பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் எட்டு படிகள்! (Post No.14,719)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,719

Date uploaded in London – 3 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

24-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

MOTIVATION /SELF IMPROVEMENT/PROBLEM SOLVING

 பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் எட்டு படிகள்!

 ச. நாகராஜன்

 அன்றாடம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் பல.

எப்படி அவற்றிற்குச் சரியான தீர்வுகளைக் காண்பது என்று தெரியாமல் தவிக்கிறோம்.

இதோ அறிவியல் ரீதியான ஒரு வழி இருக்கிறது.

 இதைக் கண்டு அறிமுகப்படுத்தியவர் மரியோ சிட்னி பஸாடர் (Mario Sidney Basadur) என்பவர்.

 ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க கீழே உள்ள எட்டு படிகளைக் கடைப்பிடியுங்கள் என்பது அவரது அறிவுரை.

 1.பிரச்சினையை இனம் காணுதல்

\முதலில் பிரச்சினை என்ன என்பதைச் சரியாகக் கண்டறிய வேண்டும். உதாரணமாக ஒரு நிறுவனம் என்று எடுத்துக் கொண்டால் அங்கு வாடிக்கையாளர்களும் விநியோகஸ்தர்களும் எதை விரும்புகிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

 இதற்கு வாடிக்கையாளர்கள் ஏதேனும் யோசனை தருகிறார்களா, இன்னும் எப்படி அவர்களுடன் அதிகம் தகவலைப் பரிமாறித் தொடர்பு கொள்ள முடியும், இப்போது வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் என்ன நடக்கிறது என்பன போன்றவற்றை அலசி ஆராயலாம்.

 தனி மனிதப் பிரச்சினைகளிலும் இதே போல பிரச்சினையை முதலில் இனம் காண வேண்டும்.

 2. .உண்மையைக் காணுதல்

 அடுத்தது பிரச்சினைக்குக் காரணம் என்ன? இது ஏன் தோன்றியது என்பதை ஆராய்வது தான்/\.

 3. பிரச்சினையை சரியாக வரையறுத்தல்

அடுத்து பிரச்சினையை சில வார்த்தைகளில் வரையறுத்துக் கொள்வது தான்.

ஏன், எதற்காக என்ற கேள்விகளைக் கேட்டால் பிரச்சினை உருவான காரணமும் அது இன்றைக்கு இருக்கும் நிலையும் தெரிய வரும்.

 4. அடுத்து தீர்வுகளைக் காணுதல்

ஏராளமான கருத்துக்களைச் சேர்ப்பது தான் அடுத்த படி. இதற்கு தக்கவர்களுடன் இணைந்து உட்கார்ந்து கருத்துப் பரிமாற்றம் செய்யலாம். இதன் மூலம் பல்வேறு யோசனைகள் கிடைக்கும். யோசனை கூறுபவர்களைக் கண்டிக்கவோ, ஏளனம் செய்யவோ கூடாது. மனதில் தேக்கி வைத்திருக்கும் கருத்தே முட்டாள்தனமான கருத்து. வெளியில் சொல்லப்படும் அனைத்துக் கருத்துக்களும் வரவேற்கத்தக்கவையே என்ற அடிப்படைக் கொட்பாட்டுடன் ‘ப்ரெய்ன் ஸ்டார்மிங்’ எனப்படும் இந்தக் கருத்துப் பரிமாற்றத்தைச் செய்தல் வேண்டும்.

 5. உரிய வழிகளைப் பரீசிலித்தல் மற்றும் தேர்ந்தெடுத்தல்

ஏராளமான கருத்துக்களும் தீர்வுகளும் இப்போது கை வசம் இருக்கும் நிலையில் இவற்றில் எது சரியாக அமையும், இதனால் பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்குமா, இதற்கு ஆகும் நேரம், பணம், முயற்சி எவ்வளவு வேண்டும் என்பதைச் சீர்தூக்கிப் பார்ப்பது தான் அடுத்த கட்டம்!.

பின்னர் செய்ய வேண்டியதைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளல் வேண்டும்.

 6..அடுத்தது திட்டமிடல்; 

இப்போது தீர்வை அமுல் படுத்த ஒரு செயல் திட்டம் தேவை. யார், எதை, எப்படிச் செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பது தான் அடுத்த படி.

 7. .தீர்வை அமுல்படுத்த ஆதரவைத் திரட்டல்

 நிர்வாகம் என்றால் ஒரு திட்டத்தை அமுல் படுத்த வேண்டுமானால் அங்கு வேலை பார்க்கும் பணியாளர்கள் அதை ஏற்க வேண்டும்.

குடும்பம் என்றால் அதன் உறுப்பினர்கள் தீர்வை ஆதரிக்க வேண்டும்.

 8.திட்டத்தை நிறைவேற்றல்

 இதுவே தீர்வை அமுல்படுத்த உ:ள்ள்ச் இறுதிக் கட்டம்!.

அமுல்படுத்தும் போது அதை நன்கு மேற்பார்வை பார்த்துக் கொண்டே இருத்தல் வேண்டும். இன்னும் ஒரு முன்னேற்றம் தொடர்ந்து தீர்வினால் வரலாம்.

 இதை முடித்த பின்னர் முதல் படிக்குச் சென்று இதை விட இன்னும் சிறந்த வழி மூலம் பிரச்சினைக்குத் தீர்வு உண்டா என்று கேட்டுக் கொள்ளலாம்.

இதை SIMPLEX PROBLEM SOVING PROCESS  என்று கூறுவர்.

 பஸாடரால் பயனடைந்தோர் ஏராளமானோர் உண்டு. தனிநபரும் சரி, நிறுவனங்களும் சரி பஸாடரின் வழிகளைக் கடைப்பிடிக்கலாம்

முயன்று பாருங்கள். தீர்வில்லாத பிரச்சினையே இருக்காது!

***

Pictures of 2500 Indian Stamps!- Part 64 (Post No.14,718)

Written by London Swaminathan

Post No. 14,718

Date uploaded in London –  July 2, 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 64

Stamps posted today include  YEAR 2004, STAMPS,

Pictures of 2500 Indian Stamps,

NEHRU,  GANDHI, DOGS OF INDIA, S B I, POST BOXES , LETTERS, RARE PLANTS, ANIMALS P S KAIRON, TIRUPPUR KUMARAN, V LAKSHMINARAYANA, DHEERAN CHINNAMALAI, MURSOLI MARAN, AYOTHIDASAR, KALYANASUNDARANAR, DR T S SOUNDARAM, MADHAV RAO SCINDIA,  DR ROERICH, KRISHANKANT, MADRAS TRAVANCORE, P SINGHANIA, PUNJAB 300 YEARS, PEACE YEAR, ROTARY INTERNATIONAL, I N S TARANGINI, CHILDREN S DAY, LOKHANDE, P N PANICKER, DESIKAVINAYAKAM PILLAI,ANSARI

NANI PALKHIWALA, MURUGAPPACHETTIYAR, 

–subham—

Tags– 
Stamps posted today include YEAR 2004, STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 64 ,mint,

Hindu Crossword 272025 (Post.14,717)

Written by London Swaminathan

Post No. 14,717

Date uploaded in London –  2 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Across (Coloured)

1. Lotus; also name of a saint cum freedom fighter from Bengal

3. – wonder , marvel in Indian Languages.

6. female name; female Deer or doe in Sanskrit

7. – Nose is derived from this Sanskrit word

8. “ I  “ in Sanskrit (first person)

9. – ← Mega in English came from this Sanskrit word; same meaning

DOWN

1. –  ( (8 letters) Worship, prayer, devotion in Indian Languages.Name of Hindi film known for its sweet songs.

2.—((8)  King of the Sky; In Hindu mythology, ******* is also the name of a renowned and righteous king who was a devotee of Lord Vishnu.

4. –  (7) Three Hanging Forts destroyed by Lord Shiva.

5.– (5)  diamond or Strongest weapon of ancient India and Indra

272025

1 2     
        
3    4  
       5
6       
        
7       
        
   8  9 

Across (Coloured)

1.ARAVINDA- Lotus; also name of a saint cum freedom fighter from Bengal

3.ADBHUTA – wonder , marvel in Indian Languages.

6.HARINI- female name; female Deer or doe in Sanskrit

7.NASA- Nose is derived from this Sanskrit word

8.AHAM- “ I  “ in Sanskrit (first person)

9.MAHA- ← Mega in English came from this Sanskrit word; same meaning

DOWN

1.ARADHANA-  ( (8 letters) Worship, prayer, devotion in Indian Languages.

2.AMBARISH—((8)  King of the Sky; In Hindu mythology, ******* is also the name of a renowned and righteous king who was a devotee of Lord Vishnu.

4.TRIPURA-  (7) Three Hanging Forts destroyed by Lord Shiva.

5.VAJRA – (5)  diamond or Strongest weapon of ancient India and Indra

272025

A1RA2VINDA
R M     
A3DBHUT4A 
D A  R V5
H6ARINI A
A I  P J
N7ASA U R
A H  R A
   A8HAM9 

–subham—

Tags– Hindu Crossword 272025 (Post.14,717)

அகஸ்தியர் பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் 100 மார்க்! (Post No.14,716)

Written by London Swaminathan

Post No. 14,716

Date uploaded in London –  2 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அகஸ்தியர் என்று சொன்னவுடன்  உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் (POINTS)  சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் (IT MUST MATCH OUR SELECTION GIVEN BELOW ) ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் . ஒவ்வொன்றுக்கும் பத்து மார்க்குகள்.

****

SAMPLE ANSWER –Ten Marks

விடைகள்— 1. அகஸ்தியர் குள்ளமானவர்

2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10…………………………

****

விடைகள்—

1.அகஸ்தியர் குள்ளமானவர் — பத்து மார்க்குகள்.

2.கடலைக்குடித்தார்; (அதாவது கடல் கடந்து பாண்டியர்களை அழைத்துச் சென்று, ஏழு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்து நாகரீகத்தை 1500 ஆண்டுகளுக்கு கொடி கட்டிப்பறக்கவிட்டார் ; மிகப் பழைய பாண்டியமன்னன் திருமாறனின் கல்வெட்டு வியட்நாமில் உள்ளது). பத்து மார்க்குகள்.

3.விந்திய மலையைக் கர்வபங்கம் செய்தார் ; (அதாவது முதல் தடவையாக விந்திய மலைக்கு இடையே சாலை அமைத்து வந்தார்; ராமன் ,அர்ஜுனன் போன்றோர் கடற்கரை சாலையைப் பயன்படுத்தி  தென்னிந்தியாவுக்கு வந்தனர்). பத்து மார்க்குகள்.

4.காவிரி நதியை உண்டாக்கினார் ; (அதாவது அகஸ்தியர் மாபெரும் சிவில் என்ஜினீயர் GREAT CIVIL ENGINEER; வடநாட்டில் பகீரதன் கங்கை நதியை இப்போதைய பாதையில் திருப்பி விட்டது போல பல பாறைகளை நகர்த்த வைத்து, காவிரியைத் தமிழ் நாட்டிற்குள் திருப்பி விட்டார் ; இப்படித் திருப்பலாமா, அப்படித் திருப்பிவிடலாமா என்று BLUE PRINT   ப்ளு பிரிண்ட் போட்டுக்கொண்டு இருந்தபோது, ஒரு காகம் வந்து அவரது கமண்டல நீரை கவிழ்த்தது அந்த நீர் ஒடிய திசையில் காவிரி நதியைத் திருப்பிவிட என்ஜினீயர்களை அமர்த்தி வெற்றிகண்டார்0- பத்து மார்க்குகள்.

5.ரிக்வேத அகஸ்தியர், லோபாமுத்ரா என்ற ராணியைக் கல்யாணம் செய்துகொண்டார் –பத்து மார்க்குகள்.

6. தமிழ் மொழிக்கு இலக்கணம் உண்டாக்கினார் (பாரதியார் பாட்டில் உள்ளது )   –பத்து மார்க்குகள்.

7. கடைசியாக இவர் பொதிய மலையில் ஆஸ்ரமத்தை அமர்ந்து தங்கிவிட்டார். –பத்து மார்க்குகள்.

.8.அகஸ்திய நட்சத்திரம், அகத்திக்கீரை  முதலிய பல இவர் பெயரில் உள்ளன –பத்து மார்க்குகள்.

9.தமிழ்நாட்டின் தென் பகுதியில் அகத்தியர் பெயரில் ஊர்களும் மழையும் உள்ளன.— பத்து மார்க்குகள்.

10.இவரது பெயரில் நிறைய மருத்துவ, சோதிட நூல்கள் உள்ளன அல்லது இவரது சிலைகள் லண்டன் மியூசியத்திலும் தென் கிழக்கு ஆசியா நாட்டு மியூசியங்களிலும்  உள்ளன ஏதேனும் ஒன்று சொன்னால் போதும் — பத்து மார்க்குகள்.

–subham—

Tags—அகஸ்தியர், குள்ளமானவர், 100மார்க்குகள்.

திருவிளையாடல் புராணத்தில் சில அதிசயச் செய்திகள்-2 (Post No.14,715)

 Picture:– வலை வீசின படலம் 

Written by London Swaminathan

Post No. 14,715

Date uploaded in London –  2 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

முருகன் ஊமையாகப் பிறந்தது ஏன் ?

வலை வீசின படலத்தில் சாபங்கள் பற்றிய சுவையான கதை வருகிறது . சிவபெருமான் மதுரையில் அங்கையற்கண்ணிக்கு வேதப்பொருளை சொல்லிக்கொண்டிருந்தபோது அவள் கவனக்குறைவாக இருந்ததால் கோபம் அடைந்த சிவன் அவளை மீனவப் பெண்ணாக பிறக்கச் சாபமிட்டார் ; மீனாட்சி அம்மை தனது செயலுக்கு வருந்தியபோது, “கவலைப்படாதே போ!  நானே மீனவனாக வந்து உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்” என்றார் . அம்மாவுக்கு கிடைத்த சாபச் செய்தி முருகனையும் பிள்ளையாரையும் எட்டியது இருவரும் ஒடி வந்து இந்தப் புஸ்தகங்களால்தானே இதெல்லாம் வந்தது என்று புஸ்தகங்களை வாரிக் கடலில் வீசினர் அவர்களை உள்ளே அனுமதித்த குற்றத்துக்காக நந்தி தேவரை சுறாமீனாகப் பிறக்கச் சாபமிட்டார்முருகனை செட்டியார் வீட்டில் ஊமையாகப் பிறக்க சாபமிட்டார் ; விநாயகப் பெருமானுக்குச் சாபமிட்டால் அது தன்னையே வந்தடையும் என்பதால் சிவன், பேசாமல் இருந்து விட்டார் – தி.வி.பு , வலை வீசின படலம்

எனது கருத்து

விநாயகப் பெருமானின் மஹிமை இதில் தெரிகிறது ; அச்சது பொடி செய்த அதி தீரா என்று அருணகிரிநாதர் விநாயகரைப் புகழந்து இருக்கிறார்; பிள்ளையார் அனுமதி இல்லாமல் சிவன் புறப்பட்டபோது அவருடைய தேரின் அச்சையே முறியச் செய்தார் கணபதி என்று அருணகிரி பாடியுள்ளார் .

இரண்டாவது கருர்த்து — வாத்தியார் பாடம் சொல்லும் போது, குரு உபதேசம் செய்யும்போது, கவனக்குறைவாக இருப்பது தண்டனைக்குரிய குற்றம் .

மூன்றாவது , வாயிற்காப்போன் கடமையில் தவறக்கூடாது ; மனைவியே வந்தாலும், மகனே வந்தாலும் அனுமதி பெற்ற பின்னரே உள்ளே  வரவேபண்டும்; இது முக்கிய பாடம். நாம் எந்த வீட்டுக்குச் செல்வதானாலும் முன்னரே போன் செய்து அனுமதி பெற்ற பின்னரே, சந்திக்கச் செல்ல வேண்டும் எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் இது முக்கியம்; திறந்த வீட்டில் நாய் நுழைந்த மாதிரி நுழையக்கூடாது.

****

எந்த திசையில் எந்த காவல் தெய்வம் இருக்கவேண்டும்?

திசைத் தெய்வங்கள் யார் என்றும் பரஞ்சோதி முனிவர் சொல்கிறார்.

நகரின் கிழக்குப்பகுதியில் அய்யனார் சிலையும் , தெற்குப்பகுதியில் சப்த மாதா கோவிலும் மேற்குப் பகுதியில் விஷ்ணு கோவிலும் வடக்குப் பகுதியில் துர்கா கோவிலும் இருக்க வேண்டும் என்று பரஞ்சோதி முனிவர் சொல்கிறார் . பழைய மதுரையில் இப்படி இருந்தது; இப்போதும் வடக்கில் செல்லத் தம்மன்  கோவில் என்னும் துர்கா கோவில் இருக்கிறது ; அதே போல தெற்கில் சப்த மாதா கோவில் உள்ளது ; ஒருவேளை கண்ணகி எரித்த பின்னர், மதுரையின் அமைப்பு மாறியிருக்கலாம் ;மதுரை பல முறை மாற்றியமைக்கப்பட்டது தி வி பு வில் சில படலங்களில் வருகிறது; பிளினியும் மதுரைத் தலை நகர் மாற்றம் பற்றி முதல் நூற்றாண் டில் குறிப்பிட்டுள்ளார்.

கெளடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்திலும் திசைத் தெய்வங்கள் வருகின்றன ; இதை ஒப்பிட்டு ஆராய வேண்டும்

****

மகா புருஷனின் துவாதசாந்தம் மதுரை!

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலத்தில் கீழ்கண்ட செய்தியைப் பரஞ்சோதியார் சொல்கிறார் :–

மகாபுருடனின் அளவினைச் சொல்லி முடியாது ; அப்புருடனுக்குத் திருவாரூர் மூலாதாரம்; திருவண்ணாமலை சுவாதிட்டானம் , திருவானைக்கா மணிபூரகம்; சிதம்பரம் அனாகதம்; திருக்காளத்தி விசுத்தி; காசி ஆக்ஞய் ;கயிலை பிரமரந்திரம்; மதுரை துவாதசாந்தம்  (அதாவது விராட புருஷனின் தலைக்கும் மேலாக அமைந்த தலம் ) .எனது கருத்து

துவாதசாந்தம் என்றால் எண் 12 (ஏன் பன்னிரெண்டு என்று தனிக்கட்டுரையில் விளக்கி இருக்கிறேன் )

இமயம் முதல் குமரி வரை என்ற கருத்து புற நானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் உளது ;இங்கும் மதுரைமுதல் கயிலை வரை விவரிக்கப்பட்டது;  இது மகாபுருஷன் என்பவனின் உடல் என்ற உருவகமும் வருகிறது. ஆனால் இன்னும் சில அறிவிலிகள் வெள்ளைக்காரன் வந்துதான் இந்தியா என்பது ஒரு நாடு என்று காட்டினான் என்று உளறிக்கொண்டிருக்கின்றன இந்தியா என்பது 56 பிரிவுகளை உடையது அனைத்து 56 நாடுகளுக்கும் மீனாட்சி கல்யாண லெட்டர் / திருமுகம் அனுப்பப்பட்டது என்று தி வி பு கூறுகிறது இந்த 56 தேச விஷயம், நிறைய சம்ஸ்க்ருத நூல்களிலும் உளது; அவர்கள் அனைவரையும் எல்லா விழாக்களுக்கும்  அழைத்ததும், அவர்கள் வந்ததும் இந்தியா — அகண்ட பாரதம் — ஒரே நாடு என்று காட்டுகிறது ; வெள்ளைக்காரன் ஆட்சிக்கும் துலுக்க ஆட்சிக்கும் முன்னதாக அப்பரும் ஆதிசங்கரரும் சென்ற வரைபடத்தைப் பார்த்தால், ராமன் சென்ற வரை படத்தைப் பார்த்தால், சுந்தரரும் சேரமானும் கயிலை சென்ற வரை படத்தைப் பார்த்தால், அகண்ட பாரத்தைத்தைக் காணலாம்.

Picture:–கால்மாறி ஆடின படலம் 

*****

அடுத்த கட்டுரைகளில் வரும்  செய்திகள் இதோ :

வாட் போட்டி,

பாட்டுப் போட்டியில் இலங்கைப் பாடகி, வட நாட்டுப் பாடகர்

கணவன் மனைவி பெயர்கள்

காப்பி அடித்த புஸ்தகங்கள்

உலகின் முதல் சிபாரிசுக்கு கடிதம்

உவமைகளும் பழமொழிகளும்

ரசவாதம்

அஷ்டமா சித்திகள்

மதுரையில் செட்டி தெரு

சீல் / லட்சினை வைக்கும் முறை

அம்புகளில் பெயர்கள்

சுனாமி தாக்குதல்

கி பி 600 CE க்கு முந்திய லீலைகள்

தொடரும்………………………………………..

Tags– திருவிளையாடல் புராணம், அதிசயச் செய்திகள்  பகுதி -2 சாபங்கள், முருகன் ஊமை பிறப்பு

மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 8 (Post.14,714)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,714

Date uploaded in London – 2 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 8 

ச. நாகராஜன் 

2025 மே மாதம்1ம் தேதியிட்ட ஸ்வராஜ்யாஇதழில் திரு எம். நாகேஸ்வர ராவ் எழுதியுள்ள கட்டுரையை இது வரை படித்தோம்.

நீண்ட கட்டுரையில் இதுவரை சொல்லப்படாத புதுக் கருத்துக்களை மட்டும் இங்கு காண்போம். திருப்பிச் சொல்லப்பட்ட கருத்துக்களை சேர்க்காமல் நீண்ட கட்டுரை சுருக்கமாகத் தரப்படுகிறது. 

ரிக்வேதம், மஹாபாரத்ம் உள்ளிட்ட பொக்கிஷங்கள் ஒதுக்கப்பட்டன. உலகின்  மிக நீண்ட இதிஹாஸமான மஹாபாரதத்தின் புகழ் சொல்லப்படவில்லை. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் போன்ற உருது கல்விக்கூடங்கள் ஆதரிக்கப்பட்டன.

 காஷ்மீர் ஹிந்துக்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஹம்பி ஆலயம் அழிக்கப்பட்டது. இவை குறிப்பிடப்படவில்லை.

 ஹிந்து விரோதப் போக்கு ஊடகங்களிலும் சினிமாக்களிலும் பரவச் செய்யப்பட்டது.

 இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் நேருவின் சோஷியலிஸ அமைப்பின்படி கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் தாஜா செய்யும் போக்கு பரவியது.

 பின்னால் வந்த பிஜேபி அரசும் பாடபுத்தகங்களைத் திருத்தத் தவறி விட்டது.  பிரகாஷ் ஜாவேத்கர் என்ற பிஜேபி கல்வி அமைச்சர் தாங்கள் ஒரு அத்தியாயத்தைக் கூட திருப்பி எழுதவில்லை என்று பெருமை அடித்துக் கொண்டார்.

 நாம் எதைப் படிக்கிறோமோ அதாகவே நாம் ஆகிறோம்; எதைச் சாப்பிடுகிறோமோ அதாக ஆவதில்லை – என்ற பழமொழி ஒரு மக்களின் குணாதிசயங்களையும் எதிர்காலத்தையும் சுட்டிக் காட்டுகிறது.  

 தானே ஏற்படுத்திக் கொண்ட இந்தக் காயமானது வெளிநாட்டு சக்திகள் நம்மை உருவாக்க வழி வகுத்து விட்டன. “பெயருக்கு மட்டும் ஹிந்து” Hindus in name only என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

 ஹிந்துக்களான கல்வி அமைச்சர்கள் வி.கே.ஆர்.வி. ராவ் (1971) அர்ஜுன் சிங் (1991-1994, 2004-2009) ஆகியோர் இடதுசாரிப் போக்கைக் கொண்டிருந்தார்கள், மேலும் முஸ்லீம்களை தாஜா செய்யும் போக்கைக் கொண்டிருந்தார்கள்.

 கல்வித் துறை முக்கியமான ஒரு துறையாகவே கருதப்படவில்லை.

 உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றிற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கல்வித் துறைக்குக் கொடுக்கப்படவில்லை.

 இவையெல்லாம் சேர்ந்து ஹிந்துக்கள் தங்கள் புகழோங்கிய காலம் பற்றி அறிய முடியாமல் செய்து விட்டது.

 இவற்றை உணர்ந்து இந்தியாவின் உண்மை வரலாற்றைச் சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டது.

 நமது தியாகங்கள், நமது வெற்றிகள் ஆகியவை கல்லறைக்குள் புதைத்து வைத்துவிடப்படக் கூடாது.

குறிப்பு : இந்தக் கட்டுரையை ஸ்வராஜ்யா இதழில் எழுதியுள்ள திரு எம். நாகேஸ்வர ராவ் ஓய்வு பெற்ற ஐபிஸ் அதிகாரி ஆவார். அத்துடன் அவர் முன் நாளைய சிபிஐ டைரக்டருமாவார். அவரது கருத்துக்கள் அவருடைய சொந்தக் கருத்துக்களே.**

இவற்றில் இருக்கின்ற உண்மைகளை எடுத்துப் பார்த்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றே அனைவரும் எதிர்பார்க்கலாம்.

இந்தக் கட்டுரைத் தொடர் முடிகிறது.·                        முற்றும்.,

நன்றி, ஆதாரம் : ட்ரூத், கல்கத்தா வார இதழ்

TRUTH Vol 93 Issue No 7 Dated 30-5-2025

Pictures of 2500 Indian Stamps!- Part 63 (Post No.14,713)

Written by London Swaminathan

Post No. 14,713

Date uploaded in London –  July 1, 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 63

Stamps posted today include  YEAR 2004, STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PANINI, SIDDHAR SWAMIGAL, NAIN SINGH, 

TAJ MAHAL, TENNETI VISWANATHAM, 

 S S VASAN, K SUBRAHMANYAM, BHASKARA SETHUPATHY, ACHARYA BIKSHU, NEERJA BHANOT, R P VERMA, GREETINGS, CHILDRENS DAY 2004, AGAKHAN AWARD, AGRA FORT, IISBWM KOLKATA, SAHITYA AKADEMY, DULA BHAYA  KAG, NUPEE LAL, RAJIV GANDHI,

 INDIAN SOLDIERS OF PEACE,C D DESHMUK, BAJI RAOPESHWA, DR B D GARWARE , TRIGNOMETRICAL SURVEY, M C CHAGLA, INDRA CHANDRA SHASTRI, JYOTIPRASAD AGARWALLA, WALCHAND HIRACHAND, WOODSTOCK SCHOOL

–subham—

Tags– 
Stamps posted today include YEAR 2004, STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 63 ,mint,

லண்டன் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி172025 (Post.14,712)

Written by London Swaminathan

Post No. 14,712

Date uploaded in London –  1 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

குறுக்கே

1. (7 letters) -மதுரை நகரம் உருவாகும் முன் இந்தப்பெயரில் காடாக இருந்தது

2. (6) –நான்கு அல்லது ஐந்து மாதம் விளையும் நீண்ட கால நெற்பயிர்

4. (2) — ← நீண்ட, கயிறு

5. (4) –மாட்டுச் சாணத்தின் காய்ந்த பகுதி

5. (4)–  தெற்குக்கு எதிர் திசை

*****

கீழே /மேலே coloured

1. —சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்த விழா; இது, ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் பிரதமை முதல்  ஆறு நாட்கள் கொண்டாடப்படும்.

3. ↑ பாண்டவர் – கெளரவர் சண்டையைக்கூறும் நூல்; இந்தியாவின் ஒரிஜினல் பெயர்

3. –பெண், பொம்மை; மார்கழிமாத நோன்பு

4. — யானை, சேவல்

4. – சொல், உறுதி மொழி

6. —↑ காகம் குருவி கொக்கு ஆகியவற்றின் பொதுப்பெயர்

7. —↑ சங்ககாலத்தில் பெரும்பூட்சென்னி என்பவன் ஆட்சிக்குட்பட்டிருந்த அழும்பில், ******* ஆகிய இரு ஊர்களும் நெல்வயல்களுடன் இன்பம் நல்கும் ஊர்களாகத் திகழ்ந்தன. 

1      
       
       
2 3    4
       
   5   
  6 7  

விடைகள் 

குறுக்கே

1.க ட ம் ப வ ன ம் (7 letters) -மதுரை நகரம் உருவாகும் முன் இந்தப்பெயரில் காடாக இருந்தது

2.சம்பா பயிர்(6) –நான்கு அல்லது ஐந்து மாதம் விளையும் நீண்ட கால நெற்பயிர்

4.வார் (2) — நீண்ட, கயிறு

5.வறட்டி(4) –மாட்டுச் சாணத்தின் காய்ந்த பகுதி

5.வடக்கு (4)–  தெற்குக்கு எதிர் திசை

*****

கீழே /மேலேcoloured

1.கந்த சஷ்டி —சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்த விழா; இது, ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் பிரதமை முதல்  ஆறு நாட்கள் கொண்டாடப்படும்.

3.பாரதம்– பாண்டவர் – கெளரவர் சண்டையைக்கூறும்  நூல்; இந்தியாவின் ஒரிஜினல் பெயர்

3.பாவை –பெண், பொம்மை; மார்கழிமாத நோன்பு

4.வாரணம் — யானை, சேவல்

4.வாக்கு – சொல், உறுதி மொழி

6.பறவை –காகம் குருவி கொக்கு ஆகியவற்றின் பொதுப்பெயர்

7.குடவாயில் –சங்ககாலத்தில் பெரும்பூட்சென்னி என்பவன் ஆட்சிக்குட்பட்டிருந்த அழும்பில், ******* ஆகிய இரு ஊர்களும் நெல்வயல்களுடன் இன்பம் நல்கும் ஊர்களாகத் திகழ்ந்தன. 

க1ம்ம்
ந்    
  ல் 
ச2ம்பா3யிர்வா4
ஷ் வை வா க்
டிட்வ5க்கு
  ப6 கு7  

–subham—

Tags—லண்டன், தமிழ், குறுக்கெழுத்துப் போட்டி,172025

திருவிளையாடல் புராணத்தில் சில அதிசயச் செய்திகள்-1 (Post.14,711)

இந்திரன் பழி தீர்த்த படலம் 

Written by London Swaminathan

Post No. 14,711

Date uploaded in London –  1 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

முந்தைய கட்டுரைகளில் திருவிளையாடல் புராணத்தில் (தி. வி. பு. வில்) உள்ள சாமுத்ரிகா லட்சணம் , நவரத்தின மணிகளின் அபூர்வ சக்திகள் , நாற்பது நாடுகளின் பட்டியல், குதிரைகளின் வகைகளும் அவற்றின் லட்சணங்களும் , மதுரை நகரின் பெயர்கள் முதலிய பல செய்திகளைப் பார்த்தோம் ; இவை தவிர எவ்வளவோ   சுவையான செய்திகளைப் போகிற போக்கில் பரஞ்சோதி முனிவர் சொல்கிறார் ; இதோ சில செய்திகள்:-

மதுரையில் இந்திரன் கண்ட விலங்கு அதிசயங்கள்

கர்ப்பமுற்ற தவளைக்குப் பாம்பு குடைபிடித்த அதிசயத்தைக் கண்ட  ஆதி சங்கரர் அந்த இடத்தில் சிருங்கேரி மடத்தை தாபித்ததை நாம் அறிவோம்; வேட்டை நாய்களால் துரத்தப்பட்ட முயல்கள் திடீரென்று வீறுகொண்டு எழுந்து வேட்டை நாய்களையே விரட்டிய அதிசயத்தைக் கண்ட வீர பாண்டிய கட்டபொம்மன் அங்கு பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டையை க்   கட்டியதை  நாம் அறிவோம்; பட்டுப்பூச்சிகளைப் பிடித்துப் பட்டியலிடச்சென்ற பிரான்சு நாட்டு ஆராய்ச்சியாளர் ஹென்றி முக்கோத் உலகிலேயே மிகப்பெரிய இந்துக் கோவிலான அங்கோர் வத்தைக் கம்போடியா நாட்டில் கண்ட அதிசயத்தைக் (French explorer and naturalist Henri Mouhot) அதிசயத்தை நாம் அறிவோம். அஜந்தா என்னும் அற்புதமான குகைக் கோவில்களையும் ஓவியங்களையும் புலி வேட்டைக்குப் போன ஆங்கிலேயர்களை ஆடு மேய்க்கும் சிறுவன் அழைத்துச் சென்று காட்டி மறைந்த அதிசயத்தை நாம் அறிவோம்.

இதே போல இந்திரனும் கண்ட அதிசயத்தைப் பரஞ்சோதி முனிவர் பட்டியல் இடுகிறார்

இந்திரன் க்ஷத்திரியன் ; அவன் விருத்திரன் என்ற பிராமண அசுரனைக் கொன்றான் ; இதனால் அவனை பிரம்ஹத்திப் பாவம் (பிராம்மணக் கொலை= பிரம்ம ஹத்தி) பிடித்துக்கொண்டது குளத்தில் ஒளிந்து கொண்டான். தேவர்கள் அரசன் இல்லாமல் வருந்தி, அவர்களுடைய குருவான வியாழ பகவானை—பிரஹஸ்பதியை– வணங்கி வேண்டினர் ; அவர் குளத்தில் ஒளிந்து கொண்டிருந்த இந்திரனை அழைத்து தெற்கே போ அங்கு ஒரு தலத்தில் உன் பாவம் நீ ங்கும் என்று ஆணையிடுகிறார் ; இந்திரன் பல புண்ணியத் தலங்களைத் தரிசித்து தெற்கே வந்தவுடன் சில அதிசயங்களைக் காண்கிறான்  ஆஹா, இதுதான் நம் குருநாதர் சொன்ன இடம் என்று முடிவு செய்கிறான் ; அது மதுரை மாநகரம் என்று பரஞ்சோதி பகிர்கிறார்; .அவன் கண்ட  அதிசயக்  காட்சிகள் :

கற்றறிவில்லாத மந்திகள் / பெண் குரங்குகள் அருவி நீரில் மூழ்கி , அவ்வருவி நீர் வீசிய மணிகளை க் கொண்டு வந்து பாறைமேல் சிவலிங்கமாக வைத்து அருவி நீரால் அபிஷேகம் செய்து கரிய விரல்களால் பூக்களைப்பறித்து வந்து அர்ச்சனை செய்து பழங்களை நிவேதித்துப் பூசை செய்யவும், யாளியும் யானையும் புழக்கையால் ஒரு துறையில்  நீரை முகந்து வந்து ஒன்று க் கொன்று ஊட்டி ப் பருகவும், (யாளி என்பது சிங்கம் ; யானையின் எதிரி), புலி முலைப் பாலை மான் கன்றுகள் பசிதீரப் பருகி மகிழவும், வெய்யிலில் வெறு நிலத்தில் பாம்புக்குட்டிகள் வருந்தக்கண்டு  கருடன் தனது சிறகை விரித்து நிழலைத்தரவும், அதுகண்டு பாம்புக் குட்டிகள் கருடனால் வருந்துகின்றன , ஐயோவென்று பெண் குரங்குகள் சங்குகளால் நீரை முகந்து வந்து அவைகளினுடல் குளிரச் சொரியவும், மயில்கள் பெட்டையோடு கூடியிருக்கும் மணவறையில் பாம்புகள் மாணிக்கங்களைக்  கக்கி விளக்கு வைக்கவும் குயில்கள் ஓமென்று ஒலிக்க, கிளிகள் ஸ்ரீ பஞ்சாட்த்திரத்தை  அதனோடு சேர்த்துச் சொல்ல  பூவைகள் குருவுபதேசம் கேட்பது போலக் கேட்டு மகிழவும் இவ்வாறாக பக்ஷிகள், மிருகங்கள்  செய்கையைக் கண்டு இந்திரன் ஆச்சரியமடைந்த புளகாங்கிதனாகி  மன மகிழ்ச்சியோடு செல்லும்போது ஒற்றர்கள் மீண்டு வந்து  வணங்கிப் பால் குடிப்பவனுக்கு அப் பாலோடு தீபனைச் சொரிந்தாற்போல மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சி பொங்கச் சொல்லத் தொடங்கினர் — இந்திரன் பழி தீர்த்த படலம் , தி வி பு

எனது கருத்து

மான் குட்டிகளுக்குப் புலிகளும் தாய்ப்பசத்தோடு பால் கொடுத்த செய்திகள் சம்ஸ்க்ருத இலக்கியத்தி லும் உண்டு மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார் இதன் கருத்து என்ன வென்றால் அன்பும் சிவனும் ஒன்றுகடவுள் இருக்கும் இடத்தில் பகைமை என்பது இராது.

நான் கண்ட சில அதிசயக் காட்சிகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன :

நாங்கள் மதுரையில் வடக்கு மாசிவீதியில் வசித்ததால் எப்போதும் வடக்கு கோபுரம் அதாவது மொட்டைக்கோபுரம் பூசாரியிடம் விபூதி வாங்கிக்கொண்டு  மீனாட்சி கோவிலுக்குள் நுழைவோம்; அக்காலத்தில் பாடும் தூண்களுக்கு இரும்புக்கூண்டு கிடியாது ஏதோ சங்கீதப் புலி என்று நினைத்துக்கொண்டு அதைக் கற்களால்  இரண்டு தட்டுத் தட்டிவிட்டு ஒரு மண்டபம் வழியாக நுழைவோம் அங்கே திருவிளையாடல் புராணத்தை நான் மேலே எழுதிய வசன நடையில் ஒருவர் சொல்லிக்கொண்டு இருப்பார்; அதை நிறைய கிராமத்தான்கள் மெய்ம்மறந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். நானும் சிறிது நேரம் நின்று அவரது வசன நடையை அனுபவித்துவிட்டு சந்நிதிக்குச் செல்வேன். அக்க்காலத்தில் இந்த தி வி பு வசன நடையை சிலர் மனப்பாடமாக சொல்ல முடிந்ததும் அதைக்கேட்கப் படிப்பறிவில்லாத ஒரு கூட்டம் கோவிலுக்கு வந்ததும் வியப்பான விஷயமே; இன்றும் அக்காட்சியை என்னால் மறக்க முடியவில்லை .

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே— திருமூலர் இயற்றிய திருமந்திர பாடல்

****

செண்பக பாண்டியனின் உண்மைப் பெயர் என்ன?

நாலு வகை மாலைகள் — இண்டன் மாலை, தொங்கன் மாலை, தா மாலை, கண்ணி மாலை .

வங்கிய சேகர பாண்டியன் மகன் வங்கிய சூடாமணி ; இவனுக்கு செண்பக பாண்டியன் என்ற புனைப்  பெயர் உண்டு ; காரணம் என்னவென்றால் இவன் வண்டுகள் மொய்க்காத சண்பகப் பூக்களைக் கொய்து, இண்டன் மாலை, தொங்கன் மாலை, தா மாலை, கண்ணி மாலை  கலாய்த்த தொடுத்து சிவபிரானுக்கு அளித்து அலங்காரம் செய்து மகிழ்ந்தான்; இதனால் இவனை சண்பக பாட்டியின் என்றே அனைவரும் அழைத்தனர் ; இவன் காலத்தில் தான் தருமி- நக்கீரர் மோதலும், சிவ பெருமான் நக்கீரர் மோதலும் நடந்தது. இதை அப்பர் பாடியுள்ளார் ; அவர் சங்கம் என்று தமிழ்ச் சங்கத்தைக் குறிப்பிட்டுப் பாடியதால் இந்த மன்னனது காலம் சங்க காலம் என்றும் தெரிகிறது . சிவ பெருமான் ஏழைப் பிராமணன் தருமிக்கு எழுதிக்கொடுத்த பாடலும் குறுந்தொகையில் முதல்  பாடலாக வைக்கப்பட்டுள்ளது  .   

கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி      

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ      

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்     

செறியெயிற் றரிவை கூந்தலின்     

நறியவு முளவோநீ யறியும் பூவே.

 (ப-ரை.) கொங்குதேர் வாழ்க்கை – பூந்தாதை ஆராய்ந்து உண்ணுகின்ற வாழ்க்கையினையும், அகம் சிறை தும்பி – உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே, காமம் செப் பாது – என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதையே கூறாமல், கண்டது மொழிமோ – நீ கண்கூடாக அறிந்த தையே சொல்வாயாக: நீ அறியும் பூ – நீ அறியும் மலர்களுள், பயிலியது கெழீஇய நட்பின் – எழுமையும் என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும், மயில் இயல் – மயில் போன்ற மென்மையையும், செறி எயிறு – நெருங்கிய பற்களையும் உடைய, அரிவை கூந்தலின் – இவ்வரிவையின் கூந்தலைப் போல, நறியவும் – நறுமண முடைய பூக்களும், உளவோ – உள்ளனவோ?

     (முடிபு) தும்பி, நீ அறியும் பூக்களுள் அரிவையின் கூந்தலைப் போல நறியனவும் உளவோ? மொழிவாயாக.

     (கருத்து) தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது.

இச்செய்யுளை, ‘ஆலவாய் இறையனார் தருமி என்னும் பிரமசாரிக்குப்  பொற்கிழி வாங்கிக் கொடுத்த சிந்தாசமுத்தி யகவல்’ என்று தமிழ் நாவலர்சரிதை கூறும்.

இது, பாண்டியனால் சங்க மண்டபத்தின் முன் கட்டப்பட்ட  பொற்கிழியைத் தருமி என்னும் பிரமசாரி ஒருவன் பெறும் பொருட்டு ஸ்ரீசோமசுந்தரக் கடவுள் இயற்றி அவனுக்கு அளித்ததென்று கூறப்படும்;”பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக், கொங்குதேர் வாழ்க்கைச்செந்தமிழ் கூறிப், பொற்குவை தருமிக் கற்புடனுதவி, என்னுளங் குடிகொண்டிரும்பய னளிக்கும், கள்ளவிழ் குழல்சேர் கருணையெம் பெருமான்’’(கல்லாடம் .1) கூறுகிறது.

****

ஒரிஜினல் சம்ஸ்க்ருதத்தில் உள்ளன

நமக்குக் கிடைத்த இரண்டு  தமிழ் தி.வி.பு.வும் ஒரிஜினல் / மூலம் அல்ல; அவை சம்ஸ்க்ருத நூல்களின் மொழிபெயர்ப்பு என்பதை அந்த ஆசிரியர்களே கூறுகின்றனர் ; ஆகையால் கந்தபுராணம் ஹாலாஸ்ய மஹாத்ம்யம் சிவ லீலார்ணவம் ஆகிய மூலங்களைக் கொண்டு ஆராய வேண்டும்; நம்பிக்கும் பரஞ்சோதிக்கும் இடையே 400 ஆண்டு இடைவெளி உள்ளது. நம்பியின் பாடல்களைப்போல இரு மடங்கு பாடல்கள் பரஞ்சோதி தி வி பு வில் உள்ளன.

****

மன்னர்கள் இடைவெளி –மன்னர்களுக்கு இடையே 12 ஆண்டுகள் இடைவெளி!

இடைக்காடன் என்பவர் சங்க காலப் புலவன் ; இவர் காலத்தில்  நடந்த பிணக்கினை/ பிரச்சினையை சிவ பெருமானே வந்து தீர்த்துவைக்கிறார்; இது நடந்தது குல பூஷண பாண்டியன் காலத்தில் . அவர் மகன்தான் மாணிக்க வாசகர் கால அரி மார்த்தன பாண்டியன் ; இதிலிருந்து மாணிக்கவாசகரும் சங்ககாலத்தில் வாழ்ந்தவர் என்பது தெளிவாகிறது. மேலும் அரிமர்த்தனனுக்கும் சம் பந்தர் கால கூன்பாண்டியனுக்கும் இடையே 12 மன்னர்கள் இருந்ததாகப் பரஞ்சோதி செப்புகிறார் அப்படியானால் சம்பந்தருக்கு  200 முதல் 300 ஆண்டுகளுக்கு முன்னர் மாணிக்க வாசகர் இருந்திருக்க வேண்டும்.

கடவுள் மீனவன்

தி வி பு.வில் உள்ள பல அதிசயங்களில் ஒன்று சிவ பெருமான் எடுத்த ரூபங்கள் ; அவர் மீனவனாக வருகிறார் இரத்தின வியாபாரியாக வருகிறார் கிழவனாக பாலனாக , வாட்போர் வீரனாக விறகு வெட்டியாக பாடகனாக புலவராக வருகிறார் ; இது போல பெரிய புராணத்திலும் காண்கிறோம் இந்த 64+63 =127  நிகழ்ச்சிகளையும், பக்தி என்பதை மறந்துவிட்டு, சமூக நோக்கில் பார்த்தால் அதிசயங்களுக்கு  மேல் அதிசயங்களைக் காணலாம்.

தொடரும்…………

Tags- திருவிளையாடல் புராணம்  சில அதிசயச் செய்திகள்-1

மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 7 (Post No.14,710)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,710

Date uploaded in London – 1 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 7 

ச. நாகராஜன்

2025 மே மாதம்1ம் தேதியிட்ட ஸ்வராஜ்யாஇதழில் திரு எம். நாகேஸ்வர ராவ் எழுதியுள்ள கட்டுரை :

திரித்து எழுதியதற்கான சாட்சியம் 

கல்வித்துறையில் இந்தியத்துவத்தை ஒழிக்கும் முயற்சியில் மௌலானா ஆஜாதாலும் அவருக்குப் பின் வந்தோராலும்  ஹிந்துக்களின் சரித்திரத்தையும் பண்பாட்டையும் மறைக்கும் முயற்சி நாம் சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர் தொடங்கப்பட்டது.

இடைக்காலத்தில் உருவான காலவரிசைப்படியான சரித்திரம்

 தபாகத் இ நஸிரி (Tabaqat – I – Nasiri) போன்ற ஆவணங்கள் ஆலயங்கள் அழிக்கப்பட்டதையும் கோரமான படுகொலைகளையும் ஆவணப்படுத்தியுள்ளன என்றாலும், இவை பாடபுத்தகங்களில் தவிர்க்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, சித்தூரை 1303ல் அலாவுதீன் கில்ஜி

அழித்ததையும் அதைத் தொடர்ந்து ராஜபுத்திரப் பெண்மணிகள் தற்கொலை செய்து கொண்டதையும் மிக அரிதாகவே இவை கூறின.

 மேலைநாட்டு வரலாற்று ஆசிரியர்கள்

அமெரிக்க வரலாற்று ஆசிரியரான வில் டியூரண்ட் 1935ல் எழுதிய தனது நூலான தி ஸ்டோரி ஆஃப் சிவிலைசேஷன் : அவர் ஓரியண்டல் ஹெரிடேஜ் (The Story of Civilization : Our Oriental Heritage) என்ற நூலில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்: இந்தியாவை முகலாயர்கள் வென்றதை வரலாற்றில் மிக கோரமான ரத்தம் சிந்தல் என்று கூறலாம். ஹிந்துக்களைப் படுகொலை செய்ததையும் அவர்களைக் கட்டாயப்படுத்தி மதம் மாற்றியதையும் ஹிந்துப் பெண்மணிகளையும் குழந்தைகளையும் அடிமைச் சந்தைக்கு தூக்கிச் சென்றதையும், கி.பி 800 முதல் 1700 முடிய ஆலயங்கள் இஸ்லாமிய வீரர்களால் அழிக்கப்பட்டதையும்  இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களும் அறிஞர்களும் மிக்க கர்வத்துடன் ஆவணப்படுத்தியுள்ளார்கள்.

லட்சக்கணக்கான ஹிந்துக்கள் வாள் முனையில் இந்தக் காலத்தில் இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டார்கள்.

 இது ஒரு துயரமான கதை. ஏனெனில் நாகரிகம் என்பது விலைமதிப்புடைய ஒரு விஷயம். அதனுடைய நுட்பமான ஒழுங்கும் சுதந்திரமும் பண்பாடும் அமைதியும் வெளியிலிருந்தும் உள்ளே அதிகமாகப் பெருக்கப்பட்ட காட்டுமிராண்டிகளாலும் தூக்கி எறியப்படக்கூடும் என்பதை அறிவித்த கதையாகும் இது.  ஹிந்துக்கள் உள்நாட்டுப் போர்களாலும், பிரிவுகளாலும் தங்கள் வலிமையை வீணாக்க அனுமதித்து விட்டனர். அவர்கள் வாழ்க்கையைச் செலுத்த புத்த மதம் ஜைன மதம் ஆகியவற்றைப் பின்பற்ற ஆரம்பித்தனர்.“

 இப்படி அவர் கூறினாலும் அது இந்திய கல்வித் துறை அ,மைப்பில் ஒரு வார்த்தை கூடச் சேர்க்கப்படவில்லை.

பாடபுத்தகத்தில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் 

மௌலானா ஆஜாதின் செல்வாக்குக்கு உட்பட்ட NCERT புத்தகங்கள் முகலாயரின் நிர்வாகத்தைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்திக் குறிப்பிட்டன. ஹிந்துக்களின் மீது விதிக்கப்பட்ட ஜஸியா வரி பற்றியோ இஸ்லாமிய ஆட்சியில்  கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதையோ அவை குறிப்பிடவில்லை.

                தொடரும்…………………………………,

நன்றிஆதாரம் : ட்ரூத்கல்கத்தா வார இதழ்

TRUTH Vol 93 Issue No 7 Dated 30-5-2025