GNANAMAYAM 6TH JULY 2025 BROADCAST PROGRAMME SCHEDULE

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

Prayer by Mrs Jayanthi Sundar Team: Mrs Sreelatha Sainath

***

Vaishnavi Anand and Latha Yogesh from London present World Hindu News in Tamil

****

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on – Pandikodumudi Temple

****

Talk by Mr. S Nagarajan from Bengaluru

Topic- Tamil Saint Karaikal Ammaiyar

****

Book Review by Mrs Gomathy Karthikeyan from Chenna.

*****

SPECIAL EVENT-

Talk by Mr T .R . Ramesh on Periya Puranam  in Tamil.

Topic – Thaduththu Atkonda Puranam .

Mr T R Ramesh is the son of   Sekkizhar Adippodi Dr T N Ramachandran and  

PRESIDENT, HINDU TEMPLE WORSHIPPERS COMMITTEE.

****** 

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சிநிரல் ஞாயிற்றுக்கிழமை 8-6-2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழு- திருமதி ஸ்ரீலதா சாயிநாத்

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும்  லதா யோகேஷும்  வழங்கும் செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

சொற்பொழிவு

தலைப்பு- பாண்டிக்கொடுமுடி ஆலயம்

****

சொற்பொழிவு : எஸ் நாகராஜன்பெங்களூரு

தலைப்பு — காரைக்கால் அம்மையார்

****

நூல் விமர்சனம்- சென்னையிலுந்து திருமதி கோமதி கார்த்திகேயன்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு

திரு T R R ரமேஷ் S/o Sekkizhar Adippodi Dr T N Ramachandran 

PRESIDENT, HINDU TEMPLE WORSHIPPERS COMMITTEE 

தலைப்பு- பெரிய புராணம்/  தடுத்தாட்கொண்ட புராணம்

****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham— 

Tags-Gnanamayam Broadcast, July 6, 2025, Programme,

திருவிளையாடல் புராணத்தில் சில அதிசயச் செய்திகள்- PART 4 (Post No.14,725)

picture– கடல் சுவற  வேல் விட்ட படலம் , 

Written by London Swaminathan

Post No. 14,725

Date uploaded in London –  4 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவிளையாடல் புராணத்தில் (தி.வி.பு) மேலும் சில அதிசயச் செய்திகளைக் காண்போம் .

சுந்தரேச்வரனுக்கும் தடாதகை என்னும் பெயர்கொண்ட அங்கையற்கண்ணிக்கும் திருமணமானபோது மலையத்வஜ பாண்டியன் உயிரோடு இல்லை. காஞ்சன மாலை தடாதகையுடன் எழுகடலுக்கு வந்து ஸ்நானம் செய்வதற்கு முன்னர் கடலில் குளிப்பதற்கான விதி என்னவென்று கேட்க முனிவர்கள்  சொல்கிறார்கள் – கணவன் கையைப்பிடித்துக்கொண்டு கடலில் ஸ்னானம் செய்யவேண்டும் அப்படியில்லாவிடில் புத்திரன் கைகளை பிடித்துக்கொண்டு ஸ்நானம் செய்யலாம்; அவரும் இல்லாவிடின் பசுவின் வாலைப்  பிடித்துக்கொண்டு ஸ்நானம் செய்யவேண்டும்

அடடா எனக்கு கணவனும் இல்லை; புத்திரனும் இல்லையே, பசுவின் வால்தான் எனக்குக் கிடைத்த கதியா என்று காஞ்சன மாலை வருத்தமுற்றபோது தடாதகையே சிவனைப் பிராத்தனை செய்ய, மேலுலத்தில் இந்திரனோடு அமர்ந்திருந்த மலையத்வஜன் கீழ் உலகத்துக்கு வருகிறான் . மனைவி காஞ்சன மாலையின் கரம்பிடித்து ஸ்நானமும் செய்தான் என்ற செய்தியை மலையத்வஜனை அழைத்த  படலத்தில் பரஞ்சோதியார் கூறுகிறார் .

****இங்கு இரண்டு மூன்று சுவையான செய்திகளைக் கூறுகிறேன்:

ஒரு சுவையான செய்தி! மதுரையில் இன்றும் எழுகடல் தெப்பக்குளம் உள்ளது ; கடைகள் சூந்திருப்பதால் கேட்பாறற்றுப் போய்விட்டது இது மதுரையில் மட்டுமல்ல; ஏழுகடல் குளங்கள் வட நாட்டிலும் உண்டு ; ஆக இது தமிழர் கண்டுபிடித்த புது வழக்கம் இல்லை ஒரே இடத்தில் ஏழு கடல் தீர்த்தங்களும் கொண்டு வந்து அடையாள பூர்வமாகக்கொட்டி இப்படி அமைத்தனர் போலும்.

மேலும் பாபர் என்ற மொகலாய மன்னன், பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு பட்டமேற்கும் ஓவியத்தினை இந்த பிளாக்கில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியீட்டுக்கு கட்டுரை எழுதினேன். இந்துக்கள் ஆண்ட வெளிநாட்டிலிருந்து வந்த முஸ்லீம்கள் மொகலாயர்கள்; அதனால்தான் பாபர், அக்பர் போன்றோர் இடத்தில் இந்துமதம் நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமிருப்பதை பல நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.

ஆக இறந்தோர் பூமிக்கு வருவது , குறிப்பாக, திதி செய்யும் நாட்களிலும், மாளய பட்சம் என்னும் 15 நாட்களிலும் , வருவது உண்மையே!  பசுவின் புனிததத்தை ஆரம்ப கால மொகலாயர்கள் உணர்ந்து போற்றியதும் உண்மையே.

****

picture–தடாதகை / மீனாட்சி திருமண படலம்.

ராமனும் இவ்வாறு தசரதனைக் கண்ட செய்தி ராமாயணத்தில் வருகிறது ; இதிலிருந்து இறந்த புண்ணியசாலிகள் இந்திரலோகத்தில் புண்ணியம் தீரும்வரை இருப்பார்கள் என்ற இந்துக்களின் நமபிக்கை உறுதிப்படுத்தப்படுகிறது ; இறந்தவர்கள் வேறு ஒரு உலகத்தில் உயிருடன் வளரும் செய்தியை ஞான சம்பந்தரின் பூம்பாவை சம்பவமும், சுந்தரர் முதலை வாயிலிருந்து இறந்த பிராமணச் சிறுவர்களைக் கொண்டுவந்த சம்பவமும் ஒரே நாளில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் ஸ்பேஸ் ஷட்டிலில் SPACE SHUTTLE சென்று இறந்த பிராமண குழந்தைகளை மீட்டு வந்த செய்தியை நம்மாழ்வார் பாடியதும் காட்டுகின்றன  பல உலகங்கள் இருக்கின்றன என்ற விஞ்ஞான உண்மையை இந்துக்கள்தான் முதலில் அறிவித்தனர். இதை மேல் நாட்டு விஞ்ஞானிகள் சொல்லும் காலம் விரைவில் வரும்.

******

மதுரை மீது  சுனாமி  தாக்குதல்கள் !

முன் காலத்தில்  இருந்த தென் மதுரை, கபாட புரம், குன்றின் மீதிருந்த லங்காபுரி ஆகியன கடலுக்குள் சென்றதை பல நூல்கள் குறிப்பிடுவதால் நாம் அறிகிறோம் ; இதனால்தான் மணலூரில் தற்காலிகமாக முகாமிட்டிருந்த பாண்டியர்கள் தற்போதைய மதுரையை நிறுவினார்கள். அதற்கு தனஞ்ஜயன்  என்ற செட்டியார், கடம்பவனக் காட்டில் இரவு நேரத்தில் கண்ட அதிசயக்காட்சியே காராணம் என்பதையும் தி வி பு கூறுகிறது   தற்போதைய மதுரையிலிருந்து சுமார் நூறு மைல்கள் சென்றால்தான் கடலினைக் காணமுடியும் . தி வி பு.வி ல் இரண்டு சுனாமி தாக்குதல்களை மதுரைக் காண்டத்தில் காண்கிறோம்

கடல் சுவற வேல் விட்ட படலம் என்பது மிகவும் துவக்கத்திலேயே வந்து விடுகிறது; பின்னர் வருணன்விட்ட கடலை வற்றச் செய்த படலம் வருகிறது நமது காலத்திலேயே பெரும் புயல் ஒன்றில் பாம்பன் பாலம் அழிந்து இப்போதைய புதிய பாலம் உருவாக்கப்பட்டது . இந்த இரண்டு படலங்களும் முக்கியமானவை ஏனெனில் வடிவலம்ப பாண்டியன் பற்றிய குறிப்புகள் வேறு இடத்திலிருந்து கிடைக்கிறது. ஆக இந்த இரண்டு பாண்டியர்களும் ஒன்றா என்று ஆராய்வது அவசியம்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற விஷயத்தையும் புறநானூற்று ப்பாடல் குறிப்பிடுகிறது. ஆகையால் இவை அனைத்தையும் ஒருங்கே ஆராய்ந்தால் பல உண்மைகள் வெளிப்படும் பிளினி என்ற வெளிநாட்டு யாத்ரீகர் எழுதிய குறிப்பினால் மாதுறைத் தலைநகர் மாற்றப்பட்டசெய்தியும் நமக்கு கிடைக்கிறது மேலும் ஆராய்வது அவசியம் 2200ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் சுனாமி ஏற்பட்ட செய்தியை அறிவியல் மூலம் அறிய முடிகிறது இலங்கை நூல்களிலும் இது பற்றிய குறிப்புகள் உண்டு.

கடலுக்கு அடியில் சென்ற துவாரகாபுரியை அண்மைக்காலத்தில் கண்டுபித்தது போல நாம் கடலுக்குள் சென்ற குமரிக்கண்டம், கபாட புரம், குன்றின் மீதிருந்த லங்காபுரி ஆகியவற்றை கடலியல் தொல்பொருட்த் துறை மூலம் ஆராய வேண்டும்.

*****

படம்–எழுகடல்  அழைத்த படலம், 

அம்புகளில் பெயர் எழுதும் வழக்கம் அம்பில் ராம நாமம் !

மன்னர்கள்  வைத்திருக்கும் அம்புகளில் அவர்கள் பெயர்களைப் பொறிப்பது வழக்கம் என்பதை ராமாயணம் நமக்குக் காட்டுகிறது; ஆகவே எழுதும் வழக்கமும், எழுத்துக்களும் ராமாயண காலத்திலேயே இருந்தது உறுதியாகிறது இதைத் திருவிளையாடல் புராண சுந்தர பேரம்பெய்த படலத்தில் காண்கிறோம், அப்படிப் பெயர்களை எழுதினால் அவைகளுக்குத் தனிப்பட்ட மந்திர சக்தி உண்டு என்ற நம்பிக்கை இருந்ததையும் அறியமுடிகிறது

வாலி   பார்த்த அம்பில் ராம என்ற நாமத்தினைக் கண்ட செய்தி கம்ப ராமாயணத்தில் வருகிறது :

மும்மைசால் உலகுக்கெல்லாம்

மூல மந்திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும்

தனிப் பெரும் பதத்தை, தானே

இம்மையே, எழுமை நோய்க்கும்

மருந்தினை இராமன் என்னும்

செம்மைசேர் நாமம் தன்னை

கண்களில் தெரியக் கண்டான்

—–வாலிவதைப் படலம், கம்ப ராமாயணம்

இராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம் என்பான் கம்பன். அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும். இராம என்ற சொல்லை, வாலி தனது மார்பில் பாய்ந்த அம்பில் கண்டான். அடடா! ராமன் கையினால் மரணம் சம்பவித்ததால் எனக்கு நேரடி மோட்சம்தான் என்று மகிழ்கிறான்.

தொடரும்………………………

TAGS- அம்புகளில் பெயர், மும்மைசால் உலகுக்கெல்லாம், சுனாமி தாக்குதல், திருவிளையாடல் புராணத்தில் , அதிசயச் செய்திகள்-4 , ஏழுகடல், இறந்தோர் பூமிக்கு வருதல்

உலகில் வலிமையானது எது? (Post No.14,724)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,724

Date uploaded in London – 4 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

28-6-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

உலகில் வலிமையானது எது?

ச. நாகராஜன்

எல்லா தேவதைகளும் தமக்குள் கூடிப் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு கேள்வி எழுந்தது.

உலகில் வலிமையானது எது என்பது தான் கேள்வி.

ஒவ்வொரு தேவதையும் ஒவ்வொன்றை வலிமையானதாகச் சொல்லவே அவர்களுக்குள் பலத்த விவாதம் எழுந்தது.

முடிவு எட்டவில்லை.

அனைத்து தேவதைகளும், ‘நம்மைப் படைத்த இறைவனையே கேட்டு விடுவோம்’ என்ற முடிவுக்கு கடைசியில் வந்தன.

அனைத்து தேவதைகளும் இறைவனைச் சந்தித்து தங்கள் கேள்வியைக் கேட்டன.

“கடவுளே! உலகில் பாறையை விட வலிமையானது ஏதாவது உண்டா?”

கடவுள் அவர்கள் கேட்டதற்கெல்லாம் உடனுக்குடன் பதில் கூற ஆரம்பித்தார்.

“ஏன் இல்லை? பாறையை இரும்பினால் உடைக்கலாமே!”

“அப்படியானால் இரும்பையே வலிமையானது என்று சொல்லலாமா?”

“இரும்பைத் தீயில் போட்டால் அது உருகி விடுகிறதே!”

“ஆக, தீயே வலிமையானது என்று சொல்லி விடலாமா?”

“கொழுந்து விட்டு எரியும் தீயைக் கூட நீர் அணைத்து விடுகிறதே!”

“அட, அப்படியானால் நீர் தான் வலிமையானது என்ற முடிவுக்கு வந்து விடலாமா?”

“நீரின் போக்கை நினைத்தபடி காற்று மாற்றுகிறதே. கடலில் நீரை அலையாக அங்கும் இங்கும் அலைக்கழிக்கிறது. ஏன் நீரைப் பொழியும் மேகத்தைக் கூட அது கலைக்கிறது; சேர்க்கிறதே!”

“அப்படியானால் காற்றை விட வலிமையானது ஏதாவது உண்டா?”

“உண்டு. அன்பான இதயம் தான் உலகிலேயே வலிமையானது.  வலது கை கொடுப்பதை இடது கைக்கும் கூடத் தெரியாதபடி அன்பான ஒரு இதயம் கொடுக்கிறது. அதுவே உலகில் வலிமையானது!”

தேவதைகள் வலிமையானது எது என்பதைத் தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் கலைந்து சென்றன.

இந்தக் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

நியூ ஹோப் கம்யூனிகேஷன்ஸ் (NEW HOPE COMMUNICATIONS) என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரியான டக் கிரீன் (DOUG GREENE)  தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு மூன்று  கொள்கைகளை முன் வைத்தார்.

அன்பாயிரு! அன்பாயிரு!! அன்பாயிரு!!! (BE KIND! BE KIND!! BE KIND!!!)

அவரது இந்த மூன்று கொள்கைகளைக் கேட்ட பணியாளர்கள் “அன்பாய் இருக்க ஆரம்பித்தார்கள்!”

ஆனால் தங்கள் எஜமானரைத் திருப்திப்படுத்த நேர்மையற்ற வழிகளையும் அவர்கள் கடைப்பிடித்து தாங்கள் “அன்பாய் இருப்பதை” நிரூபிக்க முயன்றார்கள்.

இதைப் பார்த்த அவர் தனது மூன்று கொள்கைகளைச் சற்று மாற்றினார் இப்படி:

அன்பாயிரு; நேர்மையாயிரு; அன்பாயிரு.

(BE KIND! BE HONEST!! BE KIND!!!)

கடைசியில் தனது மூன்று கொள்கைகளை முத்தாய்ப்பாக இப்படி மாற்றினார்:

அன்பாயிரு: நேரமையாயிரு; வேடிக்கையும் கொள்.

BE KIND! BE HONEST!! HAVE FUN!!!

உலகில் நமக்கு அறிமுகம் ஆகாதவர்களிடம் கூட எப்படி அன்பாய் நடந்து கொள்ள முடியும் என்பதைத் தெரிவிக்கும் நூற்றுக் கணக்கான நிஜ சம்பவங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

அதிசயிக்க வைக்கும் அந்த அன்பார்ந்த நெஞ்சங்களால் தான் உலகமே இன்று நன்றாக இயங்குகிறது!

***

Pictures of 2500 Indian Stamps!- Part 65 (Post No.14,723)

Written by London Swaminathan

Post No. 14,723

Date uploaded in London –  July 3, 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

PART 65

Stamps posted today include  YEAR 2005, 2006, STAMPS,

Pictures of 2500 Indian Stamps,

MIGHTY INDIAN NAVY, FOUR NAVAL SHIPS, 

ACTOR GEMINI GANESAN, A V MEYYAPPAN, PONGAL FESTIVAL, KRIPANANDA VARIYAR, DEVANEYA PAVANAR, N M R SUBBARAMAN, UMA MAHESWARAR, SIKH REGIMENT, DON BOSCO, KURINJI FLOWER,  TIBUNE NEWSPAPER, INDIAN FOLK DANCE, L V PRASAD, DELHI GIRLS HIGH SCHOOL, MADRAS UNIVERSITY, AGRI INSTITUTE, VELLORE MUTINY, INDIAN COMMERCE CHAMBER, KASHMIR HIGHCOURT, SANDALWOOD ELEPHANT, U VE SWAMINATHA IYER, MA PO SI, LALA DEEN DAYAL, SINGARAVELAR, BARTHALOMEW, G VARADAR, CALCUTTA GIRLS HIGHSCHOOL, CAVALRY

–subham—

Tags– 
Stamps posted today include YEAR 2005, 2006, STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 65 ,mint,

தேசீய கீதம் பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் 100 மார்க்! (Post No.14,722)

Written by London Swaminathan

Post No. 14,722

Date uploaded in London –   3  July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தேசீய கீதம் என்று சொன்னவுடன்  உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் (POINTS)  சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் (IT MUST MATCH OUR SELECTION GIVEN BELOW ) ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் . ஒவ்வொன்றுக்கும் பத்து மார்க்குகள். அல்லது என்று இருந்தால் ஏதேனும் ஒன்றினைக் கூறினாலும் பத்து மார்க்குகள் உண்டு!

****

SAMPLE ANSWER –Ten Marks

விடைகள்— 1. இயற்றியவர் ரவீந்திர நாத் தாகூர் — பத்து மார்க்குகள்.

2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10…………………………

****

விடைகள்—

1. இயற்றியவர் ரவீந்திர நாத் தாகூர் — பத்து மார்க்குகள்.

2. வங்காளி மொழியில் உள்ளது– பத்து மார்க்குகள்.

3. தாகூர் இயற்றிய நீண்ட பாடலில் இருந்த ஐந்து பாடல்களில் இது முதல் பாடல் –பத்து மார்க்குகள்.

4 . இதை அவர் டிசம்பர் December 11, 1911 இல் இயற்றினார் – பத்து மார்க்குகள்.

5. அரசியல் நிர்ணய சபை 1950 ஆம் ஆண்டு இதை இந்தியாவின் தேசீய கீதமாக அங்கீகரித்தது

–பத்து மார்க்குகள்.

6.  தேசீய கீதம் பாடும்போது நோயாளிகளைத் தவிர மற்ற எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் அல்லது இந்தியாவின் அனைத்து விதமான அரசு நிகழ்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெறுகிறது

 –பத்து மார்க்குகள்.

7.. இதில் வரும் இயற்கை இடங்கள் – கங்கை, யமுனை நதிகள், இமய விந்திய மலைகள் கடல்கள்

–பத்து மார்க்குகள்.

.8. இதில் தென்னாட்டு மாநிலங்களைத் திராவிட என்ற சொல் குறிக்கும் ஏனைய  மாநிலங்கள் : பஞ்சாப் , சிந்து,  குஜராத்,

மராட்டியம், ஒரிசா (உத்கலம்),வங்காளம், –பத்து மார்க்குகள்.

9.. இதை பாடுவதற்கு 52 வினாடிகள் ஆகும் அல்லது இப்பாடல் கீதாஞ்சலி என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது

10 .இதன் பொருள் அல்லது முழு கீதம் — பத்து மார்க்குகள்.

ஜன கண மன அதிநாயக ஜய ஹே

பாரத பாக்ய விதாதா

பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா

திராவிட உத்கல பங்கா

விந்திய ஹிமாசல யமுனா கங்கா

உச்சல ஜலதி தரங்கா

தவ சுப நாமே ஜாகே

தவ சுப ஆசிஸ மாகே

காஹே தவ ஜய காதா

ஜன கண மங்கள தாயக ஜய ஹே

பாரத பாக்ய விதாதா

ஜய ஹே ஜய ஹே ஜய ஹே ,

ஜய ஜய ஜய ஜய ஹே !

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற

நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்

மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.

வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்

எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்

இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்

வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு

வெற்றி! வெற்றி! வெற்றி!

–subham—

Tags—, 100மார்க்குகள், ரவீந்திர நாத் தாகூர் , தேசீய கீதம்

Why do Hindus call Sun with Different Names?(Post.14,721)

Written by London Swaminathan

Post No. 14,721

Date uploaded in London –  3 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Vedic poets give various names to the sun according to the task it accomplished; and each name reproduced the salient feature of the task.

The sun when rising was Mitra= friend.

As it advances in its journey, giving new lie it i  Savitar= bringing forth or leading the day; the vivifying sun;

When it collects the clouds and sends rain on the earth it is Indra; indu= drops.

The sun is Vishnu when it makes “three strides” in the vault of heaven, its position in the morning,  at noon, and in the evening;

It is Varuna – the all-embracing,  when it envelops in clouds as in a shroud, and the sky darkens.

Some phenomena descended on man from above, such as thunder bolts, winds, storms; the storms that came unexpectedly dealing destruction as they passed received the name of Maruts—from the root mar- and with the meaning of those who strike or beat to death; (My comments- Murder is derived from this Sanskrit root)

The thunder was called Rudra= he who roars.

The wind was Vayu= he who blows.

All these names indicated that which could be seen and that which could be heard; the invisible things remained unnamed.

This is Moncalm’s interpretation in his book THE ORIGIN OF THOUGHT AND SPEECH, 1905

He finishes his book with the following lines,

“We are men-  but the type of the genus homo been realised ? is it impossible?

It has been undoubtedly proved that the man is free in certain directions, and not in others; happily, he is not free not to be a man.”

He begins his book with the following lines,

“When opening my eyes in the morning , and whilst still struggling with an inclination to sleep, I review the day and what it will have in store for me; but the pictures drawn are confused, and my will takes no part in it.

(When I read the beginning and the end, I browsed through the book and found Vedic Hymns in it.)

–subham—

Tags- names of Vedic Gods, Sun, Tasks

திருவிளையாடல் புராணத்தில் சில அதிசயச் செய்திகள்-3 (Post.14,720)

picture– எல்லாம் வல்ல சித்தரானது

Written by London Swaminathan

Post No. 14,720

Date uploaded in London –  3 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வாட் போட்டி, பாட்டுப் போட்டியில் இலங்கைப் பாடகி, வட நாட்டுப் பாடகர்

அந்தக் காலத்தில் பல நாட்டுப் பாடகர்களும் வீரர்களுக்கும் தமிழ் நாட்டுக்கு வந்து அரசவைக்குள் நுழைந்து தைரியமாக சவால் விட்டதை திருவிளையாடல் புராணம் (தி வி பு ) காட்டுகிறது

பாணபத்திரரின் மனைவிக்கு சவால் விடுத்தது இலங்கைப் பாடகி!  பின்னர் அவள் தோற்றுப் போனாள் 

வாட் போட்டி, பாட்டுப் போட்டியில் இலங்கைப் பாடகி, வட நாட்டுப் பாடகர்

இதே போல கரிகாலன் காலத்துப் புலவன் ஒருவன் ராஜ சேகர பாண்டியன் அவைக்கு வந்து எங்கள் கரிகாலனுக்கு 64 கலைகளும் தெரியும் உமக்குப் பரத சாஸ்திரம் தெரியுமா? என்று கேட்ட செய்தி கால் மாறி ஆடிய படலத்தில் வருகிறது.

வாட்போட்டியில் ஒருவன் சவால் வீட்டு, சிவபிரானே வந்து சண்டையிட்டது அங்கம் வெட்டிய படலத்தில் வருகிறது;  சங்க இலக்கியத்திலும் மல்யுத்த வீரர்கள்  தமிழ்நாட்டுக்கு வந்து மற்போர் புரிந்த செய்திகள் இருக்கின்றன . ஹேமநாத பாகவதர் வரகுணன் அவைக்கு வந்து சவால் விட்டதை திருவிளையாடல் திரைப்படம் மூலம் எல்லோரும் அறிவார்கள்.

****

கணவன் மனைவி பெயர்கள்

அக்காலத்தில் எல்லா ஜாதியினரின் குடும்பத்திலும் கணவன் மனைவி பெயர்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களாக இருந்ததைக் காட்டுகிறது.

மலையத்வஜன் மனைவி – காஞ்சனமாலா ; அவள் சூரசேன நாட்டுப் பெண்மணி;

அங்கயற் கண்ணி கணவன் – சுந்தரேசன் அல்லது சுந்தர பாண்டியன்.

உக்கிரகுமாரன் மனைவி பெயர்- காந்திமதி; அவள் சூரியகுல சோமசேகரனின் புதல்வி ;

உக்கிரகுமாரன் 96 அசுவமேதம் செய்ததாக பரஞ்சோதி சொல்வதால் இவனை முதுகுடுமிப்பெரு  வழுதியுடன் ஒப்பிடலாம். ஏனெனில் காளிதாசனும் ரகுவம்சத்தில் சுயம்வர சபையில் பாண்டியமன்னனை அறிமுகப்படுத்தும்போது இவன் அகஸ்திய முனிவருடன் தொடர்புடையவன் என்றும் யாகத்தின் அவப்ருத ஸ்நானத்தால் எப்போதும் நனைந்த துணியுடையவன் என்றும் கூறுகிறாள் தோழி.

இதிலிருந்தது சங்க காலத்துக்கு  முன்னர் வாழ்ந்த காளிதாசனுக்கும் பாண்டியன் யாகம் செய்த செய்தி பிரபலமானது தெரிகிறது ;மேலும் ஆலவாய்  (உரகபுரம்) என்பதையும் குறிப்பிடுகிறான் காளிதாசன் !

விருத்த குமாரன் பாலன் ஆகிய படலம் ஒன்றினை மட்டுமே நால்வரும் — அப்பர்- சம்பந்தர் சுந்தர், மாணிக்க வாசகர்—பாடினார்கள்; இதில் வரும் பிராமண பெயர் விரூபாக்ஷன்.

காரைக்கால் அம்மையார் காலத்தில் புனிதவதி, பரமதத்தன் அப்பர் காலத்தில் திலகவதி தருமசேனர் இருந்ததால் இதில் வியப்பில்லை அவர்கள் பிராமணர்கள் அல்ல.

உலவாக்கோட்டை அருளிய படலத்தில் வரும் பெண்ணின் பெயர் தருமசீலை ; அவள் ஜாதியில் வேளாளர் ;

மாமனாக வந்து வழக்குரைத்த படலத்தில் வரும் செட்டியார் பெயர்கள் தனபதி – சுசீலா;

வங்கிய சூடாமணி காலத்து பிராமணன் பெயர் தருமி; அவனை அப்பரும் தேவாரத்தில் பாடியுள்ளார்

சங்கத்தார் கலக்கம் தீர்த்த படலத்தில் வரும் செட்டியார் பெயர்கள் தனபதி- குணசாலினி

பிட்டு விற்ற கிழவியின் பெயர் வந்தி.  இன்னொரு படலத்தில் சுக்லன்- சுகளை என்ற கணவன்- மனைவி பெயர்கள் வருகின்றன

***

காப்பி அடித்த புஸ்தகங்கள்

நம்பி எழுதிய நூலுக்கான மூலம் சாரசமுச்சயம் என்னும் புஸ்தகம் கிடைக்கவில்லை;ஆதிசங்கரர்  குறிப்பிடும் சுந்தர பாண்டியமும் கிடைக்கவில்லை.. ஸ்கந்த புராண ஒரிஜினலை வைத்து ஹாலாஸ்ய மாஹாத்ம்யம், சிவலீலார்ணவம் முதலிய சம்ஸ்க்ருத தி வி பு. கள் எழுதப்பட்டன. அதிலிருந்து வந்ததே பரஞ்சோதியாரின் தி.வி.பு. ஆகவே சம்ஸ்க்ருத மூலங்களை ஆராய்வது முக்கியம்.

உலவாக்கோட்டை அருளிய படலத்தில்……

****

உலகின் முதல் சிபாரிசுக் கடிதம்

திருமுகம் கொடுத்த படலம் மிக முக்கியமானது; இதை சம்பந்தரும் குறிப்பிடுவதால் அவருக்கு முந்திய காலத்தில் நடந்த சம்பவம் இது ; இதில்தான் சிவ பெருமான் எழுதிய சிபாரிசுக் கடிதம் வருகிறது. சேராமானுக்கு சிவன் எழுதிய இந்தக் கடிதம்தான் உலகின் முதல் ரெக்கமண்டேஷன் லெட்டர் :இதோ அந்தப் பாடல்

பதினொன்றாந் திருமுறை- திருவாலவாயுடையார் அருளிச் செய்த 1, திருமுகப் பாசுரம்-

1.மதிமலி புரிசை மாடக் கூடற்

பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற(கு)

அன்னம் பயில்பொழில் ஆல வாயின்

மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்

5.பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்(கு)

ஒருமையின் உரிமையின் உதவி. ஒளிதிகழ்,

குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்

செருமா உகைக்கும் சேரலன் காண்க;

பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்

10தன்போல் என்பால் அன்பன்தன்பாற்

காண்பது கருதிப் போந்தனன்;

மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.

சிறப்புரை: ‘கூடற் பதிமிசை நிலவு ஆலவாயில் மன்னிய சிவன் யான் மொழிதரும் மாற்றம் சேரலன் காண்க, அம்மாற்ற மாவன, – பாணபத்திரன் தன்னைப் போலவே என்பால் அன்பன் என்பதும் அவன் தன்னைக் காணுதலைக் கருதித் தன்பாற் புகுந்தனன் என்பதும், அவனுக்கு மிகுந்த பொருளைக் கொடுத்து மீண்டு வரும்படி விடை கொடுத்து அனுப்புதல் என்பதுமாகும் ..

முதல் அடி தலச் சிறப்புக் கூறியது. அடுத்த இரண்டடிகள் அத்தலத்தில் உள்ள கோயிற் சிறப்புக் கூறியன. ஐந்து, ஆறாம் அடிகள் சேரலனது கொடைச் சிறப்புக் கூறியன. ஏழு, எட்டாம் அடிகள் அவனது வெற்றிச் சிறப்புக் கூறியன. ஒன்பது, பத்தாம் அடிகள் பாணபத்திரனது அன்புடைமை கூறியன. இறுதி இரண்டடிகள் ஆணை கூறியன.

‘இப் பாசுரத்தில் குறிக்கப்பட்ட சேரலன் யாவன்’ என்னும் ஆராய்ச்சியில் கருத்து வேறுபாடுகள் உள. பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற் புராணத்துள் இப் பாசுரத்திற்கு குறிக்கப்பட்ட பாணபத்திரை வரகுண பாண்டியன் காலத்தவராகக் கூறினார். ‘சுந்தரர் காலத்துப் பாண்டியன் வரகுணன்’ என்பதற்கு நூற்சான்றோ, வரலாற்றுச் சான்றோ எதுவும் இல்லை.

பரஞ்சோதி முனிவர்க்கு ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகட்கு முற்பட்டவராகிய சேக்கிழார், ‘இப்பாசுரத்தில் குறிக்கப் பட்ட சேரலன் சேரமான் பெருமாள் நாயனாரே’ எனத் திட்டமாக வரையறுத்து, இத்திருமுகப் பாசுரத்தைக் கண்டு, சேரர் பெருமான் பாண பத்திரரைப் பெரும் பக்தியோடும், சிறப்போடும் வரவேற்று வழிபட்டுப் பெரும்பொருள் கொடுத்துப் பாசுரத்தில் – வரவிடுப்பதுவே – என்று இருத்தலால் பத்திரரைத் தம்மிடத்தே இருத்திக் கொள்ள மாட்டாது விடை கொடுத்து விடுத்தார்’ என இப்பாசுர வரலாற்றினைக் கழறிற்றறிவார் புராணத்துள் பன்னிரண்டு பாடல்களால் விரித்துரைத்தார். ‘சேரமான் பெருமாள் நாயனார்’ சுந்தரர்க்குத் தோழர் என்பது நன்கறியப்பட்டது.

மறைமலை அடிகளார் தமது, ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்னும் நூலில், மாணிக்க வாசகர் மூவர்க்கு முற்பட்டவர்’ என்னும் தமது வாதத்தை நிலை நிறுத்தற் பொருட்டுப் ‘பெரிய புராணத்துள் திருமுகங் கொடுத்த வரலாற்றைக் கூறும் பாடல்கள் இடைச் செருகல்; சேக்கிழார் பாடியன அல்ல’ என்றார்.

திருமுகங் கொடுத்த வரலாற்றைக் ‘கல்லாடம்’ என்னும் இலக்கியம் குறிப்பிடுகின்றது. அது மாணிக்கவாசகர் காலத்து நரிபரியாக்கிய திருவிளையாடலைக் கூறிற்று, மற்றும் பல கதைகளைக் குறிப்பிடுகின்றது. ஆயினும் ஞானசம்ந்தர் முதலிய மூவரில் ஒருவரைப் பற்றிய குறிப்பும் அவ் இலக்கியத்தில் இல்லை. ‘ஆகவே, அவ் இலக்கியம் மூவர் காலத்திற்கு முற் பட்டது’ என்றும், அது மாணிக்க வாசகரைக் குறிப்பிட்டு விட்டு மூவரைக் குறியாமையால் மாணிக்கவாசகரது காலம் மூவர் காலத்திற்கு முற்பட்டது என அடிகளார் முதலில் கூறினார்.

(மேற்கூறிய விளக்கவுரை தமிழ் வரச்சுவெல் யுனிவர்சிட்டி T V U உரை)

எனது கருத்து

சேரமான் பெருமாள் என்பது சேர மன்னனைக்குறிக்கும் பொதுப் பெயர் ; ஆகவே சுந்தரர்  கால சேரமான் வேறு ஒருவராக இருக்கலாம் . சேக்கிழார் தவறாகப் புரிந்து கொண்டு எழுதி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது

****

கி பி 600 CE க்கு முந்திய லீலைகள்

அப்பரும் சம்பந்தரும் குறிப்பிடும் தி வி பு நிகழ்ச்சிகள் குறைந்தது 1400 ஆண்டுகாளுக்கு முன் ந டந்திருக்க வேண்டும்

அவையாவன :

சம்பந்தர் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள்

வெள்ளை யானை சாபம் தீர்த்தது

வெள்ளியம்பலத்திற் கூத்தாடியது

வேதத்திற்குப் பொருள் அருளிச் செய்தது

மாணிக்கம் விற்றது

நான்மாடக்கூடல் ஆனது

எல்லாம் வல்ல சித்தரானது

விருத்த குமாரன் பாலரானது

திருமுகம் கொடுத்தது

பலகையிட்டது

பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கியது

திருவாலவாயானது

சங்கப்பலகை தந்தது

பாண்டியன் சுரம் தீர்த்தது

சமணரைக் கழுவேற்றியது

****

அப்பர் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள்

இந்திரன் முடிமேல் வளை எறிந்தது

வேதத்திற்குப் பொருள் அருளிச் செய்தது

நான்மாடக்கூடல் ஆனது

எல்லாம் வல்ல சித்தரானது

விருத்த குமாரன் பாலரானது

வளையல் விற்றது

பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்தது

சங்கப்பலகை தந்தது

தருமிக்குப் பொற்கிழி அளித்தது

இடைக்காடன் பிணக்கு தீர்த்தது

வலை வீசியது

வாதவூரடிகளுக்கு உபதேசித்தது

நரி பரியாக்கியது

மண் சுமந்தது

****

இந்த இரண்டு பட்டியலில் வரும் நிகழ்ச்சிகளால் முதலாவது வரகுணன் ஒருவன் இருந்ததும் , மாணிக்க வாசகர் தேவார மூவருக்கு முந்தையவர் என்பதும் உறுதியாகிறது.

*****

அடுத்த கட்டுரையில்

சுனாமி தாக்குதல்கள் , வறட்சி , புதிய மதுரை உண்டானது ,

ஜனத்தொகை பிரச்சினை

உவமைகளும் பழமொழிகளும்

ரசவாதம்

அஷ்டமா சித்திகள்

மதுரையில் செட்டி தெரு

சீல் / லட்சினை வைக்கும் முறை

அம்புகளில் பெயர்கள்

முதலியவற்றைக் காண்போம்

தொடரும்…………..

–சுபம்—

TAGS—திருவிளையாடல், புராணம், சில அதிசயச் செய்திகள்-3

பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் எட்டு படிகள்! (Post No.14,719)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,719

Date uploaded in London – 3 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

24-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

MOTIVATION /SELF IMPROVEMENT/PROBLEM SOLVING

 பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் எட்டு படிகள்!

 ச. நாகராஜன்

 அன்றாடம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் பல.

எப்படி அவற்றிற்குச் சரியான தீர்வுகளைக் காண்பது என்று தெரியாமல் தவிக்கிறோம்.

இதோ அறிவியல் ரீதியான ஒரு வழி இருக்கிறது.

 இதைக் கண்டு அறிமுகப்படுத்தியவர் மரியோ சிட்னி பஸாடர் (Mario Sidney Basadur) என்பவர்.

 ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க கீழே உள்ள எட்டு படிகளைக் கடைப்பிடியுங்கள் என்பது அவரது அறிவுரை.

 1.பிரச்சினையை இனம் காணுதல்

\முதலில் பிரச்சினை என்ன என்பதைச் சரியாகக் கண்டறிய வேண்டும். உதாரணமாக ஒரு நிறுவனம் என்று எடுத்துக் கொண்டால் அங்கு வாடிக்கையாளர்களும் விநியோகஸ்தர்களும் எதை விரும்புகிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

 இதற்கு வாடிக்கையாளர்கள் ஏதேனும் யோசனை தருகிறார்களா, இன்னும் எப்படி அவர்களுடன் அதிகம் தகவலைப் பரிமாறித் தொடர்பு கொள்ள முடியும், இப்போது வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் என்ன நடக்கிறது என்பன போன்றவற்றை அலசி ஆராயலாம்.

 தனி மனிதப் பிரச்சினைகளிலும் இதே போல பிரச்சினையை முதலில் இனம் காண வேண்டும்.

 2. .உண்மையைக் காணுதல்

 அடுத்தது பிரச்சினைக்குக் காரணம் என்ன? இது ஏன் தோன்றியது என்பதை ஆராய்வது தான்/\.

 3. பிரச்சினையை சரியாக வரையறுத்தல்

அடுத்து பிரச்சினையை சில வார்த்தைகளில் வரையறுத்துக் கொள்வது தான்.

ஏன், எதற்காக என்ற கேள்விகளைக் கேட்டால் பிரச்சினை உருவான காரணமும் அது இன்றைக்கு இருக்கும் நிலையும் தெரிய வரும்.

 4. அடுத்து தீர்வுகளைக் காணுதல்

ஏராளமான கருத்துக்களைச் சேர்ப்பது தான் அடுத்த படி. இதற்கு தக்கவர்களுடன் இணைந்து உட்கார்ந்து கருத்துப் பரிமாற்றம் செய்யலாம். இதன் மூலம் பல்வேறு யோசனைகள் கிடைக்கும். யோசனை கூறுபவர்களைக் கண்டிக்கவோ, ஏளனம் செய்யவோ கூடாது. மனதில் தேக்கி வைத்திருக்கும் கருத்தே முட்டாள்தனமான கருத்து. வெளியில் சொல்லப்படும் அனைத்துக் கருத்துக்களும் வரவேற்கத்தக்கவையே என்ற அடிப்படைக் கொட்பாட்டுடன் ‘ப்ரெய்ன் ஸ்டார்மிங்’ எனப்படும் இந்தக் கருத்துப் பரிமாற்றத்தைச் செய்தல் வேண்டும்.

 5. உரிய வழிகளைப் பரீசிலித்தல் மற்றும் தேர்ந்தெடுத்தல்

ஏராளமான கருத்துக்களும் தீர்வுகளும் இப்போது கை வசம் இருக்கும் நிலையில் இவற்றில் எது சரியாக அமையும், இதனால் பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்குமா, இதற்கு ஆகும் நேரம், பணம், முயற்சி எவ்வளவு வேண்டும் என்பதைச் சீர்தூக்கிப் பார்ப்பது தான் அடுத்த கட்டம்!.

பின்னர் செய்ய வேண்டியதைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளல் வேண்டும்.

 6..அடுத்தது திட்டமிடல்; 

இப்போது தீர்வை அமுல் படுத்த ஒரு செயல் திட்டம் தேவை. யார், எதை, எப்படிச் செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பது தான் அடுத்த படி.

 7. .தீர்வை அமுல்படுத்த ஆதரவைத் திரட்டல்

 நிர்வாகம் என்றால் ஒரு திட்டத்தை அமுல் படுத்த வேண்டுமானால் அங்கு வேலை பார்க்கும் பணியாளர்கள் அதை ஏற்க வேண்டும்.

குடும்பம் என்றால் அதன் உறுப்பினர்கள் தீர்வை ஆதரிக்க வேண்டும்.

 8.திட்டத்தை நிறைவேற்றல்

 இதுவே தீர்வை அமுல்படுத்த உ:ள்ள்ச் இறுதிக் கட்டம்!.

அமுல்படுத்தும் போது அதை நன்கு மேற்பார்வை பார்த்துக் கொண்டே இருத்தல் வேண்டும். இன்னும் ஒரு முன்னேற்றம் தொடர்ந்து தீர்வினால் வரலாம்.

 இதை முடித்த பின்னர் முதல் படிக்குச் சென்று இதை விட இன்னும் சிறந்த வழி மூலம் பிரச்சினைக்குத் தீர்வு உண்டா என்று கேட்டுக் கொள்ளலாம்.

இதை SIMPLEX PROBLEM SOVING PROCESS  என்று கூறுவர்.

 பஸாடரால் பயனடைந்தோர் ஏராளமானோர் உண்டு. தனிநபரும் சரி, நிறுவனங்களும் சரி பஸாடரின் வழிகளைக் கடைப்பிடிக்கலாம்

முயன்று பாருங்கள். தீர்வில்லாத பிரச்சினையே இருக்காது!

***

Pictures of 2500 Indian Stamps!- Part 64 (Post No.14,718)

Written by London Swaminathan

Post No. 14,718

Date uploaded in London –  July 2, 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 64

Stamps posted today include  YEAR 2004, STAMPS,

Pictures of 2500 Indian Stamps,

NEHRU,  GANDHI, DOGS OF INDIA, S B I, POST BOXES , LETTERS, RARE PLANTS, ANIMALS P S KAIRON, TIRUPPUR KUMARAN, V LAKSHMINARAYANA, DHEERAN CHINNAMALAI, MURSOLI MARAN, AYOTHIDASAR, KALYANASUNDARANAR, DR T S SOUNDARAM, MADHAV RAO SCINDIA,  DR ROERICH, KRISHANKANT, MADRAS TRAVANCORE, P SINGHANIA, PUNJAB 300 YEARS, PEACE YEAR, ROTARY INTERNATIONAL, I N S TARANGINI, CHILDREN S DAY, LOKHANDE, P N PANICKER, DESIKAVINAYAKAM PILLAI,ANSARI

NANI PALKHIWALA, MURUGAPPACHETTIYAR, 

–subham—

Tags– 
Stamps posted today include YEAR 2004, STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 64 ,mint,

Hindu Crossword 272025 (Post.14,717)

Written by London Swaminathan

Post No. 14,717

Date uploaded in London –  2 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Across (Coloured)

1. Lotus; also name of a saint cum freedom fighter from Bengal

3. – wonder , marvel in Indian Languages.

6. female name; female Deer or doe in Sanskrit

7. – Nose is derived from this Sanskrit word

8. “ I  “ in Sanskrit (first person)

9. – ← Mega in English came from this Sanskrit word; same meaning

DOWN

1. –  ( (8 letters) Worship, prayer, devotion in Indian Languages.Name of Hindi film known for its sweet songs.

2.—((8)  King of the Sky; In Hindu mythology, ******* is also the name of a renowned and righteous king who was a devotee of Lord Vishnu.

4. –  (7) Three Hanging Forts destroyed by Lord Shiva.

5.– (5)  diamond or Strongest weapon of ancient India and Indra

272025

1 2     
        
3    4  
       5
6       
        
7       
        
   8  9 

Across (Coloured)

1.ARAVINDA- Lotus; also name of a saint cum freedom fighter from Bengal

3.ADBHUTA – wonder , marvel in Indian Languages.

6.HARINI- female name; female Deer or doe in Sanskrit

7.NASA- Nose is derived from this Sanskrit word

8.AHAM- “ I  “ in Sanskrit (first person)

9.MAHA- ← Mega in English came from this Sanskrit word; same meaning

DOWN

1.ARADHANA-  ( (8 letters) Worship, prayer, devotion in Indian Languages.

2.AMBARISH—((8)  King of the Sky; In Hindu mythology, ******* is also the name of a renowned and righteous king who was a devotee of Lord Vishnu.

4.TRIPURA-  (7) Three Hanging Forts destroyed by Lord Shiva.

5.VAJRA – (5)  diamond or Strongest weapon of ancient India and Indra

272025

A1RA2VINDA
R M     
A3DBHUT4A 
D A  R V5
H6ARINI A
A I  P J
N7ASA U R
A H  R A
   A8HAM9 

–subham—

Tags– Hindu Crossword 272025 (Post.14,717)