க்ரேட் பேரியர் ரீஃப் – பவளப் பாறை (Post No.14.591)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,591

Date uploaded in London – –5 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கல்கிஆன்லைன் இதழில் 14-4-25 அன்று வெளியான கட்டுரை!

உலகின் அதிசய இடங்கள்!

 பசிபிக் முனையில் உள்ள க்ரேட் பேரியர் ரீஃப் – பவளப் பாறைத் தோட்டங்கள்!

(Great Barrier Reef – Coral Gardens at the edge of the Pacific) 

ச. நாகராஜன் 

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் புதிய நாடுகள் காண பணிக்கப்பட்ட காப்டன் ஜேம்ஸ் குக் (Captain James Cook –1728-17779) தனது நாற்பதாம் வயதில் பசிபிக் தீவுகளை நோக்கிப் பயணமானார். 

தென் பசிபிக் கடலில் க்வீன்ஸ்லாந்து அருகே கடலுக்கு அடியில் உள்ள பெருந்தடுப்பு பவளத்திட்டிற்குள் (Great Barrier Reef) நேராக உள்ளே நுழைந்தார். அவரது 368 டன் எடை உடைய எண்டவர் (Endeavour) என்னும் கப்பல் 1770ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதியன்று கடலுக்கடியில் இருந்த ஒரு பெரும் பவள வளத்திற்குள் நுழைந்தது. அங்கு தான் கண்ட காட்சியைக் கண்டு அவர் அதிசயித்தார். 

அவரது கப்பல் ஒரு பவளத்தில் மோதி, சிக்க பயணம் தடைப்பட்டது. அவரது ஊழியர்கள் இரண்டு மாதம் கப்பலைப் பழுது பார்த்தனர். ஆனால் கப்பலைச் சீராக்க முடியவில்லை. ஒரு வழியாக மெதுவாகக் கப்பலை செலுத்திய குக் பவளப்பாறைகளுக்கு நடுவில் ஒரு இடுக்கைக் கண்டார். அதன் வழியே கப்பலைச் செலுத்தினார். அந்த இடைவெளிக்கு ப்ராவிடன்ஷியல் சானல் (Providential Channel) என்ற பெயரையும் கொடுத்தார்.

 அவர் தனது டயரியில் இப்படி எழுதினார்: “ஆழம் காண முடியாத கடலின் அடியிலிருந்து செங்குத்தாக எழுந்து நிற்கும் இந்தப் பவளத் திட்டுகள், பிரம்மாண்டமாக எழுந்து வரும் அலைகளைத் திடீரென்று தடுக்கின்றன!.”

இந்த பெருந்தடுப்பு பவளத்திட்டு ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரையிலிருந்து 1250 மைல் நீளத்திற்கு  நீண்டிருந்தது. நியூசவுத்வேல்ஸின் பரப்பளவான ஒரு லட்சம் சதுர மைல் பரப்பை இது கொண்டிருந்தது.  இதிலிருந்த பவள வகைகள் விதம் விதமாக அழகாக இருந்தன. 350 வகையான பவளங்களை அவர் கண்டார். 90 சதவிகித பவளங்கள் நீருக்கடியிலேயே இருந்தன.

2900 தனித் திட்டுகளுடன் 900 தீவுகளை இந்தப் பரப்பளவு கொண்டிருந்தது.

 இந்த இடத்தில் 1400 வகையான மீன் வகைகளும் இதர கடல் வாழ் உயிரினங்களும் வாழ்ந்து வந்தன. ட்ரிக்கி ஸ்நாப்பர் என்ற ஒரு வகை மீன் மட்டும் 9 கிலோ எடை கொண்டதாக இருந்தது.

 க்வீன்ஸ்லாந்தின் கடற்கரையிலிருந்து 44 மைலில் இருந்த ஹெரான் தீவு அற்புதமாக அமைந்திருந்தது. இங்கு ஆய்வு செய்ய ஆரம்பித்தனர் விஞ்ஞானிகள்.

 இந்தப் பகுதியை விண்வெளியிலிருந்தும் காணமுடியும். சி என் என் தொலைக்காட்சி இதை உலகின் ஏழு அதிசய இயற்கை இடங்களில் ஒன்றாக அறிவித்தது. க்வீன்ஸ்லாந்தின் தேசிய நம்பிக்கை நிறுவனம் இதை மாநிலத்தில் அடையாளச் சின்னமாக அறிவித்தது.

 ஆனால் அதிசயம் என்னவென்றால், வெளி உலகம் அறிவதற்கு முன்பேயே ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் இதை அறிந்திருந்ததோடு பயன்படுத்தியும் வந்துள்ளனர்.

 இப்போது ஆயிரக்கணக்கில் பயணிகளை ஈர்க்கும் இடமாகத் திகழும் இது பல்லாயிரம் பில்லியன் டாலர்களை ஈட்டித் தரும் இடமாக மாறி விட்டது.

 நீருக்கடியில் இயற்கையாக அமைந்திருக்கும் நீர்த் தோட்டங்கள் உலகின் மாபெரும் அதிசயம் தான்!

***

காஷ்மீரே சிறந்த இடம்! குருபாததாசர் கண்டுபிடிப்பு! —11 (Post No.14,590)

Written by London Swaminathan

Post No. 14,590

Date uploaded in London –  4 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-11

24. இனத்தில் உயர்ந்தவை

தாருவில் சந்தனம் நதியினில் கங்கைவிர

      தத்தினில் சோமவாரம்

தகைபெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம்

      தலத்தினில்சி தம்பரதலம்

சீருலவு ரிஷிகளில் வசிட்டர்பசு விற்காம

      தேனுமுனி வரில்நாரதன்

செல்வநவ மணிகளில் திகழ்பதும ராகமணி

      தேமலரில் அம்போருகம்

பேருலவு கற்பினில் அருந்ததி கதித்திடு

      பெலத்தில்மா ருதம்யானையில்

பேசில்ஐ ராவதம் தமிழினில் அகத்தியம்

      பிரணவம் மந்திரத்தில்

வாரிதியி லேதிருப் பாற்கடல் குவட்டினில்

      மாமேரு ஆகும் அன்றோ

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

      மலைமேவு குமரேசனே.- குமரேச சதகம்- குருபாததாசர்

மரங்களில் சந்தனம்

மரங்ககளில் உயர்ந்தது சந்தானம் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். ஏனெனில் ஊதுபத்தி தன்னையே எரித்து தியாகம் செய்து நமக்கு மணம் தருவது போல, சந்தனமும்  தன்னையே அரைத்து தியாகம் செய்து நமக்கு மணம் தருகிறது அதனால்தான் அதை பெரியோரின் குணத்துக்கு ஒப்பிட்டனர் .

அடினும் ஆவின்பால் தன் கவை குன்றாது.23

சுடினும் செம் பொன் தன் ஒளி கெடாது.24

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது.25

புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது.26

கலக்கினும் தண் கடல் சேறாகாது.27

அடினும் பால் பெய்து, கைப்பு அறாது என்று வெற்றி வேற்கை (அதிவீரராம பாண்டியர்) கூறுகிறது .

அம்பலவாணரும் இதையே சொன்னார்

குறைந்தாலும் பயன்படல்

Arappalisura satakam Verse 23

தறிபட்ட சந்தனக் கட்டைபழு தாயினும்

     சார்மணம் பழுதா குமோ!

  தக்கபால் சுவறிடக் காய்ச்சினும் அதுகொண்டு

     சாரமது ரங்கு றையுமோ?

நிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந் தாலும் அதின்

     நீள்குணம் மழுங்கி விடுமோ?

  நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்

     நிறையுமாற் றுக்கு றையுமோ?

கறைபட்ட பைம்புயல் மறைத்தாலும் அதுகொண்டு

     கதிர்மதி கனம்போ குமோ?

  கற்றபெரி யோர்மகிமை அற்பர் அறிகிலரேனும்

     காசினி தனிற்போ குமோ?

அறிவுற்ற பேரைவிட் டகலாத மூர்த்தியே!

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

—அறப்பளீசுர சதகம் by  அம்பலவாணர்

****

•             ஆறுகளில் கங்கை

கங்கை நீர், பிருந்தாவனத்துத் தூள் , பூரி ஜகந்நாத க்ஷேத்திரத்தின்  மஹா பிரசாதம் இவை மூன்றையும் சாதாரணமாகக் கருதாதே.  இம்மூன்றும் பரப் பிரும்மத்தின் சொரூபங்களேயாம்- கங்கை பற்றி ராமகிருஷ்ண பரமஹம்சர் .

மேலும் தினமும் பல்லாயிரம்பேர் புனித நீராடுவதாலும்   கும்பமேளாவில் கோடிக் கணக்காணோர் நீராடுவதாலும்  கங்கையே புனிதம் மிக்கது என்று  தெரிகிறது

விரதத்தில் சோமவாரம்

விரதங்களில் சிறந்தது திங்கட்கிழமை விரதம் (சோமவாரம்)

என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் புகழ்கிறார்

•             நிலத்தில் காஷ்மீரம் !!!!

ஆனால் நிலத்தில் சிறந்தது காஷ்மீர் என்று குருபாத தாசர் சொல்வது புதுமையாக இருக்கிறது காஷ்மீரின் இயற்கை அழகு உலகப் பிரசித்தி பெற்றது தற் காலத்தில் அதை இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்றெல்லாம் அழைக்கிறார்கள் ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீ நகர், அமர்நாத் குகைக்கோயில் , வைஷ்ணவிதேவி குகைக்கோயில் முதலிய பல புனித இடங்கள் அங்கே உள்ளன ஆனால் குருபாததாசர் நிலங்களில் சிறந்தது என்று சொல்வைத்து வேறு எங்குமில்லாத புதுமையோ புதுமை!

காஷ்மீர் என்றால்  காஸ்யப ரிஷியால் உருவாக்கப்பட்ட ஏரி அல்லது கடல் எனப் பொருள்படும் இது முதலில் நீர்ப்பரப்பாக இருந்ததை நீல மத புராணமும் கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணியும் பாடுகிறது நவீன புவியியல் ஆராய்ச்சியும் இதை உறுதி செய்கிறது; காஷ்மீர் பற்றி வேதத்தில் சொல்லாவிட்டாலும் விதஸ்தா நதியை ரிக் வேதம் குறிப்பிடுவதால்   இது வேத கால வரலாறு உடையது பின்னர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினியும் அவருக்குப் பின்னால் வந்த பதஞ்சலியும் குறிப்பிடுகின்றனர் மஹாபாரத,  ராமாயணத்தில் காஷ்மீர் பிரதேசம் குறிப்பிடப்படுகிறது  இதனால்தான் குருபாத தாசரும் குறிப்பிட்டார் போலும்.  இந்து மன்னர்கள் ஆண்ட இந்த பூமியை முஸ்லீம்கள் 1200  CE வாக்கில் கைப்பற்றினர், காஷ்மீரில் ஆதிசங்கரர் அம்பாளின் பெயரில் ஸ்ரீநகரை உண்டாக்கியதோடு காஷ்மீர் குங்குமப்பூவினையும் ஹர்ஷ மாமன்னனும் ரத்னாவளி நூலில் குறிப்பிடுகிறார்  பின்னர் வராஹமிஹிரர் ப்ருஹத் ஸம்ஹிதாவில் போற்றுகிறார்.

காஷ்மீர் குங்குமப்பூ என்று சம்ஸ்க்ருத நூல்கள் பின்னவருமாறு வருணிக்கின்றன அதன் பெயரிலேயே காஷ்மீர் இருக்கிறது

Kaśmīraja (कश्मीरज).—m., n. saffron; कश्मीरजस्य कटुताऽपि नितान्तरम्या (kaśmīrajasya kaṭutā’pi nitāntaramyā) Bv.1.71. v. l.Derivable forms: kaśmīrajaḥ (कश्मीरजः), kaśmīrajam (कश्मीरजम्).

காஷ்மீரஜா is a Sanskrit compound consisting of the terms kaśmīra and ja (ज). See also (synonyms): காஷ்மீரஜன்மன்

 .

•             தலத்தில் சிதம்பரம்

சைவர்களுக்கு கோவிலென்றால் அது சிதம்பரமே!

பொன்னம்பலத்தில் நடராஜர் ஆடுவதாலும் மூவாயிரம் தீட்சிதர்கள் வாழ்வதாலும் சிதம்பரம் தனி மகிமை பெற்றது இதைப்பாடாத சைவ அடியார்கள் கிடையாது. நந்தனார்,  மாணிக்கவாசகர் அம்பலத்து  ஜோதியில் கலந்த இடம்.

கோயில்புராணம் என்றாலே  சிதம்பரம் பற்றியது என்று பொருள்

நந்தனார் சரித்திரம்

ஒவ்வொருநாளும் நந்தனார் ‘நாளைப் போவோம்’, ‘நாளைப் போவோம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தனர். இதனால் அவர்க்கு

‘நாளைப்போவார்’ என்றொரு நாமம் உண்டாயிற்று. நந்தனார் பிறகு ஒருநாள் மனத்துணிவோடு தில்லை சென்றனர்.. அப்பொழுது

சிவபெருமான் கோவில் தீட்சதர்கள் கனவில் தோன்றி, ‘பறையர் குலத்துதித்த நமது பக்தன் நந்தன் என்பான் ஒருவன் தன் பிறப்பை நினைந்து வருந்திக் கோபுர வாயிலருகே நிற்கின்றான். அவனை நீங்கள் தீயில் முழுகச் செய்து பிறப்பின் தூசைப் போக்கி, புனித

பிராமணனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று கட்டளையிட்டருளினார். .நந்தனார் அதற்கு மிகவும் மனமகிழ்ச்சியோடு ஒப்பித் தீக்குழிவெட்டி அதிற்குளித்தார். அவர் அதினின்றும் எழுந்தபோது முப்புரிநூல் முதலிய பிராமணச் சின்னங்களோடு கூடிய வேதிய வடிவாயிருந்தனர். அதைக் கண்டாரனைவரும் அதிசயித்து

நிற்க, நந்தனார் நடராஜர் திருநடனச் சபையை நாடிச் சென்றார். மற்றோரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். ஆனால் சிறிதுதூரம் சென்றதும் நந்தனார் அவர்கள் கண்ணுக்கு மறைந்துவிட்டார் என்பது பெரிய புராண செய்தி .

•             ரிஷிகளில் வசிட்டர்

ரிஷிகளில் சிறந்தவர் வசிஷ்டர் என்பதால் அவர் வாயினால் பிரம்மரிஷி பட்டம் பெற க்ஷ்த்திரிய மன்னனான விசுவாமித்திரன் காத்திருந்து பின்னர் வசிஷட்டர்  சொன்னவுடன் பிரம்மா ரிஷி/ பிராமண ரிஷி  பட்டம் பெற்றதை   நாம் அறிவோம் இவர் இயற்றிய அல்லது பாடிய துதிகளும் ரிக்வேதத்தில் உள்ளன.

•             பசுவில் காமதேனு

பசு மாடு புனிதமானது; அதிலும் காமதேனு என்பது விரும்பியது எல்லாவற்றையும் கொடுக்கும். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அப்போது பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் ஒன்றுதான் காமதேனு என்னும் பசு.

•             முனிவரில் நாரதர் 

பக்திக்கு இலக்கணம் நாரதர்; அவர் எழுதிய நாரத பக்தி சூத்திரம் பக்தி பற்றி  விளக்குகிறது. நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது பழமொழி•  

மணிகளில் பதுமராகம்

நவரத்தினங்களில் ஒன்று

•             மலர்களில் தாமரை

தமிழில் மலர் என்னால் தாமரை என்று பொருள். எல்லா இந்துப் பெண் தெய்வங்களுடனும் இணைந்த இந்த மலரை இந்தியா, தேசீய  மலர் ஆக்கியது இன்று நாட்டினை ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் சின்னம்!

•             கற்பினில் அருந்ததி

“அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல்” என்பது தமிழர்களின் திருமணச் சடங்கின் ஒரு பகுதி. இதில் அருந்ததி பார்த்தல் என்பது என்ன?

ஒவ்வொரு மணமக்களும் கல்யாணம் நடந்த அன்று இரவு சாந்தி முஹூர்த்த (முதல் இரவு) அறைக்குள் நுழைவதற்கு முன் கற்புக்கரசி அருந்ததி நட்சத்திரத்தைக் காணவேண்டும். எதற்காக?

“அருந்ததி போல கற்புக்கரசியாக வாழ்” என்று மணமகளுக்குச் சொல்வதற்காக இந்தச் சடங்கு. அது என்ன? பெண்களுக்கு மட்டும்தானா கற்பு? ஆண்களுக்குக் கிடையாதா? என்ற கேள்வி பலர் மனதில் எழும்.

ஆண்களுக்கும் இராம பிரான் போல

“இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இருமாதரைத் தொடேன்” –

என்ற கற்பு நெறியைத்தான் சான்றோர் வழங்கினர்.

யார் இந்த அருந்ததி?

வடக்கு வானத்தில் ஏழு நட்சத்திரங்களைக் காணலாம். எதிலும் கடவுளைக் காணும் இந்துக்கள் மட்டும் இதை சப்தரிஷி மண்டலம் என்று அழைத்தனர். சப்த என்றால் ஏழு என்று பொருள். அத்ரி, ப்ருகு, குத்ச, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரசர் ஆகிய 7 ரிஷிகள் உலக மக்கள் இனத்தைத் தோற்றுவித்த முதல் எழுவர் ஆவர்.

பிராமணர்கள் நாள்தோறும் மும்முறை செய்யும் அந்திப் பொழுது நீர்க்கடனில் (ஸந்தியா வந்தனம்) இந்த எழுவரையும் தொழுவர். இதை சங்க இலக்கிய நூலான நற்றிணைப் பாடலும் உறுதி செய்யும். தமிழர்கள் அனைவரும் இந்த ஏழு நட்சத்திரங்களையும் தொழுததை நற்றிணை 231 பாடல் வரியில் காணலாம்:–

கைதொழும் மரபின் எழுமீன் போல – (இளநாகனார் பாடியது). பாணினியின் அஷ்டாத்யாயியும் இதே வரிசையில் ஏழு ரிஷிகளை கூறுகிறார்

அருந்ததி என்பவள் கர்தம ரிஷியின் மகள். ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிட்டனின் மனைவி– உலக மஹா உத்தமி– கற்புக்கு அரசி–

உலகின் முதல் சட்ட நிபுணன் மனு வேறு ஒரு செய்தி சொல்கிறார். “கீழ்ஜாதியில் பிறந்த அக்ஷமாலா வசிஷ்டரின் மனைவியாக ஆகவில்லையா?” — ( மனு ஸ்மிருதி 9-23 ) என்று கூறுகிறார் (கணவன் அந்தஸ்து மூலம் மனைவியும் பெயர் வாங்க முடியும் என்ற தொனியில் கூறியது இது ). மஹாபாரதம் (1-224-27/29) இந்தக் கதையை உறுதி செய்கிறது. எது எப்படியானாலும் அவள் கற்புத் தெய்வம் என்பதில் எல்லோருக்கும் உடன் பாடே.

சங்கத் தமிழ் இலக்கிய நூல்கள் அவர்தம் புகழ் பாடுகின்றன. அதைத் தொடர்ந்து எழுந்த சிலப்பதிகாரம், திரிகடுகம் போன்ற நூல்களும் அருந்ததியின்ன் புகழை விதந்து ஓதுகின்றன. .

சிலப்பதிகாரம் வானளாவப் புகழும் கற்புக்கரசியான கண்ணகியின் பெயர் சங்கத் தமிழ் நூல்களில்  உண்டு.

இதோ தமிழர்கள் வணங்கிய வடக்கத்திப் பெண் அருந்ததி:—

1)“வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை” (புறநானூறு 122)

மலையமான் திருமுடிக்காரியின் மனைவி பற்றி கபிலர் பாடிய பாடல் இது. உனது மனைவி வடமீன் (அருந்ததி) போன்று (புரையும்) கற்பிற் சிறந்தவள். (மடமொழி அரிவை= இனிய சொற்களை உடைய பெண்).

2)“அருந்ததி அனைய கற்பின் “(ஐங்குறுநூறு 442, பேயனார் பாடிய பாடல்)

3)விசும்பு வழங்கும் மளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் (பதிற்றுப்பத்து 31—27/28)

பொருள்:– வான உலகத்தில் திரியும் தெய்வப் பெண்களில் சிறந்தவளான புகழ்மிகு விண்மீன் அருந்ததிக்கு நிகரானவள்.

எந்தக் கற்புக்கரசியைப் புகழ்ந்தாலும் அவளை இப்படி அருந்ததியோடு ஒப்பிடுதல் தமிழர்தம் மரபு.

4)பெருநல் வானத்து வடவயின் விளங்கும்

சிறுமீன் புரையின் கற்பின் நறுநுதல் (பெரும்பாணாற்றுப்படை 302-303)

5)வடமீன் போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலித்தொகை 2—21)

6)கடவுள் ஒருமீன் சாலினி (பரிபாடல் 5).

7)தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் (சிலப்பதிகாரம் 1-27)

8)சாலி ஒருமீன் தகையாளை — (சிலப்பதிகாரம்)

9)அங்கண் விசும்பின் அருந்ததி அன்னாளை (சிலப்பதிகாரம்)

சிலப்பதிகாரத்தில் கண்ணகியை வருணிக்கும் இளங்கோ அடிகள், அவளை அருந்ததிக்கு ஒப்பீட்டுப் பாடிய வரிகள் இவை.கம்பனும் வானளாவப் புகழ்ந்துள்ளான்

•             வலிமையில் தென்றல்

•             யானைகளில் ஐராவதம்

இது இந்திரனுடைய யானை

•             தமிழில் அகத்தியம்

தொல்காப்பியத்துக்கும்  முந்திய நூல் அகத்தியம்; நமக்கு அந்த நூல் கிடைக்கவில்லை ஆனால் மேற்கோள்கள் கிடைத்துள்ளன

•             மந்திரத்தில் பிரணவம்

ஓம் என்ற எழுத்தை ஓரெழுத்து, ஊமைஎழுத்து ,பிரணவம் என்றெல்லாம் சொல்லுவார்கள்

இவ்வுலகிற்கு தகப்பனும் தாயும்  தாங்குபவனும் பாட்டனும், கற்றுணரத்தக்கவனும் பரிசுத்தமளிப்பவனும், ஓம்காரப்பொருளும் அவ்வறே ருக், யஜுர், சாம வேதங்களும் நானே- பகவத் கீதை 9-17

குந்தீபுத்ரனே!நான் நீரில் சுவையும் சந்திர சூரியர்களிடத்தில் ஒளியும் வேதங்களனைத்துள்ளும் ப்ரணவமாகவும்(ஓம்), ஆகாயத்தில் சப்தமும், மனிதர்களுள் ஆண்மையும் ஆகின்றேன் -பகவத் கீதை 7-8

****

 ஊமையெழுத்தே உடலாச்சு – மற்றும்

ஓமென்றெழுத்தே உயிராச்சு

ஆமிந்தெழுத்தை யறிந்துகொண்டு விளை

யாடிக் கும்மியடியுங்கடி–கொங்கண நாயனார்

****

ஓம்கார ஒலியிலிருந்துதான் உலகமே தோன்றியது என்பதை திருமூலரும் திருமந்திரத்தில் பா டுகிறார்

ஓம்காரத்து உள்ளே உதித்த ஐம்பூதங்கள்

ஓம்காரத்து உள்ளே உதித்த சராசரம்

ஓம்கார தீதத்து உயிர் மூன்றும் உற்றன

ஓம்கார சீவ பரசிவ ரூபமே –திருமந்திரம் 2628

•             கடலில் பாற்கடல்

பாற்கடலைக் கடைந்ததால் அமிர்தம் கிடைத்தது; மைத்ததை உண்டதால்தான் தேவர்கள் சாகா வரம் பெற்றனர் இன்றும் எந்தப்பொருள் ருசியாக இருந்தாலும் அமிர்தம் போல இருக்கிறது என்று நாம் சொல்கிறோம்

பாற்கடலைக் கடைந்தபோது ௧௪ ரத்தினங்களை வந்தன 14 “ரத்தினங்கள்:

சந்திரன் (சோம, நிலவு)

வாருணி ( கள், சுரா பானத்தின் அதிபதி)

உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரை

ஐராவதம் என்னும் யானை

காம தேனு என்னும் பசு/சுரபி

பாரிஜாதம் – மரம்

கற்பக விருக்ஷம் – மரம்

கௌஸ்துப மணி

குடை

காதுகளுக்கான தோடு

அப்சரஸ் – தேவலோக அழகிகள்

சங்கு

லெட்சுமி – செல்வத்தின் அதி தேவதை

ஜ்யேஷ்டா- மூதேவி; நித்திரை, சோம்பேறித்தனம் ஆகியவற்றின் கடவுள்

தன்வந்திரி – டாக்டர்

காலகூட விஷம்

அமிர்தம்

எந்த ஒரு செயலிலும் நல்லதோடு கெட்டதும் வரும்; நாம் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இது புகட்டும் நீதி.

•             மலைகளில் மேருமலை

மலைகளில் உயர்ந்தது மட்டுமல்ல மேரு அங்குதான் தேவி வசிக்கிறாள் பிராமர்களும் புரோகிதர்களும் பூஜைகளைத்துவங்கும் முன்னாள் சொல்லும் சங்கல்ப மந்திரத்தில் மேரு மலைக்கு எந்தப்பக்கம் இருந்து அதைச் செய்கிறோம் என்று இன்றும் சொல்கிர்சர்கள் கிறார்  

ஆகியவை தன் இனத்தில் தான் உயர்வு.

—SUBHAM—

Tags- இனத்தில் உயர்வு., காஷ்மீர் , குமரேச சதகம் , குருபாததாசர், காமதேனு, மேரு, பாற்கடல், அருந்ததி, வசிட்டர், நாரதர் , பிரணவம், ஓம்காரம் குங்குமப்பூசிதம்பரம், கங்கை, சந்தனம்

S Nagarajan Article Index May 2025 (Post No.14,589)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,589

Date uploaded in London – –4 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1—5-25 14457 துக்காராம் மஹராஜ் – 2 (ஞானமயம் 27-4-25 ஒளிபரப்பு

             உரை)

2-5-25 14461 இகிகை! வாழ்வாங்கு வாழ உதவும் கை! (kalkionline 26-3-25

             கட்டுரை)

3-5-25 14465 உலகின் அதிசய இடங்கள்! கோரோங்கோரோ எரிமலை

           வாய்!

4-5-25 14469 அவர்கள் நடந்து வந்த பாதை; சொல்லும் கீதை!

5-5-25 14473 S Nagarajan Article Index April 2025

5-5-25 14474 4-5-2025 ஆலயம் அறிவோம்! – திருக்கோகர்ணம் (4-5-25

             ஞானமயம் உரை)

6-5-25 14477 யூனிபார்மில் சிவப்புக் கறைகள் இருக்கலாமா? (kalkionline 27-3-

           25 சிறுகதை)

7-5-25 14482 இலந்தை உடலுக்குத் தரும் நன்மைகள்! (kalkionline 28-3-

           25 சிறுகதை)

8-5-25 14487 வெற்றி பெற மோடிவேஷன்! (உணர்வூக்கம்!)  தேவை 

             (kalkionline 26-3-25 கட்டுரை)

9-5-25 14491 சூஃபி துறவி வசாலி! ராமரின் பக்தர்!(kalkionline 29-3-25

                          கட்டுரை).                                                                                                             10-5-25 14494 காலத்தை ஊடுருவி ஒரு பயணம் போகலாமா, சார்?!! 

11-5-25 14498 ட்ரோன் ஃபைட்! (kalkionline 31-3-25 சிறுகதை)

12-5-25 14502 கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் – 1 (ஞானமயம் 11-5-25

            உரை)

12-5-25 14503 ஆலயம் அறிவோம் – திருச்சிராப்பள்ளி (ஞானமயம் 11-5-25

           உரை)

13-5-25 14507 கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் – 2 (ஞானமயம் 11-5-25

            உரை)

14-5-25 14512 வித்தியாசமான நடிகை மரிலு ஹென்னர்! (kalkionline 2-4-25

             கட்டுரை)

15-5-25 14515 கோலாகலமான கோவள குதூகலம்!   (12-4-25 மாலைமலர்

              கட்டுரை)

16-5-25 14519 மனதை மயக்கும் மைசூர் (மாலைமலர் 19-4-25 கட்டுரை)

17-5-25 14522 வியப்பில் ஆழ்த்தும் விசாகப்பட்டினம் (மாலைமலர் 26-4-25

            கட்டுரை)

18-5-25 1452ஒடிஸாவில் காணலாம் இந்திய பொக்கிஷம்! (மாலைமலர்  

                                 3-5-25 கட்டுரை)

19-5-25 14529 அஸ்ஸாமின் எழில்மிகு பாரம்பரிய\ 

             இடங்கள்!   (மாலைமலர் 10-5-25 கட்டுரை)

19-5-25 14530 ஆலயம் அறிவோம் – திருநாகைக்காரோணம் (ஞானமயம்

            18-5-25 உரை)

20-5-25 14534 அமைதியின் உறைவிடம் பீஹார்! மாலைமலர்  

                                 17-5-25 கட்டுரை)

21-5-25 14538 அமெரிக்க டாக்டர்களை வியக்க வைத்த தலாய்லாமாவின்

            பிரத்யேக வைத்தியர்! (kalkionline 2-4-25 கட்டுரை)

22-5-25 14542 சர்ட்ஸீ: கடலிலிருந்து வெடித்த எரிமலையால் உண்டான   

           தீவு! (Surtsey island)  (கல்கிஆன் லைன் கட்டுரை)

23-5-25 14545  ஆயுர்வேதத்தை அங்கீகரிக்கும் ஆய்வு! (மே 2025

                             ஹெல்த்கேர் இதழில் வெளியாகியள்ள கட்டுரை!)

24-5-25 14549 ராம ரஹஸ்ய உபநிஷத் கூறும் ஶ்ரீ ராமரின் ரகசியம்! 

                              (kalkionline 5-4-25 கட்டுரை)

25-5-25 14551 எப்படி சாப்பிட வேண்டும்? ஆயுர்வேதம் தரும் அறி உரை

            (kalkionline 5-4-25 கட்டுரை)

26-5-25 14555 அதிசயிக்க வைக்கும் ஐஸ் மனிதன் விம் ஹாஃப்

              (kalkionline 6-4-25 கட்டுரை)

27-5-25 14557 உலகின் கூரிய விழியாள் வெரோனிகா.

                             செய்டர்!     (kalkionline 7-4-25 கட்டுரை)

28-5-25 14560 மன அழுத்த பாதிப்பா? சமாளிப்பது எப்படி? ! (kalkionline 10-4-25

                            கட்டுரை)

29-5-25 14563 நாரதரை நாராயணர் கேட்ட கேள்வி! ! (kalkionline 11-4-25

                             கட்டுரை)

30-5-25 145667உடும்புப் பிடி பிடிக்கலாமே   உபுண்டு                        

               (Ubuntu) கொள்கையை(kalkionline 11-4-25 கட்டுரை)

31-5-25 14572 பாம்பிடமிருந்து பக்தரைக் காத்த ஷீர்டி

                            சாயிபாபா!          (kalkionline 11-4-25 கட்டுரை)

**

Pictures of 2500 Indian Stamps!- Part 51 (Post No.14,588)

Written by London Swaminathan

Post No. 14,588

Date uploaded in London –  3 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 51

Stamps posted today include YEAR 1997, YEAR 1998 STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 51, 

ARUNA ASAF ALI, SAVITRIBAI  PHULE, DR ZAHIR HUSSAIN, M A KHAN, SHIVPUJAN SAHAI, VIJAYARAGAVACHARIAR, LOKANAYAK OMEO KUMAR DAS,  BHAGAWAN GOPINATH JI, SRI RAMANA MAHARISHI, GODREJ CENTENARY, SARDAR VEDARATNAM, N G GORAY, GOSTHA PAUL, FOOT BALL STAMP,  MA SAHIB, 

MARTYR DAY, DEFENCE OLLEGE, OWL SYMBOL, GOLDEN JUBILEE OF INTERNATIONAL FLIGHT, KONKAN RAILWAY, RADIOLOGY CONGRESS, GLOBAL ENVIRONMENT QUALITY, FOURTH BATTALION BRIGADE, HOMAGE TO MARTYRS,YOUTH HOSTELS ASSOCIATION, NATIONAL SAVINGS, HUMAN RIGHTS DECLARATION, 

–subham—

Tags- Stamps posted today include YEAR 1997, YEAR 1998 STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 51, ARUNA ASAF ALI, SAVITRIBAI  PHULE, DR ZAHIR HUSSAIN, M A KHAN, SHIVPUJAN SAHAI, VIJAYARAGAVACHARIAR, LOKANAYAK OMEO KUMAR DAS,  BHAGAWAN GOPINATH JI, SRI RAMANA MAHARISHI, GODREJ CENTENARY, SARDAR VEDARATNAM, N G GORAY, GOSTHA PAUL, FOOT BALL STAMP,  MA SAHIB, 

MARTYR DAY, DEFENCE OLLEGE, OWL SYMBOL, GOLDEN JUBILEE OF INTERNATIONAL FLIGHT, KONKAN RAILWAY, RADIOLOGY CONGRESS, GLOBAL ENVIRONMENT QUALITY, FOURTH BATTALION BRIGADE, HOMAGE TO MARTYRS,YOUTH HOSTELS ASSOCIATION, NATIONAL SAVINGS, HUMAN RIGHTS DECLARATION.

புதிய ஆராய்ச்சி- கர்நாடகத்தை ஆண்ட ஆலவாய் பாண்டியர்கள் -9 (Post No.14,587)

ALUPA COINS WITH PANDYA NAME

Written by London Swaminathan

Post No. 14,587

Date uploaded in London –  3 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

திருவிளையாடல் புராணம் ( தி.வி.பு.) ஆராய்ச்சிக் கட்டுரை-9

ALUPA DYNASTY OF KARNATAKA

கர்நாடக மாநிலத்தில் மங்களூரைத் தலை நகராகக் கொண்டு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டவர்களை ஆளுபா வம்சம் என்று அழைத்தனர் ; இதன் பொருள் விளங்கவில்லை என்றும் என்சைக்ளோபீடியாக்களில் எழுதியுள்ளனர்; எனது ஆராய்ச்சியில் இவர்கள் ஆல வாய் வம்சம் என்பது தெரியவந்தது ஏனெனில் இவர்கள் தங்களைப்  பாண்டியர்கள் என்றும் சந்திர குல வேந்தர்கள் என்று அறிவித்ததோடு பாண்டியர்களின் இரட்டை மீன் சின்னத்துடன் தங்க காசுகளையும் வெளியிட்டுள்ளனர் ; இவர்களுடைய பெயர்களை திருவிளையாடல் புராணம் உண்மையே என்றும் நிரூபிக்கிறது!

ப என்ற எழுத்து வ என்ற எழுத்தாக மாறும் என்பதை இன்றும் வங்காளி,  அஸ்ஸாமிய மொழிகளில் காண்கிறோம்; இது சங்கத் தமிழ், சம்ஸ்க்ருதம், அவஸ்தன் மொழிகளிலும் காணப்படுகிறது ஆகவே ஆளுபா என்பதை ஆலவாய் என்றே படிக்க வேண்டும் என்பது எனது துணிபு.

URO BOROS = URAGAPURAM /MADURAI OF KALIDAS.

ஆலவாய் என்றால் பாம்பு என்று பொருள்; அதாவது ஒரு பாம்பு வட்ட வடிவத்தில் உடலை வளைத்து தனது வாலினை வாயால் கவ்விக் கொள்வதை ஆலவாய் என்பார்கள்; இது எகிப்திலும்  கிரேக்கத்திலும் காணப்படுகிறது. புறநானூற்றின் இரண்டு பாடல்களை எழுதிய புலவர் பெயரும் ஆலவாயார்தான் . முழுப்பெயர் மதுரைப் பேராலவாயார்.

தி வி பு. ஆராய்ச்சிக்கு மிகவும் உதவக்கூடியது ஆளுப்பா மன்னர் சரித்திரம் ஆகும்; ஏனெனில் இவர்கள் தீவிர  சிவ பத்தர்கள், சக்தியையும் வழிபட்டவர்கள் இது நமக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற தெய்வங்களை நினைவுக்குக் கொண்டுவரும்

எல்லாவற்றுக்கும் மேலாக குலசேகரன் தனஞ்சயன் வீர பாண்டியன் என்ற தி. வி பு பெயர்கள் அப்படியே ஆளுப்பா வம்சத்தில் இருக்கினறன.

குலசேகரன் பாண்டியன் மதுரையை நிறுவிய கதையுடன் தி வி பு. துவங்குகிறது  அவன் மகன் மலைக் கொடியோன் , அதாவது மலையத்வஜன் ; அவன் மனைவி பொன்மாலை, அதாவது காஞ்சன மாலா . அவர்கள் மகன் உக்கிரகுமாரன், அதாவது முதலாவது கடுங்கோன். அவன் மனைவி காந்திமதி ; சூரிய குல இளவரசி அவர்கள் மகன் வீர பாண்டியன் ; அவனைப் புலி அடித்துக் கொன்றுவிட்டது உடனே அவன் மகன் அபிஷேக பாண்டியன் பட்டம் ஏற்றான். அவன் சிறு வயதில் மன்னன் ஆனான். ஒரு வேளை புறநானூறு கூறும் சிறுவயதில் பட்டம் ஏற்ற நெடுஞ்செழியனாக இருக்கலாம் . மதுரை சிவலிங்கத்தைக் கடம்ப வனத்தில் கண்டுபிடித்து குலசேகரனுக்கு அறிவித்த செட்டியாரின் பெயர் தனஞ்ஜெயன். அவரது சிலை பொற்றாமரைக் குள தூணில் உள்ளது.  .இது தி வி பு செய்தி.

இந்தப் பெயர்களில் தனஞ்சயன் குணசேகரன், வீர பாண்டியன் ஆகிய அனைத்தும் ஆளுப்பா / ஆலவாய் சரித்திரத்தில் உள்ளது . அவர்களுடைய தேசத்தை ஆளுப்பா கேட்டா என்று எழுதினர்; இது ஆலவாய் க்ஷேத்திரம் என்பதன் மருவு; அதாவது பேச்சு வழக்கு ; வடக்கே இன்று வாழும் க்ஷத்ரியர் தம்மை கட்டி என்பார்கள் ; இது க்ஷத்ரிய என்பதன் பேச்சு வழக்கு; இவை அனைத்தும் ஆலவாய் க்ஷேத்திரம் என்பதை நிரூபிக்கின்றன.

ஆலவாய்ப் பாம்பின் அர்த்தம் அளவற்றது, முடிவற்றது தொடர்ச்சியானது INFINITY, ENDLESS, CONTINUOUS  என்பதாகும் ; இதே போல ஒரு சம்பவம் மதுரையில் நடந்ததால் மதுரைக்கும் ஆலவாய் என்ற காரணப் பெயர் ஏற்பட்டதை தி வி பு. கூறுகிறது. மேலும் பாண்டியர்கள் மதுரைக்கும் முன்னர் மணலூரிலிருந்து ஆட்சி செய்ததை புராணமும் ஒப்புக்கொள்கிறது.

பிளினி PLINY என்ற யாத்ரீகர் மதுரை தலைநகர் மாற்றம் பற்றி கிபி 75 CE–ல் எழுதியுள்ளார் அதே ஆள் இந்த ஆளுப்பா வம்சத்தயும் கொச்சை மொழியில் குறிப்பிட்டுள்ளார் ஆகவே இரண்டாயிரம் ஆண்டு வரலாறு உடையவர்கள் இவர்கள் ; ஆளுப்பா வம்சம் பற்றி ஆராய்ந்த அனைவரும் இவர்களை நாகர்கள், பாம்புடன் தொடர்புடையவர்கள் என்றே உறுதிப்படுத்தியுள்ளனர்

காளிதாசனும் பாண்டியர் தலைநகர் உரகபுரம் என்று சங்க காலத்துக்கு முன்னரே எழுதியுள்ளார். இதன் பொருள் பாம்பூர் அல்லது ஆலவாய் . அந்தப்  பெயரை மதுரைப் பேராலவாயார் என்ற சங்கத் புலவரின் பெயரில் காண்கிறோம்..

சைவர்களாக வாழக்கையைத் துவங்கிய இவர்கள் பிற்காலத்தில் சமண மதத்தையும் தழுவினர். ஒருவேளை இவர்கள்தான் தமிழ் நாட்டினை சங்க காலத்துக்குப் பின்னர் பிடித்தார்களோ என்றும் ஆராய வேண்டும். கன்னடத்தில் மிகப்ப  ய  கல்வெட்டு இவர்களைக் குறிப்பிடுகிறது கி.பி 600 CE முதல் தொடர்ச்சியான வரலாறு கிடைக்கிறது; பெரும்பாலானவை கோவில் நிகழ்ச்சிகள் பற்றியவை.

இவர்களில் பூதல பாண்டியன் என்பவன் புதிய சொத்துரிமை முறைகளை அறிமுகப்படுத்தினான் பூதல பாண்டியன் என்பதைத் தமிழில் சொன்னால் நிலம் தரு திருவில் பாண்டியன் என்று வரும்; அல்லது பான்னாடு தந்த பாண்டியன் என்றும் சொல்லலாம். இந்தப் பெயர்கள் தொல்காப்பிய காலம் முதல் தமிழில் இருப்பதை நாம் அறிவோம்.

பாண்டியர் வம்சத்தில் தீர்க்கப்படாத புதிர்களுக்கு ,மர்மங்களுக்கு ஆளுப்பா வம்ச ஆராய்ச்சி உதவலாம் .

களப்பிரர் மர்மம்

மூர்த்தி நாயனார் மர்மம்

மாணிக்வாசகர்  மர்மம்

தி.வி.பு வில் உள்ள ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் மர்மம்

அவை வரலாற்று தடயங்களில் இல்லாத மர்மம்

முதல் இரண்டு தமிழ்ச் சங்கம் இருந்த இடங்கள், மன்னர்களின் மர்மம்

வியட்நாமில் முதல் மன்னர் ஸ்ரீமாறன் என்று இருக்கும் மர்மம்

வரகுணன் என்ற பெயர் மர்மம் (அரிமர்த்தனன் என்றே தி வி பு கூறுகிறது

நின்ற சீர் நெடுமாறனின் மர்மம் (பெரியாழ்வார் நெடுமாறன் என்ற மன்னரை வாழ்த்துகிறார் )

தொல்காப்பியம் சொல்லும் நிலம் தரு திருவில் பாண்டியனுக்கு வரலாற்றுச் சான்றில்லாத மர்மம்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

****

பாண்டியர் பெயர்களில் ஜடிலன் வர்மன்

பாண்டியர்கள் மாறி ,மாறி சடையன், மாறன் என்ற பெயர்களை வைத்துக் கொண்டதை வரலாறு காட்டுகிறது . பாண்டியர்களை ஜடிலன் வர்மன் என்று செப்பேடுகளின் ஸம்ஸ்க்ருதப் பகுதிகள் போற்றுகின்றன. இதனால் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் இருந்ததை ஆதிகாலம் முதல் அறிகிறோம்.

மேலும் இந்தோனேஷியாவின் அடர்ந்த காட்டுக்குள் கிடைத்த கல்வெட்டு பூரண வர்மன் என்று சொல்கிறது; பல்லவர்களும் இந்த வர்மன் பெயரை சொல்கின்றனர். இதனால் நெடுமாறன், வரகுணன் , நெடுஞ்செழியன் என்பதை ஒரே ஒருவர் என்று நம்பிவிடக்கூடாது

தி வி பு சொல்லும் அத்தனை மன்னர்களின் வரலாறும் உண்மையே அதை கால வரிசைப்படுத்த அறிஞர்கள் மகாநாட்டினை பல்கலைக்கழக வரலாற்றுத் துறைகளோ, ஆதீனங்களோ ஏற்பாடு செய்ய வேண்டும். பூர்ண வர்மன் காலம் நாலாவது நூற்றாண்டு. அபிஷேக பாண்டியனின் காலம் நாலாம் நூற்றாண்டு என்கிறார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை. இத்தகைய செய்திகளைத் தொகுத்து தி வி பு வை ஆராய்வது நமது கடமை. (நேற்று எழுகிய ஆங்கில கட்டுரையில் ஆளுபா ஆராய்ச்சியாளர்களின் பெயர்களைக் கொடுத்துள்ளேன். ஆராய்ச்சி தொடரும் .

Following information from Wikipedia also confirms their connection with Tamil Aalwaay=Uro Boros= Uragapura of Kalidas.

According to B. A. Saletore, the name Alupa may be derived from its variant Aluka which is an epithet of the divine serpent Shesha of Hindu epics.[5] Fleet has suggested that the name Aluka may possibly denote the Nāgas, who in early times were included in Chalukya dominions.[5] Saletore further adds that the Naga origin of the Alupas is proved by two facts. The figure of a hooded serpent which is found in an effaced Alupa stone inscription in the Gollara Ganapati temple in Mangalore and their ultra Saivite tendencies.[5] Saletore dismisses the idea regarding the Dravidian origin of the name from the Tulu word Alunu meaning ‘to rule’ or ‘govern’.[5].

Their influence over coastal Karnataka lasted for about 1200 years.

MY OLD ARTICLE

காளிதாசன் போட்ட தமிழ்ப் புதிருக்கு கிரேக்க நாட்டில் விடை கிடைத்தது! (Post.10,825)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,825

Date uploaded in London – –    9 APRIL  2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன் 2100 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் சக்கரவர்த்தியான விக்ரமத்தித்தன் அரசவையில் கவிஞனாக இருந்தான். அவன் எழுதிய ஏழு நூல்களையும் படிக்காதவன் இந்தியனே இல்லை. அவன் பயன்படுத்திய 1500 உவமைகளில் 200 உவமைகளை சங்கத் தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தயுள்ளனர். தமிழ் மொழியைக் கிண்டல் அடித்த யாழ் பிரம்மதத்தனுக்கு கபிலர் என்ற பிராமணப் புலவர் சம்ஸ்க்ருதம் மூலமாக தமிழ் சொல்லிக்கொடுத்து அவனுக்காக குறிஞ்சிப் பாட்டு என்னும் நூலை எழுதி கின்னஸ் சாதனை புரிந்தார். 99 மலர்ப் பெயர்களை ஒரே மூச்சில் அடுக்கிப் பாடினார். அதைப் படித்த ரெவரென்ட் ஜி .யு . போப் REV. G U POPE , இது காளிதாசன் நூலின் தாக்கத்தில் பிறந்தது என்று கருத்து தெரிவித்தார்.

காளிதாசன் எழுதிய ரகு வம்ச காவியத்தில் ஒரு புதிர் போட்டார். எல்லா உரைகாரர்களும் அர்த்தம் புரியாமல் தவியாய்த் தவிக்கின்றனர். அதற்கு அதர்வண வேதம், எகிப்தின் 3400 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் விடை கிடைத்துள்ளது.

முதலில் புதிர் என்ன என்று பார்ப்போம். பாரதியார் பாட்டிலும், காஞ்சி புராணத்திலும், திருவிளையாடற் புராணத்திலும் தமிழுக்கு அகத்தியர் செய்த சேவையும் சிவ பெருமான் அவரை தமிழ் இலக்கணம் எழுத இமயமலையில் இருந்து அனுப்பிய செய்தியையும் படிக்கிறோம். இது பல பாண்டியர் கால செப்பேடுகளிலும் உள்ள செய்தி. ஆனாலும் அவர்களுக்கு எல்லாம் முன்னதாக ரகு வம்ச காவியத்தின் ஆறாவது அத்தியாயத்தில் காளிதாசன் பாண்டியருக்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பை முதல்தடவையாகப் பாடியுள்ளான் அது மட்டுமல்ல புறநானூற்று மன்னன் முதுகுடுமிப் பெருவழுதி செய்த அஸ்வமேத யாகம் பற்றியும் பாடியுள்ளான்; நமக்கு பெருவழுதியின் அஸ்வம்/ குதிரை பொறி த்த நாணயம் கிடைத்ததால் இது உறுதியாகிறது. அந்தப் பகுதியில் காளிதாசன் போட்ட புதிர் உரகம் என்னும் பெயரை  உடைய நகரத்தை ஆளும் பாண்டியர்” என்று அறிமுகம் செய்வதாகும். அதாவது ஒவ்வொரு மன்னரையம் இந்துமதிக்கு அவளது தோழி சுநந்தை அறிமுகம் செய்யும் சுயம்வர காட்சி அது. உரக URAGA/ SNAKE என்றால் பாம்பு. உரகபுரம் என்று காளிதாசன் சொல்லும் நகரம் எது? அது எப்போது பாண்டியருக்கு தலைநகராக இருந்தது என்பதே புதிர்.

இதோ அந்த ஸ்லோகம்

அத உரகாக் யஸ்ய புரஸ்ய நாதம் தெளவாரிகீ  தேவசரூப்யமேத்வ

இத சகோராக்ஷி விலோகயே பூர்வானுசிஷ்டாம் நிஜகாத போஜ்யாம்

–ரகு வம்சம் 6-59

பொருள்

பிறகு வாயிற் காப்பாளரான ஸுனந்தை , தேவதைக்கு ஒப்பான  வடிவு உடையவனும்  பாம்பின் பெயரை தன் பெயராக உடைய  பட்டணத்திற்கு அரசனுமான (பாண்டியனை) வனை அடைந்து, சகோர பக்ஷியின் கண்களைப்ப போன்ற கண்களை உடையவளே!  இங்கு பார் ! என்று முதலில் சொல்லப்பட்ட இந்துமதியிடம் சொன்னாள் (போஜ்யாம் – இந்துமதி)

अथोरगाख्यस्य पुरस्य नाथम् दौवारिकी देवसरूपमेत्य|
इतश्चकोराक्षि विलोकयेति पूर्वानुशिष्टाम् निजगाद भोज्याम्॥ ६-५९

|| Raghu vamsa 6-59

atha uraga Akhyasya purasya nAtha.m dauvArikI deva sa rUpam etya itaH cakora akShi vilokaya iti pUrva anushiShTA.m nijagAda bhojyAm

இதில் பாம்பின் பெயரில் உள்ள = உரக புரம் என்பது பற்றி மல்லி நாதர், அருணகிரிநாதர் முதலிய உரைகாரர்கள் நாகப்பட்டிணம் அல்லது கன்யாகுப்ஜ நதிக்கரையில் உள்ள  நாகபுரம் என்றெல்லாம் எழுதினார்கள் ஆனால் மதுரை மாநகருக்கே ‘நாகபுரம்’ SNAKE CITY  என்ற பெயர் இருப்பதை நம்பி எழுதிய திருவிளையாடற் புராணம் மூலமா அறிகிறோம். இதை லிப்கோ வெளியிட்ட ரகுவம்ச உரையில் வேங்கட ராகவாசாரியார் எழுதியுள்ளார். மதுரைக்கு ஆலவாய் என்றும் பெயர். இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உண்டான பெயர் என்பது சங்க காலப் புலவர் மதுரைப் பேரால வாயார் என்ற பெயரிலிருந்து அறியலாம்.

ஆலவாய் என்றால் வட்டமான பாம்பு. ஒரு பாம்பு தன் உடலை வட்டமாக்கி வாலை தன் தலையால் கவ்வும் காட்சி. பாண்டிய மன்னன் ஒருவன் சிவபெருமானிடம் மதுரையின் எல்லையைக் காட்டுங்கள் என்று மன்றாடியபோது சிவ பெருமான் தன் கழுத்தில் இருந்த பாம்பை விட்டு எறிந்தார். அது வட்டவடிவமாக சுழன்று மதுரை எல்லையைக் காட்டியது என்பது திருவிளையாடற் புராணம், ஹாலாஸ்ய மஹாத்ம்யத்தில் உள்ள கதை. ஹாலாஸ்ய என்பது ஆலவாய் ஆகும். ஆலவாய் SNAKE HEAD EATING ITS OWN TAIL என்பது வட்டமான பாம்பு ஆகும் . உரக என்ற சொல் சிலப்பதிகாரம், மணி மேகலை காவியங்களில் இருக்கிறது ஆனந்த விகடன் அகராதியில் பாம்பைக் குறிக்கும் சொற்களில் வருகிறது.

இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் அந்த உரக கிரேக்க மொழிச் சித்திரத்திலும் உள்ளது. ஒரு பாம்பு வட்ட வடிவத்தில் தனது தலையால் தனது வாலையே விழுங்கும் காட்சிக்கு UROBOROS உரோ பரோ என்று பெயர். இதற்கு பல பொருள் கூறப் பட்டாலும் ‘உரக’ சப்தம்  இருப்பதைக் காண முடிகிறது இது கிரேக்கத்திற்கும் முன்னால் எகிப்தில் கி.மு 1400 ல் சூரியக் கடவுளைச் சுற்றியும் காணப்படுகிறது . சீனாவில் கிமு. 1200 சித்திரத்திலும் இக்காட்சி உள்ளது.

இவற்றையெல்லாம் தொடர்புபடுத்தும் சொல் எகிப்துக்கும் முந்திய அதர்வண வேதத்திலும் உள்ளது

வியாச மகரிஷியின் காலம் கலியுகத்துக்கு 100 ஆண்டுகள் முந்தியது. சுமார் கிமு 3150. அதாவது  5200 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வேதங்களை நான்காகப் பிரித்து நான்கு சீடர்களிடம் அவற்றைப் பரப்பும் பணியை ஒப்படைத்தார். அந்த நான்கு வேதங்களில் கடைசி வேதம் அதர்வண வேதம். அதில் ஐந்தாவது காண்டத்தில் ஒரு துதியில் பாம்புகளின் விநோதப் பெயர்கள் வருகின்றன. இவற்றை இனம் தெரியாத பாம்புகள் என்று வெள்ளைக்காரர்கள் உரை எழுதிவிட்டனர் . தற்கால ஆராய்சசி,  இவை எல்லாம் சுமேரிய மொழியிலும் இருப்பதைக் காட்டின. தியமத = தைமாத என்ற பாம்பு சம்ஸ்க்ருதம், சுமேரிய, அக்கடியன் மொழிகளில் இருப்பதை முன்னொரு கட்டுரையில் கண்டோம்.

XXX

அதே மந்திரத்தில் வரும் மற்றொரு பாம்பு URUUGULAA உருகுலா.

அதர்வண வேதம் ஐந்தாம் காண்டம் எட்டாவது மந்திரம் ,

உருகுலாவின் பெண்கரும் பாம்பினின்று  தோன்றும் தாஸிப் பாம்பு அசிகின்யா – இந்தப் பெண் பாம்புகளின் விஷமும் சக்தி இழக்கட்டும் “

இதில் உருகுலா என்பதை ‘உரகத்தின் பெண்’ என்று கொள்ளளாம் . மேலும் சுமேரியாவில் உரு குலா என்ற ஒரு இடம் உள்ளது. துருக்கியில் 1982ம் ஆண்டில் கடலுக்கு அடியில் பழங்கால கப்பல் கண்  டுபிடிக்கப்பட்ட துறைமுகத்தின் பெயரும் உருபலன். இதில் எல்லாவற்றிலும் உரக  / பாம்பு சப்தம் வருகிறது. இந்தியாவில் நாகாலாந்து, நாகபுரி, நாகர்கோவில் என்ற நூற்றுக் கணக்கான பாம்பு ஊர்கள் , இமயம் முதல் குமரி வரை இருக்கின்றன அந்தக் காலத்தில் எகிப்திலும் பாபிலோனியாவிலும் பாம்பு ஊர்கள் இருந்திருக்கும்.

சுமேரிய உருகுலா என்ற ஊர்பெயருக்கு நேரடியாக பாம்பு தொடர்பு கா ட்டப் படாவிடிலும் இதை பாதாள உலக நகர் என்பர். அதற்கு AKKADIAAN அக்கடிய மொழியில் நெர்கள் NERGAL என்று பெயர். அதிலும் நாக அல்லது நரக சப்தம் வருகிறது ஆக உரிகல் , நெரி கல் ஆகியன பாதாள/ நாக லோக தொடர்பைக் காட்டுகின்றன. பாம்பின் வாய்க்குள் அதன் வால் இருக்கும் படம், சித்திரம் மதுரை ஆலவாய் முதல் எகிப்து வரை இருப்பதும், பாண்டியர் தலை நகரை காளிதாசன் உரகபுரம் / பாம்பூர் என்று சொல்லுவதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன என்பதில் ஐயமில்லை.

XXX SUBHAM XXX

TAGS- உரகபுரம், உரகம் , பாம்பு, சுமேரிய, உருகுலா , கிரேக்க, உரோ பரோ , ஆலவாய், ஹாலாஸ்ய

 —சுபம்—-

TAGS புதிய ஆராய்ச்சி, கர்நாடகம்,  ,ஆலவாய்,  பாண்டியர்கள், ஆளுபா வம்சம் , மீன் சின்னம், திருவிளையாடல் புராணம்,  ஆராய்ச்சிக் கட்டுரை-9

மகிழ்ச்சி நகரம் கொல்கத்தா தரும் புத்துணர்ச்சி! (Post No.14,586)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,586

Date uploaded in London – –3 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 24-5-25 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை! 

மகிழ்ச்சி நகரம் கொல்கத்தா தரும் புத்துணர்ச்சி! 

ச. நாகராஜன் 

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரிய மாநிலம் மேற்கு வங்கமாகும். இம்மாநிலத்தில் தலைநகரான கொல்கத்தா இந்தியாவின் ஏழாவது பெரிய நகரமாகும்.

மகிழ்ச்சி நகரம் (JOY CITY) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் கொல்கத்தாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் பார்ப்பதற்கு உள்ளன.

அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

 தக்ஷிணேஸ்வரம் காளி கோவில்

கொல்கத்தாவின் தாயாக வழிபடப்படும் காளி குடிகொண்டு அருளாட்சி நடத்தும் இடம் தக்ஷிணேஸ்வரம் காளி கோவில் ஆகும். ஹூக்ளி ஆற்றில் கிழக்குக் கரையில் அமைந்துள்ள கோவில் இது.  காளியின் ஒரு அம்சமான பவதாரிணி அருளாட்சி செய்யும் இடம் இது. கொல்கத்தாவிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில்.

ஒன்பது விமானம் போன்ற அமைப்புகளைக் கொண்டு விளங்கும் இந்தக் கோவிலைச் சுற்றி வெளியிடமும், அதைச் சுற்றியுள்ள மதிலின் உட்புறத்தில் பல அறைகளும் உள்ளன.

ஆற்றங்கரையில் பன்னிரண்டு சிறு கோவில்கள் உள்ளன.

கடைசியில் உள்ள சிவன் கோவிலுக்கு அருகே வடமேற்கு மூலையில் உள்ள ஒரு கூடத்தில் தான் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தார்.

இந்தக் கோவில் எழுந்ததைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.

1847-ம் ஆண்டில் இப்பகுதியின் ஜமீந்தாரிணியாக விளங்கிய ராணி ராஸமணி தேவியார் புனிதத்தலமான காசிக்கு யாத்திரை ஒன்றை மேற்கொள்ள விரும்பினார். தேவையான பொருள்கள் சேகரிக்கப்பட்டு உறவினர்கள், வேலையாட்களுடனும் 24 படகுகளில் அங்கு செல்ல ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன.

கிளம்புவதற்கு முதல் நாள் ராணியார் கனவு ஒன்றைக் கண்டார். அதில் தோன்றிய காளி,   காசிக்கு வந்து தரிசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், கங்கை ஆற்றங்கரையில் தனக்கென அழகிய கோவில் ஒன்றை நிர்மாணித்து அங்கேயே வழிபட்டால் போதும் என்றும் அருளுரை கூறினாள்.

உடனடியாக ராணியார் பெரும் நிலப்பகுதியை வாங்கிக் கோவிலை அழகுறக் கட்டி முடித்தார்.

1855ம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

கோவில் திறக்கப்பட்ட போது நாடு முழுவதிலுமிருந்து ஒரு லட்சம் அந்தணர்கள் விழாவைச் சிறப்பிக்க அழைக்கப்பட்டனர்.

கோவிலின் குருக்களாக ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் தமையனாரான ராம்குமார் நியமிக்கப்பட்டார்.

அவர் அடுத்த ஆண்டே காலமாகவே அந்த குருக்கள் பணியை இராமகிருஷ்ண பரமஹம்ஸர் மேற்கொண்டார். பரமஹம்ஸரின் தேவியார் அன்னை சாரதாமணி தேவியாரும் இங்கேயே வந்து குடியேறினார்.

அதிலிருந்து பரமஹம்ஸர் 1886-ம் ஆண்டு மறையும் வரையில் சுமார் 30 ஆண்டுகள் காளி கோவிலுக்கு குருக்களாக இருந்து கோவிலின் பெருமையையும் புகழையும் பெருமளவு உயர்த்தினார்.

 இறைவன் : சிவன் மற்றும் கிருஷ்ணர்

இறைவி : பவதாரிணி அல்லது காளி மற்றும் ராதா

 கோவிலின் கர்பக்ருஹத்தில் காளி தேவியின் சிலை உள்ளது.

இங்குள்ள பஞ்சவடி பகுதி மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். ஆல், அரசு, வில்வம், நெல்லி, அசோகம் ஆகிய ஐந்து மரங்கள் சூழ்ந்த இந்த பஞ்சவடி பகுதியில் தான் பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் மற்றும் பரமஹம்ஸரின் இதர சீடர்கள் ஆன்மீக சாதனையை மேற்கொண்டனர். பரமஹம்ஸர் அருளால் விவேகானந்தர் காளியை தரிசனம் செய்து உத்வேகம் பெற்று பாரதத்தை எழுச்சி பெறச் செய்தார். அப்படிப்பட்ட புண்யமான திருத்தலம் இதுவே என்பதை யாராலும் மறக்க முடியாது.

 ஹௌரா பிரிட்ஜ்

ஹூக்ளி ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான தொங்கு பாலம் ஹௌரா பிரிட்ஜ் ஆகும். ஹூக்ளி நதியின் எதிரெதிர் கரைகளில் இருந்த ஹௌராவையும் கொல்கத்தாவையும் இணைக்கும் வண்ணம் இந்தப் பாலம் 1943ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பாலத்தில் தினம்தோறும் ஒரு லட்சம் வாகனங்கள் செல்கின்றன. ஒருலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் இதில் நடந்து செல்கின்றனர். இது உலகின் ஆறாவ்து நீளமான பாலமாகும்,

டிராம்

கொல்கத்தா என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது டிராம் தான். பஸ், ரயில், கார் என பயணப்படும் பயணிகள் டிராமில் பயணப்பட ஒரு சிறந்த இடம் கொல்கத்தா நகரம் தான்!

ஈடன் கார்டன்ஸ்

கொல்கத்தா என்றவுடனேயே கிரிக்கெட் ரசிகர்களின் நினைவுக்கு வருவது ஈடன் கார்டன்ஸ் மைதானம் தான். இங்கு நடைபெற்ற பல கிரிக்கெட் போட்டிகள் என்றும் நினைவு கூரத் தக்கவையாகும். 68000 பேர் அமரக்கூடிய இருக்கைகள் கொண்ட இந்த அரங்கம் உலக அரங்கங்களில் சிறந்த ஒன்றாகும்.

நியூமார்க்கெட். 

பேரம் பேசி பொருள்களை வாங்க விரும்புபவர்களுக்கே உரித்தான மார்க்கெட் நியூமார்க்கெட். இங்கு 2000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஈடன் கார்டன்ஸுக்கு அருகில் உள்ளது இது. 

விக்டோரியா மெமோரியல் ஹால்

விக்டோரியா மகாராணியின் நினவாக மக்ரனா என்ற உயர் வகை சலவைக் கற்களால் உருவாக்கப்பட்ட இந்த நினைவிடத்தில் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. அதில் புகழ் பெற்ற ஓவியங்கள், சிறபங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை காட்சிப் பொருள்களாக உள்ளன. 

அந்தக் காலத்தில் மன்னர்கள் குதிரை சவாரி செய்ததை நினைவு கூரும் வகையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்த உணர்வைப் பெறுவதற்காக இங்குள்ள குதிரை வண்டி பயணத்தை மேற்கொள்வது வழக்கம், அலங்கரிக்கப்பட்ட ரதம் போல உள்ள ஏராளமான குதிரை வண்டிகள் இங்கு சவாரிக்காக தயாராக இருக்கும். இது ஒரு உல்லாசப் பொழுது போக்கு அம்சமாக இங்கு திகழ்கிறது.

 காலேஜ் ஸ்ட்ரீட்

பழைய புத்தகங்களை விரும்பி வாங்கும் புத்தகப் பிரியர்களின் சொர்க்கம் காலேஜ் ஸ்ட்ரீட் பகுதியாகும். இது கொல்கத்தா ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. பல்லாயிரக்கணக்கில் புத்தகங்கள் இப்பகுதியில் உள்ளன.

 டயமண்ட் ஹார்பர்

2000 ஆண்டு பழமையான வரலாற்றைக் கொண்டுள்ள இந்த துறைமுகம் கொல்கத்தாவிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வங்காள விரிகுடா பகுதியில் பார்க்க வேண்டிய முக்கிய இடம் இது தான். இங்கு தான் ஹூக்ளி நதி கடலுடன் கலக்கிறது. இங்குள்ள கடற்கரையில் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெறுவதற்காக உலகெங்குமிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.

இப்போது ‘எஃப்’ போர்ட் என்று அழைக்கப்படும் ராய்சக் கோட்டை, ம்ற்றும் டயமண்ட் ஹார்பரில் உள்ள லைட் ஹவுஸ் உள்ளிட்டவை பார்க்கத் தகுந்த இடங்களாகும். லைட் ஹவுள் 25 மீட்டர் உயரம் உள்ளது.

ராமகிருஷ்ண ஆசிரமும் இங்கு தான் அமைந்துள்ளது. ஆன்மீக அதிர்வலைகளை ஏற்றிக் கொள்ள விரும்புவோர் தவறாது செல்ல வேண்டிய இடம் இதுவே.

ஜாய் நகர் என்ற மகிழ்ச்சி நகரம் இங்கு அமைந்துள்ள ஒரு சிறிய நகரம்.

இங்குள்ள கதியாரா என்ற இடத்தில் தான் ஹூக்ளி நதி, ரூப்நாராயண், தாமோதர் ஆகிய நதிகள் சந்திக்கின்றன. போட் சவாரி, சூரிய உதயம், அஸ்தமனக் காட்சிகள் என பல்வேறு அம்சங்கள் பயணிகளைக் கவர்ந்து இழுக்கும்.

 சுந்தரவனக் காடு

சுந்தர்பன் காடுகள் என அழைக்கப்படும் இந்த காட்டில் சுந்தரி மரங்கள் இருப்பதால் இது அந்தப் பெயரைப் பெற்றது. உலகில் உள்ள ஈரநிலங்களிலேயே பெரிய நிலப்பரப்பு கொண்டது இதுவே. 3968 சதுரமைல் பரப்பளவைக் கொண்டது இது. வங்காளப் புலி, பறவை இனங்கள் ஆகியவற்றிற்குப் பெயர் பெற்ற இடம் இது. இங்குள்ள நீர்நிலைகளில் பெரிய அலைகள் ஆறிலிருந்து பத்து அடி உயரத்திற்கு எழுவதையும் சிறிய அலகள் எழும் போது சேற்று நிலம் சமதளமாக இருப்பதையும் கண்டு ரசிக்கலாம். இங்கு மொத்தம் 102 தீவுகள் உள்ளன.

இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ராயல் பெங்கால் டைகர் எனப்படும் வங்கப் புலிகள் இருக்கின்றன. பிரம்மாண்டமான இந்தப் புலிகள் ஒரே சமயத்தில் 65 பவுண்ட் இறைச்சியை உண்ண முடியும். இங்கு வாழும் புலிகள் உப்பு நீரில் நீந்தவும் வேட்டையாடவும் நன்கு பழகிக் கொண்டன. இது யுனெஸ்கோவின் மிகச் சிறந்த பாரம்பரிய தளமாக அமைகிறது. புலிகளைப் பார்க்க டைகர் சஃபாரி என ஒரு நாள் பயணம் இரு நாள் பயணம் என திட்டங்கள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். காட்டு வாழ்க்கையை அனுபவிக்க விரும்புபவர்கள் இங்குள்ள போட் ஹவுஸில் தங்கி அதை அனுபவிக்கலாம்.

 இங்குள்ள மீன்வளமும் இந்தியாவிலேயே மிகப் பெரிய மீன்வள இடமாகும்

 சால்ட் லேக் சிடி

கொல்கத்தாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது சால்ட் லேக் சிடி எனப்படும் பிதான் நகர். பழைய காலத்தில் உப்பு நிறைந்த சதுப்பு நிலமாக இருந்ததால் சால்ட் லேக் சிடி என்ற பெயரைப் பெற்றது இது. இப்போதோ திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட அழகிய நகராக ஆகி விட்டது இது.

இதைச் சுற்றி நிறைய ஏரிகள் உள்ளதால் எப்போதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இது அமைந்திருப்பதில் வியப்பில்லை.

 சுத்தமான நகருக்குப் போக வேண்டும் என்றால் டெல்லிக்குச் செல்லுங்கள். பணக்கார இடத்திற்குப் போக வேண்டும் என்றால் மும்பைக்குச் செல்லுங்கள். ஹை-டெக் சிடிக்குப் போல விரும்பினால் நீங்கள் செல்ல வேண்டியது பங்களூருக்கு. ஆனால் ஆத்ம துடிப்புடன் பாரம்பரியம் கொண்ட நகரத்திற்குச் செல்ல விரும்பினால் உங்களுக்கான இடம் கொல்கொத்தா தான் என்பது புகழ் பெற்ற மேற்கோளாகும்!

 காளிகா தேவியின் பெயரிலிருந்து உருவான கொல்கத்தா பண்பாட்டின் தலைநகரம் என்று புகழப்படுகிறது.

 கொல்கத்தா போகலாம்; காளிதேவியின் அருளைப் பெறலாம்!

***

History Flash : Pandya Kings ruled Karnataka ! (Post No.14,585)

Aalawaay (snake biting its tail) in Greece 

Written by London Swaminathan

Post No. 14,585

Date uploaded in London –  2 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Alupas were Pandyas who ruled Karnataka about 2000 years ago. The word Alupa is the corrupted form of  Tamil word Aalavay, that is Madurai. Madurai in Tamil Nadu is more than 2300 years old. Pandyas ruled from there as a mighty power till Malik Kafur invasion in the 14th century.

Madurai has three names: Madurai, Aalavaay, Naan maadak Koodal. All the three names are in 2000-year-old Sangam literature; a Tamil poet named Madurai Per Aalavayaar composed two verses in Purananuru, the most important anthology of Tamil literature.

****

The word Aaalavaay means Uroboros.

Aalawaay (snake biting its tail) in Egypt

Uroboros is a  circular symbol depicting a snake, swallowing its tail, as an emblem of wholeness or infinity. The word comes from Greek Uroboros, which again is the corrupted form of Uragapuram. World famous poet Kalidas used this word for Madurai in his Raghuvamsam. Uraga is snake and puram is town. So urgapuram is Aaalvaay.

Alupas or Aalavayas called themselves Pandyas. Their coins not only declared them as Pandyas but also used the Double Fish emblem of the Pandyas.

Madurai Pandyas are also called Meenavan which means Fishking. Fish  has been used for over 2000 years as their Royal emblem.

Aalupas throw more light on the unsolved mysteries of Pandya Kingdom.

****

Mysteries of Pandya Dynasty

Kalabhras from Karnataka entered Tamil Nadu in the fourth century CE and spread Jainism. Hindu temples were converted as Jain places of worship or completely shutdown. Immediately after the Sangam Age, not much information is in literature about 200 years in Tamil history. That is called the Dark Age of Tamil History.

The second mystery is that during that Dark Age, a business man by name Murthy Nayanar was crowned as king by an elephant. After the sudden death of the Jain king in Madurai, an elephant was sent out in public streets to choose a king, and it garlanded a Saiva devotee by name Murthy . Though Periya Puranam and Thiru Vilaiyadal Puranam ( TVP) of Nambi narrated the incident in graphic detail, there is no historical record for this king.

Two Thiru Vilayadal Puranams (TVP) sing the 64 Leelas (playful anecdotes) of Lord Siva of Madurai; It is full of Sanskrit names of Kings without any historical evidence. Alupas has many of the names so do the later Pandyas of Madurai. So, the mystery is partly solved.

Pandyas has more mysteries; Adi Sankara, the most famous philosopher of India, mentioned one Sundara Pandya in his Brahma Sutra commentary. But again, no historical king with that name before Adi Sankara . But the TVP mentioned one Sundara Pandya before Sambandar period, that is seventh century CE.

****

Now let us look at the History of Alupas

The word found in the coins mean a Chettiyar by name Dhanajayan who discovered the present Madurai. The story is in the TVP and his statue is inside the famous Madurai Meenaskhi Sundareswarar temple. Because the name also meant Arjuna of Mahabharata , people mistook the statue for Arjuna. The word Dhana/wealth is always associated with Chettiyar names in Tamil Nadu. Chettiyars are people of business community.

A picture of Coinage of the Alupas in Wikipedia.

Uncertain ruler, Chattopadhyaya Type II. Legend śri pa/ndya dhana/jaya in Devanagari. 14th century CE.

This word found in the above coin is also a link to Pandyas of Madurai.

 Alupas ruled from Mangalore in Karnataka. They worshipped Lord Siva and his consort Goddess Sakti. This is seen in Madurai temple and 300 hundred more ancient Tamil temples. All are sung by famous Saivite saints.

 Tamil Sangam Period 

The Alupa dynasty (ಅಳುಪೆರ್, ಆಳ್ವೆರ್) was an Indian Hindu dynasty that ruled from 200 CE to 1444 CE  in Southern India. Later the Vijayanagara Empire captured their kingdom. 

The kingdom they ruled was known as Alvakheda Arusasira. Ptolemy, the 2nd century geographer identifies the Alvakheda as Olokhoira which is widely believed to be a corruption of the term Alva Kheda, ‘the land of the Alvas’. Same Ptolemy reported the Change of capital in Pandya Kingdom around 75CE. So he knew the Pandya history of his time. Alva Kheda, ‘the land of the Alvas’ is the corrupted Sanskrit words Aalway Kshetra, meaning the land od Always Kings. 

Like Zoroaster who parted way with the Vedic Hindus around Seventh century BCE, these Aalwayas must have parted way from Sangam Age Pandyas. 

The Aalway  (Uroboros) symbol is found in ancient Egypt from 14th century BCE. We don’t know the origin of it. Later Greeks also use it in the name of Uro boros.

And this snake story is confirmed in TVP also.

In short, the emblem is known for a very long period and when something like that happened in Madurai , the city also got its name.

If we date Alupa to second or third century CE , it will help dating the TVP  snake anecdote also .

****

Following information from Wikipedia also confirms their connection with Tamil Aalwaay=Uro Boros= Uragapura of Kalidas.

According to B. A. Saletore, the name Alupa may be derived from its variant Aluka which is an epithet of the divine serpent Shesha of Hindu epics.[5] Fleet has suggested that the name Aluka may possibly denote the Nāgas, who in early times were included in Chalukya dominions.[5] Saletore further adds that the Naga origin of the Alupas is proved by two facts. The figure of a hooded serpent which is found in an effaced Alupa stone inscription in the Gollara Ganapati temple in Mangalore and their ultra Saivite tendencies.[5] Saletore dismisses the idea regarding the Dravidian origin of the name from the Tulu word Alunu meaning ‘to rule’ or ‘govern’.[5].

Their influence over coastal Karnataka lasted for about 1200 years.

****

Another Interesting Pandya Link

Two Alupa names Kulasekhara and Bhutala Pandya are in Tamil history. Kulasekhaara Pandya is in TVP and Kulasekhara Alvar was a Chera king.

The name Bhutala Pandya is in Tamil translation as Nilam tharu Pandya, who is one of the oldest rulers of Tolkappiam period. There is another Pandya called Pannadu thantha meaning one who grabbed/occupied/ captured many lands. In Sanskrit kings are called Bhubuk meaning one who eats lands!

****

They say We are Pandyas!!

The first clear mention of Alupas comes from the Halmidi inscription of 450 CE where their possible early ruler Pashupathi of Alapa (Alupa) gana is mentioned. Pashupathi was the contemporary of the Kadambas. Hence for historical record, we can safely assume that the dynastic formation of Alupas took place around 5th century CE. Their royal emblem was the double fish and they claimed to belong to the Pandya vamsha and Soma Kula (lunar dynasty).

The double fish emblem was used by Tamil Pandyas for 2000 years. They also claimed that they belong to Chandra Vamsa/Lunar Race.

With this background we can boldly say Alupa is the corruption of Tamil word Aaalawaay. Pasupathi is Siva’s name and Pandyas built famous Siva Temples.

Virapandya, Chitravahanan are some of the kings in Alupa Kingdom. These are in Tamil Pandya names as well.

****

Conclusion

Alupa’s declaration that they were Pandyas belonging to Chandra Vamsa/lunar dynasty and their worship of Siva, and their emblem Double Fish show very clearly they migrated from Madurai at one time. Their name Alupa is nothing but Aalawaay (name of Madurai).

Linguistically V becomes P which is seen in Bengali today and also in ancient Avestan, Sanskrit and Tamil. Alupa’s connection with Jainism must be researched more. Till this day Tamils could not say for sure who the Kalabhras were. We may assume that they were Jain Alupa Kings. But unless we get some information about Jain Kings invasion of Tamil Nadu in fourth century CE we should not jump to any conclusion.

–subham—

Tags – Alupas, Pandyas, Chandra vamsa, Fish emblem, Aalawaay. Madurai, Uro boros, Uragapuram, Kalidas

GNANAMAYAM 1-6-2025 PROGRAMME REPORT

ISAIKKAAVI RAMANAN MADE A POWERFUL SPEECH FOLLOWED BY AN INTERVIEW ON GNANAMAYAM BRODCAST FROM LONDON ON SUNDAY 1-6-2025. HE SPOKE ABOUT INDIA’S CONTRIBUTION TO WORLD THOUGHT QUOTING BHARATI AND UPANISHADS. HE ANSWERED ALL THE QUESTIONS ABOUT HIS GURU, HIS BOOKS, HIS POEMS AND HIS ACTING AND LECTURING. AFTER HIS TALK LONDN SWAMINATHAN INTERVIWED HIM. HIS GESTURES SHOW HOW POWERFUL HIS SPEECH WAS.

OTHER PARTICIPNTS

GNANAMAYAM First June 2025 SUNDAY BROADCAST PROGRAMME SUMMARY

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

Prayer by Mrs Jayanthi Sundar Team: Master Akash Ramesh

***

World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London .

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on – The Chintpurni Temple, – Sakthi Peetam – Himachal Pradesh

****

SPECIAL EVENT-

Talk by Isaikkavi Ramanan on His Contribution to Tamil Language and  Community

Isaikkavi Ramanan is a famous speaker, actor, playwright, author, composer  and a poet; won a number of awards.

He is saying about himself :

“Not special in any way. Fortunate in every way”.

Official Name T.A. Venkateswaran

Date of birth January 29, 1953, Tirunelveli

Married to Anuradha

Father of Anand and Vikram (Twins)

Education Commerce Graduate

Work Experience       

27 years in The Hindu, one of India’s leading national dailies. Joined as a Sales Representative, became Regional Manager at Visakhapatnam, and quit employment when I had 10 years to go, to pursue my personal dreams.

Gifts from Providence

A prolific poet in Tamil, composer and singer. Stage Actor. Acted in Televesion serials and presented about 1400 programmes as well in various channels. Author in Tamil and English.

Publications

About 15 books in Tamil comprising compilation of poems and articles

Wrote “Sikaram” the biography of Sri K. Balachandar, a doyen film maker

Three books in English, “Chips Down? Chin Up!” ; Business Mantras, a Pictorial on Sri N Mahalaingam and A Sublime Sacrament, an interpretation of Hindu marriage rites.

Three translation works from English to Tamil and one from Tamil to English

Several CDs containing my poems and songs in my voice; also sung by my sons and sister.

CDs containing conversations with Dharma Raman in English and Tamil on Vedas, Aathi Chudi, Durga Sapta Sloki and my poems and songs with her introductions

Published 42 books so far

Media

Pothigai TV : Anchored about 200 epispdes of “Konjam Kavithai Konjam Thaeneer” for about two years

Acted in four Tamil serials, including one directed by the late K. Balachander

Sri Sankara TV : Spoke on “Kanchi Mahan: 501 episodes and On the path of Dharma 275 episodes. “Deivathin Kural” 56 episodes, “Kanchi Mamuniyin Kaaladiyil” 45 episodes.

MakkalTV : Spoke on ThirukkuraL in “Thamizh Amizdhu.” 165 episodes

Makkal TV : “Pannisai VithagargaL” 165 episodes

About 1400 episodes in all in various television channels

Public Speaking

Addressing varied age groups in multiple forums on diverse topics, including series on Thirukkural, Bharathiar’s works, Kannadasan’s film songs and motivational talks.

Wrote and has been acting in SB Creations’ “Bharathi Yaar?” Staged in Chennai, different parts of Tamilnadu and also in Muscat, Melbourne, Singapore and nine places in the USA.

Travel Abroad

Seven visits to parts of the U.S.A. and six Canada – lecture / stage play tour

Seven visits to Singapore – lecture tour

Sri Lanka, Malaysia, Abu Dhabi, Muscat, Australia, UK

Pilgrimage

Ardent pilgrim, visited several holy places in India

35 visits to different parts of the Himalayas so far

Other interests

A keen photographer

Awards: About 46, including Tamilnadu Govt’s Kalaimamani

Goal

Spiritual enlightenment and spreading cheer and positivity through cultural / literary programmes

Fortunate to come under the tutelage of Satguru Sivananda Murty, who lived in Bheemunipatnam, near Visakhapatnam

 ****

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

1-6-2025 ஞாயிற்றுக்கிழமை ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி நிரல்

நேரில் காணலாம்; கேட்கலாம்via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழு– Master Akash Ramesh.

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் .

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

தலைப்பு –  ஹிமாச்சல பிரதேச  சக்தி பீடம்- சிந்த் பூரணி அம்மன் கோவில்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு:- இசைக்கவி ரமணன் .

தலைப்பு — நூல்கள் மூலமும் சொற்பொழிவு மூலமும் ஆற்றும் தமிழ்த் தொண்டு.

இசைக்கவி ரமணன் வாழ்க்கைக்குறிப்பு

 பிறந்த இடம் திருநெல்வேலி / 30.03.1954

 தமிழ்க்கவிஞன் என்னும் ஒரே அடையாளம். இசையோடு கவிதைகளைப் பாடுவது இயல்பு.

27 ஆண்டுகள் ‘தி ஹிண்டு’ ஆங்கில நாளிதழில் பணிபுரிந்து முன்னோய்வு. சென்னை, பெங்களூரு, மதுரை, விசாகப்பட்டினம் கிளைகளில் பணி

37 முறை இமயத்தின் பல பகுதிகளுக்குப் பயணம்

புகைப்படக் கலையில் ஆர்வம்

கனடா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, அபுதாபி, மஸ்கெட் (ஓமன்), ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தமிழ், ஆங்கிலச் சொற்பொழிவுகள்

இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், மும்பை, தில்லி, கொல்கத்தா, மணிப்பூர் போன்ற ஊர்களிலும் சொற்பொழிவுகள்

தொலைக்காட்சி : முடிந்த நிகழ்ச்சிகள் : பொதிகையில் இரண்டாண்டுகள், “கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” நிகழ்ச்சி (சுமார் 200) . மக்கள் தொலைக்காட்சியில், “பண்ணிசை வித்தகர்கள்” (165) “தமிழ் அமிழ்து´ (165) நிகழ்ச்சிகள். சங்கரா தொலைக்காட்சியில் “காஞ்சி மகான்” (501) நிகழ்ச்சி;

 “தர்மத்தின் பாதையில்” On the Path of Dharma என்ற தலைப்பில் தமிழ் / ஆங்கிலத்தில் தொடர் சொற்பொழிவு (275) / தெய்வத்தின் குரல் (60) “காஞ்சி மாமுனியின் காலடியில்” என்னும் தொடர் சொற்பொழிவு (50).

நான்கு தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடிப்பு

இதுவரை பங்குகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சுமார் 1400 +

தினமலர், தமிழ் இந்துவின் யூடியூபுக்காக, சுய முன்னேற்றம் / கவியரசர் கண்ணதாசன் பற்றிய நிகழ்ச்சிகள்.

தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள்: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்திவரும் “காலங்களில் அவன் வசந்தம்” 100 நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.  

மதுரத்வனி மற்றும் இண்டேன் குருகேஸ் ஏஜென்சியின் ஆதரவில் சென்னை ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் “இசைக்கவியின் இதயம்” ; மதுரத்வனி மற்றும் சேவாலயாவின் “மாதம் தோறும் மகாகவி” இவை தவிர, சென்னையிலும் வெளி ஊர்களிலும் சொற்பொழிவுகள் – கவிதைகள் பாடல்களோடு.

அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் என் நண்பன் திரு. மகேஷ் கிருஷ்ணன் வழங்கிய “இசைக்கவி” என்னும் விருதே அடையாளமாகத் தொடர்கிறது.

 விசாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள பீமுனிப்பட்டினத்தில் வாழ்ந்த சற்குரு ஸ்ரீ சிவானந்த மூர்த்தி அவர்களிடம் தஞ்சம்.

தேசமே கோயில், தர்மமே தெய்வம், தமிழே சுவாசம் என்று வாழ முயலும் ஆன்மிகப் பயணி.

*****

எழுதிய நூல்கள்

கவிதை நூல்கள்: 13

01 கோடுகள் இல்லா உலகம்

02 அகத்தியர் அந்தாதி

03 பிள்ளைப் புலம்பல்

04 மனோன்மணி மாலை

05 ரமணனைக் கேளுங்கள் + குறுந்தகடு

06 வண்டி போய்க்கொண்டிருக்கிறது + குறுந்தகடு

07 மரியன்னை பதிகம்

08 அராளகேசி அருட்பாமாலை

09 ஸ்ரீ சாரதாம்பிகை பதிகம்

10 துர்கா சப்தஸ்லோகி

11 நதியில் விழுந்த மலர் + குறுந்தகடு

12 அபிராமி அம்மை பதிகம்

13 என்னுயிர் மீனாட்சியே

உரைநடை நூல்கள்: 20

01 எந்த வானமும் உயரம் இல்லை

02 இமயம் : அந்தரங்கத்தின் பகிரங்கம்

03 எல்லோர்க்கும் தந்தை இறைவன்

04 மனம் செய விரும்பு

05 என் குருவே என் இறைவன்

06 எந்தத் திருமணம் வெற்றி பெறுகிறது? 

07 “சிகரம்” – இயக்குநர் “சிகரம்” – திரு, கே. பாலசந்தர் அவர்களின் வாழ்க்கை வரலாறு

08 பல முகங்கள் சில நினைவுகள்

09 ஒளிமயமான எதிர்காலம்

10 வெற்றி நிச்சயம்

11 காலங்களில் அவன் வசந்தம்

12 கண்ணதாசன் – இலக்கியத்தின் கண்ணாடி

13 தெய்வப் பிறவிகள் (தினமலர் வெளியீடு)

14 பாமரன் பார்வையில் பாரதி (தினமலர் வெளியீடு)

15 சேச்சு

16 ஈசாவாஸ்ய உபநிடத விளக்கம்

17 கம்ப தரிசனம்

18 பெரியவர்

19 பார்த்ததும் பதிந்ததும்

20 குரோம்பேட்டை ஞாபகங்கள்

இது தவிர மொழிபெயர்ப்பு நூல்கள், குறுந்தகடுகள் ஆகியவற்ரையும் வெளியிட்டுள்ளார் . மேடை நாடகங்கள் எழுதியும் நடித்தும் உள்ளார்.

2000 ஆண்டு, விசாகப்பட்டினத்தில், என் குருநாதர் சத்குரு ஶ்ரீ சிவானந்தமூர்த்தி அவர்களின் ஆஸ்ரமத்துக்கு வருகை புரிந்த, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் நான் அவருக்கு அளித்த வரவேற்புக் கவிதைக்கு மறுமொழியாக அளித்த “மதுரகவி” என்பதே நான் பெற்ற முதல் விருது. இது தவிர எண்ணற்ற விருதுகள்!

****

நேரம் இருப்பின் இடையே  பாடல்கள்!

*****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham— 

Tags-Gnanamayam Broadcast, June 1, 2025, Programme, Summary

ஞானமயம் வழங்கும் (1-6-2025) உலக இந்து செய்திமடல் (Post No.14,584)

Written by London Swaminathan

Post No. 14,584

Date uploaded in London –  2 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

(Collected from Popular Newspapers and edited for broadcast)

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் முதல் தேதி 2025-ம் ஆண்டு

முதலில் இந்தியச் செய்திகள்! 

****

 அமர்நாத் யாத்திரைக்கு 3 . 5 லட்சம் பேர் முன்பதிவு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரைக்கு நாடு முழுவதும் இருந்து 3.5 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான் அனைத்து பாதுகாப்புஏற்பாடுகளும் செய்யப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: பஹல்காம் தாக்குதல் காரணமாக, இந்த கோடை சீசனில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாங்கள் அமர்நாத் யாத்திரையில் முழு கவனம் செலுத்த போகிறோம். எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த யாத்திரைக்குப் பிறகு சுற்றுலாவை மேம்படுத்த தேவையான முயற்சிகள் எடுக்கப்படும், இவ்வாறு கூறினார்.

52 நாட்கள் கொண்ட அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரையில் இந்த யாத்திரையில் பங்கேற்க நாடு முழுவதும் 3.5 லட்சம் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது 

அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடுகள்

மத்திய பாதுகாப்புப் ஆயு தப் படையினரை மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு அனுப்புகிறது. இவர்கள் ஜூன் மதம் இரண்டாவது வாரம் முதல் பாதுகாப்புப் பணிகளை ஏற்பார்கள். 

***** 

அயோத்தி ராமர் கோவிலில்  சிவன் சிலை பிரதிஷ்டை

 அயோத்தி; ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட எட்டு கோவில்களின் பிராண பிரதிஷ்டை ஜூன் 3 முதல் ஜூன் 5, 2025 வரை நடைபெற உள்ளது.

 உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில்  ராமர் கோவிலில் நேற்று சிவ பெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

 ஜூன் மாதம் மூன்றாம் தேதி முதல், அபிஷேக ஆராதனைகள் துவங்கப்படும் என்று கோவில் நிர்மாணக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார்

 இப்போது 90 சதவிகித வேலை முடிந்துவிட்டது கோவிலைச் சுற்றி வலம் வரும் பிரகார பாதை அமைக்கும் பணி செப்டம்பரில் நிறைவடையும் ; கோவில் அமைப்பு தொடர்பான எல்லா வேலைகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து விடும் என்றும் மிஸ்ரா தெரிவித்தார். 

****

வைகாசி விசாக திருவிழா: தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை

 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 9ம் தேதி வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட உள்ளது.

 முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விழாக்களில் வைகாசி விசாகம் ஒன்று. வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தன்று முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரமாக கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிற 9-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.

 ****

பிரேசில் நாட்டு ஜோனாஸ் மாசெட்டிக்கு பத்மஸ்ரீ விருது!

இந்து சமய பாரம்பரிய  உடையில் வந்து ராஷீரபதியிடம் விருது பெற்றார்.

அண்மையில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் ஒருவர் ஜோனாஸ் மாசெட்டி Jonas Masetti என்ற பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்துமத ஆன்மீக குரு ஆவார். வேஷ்டி- அங்கவஸ்த்ரம் – சிகை முதலியவற்றோடு அர்ச்சக வடிவில் வந்து விருதுபெற்ற அவரின் ஆன்மீக பெயர் விஸ்வானந்தா.

பிரேசில் நாட்டின் ஜெனிரோவில் பிறந்த இவர், இயந்திரப் பொறியியலில் (Mecanical Engineer) பட்டம் பெற்று, பிரேசில் இராணுவத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பங்குச் சந்தையில் ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.

இருப்பினும், வாழ்க்கையில் ஏதோ குறைவது போல் உணர்ந்த ஜோனாஸ் அவர்கள் யோகா மற்றும் தியானம் மூலம் ஆன்மீகப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தார்.

2004 ஆம் ஆண்டு தமிழகம்- கோவை ஆனைகட்டியில் உள்ள ஆச்சிரமத்திற்கு வந்து சுவாமி தயானந்த சரஸ்வதியிடம் வேதாந்தம் பயின்றார். நான்கு ஆண்டுகள் அங்கு தங்கியிருந்து வேதம், உபநிடதங்கள், பகவத் கீதை மற்றும் சமஸ்கிருதம் கற்றார்.

பிறகு தனது குருவின் வழிகாட்டுதலின்படி, பிரேசில் திரும்பிய ஜோனாஸ் ‘விஷ்வ வித்யா’ என்ற அமைப்பை நிறுவி வேதாந்த போதனைகளை பரப்பத் தொடங்கினார்.

அவரது போதனைகள் பிரேசில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பலரையும் கவர்ந்தது.  அவர் பகவத் கீதையை போர்த்துகீசிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் வேதாந்தம் மற்றும் யோகா குறித்து பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

ஜோனாஸ் மாசெட்டி தனது ஆன்மீக போதனைகள் மூலம் பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

*****

 தாய்நாட்டின் மீதான சாவர்க்கரின் பக்தியை ஆங்கிலேயர்களின் சித்திரவதைகளால் அசைக்க முடியவில்லை – பிரதமர் மோடி

இந்தியத் தாயின் உண்மையான மகன் வீர் சாவர்க்கர் என பிரதமர் மோடி புகழராம் சூட்டியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் 142வது பிறந்த நாளையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், இந்தியத் தாயின் உண்மையான மகன் வீர் சாவர்க்கர் என பிரதமர் மோடி புகழராம் சூட்டியுள்ளார்.

தாய்நாட்டின் மீதான சாவர்க்களின் பக்தியை ஆங்கிலேயர்களின் சித்திரவதைகளால் அசைக்க முடியவில்லை எனக்கூறியுள்ள அவர், சுதந்திர இயக்கத்தின் மீதான சாவர்க்கரின் துணிச்சலை தேசம் ஒருபோதும் மறக்காது என தெரிவித்துள்ளார்.

மேலும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் சாவர்க்கரின் தியாகமும் அர்ப்பணிப்பும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் சுதந்திரத்திற்காக துணிச்சல் மற்றும் கட்டுப்பாட்டின் உச்சத்தைத் தாண்டியவர் சாவர்க்கர் என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நலனை அகில இந்திய உணர்வாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றியவர் சாவர்க்கர் எனக் குறிப்பிட்டுள்ள அவர், சுதந்திரப் போராட்டத்தை தனது எழுத்துக்களால் வரலாற்று சிறப்பு மிக்கதாக மாற்றியவர் சாவர்க்கர் என தெரிவித்துள்ளார். மேலும், இந்திய சமூகத்தை தீண்டாமையின் கொடுமையில் இருந்து விடுவிக்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வீர் சாவர்க்கர் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

*****

ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை இந்து முன்னணி ஜூன் 22-ம் தேதி நடத்தவிருக்கிறது.. முருக பக்தர்கள் மாநாட்டுக்கான பூமி பூஜை மே மாதம் 28-ஆம் தேதி நடந்தது.

தமிழகம் முழுவதும் உள்ள அறுபடை வீடுகள் உட்பட முருகன் கோயில்களை சீரமைக்க வலியுறுத்தியும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும், மதுரையில் ‘குன்றம் காக்க.. கோயிலை காக்க…’ என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு ஹிந்து முன்னணி சார்பில் ஜூன் 22 ல் நடக்கவுள்ளது.

அதற்கான பூமி பூஜை மதுரை வண்டியூரில்  நடந்தது. ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கோ பூஜையுடன் விழா தொடங்கியது.

இதற்கு முன்னர்,

கடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் முருக பக்தர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் கலந்துகொண்டு மாநாட்டுத் தொடர்பான ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு திமுக அரசு பாதுகாப்பு வழங்குகிறது எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், ஜூன் 22ஆம் தேதி மதுரையில் கட்சி பாகுபாடு இன்றி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

**** 

முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் தேசத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை தேவை – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!

முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் தேசத்துக்கும் , ராணுவத்துக்கும் எதிராக சிலர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை ராம்நகரில் படைவீரர்களை பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம் என்ற நிகழ்வில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான இந்திய ராணுவம் மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் இந்திய ராணுவத்துக்கு எதிராக சிலர் பல்வேறு கருத்துகளை பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கும் தமிழக அரசு, ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பேரணிக்கு அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல எனவும் கூறினார்.

****

 லண்டனில் ருத்ர ஜபம்,  யக்ஞம் 

லண்டனில் நடந்த ருத்ர ஜபம் யக்ஞம் காரணமாக, சென்ற ஞாயிற்றுக்கிழமை நமது ஒலி பரப்பு நிகழ்ச்சி, ஒத்திவைக்கப்பட்டதை முன்னரே அறிவித்து இருந்தோம் . 

மித்ர சேவா அமைப்பின் சார்பில் நடந்த அந்த நிகாழ்ச்சி திரு கல்யாண சுந்தர சிவாசார்யா தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. சுமார் ஆயிரம் பேர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு யஜுர் வேதத்திலுள்ள ருத்ரம் – சமகம் ஆகியவற்றை பதினோரு முறை ஓதினார்கள் அதே நேரத்தில் ஹோமமும் நடந்தது. ஒவ்வொரு அணுவாகம் முடியும்போதும் மேடையில் அலங்கரிக்கப்பட்ட பளிங்குச் சிலை சிவலிங்கத்துக்கு அபிஷேகமும் ஆரத்தியும் நடந்தது 

ஏராளமான பெண்களும் சிறுவர் சிறுமியரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்; இறுதியில் மகா பிரசாதமும் வழங்கப்பட்டது .

பிரிட்டனின் தொலைதூர நகரங்களிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர் . மித்ரா சேவா சாரிட்டி இதை மூன்றாவது ஆண்டாக நடத்தியுள்ளது; மேலும் ஆண்டுதோறும் உடையாளூர் டாக்டர் கல்யாணராமன் தலைமையில் ராதாகிருஷ்ண கல்யாணத்தையும் மித்ர சேவா அமைப்பு நடத்தி வருகிறது .

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்  வாசித்த செய்தி மடல் இது.

 அடுத்த ஒளிபரப்பு

ஜூன்  மாதம் எட்டாம்  தேதி 

லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

 —SUBHAM—-

 Tags-ஞானமயம் , (1-6-2025) ,உலக இந்து செய்திமடல் 

நம்பியை நம்பாதே! தி. வி. பு. ஆராய்ச்சிக் கட்டுரை-8 Part Two(Post.14,583)

Written by London Swaminathan

Post No. 14,583

Date uploaded in London –  2 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-8 (Part two)

சங்கப்  புலவர்களின் பெயர்களில் அதிகம் காணப்படுவது மதுரை; ஆகையால் தற்போதைய மதுரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது .அதற்குப் பின்னர் நான் மாடக்கூ டல் என்ற காரணப் பெயர் தோன்றியது; அதற்குப்பின்னர் ஆலவாய்  என்ற காரணப் பெயர் தோன்றியது . அந்தப் பெயரைத்தான் திருஞான சம்பந்தர் அதிகம் பயன்படுத்துகிறார். மாணிக்கவாசகர்தான் மதுரை என்ற பழைய சொல்லைப்  பயன்படுத்துகிறார் . ஆலவாய் என்பது பாம்பு தனது  வாயால் தன்னுடைய வாலினைக் கவ்விக் கொள்ளும் வடிவம் ; இந்த வட்டத்திற்குள் இருப்பது மதுரை இதை சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசனும் உரகபுரம் என்ற சொல்லினால் ரகுவம்சத்தில் எழுதியுள்ளார் . இதை ருசுப்பிக்கும் வகையில் சங்க காலப் புலவர் பெயர் மதுரைப் பேராலவாயார் (புறநானூறு 247, 262)  என்றும் காணப்படுகிறது.

****

.இரண்டு திருவிளையாடல் புராணத்திலும்  படலம் எண்  வரிசை

பரஞ்சோதி      —          நம்பி 

மதுரை நகரம் கண்ட படலம் 3- 36

நான் மாடக்கூடல் ஆன படலம்  18- 12

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் 40-48

திரு ஆலவாய் ஆன படலம் 49 – 47

(இந்த மூன்று பெயர்களும் சங்க இலக்கியத்தில் இருப்பதால்  இதற்கு முந்திய லீலைகளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வைக்க வேண்டும் என்பது என் துணிபு)

தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் 52-53—-  16, 17

வாதவூரடிகள் தொடர்பான படலங்கள் —  58 to 61 —  27 to 30

கூன் பாண்டியன்/ சம்பந்தர் படலம்  62,63–  37,38

வரகுணன் யார் ?

இவ்வளவு  பின்னனி  இருக்கையில் வரகுணன் என்ற ஒரு மன்னர் பெயரினை வைத்து மாணிக்கவாசகரை ஒன்பதாம் நூற்றாண்டுக் காரர் என்று சிலர் முத்திரை குத்திவிட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் மாணிக்க வாசகர் கால மன்னர் அரிமர்த்தன பாண்டியன் என்று இருப்பதை மறைத்து எழுதுகினறனர் வரலாற்றுக்குத் தெரிந்த இரண்டு வரகுணன்கள்  எட்டு ஒன்பது நூற்றாண்டுக   ல்  இரூந்தவர்கள் என்பதும் ஜிக் சா பசில் JIGSAW PUZZLE  கதைதான்! ஒன்றை வைத்து ஒன்றின் காலத்தை நிர்ணயிக்கின்றனர். உறுதியான சான்று எதுவும் இல்லை. நல்ல வேளையாக நம்பியும் பரஞ்சோதியும் சம்பந்தர் கதையை மாணிக்கவாசகர் கதைக்குப்பின்னர் வைத்துள்ளனர் அவர்களும்  மாணிக்க வாசகரே முதல்வர் என்று நம்பினர்.

வரகுணன் என்பது பட்டப்பெயர் அதாவது சங்கராசார்யார் தலைலாமா, போப்பாண்டவர், இந்திரன் போன்ற பதவிப்பெயர்கள் அப்பா அமமா கொடுத்த அல்லது அலிஸிஷேக காலத்தில் புரோகிதர்கள் கொடுத்த பெயர் அல்ல ஆகையால் வரலாற்றுக்குத் தெரியாத வேறு ஒருவரையும் இப்படி வரகுணன் என்று அழைத்திருக்கலாம் ஏனெனில் மாணிக்க வாசகர் கால மன்னர் அரிமர்த்தன பாண்டியன்.

புதிர்களுக்கு விடை என்ன ?

பதில் சொல்ல முடியாத கேள்வி இது; தருமி என்ற பிராமணப் புலவருக்கு சிவபெருமானே பாடல் எழுதிக்கொடுத்து நக்கீரனுடம் சண்டைபோட்டதை அப்பரும் பாடியுள்ளதால் அது கிபி/CE 600-க்கு முன்னர் என்று உறுதியாகிட்டது அப்பருக்கு 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிகழ்ச்சி   நடந்ததால்தான் சோழநாட்டு அப்பர் அதை பாடியுள்ளார்.

****

புதிர்களுக்கு விடை எங்கே உள்ளது ?

1.புலவர் தருமி பற்றிய அப்பரின் தேவார பாடல் ;

2.ஸுந்தர பாண்டியன் என்று ஆதி சங்கரர் குறிப்பிடும்  பிரம்ம சூத்திர உரை ; சங்கரர் காலத்திலும் குழப்பம் இருக்கிறது ஆதிசங்கரர்  போலவே பிற்காலத்தில் அபிநவசங்கரர்  என்று ஒருவர் பட்டம் ஏற்று அதே போலா செயல்பட்டதால், சாதனை செய்ததால் இருவரையும் ஒருவராக எழுதிக் குழப்பிவிட்டனர் . காஞ்சீபுர மடத்தினர் ஆதி சங்கரரை மிகவும் முற்காலத்தில் வைப்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

3.வரகுண மங்கை என்று நம்மாழ்வார் பாடிய பாசுரம். நம்மாழ்வார் வரகுண மங்கை என்கிறார் ; மாணிக்கவாசகர் உத்தரகோச மங்கை என்றார் ; இந்த மங்கை சொல் பற்றியும் ஆராய்வது அவசியம்  (பிற்கால பட்டினத்தார், தாயுமானவர் பாடல்களை விட்டுவிடலாம் )

நம்மாழ்வார் பாசுரம் குறிப்பிடும் வரகுண மங்கை –பாசுரம்

வரகுணமங்கை நம்மாழ்வார் பாடல்

நத்தம் என்றழைக்கப்படும் திருவரகுணமங்கை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது.

திருவாய்மொழி பத்து

புளிகுடிக் கிடந்து வரகுண மங்கை

இருந்துவை குந்தத்துள் நின்று,

தெளிந்தவென் சிந்தை அகங்கழி யாதே

என்னையாள் வாயெனக் கருளி,

நளிந்தசீ ருலகம் மூன்றுடன் வியப்ப

நாங்கள்கூத் தாடிநின் றார்ப்ப   

பளிங்குநீர் முகிலின் பவளம் போல் கனிவாய்

சிவப்பநீ காணவா ராயே.   , 3687

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மன்னன் வரகுணனுக்கும் இந்த ஊருக்கும்  எந்தத் தொடர்பும்  இல்லை! அவனோ சிவ பக்தன்; அப்படியிருக்க வரகுண மங்கை என்ற பெயர் எப்படி வந்தது?

****

4.கர்நாடக ஆளுப்பா வம்ச மன்னர்கள் !!!

இது முக்கியமான தடயம் ; ஆலவாய் என்ற பெயரே ஆளுப்பா என்று மருவியுள்ளது இவர்கள் பாண்டியா என்று தங்களை அழைத்துக்கொண்டு பாண்டியரின் மீன் சின்னத்துடன் காசுகளையும் வெளியிட்டனர். மேலும் தி, வி. பு மன்னர் பெயர்களையும் வைத்துக்கொண்டனர் (இது பற்றி தனி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுகிறேன்)

****

5.மூர்த்திநாயனார் மர்மம் !

மூர்த்தி நாயனார் என்ற வணிகரை, யானை மாலை போட்டு மன்னர் ஆக்கியதை நம்பியும் சேக்கிழாரும் பாடினார் ; அவர் சமணர்களின் எதிரி. சேக்கிழாரும் பாடியதால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்டிருக்கிறார் அவர் பற்றிய குறிப்புகள் வரலாற்று ஏடுகளில் எங்கணுமே இல்லை . அவர் எப்போது ஆண்டார்?

இதே போல இலக்கியங்கள் புகழும் பொற்கைப் பாண்டியன் யார் ? பசும்பூண் பாண்டியனா?

6.அபிஷேக பாண்டியன்– நான்மாடக் கூடல் தொடர்பினை வைத்து அவனுக்கு கி பி நான்காம் நூற்றாண்டினைக் குறிக்கிறார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அதையும் தொடக்கமாக வைத்து முன்னும் பின்னும் காய்களை நகர்த்தலாம்.

7.மதுரைப் பேராலவாயார் புறநானூற்றின் 247, 262 பாடல்களை இயற்றியதால் ஆலவாய்ப் பெயரும் 2000 ஆண்டுப் பழமை உடைத்து!

அபிஷேக பாண்டியனும்  தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் சிறு வயதிலேயே பட்டம் ஏற்றதையும் ஓப்பிடலாம் கரிகாலன்கள்  மூவர்  இருந்தது போல  வரகுணன் மூவர் இருந்திருக்கலாம்! கரிகாலன் மன்னன் காலத்தில் ராஜசேகர  பாண்டிய மன்னன்  ஆண்டதாக தி. வி. பு. கூறுகிறது! எந்தக் கரிகாலன் ?

****

மதுரை என்ற பெயரின் தோற்றம் மர்மமாக உள்ளது

கலித்தொகையில் திரு மருத முன்துறை வருகிறது; மருதம் ஊர் என்பதே மதுரை ஆனதாகவும்,  கிருஷ்ணனின்  வட மதுரைஊரை வைத்தே  மதுரை தோன்றியதாகவும் பலர்  செப்புவர் . 

பதினோராம்  திருமுறையிலும்  தி வி பு விலும்  சேரமான் பெருமாள் நாயனார், பாணபத்திரர், திரு ஆலவாயான் ஆகியோர் ஒரே காலத்தில் இருந்த குறிப்பு வருகிறது இவர் வேறு  திரு ஆலவாயான் ??

இவ்வாறு ஏராளமான புதிர்கள் வருகின்றன ; இந்தப்புதிரை விடுவிக்க தி.வி.பு. மகாநாட்டினைக் கூட்டி அறிஞர்கள் ஆராய வேண்டும் அப்போது புதிருக்கு விடைகாணலாம்

 *****

வேள்விக்குடி செப்பேடு

சூடாமணி / சூளாமணி என்ற பெயர்கள் தி.வி.பு.வில் நிறைய மன்னர் பெயர்களில் வருகிறது. அவை எல்லாம் பிற்காலப் பாண்டியர் பெயர்களில் வருவதை செப்பேடுகளும் கல்வெட்டுகளும் கூறுவதால் இவை எல்லாம் பரஞ்சோதி, நம்பி ஆகியோரின் கற்பனையில் உதி த்தவை அல்ல.

கல்வெட்டுகளும் செப்பேடுகளும் ஸம்ஸ்க்ருதப் பகுதியில் பாண்டியனை வர்மன் என்ற பட்டத்துடன் கூறுகிறது. இந்தோனேஷியாவின் போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள் யூப தமபங்களும் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகளும் பூர்ண வர்மன் என்ற பெயருடன் கிடைத்துள்ளமான . இவை எல்லாம் தி .வி.பு ஸம்ஸ்க்ருதப் பெயர்களை உறுதி செய்கின்றன. பூர்ண வர்மன் நாலாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவன்  .

–subham –

Tags — திருவிளையாடல் புராணம் , ஆராய்ச்சிக் கட்டுரை-8,நம்பியை  நம்பாதே, Part two, last part