்ல ஒப்பீடு! விஷ்ணுவை வருணித்தபோது எல்லை தாண்டாத ரத்தினங்கள் நிறைந்த கடல் என்று புகழந்தார்கள் இப்போது எல்லை தாண்டி (சுனாமி) பேரழிவை உண்டாக்கும் ராக்ஷஸன் என்று திட்டுகிறார்கள்
விஷ்ணு அமைதியான கடல் என்றால் இராவணன் கொந்தளித்து எல்லை மீறும் சுனாமி அலைகள் போன்றவன் என்று காளிதாசன் வருணிப்பது மிகவும் பொருத்த்தமே
To him whose kindly feelings towards gods were manifested by his enquiry about gods’ welfare did the gods narrate the danger from the ocean called demon Ravana that had overflowed its shore at a time other than that of final destruction. [10-34]
தேவர்களின் கோரிக்கையைக் கேட்ட விஷ்ணு உரத்த குரலில் கடற்கரையிலுள்ள குகைகள் அனைத்தும் எதிரொலிக்கப் பேசத் தொடங்கினார்
இந்தப்பேச்சு முழுவதிலும் உவமைகளும் உருவகங்களும் வருவதைப் படித்து ரசிக்கலாம்
இங்கு விஷ்ணுவுக்குப் பகவான் என்ற பெயர் வருகிறது ; இது பகவத் கீதையின் தாக்கத்தைக் காட்டுகிறது பகவான் என்றால் நிறைந்த பெருமை, வீர்யம், யசஸ்/புகழ், செல்வம், அறிவு , வைராக்யம்/ திட உறுதி என்ற ஆறு பண்புகளைக் கொண்டவர் என்று பொருள்
பிறகு பகவான் கூறினார் -அவருடைய குரல் சமுத்ரக்கரையிலுள்ள மலைகளின் குகைகளில் எதிரொலி செய்து , கடலின் பேரொலியையும் வென்றது – ரகு வம்சம் 10-35
அடுத்த ஸ்லோகம்
பகவானால் பேசப்பட்டதால் வாக்கும் பயன் அடைந்தது ; ஏனெனில் அவர் எழுத்துக்களின் ஸ்தானங்களிலிருந்து உச்சரித்தார்
உரைகாரர் விளக்கம் – மார்பு, நெஞ்சு, தலை, நாவின் அடிப்பாகம், பல், மூக்கு, உதடு, அன்னம் என்ற எழுத்து பிறக்கும் 8 இடங்களை பயன்படுத்தி எழுத்துக்களை உச்சரித்தார்
இந்த 10-36 ஸ்லோகம் முக்கியமானது ஏனெனில் விஷ்ணுவை புராண கவி என்கிறார் ;அதாவது வேதங்கள் இறைவனிடமிருந்து தோன்றின.
மேலும் மொழிக்குப் பாரதி என்ற சொல்லப் பயன்படுத்திவிட்டு புராண கவி என்றார் .செம்மையான தூய்மையான மொழி என்பதை க்ருத ஸம்ஸ்காரா என்கிறார் ; இதிலிருந்து சம்ஸ்க்ருதம் என்பது உருவானது என்று கருதலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
27-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை
MOTIVATION
கதாசரித் சாகரத்தில் உள்ள மோடிவேஷன் கருத்துக்கள்!
ச. நாகராஜன்
உலகையே வியக்க வைக்கும் கதைகள் ஒரு வித குறிக்கோளுடன் இந்தியாவில் சொல்லப்பட்டது போல உலகெங்கும் எந்த இலக்கியத்திலும் சொல்லப்படவில்லை.
பைசாச மொழியில் எழுதப்பட்ட ப்ருஹத் கதா துரதிர்ஷ்டவசமாகத் தொலைந்து விட்டது. இதைப் படைத்தவர் குணாத்யர். பல லட்சம் ஸ்லோகங்களில் ஏராளமான கதைகளைக் கொண்ட இந்த நூல் தொலைந்து விட்டாலும் அதன் அடிப்படையில் ஐந்து கதாசரிதங்கள் படைக்கப்பட்டன.
சோமதேவரின் கதாசரித் சாகரம், க்ஷேமேந்திரர் படைத்த ப்ருஹத் கதா மஞ்சரி, நேபாளைச் சேர்ந்த பூதஸ்வாமியின் படைப்பான ப்ருஹத் கதா ஸ்லோக சங்க்ரஹா, ஜைனரான வாசுதேவரின் படைப்பு மற்றும் தமிழில் கொங்குவேளிர் படைத்த பெருங்கதை ஆகிய ஐந்து நூல்களே
ப்ருஹத் கதாவை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டவை.
இதில் சோமதேவரின் ப்ருஹத் கதாவில் ஏராளமான மோடிவேஷன் கருத்துக்கள் பளிச் பளிச்சென கதையை ஒட்டி பாத்திரங்களின் வாயிலாகக் கூறப்படுவதைக் கண்டு வியக்கலாம்.
இந்த நூல்களைப் பற்றிய அற்புதமான வரலாறுகள் ஒரு புறம் இருக்க, இங்கு சில மோடிவேஷன் உண்மைகளை மட்டும் எடுத்துக்காட்டாகக் காணலாம்.
ஒரு செயல் எப்படி இருக்க வேண்டும்?
மிகுந்த தைரியத்துடன் செய்யப்படும் செயல்கள் உண்மையிலேயே பலனைத் தரும்; ஏனெனில் வளமான வாழ்க்கை என்பது தைரியத்தைப் பின் தொடர்ந்து வருவதேயாகும்.
நல்லவர்களின் தொடர்பு!
நல்லவர்களுடனான தொடர்பு நல்ல பழக்கவழக்கங்களையே ஏற்படுத்தும்.
தீர்மானமே தேவை!
எந்த ஒரு செயலுமே தீர்மானத்தினால் அடையப்படுகிறது.
நல்ல தீர்மானத்துடன் இருக்கும் ஒருவனின் உறுதியானது மலைகளின் வலிமையை விட அதிக வலிமை வாய்ந்தது; அது கல்பம் முடிவுக்கு வந்தாலும் கூட அசையாது.
விவேகம் தேவை!
எதானாலும் சரி, அது விவேகத்தால் அடையப்படலாம்!
முடியாத ஒன்றைக் கூட விவேகம் சாதித்து விடும்.
பெரிய இடர் வந்த போதும் எவன் ஒருவனின் கூரிய ஆய்ந்து அறியும் அறிவு தோற்கவில்லையோ அவனால் எதையும் சாதிக்க முடியும்!
உறுதியான தீர்மானத்துடன் இருக்கும் ஒருவன், தான் விரும்பியதை சாதித்து அடைந்தே தீருவான் – அவன் உயிருடன் இருக்கும் வரை!
புத்திசாலி
கொள்கையின் அடிப்படையில் ஒரு புத்திசாலி அனைத்தையும் அறிவான். அவனைக் கலந்தாலோசிப்பது நல்ல விளைவைத் தரும்.
சூரியன் இல்லாமல் வானம் இருந்தென்ன? நீரில்லாமல் குளம் இருந்து என்ன பிரயோஜனம்? அறிவுரை இல்லாமல் ஒரு நிலப்பகுதி தான் ஏது? உண்மையில்லாமல் ஒரு பேச்சு தான் என்ன பிரயோஜனம்?
நட்பும் பகையும்!
ரகசியமாக முணுமுணுப்பது நட்பைக் கொல்லும்.
அறிவுரையானது வாயாடித்தனத்தால் அழியும்.
நீரானது ஒரு பாலத்தையே உடைக்கும்.
கோழைகள் ஒரு சின்ன சப்தத்தினாலேயே படுதோல்வி அடைவர்.
கோபத்தை வெல்!
எவன் ஒருவன் கோபத்தை வெல்கிறானோ அவன் இந்த உலகத்தையே வென்று விடுவான்!
வதந்தியைக் கிளப்பாதே!
சகதியைத் தன் தலைக்கு மேலே வானத்தை நோக்கி எறிபவனின் தலை மேலேயே சகதி விழும்.
விக்கிப்பீடியா மற்றும் விக்கி பவுண்டேஷன் நடத்தும் தளங்களில் இந்து விரோதிகளும் திராவிடங்களும் விஷம் கலந்து வருகின்றன .
இதே போல இந்து விரோதிகள், வள்ளலார் தலையில் மிளகாய் அரைத்து, அவரது விபூதியை அழித்து, அக்கிரமங்களும் அதிக்ரமங்களும் செய்து வருகின்றனர் .
ஆகையால் எந்த தமிழ் நூல் ஒரிஜினலுக்கும் நூறு ஆண்டுக்கு முந்தைய ஒரிஜினலை நாடுங்கள்; உரைகளைப் பாருங்கள் என்பதே என் வேண்டுகோள்.
கி.வா. ஜகந்நாதன் பதிப்பாசிரியாகவுள்ள ராமகிருஷ்ண வித்யாலயப் பதிப்பு ஆயிரம் பக்கங்களையுடைய அருமையான திருக்குறள் பதிப்பு ; திருக்குறள் முனுசாமி வெளியிட்ட பதிப்பு நல்ல பதிப்பு; ஆகையால் வள்ளலார் பாடல் , திருக்குறள் பதிப்புகளை வாங்கும்போது பார்த்து வாங்குங்கள்.
முதல் குறளிலேயே விஷமம் செய்பவன் எத்தனை குறள்களில் விஷமம் செய்கிறானோ அத்தனைக்கு தமிழ் மொழிக்கு ஆபத்து , இவர்களது குடும்பங்களைத் தமிழ்த்தாய் வேரோடு அழிப்பாள் என்பது நிச்சயம்.
திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் இந்து விரோதிகள் செய்த விஷமங்களைக் காண்போம் :
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
· அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
விளக்கம்:
· அகர முதல எழுத்தெல்லாம் – அகரம் முதலாகிய எழுத்துக்கள் எல்லாமே
· ஆதிபகவன் முதற்றே உலகு – ஆதிபகவானே முதலானவன்
தனது திருக்குறளின் முதல் அதிகாரத்தை கடவுள் வாழ்த்தாக ஆரம்பிக்கிறார் வள்ளுவர், அதில் கடவுளின் நிலையை அடைந்த ஆதிபகவானை முதலாக வைத்து தனது குறளை எழுத ஆரம்பிக்கிறார். தனது நூலில் சொல்லப் போகும் அகரம் முதலான எழுத்துக்கள் அனைத்திற்கும் ஆதிபகவானே முதன்மையாக இருகிறான் என்று கூறுகிறார்.
***
ஆதி பகவான் என்பதை விளக்கிய பரிமேல் அழகர் இப்பாட்டால் முதற் கடவுளது உண்மை கூறப்பட்டது என்கிறார். ஆதி பகவன் என்பது விஷ்ணுவைக்குறிக்கும் என்பது ஆழ்வார்கள் கருத்து.
அந்தமில் ஆதியம்பகவன் — என்கிறது திருவாய்மொழி
• உண்மைப்பொருள்
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. (1) —மு. வரதராசன்
2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.
• தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.(Miscreants deleted GOD)
****
• உண்மைப்பொருள்
• தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? (2)—மு. வரதராசன்
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
• மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும். .(Miscreants deleted GOD)
***
உண்மைப்பொருள்
• அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார் (3)—மு. வரதராசன்
4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
• விறுப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை. .(Miscreants deleted GOD)
***
உண்மைப்பொருள்
• விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை (4)—மு. வரதராசன்
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
• இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள். .(Miscreants deleted GOD)
***
உண்மைப்பொருள்
• கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை (5)
—மு. வரதராசன்
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
• மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியை பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
****
உண்மைப்பொருள்
• ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர் (6)- —மு. வரதராசன்
• தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது (7)—மு. வரதராசன்
8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
• அந்தணர் என்பதற்குப் பொருள் ‘சான்றோர்’ என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல. .(Miscreants deleted GOD)
****
உண்மைப்பொருள்
• அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது (8)—மு. வரதராசன்
9. கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
• உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலிலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும். .(Miscreants deleted GOD)
***
உண்மைப்பொருள்
• கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம் (9)
—மு. வரதராசன்
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
• வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும். .(Miscreants deleted GOD)
****
உண்மைப்பொருள்
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது (10)—மு. வரதராசன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Vanakam Sir 🙏🏼🙏🏼
My humble thanks to your blog about YUBA STAMBAM.
BHRAMMA PURANAM
BHRAMANDHA PURANAM
( Published with Tamil translation by Sri Raghavendra group… COIMBATORE).
Says
In Aswametha Yagna done by Lord Bhrammadheva 21 horses were killed.
The fat ( வபை) 21 குதிரைகளிடம் இருந்து எடுக்கப்பட்டு ஸ்ரீவரதராஜன் ….. உற்சவர் தேவப்பெருமாளுக்கு பிரம்ம தேவர் தந்தார்.
ஸ்ரீதேவாதிராஜன் தமது கைகளால் எடுத்து அந்த கொழுப்பு …. வபையை நிவேதனமாக ஸ்வீகரித்துக் கொண்டார் என்று உள்ளது.
நீங்கள் சில ப்ரமாண தகவல்களுடன் ( ஸாயனர்) வேத உரையின்படி விலங்குகள் பலியிடப்படுவது வேத நெறிப்படி இல்லை என்று நிரூபணம் செய்து உள்ளீர்கள்.
இதற்கு இன்னும் சிறந்த ஆதாரங்களை blog ல் பதிவு செய்தீர்கள் என்றால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.
தங்களது யூப ஸ்தம்ப விளக்கத்தால் சற்றே மனம் சமாதானம் பெற்றது. இருப்பினும் தெளிவான வேத காலத்தில் நிஜமாக நிலவிய தகவல்களை அறிய ஆவலாய் உள்ளேன்.
மிகவும் நன்றி🙏🏼🙏🏼🤗🤗🥰
மிகவும் நன்றி🙏🏼🙏🏼🤗🤗
S. R.
K.PURAM.
****
MY REPLY
அன்புடையீர்
கட்டுரையைப் படித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி..
விரிவான பதில்களையும் பின்னர் தருகிறேன்.
சுருக்கமான பதில் :
ஒரு காலத்தில் உயிர்ப்பலி நடந்தது உண்மையே ; காலப்போக்கில் அதைக் கைவிட்டு அடையாளபூர்வமாகச் செய்தார்கள் என்பதே நான் நம்பும் கருத்து .
சரி, இப்படி உயிர்ப்பலி செய்யலாமா / என்ற கேள்வி எழும்போது என் மனதிற்குள் வரும் எண்ணம் – ஒவ்வொரு நிமிடமும் உலகெங்கிலும் பல கோடி உயிரினங்களை மனிதர்கள் சாப்பிடுவதற்காக கொன்று குவிக்கிறர்கள்; தென் கொரியா நாட்டில் ஆண்டுதோறும் பத்து லட்சம் நாய்களை அடித்துச் சாப்பிடுகிறார்கள் என்ற செய்தி சமீப காலமாகப் பத்திரிகைகளில் அடிபடுகிறது முஸ்லீம்கள் மொகரம் பண்டிகையில் பல்லாயிரம் ஆடு மாடுகளை ஓட்டகங்களைக் கொன்று சாப்பிடுகிறார்கள்.
எங்கள் பிரிட்டனில் ஒரு கோழிப்பண்ணையிலோ மாட்டுப்பண்ணையிலோ தொற்று நோய் வந்துவிட்டால் உடனே பல்லாயிரம் பிராணிகள் உடைய பண்ணைகளை அடியோடு எரித்துவிட்டு அரசாங்கம் கொடுக்கும் நஷ்ட ஈட்டுத் தொகையை ஏற்கிறார்கள். அமெரிக்காவில் ஒரே நாளில் பல லட்சம் பசுக்களை எரித்த செய்தியும் பத்திரிகைகளில் வந்தது.
சங்க இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் மாமிசம் சாப்பிட்ட குறிப்புதான் கிடைக்கிறது ; பிராமணர் வீட்டில் மட்டும் சாதமும் மாதுளங்காய்ப் பொரியலும் கிடைத்த செய்தி கிடைக்கிறது. .பொதுவாக சாது சந்யாசிகள் பிராமணர்கள், வெஜிட்டேரியங்கள்; சைவ உணவுக்காரர்கள் ஆனால் தீட்சிதர்கள் மாட்டின் வபையை டேஸ்ட் செய்து தீட்சிதர் பதவி பெற்றதையும் அஸ்வ மேத யாகத்தில் குதிரை பலியிடப்பட்டதும் உண்மை என்றே நான் நம்புகிறேன் ; காலப்போக்கில் இதைக் கைவிட்டார்கள் . இலங்கை புத்த மத குருமார்கள் பிறர் கொண்டுவரும் மாமிசத்தை இன்றும் சாப்பிடுகிறார்கள்; வள்ளுவன் இதை ஒரு குறளில் கிண்டல் செய்கிறான்.
மெளரிய குல மன்னர்களின் முக்கிய சாப்பாடு மயில். அவர்களின் வம்சத்தின் பெயரே மயில் என்ற சொல்லில் இருந்து வந்தது; அந்த வம்சத்தில் வந்த அசோகன் உலகம் முழுதும் புத்த தர்மத்தைப் பரப்பிய போதும் அரண்மனையில் கொல்ல வேண்டிய மிருகங்களின் எண்ணிக்கையைக் குறைத்தான் என்று மட்டுமே உள்ளது தவிர்த்தான் என்று கல்வெட்டு கூறவில்லை ; பலகோடி ஆடுமாடுகள் தினமும் கொல்லப்படும்போது ஒரு மன்னன் அஸ்வமேதம் செய்ததில் நான் ஒன்றும் குறை காணவில்லை . திருஷ்டிப் பரிகாரத்துக்கு பூசணிக்காயை அல்லது தேங்காயை உடைப்பது போல வெற்றியின் அடையாளமாக அவர்கள் ஒரே ஒருகுதிரையைக் கொன்றிருக்கலாம் அல்லது பல குதிரைகளைக் கொன்று இருக்கலாம் காலப்போக்கில் இதைக் கைவிட்டு தானியத்தைப் பயன்படுத்தினார்கள் என்றே நான் நம்புகிறேன் மிருக பலி என்ற நோக்கில் — மனித பலி என்ற நோக்கில் ஆராய்ச்சி செய்தால் சிறுத்தொண்டர் போல பிள்ளையை கறி சமைத்த செய்தி பைபிளிலும் கிடைக்கிறது பஹ்ரைன் தீவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் எலும்புக்கூடுகளுடன் சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இவைகளையும் முன்னரே கட்டுரையில் கொடுத்தேன் சிந்து சமவெளி முத்திரையில் மனித பலி முத்திரை உள்ளது ; பலிகள் நடந்தது உண்மையே!
முடிவுரை
மனிதர்கள் சாப்பிடும் கோழி, மீன், நண்டு, ஆடு, மாடு ,ஒட்டகம், நாய், பல்லி , பாம்புகளை ஒப்பிடுகையில் யாகப்பலி என்பது இமயமலைக்கு முன்னால் நமது கிராமத்திலுள்ள பாறைகளின் அளவே என்பதையும் எவரும் மறுக்க முடியாது. யாராவது இது போன்ற கேள்விகளை எழுப்பினால் நான் கேட்கும் கேள்வி :நீ வெஜிட்டேரியானா? சைவ உணவுக் காரனா?
உன் நண்பர்கள சைவ உணவுக்காரர்கள் இல்லையென்றால் என்றாவது அவர்களிடம் இதை விவாதித்துக் கைவிட சொல்லி இருக்கிறாயா?
செய்யவில்லை என்றால் ஏன் செய்யவில்லை ? சொல்
உலகம் முழுதும் ஒவ்வொரு நிமிடமும் மனிதர்கள் சாப்பிடும் மிருகங்களின் எண்ணிக்கைப் பற்றி உனக்கு என்ன தெரியும் சொல்; அதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்? சரியா தப்பா?
மதத்தின்பெயரால் உலகம் முழுதும் மனிதர்களைக் கொல்கிறார்களே அது சரியா தப்பா ? இப்போது இஸ்ரேலிய யூதர்கள் 4000 முஸ்லீம் குழந்தைகளையும் 6000 கர்ப்பிணிப்பு பெண்களையும் 50,000 ஆண்களையும் கொன்றார்களே உலக நாடுகளும் முஸ்லீம்களும் ஏன் இதைத் தடுக்கவில்லை?
மனிதக் கொலையைப் பற்றியே கவலைப்படாத நீ ஒரு குதிரைப்பலி பற்றி விதண்டாவாதம் செய்கிறாய்! உன் நெஞ்சசைத் தொட்டு சொல் ; இன்யை படுகொலைகள் பற்றிப் பேசத் திராணி இல்லாத நீ , உலகம் முழுதும் மாமிச உணவைத்த தடை செய்யக் கூச்சல் போடாத நீ இது பற்றிப்பேசுவது, நியாயமா ? இது பற்றிப் பேசவோ விவாதிக்கவோ யாருக்கு உரிமை இருக்கிறது என்பதை மேலே விளக்கிவிட்டேன்
இன்றைய தினம் சிக்கன் சாப்பிடும் நிறைய பிராமணர்களை நான் லண்டனிலும் சென்னையிலும் சந்தித்துவிட்டேன் ஆனால் மாமிசம் சாப்பிடும் ஒரு சமண மதக்காரரையும் பார்த்ததில்லை . அவர்கள் வேண்டுமானால் இதை விவாதிக்கலாம் ;மஹாவீரர் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதை இன்றும் பின்பற்றும் ஒரே சமயம் ஜைன மதம்தான் .
அன்புடன்
லண்டன் சாமிநாதன் 1-8-2025.
—subham—-
tags-மிருக பலி, நியாயமா?, கேள்வி பதில், Human sacrifice, Indus Valley, Horse sacrifice.
மகத்தான அழிவில்லாத ஒளிபடைத்த வான்; எங்கும் நிறைந்த எல்லாவற்றையும் பாதுகாப்பாவன் விஷ்ணு; மிக உயர்ந்த வழியைப் பாதுகாக்கிறான் அக்கினி தேவனுக்கு இந்த வலிகள் அனைத்த்தும் தெரியும் தேவர்கள் ஒப்பில்லாதவர்கள் மகத்தானவர்கள்.
Key hymns mentioning Vishnu in the Rig Veda
Book 1 Hymn 22 Verses 16-21: விஷ்ணுவின் மகத்தான சக்தியைப் போற்றுகிறது
Book 1 Hymn 154: மூன்று அடியால் உலகளந்த செய்தியைத் தருகிறது
Book 1 Hymn 155: பூவுலகினையும் மேலுகையும் காப்பவன் விஷ்ணு
Book 1 Hymn 156: புராணன் ; இறுதிவரை உள்ளவன்
Book 7 Hymn 99: வானத்தையும் பூமியையையும் பிரிப்பவன்
Book 7 Hymn 100: அவன் வலிமைக்கும் வலிமையானவன்; மகத்தான சக்தி படைத்தகவன்
இந்திரனின் நண்பன் என்றும் மருத், அக்கினி கடவுளருடன் இணைந்தவன் என்றும் துதிகள் கூறுகின்ற்ன.
***
சூரியனைப் போன்றவன்; அவனே சூரியன் என்றும் போற் றுக்கின்றன .இன்று உலகிலுள்ள எந்த விஞ்ஞானியைக் கேட்டாலும் நமக்குப் பயன்தரும் மகத்தான சக்தி சூரியன் என்று பதில் தருவார்கள் ; இதனால் இந்துக்கள் காயத்ரீ ஜெபத்திலும் தினசரி மூன்று வேளை சந்தியா வந்தனத்திலும் சூரியன் வடிவில் விஷ்ணுவைப் போற்றுகின்றனர்.
பின்னர் வந்த இதிஹாச, புராணங்கள் அவன் பாற்கடலில் பாம்பணையில் பள்ளி கொண்டதையும் கருடன் மீதுபறந்து வந்ததையும் காட்டுகின்றன ; 2200 ஆண்டுகளுக்கு முந்தைய கோசுண்டி கல்வெட்டில் அவன் புகழ் பாடப்பட்டுள்ளது தமிழில் பழைய நூலான தொல்காப்பியமும் விஷ்ணுவின் புகழ் பாடுகிறது பின்னர் வந்த சிலப்பதிகாரம் ஆவான் சாதனைகள் அனைத்தையும் ஒரே பாடலில் தொகுத்து அளிக்கிறது.
ताम्तामवस्थाम्प्रतिपद्यमानम्
स्थितम्दश व्याप दिशो महिम्ना।
विष्णोरिवास्यानवधारणीयम्
ईदृक्तया रूपमियत्ताया वा॥ १३-५
tāmtāmavasthāmpratipadyamānam
sthitamdaśa vyāpa diśo mahimnā |
viṣṇorivāsyānavadhāraṇīyam
īdṛktayā rūpamiyattāyā vā || ரகுவம்ச 13-5
காளிதாசன் கடலையும் விஷ்ணுவையும் சாப்பிடுகிறான்
விஷ்ணுவும் கடலினைப்போல எங்கும் பரந்தவன்; பல நிலைளைக் (மீன், ஆமை அவதாரம் போல கொண்டவன்); கடல் ஆழம் போல விஷ்ணுவின் பெருமை அளக்கமுடியாதது ; கடல் எவ்வளவு ஆச்சர்யத்தையும் ஆனந்தத்தையும் அளிக்கிறதோ அதே போல விஷ்ணுவும் அளிக்கிறான் ; இரண்டும் நீலவண்ணன்.
The form of this ocean which acquiring diverse conditions occupies the ten quarters on account of its vastness, and as such it is not capable of being defined either with reference to its nature or its magnitude in the same way as the form of Vishnu which after having gone through different conditions and which on account of its magnitude occupies all the ten quarters, is indefinable both as to its nature or size. [13-5]
கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலைகொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.–பகவத் கீதை 2-70
****
सीता तमुत्थाप्य जगाद वाक्यम्
प्रीतास्मि ते सौम्य चिराय जीव।
बिडौजसा विष्णुरिवाग्रजेन
भ्रात्रा यदित्थम् परवानसि त्वम् ॥ १४-५९
sītā tamutthāpya jagāda vākyam
prītāsmi te saumya cirāya jīva |
biḍaujasā viṣṇurivāgrajena
bhrātrā yadittham paravānasi tvam || 14-59
Having made Lakshmana to get up from prostration Seetha spoke this to him, “oh, gentle brother, I am pleased with you, may you live long. As the younger Vishnu is dependant on his elder brother Indra so are you upon your elder brother… thus your action is in the clear…” [14-59]
ராமன் சொற்படி சீதையைக் காட்டில் விட்டுவிட்டு அவருக்கு நமஸ்காரம் செய்து அழாக்குறையாக நிற்கிறான் லெட்சுமணன்; அப்போது சீதா தேவி சொன்ன ஸ்லோகம் இது “அன்புள்ள சகோதரா! உன் செயல் எனக்கு அதிருப்தி தரவில்லை; நீ நீடூழி வாழ்க; ஒருகாலத்தில் இந்திரனுக்குத் தம்பியாக — உபேந்திரனாக- விஷ்ணு பிறந்தான் அப்போது மூத்த சகோதரன் இந்திரனுக்கு விஷ்ணு எப்படி சேவகம் செய்தானோ அதே போல நீர் இருக்கிறீர் (ஸீதையின் பெருந்தன்மையும் தயவும் லெட்சுமண ரை உபேந்திரனுக்கு ஓப்பிடுவதும் காளிதாசனின் கவி நயத்தைக்காட்டுகிறது )
***
தமிழ் அதிசயம்
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) ஒரு தமிழ் அதிசயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார் . 27 நட்சத்திரங்களில் தமிழர்கள் திரு என்ற அடைமொழியை, சிறப்பினை இரண்டு விண்மீன்களுக்கு மட்டுமே சூட்டியுள்ளனர்; அவை திரு- ஆதிரை; திரு ஓணம் . இன்னுமொரு அதிசயம் அவை இரண்டும் சரியாக ஆறுமாத இடைவெளியில் கொண்டாடப்படுகின்றன!
திருவாதிரை சிவனுக்கு உரித்தானது; ஓணம் விஷ்ணுவுக்கு உரித்தானது வாமன- த்ரிவிக்ரம- மஹாபலி கதையுடன் தொடர்புடையது . தமிழ் நாட்டில் பெரிதாகக்கொண்டாடப்பட்ட இப்பண்டிகை இப்பொழுது கேரளத்தில் மிகப்பெரிய இந்துப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது அதே போல அவர்கள் திருவாதிரையையும் பெரிய பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்
****
புலவர் பெயர்கள்
(ச=ய முயல்-முசல்; குயவன்- கொசவன் ; வயம் -வசம்)
கண்ணதாசன்= கண்ணந்தாயன் ; அவன் மகன் தாயங்கண்ணன்
விஷ்ணுதாசன் = வீண்ணந்தாயன் (ஒப்பிடுக– காளிதாசன்)
தாமோதரன்
கேசவன்
****
மஹாவிஷ்ணுவை குறிப்பிட சிவ பக்தனான காளிதாசன் பயன்படுத்தும் சொற்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவள்ளுவர், சங்க காலத்துக்குப் பின்னர் வாழ்ந்தவர் என்பது அறுநூறு குறள்களில் வரும் ஸம்ஸ்க்ருதச் சொற்களும் , பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை காட்டியது போல புதிய இலக்கணம் இருப்பதாலும் தெரிகிறது; அப்பரும் சம்பந்தரும் மஹேந்திர பல்லவர் காலத்தவர்கள் ;ஆகவே வள்ளுவருக்கும் அப்பருக்கும் இடையே நூறு ஆண்டுகள்தான் இடைவெளி ; காலத்தின் தாக்கத்தை இந்த ஒப்பீடுகளில் காணலாம்
லண்டன் பல்கலைக் கழகத்தில் நாங்கள் வள்ளுவர் சிலை வைத்தபோதும் அடித்த அழைப்பிதழில் வள்ளுவர் ஐந்தாம் நூற்றாண்டுக்காரர் என்றுதான் அடித்தோம். இறைவனுக்கான அடைமொழிகள் நீண்ட காலத்துக்கு முன்னரே சம்ஸ்க்ருதத்தில் உள்ளன; அவற்றை அப்படியே மொழிபெயர்த்ததைக் குறளிலும், தேவாரத்திலும், திவ்யப் பிரபந்தத்திலும் காணமுடிகிறது .
***
அகரமுதலானை – சம்பந்தர் தேவாரம் – முதல் திருமுறை திருவாப்பனூர் பதிகம்– சிவன்
மண் அளந்த மணிவண்ணன் -அப்பர் தேவாரம் ஆறாம் திருமுறை–581 .
***
பல்மாயக்கள்ளன்-மாயக் கிருஷ்ணன்
****
ஆதிபகவன், –ஆதிமூலம் – கஜேந்திரமோக்ஷம் கதை;
ஆதி அந்தணன் -பிரம்மா
“ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து” (பரிபாடல் வரிகள் 22,23)
****
ஆதி பகவன் என்பதை விளக்கிய பரிமேல் அழகர் இப்பாட்டால் முதற் கடவுளது உண்மை கூறப்பட்டது என்கிறார். ஆதி பகவன் என்பது விஷ்ணுவைக் குறிக்கும் என்பது ஆழ்வார்கள் கருத்து.
அந்தமில் ஆதியம்பகவன் — என்கிறது திருவாய்மொழி
****
சம்சார சாகரம்-ஸம்ஸாரஸாகர – அஷ்டாவக்ர கீதா / கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு ; சிவபுராணம் 2-3-
****
அப்பர் தேவாரம் ஆறாம் திருமுறை , பாடல் 162
தனக்குவமை இல்லாதான் – அப்பர் தேவாரம் ஆறாம் திருமுறை–ஒப்பு ஒருவர் இல்லாத ஒருவன் தன்னை ; ஒப்பிலியப்பன் /விஷ்ணு கோவில்
****
பாம்பு அணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும்
வேண்டாமை வேண்டுவதும் இலான்தன்னை –பாடல் 466 .
***
சுவைஒளி ஊறு ஓசை , நாற்றத்து பாடல் 272 .
****
மூவன் – சிவன் – பாடல் 195 . சங்க புலவ அம்மூவன்.
****
இதோ வள்ளுவன் ஏழு முறை தரையில் விழுந்த கதை !
திருவள்ளுவன் கடவுள் வாழ்த்து பற்றி யாரும் சொல்லாத ஒரு ரகசியம் அவன் ஏழு முறை கடவுள் காலில் தடால் தடால் என்று விழுகிறான் என்பதாகும் . இது கிறிஸ்தவ, முல்லிம் யூத சம்பரதாயங்களுக்கு எதிரானது ஏனெனில் அவர்கள் கணக்குப்படி கடவுளுக்கு கால் கிடையாது ; அதாவது உருவம் கிடையாது ; பாத நமஸ்காரமும் கிடையாது .
பாத நமஸ்கரம் புத்த மதத்தினருக்கும் சமண மத்தனாருக்கும் கிடையாது இந்துக்களிப்பார்த்து கோவில் கட்டிய பின்னரே அவர்களுக்கும் உருவ வழிபாடு வந்தது சம்ஸ்க்ருத நூல்களிப்பார்த்து சமய நூல்கள் எழுதும்போதுதான் உன் தாள் பணிகின்றோம் என்று எழுதினார்கள் உதாரணமாக திருத்தக்க தேவர் என்ற சமணர் எழுதிய சீவக சிந்தாமணியில் கடவுள் வாழ்த்தில் காணலாம் ; அனால் இந்துக்களோவெனில் ஓவியங்களிலும் சிற்பங்களிலும் இலக்கியங்களிலும் பாதாரவிந்தங்களில் விழுவதாக எழுத்தியுள்ளார்கள்; காட்டியுள்ளார்கள்
பாத + அரவிந்த = பாத தாமரையில் .
சாமி! உன் காலில் விழுந்து கும்புடறேன் என்னைக் காப்பாத்துப்பா! என்கிறான்.
வள்ளுவர் திருக்குறள் கடவுள் வாழ்த்து
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
9. கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
–subham—
Tags- வள்ளுவன் ,ஏழு முறை, தரையில் விழுந்த கதை ,திருவள்ளுவன் ,காப்பி அடித்த, சொற்கள், பாத நமஸ்காரம், தாள், அடி