Pictures of 2500 Indian Stamps!- Part 59 (Post No.14,672)

Written by London Swaminathan

Post No. 14,672

Date uploaded in London –  21 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 59

Stamps posted today include YEAR 2000, YEAR 2001, STAMPS,

Pictures of 2500 Indian Stamps,

MINT (NOT USED)  STAMPS;

 SANT TUKARAM, RAMANAND, GORA, BUDH GAYA, VISHWAVIDYALAYA HARIDWAR, BK GAIKWARD, MINERS SAFETY, BIHAR CHAMBER OF COMMERCE, TT KRISHNAMACHARI, BRAJLAL BIYANI, BABU GULABRAI, BHAGWAN BABA, , ALLAHABAD COLLEGE, ORDNANCE BICENTENARY, V V PATIL, PANDIT SURYANARAYAN VYAS, P.THACKERAY, KUSHINAGAR, SARNATH, RAJGIR, PLANTS, GAYA, CHILDREN S DAY, KATHAKALI, KABUKI, FOUR PLANTS, PATOLA, DHOKRA, THEWA, CHANDRAGIRI FORT, TAMRALIPTA JATIYA SARKAR, INDIAN RAILWAYS, CANE S BAMBOO

–subham—

Tags– 
Stamps posted today include YEAR 2000, YEAR 2001 STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 59 ,mint,

பஞ்சகல்யாணி: திருவிளையாடல் புராணத்தில் குதிரை சாஸ்திரம்- Part 2 (Post 14,761)

 Picture shows  Panchakalyani Horse

Written by London Swaminathan

Post No. 14,671

Date uploaded in London –  21 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

FIRST PART WAS POSTED YESTERDAY 20-6-25

வளங்கொள் காம்போச மிப்பரி யிம்மா மந்தர மிந்தவாம்                                      புரவி

விளங்கு காந்தார மிக்குரங் குளைவான் மீகமிக் கந்துகஞ்                                         சிந்து

துளங்கில் பாஞ்சால மிக்கன வட்டந் துளுவமிக்                                   குதிரையித்துரகங்

களங்கமி லிமயம் பருப்பத மிந்தக் கற்கியிம் மண்டிலங்                                      கலிங்கம்.

     இக் குதிரைகள் வளம் பொருந்திய காம்போச நாட்டிலுள்ளவை; மந்தர மலையிலுள்ளவை; காந்தார  வான்மீக,  சிந்து,  பாஞ்சால, நாட்டிலுள்ளவை; இக்குதிரைகள் குற்றமில்லாத பனிமலையி லுள்ளவை; இக்குதிரைகள் திருப்பருப்பதத்திலுள்ளவை; – இக்குதிரைகள் கலிங்க நாட்டிலுள்ளவை.

 இது முதல் நான்கு செய்யுட்களில் குதிரையின் பரியாயப் பெயர்கள் பலவற்றையும் ஆசிரியர் எடுத்தமைத்திருக்கும் திறன் பாராட்டற்குரியது. (104)

ஆரிய மிந்தப் பாடல மிந்த வச்சுவங் *கூர்ச்சர மிந்தச்

சீரிய துரங்கங் கேகய மிந்தத் திறலுறு கொய்யுளை யவனம்

வேரியம் பணைசூழ் மக்கமிக் கொக்கு விரிபொழில்                                      வனாயுச மிந்தப்

போரிய லிவுளி பல்லவ மிந்தப் பொலம்புனை தார்நெடும்                                         பாய்மா.

இக்குதிரைகள் ஆரிய நாட்டிலுள்ளவை; கூர்ச்சர கேகய நாட்டிலுள்ளவை;  இந்த வலிமிக்க பிடர்மயிரை யுடையகுதிரைகள் யவனநாட்டிலுள்ளவை; இக்குதிரைகள் மணம் நிறைந்த அழகிய வயல்கள் சூழ்ந்த மக்க நாட்டி லுள்ளவை; போர்புரியும் வன்மை அமைந்த இக்குதிரைகள் விரிந்த பொழில் சூழ்ந்த வனாயுச நாட்டிலுள்ளவை; இந்தப்பொன்னாலாகிய அழகிய கிண்கிணிமாலை யணிந்த நீண்டபாய்கின்ற குதிரைகள் பல்லவ நாட்டிலுள்ளவை. (105)

கற்றவர் புகழ்சவ் வீரமிக் கோரங் கன்னிமா ராட்டமிவ்                                      வன்னி

கொற்றவர் பயில்வா சந்திக மிந்தக் கோடகங் காடகங்                                     கன்னல்

உற்றகான் மீர மிவ்வய மிந்த வுத்தம கோணமா ளவமிவ்

வெற்றிசேர் குந்தங் கந்தர மிந்த விறல்புனை யரிசவு                                      ராட்டம்.

இக்குதிரைகள் புலவர் புகழுஞ் சவ்வீர நாட்டிலுள்ளவை; அழியாத மாராட்ட நாட்டிலுள்ளவை;  மன்னர்கள்வதியும் வாசந்திக நாட்டிலுள்ளவை;

காட்டிட மெல்லாம் கரும்புகள் நிறைந்த கான்மீர நாட்டிலுள்ளவை;

மாளவநாட்டிலுள்ளவை; கந்தரநாட்டிலுள்ளவை;  இந்த வெற்றியும் அழகுமுள்ள குதிரைகள் சவுராட்ட நாட்டிலுள்ளவை.  மாராட்டம் – மகாராஷ்டிரம். கான்மீரம் – காஸ்மீரம்.

****

விரிபொழிற் சாலி வேய்மிகு கிள்ளை வேறுதீ வாந்தர                                        மிந்தத்

துரகத மிந்தக் குரகதங் கொண்டல் சூழ்குருக் கேத்திர                                         மின்ன

பரவுபல் வேறு தேயமு முள்ள பரியெலா மிவன்றரு                                    பொருளின்

விரவிய நசையாற் கொணந்திவர் வந்தார் வேந்தகே                                ளிந்தவாம் பரியுள்.

 ஒப்பனைமிக்க இக்குதிரைகள், விரிந்த சோலைசூழ்ந்த சாலிநாட்டிலுள்ளவைகள்;  இந்தக்குதிரைகள் வேறு தீவாந்தரங்களிலுள்ளவை;  இக்குதிரைகள் முகில்சூழ்ந்த

குருக்கேத்திரத்திலுள்ளவை; இந்தப்பரந்த பல்வேறு வகைப்பட்ட

தேயங்களிலுமுள்ள குதிரைகளையெல்லாம், இவ்வாதவூரன் கொடுத்த பொருளினாற் போந்த விருப்பத்தால்,  இவர்கள் கொண்டு வந்தனர்;  மன்னனே கேட்பாயாக;  இந்தத்தாவுங் குதிரைகளுள்.

 குருக்கேத்திரம் – குருக்ஷேத்திரம்.

*****

தறுக ணாண்மைய தாமரை நிறத்தன தகைசால்

மறுவில் வான்குளம் புடையன மாளவத் தகத்த

பறையி னாலுவ படுசினை நாவலின் கனிபோற்

குறைவில் கோலத்த குளிர்புனற் சிந்துவின் கரைய”

பார சூரவம் பல்லவ மெனும்பதிப் பிறந்த

வீர வாற்றல விளைகடுந் தேறலி னிறத்த

பாரிற் றேர்செலிற் பழிபெரி துடைத்தென நாணிச்

சோரும் வார்புய றுளங்கவிண் புகுவன துரகம்”

பீலி மாமயி லெருத்தெனப் பெருவனப் புடைய

மாலை மாரட்டத் தகத்தன வளரிளங் கிளியே

போலு மேனிய பொருகடற் கலத்தின்வந் திழிந்த

கோல நீர்ப்பவ ளக்குளம் புடையன குதிரை”

என்னும் சிந்தாமணிச் செய்யுட்கள் இங்கே நோக்கற்பாலன. (107)

*****

வெண்ணிறஞ் சிவப்புப் பொன்னிறங் கறுப்பு வேறற                                   விரவிய நான்கு

வண்ணமுள் ளனவும் வேறுவே றாய மரபுமை வண்ணமும்                                         வந்த

எண்ணிய விவற்றின் சிறப்பிலக் கணத்தை                   யியம்புதுங்கேளெனவிகல்காய்

அண்ணலங் களிற்றாற் கருமறைப் பரிமே லழகியா                           ரரடைவுடன் விரிப்பார்.

– வெள்ளை நிறமும் சிவப்பு நிறமும் பொன்னிறமும்

கருப்புநிறமுமாகிய இந்நான்கும், வேறுபாடு இன்றிக் கலந்த நிறத்தையுடைய குதிரைகளும், அந்நிறங்களைத் தனித்தனியுடைய குதிரைகளும்,  ஐந்து நிங்களையுடைய குதிரைகளும் வந்தன.

மதிக்கத்தக்க இக்குதிரைகளின்,  சிறப்பிலக்கணங்களைக் கூறுவோம் கேட்பாயாக என்று, பகைவரைச் சினக்கும் பெருமையும் அழகுமுடைய யானையினையுடைய பாண்டியனுக்கு,  அரிய வேதப்பரிமேல் வந்தருளிய விடங்கர்,  முறைப்பட விரித்துக் கூறுவார்.

*****

வெள்ளிநித் திலம்பால் சந்திரன் சங்கு வெண்பனி   போல்வது

வெள்ளைத்

துள்ளிய புரவி மாதுளம் போது சுகிர்ந்தசெம் பஞ்சியின்                                      குழம்பிற்

றெள்ளிய நிறத்த செம்பரி மாமை சிறைக்குயில் வண்டுகார்                                     முகில்போல்

ஒள்ளிய கரிய பரியெரி யழலா னுரோசனை நிறத்தபொற்                                       பரியே.

வெள்ளியும் முத்தும் பாலும் மதியும்,  சங்கும்

வெள்ளிய பனியும் போன்றது, தாவுகின்றவெள்ளைக்குதிரையாகும்;  மாதுளம் பூவும் சீவிய செம்பஞ்சியின் குழம்பும் போல, தெளிந்த

நிறத்தினையுடையவை சிவப்புக் குதிரைகளாகும். கரிய மையும் சிறையையுடைய குயிலும் வண்டும் கரிய முகிலும்போல

ஒளியையுடையன கருங்குதிரைகளாகும்; எரிகிற் அனலும் கோரோசனையும் போன்ற நிறமுடையன பொன்மைக் குதிரைகளாகும்.

    ****

தெரிதர வகுத்த விந்நிற நான்குஞ் செறிந்தது *மிச்சிரு                                   மெனப்பேர்

உரைசெய்வர் முகமார் புச்சிவால் காலென் றுரைத்தவெட்                           டுறுப்பினும் வெண்மை

விரவிய தட்ட மங்கலந் தலைவால் வியனுர மென்றவிம்                                       மூன்றும்

ஒருவிய வுறுப்போ ரைந்திலும் வெள்ளை யுள்ளது பஞ்சகல்                                        யாணி. 

தெரியுமாறு வகுக்கப்பட்ட இந்நான்கு நிறங்களுங் கலந்து செறிந்த

குதிரைக்கு, மிச்சிரமென்று பெயர் கூறுவர்; முகமும் மார்பும் உச்சியும் வாலும் நான்கு கால்களும் என்று உரைக்கப்பட்ட, இவ்வொட்டு உறுப்புக்களினும் வெண்மை கலந்தது அட்டமங்கலமாகும்;  தலையும் வாலும் சிறந்த மார்புமாகிய இம்மூன்றும் நீங்கப்பெற்ற, ஓரைந்து உறுப்புக்களிலும் வெண்மையுள்ளது பஞ்சகல்யாணியாகும்.

  *****

அணிகிளர் கழுத்தில் வலஞ்சுழி திருந்தா லறிந்தவ

                             ரதனையே தெய்வ

மணியென விசைப்பர் முகந்தலை நாசி மார்பமிந்                                  நான்குமிவ் விரண்டு

பணிதரு சுழியு நுதனடுப் +பின்னைப் பக்கமு மொவ்வொரு                                        சுழியுந்

துணிதர விருப்ப திலக்கண முளதிச் சுழியில திலக்கண                                       வழுவே.

அழகு விளங்குங் கழுத்தின்கண் வலமாகச் சுழித்திருப்பின்,

பரிநூலினைக் கற்றுணர்ந்தவர், அச்சுழியினையே தேவமணி என்று கூறுவர்;  முகமும் தலையும் மூக்கும் மார்புமாகிய இந்நான்கு உறுப்புக்களிலும்,  நல மென்று கூறப்படும் இரண்டிரண்டு சுழிகளும், நெற்றி நடுவிலும் பின் பக்கத்திலும், ஒவ்வொரு சுழியும்  ஐயமற விருப்பது, இலக்கணம் உளது – இலக்கணமுடையகுதிரையாகும்; இச்சுழிகளில்லாததுbஇலக்கணக்குற்ற முடையதாகும். (111)

*****

பிரிவுற வுரத்தி லைஞ்சுழி யுளது பேர்சிரீ வற்சமா நுதலில்

இருசுழி யாதன் முச்சுழி யாத லிருக்கினு நன்றது வன்றேல்

ஒருவற நான்கு சுழிவலம் புரியா வுள்ளது நல்லது வன்றி

இருசுழி முன்னங் கால்களின் மூலத் திருக்கினு நல்லதென்

                                      றிசைப்பார்.

 (ஒன்றோ டொன்று நெருங்காமல்) பிரிவினைப் பொருந்த மார்பின்கண் ஐந்து சுழியுள்ள குதிரை,  ஸ்ரீவத்சம் என்னும்

பெயருடையதாகும்;  நெற்றியின் கண் இரண்டு சுழியாவது மூன்று

சுழியாவது இருந்தாலும் நலமாகும்;  அங்ஙனமில்லையானால்,  நீங்குதலின்றி (ஒன்றோடொன்று தொடர்ந்து) நான்கு சுழி வலம்புரியாக இருப்பது நன்மையாம்;  அல்லாமல்,  முன் கால்களின்

அடியில், இரண்டுசுழி இருந்தாலும் நலமென்று கூறுவர். (112)

******

மரணத்தை உண்டாக்கும் குதிரைகள்

களநடு விரட்டைச் சுழியுடைப் பரிதன் கருத்தனுக் கறமிடி                                       காட்டும்

அளவறு துன்ப மரணமுண் டாக்கு மவைகணைக் காலுள                                       வாகில்

உளபயந் துன்ப நிகளபந் தனமே லுதடுமுற் காலடி                                         கபோலம்

வளர்முழந் தாளிந் நான்கினுஞ் சுழிகண் மன்னினுந்

                          தலைவனை வதைக்கும்.

 கழுத்துநடுவில் இரட்டைச் சுழியினையுடைய குதிரை,  தன்தலைவனுக்கு மிகவும் வறுமையை உண்டாக்கும்;  (இன்னும்)அளவிறந்த துன்பத்தினையும் மரணத்தினையும் உண்டாக்கும்; அச்சுழிகள் கணைக்காலிலுள்ளனவாயின், அச்சமும் துன்பமும் விலங்கு பூணுதலும் உளவாகும்; மேலுதடும்

முன்காலின் அடியும் கபோலமும் வளர்ந்த முழந்தாளுமாகிய,

இந்நான்கினும் இந்நான்குறுப்பினும் சுழிகள் இருந்தாலும் தலைவனைக் கொல்லும்.

     உளபயம் – மனோபயம் என்றுமாம். (113)

*****

–subham—

Tags—பஞ்சகல்யாணி,  திருவிளையாடல் புராணம்,  குதிரை சாஸ்திரம்- Part 2 

GNANAMAYAM 22 JUNE 2025 BROADCAST SCHEDULE

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

PROGRAMME

Prayer by Mrs Jayanthi Sundar Team

***

Latha Yogesh from London presents World Hindu News in Tamil

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on – Jyothirlinga Shrine Tryambakeshwar Temple in Maharashtra

****

Talk by Prof Suryanarayanan in Tamil 

Topic- பேச்சு தமிழை மெருகேற்றும் வார்த்தைகள்! 

****

Book Review: Gomathi Karthikeyan from Chennai

****

SPECIAL PROGRAMME: Talk by Dr N Kannan Ph.D.

(Chemistry Professor; Author, Speaker; Tamil Heritage Foundation)

Topic: ANCIENT LINKS BETWEEN TAMIL NADU AND KOREA

 ****

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சிநிரல் ஞாயிற்றுக்கிழமை 22-6-2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழு

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து  லதா யோகேஷ் வழங்கும் செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

சொற்பொழிவு தலைப்பு- த்ரயம்பகேஸ்வர் ஆலயம், ஜோதிர்லிங்க தலம் ,மகாராஷ்டிரம் 

****

சொற்பொழிவு

பேசுனர்- பேராசிரியர் எஸ் சூரிய நாராயணன் 

தலைப்பு பேச்சு தமிழை மெருகேற்றும் வார்த்தைகள்!

****

புஸ்தக விமர்சனம் ;

நூலை விமர்சிப்பவர் –சென்னை கோமதி கார்த்திகேயன்

BOOK REVIEW BY GOMATHI KARTHIKEYAN, CHENNAI 

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு — டாக்டர் நா.கண்ணன் Ph.D.

(Chemistry Professor; Author, Speaker; Tamil Heritage Foundation)

தலைப்பு – கொரியா நாட்டுடன்  தமிழர் தொடர்பு ; புதிய ஆராய்ச்சி முடிவுகள்

ANCIENT LINKS BETWEEN TAMIL NADU AND KOREA

*****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

கோவில் பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் நூறு மார்க்! (Post No.14,670)

Written by London Swaminathan

Post No. 14,670

Date uploaded in London –  21 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

கோவில்  என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் .

1.தேங்காய் ,பழம், வெற்றிலை, பாக்கு எடுத்துச் செல்ல வேண்டும்  – பத்து மார்க்

2

3

4

5

6

7

8

9

10

விடைகள்

1.தேங்காய் ,பழம், வெற்றிலை, பாக்கு எடுத்துச் செல்ல வேண்டும்  – பத்து மார்க்

2.குளம் அல்லது குழாய் இருந்தால் கை, கால்களை சுத்தம் செய்து கொள்ளுதல்

3.பூச்சரம் அல்லது பூமாலை அல்லது வில்வம் துளசி , அருகம் புல் ,  அபிஷேகத்துக்கு பால் எடுத்துச் செல்ல வேண்டும்   – 10

4.நெற்றியில் திலகம், விபுதி, நாமம் அல்லது கோபி சந்தனம் – 10

5.கோவில் பிரசாதம் பெறுதல்/ வாங்குதல் -10

6. அர்ச்சனை டிக்கெட் வாங்குதல் –  10

7. அர்ச்சனைக்காக குடும்பத்தாரின் நட்சத்திரங்களை எழுதிக்கொண்டு செல்லுதல் -10

8. மொபைல் போனை ஆப் OFF செய்தல்

9. மூன்று முறை வலம் ; கடைசியில் நமஸ்காரம்; த்வஜ ஸ்தம்பத்தைத் தாண்டி கடைசி நமஸ்காரம்   -10

10 .தீப ஆராதனை, திரை போடும் நேரத்தை கேட்டு அறிவது ;

அல்லது

இலவச தரிசனமா காசு கொடுத்தா என்று முன்னரே முடிவு செய்வது – 10

–subham—

Tags- கோவில், பத்து விஷயங்கள், நூறு மார்க்

ஶ்ரீ ரவிதாஸர்! (Post No.14.669)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,669

Date uploaded in London – –21 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஞானமயம் நிகழ்ச்சியில் 15-6-2025 அன்று ஒளிபரப்பப்பட்ட உரை 

ஶ்ரீ ரவிதாஸர்! 

ச. நாகராஜன் 

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம். 

இறைவனுக்கு ஜாதி, அந்தஸ்து, ஆண், பெண் என்ற பேதமில்லை, தன் மீது யார் உண்மையான பக்தியைச் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு நேரில் தோன்றி அருள் புரிவான் என்பதற்கு எடுத்துக் காட்டாக ஏராளமான பக்தர்களின் சரித்திரங்கள் விளங்குகின்றன.

இந்த சரித்திரத்தில் முக்கியமான ஒரு சரித்திரமாக ஶ்ரீ ரவிதாஸரின் சரித்திரம் விளங்குகிறது.

கங்கா நதி தீரத்தில் ஒரு அழகிய கிராமத்தில் ரவிதாஸர் பிறந்தார். இவர் பிறந்த குலம் காலணிகளைத் தைக்கும் சக்கிலியர் குலமாகும்.

 இளமை முதலே இவர் இறைவனிடத்தில் பேரன்பு செலுத்தி வந்தார். பெரியோர்களிடமும் பக்தர்களிடமும் பெரு மதிப்பு வைத்திருந்தார்.

தான் தயாரிக்கும் காலணிகளில் ஒரு ஜதையை பக்தர் ஒருவருக்கு அளிப்பது இவரது வழக்கமானது.

ஒரு நாள் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் போது அந்த நீரோட்டத்தின் நடுவே  இறைவன் சாளிக்கிராம வடிவமாகத் தோன்றி அதை எடுத்து பூஜிக்கும் படி அசரீரியாகக் கூறினார்.

 அதை எடுத்து பூஜிக்க ஆரம்பித்தார் அவர். தோலினாலேயே பூஜைக்கான உத்தரிணி, வட்டில்கள் ஆகியவற்றைத் தயாரித்து அவற்றைப் பயன்படுத்தலானார் அவர்.

 இதைக் கண்ட அந்தணர்கள் இவர் பால் வெறுப்புக் கொண்டனர். ஒருவர் இவரிடம் வந்து, “இப்படிச் செய்கிறாயே! இது நியாயமா? பாவம் அல்லவா உன்னை வந்து பீடிக்கும்” என்று கோபத்துடன் கூறினார்.

 ஆனால் ரவிதாஸரோ, “ஸ்வாமி! அவரவர் கர்மங்களுக்கு ஏற்றபடி பிறவி அமைகிறது.  நான் வெள்ளிக்கும் தாமிரப் பாத்திரங்களுக்கும் எங்கே போவேன்? உலகில் உள்ள சகல பிராணிகளும் தோலினாலேயே அல்லவா மூடப்பட்டுள்ளன. அதற்கு என்ன தோஷம்? உள்ளன்புடன் இந்தத் தோலைப் பயன்படுத்தி நான் பூஜை செய்து வருகிறேன்” என்றார்.

 “நீ எனக்கே உபதேசம் செய்கிறாயா?” என்று ஆரம்பித்த அந்த அந்தணர் வெறுப்புடன் கடும் சொற்களை உபயோகிக்க ஆரம்பித்தார்.

 இதைப் பொறாத இறைவனே அங்கு நேரில் காட்சியளித்து, “அன்பனே! ரவிதாஸனே! உள்ளன்போடு என்னப் பூஜிக்கும் நீயே உத்தம பிராமணன். நீயே பிரம்மத்தை உள்ளபடி அறிந்தவன்” என்று சொல்லி விட்டு மறைந்தார்.

இந்தக் காட்சியைக் கண்ட அந்தணர் பிரமித்தார். ரவிதாஸரது மெய்யன்பையும் பக்தியையும் புரிந்து கொண்ட அவர், “ரவிதாஸரே! என்ன மன்னித்தருளுங்கள். நீங்கள் யார், உங்கள் பக்தி எப்படிப்பட்டது என்பதை அறியாது பேசி விட்டேன்” என்று கூறி அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.

இது போல பல அதிசய சம்பவங்கள் இவர்  வாழ்க்கையில் நிகழலாயின.

 ஒரு சமயம் பிரசாதத்தை உண்ணும் போது அந்தணர்கள் அமரும் பந்தியில் இவரை வரக் கூடாது என்று கட்டளையிட்டனர். அப்போது

பந்தியில் இருந்த ஒவ்வொருவரும் ரவிதாஸராகவே தோற்றமளித்தனர்.

 இதைக் கண்டு அனைவரும் பிரமித்தனர். இறைவன் அவர் மார்பிலே பூணூல் விளங்குவதைக் காட்டி அருளினார்.

நூற்றி இருபது வருடங்கள் வரை இவர் வாழ்ந்தார்.

ராமானுஜ மதத்தைப் பின்பற்றிய பெரியார்களுள் தலை சிறந்த பக்தர் ராமானந்தர் ஆவார். அவருக்கு ஏராளமான சிஷ்யர்கள் உண்டு. அவர்களில் முக்கியமான சிஷ்யராக அமைந்தார் ரவிதாஸர்.

இவருக்கு ராயி தாஸர் என்றும் ரோகிதாஸர் என்றும் வேறு பெயர்களும் உண்டு.

 ஏராளமான கவிதைகளைப் புனைந்ததோடு ஆங்காங்கே உபதேச அருளுரைகளையும் இவர் செய்து வந்தார்.

 இவர் பால் ஈர்க்கப்பட்ட பக்தர்கள் கபீர்ப்ந்த் என்று ஒரு பிரிவு இருப்பது

போல ரவிதாஸர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.

 இவர் தன் கவிதைகளுடன் உடலுடனேயே வைகுந்தம் சென்றடைந்தார் என்று பக்த விஜய வரலாறு கூறுகிறது.

 இவரது முக்கிய சிஷ்யையாக மேவார் நாட்டு அரசியும் பக்த மீராவின் தாயுமான ராணி ஜாலி இருந்தார்.

 பக்த மீராபாயின் காலம் 1498 முதல் 1546 முடிய என்று அறியப்படுவதால் ரவிதாஸ்ர் 1498 வாக்கில் வாழ்ந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது!

 இவரது கவிதைகள் அனைத்தும் ஆழ்வார்களின் பாசுரக் கருத்துக்களின் எதிரொலியாக அமைந்துள்ளன.

 பாரதியின் கண்ணம்மா பாடல்களில் வரும், “பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு என்ற வரியை நினைவூட்டும் வகையில்

“நீ அழகிய பசுமையான குன்றானால் நான் அதில் ஆடிக் களிக்கும் மயில் ஆவேன்

நீ குளிர்கின்ற மதி ஆனால் – உன் நிலவுக் கதிர்களுக்காக எங்கும் சகோரப் பட்சி நான்

நீ ஒளிமயமானால் அந்த தீபத்தின் திரி நான்

நீ அன்பின் வடிவம் என்றால் அதில் ஒரு திவலை நான்”

என்ற இவரது பாடல் அமைந்துள்ளது.

 நந்தனைப் போல்ஒரு பார்ப்பான்- இந்த

நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்,
எந்தக் குலத்தின ரேனும்- உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.

என்ற பாரதியாரின் பாடலை நினைவு கூரும் வகையில் இறைவனுக்கு தாழ்ந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்ற பாகுபாடு கிடையாது என்பதை உணர்த்தும் சரித்திரம் இவருடையது.

 சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருவரேனும்

மங்குவார் அவர் செல்வம் மதிப்போமல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில்

அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்

கங்கை வார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே

 என்ற நாவுக்கரசரின் பாடல் நமக்கு உண்மை பக்தியை விளக்குகிறது.

 அந்த வகையில் வாழ்ந்து இறைவனடி சேர்ந்த ஶ்ரீ ரவிதாஸர் பெரும் பக்தர்களில் போற்றத் தகுந்த ஒருவராவர்.

அவர் அடி போற்றி வணங்குவோம்!   என்று கூறி விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்.

*********

India only can bring World Peace! Message from Shankaracharya

Posted on 20-6-2025

This is from The New Indian Express Newspaper

Here is the transcript of the interview:

Our only intention is to make India a ‘Vishwa Guru’, and when this is achieved, there will be world peace says, Sri Sankara Vijayendra Saraswathi Swami, the 70th Shankaracharya of Sri Kanchi Kamakoti Peetham. In a freewheeling interview with TNIE, the Kanchi seer, who was camping in Bengaluru, spoke at length on multiple things, including freeing temples from government control, language issue and more youths getting into spirituality.

Can you tell us about Kanchi Kamakoti Peetham’s Dharma pracharam (propagating Sanatana Dharma)?

For ages, we have been protecting, preserving, and propagating Indian tradition, the Veda Shastra (Rigveda, Samaveda & Yajurveda), through our pathshalas (traditional Indian schools). We run schools and colleges, mainly for the economically disadvantaged, where prominence is given to imparting ‘Indian culture’ along with regular education. Kanchi Peetham imparts ‘spiritual education’ for Dharma Pracharam. The peetham imparts oriental education using the three-language formula.

What is the role of the Peetham in transforming India?

Our Veda (ancient holy texts), Vidya (education), and Vaidya (medicine) seva have helped many poor families. We run hospitals across India, with atleast one in each state, mainly providing free treatment to the poor. Our ‘Veda, Vidya and Vaidya’ have transformed India’s growth and will continue to do so. Eradicating poverty may be a ‘slogan’ in the recent past, but it is there in our ‘slokas’, and we have been doing this for a long time. ‘Deyam Deena Janaya ca Vittam’ says Adi Shankara.

We have been promoting agriculture, cow farming and socioeconomic projects based on the Indian knowledge system.

Is there a growing interest in spirituality among the younger generation? If yes, what is the reason?

Yes, there is a growing spiritual inclination among today’s youths. Why do people go to medical shops? They believe that medicines will cure them. Likewise, youths believe spirituality will cure them. Youths go behind ‘new things’ — no matter if they help them or not. After becoming aware that the ‘new things’ are of no use to them, youths turn back to Indian knowledge and spirituality.

There is a lot of debate going on about language issues. What is your say?

English, a global language, should be used just as a ‘connecting language’. It can be used in offices and for administrative purposes. At our homes, we should all be using our ‘mother tongues’, be it Kannada, Telugu, Tamil, Malayalam, etc. We must love and protect our mother tongue. Vedas, Shastras and other Indian traditional literary works are in the Sanskrit language. It must be used in temples and for Dharma prachara.

Amid global conflicts, what is the peetham doing to promote world peace?

From the past many years, we have been conducting Vishwa Shanthi (World Peace) homa annually in Kashmir. Because of the Indian upbringing and culture, we view everything with a service motive and humanity, while others may see everything solely with a business motive. Others only preach humanity but hardly practice it. We not only preach humanity but also follow it. With Dharma Prachara, we can achieve unity and solidarity. We need to arrive at a ‘win-win’ situation to stop conflicts. Our intention is to make India a ‘Vishwa Guru’. We are striving for it, and when this is achieved, there will be Loka Shanthi.

What is your response to the calls for reforms in Hinduism?

There have been calls, especially by politicians and others, irrespective of the parties, for reforms in Hinduism. They don’t demand reforms where it is needed the most. What is needed now is ‘worldly reforms’ and not any ‘religious reforms’. In case, if at all, there is a need for religious reforms, it should be left to the religious heads. They will do it. Politicians have no role in it.

What is your opinion on the government’s interference in the temple affairs?

There is too much government interference in the temple affairs and culture. Temple land, properties and money should be used for Dharma Prachara. In the olden days, governments (run by Kings) were involved in Dharma Prachara. They built temples and donated generously to them. However, the irony is that the governments are taking away everything from the temples.

There is a real need to support Dharma Pracharam for masses and extending welfare programmes for temple related people like Artists ( Shilpis, Nadaswara, Garland makers etc) & Archakas.

Temple must be independent. Every panchayat should have a ‘Pandit’ and every temple should be like ‘Tirupati’, and we are running a ‘religious infrastructure program’ to achieve this.

Do you feel there should be more understanding and unity between the government and the religious institutions?

Yes. There is no enmity between each other and both are working for the welfare of society only. Governments must function keeping in mind the interest of the nation, working on development and infrastructure. Religious institutions must be let free to function towards dharma prachara and culture & family values.

Religious mutts are helping the government, share its burden, by running schools, colleges and hospitals; in return, the government should also help the mutts for ‘dharma prachara’.

Stress has become very common these days. What is your advice to people to beat the stress?

Crossing of LOC (Love Affection Culture) is the main reason for stress. Everyone demands rights, but they should also know what their responsibilities are. The family system must be strong, and lifestyle change is needed. People don’t help each other. While one doesn’t know who their immediate neighbour is, but would know what is happening in the United States. The main reason for stress is that we are moving away from Indian culture. A culture-based value system is needed.

What is Kanchi Kamakoti Peetham’s future vision?

There are many literary works in the regional languages. They have to be translated into other languages and taken to the larger audiences. Cultural education through temples must be strengthened. Classes must be held on literature, music, Bhagwat Geeta, astrology, ethics and others.

People must devote some time to such classes. We need ‘industry’, as much as we need ‘agriculture’ and ‘culture’. We need to build Atmanirbhar Bharat. India must become the Vishwa Guru, and there must be global peace. It will take time, but until then we must keep putting our efforts and wait for the results.

–Subham—

Tags—Kanchi Shankaracharya, Interview, TNIE, newspaper, World Peace

1000 Saints in Bengaluru Conference


A Bharatiya Sant Maha Sammelan (Indian Saint Conference) was recently held in Bengaluru, Karnataka. The event focused on the preservation of Hindu Dharma, culture, and education. Many saints and religious leaders from across India attended the conference. 

1000 Saints in  Bengaluru  Conference 

Key details about the event:

  • Focus: The conference aimed to address challenges and strengthen the Hindu community. 
  • Attendance: Over 1,000 saints and religious leaders participated. 
  • Notable attendees: The event included participation from figures like Swami Rambhadracharya of Chitrakoot, Shankaracharya of Kanchi Kamakoti Peeth Swami Vijayendra Saraswati, and Param Pujya Govinddev Giri. 
  • International presence: Buddhist and Jain saints from Japan and the United States also attended. 
  • Specific resolutions: Participants resolved to protect Hindu Dharma, culture, and education. 

The conference is part of a larger effort to counter attempts to divide the Hindu community and strengthen its unity. 

****

Sanatan Prabhat > Post Type > News > National News > Bharatiya Sant Mahasammelan held in Bengaluru in the presence of 1,000 saints !

Bharatiya Sant Mahasammelan held in Bengaluru in the presence of 1,000 saints !

17 Jun 2025 | 06:05 PM

Attendance of Shankaracharya of Kanchi Kamakoti Peeth Swami Vijayendra Saraswati Swami; Param Pujya Govinddev Giri Maharaj, Sanatan Sanstha’s dharmapracharaksaint Pujya Ramanand Gowda

(Bengaluru, Karnataka) – On June 16, a meeting of sadhus and saint was held under the auspices of The Indian saint Mahasammelan in Bengaluru (Karnataka). More than 1,000 saints from across India came together to prevent attacks on Hinduism and teach Hinduism to Hindu children. The meeting was attended by Swami Rambhadracharya of Chitrakoot, Shankaracharya of Kanchi Kamakoti Peeth Swami Vijayendra Saraswati Swami, Param Pujya Govinddev Giri, Raghaveshwar Swami of Ramachandrapur Muth, Deshikendra Swami of Suttur, Swayamprakash Sachchidananda Swami of Hariharpur Muth, Jayendrapuri Mahaswami of Kailash Ashram, Nirmalananda Mahaswami of Adichunchangiri and saint Pujya Ramananda Gowda also participated. Buddhist and Jain saints from Japan and the United States participated in it.

Bharatiya Sant Maha Sammelan Held In Bengaluru, Resolve To Preserve Hindu Dharma, Culture, And Education

The Bharatiya Sant Maha Sammelanam was held in Bengaluru on 16 June 2025, with Pujya Shri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal of Kanchi Kamakoti Peetham presiding over the event.

During his address, His Holiness appreciated the efforts of Sri Swayamprakasha Sachidananda Saraswathi and Sri Jayendra Puri in organizing the conference. He described the Sammelanam as having a “Common Minimum Programme” (CMP) and stressed that it should blossom into a “Common Maximum Programme” in the future. His Holiness added that these concentrated efforts would enable India to become a “Vishwa Guru”—a world leader in peace and harmony.

The meeting drew a galaxy of spiritual leaders from across India and abroad, with over 1,000 saints in attendance, including Swami Ramabhadracharya, Govind Dev Giri Maharaj, the Pontiff of Suttur Math, as well as representatives from the Buddhist and Jain communities. Participants from Japan and the USA also took part in the event.

The saints collectively resolved to unite and work together to protect Hindus and impart education about their heritage to children in the community.

–subham—

Tags– Bharatiya Sant Maha Sammelan , Bengaluru,

Kanchi Shankatracharya

Kanchi Shankaracarya in Ravishankar Ashram

PM Modi Receives ‘Special Gift’ From Croatian Counterpart

ZAGREB, JUNE 19 2025

During his visit to Zagreb, Prime Minister Narendra Modi received a “special gift” from Croatian Prime Minister Andrej Plenković: a reprint of Vezdin’s Sanskrit Grammar. The gesture carries significant cultural significance, symbolising the centuries-old connection between India and Croatia.

Vezdin’s Sanskrit Grammar is the first printed Sanskrit grammar written in Latin. It was published in 1790 by Croatian scholar and missionary Filip Vezdin during his time in India.

Vezdin’s Sanskrit Grammar is the first printed Sanskrit grammar written in Latin in 1790 by Croatian scientist and missionary Filip Vezdin during his time spent in India.

 Croatian Prime Minister Plenkovic took to social media to highlight the historical and symbolic importance of the gift given to PM Modi. “I presented to the Indian Prime Minister Narendra Modi a reprint of Vezdin’s Sanskrit Grammar – the first printed Sanskrit grammar, written in Latin in 1790 by Croatia scientist and missionary Filip Vezdin (1748-1806), based on the knowledge he gained while living in India from Kerala Brahmins and local manuscripts.”

 He added that Vezdin was among the first European scholars to deeply engage with Indian languages and culture.

Responding to this, PM Modi posted on X, “Thank you, Prime Minister Plenković. This is indeed a remarkable symbol of the enduring intellectual and cultural bonds between India and Croatia! May these bonds get even stronger in the times to come.” 

*****

Tags: Croatia, Sanskrit Grammar, book, Modi ,Filip Vezdin (1748-1806)

திருவிளையாடல் புராணத்தில்குதிரை சாஸ்திரம்- Part 1 (Post 14,668)

Written by London Swaminathan

Post No. 14,668

Date uploaded in London –  20 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவிளையாடல் புராணத்தில் (தி.வி.பு) குதிரை சாஸ்திரம்

உலகத்தில் முதல் முதலில்  குதிரைகளைப் பழக்கி அவைகளைத் தேரில் பூட்டி பந்தயம் நடத்தியவர்கள் இந்துக்கள்;  குதிரை யாகம், குதிரைப் பந்தயம் பற்றி உலகிலேயே அதிகக் குறிப்புகள் ரிக்வேதத்தில்தான் உள்ளன .

ரதத்தின் பகுதிகளுக்கு மட்டுமே அறுபது சொற்கள் வேதகால நூல்களில் இருக்கின்றன!

ரிக்வேதத்துக்கு கி.மு 2000 BCE என்று வில்சன் முதலானோர் தேதி குறித்தனர். சுமேரியாவிலும்,எகிப்திலும் இதற்குப் பின்னர்தான் குதிரையைக் காண முடிகிறது .

எல்லாவற்றுக்கும் மேலாக KIKKULI கிக்குலி என்பவர் ஹிட்டைட் மொழியில், கியூனிபார்ம் லிபியில், எழுதிய  களிமண் பலகைக் கல்வெட்டில் குதிரையைப் பழக்க ஸம்ஸ்க்ருதச் சொற்களை பயன்படுத்தியதால் இந்துக்கள்தான்     இதில் நிபுணர்கள் என்பதும் தெரிகிறது.  ஆகவே கல்வெட்டில் கூட 3500 ஆண்டுகளுக்கு குதிரைக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் உள்ள தொடர்பு தெரிகிறது; மேலும் இந்தக் கல்வெட்டு கிடைத்த ‘துரக’ஸ்தானத்தில் ரிக்வேத தெய்வங்களின் பேரில் உடன்படிக்கை கையெழுத்திட்ட இன்னும் ஒரு கல்வெட்டும் கிடைத்துள்ளது; அவை மிட்டனி MITTANI CIVILIZATION நாகரிகத்தைச் சேர்ந்தவை. மன்னர்கள் பெயர்கள் எல்லாம் சம்ஸ்க்ருதத்தில் உள்ளன . மாக்ஸ்முல்லர் (1823-1900) செத்துப் போனபிறகு கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் அவரது ஆரிய திராவிடக் கொள்கைக்கும் ரிக் வேத தேதிக் கொள்கைக்கும் மரண அடி கொடுக்கிறது .

இப்போது அந்தக் கல்வெட்டுகள் பெர்லின் மியூசியத்தில் உள்ளன.

*****

குதிரைகளை இந்துக்கள் பழக்கிய இடம் ‘துரக’ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அதை இப்போது நாம் துருக்கி TURKEY என்று அழைக்கிறோம். அங்கிருந்து வந்தவர் துலுக்கர்கள். இதற்கு இஸ்லாமியர் என்ற பெயர் பிற்காலத்தில் வந்ததே. ஏனெனில் வராஹ மிஹிரர் 500 CE துரக TURAGA என்ற சொல்லுக்கு குதிரை என்ற பொருள் தந்துள்ளார்; அதற்குப் பின்னர்தான் இஸ்லாம் மதம் தோற்றுவிக்கப்பட்டது.

துரக என்றால் குதிரையின் வேகம், குதிரையின் பலம், எண் ஏழு என்ற பொருள்களும் உண்டு. இன்றும் நாம் ஹார்ஸ் பவர் HORSE POWER என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

****

மாணிக்கவாசகர் காலத்தில் அராபியர்கள் குதிரை ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டனர் அவைகளைக் கிழக்குக்கரை துறைமுகங்களில் இறக்கி வியாபாரம் செய்தனர் . அவைகளை விலைக்கு வாங்குவதற்கு  பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அவரை பொற்காசு மூட்டையுடன் அனுப்பினான். போகும் வழியில் திருப்பெரும்துறையில் குருந்த மரத்துக்கு அடியில் உபதேசம் செய்துகொண்டிருந்த குருவினைப் பார்த்தவுடனே அவரது  வாழ்க்கையே மாறியது. பின்னர் நடந்த நரி- பரி திருவிளையாடலை அப்பர் பெருமானும் பாடியதால் இவை எல்லாம் மகேந்திர பல்லவன் காலத்துக்கு 600 CE முன்னர் நடந்ததும் தெளிவாகிறது.

****

இனி தி வி பு வில் பரஞ்சோதி முனிவர் சொல்லும் குதிரைவகைகளைக் காண்போம்:–

நாவலர், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை

உரகத வாரந் தோற்றா துயர்மறைப் பரிமேல் வந்தார்

மரகத நிறத்து நிம்ப மாலைதாழ் மார்பி னாற்குக்

குரகதங் கயிறு மாறிக் கொடுப்பவர் பொதுமை யாய*

துரகத விலக்க ணங்கள் சொல்லுவான் றொடங்கி னாரே.

பாம்பணியைக் காட்டாமல் மறைத்து, – உயர்ந்த

வேதக் குதிரைமேல் வந்த இறைவர்,

மரகதம் போன்ற நிறத்தினையுடைய வேப்ப

மலர்மாலை தொங்கும் மார்பினையுடைய பாண்டியனுக்கு

குதிரைகளைக் கயிறுமாறிக்

கொடுக்கலுறுவார், பொதுவாகிய குதிரை இலக்கணங்களை, சொல்லுவான்

காயும்வேன் மன்ன வோரிக் கடும்பரி யமையம் வந்தான்

ஞாயிலுந் தாண்டிச் செல்லு நாட்டமு நுழையாச் சால

வாயிலு நுழையுங் கண்ட வெளியெலாம் வழியாச் செல்லுந்

தீயவெம் பசிவந் துற்றாற் றின்னாத வெனினுந் தின்னும்.

பகைவரைச் சினக்கும் வேற்படையை யுடைய வேந்தனே, ஒப்பற்ற இந்த வேகமுடைய குதிரைகள் – போர் புரிதற்குரிய

சமையம் நேரின், மதிலுறுப்பையும் தாவிச்செல்லும்;

பார்வையும் நுழையாத பல கணிவாயிலிலும் நுழைந்து செல்லும்;

பார்த்த வெளிகளனைத்தையும் வழியாகக் கொண்டு செல்லும்;

மிகக் கொடியபசி வந்துற்றால், தின்னப்படாத வைக்கோல் முதலிய வற்றையுந் தின்னும்.

சிலேடை அர்த்தம்

ஓரி – நரி. ஞாயில் -சூட்டு என்னும் மதிலுறுப்பு. நரியாதற்கேற்ப, ஞாயிலும் என்பதற்கு நாயைக் காட்டிலும் என்னும் பொருளும், சாலவாயில் என்பதற்கு வலையின் துவாரம், மனையின் நீர் கழிவாயில் என்னும் பொருள்களும் கொள்ளுதலும் பொருந்தும்.

காடு கரை முதலிய வெல்லாம் வழியாகச் செல்லும் என்றும், பிணம் முதலியனவும் தின்னும் என்றும் நரிக் கேற்கப்பொருள் கொள்க.

(MY COMMENTS:- தான் கொண்டுவந்தவை நரிகள் என்பதை சிலேடை மூலம் சிவ பெருமான், அதாவது குதிரைச் சேவகன் வேடத்தில் வந்தவர், செல்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம் )

பொருவில்சீ ரிலக்கணப் புரவி யொன்றுதான்

ஒருவன திடைவதிந் துறையி னொல்லென

மருவுறுந் திருமகண் மல்லற் செல்வமும்

பெருகுறுங் கீர்த்திகள் பல்கும் பெற்றியால்.

ஒப்பில்லாத சிறந்த இலக்கணம் நிறைந்த ஒரு குதிரை

ஒருவனிடத்துத் தங்கி உறையுமாயின், திருமகள் விரைந்து வந்து

அவனைப் பொருந்துவாள்;  வளப்பமிக்க செல்வமும் பெருகும்;

புகழ்களும் பல நிற்கும்.    

நெய்த்திடு மாந்தளிர் நிறத்த நாவின

வைத்திடு குளம்புக ளுயர்ந்த வார்ந்துநேர்

ஒத்திடு மெயிற்றின வுரமுங் கண்டமும்

பைத்திடு மராப்படம் போன்ற பாடலம்.

பசையினையுடைய மாந்தளிர் போன்ற நிறத்தினையுடைய

நாவினையுடையனவாய், நிலத்தில் வைக்குங் குளம்புகள் உயர்ந்தனவாய்,  நீண்டு தம்முளொத்த பற்களை யுடையனவாய்,

மார்பும் மிடறும் பரந்த பாம்பின் படம் போன்றனவாய குதிரைகள்,

பாடலமெனப் பெயர் பெறும்.

இது பாடலம் என்னும் குதிரையின் இலக்கணம்

அகலிய நுதலின வாய்ந்த குஞ்சிபோல்

நிகரறு கொய்யுளை நிறமொன் றாயின

புகரறு கோணமூன் றாகிப் பொற்புறு

முகமுடை யனவய மொய்கொள் கோடகம்.

அகன்ற நெற்றியை யுடையனவாய்,

சிக்கறுத்த மயிர் போல (வாய்ந்து) ஒப்பற்ற புறமயிர்,

ஒரே நிறம் வாய்ந்தனவாய், குற்றமற்ற மூன்று கோணமுடைய தாய்,

அழகு பொருந்திய முகத்தை யுடைய குதிரைகள், வெற்றியும் வலியுமுடைய கோடகம் எனப்பெயர் பெறும்.. இது கோடகம் என்னும் குதிரையின் இலக்கணம் .

முட்டிய சமரிடை முகத்தில் வாளினால்

வெட்டினு மெதிர்ப்பதாய்க் குரங்கு வேங்கைதோல்

பட்டிமை நரியரி சரபம் பாய்முயல்

எட்டிய கதியின விவுளி யென்பவே.

நெருங்கிய போரின்கண், தம் முகத்தில் வாளினால்

வெட்டினாலும், எதிர்த்துப் போர் புரிவதாய், குரங்கும் புலியும் யானையும், வஞ்சகமுள்ள நரியும் சிங்கமும் சரபப்புள்ளும் பாய்கின்ற முயலுமாகிய இவற்றின், மிக்க கதியினையுடைய குதிரைகளை, இவுளி என்று கூறுவர். இவுளி என்னும் குதிரையின் இலக்கணம்.

உன்னம நீளமுண் டாகிச் சங்குவெண்

கன்னலின் வாலிய விலாழி காலவதாய்ப்

பின்னமா கியதனி வன்னம் பெற்றுமை

வன்னமு முடையது வன்னி யாவதே.

உயரமும் நீளமுமுடையதாய், சங்கும் வெள்ளைச்சருக்கரையும் போல,

வெண்மையாகிய வாய் நுரையைக் கக்குவதாய், ஒப்பற்ற பிங்கல நிறம் பெற்று, அதனோடு கருநிறமு முடைய குதிரை, வன்னி என்று சொல்லப்படுவதாகும். இது வன்னி என்னும் குதிரையின் இலக்கணம்.

திணிதரு கழுத்தினிற் சிறந்த தெய்வத

மணியுள தாகியெண் மங்க லத்ததாய்

அணிதரு பஞ்சகல் யாண முள்ளதாய்க்

குணிதரு நீரது குதிரை யாவதே.

திண்ணிய கழுத்தில், சிறந்த தெய்வ மணியுள்ளதாய், அட்டமங்கல முடையதாய்,  அழகிய பஞ்சகல்யாண முள்ளதாய், இங்ஙனம் வரையறுக்கப்பட்ட பெற்றியையுடைய பரி, குதிரை என்னும் பெயருடையதாகும்.

     தெய்வமணி – கழுத்தில் வலமாகச் சுழித்திருக்கும் சுழி;

இதனை இப்படலத்து 111-ம் செய்யுளிலும், எண்மங்கலம்,

பஞ்சகல்யாணம் என்பவற்றின் இலக்கணங்களை 10-ம் செய்யுளிலும்

காண்க. குதிரை யென்பது ஓர் வகைக்குச் சிறப்புப் பெயருமாயிற்று.

இது குதிரை என்னும் குதிரையின் இலக்கணம் கூறிற்று. (92)

Pañcakalyāṇi (பஞ்சகல்யாணி) [pañca-kalyāinoun < idem. +. Horse whose feet and face are white; நாற்கால்களிலும் முகத்திலும் வெண்மைநிறம்வாய்ந்த குதிரை. [narkalkalilum mugathilum venmainiramvayntha kuthirai.] (அசுவசாத்திரம் [asuvasathiram] 33.)

குங்குமங் கருப்புரங் கொழுந்திண் காரகிற்

பங்கமான் மதமெனக் கமழும் பாலதாய்ச்

சங்கமு மேகமுஞ் சரப முங்கொடுஞ்

சிங்கமும் போலொலி செய்வ தாம்பரி.

குங்குமமும் கருப்பூரமும் கொழுவிய திண்ணிய கரிய அகிற்குழம்பும் மான் மதமுமாகிய இவற்றின் நறுமணங்கமழும் பான்மையை யுடையதாய், சங்கும் முகிலும் சிம்பும்  கொடிய  சிங்கமுமாகிய இவற்றைப்போல் ஒலிக்குங் குதிரை. பரி என்னும் பெயருடையதாகும்.

மான்மதம் – கத்தூரி. இதுபரி என்னும்

குதிரையின் இலக்கணம்

நாலுகால் களுங்கடைந் தெடுத்து நாட்டினாற்

போல்வதாய்க் கொட்புறும் போது சுற்றுதீக்

கோலையொப் பாகிமேற் கொண்ட சேவகன்

காலினு ளடங்குவ தாகுங் கந்துகம்.

நான்கு கால்களும் கடைந்து எடுத்து நாட்டிவைத்தாற்

போல்வதாய், சுழலும் போதில்,  கொள்ளிவட்டம் ஒப்பதாகி,

ஏறிய வீரனுடைய காலினுள் அடங்கும் குதிரை, கந்துகம் என்னும்

பெயருடையதாகும். இது கந்துகம் என்னும் குதிரையின் இலக்கணம்.

அரணமுந் துருக்கமு மாறுந் தாண்டிடும்

முரணின வாகியிம்* முற்றி லக்கணப்

புரணமெல் லாநிறை புரவி போந்தன

இரணவே லாய்வய தெட்டுச் சென்றவால்.

மதிலும் மலைமேற் கோட்டையும் நதியுமாகிய

இவற்றைத் தாண்டிடும் வலியினையுடையனவாய்,

 இம்முழு இலக்கணமும் ஒளியும் நிறைந்த குதிரைகள் வந்தன;

 பகைவரைப் புண்படுத்தும் வேற்படையேந்திய பாண்டியனே,

இவைகள் எட்டு வயதாயின .

பகைத்திற முருக்குமிப் பரிகண் மன்னநீ

உகைத்திடத் தக்கவென் றோதி வேதநூற்

சிகைத்தனிச் சேவகர் திரும்பித் தம்மனோர்

முகத்தினை நோக்கினார் மொய்த்த வீரரும்

வலிமிக்கபகைவர்களைக் கொல்லும் இக்குதிரைகள், வேந்தனே, நீ

நீ செலுத்தத் தக்கவை என்று சொல்லி, மறைநூலின் முடிவாகிய

உபநிடதத்தின் உட்பொருளாகிய இறைவர்,

தமது கணங்களின் முகத்தைத் திருப்பிப்

பார்த்தனர் :

வாம்பரி மறைக்கெலாம் வரம்பு காட்டுவ

தாம்படி கண்டவ ரறிவும் பிற்படப்

போம்படி முடுக்கினார் புரவி யாவையும்

வேம்பணி தோளினான் வியப்பு மெய்தியே.*

தாவுகின்ற குதிரைகளின் இலக்கணங்களைக் கூறும் பரி நூலனைத்திற்கும் எல்லை காட்டும் படி கண்டவர்கள் மனமும் பின்னிடப் போமாறு, குதிரைகளனைத்தையும் விரையச்

செலுத்தினார்கள்; வேப்பமலர் மாலையையணிந்த தோளையடைய பாண்டியன் மகிழ்வேயன்றி வியப்பு மெய்தினான்.

.பரிமறை – புரவிநூல். அஸ்வ சாஸ்திரம்

ஆத்தராய் மருங்குறை யமைச்சர் யாரையும்

பார்த்தசை யாமுடி யசைத்துப் பைப்பையப்

பூத்தவா ணகையொடு மகிழ்ச்சி பொங்கினான்

தீர்த்தனு நடத்தினான் றெய்வ மாவினை.

மந்திரிகளனைவரயும் நோக்கி, துளங்காத முடியினைத் துளக்கி, மெல்ல அரும்பிய ஒள்ளிய புன்னகையுடன் மகிழ்ச்சி தெரிவித்தான்;

தெய்வத்தன்மையை யுடைய குதிரையை இறைவனும் நடத்தியருளினான்.

 to be continued………………………….

TAGS–திருவிளையாடல் புராணம், (தி.வி.பு),  குதிரை சாஸ்திரம், பாடகம், பரி இவுளி, பஞ்ச கல்யாணி. , part 1

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அணிவகுப்பில் நாய்கள் !! (Post No.14,667)

Written by London Swaminathan

Post No. 14,667

Date uploaded in London –  20 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

2025 ஜூன் 15 ஆம் தேதி  அமெரிக்காவில் ராணுவ தின அணிவகுப்பு நடந்தது; வழக்கமான  ஆயுதங்களுடன் இரண்டு இயந்திர / ரோபாட் நாய்களும் நடந்து வந்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது . அணிவகுப்பு மரியாதையை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் -பும் அவர் மனைவி மெலானா ட்ரம்ப் -பும்  ஏற்றனர்.

சென்ற ஆண்டு ட்ரம்ப் -ப்பை நோக்கி ஒருவர் சுட்டது முதல் அவர் பாதுகாப்புக்கு ரோபாட்/ இயந்திர நாயும் சேவையில் அமர்த்தப்பட்டது.

இதன் காரணமாக இப்போது பிரான்ஸ் தலை நகர் பாரீசில் நடக்கும் ரோபாட் கண்காட்சிக்கு மதிப்பு அதிகரித்துள்ளது.

****

புல்லட் பாயிண்டுகளில் ரோபாட் நாய் புராணம்:–

என்னை உதையுங்கள் என்ற போர்டுடன் ஒரு நாய் நிற்கிறது; அது இயந்திர நாய்தான்; ஆனாலும் எல்லோருக்கும் பயம்! பக்கத்தில் போனால், இரண்டு கால்களில் நின்று உங்களை வரவேற்கும்; கை கொடுக்கும்!

விலை £ 1600 பவுண்ட் முதல் £ 120000 பவுண்ட் வரை !

பயங்கரவாதத்தை ஒழிக்க இது பயன்படுகிறது; வெடி குண்டு இருப்பதாக தகவல் வந்தால் இது தைரியமாகச் சென்று செயலில் இறங்கும்; அப்படியே வெடித்தாலும் இறப்பது வெறும் மிஷின்தான்.

காப்பி கொண்டு வா என்றாலும் கொண்டு வரும்.

இன்னும் ஒரு கம்பெனி பட்லர் நாய்களை உருவாக்கி வருகிறது; இனி வேலைக்காரர்கள் திடீரென்று லீவு போட்டு உங்களை மிரட்ட முடியாது. இந்த பட்லர் நாய்கள் ஒயின், காப்பி, காலை உணவு கொண்டு வரும்; துணி துவைக்கும்; தரையை சுத்தப்படுத்தும்; ஏற்கனவே விமான நிலையங்களில் இவைகளை பார்த்திருப்பீர்கள்

இந்த பட்லர்/ வேலைக்கார ரோபாட்டுக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் .

அப்பாடா; இனி வேலைக்காரிகள் லீவு போடுவது பற்றி கவலையே இல்லை என்று பெருமூச்சு விட்டுவிடவேண்டாம் .

இந்த பட்லர் ரோபாட்டும் சரியான சண்டிதான்! இருபது நிமிடம்தான் வேலை செய்யும் பின்னர் பிளக்கை மாட்டி ரீசார்ஜ் செய்யவேண்டும். நீங்களே சொல்லுங்கள்! பட்லர் வேண்டுமா? பட்லர் ரோபாட் வேண்டுமா?

–சுபம்–

TAGS– அமெரிக்க ஜனாதிபதி, அணிவகுப்பில்,  ரோபாட்,நாய்கள் , பட்லர், வேலைக்கார  ரோபாட்