அதிசயிக்க வைக்கும் ஐஸ் மனிதன் விம் ஹாஃப் (Post No.14,555)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,555

Date uploaded in London – –26 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

6-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை 

அதிசயிக்க வைக்கும் ஐஸ் மனிதன் விம் ஹாஃப்

(WIM HOF– THE ICEMAN) 

ச. நாகராஜன் 

இறைவனின் படைப்பில் நாம் காணும் அதிசய ஆற்றல்கள் கொண்ட மனிதர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.

கடும் குளிரைத் தாங்கும் மனிதரும் உண்டு என்பதை நிரூபிக்க விம் ஹாஃப் என்னும் ஐஸ் மனிதர் இருக்கிறார்.

நெதர்லாந்தில் லிம்பர்க்கொல் சிட்டார்ட் என்னும் இடத்தில் 1959-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி இவர் பிறந்தார். இப்போது இவருக்கு வயது 65.

இவருடைய பதினேழாம் வயதில் ஒரு அதிசய சம்பவம் நடைபெற்றது. பீட்ரிக்ஸ்பாக்ஸ் என்னும் கால்வாயில் கடும் குளிர் நீரில் திடீரென அவர் குதித்து நீந்தத் தொடங்கினார். குளிர் அவர் உடலை பாதிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து குளிரான சூழ்நிலை அவரைப் பாதிக்காமல் இருப்பதைக் கண்ட விஞ்ஞானிகள் அவரை ஆராயத் தொடங்கினர். 2024ல் எட்டு ஆய்வுகள் நடைபெற்றன; அவரது தனித்துவம் வாய்ந்த ஒரு வழி அவரைக் குளிரிலிருந்து காக்கிறது என்று முடிவை அறிவித்தன.

தனது வழியை விம் ஹாஃப் மெதேட் (WIM HOF METODஎன்று அவர் கூறுகிறார்.

இமயமலையில் உள்ள யோகிகளும், திபெத்திய லாமாக்களும் இமயமலையில் கடும் குளிரில் போர்வை கூட போர்த்திக் கொள்ளாமல் இருப்பதை பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஆனால் விம் ஹாஃப் வழி தனி வழி!

26 உலக ரிகார்டுகளை அவர் பெற்றிருக்கிறார்.

வெறும் காலுடன் இரண்டு மணி நேரம் 16 நிமிடம் 34 வினாடிகள் அவர் பனிக்கட்டிகளின் மீது ஓடியது ஒரு உலக சாதனையாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த சாதனை பின்லாந்தில் 2007ம் ஆண்டு ஜனவரி 26ம் நாளன்று நிகழ்த்தப்பட்டது.

2000, மார்ச் மாதம் 16ம் நாளன்று ஐஸுக்கு அடியில் நீந்தி அவர் கின்னஸ் சாதனையைப் படைத்தார்.

மவுண்ட் எவரெஸ்டில் வெறும் சாதாரண உடையுடன் அவர் ஏறி அனைவரையும் வியக்க வைத்தார்.

அவரைப் பற்றிய டாகுமெண்டரி படங்களும் வெளியாகியுள்ளன. யூ டியூபிலும் அவரைப் பற்றிய படம் உண்டு.

தனது சாதனைகளின் அடிப்படையில் அவர் உணர்வூக்கம் கொடுக்கும் மோடிவேஷன் பேச்சாளராக மிளிர்ந்து அனைவருக்கும் ஊக்கமூட்டி வருகிறார்.

அவரது ஊக்கமூட்டும் பொன்மொழிகளில் சில இதோ:

நமக்குள்ளே சக்தி இருக்கிறது. நமக்குள்ளே சென்று எதையும் வென்று விடலாம்.

உங்கள்  மூளையைக் கட்டுக்குள் கொண்டு வரும் போது நம்பிக்கை வருகிறது.

நாம் இயற்கையிலிருந்து வெளியே வந்து விட்டோம். குளிரானது நாம் இழந்த ஒன்றிற்கு நம்மை திருப்பி இட்டுச் செல்லும் வலிமை கொண்டது.

 இது போன்ற ஊக்கமூட்டும் ஏராளமான கருத்துக்களை அவர் கூறி இளைய சமுதாயத்தினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.

 விம் ஹாஃப் – தி ஐஸ் மேன் – ஒரு அதிசய மனிதர் தான்!

***

Pictures of 2500 Indian Stamps!- Part 47 (Post No.14,554)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,554

Date uploaded in London – –25 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 47

 Pictures of 2500 Indian Stamps!- Part 47 (Post No.14,554)

Stamps posted today include 2001 STAMPS,

Pictures of 2500 Indian Stamps,

ACTORS SIVAJI GANESAN, RAJ KAPOOR, SHANTARAM, GREETINGS STAMPS, RANI AVANIBAI, RANI JHALKARI  BAI, BHARATIDASAN, JAYAPRAKASH NARAYAN, ANCIENT SHIPS, TARANGINI, PAL GALBAT, INTERNATIONAL FLEET REVIEW, CANCER AWARENESS, VOLUNTEER, SEVA PRAMO DHARMAH, KRISHNA SARAMAH, RAO TULARAM, YURI GAGARIN, COMPOSER, C SANKARAN NAIR, GLOBAL IODINE DEFICIENCY, VIJAYA RAJE SCINDIA, SHYAMA PRASAD MUKERJEE, SHOBA SINGH, GIANI GURMUKH SING MUSAFIR, JAIN SYMBOL, MAHAVIR, MASTER MITRASEN, JAGDEV PRASAD, U KIANG, GEOLOGICAL SURVEY, MINERALS, MARATHA BICENTENARY FREDERYC

–subham—

Tags– ACTORS SIVAJI GANESAN, RAJ KAPOOR, SHANTARAM, GREETINGS STAMPS, RANI AVANIBAI, RANI JHALKARI  BAI, BHARATIDASAN, JAYAPRAKASH NARAYAN, ANCIENT SHIPS, TARANGINI, PAL GALBAT, INTERNATIONAL FLEET REVIEW, CANCER AWARENESS, VOLUNTEER, SEVA PRAMO DHARMAH, KRISHNA SARAMAH, RAO TULARAM, YURI GAGARIN, COMPOSER, C SANKARAN NAIR, GLOBAL IODINE DEFICIENCY, VIJAYA RAJE SCINDIA, SHYAMA PRASAD MUKERJEE, SHOBA SINGH, GIANI GURMUKH SING MUSAFIR, JAIN SYMBOL, MAHAVIR, MASTER MITRASEN, JAGDEV PRASAD, U KIANG, GEOLOGICAL SURVEY, MINERALS, MARATHA BICENTENARY FREDERYK CHOPIN 

Maha Rudra Japa Yajnam in London (Post No.14,553)

Written by London Swaminathan

Post No. 14,553

Date uploaded in London –  25 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Mitraseva UK conducted its Third Maha Rudra Japa Yajnam in Harrow (London ) on Sunday 25th May 2025. It was their third successful Homam with over 700 participants. They recited the Rudram and Chamakam Mantras of Yajur Veda 11 times while the priests conducted Homam (Havan). The stage was decorated with a beautiful Mont Kailash image. At the end of each recitation there was arti and abishekam to the beautiful crystal Shiva Linga on the stage.

It is significant that even many boys recited the Rudra- Chamaka by heart. Women folk made Prasad and decorations.

Last evening, a prayer session was held by women.

Sri Kalyanasundara Sivacharya lead the priests, and he dedicated each recitation to all the famous Hindu Shiva Shrines in India.

Mitraseva organisers Sri M Rajagopalan, Mrs Uma Rajagopalan, Mr Raj Iyer, Mr Subramanyam (Subbu Iyer ) and Mrs Gayatri Subramanyam and scores of volunteers made elaborate arrangements. After the Poorna Ahuti prasad was given to all the participants.

Another significant thing is the participants travel from far off cities in the Uk to participate in the event. Now the Rudra Mahayajnam has become a permanent annual event of Mitra seva. It has been conducting Radha Kalyanam in November every year with Sri Udaiyalur Dr Kalyana Raman team. Over thousand people attend its annual Radha Kalyanam .

Mitraseva is a registered charity and people can contribute to it if they can’t attend the events personally. Their web site has the bank details. They have a WhatsApp group through which you can get event details in advance.

–subham—

Tags- Maharudra Japam, Yajnam, London, Mitraseva, May 2025

MAHA RUDRA JAPA YAGNAM IN LONDON TODAY 25 MAY 2025

 NO GNANAMAYAM BROADCAST FROM LONDON TODAY BECAUSE OF GRAND MAHA RUDRA HOMAM IN LONDON TODAY/SUNDAY.

C U ALL NEXT SUNDAY 1-6-2025.

–SUBHAM–

London Swaminathan Again! 142 Book Wrappers; Batch 3 ;  Thirty more Books!

London Swaminathan Again! 142 Book Wrappers; Batch 3 ;  Thirty MORE Books!

THIRD BATCH- Thirty more books!

PLEASE GO TO PUSTAKA.CO.UK AND TYPE LONDON SWAMINATHAN IN THE AUTHOR BOX.

—SUBHAM—

tag- london swaminathan, books , third batch, 142 books

பெண்களை இந்துக்கள் பூஜிப்பது ஏன்? அனந்தராம தீட்சிதர் விளக்கம் (Post.14,552)

Written by London Swaminathan

Post No. 14,552

Date uploaded in London –  25 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஸ்ரீ  அனந்தராம தீட்சிதரை அறியாத தமிழர் இருக்க முடியாது . காரணம்? சொற்பொழிவாற்றுவதில் அண்ணாதுரை , தி.மு.க கட்சிக்கு எப்படி ஒரு தனி பாணியை ஏற்படுத்தினாரோ அதுபோல உபன்யாச சக்கரவர்த்தியான சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் தனக்கு என ஒரு பாணியை ஏற்படுத்தினார் ; கணீரென்ற குரலில் தமிழ் சம்ஸ்க்ருத வசனங்களை சொல்லக்கூடிய ஒரே பெரியவர் என்ற பெயரை எடுத்தார். அவர் மூலம் ராமாயணம் பரவியது போல வேறு எவராலும் ராமாயணம் பரவவில்லை .

அவர் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேக மலரில் எழுதிய கட்டுரையின் சுருக்கத்தைத் தருகிறேன் (அந்த மலரின் ஆசிரியர் குழுவில் எனது தந்தை தினமணி பொறுப்பாசிரியர்  வெ. சந்தானம் முக்கிய உறுப்பினர் ; ஆகையால் மலரை மிகவும் கவனமாக பாதுகாத்து வருகிறேன்)

இதோ தீட்சிதரின் சொற்கள் :

எங்கும் சக்தியே

தெய்வங்களே நமது குறைகளை நீக்கவேண்டும் .அப்படி நீக்குபவர் கள் தேவர்கள் எனப்படுவர். அத்  தேவர்களுக்கு ஏற்படும்குறைகளை நீக்கும் தெய்வம் ஸ்ரீ சக்தி எனப்படும். இந்த சக்தியுடன் சேர்ந்து இருப்பதே சிவபெருமானுக்கு பெருமை. சக்தியுடன் சேராமல் இருந்தால் சிவனும் வெறும் சிவன்தான் . ஆதலால்தான் உலக வழக்கிலும் வைஷ்ணவர் முதலிய யாராயிருந்தாலும்  எனக்கு எழுந்துவர சக்தி இல்லை என்று கூறுவார்களேயாகில் , அவர்களை சிவனே என்றிரு எனக்கூறுவது வழக்கம் . ஆதலால்தான் ஆதி சங்கரரும் பரமேஸ்வரனுக்கு காரியங்களை செய்வதற்குத் தகுதியை அளிக்கும் பராசக்தி இவளேதான் ; ஆகையால் பிரம்மா, விஷ்ணு முதலியோரும் வணங்கும் சக்தியை நமஸ்கரிக்கவோ துதிக்கவோ புண்யமில்லாதவருக்கு இயலாது . இச்சக்தியில்லையேல் அசைவதற்கும் இயலாது , என்று துதித்திருக்கிறார் . இப்படிப்பட்ட பராசக்திதான் ஸ்ரீ மீனாட்சி, அவளேதான் காமாட்சி, புவனேஸ்வரி என்ற பெயரால் விளங்குகிறாள் .

இவ் வுலகில் ஸ்த்ரீ ரூபமாக தெய்வத்தைக்கூறும் மதம் நம் இந்துமதம் ஒன்றுதான் . அதனாலேயே பெண்களுக்கு நம்மதத்தில் சிறந்த பெருமை கொடுக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமல்ல, தெய்வங்களாகக் கூட  பெண்களை பூஜித்து வருகிறோம். அம்மாதிரி பூஜித்து புடவை,  குங்குமம், மஞ்சள் , புஷ்பம், தாம்பூலம் இவற்றைக்கொடுத்து அலங்கரித்து , அன்னமிட்டு வணங்குவதை சுமங்கலிப் பிரார்த்தனை என்று சொல்கிறோம். இப்பூஜை யை விஷ்ணுமதத்தைச்  சேர்ந்தோரும் செய்துவருகிறார்கள். இந்த சுமங்கலிப்பூஜை யை ஏதோ ஒரு காரணத்தால் நடத்தாத குடும்பங்களில் தோன்றும் சந்ததியினருக்கு சந்திரன், சுக்கிர, ராகு முதலிய கிரஹங்கள் ஜாதகத்தில் தோஷமுள்ளவர்களாகின்றன. மனதும் சுவாச கோஷமும் பாதிக்கப்படுகின்றன. ஆதலாலேயே  லலிதா சஹஸ்ரநாமத்தில் ஓம் ஸுவாஸின்யை நமஹ ,  ஓம் ஸுவாஸின் யர்ச்சினப் ப்ரீதாயை நமஹ என்ற நாமங்களால் ஸ்ரீ சக்தியை ஸுவாஸினி ரூபிணியாகவும் , ஸுவாஸினிகளை அர்ச்சிப்பதால் சந்தோஷப்படுகிறவளாகவும் கூறப்பட்டுள்ளது இப்படிப் பெண்களைத் தெய்வமாகத் நினைத்துப் பூஜிப்பது நம் பெரியோர்களது சம்பிரதாயமாக இருந்து வந்திருக்கிறது . இவ்வுணர்ச்சி அவர்களுக்கு இருந்ததால்தான்  இந்நாளில் உள்ள , சாஸ்திரத்தை  உணராத சிலர் கூட , பெண்களிடத்தில் பொது ஸ்தலங்களில் மரியாதையும் கருணையும் காட்டுகின்றனர் .

தீட்சிதர் குறிப்பிட்ட செளந்தர்ய லஹரி ஸ்லோகம்

शिवः शक्त्यायुक्तो यदि भवति शक्तः प्रभवितुं

न् चेदेवं देवो न खलु कुशलः स्पन्दितुमपि ।

अतस्त्वामाराध्यां हरिहरविरिञ्चादिभिरपि

प्रणन्तुं स्तोतुं वा कथमकृतपुण्यः प्रभवति ॥१॥

சிவ:  சக்த்யா  யுக்த: யதி  பவதி  சக்த:  ப்ரபவிதும்

ந  சேதேவம்  தேவோ  ந  கலு  குசல:  ஸ்பந்திதுமபி ;

அதஸ்  த்வம்  ஆராத்யாம்  ஹரி-ஹர -விரிஞ்சாதிபிரபி 

ப்ரணந்தும்  ஸ்தோதும் வா  கதமக்ருத   -புண்ய:  ப்ரபவதி 

பொருள்

சகல உலகங்களையும் படைக்கும் ஈசன், சக்தியாகிய உன்னுடன் இணைந்தால்தான்  இந்த  உலகத்தை படைக்க முடியும்.சக்தி இல்லாமல் சிவனால் செயல்படமுடியாது .  மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு,பிரம்மா ஆகியோர் ,துதிக்கின்ற உன்னை முன் ஜென்ம புண்ணியம்  இல்லாவிட்டால் துதிக்கவும், வணங்கவும்  முடியுமோ ?

பராசக்தியான  அம்பாளின் ஸ்வரூபம் எங்கும் வியாபித்துள்ளது . ஆதலால்தான் மது கைடபர்களை விஷ்ணு வதம் செய்தார் என சில புராணங்களும் ஸ்ரீ அம்பாளே வதைத்தாள் என சில புராணங்களும்  கூறுகின்றன. இதற்குக் காரணம் விஷ்ணு முதலிய யாவரும் பராசக்தியின் ஸ்வரூபமாக  இருப்பதேதான் . அதனால்தான் ஆதிசங்கரர் ஸ்ரீ சக்ரம் முதலிய யந்த்ரங்களையும், சக்தி ஸ்வ ரூபங்களான சாரதா, காமாட்சி முதலிய பிம்பங்களையும்  ஆங்காங்கு பிரதிஷ்டை செய்திருக்கிறார். அப்படிப்பட்ட ஸ்தலங்களில் சக்திக்கு முக்கியத்துவம் அளித்த க்ஷேத்ரம் மதுரையே ஆகும் . இங்கே விளங்கும் பராசக்தியான ஸ்ரீ மீனாட்சியும் ஸ்ரீ சுந்தரேஸ்வரரும்  பக்தர்களுக்கு கற்பக வ்ருக்ஷம் போன்றவர்கள். அவர்களின் அருளை பெற்றவர்களுக்கு சோகமே கிடையாது என்று  திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

–SUBHAM—

TAGS–செளந்தர்ய லஹரி ஸ்லோகம், பெண்கள்,  இந்துக்கள் பூஜிப்பது ஏன்?  அனந்தராம தீட்சிதர் , மதுரை ஸ்ரீ மீனாட்சி,ஸ்ரீ சுந்தரேஸ்வரர் , கோவில், கும்பாபிஷேகம்

எப்படி சாப்பிட வேண்டும்? ஆயுர் வேதம் தரும் அறிவுரை! (Post No.14,551)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,551

Date uploaded in London – –25 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 5-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!  

எப்படி சாப்பிட வேண்டும்ஆயுர் வேதம் தரும் அறிவுரை!  

ச. நாகராஜன் 

ஒவ்வொரு மனிதனும் பூரண ஆரோக்கியத்துடனும் நீடித்த ஆயுளுடனும் வாழ வேண்டும் என்பது ஆயுர்வேதத்தின் குறிக்கோள்.

உணவைப் பற்றிய ஆயுர்வேத குறிப்புகள் மிக முக்கியமானவை.

எப்படி சாப்பிட வேண்டும் என்பதை ஆயுர்வேதம் தெளிவாக விளக்குகிறது.

காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக இரண்டு மணி நேரத்திற்கு முன்பு எழுந்திருப்பது சிறந்தது.

உடனடியாக பல் துலக்கி விட்டு வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை கொண்டவன் என்பதால் உடலில் உள்ள வாத, கப, பித்த தோஷம் பற்றி முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

இதற்குத் தக உணவுத் திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு புரோட்டின் அதிகமாக வேண்டியிருக்கும். இன்னும் சிலருக்கோ கார்போஹைட்ரேட் தேவையாக இருக்கும்.

சூடாக இருக்கும் பண்டங்களை உண்ணுதல் சிறந்தது.

குளிர்ந்த பானத்தையோ அல்லது ஐஸ் வாட்டரையோ நிச்சயமாக சாப்பிடும் முன்னர் குடிக்கக் கூடாது. இது ஜீரணத்தை வெகுவாகப் பாதிக்கும்.

உணவை மிகவும் மெதுவாகவோ அல்லது மிக வேகமாகவோ சாப்பிடாமல் நிதானமாக நன்கு கடித்து  சாப்பிட வேண்டும்.

வயிறு முட்ட சாப்பிடாமல் சிறிது வெற்றிடம் வயிறில் இருக்குமாறு குறைத்துச் சாப்பிட வேண்டும்.

பசித்த பின்னரே சாப்பிட வேண்டும்.

நடந்து கொண்டோ,  வண்டியை ஓட்டியவாறோ, படித்துக்கொண்டோ, டி.வி. பார்த்தவாறோ சாப்பிடக் கூடாது.

உணவு உண்ணுவது ஒரு புனிதமான செயல் என்பதை உணர்ந்து உண்ண வேண்டும்.

அன்புடன் சமைத்து பரிமாறுபவரிடமிருந்தே உணவைச் சாப்பிட வேண்டும்.

நெய் மிக மிக முக்கியமானது. சாப்பிடும் போது சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளுதல் நலம் பயக்கும். இது வயதாவதால் வரும் பாதிப்புகளைத் தடுக்கும்.

சாப்பிட்ட பின்னர் சிறிது ஓய்வு தேவை.

இரவு சாப்பிட்ட பின்னர் சிறிது நடக்க வேண்டும். சத பதம் என்று சரகர் இதைக் கூறுகிறார். சத பதம் என்றால் நூறு அடி நட என்று அர்த்தம்.

சாப்பிடும் போது அதிகமாக தண்ணீரை அருந்தக் கூடாது.

சாப்பாட்டுடன் ஒருபோதும் பாலைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

புதிதாக உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலுக்கு நலம் பயக்கும்.

இஞ்சியை உணவில் சேர்ப்பது நல்லது.

யோகா மற்றும் தியானம் மிகவும் சிறந்தது. சாப்பிடும் முன்னர் உடலை நெளிய வைக்கும் பயிற்சிகளைச் செய்யலாம். சாப்பிட்டு முடித்த பின்னர் ஓய்வான நிலைகளைக் கொண்ட படுக்கும் நிலை கொண்ட பயிற்சிகளைச் செய்யலாம்.

காலையில் செய்யப்படும் உடல் பயிற்சிகள்  உடல் வலுவைக் கூட்டுகிறது. தொப்பையைக் குறைக்கிறது.

ஒரு போதும் புகை பிடித்தல் கூடாது.

வாத உடம்பைக் கொண்டோர் ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை சாப்பிட வேண்டும்.

காலை உணவை ஆறிலிருந்து பத்து மணிக்குள்ளும், மதிய உணவை பத்து மணீயிலிருந்து இரண்டு மணிக்குள்ளும் இரவு உணவை ஏழு மணியிலிருந்து எட்டு மணிக்குள்ளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு ஆயுர்வேத நிபுணரை அணுகி ஒருவர்,. வாத, கப, பித்தம் ஆகிய மூன்றில் எந்த வகை உடம்பு தன்னுடையது என்பதை அறிய வேண்டும். தனது உடலுக்கு ஒவ்வாதவை எவை என்பதைக் கேட்டு அறிதல் வேண்டும்.

உணவே நமக்கு உயிர் நாடி.

அன்னமே உயிருக்கு ஜீவ நாடி.

அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்

நானே அன்னம் என்கிறது நமது அறநூல்.

அன்னத்தைப் போற்றுவோம். நீண்ட நாள் வாழ்வோம்!

***

London Swaminathan Again! 142 Book Wrappers; Batch 2 ; Thirty more Books!

 London Swaminathan Again! 142 Book Wrappers; Batch 2 ;  Thirty MORE Books!

Second Bach- Thirty more books!

PLEASE GO TO PUSTAKA.CO.UK AND TYPE LONDON SWAMINATHAN IN THE AUTHOR BOX.

TO BE CONTINUED…………………………..

TAGS- LONDON SWAMINATHAN, BOOKS

மருத்துவ நூல் அஷ்டாங்க ஹ்ருதயம் (Post No.14,450)

Written by London Swaminathan

Post No. 14,550

Date uploaded in London –  24 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

நூலை எழுதியவர் – வாக் பட்டர்

காலம் – 500 CE  முதல்600 CE வரை

மஹேந்திர பல்லவர், அப்பர் காலத்தை ஒட்டி ;சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர்..

அவர் எழுதிய இரண்டு நூல்கள் – அஷ்டாங்க ஹ்ருதயம்,  அஷ்டாங்க சங்கிரகம்

    The Ashtanga Hridayam (The 8-Fold Path to the Heart of Ayurveda) is one of the foundational Vedic texts of Ayurveda, and perhaps the most comprehensive, as its author Vagbhata (AD 550-600), sought to compile the wisdom of the older texts (Samhitas) in Ayurveda that came before it.

இதன் சிறப்பு என்ன வென்றால் சரகர், சுஸ்ருதர் ஆகியோர் எழுதிய மிகப்பழைய நூல்களை இது சுருக்கித் தருகிறது. இதை ஆசிரியர் வாக்கபட்டரே சொல்கிறார்.

அஷ்ட என்றால் எட்டு EIGHT. ஆங்கிலச் சொல்லும் தமிழ்ச் சொல்லும் இதன் மருவு; ஆயுர்வேதத்தின் இருதயம் போன்ற எட்டுப் பிரிவுகளை கொடுப்பதால் நூலின் பெயர் அஷ்டாங்க ஹ்ருதயம்.

Ashtanga Hridayam is a significant classical text in Ayurveda, authored by Vagbhata this foundational treatise encompasses eight branches of Ayurveda and serves as a comprehensive summary of Ayurvedic principles, featuring 7471 verses divided into six sthanas. It is notable for having the highest number of commentaries among Ayurvedic texts and outlines essential teachings, practices, and treatment strategies for various diseases, making it a critical resource in the field of Ayurvedic medicine.

ஆயுர்வத்தின் எட்டுப்பிரிவுகள்:

சரீர, பால, கிரஹ,ஊர்த்வாங்க, சல்ய, தம்ஷ்ட்ரா, ஜரா, வ்ருஷ

என்பனவாகும்  

Aṣṭāṅgahṛdaya (अष्टाङ्गहृदय).—The medical science which deals in eight separate division the treatment of the human body. (1) Śārīra (2) Bāla (3) Graha (4) Ūrddhvāṅga (5) Śalya (6) Daṃṣṭra (7) Jara and (8) Vṛṣa.

1.சரீரம் அல்லது காய  என்பதில் நமது உடலைப் பற்றிய விவரங்கள் உள்ளன.

2.பால என்னும் பகுதியில் இன்னும் அங்கங்கள் முதிர்ச்சி பெறாத நிலை பற்றிய விவரங்கள் இருக்கின்றன. ; அதாவது குழந்தைகள், சிறுவர், சிறுமியரைப் பாதிக்கும் அம்சங்கள்.

3.கிரஹ என்பதில் மனதை பாதிக்கும் PSYCHIATRY அம்சங்கள் விவரிக்கப்படுகின்றன

4.ஊர்த்வ அங்க , அதாவது உடலின் மேல்பகுதி பற்றிய பிரிவில் கழுத்துக்கு மேலாக இருக்கும் கண் , காது, மூக்கு ENT முதலிய உறுப்புகளின் சிகிச்சை உளது.

5.சல்ய என்ற பகுதியில் வெளியிலிருந்து வந்து நமது உடலில் தங்கிய பொருட்ளை எடுக்கும் SURGERY அறுவைச் சிகிச்சை பற்றிக் காணலாம்.

6.தம்ஷ்ட்ர சிகிச்சைப் பகுதியில் விஷ முறிவு TOXICOLOGY பற்றிய தகவல்கள் சிகிச்சைகளைக் காணலாம் .

7.ஜர சிகிச்சைப் பிரிவில் முதுமையில் இளமை பெறுவது REJUVENATION THERAPY எப்படி என்று சொல்லப்படுகிறது ; ஜரா என்றால் மூப்பு என்று பொருள்; ஆங்கிலச் சொல் ஜெராண்டாலஜி GERONTOLOGY என்பதும் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்தததே.

8.வ்ருஷ, வ்ருஷய அல்லது வாஜீகரண பிரிவில் காம சம்பந்தமான குளிகைகள் APHRODISIAC THERAPY பற்றியும்,ஆண்களின் விந்து பற்றியும் தகவல் உள்ளது.

அஷ்டாங்க ஹ்ருதயம் Aṣṭāṅgahṛdaya (अष्टाङ्गहृदय) நூலினை வாக் பட்டர் ஆறு ஸ்தானங்களாகப் பிரித்துள்ளார்; ஆயுர்வேதத்தின் எட்டுப் பிரிவுகளை அவை எடுத்துரைக்கின்றன. இதில் மொத்தம் 7741 சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் உள்ளன.

அஷ்டாங்க ஹ்ருதயம் நூலின் ஆறு பிரிவுகள் பின்வருமாறு :

1.சூத்ர ஸ்தான

2.நிதான ஸ்தான

3.சரீர ஸ்தான

4.சிகித்சா ஸ்தான

5.கல்ப ஸ்தான

6.உத்தர ஸ்தான

இதற்குத்தான் அதிகமான உரைகள் உள்ளன; இதுதான் பயன்படுத்த எளிதான நூல் என்பதால் இவ்வளவு உரைகள்!

இந்தியாவில் மட்டுமின்றி திபெத்திலும் கூட இது இன்றும் பின்பற்றப்படுகிறது.

சூத்ரஸ்தான பகுதியில் வாத, பித்த, கப தோஷங்கள், பஞ்சகர்ம,  மூலிகை பற்றிய விஷயங்கள்  வருகின்றன.

பஞ்சகர்ம என்பது உடலில் சேர்ந்த விஷங்களை அகற்றி வாத, பித்த, கப தோஷங்களை சம நிலைக்கு கொண்டு வருவது பற்றியது ; மூலிகைகளைப் பயன்படுத்தும் விஷயங்களையும் இது விவரிக்கிறது. நோய்களைக் கண்டுபிடிப்பது, சிகிச்சை தருவது  தொடர்பான விதிகளையும் வாக்கப்பட்டர் சொல்கிறார்.

நோய்களை அறியும் முறைகள், அவைகளுக்கான காரணங்கள், அவற்றின் அறிகுறிகள் நிதான ஸ்தானத்தில் உள்ளது.

சரீர ஸ்தான பகுதியில் மனித உடலின் அமைப்பினையும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய உறுப்புகளையும் வாக்பட்டர் சொல்கிறார் . கரு எப்படி மாதம்தோறும் வளர்கிறது என்பதையும் சொல்கிறார். (The Shareera Sthana is (Anatomy) section of the Ashtanga Hridayam)

இதை மாணிக்க வாசகரும் விவரமாக  திருவாசகத்தில் சொல்வது கணவனத்திற்கு உரியது.

சிகித்சா ஸ்தானப் பகுதி மிக முக்கியமான பகுதி ஆகும் ;பல வியாதிகளுக்கு என்ன சிகிச்சை தர வேண்டும், என்ன பத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், நோய்களுக்கான  மருந்து என்ன, ஒவ்வொரு நோயையும் எப்படி அணுகுவது என்பனவற்றை விவரமாகத் தருகிறார் வாக்பட்டர்.

கல்ப ஸ்தான பகுதியில் வாந்தி, பேதி ,  இனிமா மூலம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் முறைகள் இருக்கின்றன.

கடைசி பகுதியான  உத்தரஸ்தானம் மிகவும் விரிவான பகுதி ஆகும். இதில் மட்டும் ஐம்பது அத்தியாயங்கள் இருக்கின்றன. இதுவரை  சொல்லாத ஆயுர்வேத விஷயங்கள் அனைத்தும் இதில் வந்துவிடுகின்றன . இதில் குழந்தை மருத்துவம், புத்துணர்வு பெறுதல் , விஷ முறிவு முதலிய வருகின்றன . ஆயுர்வேதத்தின் எட்டுப்பிரிவுகளின் விஷயங்களும் இதில் இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

—SUBHAM—

TAGS- மருத்துவ நூல், அஷ்டாங்க ஹ்ருதயம் , வாக் பட்டர் , நூலின் சுருக்கம், ஆயுர்வேதம், எட்டு பிரிவுகள், ஆறு ஸ்தானங்கள்,    Ashtanga Hridayam , Vagbhata ,Tamil

ராம ரஹஸ்ய உபநிஷத் கூறும் ஶ்ரீ ராமரின் ரகசியம்! (Post.14549)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,549

Date uploaded in London – –24 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

5-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

ராம ரஹஸ்ய உபநிஷத் கூறும் ஶ்ரீ ராமரின் ரகசியம்!

ச. நாகராஜன்

ராம ரஹஸ்ய உபநிஷத் அதர்வண வேதத்தில் உள்ள 31 உபநிஷதங்களில் ஒன்று.

ஶ்ரீ ராமரின் tஅவதார ரகசியத்தையும் பெருமையையும் எடுத்துக் கூறும் இந்த உபநிஷதம் 108 முக்கிய உபநிஷதங்களில் ஒன்றும் கூட!

ஒரு சமயம் முத்கலர், சாண்டிலர், பிங்கலர், பிக்ஷு, பிரகலாதர்,சனகர் ஆகிய மஹரிஷிகள் ஹனுமானை அணுகினர்.

நான்கு வேதங்கள், பதினெட்டு புராணங்கள், பதினெட்டு ஸ்மிருதிகள், சாஸ்திரங்கள் ஆகிய அனைத்திலும் சொல்லப்பட்டதில் உயர்ந்தது எது என்று அவரைக் கேட்டனர்.

உடனே ஹனுமான், “கேளுங்கள். மஹரிஷிகளே! ராம என்பதே பரப்ரஹ்மம். அதுவே உயரிய தூய்மை. ராமரே அனைத்தின் உயரிய சாரம். ப்ரம்ம தாரகம்” என்று ஆரம்பித்து ராமரின் மகிமையையும் ராம நாமத்தின் ரகசியத்தையும் விரிவாகச் சொல்லலானார்.

“விநாயகர், சரஸ்வதி, துர்க்காதேவி, க்ஷேத்ரபாலகர்கள், சூரியன், சந்திரன், நாராயணர், நரசிம்மர், வாசுதேவர், வராஹர், லட்சுமணன், சத்ருக்னன், பரதன், விபீஷணன், சுக்ரீவன், அங்கதன் ஜாம்பவான் மற்றும் ப்ரணவம் ஆகியவையே ராமரின் அங்கங்கள். இந்த அங்கங்கள் இன்றி எந்தத் தடைகளையும் ராமர் நீக்க மாட்டார்” என்றார் ஹனுமான்.

பின்னர் ஹனுமான் ஓம் என்ற ப்ரணவத்தின் மகிமையை விரிவாக எடுத்துரைத்தார்.

ஒருமுறை ராமரிடம் விபீஷணன் எப்படி உங்களது அங்கங்களை வழிபடுவது என்று கேட்ட போது ராமர், “ராம என்ற எனது நாமமே அனைத்துப் பாவங்களையும் போக்க வல்லது. மாபாதகங்களையும் கூட இது போக்க வல்லது” என்று ஆரம்பித்து வழிபடும் விதத்தை விவரித்தார்.

சனக மஹரிஷி ஹனுமாரை தாரக நாமமான ராமரை வழிபடுவது எப்படி என்று கேட்க அவர் ராம ராமாய நமஹ என்ற ஆறெழுத்து மந்திரத்தின் மகிமையை உரைக்கலானார்.

இது மட்டுமின்றி ராம நாமத்தின் வெவ்வேறு மந்திரங்களையும் ராம ரஹஸ்ய உபநிஷதம் தருகிறது. ஒன்று முதல் 24 அக்ஷரங்கள் வரை உள்ள ராம மந்திரங்கள் இவை.

இவற்றில் இரண்டு முதல் ஆறு எழுத்து வரை உள்ள மந்திரங்கள் மிகச் சக்தி வாய்ந்தவையாகும்.

ராம தியான மந்திரத்தின் முக்கியத்தைக் கூறி விட்டு உடலை ஆற்றலுடன் கூடியதாக ஆக்க வல்ல ரகசியம் ராம மந்திரமே என்பதால் ராம மந்திரத்தை உச்சரிப்பது பயன் தரும் என்றும் கூறும் இந்த உபநிஷதம் ராம என்பதே ராம மந்திரத்தின் பீஜம் (விதை) என்று கூறுகிறது.

சீதையே படைப்பிற்கான காரணம்; ஹனுமானே உள்ளார்ந்த பக்திக்கு உதாரணம். ராமரும் சீதையுமே உலக இருப்பிற்கான ஆதி காரணமாகும். – இதுவே முக்கிய ரகசியமாகும்.

ராம ரஹஸ்ய உபநிஷதம் 14 வைணவ உபநிஷதங்களில் ஒன்றும் கூட.

மிகச் சிறிய உபநிஷதமாக இருந்தாலும் கூட இது ராம ரஹஸ்யத்தை விரிவாகக் கூறும் உபநிஷதம் என்பதால் அனைத்து பக்தர்களும் இதைப் படிக்க வேண்டியது அவசியம்.

ராம நவமி நன்னாளில் ராம நாமத்தை உச்சரித்து ராமரின் பாதம் பணிவோமாக!

***