ஆலயம் அறிவோம்! வட திருமுல்லை வாயில் (Post No14,610)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 610

Date uploaded in London –9 June 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

8-6-25 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பான உரை!

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்

    சூழ் கொடி முல்லையாற் கட்டிட்டு

எல்லை இல் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு

    அருளிய இறைவனே, என்றும்

நல்லவர் பரவும் திருமுல்லைவாயில்

    நாதனேநரைவிடை ஏறீ

பல்கலைப் பொருளே படு துயர் களையாய்

   பாசுபதா பரஞ்சுடரே!

                 – சுந்தரர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் தொண்டைமண்டலத்தில்அமைந்துள்ள வடதிருமுல்லைவாயில் திருத்தலமாகும்.

சென்னை – ஆவடி சாலையில் சென்னையிலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் ஆவடியை அடுத்து அமைந்துள்ளது இது.

தஞ்சை மாவட்டத்தில் தென் திருமுல்லை வாயில் உள்ளதால் இது வடதிருமுல்லைவாயில் என்று அழைக்கப்படுகிறது.

இறைவர் :  மாசிலாமணீஸ்வரர், நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர்

இறைவியார் : கொடியிடை நாயகி அம்மன்

தல விருட்சம் : முல்லை (இது வெளிச்சுற்றில் நந்தியின் அருகில் உள்ளது)

தீர்த்தம் : கல்யாண தீர்த்தம்

பண்டைய காலத்தில் கிருத யுகத்தில் இரத்தினபுரமாகவும் திரேதா யுகத்தில் வில்வ வனமாகவும், துவாபர யுகத்தில் சண்பக வனமாகவும் விளங்கி இப்போது கலி யுகத்தில் முல்லைவனமாகத் திகழ ஆரம்பித்தது.

இத்தலத்தைப் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.

முன்பொரு காலத்தில் காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு தொண்டைமான் அரசாட்சி புரிந்து வந்தான். அதே சமயம் புழல்கோட்டையிலிருந்து கொண்டு ஓணன் மற்றும் காந்தன் என்னும் அசுரர்கள் எருக்கத் தூண்களும் வெங்கலக் கதவும் பவழத் தூண்களும் கொண்டு பைரவ உபாசனையுடன் அரசாண்டு வந்தனர்.  இவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட கோவில் ஓணகாந்தந்தளி என்ற தலமாகும்.

இவர்களைக் காண தொண்டைமான் வந்த போது  கோழம்பேடு என்னும் இடத்தில் இரவு நேரத்தில் தங்கி உறங்க ஆரம்பித்தான். அப்போது வெங்கல மணியோசை கேட்டது. அங்கு ஒரு சிவத்தலம் இருக்க வேண்டும் என்று எண்ணிய அவன் மறு நாள் காலை யானை மீது ஏறி வந்தான். அப்போது அசுரர்களான ஓணனும் காந்தனும் அவனை எதிர்த்தனர். தனியாக வந்த தொண்டைமான் தன் சேனைகளுடன் வருவதற்காகத் திரும்பினான்.

அப்போது அவன் யானையின் கால்கள்  முல்லைப்புதர் ஒன்றில் மாட்டிக் கொள்ள மன்னன் தன் உடைவாளால் முல்லைப்புதரை வெட்டினான். அங்கிருந்து இரத்தம் பீறிட்டது. உடனே கீழே இறங்கிப் பார்த்த தொண்டைமான் அங்கு ஒரு சிவலிங்கம் இருக்கக் கண்டான்.

திகைத்துப் போன தொண்டைமான் தன்னை தனது வாளால் அரிந்து கொள்ள முயன்றான். அப்போது இறைவன் அவனுக்குக் காட்சி தந்து அருளினான். “ மன்னா! நான் வெட்டுப்பட்டாலும் பரவாயில்லை. நான் மாசு இல்லா மணியே தான். வருத்தப்படாதே. உனக்குத் துணையாக நந்தியை அனுப்புகிறேன். வெற்றி பெற்று வருக” என்று இறைவன் அருளவே நந்தியுடன் தொண்டைமான் கிளம்பினான்.

அவன் நந்தியுடன் வருவதை அறிந்த ஓணனும் காந்தனும் அவனிடம் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து  அந்த மன்னன் இரு எருக்கத்தூண்களை எடுத்து வந்தான். அந்தத் தூண்களே இன்றும் சுவாமி சந்நிதியின் முன்னால் உள்ளன. 

வெங்கலக் கதவும் பவழத் தூண்களும் திருவொற்றியூரில் வைக்கப்பட்டதாகவும் காலைப் போக்கில் அவை வெள்ளத்தின் வசப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இங்குள்ள நந்தி இதன் காரணமாக கிழக்கு நோக்கி உள்ளது. ஐந்து நிலைகளை உடைய ராஜ கோபுரம் தெற்கு பார்த்து உள்ளது. அருகில் தீரத்த குளம் உள்ளது.

ராஜகோபுரத்தின் எதிரே சந்நிதி வீதியில் பதினாறு கால் மண்டபமும் அருகில் வசந்த மண்டபமும் உள்ளன.

ராஜகோபுர வாயில் துவாரபாலகர்கள் உள்ளனர். நுழைந்தவுடன் எதிரே பிரசன்ன விநாயகரைத் தரிசிக்கலாம். அவருக்குப் பின்னால் மதில் மீது தல வரலாற்றைச் சுட்டிக் காட்டும் யானை மீதிருந்து மன்னன் முல்லைக் கொடியை வெட்டுவது, சிவலிங்கம், மன்னன் தன் கழுத்தை அரிவது, இறைவன் காட்சி தருவது ஆகிய சிற்பங்கள் சுதையால் அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

கோவிலை வலமாக வரும்போது கல்யாண மண்டபம் உள்ளது. மண்டபத்தினுள் அம்பாள் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும், சுப்ரமண்யர் சந்நிதியும் உள்ளன,  இங்கு முருகபிரான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது இரு தேவியருடன் வடக்கு வெளிபிரகாரத்தில் எழுந்தருளியுள்ளார்.

வெளி பிரகாரத்தில் வில்வ மரம் உள்ளது. பைரவர் சந்நிதியும் உள்ளது.

ஸ்வயம்பு லிங்கம் உயரமாக உள்ளது. லிங்கம் மேற்புறத்தில் வெட்டுடன் காணப்படுகிறது.

எப்போதும் சந்தனம் சார்த்தப்பட்டிருப்பதால் அபிஷேகம் சிரசில் கிடையாது. அபிஷேகம் சதுரபீட ஆவுடையாருக்கு மட்டுமே உண்டு. அதுவும் வெந்நீரால் இந்த அபிஷேகம் நடைபெறும்.

 வருடத்திற்கு ஒரு முறை சித்திரை மாதம் சதய நட்சத்திர தினத்தன்று சந்தனக்காப்பு களையப்பட்டு மீண்டும் சார்த்தப்படுகிறது.

 மூலவர் முன்னால் இரு எருக்கந்தூண்கள் உள்ளன. இவற்றிற்கு பூண்கள் இடப்பட்டுள்ளன.

விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையதாகும்.

சுவாமிக்கு முன்பு வெளியில் தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு, பூதேவி, ஶ்ரீ தேவி திருவுருவங்கள் உள்ளன.

இன்னும் பைரவர், அருணகிரி, க்ஷிப்ர கணபதி தட்சிணாமூர்த்தி உள்ளிட்டவர்களையும் காணலாம்.

சுந்தரர் இங்கு ஒரு பதிகம் அருளியுள்ள்ளார். ‘அடியேன் படு துயர் களையாய்’ என்று நெஞ்சை உருக்கும் வண்ணம் அது அமைந்துள்ள ஒன்றாகும்.

அருட்பிரகாச வள்ளலார், இத்தலத்தில் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். அருணகிரிநாதர் இத்தலத்தில் மூன்று திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளனர்.

மாசிலாமணீஸ்வரரின் கர்பக்ருஹத்தைச் சுற்றி 23 கல்வெட்டுகள் உள்ளன.

 காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னை கொடியிடைநாயகி அம்மையும் மாசிலாமணீஸ்வரரும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.

**

வாஸ்து – அடிப்படை விதிகளைக் கவனியுங்கள்! (Post No.14,609)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,609

Date uploaded in London – –9 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

வாஸ்து – அடிப்படை விதிகளைக் கவனியுங்கள்!

ச. நாகராஜன்

ஏராளமான நண்பர்கள் புது வீடு குடிபோகும் போதோ அல்லது புது வீடு ஒன்றை விலைக்கு வாங்கும் போதோ அடிப்படை வாஸ்து விதிகள் தெரியாமல் திண்டாடுகிறார்கள்.

அடிப்படையான முக்கிய விதிகள் இதோ:

வீடு கிழக்கு திசையையோ அல்லது வடகிழக்கு திசையை நோக்கியோ அமைந்திருப்பது நல்லது. ஒருபோதும் தென்கிழக்கு திசையைப் பார்த்து வீடு இருக்கக் கூடாது. 

படுக்கை அறை தென்மேற்கில் அமைந்திருக்க வேண்டும். தம்பதிகள் உறங்கும் படுக்கை அறை மேற்கிலோ அல்லது வடக்கிலோ மட்டுமே அமைந்திருக்கலாம். 

சமையலறை தென்கிழக்கில் மட்டுமே இருக்க வேண்டும்.

சாப்பிடும் அறை சமையலறையோடு ஒட்டி இருத்தல் வேண்டும். இது மேற்கில் இருக்கலாம்.

சமையலறையில் அமைக்கப்படும் சிங்க் வடகிழக்கு மூலையில் இருக்க வேண்டும். 

பூஜை அறை வடகிழக்கில் இருக்க வேண்டும். தென்கிழக்கிலோ அல்லது தென்மேற்கிலோ இருத்தல் கூடாது. 

பணியாளர்களின் அறை வடமேற்கில் இருக்க வேண்டும். 

கிணறானது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். இது செல்வ வளத்தைத் தரும். 

படுக்கை அறையில் அட்டாச்ட் பாத்ரூம் தெற்கிலோ அல்லது வடக்கிலோ இருக்கலாம். கம்மோட் தெற்கு அல்லது வடக்கு திசையைப் பார்த்து இருக்க வேண்டும். ஒரு போதும் கிழக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ பார்த்து இருக்கக்கூடாது.

 எந்த ஒரு அறையிலும் வடகிழக்கு மூலையில் குப்பை கூளங்கள், செருப்பு, விளக்குமாறு உள்ளிட்டவை இருக்கக் கூடாது. இது செல்வ வளத்தைப் பாதிக்கும். 

குளியலறை கிழக்கில் இருப்பது சிறந்தது. அடுத்த சிறப்பான இடம் வடக்கு ஆகும்.

 பணம், நகைகள் லாக்கர் அல்லது அலமாரி வடக்குச் சுவரில் தெற்கு நோக்கிப் பார்த்திருக்க வைக்கப்பட வேண்டும். ஆக இது வடக்கு நோக்கி செயல்பட்டுக் கொண்டே இருக்கும். குபேரனின் திசை வடக்கு என்பதை நினைவில் கொள்ளலாம்.

 ஒரு வீட்டில் மொத்த கதவுகளின் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணில் இருக்க வேண்டும்.

 ஒரு வீட்டில் மொத்த ஜன்னல்களின் எண்ணிக்கை மூன்று அல்லது ஆறு அல்லது பதினொன்று ஆகிய எண்ணிக்கையில் இருக்கக் கூடாது.

 ஒரு போதும் கண்ணாடியை சமையல் அறையில் (குறிப்பாக ஸ்டவ் அருகே) வைக்கக் கூடாது.

 கண்ணாடி டைனிங் டேபிள் அருகே அதைப் பார்த்து இருந்தால் உணவு தடையின்றி சுவையாகக் கிடைக்கும்.

 படுக்கை அறையில் நிலைக் கண்ணாடி இருக்கவே கூடாது. தம்பதிகளிடையே சச்சரவை இது ஏற்படுத்தும்.

தவறி அமைக்கப்பட்டிருந்தால் அதை திரை போட்டு மூடி விட வேண்டும்.

 கூடத்தில் மையத்தில் ஒரு சிறிய பகுதி தூய்மையாக எந்த வித நாற்காலி, மேஜை இதர பொருள்கள் வைக்காமல் இருக்க வேண்டும். பிரம்மஸ்தலம் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் பொதுவாக அனைத்து வீடுகளிலும் சோபா, நாற்காலி உள்ளிட்டவை வைக்கப்படுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும். ஹாலின் மூலைகளிலிருந்து ஒரு நூலைக் கட்டிப் பார்த்தால் மையப்புள்ளியைக் கண்டுபிடிக்கலாம். இந்தப் பகுதியில் – பிரம்ம ஸ்தலத்தில் (ஒரு சிறிய அளவு) காலியாக இருக்க வேண்டும்.

கூடத்தில் (ஹாலில்) வடகிழக்கு மூலையில் ஒரு சிறிய பாத்திரத்தில் தினமும் காலையில் நீரை நிரப்பி வைக்க வேண்டும். அதை மறுநாள் கீழே கொட்டி விட்டு தூய புதிய நீரை நிரப்பி வைக்க வேண்டும்.

செல்வ வளம் சேரச் சேர பன்னீர், புஷ்பங்கள் ஆகியவற்றை நீரில் போட்டு இன்னும் அதன் சக்தியை அதிகரித்து வளத்தைக் கூட்டலாம்.

 இன்னும் ஏராளமான அதிக செலவில்லாத ஏராளமான அம்சங்களை வீட்டில் சேர்த்து அனைத்து திசைகளையும் நமது வளத்தைக் கூட்ட சாதகமாக்கிக் கொள்ளலாம்.

 இவை அனைத்தும் பழைய காலத்தில் சாதாரணமாகப் பின்பற்றப்பட்டு வந்தவை. இப்போது கட்டுரை மூலம் தெரிவிக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.

வாஸ்து பார்ப்போம்; வளத்தைச் சேர்ப்போம்.

லண்டன் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி862025 ( Post No.14,608)

Written by London Swaminathan

Post No. 14,608

Date uploaded in London –  8 JUNE 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பம்”– என்று முடியும் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடியுங்கள்!

1. பல பூக்களைக் கொண்டு தொடுத்த மாலை அல்லது பூச்சரம்;

 2. – உண்மை உருவம் தோற்றம்;

 3.—விளக்குமாறு;

 4. – தங்கத்தில் ஒரு வகை;

5. துவக்கம், தொடக்கம்;

6. பகட்டு ; தற்பெருமை;

7.-கொவ்வை, சம்ஸ்க்ருதத்தில் பிம்பா

8. — திருமுறையில் காஞ்சிபுரத்தை கச்சி…….. என்பர்.

1.கதம்பம் , 2. ஸ்வரூபம், 3.துடைப்பம், 4.ஜாதரூபம், 5. ஆரம்பம் 6.இடம்பம் 7.பிரம்பம் 8. ஏகம்பம்

1.கதம்பம்- பல பூக்களைக் கொண்டு தொடுத்த மாலை அல்லது  பூச்சரம்  , 2. ஸ்வரூபம்- உண்மை  உருவம் தோற்றம், , 3.துடைப்பம்– விளக்குமாறு , 4.ஜாதரூபம்- தங்கத்தில் ஒரு வகை , 5. ஆரம்பம்- துவக்கம், தொடக்கம்  6.இடம்பம்- பகட்டு ; தற்பெருமை 7.பிரம்பம்-கொவ்வை சம்ஸ்க்ருதத்தில் பிம்பா  8. ஏகம்பம் —  திருமுறையில் காஞ்சிபுரத்தை கச்சி ஏகம்பம் என்பர்.

—subham—

Tags- லண்டன், தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி,862025

Pictures of 2500 Indian Stamps!- Part 53 (Post No.14,607)

Written by London Swaminathan

Post No. 14,607

Date uploaded in London –  8 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 53
Stamps posted today include YEAR 1997, YEAR 1998, STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 53, 

MINT (NOT USED)  STAMPS; PREVIOUSLY I POSTED USED STAMPS.

SHYAMLAL GUPT, V K KRISHNA MENON, SANT KAVI SUNDERDAS, SWAMI BRAHMANAND, WORLD PHILTELIC EXHIBITION, FOUR HERBS, GS DHILLON

MAHATMA GANDHI FOUR STAMPS, KHALSA, HINDU COLLEGE DELHI, TRIBAL WOMEN,

ARUNA ASAF ALI, SAVITRIBAI  PHULE, DR ZAHIR HUSSAIN, M A KHAN, SHIVPUJAN SAHAI, VIJAYARAGAVACHARIAR, LOKANAYAK OMEO KUMAR DAS,  BHAGAWAN GOPINATH JI, SRI RAMANA MAHARISHI, GODREJ CENTENARY, SARDAR VEDARATNAM, N G GORAY, GOSTHA PAUL, FOOT BALL STAMP,  MA SAHIB, 

NATIONAL SAVINGS, HUMAN RIGHTS DECLARATION,  JAL COOPER, MOTHER TERESA, WILLIAM JONES, INDPEX97, FORTS, PARIJATA TREE, INS DELHI SHIP, 

–subham—

Tags– 
Stamps posted today include YEAR 1997, YEAR 1998 STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 53,

ரத்தினக் கற்களை அணிந்தால் செல்வம் பெருகும் -பரஞ்சோதி சொல்கிறார்-11 (Post.14,606)

Written by London Swaminathan

Post No. 14,606

Date uploaded in London –  8 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

நவரத்தினங்கள் பற்றிய அரிய செய்திகள் -11

ரத்தினக் கற்களை அணிந்தால் செல்வம் பெருகும் ; பேய்கள் ஓடிவிடும் -பரஞ்சோதி .

திருவிளையாடல் புராணம் ( தி.வி.பு.) ஆராய்ச்சிக் கட்டுரை-11

பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் (தி.வி.பு.) ரத்தினக் கற்களை அணிந்தால்  என்ன என்ன பலன்கள் கிடைக்கும் என்ற அதிசயங்களைக் கூறுகிறார்; எந்தந்த கிழமையில் என்ன ரத்தினக் கற்களை ஆராய்ந்து பார்த்து மதிப்பிட வேண்டும்

என்பதையும் பட்டியல் இடுகிறார் ! நவரத்தினங்களின் குணங்கள், ஜாதிகள் என்ன என்பதையும் விளக்குகிறார்

இதை அவர் மாணிக்கம் விற்ற படலத்தில் சொல்கிறார்.

குருவிந்தந் தரிப்பவர்பார் முழுதுமொரு

     குடைநிழலிற் குளிப்ப வாண்டு

திருவிந்தை யுடனிருப்பர் சௌகந்தி

     கந்தரிப்போர் செல்வங் கீர்த்தி

மருவிந்தப் பயனடைவர் கோவாங்கந்

     தரிப்போர்தம் மனையியற் பாலும்

பெருவிந்த மெனச்சாலி முதற்பண்ட

     முடன்செல்வப் பெருக்கு முண்டாம்.

கீழே சொல்லப்படும் குருவிந்தம் செளகந்திகம், கோவாங்கம் என்பன மாணிக்கத்தின் RUBY வகைகள்;  இவைகள் என்ன பூக்களின் நிறத்தில் இருக்கும் என்றும் விளக்கியிருக்கிறார் பரஞ்சோதி முனிவர். (இதைக் கட்டுரையின் பின்பகுதியில் காண்க  )

குருவிந்தத்தினை அணிகின்றவர் நிலவுலக முற்றும்

தமது ஒரு குடை நிழலின் கீழ்த் தங்க அரசாண்டு,

திருமகளோடும் வீரமகளோடுங் கூடியிருப்பர்;

சௌகந்திகத்தினை அணிவோர்,

செல்வமும் புகழுமாகிய பொருந்திய இந்தப் பயன்களை

யடைவார்;

கோவாங்கத்தினை அணிவோரின் வீட்டில், பாலும் பெரிய மலையைப் போல நெல் முதலிய பல பண்டங்களின் குவைகளோடு செல்வப் பெருக்கமும் உண்டாகும் .

****

எள்ளியிடு குற்றமெலா மிகந் துகுண

     னேற்றொளிவிட் டிருள்கால் சீத்துத்

தள்ளியவிச் செம்பதும ராகமது

     புனைதக்கோர் தம்பா லேனைத்

தெள்ளியமுத் துள்ளிட்ட பன்மணியும்

     வந்தோங்குஞ் செய்யா ளோடும்

ஒள்ளியநற் செல்வமதற் கொப்பநெடும்

     பாற்கடலி னோங்கு மானே.

விலக்கப்பட்ட குற்றங்களெல்லாவற்றினின்றும் நீங்கி,

சிறந்த குணங்களைத் தன்னகத்தே கொண்டு ஒளி வீசி

இருளைப் போக்கிய, இந்தச் சிவந்த பதுமராக மணியை அணிகின்ற

தக்கோரிடத்து,  மற்றைச் சிறந்த முத்து முதலிய பல மணிகளும் வந்து பெருகும்;  அதற்குப் பொருந்த, திருமகளோடும் புகழைத் தருவதாகிய நல்ல செல்வமும், நெடிய பாற்கடலைப் போல வளரும்.

****

ரத்தினக்கற்களில் நல்லனவும் தீயனவும் உண்டு ; அவைகளுக்குள் கீறல், புள்ளிகள், உள்ளே நீர்க்குமிழி போன்ற தோற்றம் இவைகள் இருந்தால் எதிரிடையான பலன்கள் நேரிடும் . இதனால் குற்றம் இல்லாத என்ற அடைமொழியை பரஞ்சோதி போடுகிறார் .

குற்றம் குறைகளைக் கண்டுபிடிக்க இரண்டு வழிகள் உண்டு . ஒன்று அதை ஒரு அட்வான்ஸ் தொகை செலுத்தி வீட்ட்ட்டுக்குக் கொண்டு வந்து நல்ல செய்திகள் வருகிறதா, நல்லது ஏற்படுகிறதா என்று பார்க்க வேண்டும் . இரண்டாவதுவழி, ரத்தினம் விஷயத்தில் நிபுணராக இருப்பவரிடம் காட்டினால், உரிய கருவிகளைக் கொண்டு சோதித்துச் சொல்லுவார்.

****

இரண்டு டிட்பிட்ஸ் TITBITS செய்திகளைக் கூறுகிறேன் :

சில தினங்களுக்கு முன்னால், குறுக்கெழுத்துப் போட்டியை என்னுடைய பிளாக்கில் வெளியிட்டேன் ; குருவிந்தம் என்ற சொல்லினை எனது ஞாபக சக்த்தியால் எழுதினேன். அதை ஆனந்த விகடன் அகராதி மற்றும் கூகுள் அகராதிகள் செய்து பார்த்தும் கிடைக்காவில்லை! பின்னர் என்னிடமுள்ள திருவிளையாடல் புஸ்தகத்தில் கண்டுபிடித்து நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன். 

இரண்டாவது செய்தி :

மதுரையில் வசித்த எனது தாயார் திருமதி ராஜலட்சுமி சந்தானத்தின் கைகள் ராசியான கைகள் ; இதனால் மதுரைக்கு வந்து நகை வாங்குவோர் என் தாயாரை அழைத்துக்கொண்டு தெற்காவணி மூலவீதிக்குச் செல்வார் . நூற்றுக்கணக்கான நகைக்கடைகள் பட்டொளி வீசிப் பறக்கும் தெரு அது; இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறாத வீதி என்பதை தி. வி.பு செட்டி தெரு வருணனையிலும் சிலப்பதிகாரத்திலும் காணலாம்.

சொல்ல வந்த  விஷயம் என அம்மாவின் ராசியான கைகள் பற்றியது அல்ல ; அந்தக் காலத்தில் மக்கள் மீது இருந்த நம்பிக்கை ஆகும் ; என் அம்மா வாங்கும் அல்லது வாங்கிக் கொடுக்கும் வைரத்துக்கு முன்பணம் ஏதுமின்றி, “அம்மா, இது நல்ல வைரம் ; வீட்டுக்குக் கொண்டுபோய் ஒரு வாரம் வைத்துவிட்டு பணம் கொடுங்கள் என்பார்கள்; அதே படி,  நாங்களும் செய்த பொன்னான நாட்கள் அவை ; அந்த அளவுக்கு மக்களின் மீது நம்பிக்கை ! ஆனால் உங்களை நன்றாக அறிந்து இருந்தால்தான் செட்டியாரும் இதைச் செய்வார் ; நாங்கள் மதுரையின் வசித்த காலத்தில் அந்தக் காலத்தில் அங்கு ஜகஜ்ஜோதியாக இரவு வெளிச்சத்துடன் திகழ்ந்த அந்த வீதி முழுதும் செட்டியார் கடைகள்தான் இதை  பரஞ்சோதி முனிவரும் 300 ஆண்டுகளுக்கு முன்னர் இன்னொரு படலத்தில் எழுதியிருக்கிறார் நம்பிக்கை என்பதைச் சொல்லவே இதை எழுதினேன்.

தி. வி. பு. உரை எழுதிய வேங்கடசாமி நாட்டார் பல மேற்கோள்களையும் தருகிறார் ; இதோ பழைய நூல் பாடல்:-

மாணிக் கத்தியல் வகுக்குங் காலைச்

சமனொளி சூழ்ந்த விருநான் கிடமும்

நால்வகை வருணமு நவின்றவிப் பெயரும்

பன்னிரு குணமும் பதினறு குற்றமும்

இருபத் தெண்வகை யிலங்கிய நிறமும்

மருவிய விலையும் பத்தி பாய்தலும்

இவையென மொழிப வியல்புணர்ந் தோரே”

என்னும் பழைய நூற்பாவால் அறிக. (43)

****

எதிரியின் வாளும் அணுகாதாம்!

பிறநிறச் சார்பு புள்ளி புள்ளடி பிறங்கு கீற்று

மறுவரு* தராச மென்ன வகுத்தவைங் குற்றந் தள்ளி

அறைதரு பண்பு சான்ற வரதன மணியும் வேந்தன்

செறுநர்வா ளூற்ற மின்றிச் செருமகட் கன்ப னாவான்.

 (அவ்வவற்றிற்குரிய நிறமொழிந்த) வேறு

நிறம் பொருந்தலும், விந்துவும், காக பாதமும்,

விளங்குகின்ற தாரையும், குற்றம் பொருந்திய

ஒளி சலித்தலும், – என்று பாகுபாடு செய்த

ஐந்து குற்றங்களையும் ஒழித்து,

 (அவ்வவற்றிற்குக்) கூறிய குணம் நிறைந்த மணிகளை அணிகின்ற

மன்னன், பகைவரது வாளினால் இடையூறில்லாமல், செருமகட்கு வீரமகளுக்குத் தோழனாவான் .

குற்றங்களின் பட்டியல்

சரை மலம், கீற்று, சம்படி, பிளத்தல், துளை, கரு, விந்து, காக

பாதகம், மிருத்து, கோடியில்லன, கோடி முரிந்தன, தாரை மழுங்கல், கருகல், வெள்ளை, கல், மணல், பரிவு, தார், சாயையிறுகுதல், கருப்பத் துளை, கல்லிடை முடங்கல், திருக்கு என்பன குற்றங்கள் .

அவற்றுள், ஐந்து குற்றங்களைப் பொது வகையால் ஈண்டெடுத்துக் கூறினார்.

புள்ளடி – காகபாதம்; புள் – காக்கை. ஊற்றம் – ஊறு;

*****

குறுநிலக் கிழவ னேனு மவன்பெருங் குடைக்கீழ்த் தங்கி

மறுகுநீர் ஞால மெல்லாம் வாழுமற் றவனைப் பாம்பு

தெறுவிலங் கலகை பூதஞ் சிறுதெய்வம் வறுமை நொய்தீக்

கறுவுகொள் கூற்றச் சீற்றங் கலங்கிட வாதி யாவாம்.

 (இம்மணிகளை யணிபவன்) குறுநில மன்னாயினும், அவன் பெருங் கடல் சூழ்ந்த உலகமனைத்தும் பொருந்தி வாழ்வான்; பாம்பும் ,விலங்குகளும் பேயும் பூதமும் சிறு தெய்வங்களும் கூற்றின்/ எமனின் சினமும்,  அவனைத் துன்புறுத்த மாட்டா .

தெறு விலங்கு=  கொலைத் தொழிலையுடைய விலங்கு; சிங்கம் புலி முதலியன.

*****

மணிகளில் ஜாதிகள் !

முன்னவ ரென்ப கற்றோர் வச்சிர முந்நீர் முத்தம்

மன்னவ ரென்ப துப்பு மாணிக்கம் வணிக ரென்ப

மின்னவிர் புருட ராகம் வயிடூயம் வெயிற்கோ மேதம்

பின்னவ ரென்ப நீல மரகதம் பெற்ற சாதி.

கற்று வல்லோர், சாதி வகையால், வயிரத்தையும்

கடலிற்றோன்றிய முத்தையும் DIAMONDS AND PEARLS அந்தணர் என்று கூறுவர்;

பவளத்தையும் மாணிக்கத்தையும் CORALS AND RUBIES அரசரென்று KSHATRIAS கூறுவர்;

மின்போல விளங்கும் புருட ராகத்தையும் TOPAZ, வயிடூரியத்தையும் (Cymophane அல்லது Cat’s eye), ஒளி பொருந்திய கோமேதகத்தையும் HASSONITE GARNETSவணிகர் என்று கூறுவர்;

 நீலத்தையும் மரகதத்தையும் SAPPHIRE AND EMERALDS சூத்திரரென்று கூறுவர் .

****

நவரத்தினங்களின் குணங்கள்

பார்த்திவர் மதிக்கு முத்தம் பளிங்கன்றிப் பச்சை தானுஞ்

சாத்திகந் துகிர்மா ணிக்கங் கோமேதந் தாமே யன்றி

மாத்திகழ் புருட ராகம் வயிடூயம் வயிரந் தாமும்

ஏத்திரா சதமா நீலந் தாமத மென்ப ராய்ந்தோர்.

நூல்களை ஆராய்ந்தோர், அரசர்கள் மதிக்கின்ற முத்தும், பளிங்கு – பளிங்கும், இவையல்லாமல், மரகதமும், சாத்துவிக

குணமுடையனவாம்,

பவளமும் மாணிக்கமும், கோமேதமும், புருடராகமும் வயிடூரியமும் வயிரமும்,   இராசத குணம் உடையனவாம்,

நீலமானது, தாமச குணம் உடையதாம்,

****

என்ன கிழமைகளில் ஆராய வேண்டும்?

எந்தந்த கிழமையில் என்ன ரத்தினக் கற்களை ஆராய்ந்து பார்த்து மதிப்பிட   வேண்டும் என்பதையும் பட்டியல் இடுகிறார் !

இனையவை யளந்து கண்டு மதிக்குநா ளெழுமான் பொற்றேர்

முனைவனாண் முதலா வேழின் முறையினாற் பதும ராகங்

கனைகதிர் முத்தந் துப்புக் காருடம் புருட ராகம்

புனையொளி வயிர நீல மென்மனார் புலமை சான்றோர்.

இம்மணிகளை ஆராய்ந்து பார்த்து மதிப்பிடும் நாட்கள்,

ஏழு குதிரைகளைப் பூட்டிய பொன்னாலாகிய

தேரினையுடைய சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமைSUNDAY

பதுமராகமும் ,முத்தும் பவளமும் பச்சையும் புருடராகமும்,

வயிரமும் நீலமும் என்று கூறுவர்

****

வெய்யவன் கிழமை தானே மேதக மணிக்கு மாகும்

மையறு திங்க டானே வயிடூய மணிக்கு மாகும்

ஐயற விவையொன் பானு மாய்பவ ரகம்பு றம்பு

துய்யரா யறவோ ராய்மு சொன்னநா ளடைவே யாய்வர்.

ஞாயிற்றுக் கிழமையே, கோமேதக மணிக்கும் உரியதாகும்;

குற்றமற்ற திங்கட்கிழமையே, வயிடூய மணிக்கும் ஆகும்.

ஒன்பது மணிகளையும் உள்ளும் புறமும் தூய்மையுடையவராய். அறநெறியிற் செல்பவராய், முன் கூறிய கிழமைகளில் முறையே ஆராயக் கடவர் ;

பதுமராகத்திற்குக் கூறிய ஞாயிற்றுக் கிழமையே, கோமேதகத்திற்கும்,

முத்திற்குக் கூறிய திங்கட்கிழமையே, வயிடூரியத்திற்கும் ஆகுமென்றார்..

*****

மாணிக்கக் கல்லின் வகைகள்

மாணிக்கத்தின் பொதுநிறங்களைக் கூறிப் பின் நாற் சாதிக்கும்

உரிய நிறங்களைக் கூறுகின்றார்.

சாதரங்கம் பதுமராகமெனவும், குருவிந்தம் இரத்த விந்து எனவும், சௌகந்திகம் நீலகந்தியெனவும், கோவாங்கம் படிதமெனவும் பெயர் கூறப்படுதலுமுண்டு;

பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்

விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்”

என்று சிலப்பதிகாரம் கூறுவது காண்க.

****

சாதரங்க நிறங்கமலங் கருநெய்த

     லிரவியொளி தழல்கச் சோதம்

மாதுளம்போ ததன்வித்துக் கார்விளக்குக்

     கோபமென வகுத்த பத்தும்

மேதகைய குருவிந்த நிறங்குன்றி

     முயற்குருதி வெள்ள லோத்தம்

போதுபலா சலர் திலகஞ் செவ்வரத்தம்

     விதாரமெரி பொன்போ லெட்டு.

சாதரங்கத்தின் நிறம், தாமரை, மலரும், கருநெய்தல் மலரும்,

சூரியனொளியும்.,நெருப்பும், மாதுள மலரும், மாதுள வித்தும், முகிலும், தீபமும், இந்திர கோபமும், எனப் பாகுபாடு செய்த பத்துமாகும்;

*****

குருவிந்தத்தின் நிறம், குன்றி மணியும்,

முயலிரத்தமும் , வெள்ள லோத்த மலரும்,

முண் முருக்க மலரும், மஞ்சாடி மலரும்,

செவ்வரத்த மலரும்; முள்ளிலவ மலரும்,

பொன்னும் ஆகிய இவைகளைப் போலஎட்டு

வகையாகும்.

*****

வேறு நூல்களில் வேறு விளக்கம் காணப்படுகிறது:–

தாமரை கழுநீர் சாதகப் புட்கண்

கோப மின்மினி கொடுங்கதிர் விளக்கு

மாதுளைப் பூவிதை வன்னியீ ரைந்தும்

ஓதுசா துரங்க வொளியா கும்மே”

என்னும் பழைய நூற்பாவிலும்,

சாதகப் புட்கண் டாமரை கழுநீர்

கோப மின்மினி கொடுங்கதிர் விளக்கு

வன்னி மாதுளம் பூவிதை யென்னப்

பன்னு சாதுரங்க வொளிக்குணம் பத்தும்”

என்னும் கல்லாட அகவற் பகுதியினும் சாதுரங்க நிறத்துள் கார் கூறப்படாது  சாதகப் புள்ளின்கண் கூறப்பட்டிருத்தலும்;

திலக முலோத்திரஞ் செம்பருத் திப்பூக்

கவிர்மலர் குன்றி முயலுதி ரம்மே

சிந்துரங் குக்கிற் கண்ணென வெட்டும்

எண்ணிய குருவிந்த மன்னிய நிறமே”

என்னும் நூற்பாவிலே, குருவிந்த நிறத்துள் செவ்வரத்தம், விதாரம் பொன்என்பன வின்றிச், செம்பருத்திப்பூ, சிந்துரம், குக்கிற்கண் என்பனவும்,

செம்பஞ் சரத்தந் திலக முலோத்திரம்

முயலின் சோரி சிந்துரங் குன்றி

கவிரல ரென்னக் கவர்நிற மெட்டும்”

என்னும் கல்லாடப் பகுதியிலே விதாரமும் பொன்னும் இன்றிச், செம் பஞ்சு,சிந்துரம் என்பனவும் கூறப்பட்டிருத்தலும் அறியற்பாலன.

—SUBHAM–

TAGS– ரத்தினங்கள், அணிந்தால், செல்வம்  ,பரஞ்சோதி,

நவரத்தினங்கள் ,அரிய செய்திகள் -11,

திருவிளையாடல் புராணம் ( தி.வி.பு.) ஆராய்ச்சிக் கட்டுரை-11

பலன்கள் ,குணங்கள், ஜாதிகள் , மாணிக்கம் விற்ற படலம்

ஏஜியும் சூப்பர் ஏஜியும்! சிறுகதை (Post No.14,605)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,605

Date uploaded in London – –8 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

3-6-25 கல்கி ஆன்லைனில் வெளியாகியுள்ள சிறுகதை 

ஏஜியும் சூப்பர் ஏஜியும்!

(ARROGANT GIRL AND SUPER ARROGANT GENTLE MAN) 

ச. நாகராஜன் 

கணேஷ் வருத்தத்துடன் படுக்கையில் படுத்திருந்தார். அவருக்கு வந்த செய்திகள் நன்றாகவே இல்லை. ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டு மூன்று மாத ஓய்வில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற டாக்டர்களின் அறிவுரையை ஏற்றுக் கொண்டு ஓய்வாகப் படுக்கையில் படுத்திருந்தவருக்கு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் தந்த செய்திகள் நன்றாகவே இல்லை.

 ஓய்வாக இருக்கும்போது கம்பெனியை யார் கவனிப்பது?

கலிபோர்னியாவில் மேலாண்மை நிர்வாகத்தில் டிகிரி வாங்கிய தனது பெண் அகிலாவை தைரியமாக எம்.டி. ஆக்கி அவளையே நிர்வாகத்தைக் கவனிக்கச் சொல்லி அவர் பெருமிதமும் பட்டார். அமெரிக்காவில் நிர்வாக மேலாண்மைப் படிப்பு என்றால் சும்மாவா?

 ஆனால் அகிலாவிற்கு ஷார்ட் டெம்பர் அதிகம். எதிர்பார்ப்பும் அதிகம். அமெரிக்கா போலவே எல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் இங்கு நடக்குமா?

தினசரி இரண்டு சஸ்பென்ஷன் ஆர்டரைக் கொடுத்தாள் அகிலா. டிஸிப்ளின்! டிஸிப்ளின்!. அனைவரும் நடுங்கினர். பட்டனைச் சரியாகப் போடவில்லை என்று செக்யூரிடிக்கு மெமோ.

மானேஜர் ஐந்து நிமிடம் லேட்டாக வந்தார் என்பதற்காக அப்படியே வீட்டிற்குப் போய்விட்டு மறு நாள் வந்தால் போதும் என்ற ஆர்டர்.

மேஜை மேல் ஃபைல்களைச் சரியாக அடுக்கவில்லை என்று 15 வருட சர்வீஸுடன் மிக விஸ்வாசமாக வேலை பார்த்த செக்ரட்டரி மேல் அகிலா பாய்ந்து பிடுங்க அவர் பயந்து போய் ஒரு வார லீவில் குல தெய்வ தரிசனத்திற்காக யாத்திரை போய் விட்டார்.

 இது ஒரு பக்கம் என்றால் வாடிக்கையாளர்களிடமும் நெளிவு சுளிவுடன் நடக்க அகிலாவால் முடியவில்லை.

 தனது நடத்தை தப்பு என்று அவளுக்குத் தெரியவில்லை. அதை நளினமாகச் சுட்டிக் காட்டிய இரண்டு பேருக்கு உடனடியாக பதவி இறக்கம் ஆர்டர் தரப்பட்டது.

 இனி யார் தான் பேசுவார்கள்? தங்களுக்குள் ஏஜியின் ஆர்டர் என்று சொல்லிக் கொண்டு நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்கள்.

 ஏஜி என்றால் அகிலா கணேஷ் என்று அகிலா நினைக்க கம்பெனிக்குள்ளோ அனைவருக்கும அராகண்ட் கேர்ள் தான் ஏஜி என்பதற்கு அர்த்தம் என்பது தெரியும்!

 ன்ன செய்வது? நெருங்கிய நண்பர் விஸ்வத்திடம் சொல்லி வருத்தப்பட்டார் கணேஷ்.

“கவலைப் படாதே நான் ஒரு ஆளை அனுப்புகிறேன். யுஎஸ்ஸ்லிருந்து வந்திருக்கிறார். கன்ஸல்டண்டாக 30 நாள் மட்டும் இங்கு இருப்பார். எப்படி கம்பெனியை முன்னேற்றலாம் என்பதைக் கவனிப்பார். எல்லா அதிகாரமும் அவருக்கு உண்டு என்று அகிலாவிடம் சொல்லி விடு” என்றார் விஸ்வம்.

“நீ சொல்வதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. ஜமாய்த்து விடு” என்றார் கணேஷ்.

 பீஸே அல்லோலகல்லோலப்பட்டது. வந்த இரண்டே நாளில் ஏஜிக்கு அது தான் – அராகண்ட் கேர்ளுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்து விட்டார் யுஎஸ் கன்சல்டண்ட் எஸ் ஏ ஜி. – சிவகங்கை அனந்தராமன் கணபதி. ஆனால் இரண்டே நாட்களில் அனைவரும் அவரை சூபர் அராகண்ட் ஜெண்டில்மேன் என்று எஸ் ஏ ஜிக்கு அர்த்தம் சொன்னார்கள்.

 “அகிலா! இப்படி இருந்தால் கம்பெனி உருப்படவே உருப்படாது. டிஸிப்ளின் வேணும் அகிலா, டிஸிப்ளின் வேணும்” என்றார் எஸ் ஏ ஜி.

 “அதைத் தான் நானும் சொன்னேன், அங்கிள்!” என்றாள் அகிலா.

 ஆனால் அகிலாவே திடுக்கிட்டுப் போனாள் செக்யூரிடி ஆபீஸரின் ஒரு மாத சஸ்பென்ஷன் ஆர்டரைப் பார்த்து.

 ஒரு கரப்பை உள்ளே பார்த்தாராம் எஸ் ஏ ஜி. உடனடி சஸ்பென்ஷன்.

லை பார்ப்பவர்கள் உள்ளே வந்த சமயம் ‘கதவு திறந்த போது காற்றில் ஒரு கரப்பின் தோல் தான் உள்ளே வந்தது, மேடம்’ என்று செக்யூரிடி சொன்ன விளக்கத்தை ஏற்றுக் கொண்டாள் அகிலா. அதை எஸ் ஏ ஜியிடம் செக்யூரிடியின் சார்பில் சொன்ன அகிலாவிடம் ஒரு பொட்டலத்தைக் காண்பித்த அவர் அதில் இருந்த இரண்டு ஈக்களுக்கு என்ன பதில் என்று கேட்டார். ஆபீஸுக்குள்ளே ஈக்களைப் பார்த்தாராம் அவர்!

 அகிலா திகைத்தாள்.

 அடுத்த நாளில் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் சீஃப் அவுட். ஒரு ஸ்டேட்மெண்டில் இரண்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக்!

 அக்கவுண்டண்ட் அரண்டு போனார் – யாருக்கும் அட்வான்ஸ் தரக்கூடாது என்ற ஆர்டரைப் பார்த்து.

 மனிதாபிமானத்தின் பேரில் ஆஸ்பத்திரி, பள்ளி ஃபீஸ் செலவுக்காக சாலரி அட்வான்ஸ் கொடுப்பதில் என்ன தவறு? அதை அந்த மாத சம்பளத்திலேயே தான் பிடித்துக் கொள்கிறோமே” – இதைக் கேட்டதால் அவருடைய ஒரு வார சம்பளம் கட்!

அகிலாவுக்கு நிஜமாகவே தூக்கிவாரிப் போட்ட தருணம் தன் மேலேயே டிஸிப்ளின் ஆக்‌ஷன் வந்த போது தான்!

 “அகிலா! ஏன் லேட், ஒரு நிமிடம்? இப்படி எல்லாம் எம் டி இருக்கக்கூடாது!”

‘“கீழே வேலை பார்ப்பவரை எப்போதும் உட்காரச் சொல்லாதே; நின்று கொண்டே அவர்கள் பேச வேண்டும்?”

 “யாருக்கும் லீவ் கிடையாது. கம்பெனி ரன் பண்ண வேண்டுமில்லையா?”

 “இப்படி ஒரு அராகண்ட் ஆளைப் பார்த்ததே இல்லை” என்று அகிலா மனம் திறந்து ஆபீஸில் பலருடனும் பேசி விட்டாள்.

 இது எஸ் ஏ ஜிக்கு தெரிந்து விடப் போகிறது என்று ஒருவர் சொன்ன போது என் எம் டி வேலையே போனாலும் பரவாயில்லை. இப்படி அனைவரின் மனமும் புண்படுமாறு பேசுவதை என் அப்பாவிடம் கண்டிப்பாகச் சொல்கிறேன்” என்றாள் அகிலா.

 “மேடம்! அவரது 30 நாள் கன்ஸல்டண்ஸி பீரியட் நாளையோடு முடிகிறது! அக்கவுண்ட்ஸை செட்டில் பண்ணவா?” என்று  

அக்கவுண்டண்ட் கேட்டபோது ஆஹா! உடனே செய்யுங்கள் என்றாள் அகிலா.

 மறுநாள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்ட எஸ் ஏ ஜி, அகிலாவிடம், “எப்படி ஆபீஸை நடத்த வேண்டும் என்று தெரிந்ததா” என்று கேட்ட போது அகிலா “நன்றாகத் தெரிந்தது, தேங்க்ஸ்” என்று கூறி அவருக்கு விடை கொடுத்தாள்.

டுத்த நாள்.

காலை முதல் வேலையாக கடந்த 30 நாட்களிலும் அதற்கு முன்பும் போடப்பட்ட சஸ்பென்ஷன் ஆர்டர், பதவி இறக்க ஆர்டர், ஃபைன் முதலிய எல்லா பேப்பர்களையும் தன் மேஜைக்கு கொண்டு வரச் சொன்னாள் அகிலா. அக்கவுண்டண்டையும் மேனேஜரையும் அழைத்து எதிரே உட்காரச் சொன்னாள்.

“இந்த எல்லா ஆர்டரும் கேன்ஸல்ட். அனைவருக்கும் இழந்த பணத்தை உடனே காஷாகக் கொடுக்க வேண்டும். நானே என் கைப்பட பணத்தைக் கொடுக்கப் போகிறேன்” என்ற அகிலாவின் வார்த்தைகளை சந்தோஷமாக ஆமோதித்தனர் இருவரும்.

அத்துடன் இன்னொரு ஆர்டர் இருக்கு என்று கூறி நிறுத்தினாள் அகிலா.

எல்லோருக்கும் இன்று இலவச ஸ்வீட் ஆர்டர் பண்ணுங்கள். அவரவர் டேபிளில் வைத்தே அதைச் சாப்பிடலாம். அத்தோடு வீட்டுக்குக் கொண்டு பொக நல்ல ஸ்வீட் பாக்கட் ஒன்றையும் எல்லோருக்கும் தாருங்கள். முக்கியமாக செக்யூரிட்டியை மறந்து விடாதீர்கள்.” என்ற அகிலாவை வியப்புடன் பார்த்தனர் மானேஜரும் அக்கவுண்டண்டும்.

 “எதற்காக என்று பார்க்காதீர்கள் எஸ் ஏ ஜி, எப்படி ஒரு ஆபீஸை நடத்த வேண்டும், எப்படி நடத்தக் கூடாது என்று எனக்குச் சொல்லித் தந்த பாடத்திற்காகத் தான் இந்த ஸ்வீட்” என்றாள் அகிலா.

 வெளியே வந்து நடந்ததை அவர்கள் வாயிலாகக் கேள்விப்பட்ட அனைவரும் ஏஜி – அகிலா கணேஷ் வாழ்க என்று கோஷமிட்டனர்.

 “ன்ன விஸ்வம்! இப்படி ஒரு டிராமா போட்டுட்டயே! என்ற கணேஷிடம், “பாவம் சிவகங்கை அனந்தராமன் கணபதி இப்படி சூப்பர் அராகண்ட் ஜெண்டில்மேனாக நடிக்க ரொம்ப சிரமப்பட்டுட்டேன் என்று என்னிடம் சொன்னார் என்றார் விஸ்வம்.

***

Why do Hindus worship Ganesh first? (Post No.14,604)

Written by London Swaminathan

Post No. 14,604

Date uploaded in London –  7 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

If you google the question Why do Hindus worship Ganesh first?, you will get many answers .

But I am going to add one more reason with some support from a famous song.  They say he is the god of obstacles and remover of obstacles. The meaning is that if you start any work without worshipping God, he will lay hurdles in your path.  If you worship him first, he will remove all the obstacles in your work. It is in his name itself -Vigna+ Eswara= Vigneswara.

(Vigna= Obstacles, hurdles, difficulties)

How can he remove the hurdles in your path? Because he is the god of wisdom. Two of his names are Sumukha and Vikata; always showing good face and looks beautiful. Lord Ganesh is shown with elephant head.

Vikaṭa (विकट).—I. adj. 1. Large, [Uttara Rāmacarita, 2. ed. Calc., 1862.] 118, 6. 2. Large-toothed. 3. Knitted (as the brows), [Prabodhacandrodaya, (ed. Brockhaus.)] 85, 15; formidable, [Uttara Rāmacarita, 2. ed. Calc., 1862.] 150, 13; hideous. 4. Obsolete, obscure. 5. Changed in form or appearance. 6. Beautiful. 7. i. e. vi-kaṭa, Without a mat, [Nala] 10, 6. Ii. n. A tumour. Iii. m. A proper name, [Pañcatantra] 76, 7.

The meaning beautiful is used in the 2000 year of Mrchakatika drama.

****

If one shows a positive, smiling, beautiful face to you, you naturally get good vibes. These are all old interpretations

****

Tamil Puzzle about Lord Ganesh

Arunagirinathar, a great Tamil poet who lived 500 years ago, composed over 1300 Tamil verses on Lord Skanda/ Kartikeya (Tamil name Murugan). In his very first verse he says that Lord Shiva’s chariot broke into pieces because he did not salute Lord Ganesh when he went on an adventurous trip to destroy the Tripurasuras.  But I could not find the story anywhere else. We sing the first verse of Tiruppugaz written by Arunagirinathar, very often.

****

My New Interpretation

We worship Ganesh or Ganapathy or Vinayaka first because his elephant head looks like the Pranava Mantra OM. And we know Vedas begin with this Om. And the Upanishads also say that the universe came about from the (Om) sound. Cosmologists also say that the universe began with the Big Bang.

Mandukya Upanishad, Tamil saint Tirumular and many others sang about OM and said that the universe was created from this sound.

But one may ask where is the proof that Ganapathi’s elephant head represents Omkara or the Pranava mantra . In Tamil Nadu, we have two proofs. Athiveera Rama Pandya composed  a didactic poem called Vetri Verkai. As every other Tamil poet, he also praised Lord Ganessh in the very first verse. He says I worship Ganapathy with the face of Pranava mantra. But the big proof comes from the verse/ Kriti

‘VATAPI GANAPATHIM BHAJE ‘COMPOSED IN SANSKRIT BY GREAT MUSICIAN MUTHUSWAMI DIKSHITAR (1735-1817).

DIKSHITAR IS ONE OF THE MUSICAL TRINITY OF Tamil Nadu .Dikshitar’s Kritis (songs) are in Sanskrit with very deep meaning.

All music students in South India are taught first his Vatapi Ganapathim Bhaje. Famous musicians of Tamil Nadu have rendered this song in the same Hamsadwani Raga. There is one-line which musicians repeat 20 to 30 times. That line is Vakra Thunda Pranava Swarupa. The meaning is very clear. Elephant’s curved trunk looks like Pranava mantra OM. That is the only line where all the musicians repeat and repeat to show their skill.

The Ganapathy mentioned here is the Ganapathy statue that came from Badami; a commander of the Tamil Choza army won the war in Karnataka and brought the statue to Tamil Nadu.

There is another interpretation. Om or AUM is made up of three letters A+ U+ M. All the ancient languages begin with the letter A. it is sung by Lord Krishna in Bhagavad Gita (aksharaanaam aham akaarosmi) and Tiruvalluvar in his very first couplet in Tamil Tirukkural. Rig Veda also begins with A (Agnimule prohitam). So even looking from that angle we see Ganapathy has the beginning sound A in Pranawa Swarupa Vakra Tunda.:

*****

MahA vaidyanAtha Iyer used to render this k.rti invariably in all his concerts.  He used to employ various beautiful sa”ngatis each time he sang this composition. These have been carefully preserved and passed on to the present day. Perhaps this also accounts for the wide acclaim, and concert popularity enjoyed by this k.rti.

Here is the famous Kriti Vatapi Ganpathim taken from Karnatik website

Free Translation

I sing in praise of vAtApi gaNapati, who has the face of an elephant, and who is a giver of all boons. All the living beings worship his feet. He transcends the past, the future and the universe, comprising the five elements. He is devoid of passion, and is saluted by the yOgis  He is the cause of the creation of the world and he is the remover of all obstacles.

In ancient times,  he was worshiped by  saint Agastya (born out of a pot). He resides in the middle of the  mystic triangle. He is saluted by the prominent gods, viSNu and others. He resides in the mUlAdhAra cakram (cosmic circle). He represents the four forms of speech, beginning with parA. His trunk is curved in the form of the sacred syllable Om. He is eternal, and his forehead bears the crescent moon. In his left hand he carries the stack of  sugar cane. He also carries a noose and a pomegranate fruit in his lotus-like hand. He is of a gigantic form, and he is faultless. He is hEraMba, and his figure is adorned by  haMsadhvani rAgam.

vātāpi gaṇapatiṃ bhajē’hamvāraṇāsyaṃ varapradaṃ śrī
bhūtādi-saṃsēvita-caraṇam
bhūta-bhautika-prapañca-bharaṇam
vītarāgiṇaṃ vinata-yoginam (or) vītarāgiṇaṃ vinuta-yoginam
viśvakāraṇaṃ vighnavāraṇam
purā kumbha-saṃbhava-munivara
prapūjitaṃ trikoṇa-madhyagatam
murāri-pramukhādyupāsitam
mūlādhāra-kṣētrasthitamparādi catvāri vāgātmakam
praṇava-svarūpa vakratuṇḍam
nirantaraṃ niṭila candrakhaṇḍam
nija vāmakara vidhṛtekṣudaṇḍamkarāmbuja-pāśa-bījā-pūram
kaluṣa-vidūraṃ bhūtākāram
harādi-guruguha-toṣita-bimbam
haṃsadhvani bhūṣita hērambam

*praNavasvarUpavakratuNDaM – who has a curved (vakra) trunk (tuNDaM) in the shape of (svarUpa) the sacred mystic syllable “Om” (praNava)

–Subham—

Tags– worship Ganesh first, Vakratundam, Pranava Swarupa, OM, AUM, Muthuswami Dikshitar, Vatapi Ganapthim, letter A, Arunagirinathar, God of Wisdom, Remover of Obstacles

Hindu Crossword 762025 ; Mahabharata Puzzle (Post No.14,603)

Written by London Swaminathan

Post No. 14,603

Date uploaded in London –  7 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Find out famous names beginning with the letter P in the epic Mahabharata.

Letter P is in the middle white box.

7-6-2025

1    2    3
         
         
         
         
8 P4
         
         
        
         
7    6     5

1. – Previous name of Kunti in Mahabharata  

2. – light, brilliance, bright, radiance ; name of girls.

3. = early morning, dawn; Brahmins do the first of the three oblations every day at this time

4. –path, manner, style, in this way

5.—name of Arjuna; Krishna is called ****** Sarathy 6.PARSHU= Battle axe; one of the Ramas used to carry this weapon.

7. – one of the four disciples of Veda Vyasa who was given the task of spreading Rig Veda.

8. –Name of the wife of Bhṛgu and mother of Chyavana.

7-6-2025

1A    2A    3R
 H   H   A 
  T  B  T  
   U A A   
    RRR    
8 PANTH4A
    AAA    
   I R R   
  L  S  T  
 A   H   H 
7    6U     5A

ANSWER

1.PRUTHA- Previous name of Kunti in Mahabharata  

2.PRABHA – light, brilliance, bright, radiance ; name of girls.

3.PRATAR = early morning, dawn; Brahmins do the first of the three oblations every day at this time

4.PANTHA –path, manner, style, in this way

5.PARTHA—name of Arjuna; Krishna is called ****** Sarathy

6.PARSHU= Battle axe; one of the Ramas used to carry this weapon.

7.PAILA- one of the four disciples of Veda Vyasa who was given the task of spreading Rig Veda.

8.PULOMA –Name of the wife of Bhṛgu and mother of Chyavana.

–subham—

Tags—Hindu Crossword, 7625, Mahabharata, Puzzle

GNANAMAYAM 8TH JUNE 2025 SUNDAY BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

Prayer by Mrs Jayanthi Sundar Team: Master Akash Ramesh

***

Vaishnavi Anand and Latha Yogesh from London present World Hindu News in Tamil

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on – Vada Thirumullaivayil Shrine

****

Talk by Prof. S Suryanarayanan, Former Principal of Madurai Saraswathy Narayanan College

Topic- Yaathum Oore, Yaavarum Kelir in Tamil

****

SPECIAL EVENT-

Talk by Mr T R Ramesh on Periya Puranam  in Tamil.

******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சிநிரல் ஞாயிற்றுக்கிழமை 8-6-2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழு- Master Akash Ramesh.

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும்  லதா யோகேஷும்  வழங்கும் செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

சொற்பொழிவு

தலைப்பு- வடதிருமுல்லைவாயில் ஆலயம்

****

சொற்பொழிவு

தலைப்பு — யாதும் ஊரே யாவரும் கேளிர்

பேராசிரியர் எஸ். சூர்யநாராயணன் , மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் முன்னாள் பிரின்சிபால்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு

திரு T R ரமேஷ்

தலைப்பு- பெரிய புராணம்

****

நேரம் இருப்பின் இடையே  பாடல்கள்!

*****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham— 

Tags-Gnanamayam Broadcast, June 8, 2025, Programme,

நவரத்தினங்கள் பற்றிய அரிய செய்திகள் -10 (Post No.14,602)

AGATE NECKLACE FROM COLOMBO MUSEUM

Written by London Swaminathan

Post No. 14,602

Date uploaded in London –  7 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவிளையாடல் புராணம் ( தி.வி.பு.) ஆராய்ச்சிக் கட்டுரை-10

திருவிளையாடல் புராணத்தில் ( தி.வி.பு.) நவரத்தினங்களைப் பற்றிய அரிய செய்திகள் நிறைய இருக்கின்றன. இதற்கு உரை எழுதிய வேங்கடசாமிநாட்டார் சுக்ரநீதி மற்றும் சிலப்பதிகாரத்திலிருந்து நிறைய மேற்கோள்களைக் காட்டுகிறார் . வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் ஸம்ஹிதாவிலிருந்து நிறைய நவரத்னச் செயகிகளை முன்னர் கொடுத்தேன் ;இப்பொழுது தி.வி.பு. சொல்லும் சுவையான செய்திகளைக் காண்போம் .

முன்கதைச் சுருக்கம்

வீரபாண்டியனென்ற மன்னன் காட்டில் வேட்டையாடப் போனான் ; அவனை புலி அடித்துக் கொன்றுவிட்டது. அவனுக்கு நிறைய காமக்கிழத்திகள் உண்டு ; மன்னன் கொல்லப்பட்ட செய்தி பரவியவுடன் எல்லோரும் கஜானாவைத் திறந்து நவரத்தினங்களையும் நகைகளையும் கொள்ளையடித்துக்கொண்டு ஓடிவிட்டனர்; காரணம் என்னாவெனில் முறையான பட்டத்து இளவரசன் பச்சிளம் பாலகன். அவனுக்கு மகுடம் சூட்ட மந்திரிகள் திட்டமிட்டனர். ஆனால் நவரத்தின மகுடம் இல்லையே என்று கவலைப்பட்டனர் அப்போது அரண்மனை வாயிலில் ஒரு இரத்தின வியாபாரி தோன்றினார். அவர் வேறு யாருமில்லை ; சாஃஷாத் சிவபெருமானே !

அவர் தன்னிடமுள்ள ரத்தினங்களைக் காட்டி கவலைப்பட வேண்டாம் என்கிறார்; அப்போது ரத்தினங்களைக் காட்டி அவற்றின் தோற்றம் ,சிறப்பு ஆகியவற்றை விளக்குகிறார் .வலன் என்னும் அசுரனின் எலும்புகளிலிருந்து ரத்தினங்கள் தோன்றியதாகச் சொல்கிறார் ; இது சரியல்ல என்பதை தற்கால பூகற்பவியல் நூல்கள் GEOLGICAL SCIENCE காட்டுகின்றன; கடுமையான புவி அழுத்தத்தின் கீழ் பாறையில் சிக்கிய ரசாயனப் பொருட்கள்  நவரத்தினங்களை உருவாக்குவதாக தற்கால விஞ்ஞானம் கூறுகிறது; ஆயினும் ரத்தினங்களை இந்துக்கள் வகைப்படுத்தி ஆராய்ந்தது போல  வேறு எவரும் ஆராயவில்லை .

நவ (9) ரத்தினங்கள் என்று வகைப்படுத்தியது இந்துக்கள்தான் ; அவைகளுடன் வந்த வணிகன் கிழக்கு முகமாக இருந்து நீல நிற துணியை விரித்து எட்டுத் திக்கிலும் ரத்தினங்களை கொட்டினான் என்று பரஞ்சோதி முனிவர் வருணிக்கிறார்

இங்கு ததீசி முனிவர், வலாசுரன் கதைகள் வருகின்றன ; இந்திரன் யுத்தத்தில் வெற்றிபெறுவதற் காக ததீசி முனிவர் தன்னுடைய முதுகெலும்பினைக் கொடுத்தார் அதைக்கொண்டு இந்திரன் வஜ்ராயுதம் செய்தான் .

இது ஒருபுறமிருக்க வலாசுரனும் தவம் செய்து சாகா வரம் பெற்றிருந்தான்; தானே சாக முன்வந்தாலும் அப்படி சாகும்போது தன்னுடைய எலும்புகள் நவரத்தினம் ஆகவேண்டும் என்று கேட்டிருந்தான் இந்த வரத்தை அவனுக்கு சிவபெருமான் தந்திருந்தார். இந்திரனும் வலனும் ஒரு சமயம் சண்டை செய்தபோது இந்திரன் தோற்றோடினான் ; ஆயினும் வலாசுரனைத் தந்திரமாக வெல்ல நினைத்து வலாசுரனிடம் உனக்குஎன்ன வரம் வேண்டுமோ அதைக்கேள் நான் தருகிறேன் என்றான் ; வலாசுரன் வெடிச் சிரிப்பு சிரித்து, இந்திரா நீதான் தோற்றோடியவன் ; உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்; நான் தருகிறேன் என்றான் ; அதாவது இந்திரன் விரித்த சதி வலையில் சிக்கினான் .

உடனே இந்திரன், நான் ஒரு யாகம் செய்யாப்போகிறேன்; அதற்குப் பலியிட யாகப் பசுவாக நீ வரவேண்டும் என்றான்; வலாசுரன் அதற்குச் சம்மதித்தான். அவனை யாகத்தில் பலியிட்டபோது அவனுடைய எலும்புகள் முன்னர் பெற்ற வரம் காரணமாக நவரத்தினங்களாக மாறின என்பது தி வி பு கதை . இங்கு  பரஞ்சோதி  முனிவர்  சில  நீதியையும்  சொல்கிறார்

கொடுப்பதே பெருமை; வாங்குவது சிறுமையன்றோ என்று வலாசுரன் சொல்லிவிட்டு,  தனது பசு உணவை யாவது தேவர்கள் சாப்பிட்டால் தனக்கு அழியாப்புகழ் உண்டாகும்  என்றும் சொல்லிவிட்டு அரசாட்சியைத் தனது  மகனிடம் ஒப்படைத்து யாகத்தில் பலியாகிறான்.

இந்த இடத்தில் ததீசி முனிவரின் உயிர்த் தியாகத்தையும் வலாசுரனின் உயிர்த் தியாகத்தையும் காட்டி பரோபகாரம் இதம் சரீரம் (இந்த உடல் இருப்பதுபிறருக்கு உதவி செய்யவே) என்னும் மிகப்பெரிய நீதியை பரஞ்சோதி முனிவர் காட்டுகிறார்  .

அத்தோடு

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று— குறள் 236:

If man you walk the stage, appear adorned with glory’s grace;

Save glorious you can shine, ’twere better hide your face

என்பதையும் சொல்கிறார்.

இங்கு பரஞ்சோதி முனிவர் ஒரு உவமையை நமக்கு அளிக்கிறார் ; புரோகிதர்கள் யாகப் பசுவை கம்பத்தில் தர்பைப் புல்லினால் ஆன கயிற்றால் கட்டி, பசுவின் வாயை மூடி, மூச்சுத்திணறும்படி செய்து அதை யாகத்தில் பலியிட்டனர்; இது எப்படி இருந்தது என்றால் சிலந்தி நூலினால் சிங்கத்தைக் கட்டியது போல இருந்தது என்கிறார்.

****

(வணிகனாக வந்த சிவன் மாணிக்கம் விற்கிறார்; அபிஷேக பாண்டியன் சின்னப்பையனாக இருக்கிறார்; இவரை சிறு வயதில் பட்டம் ஏற்ற நெடுநஞ்செழியன் என்று சங்க நூல்கள் செப்புகின்றன .)

****

பசு மாட்டினை முழுதும் பலியிடுவதில்லை அதன் வபை யை எடுத்து ஆகுதி செய்தனர்

(வபை , வயிற்றுக் கொப்பூழினருகில் இருக்கும் நிணம் ;

The Tamil word “வபை” (vapai) translates to “omentum, caul, fat or marrow near the navel” in English. It refers to the fatty membrane that covers the intestines)

இங்கு ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்தச் சிறு பகுதியை மட்டும் யாகத்தீயில் போட்டு ஆளுக்கு கொஞ்சம் மட்டும் சாப்பிட்டது ஏன் ? மாமிசத்தை விரும்பி இருந்தால் நூறு ஆடு மாடுகளைக் கொன்றிருக்கலாமே அவற்றின் கை, கால், முதலிய உறுப்புகளையும் சாப்பிட்டிருக்கலாமே !

****

நவரத்தின உற்பத்தி

பசுவினுடைய

ரத்தம் –  மாணிக்கம்

பற்கள் – முத்து

மயிர் –  வைடூர்யம்

எலும்பு – வைரம்

பித்தம் – பச்சைக் கல் / மரகதம்

நிணம் – கோமேதகம்

தசை – பவளம்

கண்கள் – நீலக்கல்

கபம் – புஷ்பராகம்

ஆகிய நவ/ஒன்பது ரத்தினங்களாக மாறின.

*****

பின்னர் மாணிக்கம் கிடைக்கும் இடங்களை பரஞ்சோதி சொல்கிறார்

கிருத யுகத்தில் – மகத தேசம்

திரேதாயுகத்தில் – காளபுரம்

துவாபரயுகத்தில் – தும்பிரம்

கலியுகத்தில் – சிங்கள தேசம்

ஆகியவற்றில்  மாணிக்கம் கிடைக்கும் என்கிறார்

இதில் இலங்கையில் இன்று வரை மாணிக்கம் கிடைப்பது உண்மை. இதை ந்தக்காலத்திலேயே தி வி பு சொல்லிவிட்டது வேறு தேசங்கள் எங்கு இருக்கின்றன என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும்.

பின்னர் மாணிக்கத்தின் ஒன்பது வகைகளை பூக்களின் பெயர்களைச்  சொல்லி நிறம் குறிப்பிடுகிறார் யற்றை  பிராமண க்ஷத்ரிய வைஸ்ய சூத்திர  ஜாதி என்றும் வகை பிரிக்கிறார் .

தொடர்ந்து காண்போம் ………………………

Tags- நவரத்தினங்கள் , அரிய செய்திகள் -10 , திருவிளையாடல் புராணம், ஆராய்ச்சிக் கட்டுரை-10