பராசக்தி வழிபாடு பற்றி பெரியோர்கள் என்ன சொன்னார்கள் ?- 2 (Post No.14,770)

Madurai Temple Vahanas.

Written by London Swaminathan

Post No. 14,770

Date uploaded in London –  17 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

அருணகிரி நாதர் முதல் திருப்புகழிலேயே  தேவியைப் பாடி விடுகிறார் ; கைத்தல  நிறைகனி என்று துவங்கும் கணபதி வாழ்த்தில்  அவரைப் புகழும் போது உத்தமி புதல்வன் என்று தேவியைப் புகழ்கிறார் இந்தப்பாட்டில் சிவன், உமை, பிள்ளையார் முருகன் ஆகிய எல்லோர் பெயர்களும் வருவது கவனத்துக்குரியது

****

சக்தி பற்றிய பாரதி பாடல்

18. ஓம் சக்தி

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்

      நிறைந்த சுடர்மணிப் பூண்.

பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள்

      பார்வைக்கு நேர் பெருந்தீ.

வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி

      வையக மாந்த ரெல்லாம்,

தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர்,சக்தி

      ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 1

நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி

      நலத்தை நமக்கிழைப் பாள்;

அல்லது நீங்கும் என்றே யுலகேழும்

      அறைந்திடுவாய் முரசே!

சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்கு

      சொல்லு மவர் தமையே,

அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்

      ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 2

நம்புவ தேவழி யென்ற மறைதன்னை

      நாமின்று நம்பி விட்டோம்

கும்பிட்டெந் நேரமும் ‘சக்தி’ யென் றாலுனைக்

      கும்பிடுவேன் மனமே!

அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்

      அச்சமில் லாத படி

உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்

      ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 3

பொன்னைப் பொழிந்திடு, மின்னை வளர்த்திடு,

      போற்றி உனக்கிசைத் தோம்.

அன்னை பராசக்தி என்றுரைத் தோம்தளை

      அத்தனையுங் களைந்தோம்;

சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன

      மே தொழில் வேறில்லை, காண்,

இன்னு மதே யுரைப்போம், சக்தி ஓம் சக்தி

      ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 4

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு

      ளாக விளங்கிடு வாய்!

தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு

      விண்ணப்பஞ் செய்திடுவேன்;

எள்ளத் தனைபொழுதும் பயனின்றி

      இரா தென்றன் நாவினிலே

வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி

      வேல், சக்தி வேல், சக்தி வேல்! 5

இந்தப்பாட்டில் தேவியை வழிபட்டால் என்ன என்ன கிடைக்கும் என்ற பட்டியலைப் பாரதியார் தருகிறார் :

இவளுடைய அருட்பார்வை இருந்தால் தீயில் கருகும் பஞ்சு போல நமது துன்பங்கள் பஸ்மாமாகிவிடும். 

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் – என ஆண்டாள் திருப்பாவையில் சொன்னதையும் ஒப்பிடலாம் .

அடுத்ததாக, தேவி வழிபாடு நலத்தை நமக்கு நல்கி அல்லது யாவற்றையும் அகற்றிவிடும் என்கிறார் பாரதி .

அடுத்ததாக, நம்மைக் கட்டிப் பிணைக்கும் பாச பந்தங்கள் எல்லாம் விடுபட்டு முக்தி கிடைக்கும் என்கிறார் .

சக்தியைக் கலைவாணி ரூபத்தில் வழிபட்டால் பாரதி போல நம் நாவிலும் சரஸ்வதி தேவி வெள்ளமெனக் கவிதை பாடும் வாக்கு வன்மையைத் தருவாள் –எள்ளத் தனைபொழுதும் பயனின்றி

இரா தென்றன் நாவினிலே வெள்ள மெனப்பொழிவாய் …..

*****

Madurai Temple Vahanas.

குமர குருபர சுவாமிகளின் சகல கலா வல்லி மாலை

குமர குருபர சுவாமிகளும் சகல கலா வல்லி மாலையில் கடைசி பாடலில் இதையே சொல்லுவதைக் காணலாம்

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்

பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்

விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்டேனும் விளம்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலா வல்லியே

 —குமரகுருபரர் அருளிய சகல கலா வல்லி மாலை.

10. Goddess of all Learning! There are myriads of Gods, and celestial beings like the Creator. But is there one to equal you? Grant me this boon that all monarchs, who rule over the earth, bow unto me the moment I sing my poems.

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிது எய்தநல் காய் எழுதாமறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலுமன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே

6. Goddess of all Learning! You pervade everything: you pervade the Vedas, the five elements, namely, ether, air, water, fire and the earth; you fill the vision and the hearts of Your devotees. Grant me this boon; make me proficient in all the arts whenever I wish. Make me proficient in music, in dance, in learning and in singing sweet poems.

****

கவி பாடும் ஆற்றல் பெற

ஆதிசங்கரரும் கலைமகள் வடிவத்தில்  தேவியை வணங்கும் 2 செளந்தர்ய லஹரி பாடல்களில் சரஸ்வதி தேவி நமக்கு நல்ல அறிவினையும் வாக்கு வன்மையையும் கவிபாடும் ஆற்றலையும் தருவாள் என்கிறார் ,

शरज्ज्योत्स्नाशुद्धां शशियुतजटाजूटमकुटां

वरत्रासत्राणस्फटिकघटिकापुस्तककराम् ।

सकृन्न त्वा नत्वा कथमिव सतां संन्निदधते

मधुक्षीरद्राक्षामधुरिमधुरीणाः फणितयः ॥ १५॥

சரஜ்-ஜ்யோத்ஸ்னா ஸுத்தாம் சசியுத-ஜடாஜூட-மகுடாம்

வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக-குடிகா-புஸ்தக-கராம் i

ஸக்ருன்ன த்வா நத்வா கதமிவ சதாம் ஸன்னிதததே

மது-க்ஷீர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா: பணிதய: Ii

சரஸ்வதி தேவி சரத்கால சந்திரன் போல ஜொலிக்கிறாள்.இரு கரங்கள் மூலம் பக்தர்களுக்கு வரம் அளிக்கிறாள்; ஏனைய இரு கரங்களில் புஸ்தகத்தையும் ஜபமாலையையும் வைத்துக்கொண்டு காட்சி தருகிறாள் ; சடை முடியில் மணிமகுடத்துடன் பிறைச்சந்திரன் இருக்கிறது  அவளை ஒரு முறை வணங்கினாலும் நல்லோர் நாவிலிருந்து திராட்சை ரசம், பால், தேன் ஆகிய வற்றினும் இனிய சொற்கள் மழைபோலப் பொழிவது என்னே (விந்தை)

****

कवीन्द्राणां चेतःकमलवनबालातपरुचिं

भजन्ते ये सन्तः कतिचिदरुणामेव भवतीम् ।

विरिञ्चिप्रेयस्यास्तरुणतरश‍ृङ्गारलहरी-

गभीराभिर्वाग्भिर्विदधति सतां रञ्जनममी ॥ १६॥

கவீந்த்ராணாம் சேத: கமலவன பாலாதப-ருசிம்

பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம் i

விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ஷ்ருங்காரலஹரீ

கபீராபிர்-வாக்பிர்-விதததிஸதாம் ரஞ்சனமமீ ii

உதய சூரிய கால இளஞ்சிவப்புக் கதிர்களின் நிறத்துடையவளே! தாமரை போன்ற மனம் கொண்ட அருட்கவிகள் உன்னைக் கண்டமாத்திரத்தில் வெள்ளமெனக் கவிதை மழை பொழிகிறார்கள் ;  இளமையுடன் தோன்றும் கல்வித் தெய்வமான உன்னைத் தரிசித்த மாத்திரத்தில் சபையோரும் வியக்கும் வண்ணம் அலைகடலென சொற்களை  வீசும் சக்தியை அறிஞர்கள் பெறுகிறார்கள்.

(பக்தர்கள் மனம் தாமரைக்கு உவமை; சரஸ்வதி தேவி உதய சூரியனுக்கு உவமை; சூரியனைக் கண்ட தாமரை போல மலரும் கவிஞர் உள்ளம் வெள்ளெமெனைக் கவிதைகளை இயற்றி இலக்கிய வித்தகர் நிறைந்த சபையை அசத்துகின்றனர்.

TO BE CONTINUED……………………….

Tags- சரஸ்வதி தேவி, செளந்தர்ய லஹரி, குமர குருபர சுவாமி, சகல கலா வல்லி மாலை, அருணகிரி நாதர் ,சக்தி , பாரதி பாடல், தெள்ளு கலைத் தமிழ் வாணி

கோரோங்கோரோ எரிமலை வாய்! (Post.14,769)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,769

Date uploaded in London – 17 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

9-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

உலகின் அதிசய இடங்கள்! 

கோரோங்கோரோ எரிமலை வாய்!

பிளவுப் பள்ளத்தாக்கில் ஒரு வனவிலங்கு சரணாலயம்!!

NGORONGORO CRATER 

ச. நாகராஜன் 

வடக்கு டான்ஜானியாவில் அமைதியின் உறைவிடம் என்று வர்ணிக்கப்படும் பெரிய நகரான தார் எஸ் சலாமுக்கு வடமேற்கே 350 மைல் தொலைவில் அமைந்துள்ளது கொரோங்கோரோ எரிமலை வாய்!

 ஆப்பிரிக்காவின் அற்புதமான பல்வகை வனவிலங்குகளின் இருப்பிடம் இதுவே தான்.

எரிமலையின் கீழே உள்ள செழுமையான புல்வெளிப் பகுதி தான் 30000 மிருகங்களுக்குச் சொர்க்கமாகத் திகழும் இடம்.

 ஆப்பிரிக்காவின் பூர்வீகக் குடியினர் மஸாய் குடியினர் ஆவர். இவர்கள் இந்தப் பகுதியில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தவர்கள். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தான் இங்கிருந்து வெளியேறினர். இவர்கள்

கோரோங்கோரோவைப் பெரிதும் பூஜித்தனர்.

கடும் பஞ்சகாலத்திலும் கூட அவர்கள் இந்த இடத்தை விட்டு நகரவில்லை. தாகத்தைத் தணித்துக் கொள்ள அங்குள்ள நீரூற்றுகள் அவர்களுக்கு உதவின.

கிழக்கு ஆப்பிரிக்காவின் செயலிழந்த எரிமலைகளுள் கோரோங்கோரோவும் ஒன்று. இரண்டரை கோடி வருடங்களுக்கு முன்னர் இது பொங்கி எழுந்து கொண்டிருந்தது. ஜாம்பியா நதியிலிருந்து தெற்கே 4060 மைல் நீளம் நீண்டிருந்த இந்த எரிமலைப் பகுதி உருவானது.

ஒரு காலத்தில் பூமியின் கீழ் உள்ள டெக்டோனிக் தகடுகளில் இரண்டு அசையவே பெரும் வெடிப்புகள் இரண்டு உருவாயின. அவற்றுள் ஒன்றினால் உருவானது தான் இந்த ஆப்பிரிக்க கொரோங்கோரோ எரிமலை!

அந்தக் காலத்தில் இதன் உச்ச பட்ச உயரம் பிரமிக்க வைக்கும் 15000 அடியாகும். இதன் அடிப்பரப்பு மட்டும் நூறு சதுரமைல்களாகும்.

 மற்ற எரிமலைப் பகுதிகள் போலல்லாமல் அதிர்ஷ்டவசமாக இந்தப் பகுதியில் எப்போதும் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. ஆகவே கூட்டம் கூட்டமாக விலங்குகள் இந்தப் பகுதியை நோக்கி வந்தன.

 மூங்கே  மற்றும் லோன்யோகி (MUNGE AND LONYOKIE)

ஆகிய  இரு நதிகள் நீரைக் கொண்டு வந்து இங்கு சேர்க்கின்றன. நீல நிறமுள்ள ஒரு அற்புதமான ஏரி இங்கு உருவாகிவிட்டது.

 அரிய இனமான இரண்டு வகை ஃப்ளெமிங்கோ பறவைகள் இங்கு வளர ஆரம்பித்தன. நீர்யானைகளும், யானைகளும் ஏராளமாக இங்கு வசிக்க ஆரம்பித்தன.

இங்கு ஏராளமான செடிவகைகளும் மூலிகைகளும் உள்ளதால் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள அவற்றின் கீழே காண்டாமிருகங்கள் ஓய்வெடுக்கின்றன. இவற்றையே அவை தனது உணவாகவும் எடுத்துக் கொள்கின்றன!

அற்புதமான பெரிய ஏரி, அருகில் பரந்த சமவெளி ஆகியவை இருப்பதால் உற்சாகத்துடன் இங்கு சிங்கங்கள் விளையாடுகின்றன.

 எரிமலைப் பகுதியில் ஒரு வனவிலங்கு சரணாலயம் அமைந்திருப்பது உலகத்திலேயே இந்த ஒரு இடத்தில் தான் என்பதால்

கோரோங்கோரோ ஒரு தனிச் சிறப்பைப் பெற்றுள்ளது! 

**

பராசக்தி வழிபாடு பற்றி பெரியோர்கள் என்ன சொன்னார்கள் ?- 1 (Post.14,768)

GODDESS MEENAAKSHI, LORD SHIVA, SUNDARESWARA.

Written by London Swaminathan

Post No. 14,768

Date uploaded in London –  16 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்துமாரி!

கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்

பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாங் களைவாய்,

கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந் தீப்பாய்.

எப்பொழுதும் கவலையிலே இணக்கி நிற்பான் பாவி,

ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்.

சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி

பக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும்.

ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்,

யாதானுந் தொழில் புரிவோம், யாதுமவள் தொழிலாம்.

துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்,

இன்பமே வேண்டி நிற்போம், யாவுமவள் தருவாள்.

நம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறைத் தீர்ப்பு,

அம்பி கையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்.

— பாரதியார் பாடல் ; தலைப்பு: தேச முத்துமாரி.

****

ஒளியால் உலகீன்றுயிர் அனைத்தும்

மீன் போற்செவ்வியுறநோக்கி

அளியால் வளர்க்கும் அங்கயற்கண்

அன்னே! கன்னி அன்னமே !

அளியால்  இமவான் திருமகளாய்

ஆவியன்ன மயில் பூவை

தெளியா  மழலைக்கிளி வளர்த்து

விளையாட்டரும் யா செய்தி என்னே

பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம்

FISH EYED GODDESS – MEENAAKSHI OF MADURAI.

மீன்கள் இட்ட முட்டைகளைத் தன் பார்வையால் குஞ்சு பொறிப்பது போல நீ ஈன்ற உயிர் அனைத்தையும், உன் அருட் பார்வையால் வளர்க்கிறாய்; அன்னம் போன்றவளே ; மயில் போன்றவளே! மலையத்வஜ பாண்ண்டியன் மகளாய் அவதரித்து பூவைப் பறவைகளையும் கிளிகளையும் வளர்த்து விளையாடும் செயல்தான் என்னே !

கயற் கன்னி = மீனாட்சி; அம் = அழகான ; கயல் = மீன்.

****

Ghanam Krishna Iyer (1790–1854) 

ராகம்: ரதிபதிப்ரியா

பாடல்: கனம் கிருஷ்ண ஐயர்

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி (ஜகத்)

சுக ஸ்வரூபிணி மதுர வாணி

சொக்கனாதர் மனம் மகிழும் மீனாக்ஷி (ஜகத்)

பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ

பஞ்சமி பரமேஸ்வரி

வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ

வேத வேதாந்த நாத ஸ்வரூபிணி (ஜகத்)

****

அவளின்றி ஓர் அணுவும் அசையாது !

ஆதிசங்கரர், செளந்தர்ய லஹரி

சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்

ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திதுமபி |

அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரிஹரவிரிஞ்சாதிபிரபி

ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய: ப்ரபவதி || 1 ||

செளந்தர்யலஹரி , ஆதி சங்கரர் இயற்றியது, முதல் ஸ்லோகம்

ந கலு குசல: ஸ்பந்திதுமபி= அவளின்றி ஓர் அணுவும் அசையாது !

பொருள்

சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் விளக்கம்

தெய்வங்களே நமது குறைகளை நீக்க வேண்டும் . அப்படி நீக்குபவர் தேவர்கள் எனப்படுவர் ; அத்தேவர்களுக்கு ஏற்படும் குறைகளை நீக்கும் தெய்வம் ஸ்ரீ சக்தி எனப்படும். இந்த சக்தியுடன் சேர்ந்து இருப்பதே  சிவபெருமானுக்குப் பெருமை. சக்தியுடன் சேராமல் இருந்தால் சிவனும் வெறும் சிவன்தான் . ஆதலால்தான் உலக வழக்கத்திலும் வைஷ்ணவர் முதலிய யாராயினும் எனக்கு எழுந்துவர சக்தி இல்லையே எனக்கூறுவர்.அப்படிச் சொன்னால் , சிவனே என்று இரு சொல்லுவது வழக்கம் .

ஆகையால்தான் ஆதி சங்கரரும் பரமேஸ்வரனுக்கு காரியங்களைச் செய்யவதற்குத் தகுதியை அளிக்கும் பராசக்தி இவளேதான் ; ஆகையால் பிரம்மா, விஷ்ணு  முதலியோரும் வணங்கும் ஸ்ரீ சக்தியை நமஸ்கரிக்கவோ துதிக்கவோ புண்யமில்லாதாருக்கு இயலாது. இச்சக்தி இல்லையேல் அசைவதற்கும் இயலாது என்று துதித்திருக்கிறார் .

.

இவ்வுலகில் ஸ்த்ரீ ரூபமாய்த் தெய்வத்தைக் கூறும் மதம் நம் இந்துமதம் ஒன்றுதான். அதனாலேயே நம் மதத்தில் பெண்களுக்கு சிறந்த பெருமை கொடுக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமல்ல ; தெய்வங்களாகக்கூட பெண்களை பூஜித்து வருகிறோம்.அம்மாதிரி பூஜித்து புடவை, , மஞ்சள்  , குங்குமம், புஷ்பம் தாம்பூலம் இவற்றைக்கொடுத்து அலங்கரித்து , அன்னமிட்டு உபசரிப்பதை சுமங்கலிப் பிரார்த்தனை என்று சொல்கிறோம்.  இப்பூசையை விஷ்ணு மதத்தைச் சேர்ந்தோரும் செய்து வருகிறார்கள். இந்த பூஜையை எதோ ஒரு காரணத்தால் நடத்தாத  குடும்பங்களில் நல்ல காரியங்களைத் தொடங்கும்போது இடையூறு ஏற்படுகிறது .அக்குடும்பங்களில்  தோன்றும்  சந்ததியினருக்கு  சந்திரன் சுக்கிரன் ,  ராகு  ஆகிய  கிரஹங்கள்  ஜாதகத்தில் தோஷமுள்ளவர்களாகின்றன. மனதும் சுவாச கோஷமும் பாதிக்கப்படுகின்றன. ஆதலாலேயே லலிதா சஹஸ்ர நாமத்தில்

ஓம் சுவாசின்யை நமஹ 

ஓம் சுவாசின்யர்ச்சிநப்ரீதாயை நமஹ  என்ற நாமங்களால் ஸ்ரீ சக்தியை  சுவாசினி ரூபிணியாகவும்  சுவாசினியை அர்ச்சிப்பதால் சந்தோஷப்படுகிறவளாயும்  கூறப்பட்டுள்ளது இப்படிப் பெண்களைத் தெய்வமாக நினைத்துப் பூஜிப்பது  பெரியோர்களுக்கு சம்பிரதாயமாக இருந்து வந்திருக்கிறது.

****

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி

கி. வா ஜகந்நாதன் உரை

காப்பு

(கட்டளைக் கலித்துறை)

தாரமர் கொன்றையும் சண்பக

மாலையும் சாத்தும்தில்லை

ஊரர் தம் பாகத் துமைமைந்த

னேஉலகேழும் பெற்ற

சீர் அபிராமி அந்தாதிஎப்

போதும் என் சிந்தையுள்ளே

கார் அமர் மேனிக் கணபதி

யேநிற்கக் கட்டுரையே.

ASHTA BHUJA VINAYAKAR 

(உரை) மாலையாகப் பொருந்திய கொன்றையையும் சண்பகமலர் மாலையையும் முறையே அணிந்தருளுகின்ற தில்லையெம்பெருமானுக்கும், அப்பெருமான் வாமபாகத்தில் உறைகின்ற உமாதேவியாருக்கும் திருக்குமரனே, கரிய நிறம் பொருந்திய திருமேனியையுடைய கணபதியே, ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புடைய அபிராமியம்மையைப் பற்றிய அந்தாதியென்னும் இப்பிரபந்தமானது எப்போதும் என் உள்ளத்துக்குள்ளே நிலைபெறும்படி திருவாய்மொழிந் தருளுவாயாக. 

தார்-மார்பின் மாலை. கொன்றை சிவபெருமானுக்கும், சண்பகம் அம்பிகைக்கும் உரிய மாலைகள்; சாம்பேயகுஸும ப்ரியா (435) என்பது அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று.

நூல்

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்

திலகம் உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்

போது மலர்க்கமலை

துதிக்கின்ற மின் கொடி மென்கடிக்

குங்கும தோயம் என்ன

விதிக்கின்ற மேனி அபிராமி

என்றன் விழுத்துணையே.

(உரை) உதயமாகின்ற செங்கதிரவனும். மேல் நெற்றியில் அணியும் சிந்துரத் திலகமும், ஞானம் உடையவர்கள் நன்கு மதிக்கின்ற மாணிக்கமும், மாதுள மலரும், தாமரை மலரில் எழுந்தருளிய திருமகள் துதிசெய்கின்ற மின்னற் கொடியும், மெல்லிய வாசனையையுடைய குங்குமக் குழம்பும் ஆகிய பொருள்களைப் போன்றதென்று நூல்கள் கூறுகின்ற திருமேனியையுடைய அபிராமியம்மை என்னுடைய மேன்மையான துணை ஆவாள்.

உதிக்கின்ற செங்கதிர்-பால சூரியன்; கண்கொள்ளும் வடிவினதாதலின் இதனை உவமை கூறினர்; உத்யத்பானு ஸஹஸ்ராபா’ (6) என்பது அம்பிகைக்குரிய ஆயிரந் திருநாமங்களுள் ஒன்று. “வந்துதித்த வெயிலாயிருக்கும் விசும்பில்” (99) என்பர் பின். உச்சித் திலகம்: “சிந்துர வண்ணப் பெண்ணே” (6), “சிந்துர வண்ணத்தினாள்” (8), ‘சிந்துர மேனியள்” (43) என்று பின்னும் கூறுதல் காண்க. திலகம்-மஞ்சாடி என்றும் கூறலாம்.

“மாதுளம் பூநிறத்தாளை” (பயன்); தாடிமீ குஸுமப்ரபா” (லலிதா ஸஹஸ்ரநாமம், 560).

எல்லா விடத்தும் எக்காலத்தும் துணையாக இருத்தலின் விழுத்துணை என்றார்..

To be continued………………………….

Tags– மாதுளம் பூநிறத்தாளை, அபிராமி அந்தாதி, சுமங்கலிப் பிரார்த்தனை, அணுவும் அசையாது, பராசக்தி வழிபாடு ,நம்பினோர் கெடுவதில்லை,அம்பிகையைச் சரண்புகுந்தால், பாரதியார் பாடல் ,பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம், ஜகத் ஜனனி சுகபாணி , ஆதிசங்கரர், செளந்தர்ய லஹரி

The first wife is from God, the second from Men, the third from the Devil (Post No14,767)

Written by London Swaminathan

Post No. 14,767

Date uploaded in London –  16 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Proverbs on God- Third Part

The act of God does wrong to none.

He whom God favours becomes rich in sleep.

Man plants and waters, but God gives the increase.

Nothing without God.

The true goddess was recognised by her walk.

Many meet the Gods , but few salute them.

The gods have feet of wool.

The God sells all thing to hard labour.

No one bound to accuse himself except before God.

Man in solitude is either a God or a devil .

Latin

****

He sleeps as if he lay in the very ear of God.

May your lips speak into the ears of God.

God and I go halves.

God has days in plenty.

He who gives to me is my God; he who takes away from me is my devil

Lettish

****

No one makes contracts with God.

Where there is concord, there is God.

Who gives to poor lends to God.

Who has never suffered is not dear to God.

God always helps fools, children and the drunken.

Pray to God but keep to the shore.

God closes one door and opens one hundred.

God comes on everywhere on every eighth day.

God does not pay every Saturday.

God gives a curst cow only short horns or none at all.

Even God has His mother.

If God has smitten everything, he has spared patience and kind words.

God never smites with both ends of the stick.

God often gives nuts to toothless people

God preserve me from everybody too sober.

God remains debtor to no one.

God tempers the wind to the shorn lamb

WHOM GOD WISHES TO PUNISH HE FIRST DEPRIVES OF HIS REASON.

This is in Sanskrit- vinaasa kaale vipareetha budhdhi.

God’s friend- priest’s foe.

God’s mill goes slowly but grinds well

This is in Tamil – arasan andre kolvaan; deivam nindru kollum; king executes the criminal  immediately; god waits and kill the person.

Where there is love, there is God.

This is in tirumanthiram verse in tamil.

The first wife is from god, the second from meN, the third from the devil

Montenegrin

****

He who does not know is excused by god.

A little for god and a little for my own.

Give it for the sake of god, and give it to him who does not believe in god.

Slowness comes from God and quickness from the devil.

Repose trust in God and sleep with a snake.

Manage with bread and butter till God brings the jam.

God brings to all wheat its measurer.

May god close the door for him who has only one.

He who eats before a hungry person, may god deprive him of his goods in the world.

God gives beans only to him who has no teeth.

If God gives you and pays you, even the wind will cut the wood for you.

If God has given you what can a servant of god to you?

An innocent person’s invocation to God has no curtains

.it will be heard at once.

To commit ten sins against god is better than to commit  one against a servant of god.

This is also in Hindu books. Guru or a devotee is superior to god.

Every matter of importance which is begun without mention of God is maimed.

This is in Hinduism. All books and activities begin with invocation to God.

May God make us awake to our fault.

To every field of wheat god sends its reaper.

A hand for the sake of God that the load may be lifted on to the pack-animal.

Give what there is in your pocket, God will bring you what is absent.

Be patient of little, God will give you much.

 Give occasion and God will help you.

Go on with the old shoes until God brings you new ones.

The niggard will go to hell even though he worships God by night and day.

May God bless him who makes a visit and makes it short.

Women have been omitted by God from his mercy.

Moorish proverbs

To be continued………………………………….

Tags- god, proverbs, part 3, women, niggard, slow, devil, third wife

SNAKE SHAPED TEMPLE IN TELANGANA


Posted by London Swaminathan from Facebook on 16-7-2025. 

The Lakshmi Narasimha Swamy Temple near Nampally, Telangana, is a unique snake-shaped temple dedicated to Goddess Naga Devatha. It is located on a hillock, accessible via a short climb from the Vemulawada-Karimnagar highway, and is about 150 kilometers from Hyderabad according to a Facebook post. The temple’s design features a large, curled snake structure with a tunnel entrance through the snake’s belly, leading to the shrine. Inside, visitors will find statues depicting the story of Prahalada and Hiranyakasipu, and the idol of Lord Narasimha killing Hiranyakasipu. There are also ancient idols of Naga Devatha, and at the entrance, a statue of Lord Narasimha emerging from a pillar.

**** 

Lakshmi Narasimha Temple, Nampally Gutta is nestled on a small hillock on the Vemulawada – Karimnagar highway in Telangana. It is a small shrine dedicated to Lord Lakshmi Narasimha, an incarnation of Lord Vishnu. The idol was carved out of the rock around which the temple was built. The visitors have to walk a few hundred steps that lead to the top from nearest the parking area at bottom. The climb is little steep may take up to 15 minutes.

****

The temple is nestled on a small hillock on the Vemulawada – Karimnagar highway. It is a small shrine dedicated to Lord Lakshmi Narasimha, an incarnation of Lord Vishnu. The idol was carved out of the rock around which the temple was built. The visitors have to walk a few hundred steps that lead to the top from nearest the parking area at bottom. The climb is little steep may take up to 15 minutes.


One the way to the Narasimha temple, there is a temple for Naga

Devatha. The temple was built in a model of Snake. Visitors can enter the shrine through the snake’s belly – a long, winding tunnel. There are statues depicting the story of Prahalada and Hiranyakasipu. At the end of the tunnel, the statue of Lord Narasimha killing the demon Hiranyakasipu is present. There are also a few ancient idols of Naga Devatha. At the entrance of the temple, one can find a statue of Lord Narasimha breaking his way out of a pillar.



Timings: 9 AM to 5:30 PM

—subham—

Tags- Snake shape temple, Nampally, Telangana, Naga Devata, Lakshmi Narasimha Swamy.

INGLIS, THE BADDEST LANGUAGE; (ENGLISH THE WORST LANGUAGE) Post No.14,766

Written by London Swaminathan

Post No. 14,766

Date uploaded in London –  16 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

GHOTI= FISH

English spelling as has been frequently pointed out by G B Shaw ,Senator Robert Owen and others, is a monument to traditionalism so weird as to be practically incredible. We have only five written vowels, but at least thirteen vowel sounds, plus some thirty vowel combinations, or diphthongs, many of which are represented by simple vowels in writing—our so called long vowels, a, I, o and u , –are all phonetically combinations of two vowed sounds.

A group like ou appears with a different phonetic value in each of these words,

House, cough, cousin, through, furlough, could.

Words like Polish, and polish are distinguished in writing only by the capital.

Shaw is said to be responsible for the statement that fish could be spelled ghoti by using the

Gh of enough,

The o of women, and the

Ti of nation.

Gh=f

O=i

Ti=sh

****

AMERICAN ENGLISH

Vocabulary and semantic differences between American and British are numerous to have warranted the compilation of many lengthy glossaries, some of book length.

G B Shaw claims that England and America are two countries separated by the same language, while a contemporary America writer says interpreters are far more needed between ourselves and the British than between either and the French or German, but such statements are humorously and paradoxically advanced, even if they are aided and abetted by continental Europeans who hang out such signs as

English spoken here- American understood or

Who offer to teach English in three months and American in two months.

That the British themselves are not above such low humour is evidenced by the following sign recently noted on a London theatre marquee,

New, sensational American Western film- English subtitles.

****

What English can do to foreigners who try to use it is indicated by such phrases as correctly English in 100 days ( the title of an English handbook for Orientals); I was suddenly disemployed and May I have an interview facial to facial? (two of the phrases listed therein); as well as Soldiers are refused to eat and drink here (sign over a Shanghai shop) and We are boys in the age of 17 years, full from spirit of enterprise (letter to a New York daily from Germany).

The story, authentic or not, is told of an American technician employed in a Russian plant, during the war, received a distressing wire from home about his only daughter:

Harriet hung for juvenile crimes. The telegram had been translated into Russian, then retranslated into English; the original version was Harriet suspended for minor offences.

***

MILLIONS LOST DUE TO LINGUISTIC IGNORANCE

One of the oldest words in the Germanic languages is corn. But semantically corn has become specialised to mean wheat to the English, oats to the Scottish and maize to the Americans. Not knowing this fact, a government agency during the war bought corn for European famine relief at the request of British government, and this bit of linguistic ignorance cost a few million dollars to repair.

Source book- THE STORY OF LANGUAGE by Mario Pei, 1952.

–subham—

Tags- G B Shaw, English language, American English, Ghoti, fish, Corn, million dollar, linguistic ignorance

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 9 (Post No.14,765)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,765

Date uploaded in London – 16 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இந்தத் தொடரில் இதற்கு முன்னே வந்துள்ள் அனைத்துக் கட்டுரைகளையும் இந்த பிளாக்கில் படிக்கலாம்! 

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 9 

ச.நாகராஜன் 

சமீப காலத்தில் நடந்த கோரமான நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக ட்ரீம் லைனர் ஃப்ளைட் AI-171-இன்  விபத்து தான்!

அஹமதாபாத்திலிருந்து 2025 ஜூன் 12, தேதி கிளம்பிய அது லண்டனில் உள்ள கேட்விக் தளத்திற்குச் செல்ல பறக்க ஆரம்பித்தது. சரியாக பகல் 1.39க்குக் கிளம்பிய விமானம் சில விநாடிகளுக்குள்ளேயே அவசர கால உதவியான மே டே அழைப்பை விடுத்தது.

1.40க்கு அது வெடித்துச் சிதறியது.

விமானத்தில் 242 பெர்கள் இருந்தனர். அவர்களில் 230 பேர்கள் பயணிகள்; 12 பேர்கள் விமானத்தைச் செலுத்தும் குழுவினர். இவர்களில் 169 பேர்கள் இந்தியர்.53 பேர்கள் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் மற்ற நாட்டவர்கள். 

விமானம் கிளம்பிய சில நொடிகளிலேயே வெடித்துச் சிதறியது.

அது விமான நிலையத்திற்கு அருகிலிருந்த BJ மெடிகல் கல்லூரி மற்றும் மெகானிநகர் அருகிலிருந்த சிவில் மருத்துவமனை மற்றும் ஹாஸ்டல் மீது விழுந்து நொறுங்கி ஹாஸ்டலைச் சேதப்படுத்தியது.

ஹாஸ்டலில் இருந்தவர்களில் பலர் காயமடைந்தனர். ஹாஸ்டலில் மேல் தளங்கள் இடிபட்டு நசமாயின. ஹாஸ்டலின் மீது விமானம்  மோதியதில் சுமார் 24 பேர்கள் இறந்தனர். 

விபத்தில் உயிர் இழந்தவர்களில் முன்னாளைய குஜராத் முதல் அமைச்சரான விஜய் ரூபானியும் ஒருவர் 

விமானத்தில் பயணித்த 242 பேர்களில் ஒரே ஒருவர் தான் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தார்.

.விமானம் ஏன் தரை மீது மோதியது என்பதைப் பற்றிய ஏராளமான ஊகங்கள் கிளம்பின.

எரிபொருள் டாங்கிற்கு எரிபொருள் சப்ளை ஆகவில்லை என்பதும் ஒரு ஊகமாக இருக்கிறது. இரண்டு எஞ்ஜின்களும் அதனால் தான் இயங்கவில்லை என்பது வல்லுநர்களின் கண்டுபிடிப்பு.

 இதில் அதிசயிக்கத்தக்க ஒரு சம்பவம் இதில் உயிர் பிழைத்தவர் ஒருவர் மட்டுமே தான் என்பது.

விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற 38 வயதான ஒருவர் மட்டுமே தீவிர காயத்துடன் உயிர் தப்பினார்.

விமானம் கீழே விழுவதை அறிந்த ரமேஷ் அவசரகதவு வழியாக வெளியே குதித்து தப்பியுள்ளார்.

இருக்கை எண் 11 ஏ என்பது ட்ரீம்லைனர் விமானத்தில் எகானமி வகுப்பில் முதல் வரிசையில் ஜன்னலுக்கு வலதுபக்கத்தில் உள்ள இருக்கையாகும். இது அவசரவழியை ஒட்டி அமைந்துள்ளது.

விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு சில நொடிகளுக்கு முன்பாக அவசரநிலை தெரிவிக்கப்பட்டது. உடனே உஷாரான அவர் சரியாக விமானம் கீழே விழுந்து மோதும் போது விமானத்தில் ஏற்பட்ட பிளவைப் பயன்படுத்தி அதன் வழியாக எகிறிக் குதித்தார். காயங்களுடன் உயிர் தப்பினார்.

அவர் கண் விழித்த போது அருகில் அவரைச் சுற்றி சடலங்கள் கிடந்தன. பயந்து அலறியவர் ஓட ஆரம்பித்தார். அவரை மீட்புக் குழுவினர் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 முப்பது விநாடிகளுக்குள் எல்லாம் முடிந்து விட்டது.

 ரமேஷுக்கு அருகில் உட்கார்ந்திருந்த அவரது சகோதரர் உயிரிழந்தார்.

 மிக பயங்கரமான கோர விபத்தில் பல ஆச்சரிய செய்திகள் உள்ளன.

ஒருவர் இந்த விமானத்தை சரியான நேரத்தில் பிடிக்க முடியாததால் பயணம் செய்ய முடியவில்லை. டிக்கட் வாங்கிய இன்னொருவர் தாய் அவரைப் பிரிவதைத் தாங்க முடியாமல் வருந்தி அதில் போக வேண்டாம், இன்னும் இரு என்று சொன்னதால் அவர் பயணிக்கவில்லை. அவர் உயிர் தப்பினார்.

 ரமேஷ் உயிர் பிழைத்த அதிசய சம்பவத்திலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது: காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்!

**

If wives were good, God would have one! (Post No.14,764)

Written by London Swaminathan

Post No. 14,764

Date uploaded in London –  15 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PROVERBS ON GOD PART TWO

First the doctor, then God.

If wives were good, God would have one

Georgian

****

The voice of the people is the voice of God.

Men should be careful lest they cause women weep, for God counts their tears- Talmud

(Manu also said similar thing in his smriti.)

God did not make woman from man’s head, that she should rule over him; nor from his feet, that she should not be his slave; but from his side that she should be near his heart- Talmud

(Hindus are the only people who worship god as half man and half woman-

Ardha naareeswar concept)

God is more delighted in adverbs than nouns.

Whosoever walks towards God on cubit, God runs towards him in twain

(this is also in Hindu quotes )

Everything  is in the hands of God, save the fear of God.

In the name of god, we do all manner of wrong.

Beat the gods, and the priest will tremble–Talmud

If thou hast taken up God’s trade, put on his livery also- charity.

Talmud

Hebrew

****

The voice of the people is the drum of God .

Shut your eyes, your nose and your mouth and then call on God. Your inner doors will open when your outer doors are shut.

My friend, love God as the husbandman loves his field; he suffers losses and pay tribute, and still he loves his fields.

If God be our friend  we have already succeeded .

God dwells in music.

God fills the full.

God grant no nails to the bald.

There is a God, so why do you grieve?

As I can conceal nothing from God, why should I stand in awe of man?

Let none trouble about the caste and creed; who calleth on God is called of God.

The idol carrier worships not.

Hindustani or Urdu

****

God does not pay on a Saturday.

Who has God for his friend has all the saints in his pocket.

God helps him who is in possession.

God listens to short prayers.

To the good spender god is treasurer.

God is treasurer to the charitable man

God puts food into clean hands.

When one can do no more god sends death.

That which god sends is better than that which man asks for.

Where God’s help is there a spider’s web becomes a wall; where it is not, the wall becomes a spider’s web.

Italian

****

The water of God for the pines of the wood.

Whom God has given a mouth, to him will not He, the same god, give a little pot for his dinner?

If God intends to give , he will give it at the door; but if God will not give, then what is the good of going a thousand kos for it?

Kos= about 2000 miles.

God is a giver.

God makes the egg to live.

Be up and doing and God will bless you.

Kashmiri

To be continued……………………

Tags- God, proverbs, part 2, Hebrew, Talmud, Kashmiri, Hindustani, Italian,

தமிழ் மன்னர்கள் இமய மலைக்குச் சென்றது ஏன்?  தங்கமோ தங்கம்! (Post.14,763)

PICTURE- அஷ்டமா சித்தி உபதேசித்த  படலம் 

Written by London Swaminathan

Post No. 14,763

Date uploaded in London –  15 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

இமய மலையின் புனிதம் கருதியும்,உலகிலேயே உயர்ந்த மலை என்பதாலும் தமிழ் மன்னர்கள் இமய மலைக்குச் சென்றனர் என்பது உண்மையே. அதுமட்டுமல்ல, அவர்களுக்கு பூகோள அறிவும் இருந்ததால் அதுதான் நாட்டின் வட எல்லை என்பதையும் அறிந்தனர்;  பூமியை அளக்கும் அளவுகோல் போல இரண்டு கடல்களையும் தொட்டுக்கொண்டிருக்கும் இமயம் என்று குமார சம்பவத்தில் காளிதாசன் பாடியிருப்பதை சங்கத் தமிழ்ப் புலவர்கள் நன்கு அறிந்து இருந்தனர். இன்று நாம் இமயம் முதல் குமரி வரை என்று சொல்கிறோம் அந்தக்காலத்தில் இதை சம்ஸ்க்ருத மொழியில் ஆசேது ஹிமாசலம் என்று சொன்னார்கள் சேதுக்கரை முதல் இமயம் வரை என்பது இதன் பொருள்.

இதையெல்லாம்விட முக்கிய காரணம் இமய மலையில் அந்தக் காலத்தில் தங்கம் கிடைத்தது என்பதாகும். மஹாபாரதத்தில் அர்ஜுனன் உத்தரகுருவுக்குச் சென்று தங்கம் கொண்டுவந்ததை தருமன் ராஜ சூய யாகம் நடத்திய நிகழ்ச்சியில் படித்தோம்; தமிழ் மன்னர்கள் இமய மலைக்குச் சென்று தங்கம் கொண்டு வந்ததை திருவிளையாடல் புராணத்தில் (தி.வி.பு.) பரஞ்சோதி முனிவர்  சொல்கிறார் .

மேருவைச் செண்டாலடித்த  படலத்தில் பாண்டியன் செய்த சாதனைகளை பரஞ்சோதி வருணிக்கிறார் ; உக்கிரகுமாரனும் காந்தி மதியும் அகஸ்தியர் சொன்ன சோமவார வீரத்தை அனுஷ்டித்ததால் பிறந்தவன் வீர பாண்டியன் . அவன் காலத்தில் மழையின்றி வறட்சி ஏற்படவே உக்கிரகுமாரன் சோதிடர்களைக் கலந்தாலோசித்தான்; நவக்கிரகங்களின் நிலையே இதற்கு காரணம் என்று சோதிடர்கள் கூறினார்கள் . மன்னன் உக்கிரகுமாரன் கவலையுடன் உறங்கியபோது சிவபெருமான் ஒரு சித்தர் வேடத்தில் கனவில் தோன்றி , மேரு மலையில் ஒரு குகையில் தங்கம் நிறைய இருக்கிறது; நீ அங்கே சென்று மேரு மலையின் செருக்கினை அடக்கி தங்கத்தைக் கொண்டுவா என்று சொன்னார். .

உக்கிரகுமார பாண்டியன் பெரும்படைகளுடன் பல தேசங்களைக் கடந்து சென்றான்; இந்த இடத்தில் பரஞ்சோதி அக்கால பூகோள விஷயங்களை வருணிக்கிறார். மேருவுக்குச் சென்ற பாண்டியன், மலை அரசன் வர தாமதிக்கவே, அதைச் செண்டால் அடித்தான்; அது உடனே நடுங்கி அவன் முன்  தோன்றி வந்த காரணத்தை வினவியது ; திரவியம் வேண்டி வந்தேன் என்று பாண்டியன் செப்பவே மாமரத்தின் கீழே தங்கம் புதையுண்டு கிடைக்கிறது என்று மேரு மலை தகவல் கொடுத்தது ; அவனும் அங்கே சென்று பாறைகளைத் தோண்டி தங்கத்தை  எடுத்துக்கொண்டு மீதியுள்ளதை பாறைகளால் மூடி அவை தனது என்று சீல் / முத்திரை வைத்தான் . பின்னர் நாட்டிற்கு வந்து மக்களுக்குத் தங்கத்தைக் கொடுத்து வறுமையை நீக்கினான்; மழை பெய்து வறட்சி நீங்கியது

என் கருத்து

மன்னன் என்பவன் கடவுளுக்கு இணையானவன் என்பதால் கோயில் என்னும் சொல் இருவர் இருப்பிடத்துக்கும்  பயன்படுத்தப்பட்டது; அவனுடைய கடுமையான முயற்சிகளை கடவுளின் மீது ஏற்றி அவன் வேல் விட்டவுடன் கடல் பின்னால் போனது, அவன் செண்டால் அடித்தவுடன் மேரு தங்கம் கொடுத்தது என்றெல்லாம் எழுதினார்கள்.   இவை மரபுச் சொற்றோடர்கள் IDIOMS AND PHRASES; அகத்தியர் விந்திய மலையைக் கர்வ பங்கம் செய்தார் அகத்தியர் கடலைக்  குடித்தார் என்பதெல்லாம் சங்கேத மொழிகள் SYMBOLIC LANGUAGE; அந்தக் காலத்தில் இதைப் படித்தவர்களுக்கு இதன் பொருள் விளங்கியது ; இன்று நமக்கு இவை புதிர்களாகத் தோன்றும்.

****

PICTURE- ரசவாதம் செய்த படலம் 

சீல் SEAL வைக்கும் வழக்கம் !

முத்திரை பதிக்கும் வழக்கத்தைத் தமிழர்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்தினார்கள். விடை இலச்சினை இட்ட படலத்தில் பாண்டியன் சீல் பற்றி வருகிறது. புகார் / காவேரிப் பூம்பட்டினம்  வழியே வந்த வெளிநாட்டுச் சரக்குகளுக்கு  சுங்க வரி செலுத்திய பின்னர் சுங்கம் கொடுத்த முத்திரை பதிக்கப்பட்டதை சங்கத் தமிழ் நூல்கள் இயம்புகின்றன . சிந்து சமவெளியிலும் ஏராளமான முத்திரைகள் கிடைத்துள்ளன . பாரதத்தின் எல்லா மன்னர்களும் கொடிகளையும் சின்னங்களையும் பயன்படுத்தியதை நம்முடைய இதிஹாச புராணங்கள் செப்புகின்றன.

*****

சங்க இலக்கியத்தில் தி.வி.பு . புலவர்கள்

இடைக்காடனார் – பாடல்கள் நற்றிணை 142, 221, 316;

அகநானூறு139, 194, 274, 284, 304, 374; புறநானூறு-42;  குறுந்தொகை-251

மதுரைப்பேராலவாயார்- புறநானூறு 247, 262; இவர் நற்றிணையில் இரண்டு பாடல்களையும் அகநானூற்றில் இரண்டு பாடல்களையும் பாடிப் பாண்டிய மன்னனைப் புகழ்ந்துள்ளார் . இவரே இறையனார் என்றும் உரைப்பர்; இவர் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் காலத்தவர் . அறிஞர்கள் வேண்டியதையும் மீறி தீக்குள் பாய்ந்து உயிர் நீத்த பூதப்பாண்டியன் மனைவி பாடிய பாடல்களும் புறநானூறு.246,247 ஆராய்ச்சிக்குரியவை

சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி – புறநானூறு16, 125, 367, 377; புறநானூறு 367 பாடலில் யாகத்துக்கு வந்த பாண்டியன் கானப்பேர் தந்த உக்ரப் பெருவழுதியையும் சேரமான் மாரிவென்கோவையையும் அவ்வையார் பாடியுள்ளார்.

வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி–  புறநானூறு-58

உக்ரப் பெருவழுதி- நற்றிணை 98.

உக்கிர, பூத என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருப்பதையும் உக்கிர குமார பாண்டியன் பற்றி பரஞ்சோதி பாண்டியதையும் சேர்த்து ஆராய வேண்டும்.

****

PICTURES-நாகம் எய்த படலம் 

மாயப்பசுவை வதைத்த படலம் 

துலாபாரம் பதினாறு வகை தானங்கள் பற்றி தி.வி.பு. பல படலங்களில் குறிப்பிடுகிறது இவை பாண்டியர் செப்பேடுகளிலும் இருப்பதால் தொல்பொருட் துறை சான்றும் கிடைத்துவிட்டது.

தேவர்களை வேண்டி தீயில் வேட்பது அறக்கள வேள்வி.

நான்மறையாளரைச் சுற்றமாகக் கொண்டு, அடிபணிந்த அரசர் ஏவல் செய்ய, தலையங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அறக்கள வேள்வி செய்தான் என மாங்குடிக்கிழார் கூறுவார் (புறம்.29)

பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி பல யாகங்களைச் செய்ததால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப்பெயர் பெற்றான் (புறம்.15)

 பல்யானை செல்கெழுகுட்டுவன் கௌதமனாருக்காக பார்ப்பாரில் பெரியோரைக் கேட்டு பத்து பெருவேள்வி வேட்பித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 3)

 பெருஞ்சேரல் இரும்பொறை வேள்விக்குரிய விதிகளைக் கேட்டு வேள்வி வேட்பதற்கு முன், தான் இருக்க விரதங்களை முறைப்படி முடித்து வேள்வி முடித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 74-1-20 

இளஞ்சேரல் இரும்பொறை முறைப்படி சாந்தி வேட்டான். சேரமான் செங்குட்டுவன் வஞ்சிமாநகரின் குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த இடத்தில் வேள்விச்சாலை அமைத்தான். வேள்விமாக்களை கேட்டு  உரிய முறையில் ராஜசூயம் வேட்டான. அதை ஒட்டி சிறையிருந்த எல்லாக் கைதிகளையும் விடுதலை செய்தான். வந்திருந்த மன்னருக்கேற்ப வரிசை முடித்தான்.

பாண்டியர்களில் அரிகேசரி மாறவர்மன் ஹிரண்யகருப்பம், துலாபாரம், பகு சுவர்ணம் என்பவற்றைச் செய்தான். 

தேர்மாறன் என்னும் பாண்டியனும் எண்ணிறைந்த கோசஹஸ்ரமும், ஹிரண்யகருப்பமும், துலாபாரமும்,  செய்தான் என்று வேள்விக்குடி செப்பேடுகள் குறிக்கின்றன.

மாறவர்மன் இராஜசிம்மன் துலாபாரம் செய்தான் என்றும் சின்னமனூர் செப்பேடு கூறுகிறது.

 வேள்விக்குடி , சின்னமனூர், தளவாய்புரம் செப்பேடுகள் மற்றும் இந்தோனேஷியாவின் அடர்ந்த காட்டுக்குள் கிடைத்த நாலாம் நூற்றாண்டு  கல்வெட்டுகள் ஆகியவற்றை பின்னணியில் வைத்து ஆராய்ந்தால் பல புதிர்களை விடுவிக்கமுடியும் .

***

குலசேகரன்காலர்த்தில் மணவூர் தலைநகராக இருந்தது பின்னர்தான் தற்போதைய மதுரை உண்டானது . இந்த மணவூர் எது? எங்கே இருந்தது?

****

PICTURES- உலவாக்கிழி அளித்த படலம்  

வளையல் விற்ற படலம் 

அக்ஷய பாத்திரம் போல உலவாக்கிழி, உலவாக்கோட்டை பற்றி பரஞ்சோதி பாடியதும் சிறப்புக்குரியது  .

குல பூஷணன் காலத்தில் வறட்சி காரணமாக பிராமணர்கள் வெளியேறிய செய்தியை தி.வி.பு கூறுகிறது ;காசியிலிருந்து பிராமணர்களையும் காவிரிப்பூம்பத்தினத்திலிருந்து செட்டியார்களையும் அழைத்த செய்தி மக்கட் தொகை குடியேற்றத்தைக் காட்டுகிறது.

வங்கிய சேகரன் காலத்தில் ஜனத்தொகை பெருக்கத்தால் புதிய ஆலவாய் தோற்றுவிக்கப்பட்டது என்கிறார் பரஞ்சோதி.

மாணிக்கவாசகர் காலத்துக்கும் முன்னதாக சங்கப்புலவர் சண்டையிட்டதையும் மறைக்காமல் எழுதியுள்ளார் பரஞ்சோதி

ஆகவே சுனாமிஜனத்தொகை பிரச்சினைஅரசர்கள் படை எடுப்புகனவுகளின் பங்குவறட்சிவைகையில் பெருவெள்ளம்அற்புதங்கள்பிராணிகளுக்கும் கடவுள் அருள் புரிந்தது வரலாறுமக்கள் குடியேற்றம்இமயம் வரை பயணம் நவரத்தின சாஸ்திரம் சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் குதிரை சாஸ்திரம்தாவரவியல் அதிசயங்கள்அற்புதங்கள் யாக யக்ஞங்கள்  போன்ற ஏராளமான தலைப்புகளில் ஆராயப்பட வேண்டிய நூல் தி.வி.பு.

எல்லாவற்றுக்கும் மேலாக எல்லா தி.வி.பு. க்களும் சம்ஸ்க்ருத நூல்களின் மொழிபெயர்ப்பு என்பதால் மூலத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

PICTURE-மெய் காட்டிய படலம் 

இதற்கு மடாதிபதிகளும் ஆதீனகர்த்தர்களும் முயற்சி எடுக்க வேண்டும் .

சுபம்—

TAGS- தமிழ் மன்னர்கள், இமய மலை,சென்றது ஏன்?  தங்கம்

சிவபிரானையும் கங்கையையும் தன்னிடம் வரவழைத்த அபூர்வ கவிஞர்! (Post No.14,762)

picture- கவிஞர் வித்யாபதி சிலை

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,762

Date uploaded in London – 15 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

5-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

சிவபிரானையும் கங்கையையும் தன்னிடம் வரவழைத்த அபூர்வ கவிஞர்!

ச. நாகராஜன் 

பிரபல கவிஞர் வித்யாபதி எதிரே நின்ற சிறுவனைப் பார்த்தார்.

“என்ன வேண்டும் உனக்கு?” என்று கேட்டார். 

“ஒரு வேலை வேண்டும், ஐயா” 

“என்னிடம் ஏது வேலை?  நான் ஒரு கவிஞன். ஒலை., எழுதுகோல், எழுத்தாணி – இவை இருந்தால் போதும் எனக்கு. என்னிடம் ஏது வேலை?”

 “ஐயா அப்படிச் சொல்லாதீர்கள். ஓலைகளை நறுக்கி வைப்பேன். எழுத்தாணியைச் சீர்படுத்துவேன். மாதாஜிக்கு தேவையானதையும் கூடச் செய்வேன்.”

“சரி! உனக்கு என்ன வேண்டும். சம்பளம் எவ்வளவு எதிர்பார்க்கிறாய்?’
“ஐயோ, சம்பளமா! வேண்டவே வேண்டாம். இரண்டு வேளை சாப்பாடு, தங்க இடம். அது போதும்”

வித்யாபதி மனம் இரங்கினார்.

“உன் பெயர் என்ன?”

“உகனா”

“சரி, உகனா, உன் வேலையை ஆரம்பி”

 உகனா வேலையை ஆரம்பித்தான். அறைகள் சுத்தப்படுத்தபப்ட்டன. சுவடிகள் சரியாக அடுக்கி வைக்கப்பட்டன. மாதாஜியின் வேலையில் பாதி குறைந்து விட்டது.

ஒரு நாள் வித்யாபதி பயணமாகப் புறப்பட்டார். உகனாவும் கூட வந்தான்.

“நீ எதற்கு” என்று கேட்டார் வித்யாபதி.

 “நான் எதற்கா? பின் யார் உங்கள் பெட்டியைத் தூக்குவதாம்?”

 உகனாவும் கூடவே பெட்டியைத் தூக்கிக் கொண்டு சென்றான்.

 சிறிது நேரம் கழித்து வித்யாபதிக்கு களைப்பாக இருந்தது. ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார்.

“ஒரெ தாகமாக இருக்கிறது. உகனா!”

 “இதோ தண்ணீர் கொண்டு வருகிறேன். இங்கேயே உட்கார்ந்திருங்கள்”

என்ற உகனா சற்று தூரம் சென்றான்.

 தன் காலால் தரையை அமுக்கினான்.

 என்ன ஆச்சரியம். பூமி பிளந்து ஒரு நீரோடை உருவாகி ஓட ஆரம்பித்தது. அதிலிருந்து ஒரு குவளையில் நீரை எடுத்துக் கொண்டு சென்று வித்யாபதியிடம் கொடுத்தான் உகனா.

வித்யாபதி நீரைக் குடித்தார்.. கங்கை ஜலமோ? தேவாமிர்தம் தோற்றது!

“உகனா! நீ யார் உண்மையைச் சொல்!” என்றார் வித்யாபதி.

 “அட, இந்த நீர் இனிக்கிறது. அவ்வளவு தான்!” என்றான் உகனா.

 “அதிருக்கட்டும். நீ யார்? உண்மையைச் சொல்!” என்றார் வித்யாபதி மீண்டும்.

 சிவனார் மனம் கனிந்தார். உகனா சிவபிரான் தோற்றத்தில் காட்சி அளித்தார்.

 வித்யாபதி திடுக்கிட்டார். “இதுவா நான் பூஜை செய்த லட்சணம்! சிவபிரானையா நான் வேலை வாங்கினேன்?”

 விக்கி விக்கி அழுதார் வித்யாபதி.

 “வித்யாபதி! கவலைப்படாதே! உனக்கு இன்னும் நான் வேலைக்காரனாக இருந்து சேவை செய்யத் தயார். நானாகத் தான் உன்னிடம் வந்தேன். உன்னுடைய அற்புதமான பாடல்களை நீ பாடி நான் கேட்க வந்தேன். உனக்கு தரிசனம் தந்தாயிற்று. நான் வருகிறேன்.”

 “ஐயோ! அது முடியவே முடியாது. இது தான் பக்தியின் பலன். இது தான் எனது பூஜை பலித்ததற்கு அடையாளம். நீங்கள் என்னை விட்டுப் போகவே கூடாது.”

 “சரி, வித்யாபதி! நான் சம்மதிக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நான் உகனாவாகத் தான் இருப்பேன். நான் யார் என்பதை யாரிடமும் நீ சொல்லக் கூடாது.”

 வித்யாபதி சம்மதித்தார்.

உகனா வித்யாபதியுடன் சேர்ந்து வாழ அவர் தனது பூஜையை மகிழ்ச்சியுடன் செய்து வந்தார்.

 ஆனால் ஒரு நாள் வித்யாபதியின் மனைவி மிஸ்ரைன் ஏதோ ஒரு காரணத்தினால் கோபம் கொண்டு உகனாவை அடித்து விட்டாள்.

 இதைப் பார்த்த வித்யாபதி துடிதுடித்து விட்டார்.

 “ஆஹா! இவரை யார் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். நாம் ஆராதிக்கும் தெய்வத்தையே நீ அடித்து விட்டாயே” என்று உரக்கக் கத்திப் புலம்பினார்.

 அவ்வளவு தான்! அந்தக் கணமே உகனா மறைந்து விட்டான்.

கொடுத்த வாக்கை மீறியதால் உகனாவை இழந்த வித்யாபதி பெரும் துக்கத்தை அடைந்தார்.

 பாடினார்:

“உகனா! தும் பின் ரஹ்யோ ந ஜாய்!”

 “உகனா நீ இல்லாமல் எப்படி வாழ்வது?”

  அப்புறம் உகனாவைக் காணவே காணோம்!

 வரலாறு கூறும் செய்தி இது தான்:

 பின்னர் கங்கா நதி தனது போக்கை மாற்றிக் கொண்டு நான்கு மைல்கள் கடந்து வித்யாபதி வீட்டிற்கு வந்தது. அவரது பக்தியை உலகிற்கு உணர்த்தியது.

 கங்கையையும் சிவபிரானையும் தன்னிடம் வரச் செய்த சிவ பக்தரான வித்யாபதி ஒரு அபூர்வ கவிஞர் தான்!

 பீஹாரில் வாழ்ந்த கவிஞரான வித்யாபதி வாழ்ந்த காலம் 1352-1448.

 இவர் 96 வயது வரை வாழ்ந்து நூற்றுக்கணக்கான பக்திப்பாடல்களை  இயற்றியுள்ளார். இவரது வாழ்க்கை சரிதம் பல அபூர்வ சம்பவங்களைக் கொண்டதாகும்

.******