ஆலயம் அறிவோம்! மன்னார்குடி ராஜகோபால சுவாமி !!(Post No. 14, 646)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 646

Date uploaded in London –16 June 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ஞானமயம் நிகழ்ச்சியில் 15-6-2025 அன்று ஒளிபரப்பப்பட்ட உரை

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி

கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி

என்றென்றுஉன் சேவகமே ஏத்திப் பறை கொள்வாய்

இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

                 – ஆண்டாள் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் சோழ மண்டலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மன்னார்குடி திருத்தலமாகும்.

இது தக்ஷிண த்வாரகா என அழைக்கப்படுகிறது.

23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஆலயத்தில்

எழுந்தருளியுள்ள ராஜகோபால சுவாமி கிருஷ்ணரின் வடிவமாக அறியப்படுகிறார்.

இறைவர் :  ஶ்ரீ, ராஜகோபால சுவாமி

இறைவியார் : செங்கமலத் தாயார், செண்பக லட்சுமி, ஹேமாம்புஜ நாயகி, ரக்தப்ரஜ நாயகி, படிதாண்டாப் பத்தினி

தீர்த்தம் : ஹரித்ரா நதி, துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம்

விமானம் : ஸ்வயம்பு விமானம்

154 அடி உயரமுள்ள ராஜ கோபுரமும் கோவிலின் நுழைவுப் பகுதியில் 54 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன கருட ஸ்தம்பமும் அனைவரையும் வியக்க வைப்பவை.

கோவிலைப் பற்றிய பழம் பெரும் வரலாறு ஒன்று உண்டு. இங்கு நான்கு வேதங்களைக் கற்ற வேத விற்பன்னர்கள் வாழ்ந்தமையால் இது ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும் செண்பக மரங்கள் அடர்ந்திருந்த காரணத்தால் செண்பகாரண்யா என்றும் ஶ்ரீ ராஜகோபாலன் குடி கொண்டிருப்பதால் ராஜமன்னார் என்றும்,மன்னர்கள் கோவில் கட்டியதால் மன்னார்குடி என்றும் அழைக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது.

கோவிலைப் பற்றிய புராண வரலாறு ஒன்றும் உண்டு. பெரும் முனிவரான வாஹி என்ற பெரிய முனிவருக்கு கோபிளர், கோபிரளயர் என இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்கள் துவாரகைக்குச் சென்று கண்ணபிரானை வழிபடச் சென்றனர். ஆனால் வழியிலே அவர்களைச் சந்தித்த நாரதர் கிருஷ்ணர் விண்ணுலகம் ஏகி விட்டதைத் தெரிவித்து, செண்பகாரண்யம் சென்று கிருஷ்ணரை வழிபடுமாறு கூறியருளினார். அதன்படி அவர்கள் இங்கு வந்து கிருஷ்ணரை வழிபடலாயினர். கிருஷ்ணரின் அனைத்து லீலைகளையும் அவர்கள் இங்கேயே கண்டு களித்தனர்.

இங்கு ராஜகோபால சுவாமி ஒரு பாலகனாக இடையன் கோலத்தில் காணப்படுகிறார். ஒரு வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாகச் சுருட்டி வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை கொலுசு ஆகிய குழந்தை அணியும் அணிகலன்களையும் அணிந்திருக்கிறார்.

கூடவே ஒரு பசுவும் இரண்டு கன்றுகளும் அவர் அருகில் உள்ளன.

குவலயாபீடம் என்னும் யானையை கம்சன் ஏவி விடவே கிருஷ்ணர் யானையின் தந்தத்தை உடைத்து அதை அடக்கினார். இதைச் சுட்டிக்காட்டும் வகையில் இங்கு கிருஷ்ணரின் இடது கையில் தந்தம் உள்ளது.

கிருஷ்ணரின் பால்ய லீலைகளை நினைவூட்டும் கோவில் இது.

உற்சவரின் சிலை வெங்கலத்தினால் உருவாக்கப்பட்ட சிலையாகும்.

கோவிலை சுண்ணாம்புக் கலவை கொண்டு முதலாம் குலோத்துங்க சோழன் இதைப் புதுப்பித்தான். அவனது கல்வெட்டு ஒன்றும் இங்கு காணப்படுகிறது.

கோவிலில் மொத்தம் 16 கோபுரங்கள் உள்ளன. 18 விமானங்கள், 24 சந்நிதிகள், ஏழு பிரகாரங்கள், ஒன்பது நவ தீர்த்தங்கள் 2 மரத்தினால் ஆன தேர்கள் உள்ளிட்டவற்றைக் கொண்ட திருக்கோவிலாகும் இது.

கோவிலில் எழுந்தருளியுள்ள ராஜகோபால சுவாமியின் உயரம் 12 அடி ஆகும்.

இங்குள்ள குளம் 1158 அடி நீளமும் 837 அடி அகலமும் கொண்டுள்ளது. இது ஹரித்ராந்தி என்று அழைக்கப்படுகிறது. கோபியர்கள் மஞ்சளுடன் இங்கு குளித்ததால் நீர் மஞ்சள் நிறம் அடைந்ததால் ஹரித்ராந்தி என்று இது அழைக்கப்படுகிறது.

திருநாழி பிரகாரம், கருட பிரகாரம், செண்பக பிரகாரம், காசி பிரகாரம், நாச்சியார் பிரகாரம் உள்ளிட்ட பிரகாரங்களையும் வல்லாள மஹாராஜா மண்டபம், ஆயிரம் கால் மண்டபம், கருட வாகன மண்டபம், யானை மண்டபம், பலகணி மண்டபம், வெண்ணெய் தாழி மண்டபம், புன்னை வாகன மண்டபம் உள்ளிட்ட மண்டபங்களும் இங்கு அமைந்துள்ளன.

ராஜகோபால சுவாமியையே தன் குல தெய்வமாகக் கருதிய விஜயராகவ நாயக்கர் தன்னை மன்னாரு தாசன் என்றே அழைத்துக் கொண்டார். அவர் இயற்றிய தெலுங்கு மொழியில் இருந்த படைப்புகள் அனைத்தையும் அவர் ராஜகோபாலனுக்கே சமர்ப்பித்தார். அவர் இயற்றிய பல நாடகங்கள் இந்தக் கோவிலின் ஆயிரம் கால் மண்டபத்திலேயே அரங்கேற்றப்பட்டது.

இங்கு ஓரிரவு தங்கினால் ஒரு கோடி ஆண்டு தவம் இருந்ததற்குச் சமம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆண்டின் 12 மாதங்களிலும் இங்கு உற்சவம் நடப்பது இந்தக் கோவிலின் சிறப்பாகும்.

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் செங்கமலத் தாயாரும் ஶ்ரீ ராஜகோபால சுவாமியும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.

**

நேருஜியின் தவறுகள்! – 1 (Post No.14,645)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,645

Date uploaded in London – –16 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நேருஜியின் தவறுகள்! – 1 

ச. நாகராஜன் 

பண்டிட் ஜவஹர்லால் நேரு போன்ற மாமனிதர் ஒருவரைப் பார்க்கவே முடியாது என்ற ஆரம்பத்துடன் அவர் மிகவும் தாராள மனதுள்ளவர் என்று கூறி ஒரு பெரிய பட்டியலைத் தந்துள்ளார் அன்பர் ஒருவர் இணையதளத்தில்!

 பாகிஸ்தானுக்கு மூன்று பெரிய நதிகளை அவர் தானமாக அளித்தார்.

லடாக்கிற்கு நமது பகுதியைக் கொஞ்சம் அளித்தார்.

சீனாவுக்கோ யு என் இருக்கையைத் தந்தார்.

மயன்மாருக்கு (பர்மாவுக்கு) கோகோ தீவுகளைத் தந்தார்.

தனக்கு பாரத ரத்னா அளித்துக் கொண்டார்!

 இப்படி ஆரம்பிக்கும் கட்டுரை ஒரு நீண்ட பட்டியலைத் தருகிறது.

1.      ஐக்கியநாடுகள் சபை அளித்த நிரந்தர இருக்கையை வேண்டாம் என்று மறுத்தார்.

2.      பாரதத்துடன் இணைகிறோம் என்று நேபாளம் கூறிய போது அதை மறுத்தார்.

3.      பாரதத்துடன் பலூசிஸ்தான் இணைகிறோம் என்று கூறிய போது அதை மறுத்தார்.

4.      காஷ்மீர் பிரச்சனையை உருவாக்கினார்.

5.      சீன- பாரத யுத்தத்திற்கு தலைமை வகித்தார்.

6.      நியூக்ளியர் உடன்பாட்டிற்கு உடன்படாமல் மறுத்தார்.

7.      1964ம் ஆண்டு அமெரிக்கா ஒரு அணுஆயுத சாதனத்தைத் தர முன்வந்த போது அதை வேண்டாம் என்று மறுத்தார். ஒருவேளை சிறந்த அஹிம்சாவாதியாக அவர் திகழ்ந்ததனால் அப்படி மறுத்திருக்கலாம்!

8.      தவறான நோக்குடைய கூட்டு சேராக் கொள்கைக்கான இயக்கத்திற்கு தலைமை வகித்தார்.

9.      கோவாவின் மீது அக்கறை செலுத்தாமல் இருந்தார்.

10. தடையிலா சந்தை (ஃப்ரீ மார்கெட்) முதலாளித்துவத்தை எதிர்த்து சோஷியலிஸத்தை ஆதரித்தார்.

11. ஊழலைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை.

12. அதிகாரத்தை நெடுங்காலம் பற்றிக் கொண்டிருந்தார்.

13.  பத்திரிகை சுதந்திரத்தைத் தடுத்ததோடு சுதந்திரமாக பேசும் பேச்சுரிமையையும் அடக்கினார்.

14. ஆரம்ப கல்வியை ஆதரித்து, ஊக்குவித்து, அதை அமுல்படுத்துவதில் தோல்வி அடைந்தார்.

15. 1957ல் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள அரசைக் கவிழ்த்தார்.

16. பாகிஸ்தானை உருவாக்கினார்.

17. சர்தார் படேலை பிரதம மந்திரி ஆவதற்கு அனுமதிக்கவில்லை.

18. பர்மாவிற்கு மணிபூரில் உள்ள காபோ பள்ளத்தாக்கை இலவசமாக அளித்தார்.

19. பர்மாவிற்கு மிகவும் முக்கியமான கோகோ தீவுகளை அளித்தார்.

20. க்வாதார் துறைமுகத்தை ஓமன் அளித்த போது அதை ஏற்க மறுத்தார்.

21. திபெத்தை கவிழ்த்து விட்டு, இந்தியாவின் நீர் ஆதாரத்திற்கும் வடக்கு எல்லைக்கும் சீனாவை நம்பி இருக்கும் நிலைக்கு இந்தியாவைத் தள்ளி விட்டார்.

22. நட்பு என்றும் நல்லெண்ணம் என்றும் கூறி ஒருதலைப்பட்சமான ஒரு ஒப்பந்தத்தைப் பாகிஸ்தானுடன் செய்தார்.  சிந்து நதியில் பாயும் நீர் கொள்ளளவில் மூன்று பங்கு நீரை பாகிஸ்தானுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து சிந்து நீர் ஒப்பந்தத்தைச் செய்தார். இதற்கு நன்றிக் கடனாக ஐந்தே வருடங்களில் பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுத்தது.

23.  சோமநாத் ஆலயத்தை சர்தார் படேல் மீண்டும் புனரமைத்தபோது அதை எதிர்த்தார்.

24. பாதகனான ஹைதராபாத் நிஜாமிடமிருந்து ஹைதராபாத்தை விடுவிக்க சர்தார் படேல் செய்த முயற்சிக்கு தடைகளைச் செய்தார்.

இன்னும் பட்டியல் நீள்கிறது.

–          தொடரும்

நன்றி : கொல்கத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும் ஆங்கில பத்திரிகை TRUTH VOL 93 – ISSUE NO 8 (6-6-2025)

**

Rare Pictures from 1928 Italian Book- Part 2(Post No.14,644)

Written by London Swaminathan

Post No. 14,644

Date uploaded in London –  15 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART TWO OF

Title INDIA

Author Mario Appelius

Pictures from Benares, Calcutta, Lahore, Kata, Tibet, Sikkim, Agra, Ahmedabad.

SINGAPORE BARBER, 

Strange thing is he shows African Hippotamus I Ganesh Temple in Benares Temple, Musim men and women in Tibet. We have to verify through his Italian write ups Ascetics, Lamas are shown. He shows the picture of Indo- Cinese temple in Benares!

See the pictures:

Year MCMXXVIII (1928)

Part TWO

AND 

PICTURES FROM

THE HISTORY OF ARYAN RULE IN INDIA

E B HAVELL

LONDON 1928

 BUDDHA, SANCHI STUPA, BHARHUT STUPA, VILLAGE PLAN

FOLLOWING PICTURES ARE FROM ITALIAN BOOK

–Subham—

Tags- Mario appelius, 1928 book, India, Hippopotamus , BENARES, GANESH Temple, PART TWO, ARYAN RULE, EB HAVELL, TWO BOOKS, SARANATH, SANCHI, BHARHUT

57Pictures of 2500 Indian Stamps!- Part 57 (Post No.14,633)


Written by London Swaminathan

Post No. 14,643

Date uploaded in London –  15 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 57


Stamps posted today include YEAR 2000, YEAR 2001, STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 57, 

MINT (NOT USED)  STAMPS;

AVTORS, FILMS, CORAL SPECIES, FREEDOM FIGHTERS, POET BHARATIDASAN, SHYAM PRASAD MUKERJEE, N G RANGA, RAJ KAPOOR, SIVAJI GANESAN, DR V SHANTARAM, BREAST CANCER, GEOLOGICAL SURVEY, JAGDEVV PRASAD, MITRA SEN, VIJERAJE SCINDIA , JHALKARI BAI,  RANI AVANTI BAI, YURI GAGARIN,  BP MANDAL, LACHCHU MAHARAJ, BRAHM PRAKASH, DIGBOI REFINERY, 

–subham—

Tags– 
Stamps posted today include YEAR 2000, YEAR 2001 STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 57 ,mint, RAO TULARAM, 

New Agastya with 74 Poetic Compositions! (Post No.14,642)

Written by London Swaminathan

Post No. 14,642

Date uploaded in London –  15 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Ganga Devi has praised Agastya , the author of seventy four Poetic Compositions, in the first  canto of Madura Vijayam. This Agastya is nothing to do with the Agastya rishi found in the Rig Veda. We know many Agastyas from Vedic days to a very late period. In Tamil we have astrology and medical books in his name ; there is even a devotional hymn அகத்தியர் அருளிய லலிதா நவரத்தின மாலை Lalitha Navaratnamala done by Agastya sung in the Tamil bhajans.

The poet Agastya mentioned by Ganga Devi was a poet in the court of Prataparudradeva of Warangal and an elder contemporary of Ganga Devi. It is guessed, not without sufficient reasons, he was under the patronage of Sangama and Bukka also. The Pratapa Rudrayaso- bhushana was among his noted works. Of the seventy-four works attributed to him  a few are extant.   These are Balabharata, Krishnacarita, Nalakirti kaumudi, Lakshmi Stotra ,Sivastava, Lalitasahasranamam ,

Manipariksha,Sivasamhita, and Sakaladikara .

Agastya seems to have distinguished himself as a writer of excellent prose. His nephew Gangadhara

was a dramatist and wrote at least three plays :

Mahabharata ,Candravilasa and Raghavabyudhayam .

Ganga devi greets him as the second Vyasa  who made the Bharata story visually enjoyable .

****

What is in the Madura Vijayam?

Canto 1

This canto contains the following pieces of information:

1.Gives the names of contemporary luminaries.

2.Gives the information about the parentage of kumara Kampana—mentions Bukka and Harihara  and describes the qualities of  the head and heart of Bukka.  Also mentions the name of Bukka’s queen Devayi. It may be noted that it is the only source giving information about the chief queen of Bukka.

3.Describes the city of Vijayanagar. Compare this with the descriptions of the city given by Paes, Nicolo Conti Abdur Razak and others who visited the city in the heyday of its prosperity. Pampa is mentioned as the branch of Vijayanagara.

Canto 2

The birth of Kampana and also of the other two sons of Bukka, Kampana and Sangama.

Canto 3

1.Gives an account of the early training of Kampana.

Mentions his marriage with Ganga Devi.

Canto 3

Contains very interesting and valuable historical information which can be analysed as follows:

Bukka’s analysis of the pollical situation in the Tamil country.

His exhortation to Kampana to destroy the chieftains in the tamil country and to establish himself at Kanci as its ruler.

After winning over the people of Tondaimandalam , Kampana has to march on his conquest of Madurai.

Canto 4

Preparations for the march on the Sambuvaraya territory.

The size of Vijayanagara army described.

The allies of Vijayanagara the Colas, the Keralas and the Pandyas .

The orderly march of the army.

Camping at Mulbagal. Then the move to Virincipuram.

The siege of  Padaiveedu and the fight with the Sambuvarayas.

The defeat of the Sambuvarayas and the death of the Sambuvaraya king at the hands of Kampana.

Canto 5

Kampana establishes a just and prosperous rule in

Kanchipuram.

Cantos six and seven

Contain no historical information.

Canto 8

The condition of the Tamil country after Muslim occupation

The concluding canto

The final battle with the Muslims.  The conquest of Madurai by Kampana after the defeat and the death of the sultan in the battle.

–subham—

Tags- Agastya, 74 poetic compositions, Madura Vijayam, Kumara Kampana, Conquest of Madurai , death of Sultan, Condition of Madurai

பழனி பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் நூறு மார்க்! (Post.14,641)

Written by London Swaminathan

Post No. 14,641

Date uploaded in London –  15 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பழனி என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள்

1.அறுபடை வீடுகளில் ஒன்று   – பத்து மார்க்

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

விடைகள்

1.அறுபடை வீடுகளில் ஒன்று   – பத்து மார்க்

2.பஞ்சாமிர்தம்

3.தண்டபாணி கோலம்

4.பழம் நீ அப்பா கதை- விநாயகர்- முருகன் உலக வலம் வரும் போட்டி

5.போகர் சமாதி அல்லது சித்தநாதன்/ வாசனை விபூதி 

6.அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்

7.காவடி அல்லது ஆண்டுதோறும் பழனிக்கு வரும் பாதயாத்திரை

8.கே பி சுந்தராம்பாள் அல்லது பெங்களூர் ரமணி அம்மாள் பாடல்கள்

9. ROPE CAR அல்லது 670 படிகள் மலையேறவேண்டும்

10.பண்டாக்கள்/ பூஜாரிகள்

–subham—

Tags– பழனி ,பத்து விஷயங்கள்,   சொல்லுங்கள் ,  நூறு மார்க்,  

லண்டன் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி1562025 (Post No.14,640)

Written by London Swaminathan

Post No. 14,640

Date uploaded in London –  15 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

குறுக்கே (நீல வர்ணம்) 

1.மந்திராயலத்தில் சமாதி கொண்ட மஹான்

4. வள்ளுவரின் மனைவி பெயர்; பாம்பின் பெயர்.

5. லண்டி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்த பிரிட்டிஷ் தலை நகரின் பெயர்

6. — இல்லை என்பதன் எதிர்ப்பதம்

7.  பழைய பெயர் வஞ்சிஅமராவதி நதிக்கரை ஊர்

********

கீழே / மேலே

1. – தினமும் ஒன்றரை மணி நேரம் வரும் இந்த நேரத்தில் இந்துக்கள் நல்ல செயல்களைத் துவங்க மாட்டார்கள் .

2. – தமிழ் நாட்டின் வட எல்லை என்று தொல்காப்பியம் சொல்லும் இடம்.

3. – மாணிக்கவாசகர் பிறந்த ஊர்.

6. –  இதன் உரோமத்திலிருந்து கம்பளி நெய்யலாம்.

6.-  பெண் என்பதன் எதிர்ப்பதம்

7. ↑– காந்திஜி இறந்த செய்தி கேட்டு மக்கள் கண் ……….

15 6 2025

1 2 3  
       
    4  
  5      
 6 ↑      
      7  ↑   ←

விடைகள்

குறுக்கே (நீல வர்ணம்) 

1.ராகவேந்திர் –

மந்திராயலத்தில் சமாதி கொண்ட மஹான்

4.வாசுகி- வள்ளுவரின் மனைவி பெயர்; பாம்பின் பெயர்.

5.லண்டன்- லண்டி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்த பிரிட்டிஷ் தலை நகரின் பெயர்

6.ஆம்  — இல்லை என்பதன் எதிர்ப்பதம்

7.கரூர் ← பழைய பெயர் வஞ்சி. அமராவதி நதிக்கரை ஊர்

********

↑  ↑  ↓  →     ←

கீழே / மேலே

1.ராகுகாலம் – தினமும் ஒன்றரை மணி நேரம் வரும் இந்த நேரத்தில் இந்துக்கள் நல்ல செயல்களைத் துவங்க மாட்டார்கள் .

2.வேங்கடம் – தமிழ் நாட்டின் வட எல்லை என்று தொல்காப்பியம் சொல்லும் இடம்.

3.திருவாதவூர் – மாணிக்கவாசகர் பிறந்த ஊர்.

6.ஆடு –  இதன் உரோமத்திலிருந்து கம்பளி நெய்யலாம்.

6.ஆண் ↑ பெண் என்பதன் எதிர்ப்பதம்

7.கலங்கினர் ↑– காந்திஜி  இறந்த செய்தி கேட்டு மக்கள் கண் கலங்கினர்.

15 6 2025

ரா1வே2ந்தி3ர்
கு ங் ரு 
கா  வா4சுகி
ல  5ண்ன் ங்
ம்ஆ6ம் வூ 
 டு  ர்ரூக7

–சுபம்–

Tags– லண்டன், தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி,1562025

விண்வெளி வணிகம் : அபாயங்களும் சவால்களும்! (Post No.14,639)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,639

Date uploaded in London – –15 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

19-4-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

விண்வெளி சவால்! 

விண்வெளி வணிகம் : அபாயங்களும் சவால்களும்! 

ச. நாகராஜன்

  கடலை அளந்து கப்பல் மூலம் வணிகம் கண்டாயிற்று. வானை அளந்து விமானம் மூலம் வணிகம் செய்தாயிற்று.

அடுத்து விண்வெளியை அளக்க வேண்டியது தானே! 

அடுத்த பெரிய தாவலுக்கு மனித குலம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 

 வாய் சவடால் இல்லை; வரப் போகும் நிஜமான வாய்ப்பு தான் விண்வெளி வணிகம்.

 இதில் சவாலும் உண்டு; அபாயங்களும் உண்டு. இவற்றை எதிர்கொண்டு வென்றால் நினைக்கவே முடியாத அளவு கோடானுகோடி அளவு லாபமும் உண்டு. 

என்ன என்று பார்க்கலாமா?

சந்திரனில் ஹீலியம் இருக்கிறது. ஹீலியத்தை யார் எதிர்காலத்தில் கொண்டிருக்கிறார்களோ அவர்களே செல்வந்தர்கள். அந்த நாடே வளம் கொழிக்கும் நாடு. 

அஸ்ட்ராய்ட் (Astroid) எனப்படும் குறுங்கோள்களில் உள்ள தாது வளத்தை கற்பனை செய்தாலே உள்ளம் குளிர்ந்து விடும்.

 அவ்வளவு செல்வம்! வானம் எங்கும் வைரங்கள்! நிஜமான வைரங்கள்!!

 இவற்றை எல்லாம் பூமிக்குக் கொண்டு வர வேண்டுமென்றால் விண்வெளியில் நீண்ட தூரத்திற்குச் சென்று திரும்பும் விண்வெளிப் பயணத்திற்கான சாதனங்கள் தேவை.

 குறுங்கோள்களிலும் சந்திரனிலும் சுரங்கங்களைத் தோண்டும் தொழில்நுட்பம் தேவை; அதற்கு உரிய சாதனங்கள் தேவை.

 சந்திரனில் சில தளங்களும் தேவைப்படும். ஆராய்ச்சி, தகவல் தொடர்பு இவற்றுக்கெல்லாம் உரிய அலுவலகம் தேவை. இங்கு பணியாளர்களும் வேண்டும்.

 பயணிகளும் இயந்திர சாதனங்களும் மாறி மாறிச் செல்வதற்கான நிலையங்கள் தேவை. இதற்கு குறுகிய தூர ஷட்டில் சர்வீஸ் வேண்டும்.

 விண்வெளிக் கலங்கள், சாடலைட்டுகள் தேவை. அதற்கான நிலையங்கள் தேவை. முக்கியமாக இவற்றிற்கான எரிபொருள் வசதி வேண்டும்.

 சுரங்கத்தில் தோண்டி எடுக்கப்பட்ட பொருள்களை வெற்றிகரமாக பூமிக்குக் கொண்டு வர வேண்டும். ஜனத்தொகை அதிகம் இல்லாத இடத்தில் பத்திரமாக இவை இறக்கப்பட வேண்டும். அத்தோடு செலவைக் குறைக்கும் வகையில் சரியான இடத்திலும் இவை சேகரிக்கப்படும் ஸ்டோர் அமைப்புகள் வேண்டும்.

 ஒருமுறை மட்டுமே செல்லும்படி விண்வெளிக் கலங்கள் இருக்கக் கூடாது. திருப்பித் திருப்பிச் செல்லும் படி இவை வடிவமைக்கப்பட வேண்டும். உலகெங்கும் பல ஏவுதளங்கள் இதற்கென தேவைப்படும்.

 விமானநிலையங்களைப் போலக் கட்டுக்கோப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள், தகவல் சாதனங்கள் உள்ளிட்டவை தேவை.

 இப்போதே மலைக்க வைக்கும் அளவு விண்வெளியில் குப்பைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவை ஒன்றின் மீது ஒன்று மோதினாலும் ஆபத்து; நம் தலையில் விழுந்தாலும் ஆபத்து. அதாவது பல்லாயிரம் பேர் மடிந்து போவர்.

 ஏராளமான டேடா எனப்படும் தரவுகள் பல்வேறு விஷயங்களில் தேவைப்படும். தூரத்திலிருந்து இயக்க வல்ல சுரங்க சாதனங்கள் இருந்தால் தான் தாதுக்களை தோண்டி எடுப்பது பற்றி சிந்திக்கவே முடியும்.

 கண்காணிப்பு சாதனங்களும் அதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் நிபுணர்களும் ஆயிரக்கணக்கில் தேவைப்படுவர்.

 இதற்கென தனி விண்வெளி நிர்வாக மேலாண்மை தேவை. இதற்கான பயிற்சி தேவை.

 அது போகட்டும், இவை எல்லாம் செய்ய முடியும் என்று வைத்துக் கொண்டாலும் நாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுவதால் ஏற்படும் பகைமைப் போட்டியிலிருந்து உருவாகும் பிரச்சினைகள், தீவிரவாதிகளின் பிரச்சினைகள் இவற்றை சமாளிக்க முடியுமா?

நேரடியாக மோதாமல் விண்வெளி குப்பைகளை ஏவி விட்டு நாசவேலை செய்பவர்களை அடக்க வேண்டுமே!

 வருடம் முழுவதும் 24 மணி நேரமும் அவசரகால உதவி சில விநாடிகளில் பறந்து செல்லும்படி இருக்க வேண்டும். என்ன இருந்தாலும் மனித உயிர்கள் விலை மதிக்க முடியாத செல்வம் அல்லவா!

 என்ன தலை சுற்றுகிறதா? விண்வெளியில் பறக்காமலேயே தலை சுற்றினால் இந்த பிரச்சினைகளை எல்லாம் யார் தான் தீர்ப்பதாம்?!

 அட, கப்பல் வணிகம் கண்டோம்; விமானத்தில் பறந்தோம். ராக்கெட்டில் பறக்கிறோம். விண்வெளியை வெல்ல முடியாதா என்ன?

சவாலைச் சந்திப்போம்; வெற்றி கொள்வோம்!

 வானத்தில் இருக்கும் வைரச் சுரங்கங்கள் இனி நமதே! அவை அனைத்தும் பூமிக்கு வரும். எங்கும் இனி ஜொலிஜொலிப்பு தான்! பளபளப்பு தான்!

**

 ரயில் பயணம்  பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் நூறு மார்க்! (Post.14,638)

Written by London Swaminathan

Post No. 14,638

Date uploaded in London –  14 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ரயில் பயணம் என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் .

 1.ரயில் டிக்கெட்  – பத்து மார்க்

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

விடைகள்

1.ரயில் டிக்கெட் – பத்து மதிப்பெண்கள்

2.புறப்படும் நேரம்புறப்படும் பிளாட்பார்ம் -10

3.ஸ்டேஷனுக்குப் போக பஸ் அல்லது ஆட்டோ அல்லது டாக்சி BOOKING-10

4.தண்ணீர் பாட்டில்உணவுப்பொட்டலம்-10

5.போகும் ஊரிலுள்ள முகவரி/ டெலிபோன் எண்கள் -10

6.பணம் கிரெடிட்கார்ட், மொபைல் போன் அல்லது  வீட்டுச் சாவி.-10

7.தேவையான உடை -10

8.போகும் ஊரில் உங்களை அழைக்க ஏற்பாடு-10

9.அலுவலக வேலையானால் – கம்யுயூட்டர்/ ஆபீஸ் பேப்பர்கள்

உறவினரைப் பார்க்க என்றால் பரிசுகள், குழந்தைகளுக்கு ஆடை அல்லது பொம்மைகள், ஸ்வீட் பாக்கெட்டுகள்-10

10.படிக்க புஸ்தகம் –10

–subham—Tags- ரயில், பயணம் ,பத்து விஷயங்கள், நூறு 

Rare Pictures from 1928 Book- Part 1(Post No.14,637)

Written by London Swaminathan

Post No. 14,637

Date uploaded in London –  14 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Title –INDIA

Author –Mario Appelius

Published from Milan, Italy.

Pictures from Benares, Calcutta, Lahore, Kata, Tibet, Sikkim, Agra, Ahmedabad.

Strange thing is he shows African Hippotamus I Ganesh Temple in Benares Temple, Musim men and women in Tibet. We have to verify through his Italian write ups Ascetics, Lamas are shown. He shows the picture of Indo- Cinese temple in Benares!

See the pictures:

Year MCMXXVIII (1928)

Part one

–Subham—

Tags- Mario appelius, 1928 book, India, Hippopotamus in Temple