அடடா அடடா அண்ணாமலை, அண்ணாந்து பார்த்தால் ஒண்ணுமே இல்லை! (Post.12,184)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,184

Date uploaded in London – –  25 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ அண்ணாமலை பத்து QUIZ

1.திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற ஆஸ்ரமங்கள் எவை?

2.சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் திருவண்ணாமலையை புகழ் ஏணியின் உச்சிக்கு ஏற்றிய புலவர் யார் ?

3.அண்ணாமலை சிவன் கோவில் எந்த வகையில் முக்கியத்துவம் / சிறப்பு வாய்ந்தது ?

4.அண்ணா மலையான் கோவிலில் எந்த மன்னனின் பெயரில் பெரிய கோபுரம் உள்ளது?

5.கிரி வலம் என்னும் மலைப் பிரதட்சிணம் எப்போது நடக்கும்?

6.திரு அண்ணாமலை கோவிலின் மிகப்பெரிய திருவிழா எது?

7.கோவிலில் உள்ள கிளிக் கோபுரத்தின் பெருமை என்ன?

8.ஒவ்வொரு ஊரிலும் இறைவனை வழங்க பக்தர்கள் கோஷமிட்டுச் செல்லுவார்கள். திருவண்ணாமலையில் என்ன கோஷத்தைக் கேட்கலாம் ?

9.திருவண்ணாமலையில் கோவிலில் குடிகொண்டுள்ள இறைவன், இறைவியின் பெயர்கள் என்ன ?

10.அடடா அடடா அண்ணாமலை, அண்ணாந்து பார்த்தால் ஒண்ணுமே இல்லை – என்ற பழ மொழியின் பொருள் என்ன ?

xxxxxxxxxxxxxxxxxxxxxx

answers

1.ரமண மஹரிஷியின் ரமணாஸ்ரமம், சேஷாத்ரி சுவாமிகளின் சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம், யோகி ராம் சுரத் குமாரின் ஆஸ்ரமம்

2.திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர்

3.சிவ பெருமானின் பஞ்சபூத அம்ஸங்களில் ஒன்றான அக்நி ஸ்தலம் இது. சிவன்,  தீ-யின் உருவாக விளங்குகிறார்

4.ஹொய்சாள மன்னன் வீரவல்லாளன் (1291-1343)

5. ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் லட்சக் கணக்காணோர் கிரி வலம் செய்வார்கள்

6.கார்த்திகை தீபத் திருவிழா

7.கிளி கோபுரம் மேலிருந்து கிளி உருவில் அருணகிரிநாதர் முருகன் புகழ் பாடினார் .

8.அண்ணாமலைக்கு அரோஹரா என்று மக்கள் முழக்கம் இடுவர்; ஹர =சிவன் ; ஹரோ ஹரா = சிவ சிவா ;அண்ணாமலையில் உறையும் சிவா, சிவா என்பதாகும்

xxx

9.அண்ணா மலையான் , உண்ணாமுலை அம்மன், அருணாசல ஈஸ்வரன், அபித குஜாம்பாள்

இதோ ஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்

பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ

மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

பொழிப்புரை :

உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும்.

Xxx

10. பிரம்மனும் விஷ்ணுவும் சிவ பெருமானின் அடி முடி தேடிய வரலாறு மிகவும் பிரசித்தமானது. நூற் றுக்கணக்கான தேவார ப்பாடல்களில் வரும் கதை இது.

ஜோதி வடிவான இறைவனைக் காண அண்ணாமலை கோபுரத்தின் உச்சிக்கு மேல் தேடிப்பார்த்தத்தாலும் அவனைக் காண இயலாது. ஆனால் பக்தர்களின் உள்ளத்திலேயே காணலாம். அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே என்று அடியார்கள் பாடிப்பரவினார்கள். இந்த தத்துவத்தை விளக்க வந்த மொழிதான்- அடடா அடடா அண்ணாமலைஅண்ணாந்து பார்த்தால் ஒண்ணுமே இல்லை.

–subham—

Tags- அடடா அடடா,  அண்ணாமலை, உண்ணாமுலை, அரோஹரா, ஹொய்சாள மன்னன்,  வீரவல்லாளன்

உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 8 (Post.12,183)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,183

Date uploaded in London –  25 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

இந்தத் தொடரின் இறுதி அத்தியாயம் இது.ஹெல்த்கேர் ஜூலை 2023 இதழில் வெளியாகியுள்ளது.

தொடரைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

How Food Powers Your Body

உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 8

ஆங்கில மூலம் : ஜேம்ஸ் சாமர்ஸ் (James Somers)

தமிழில் : ச.நாகராஜன்

 9.20 கோடி மைல்களிலிருந்து வரும் சூரிய ஆற்றல் சேண்ட்விச்சாக மாற அதில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன்!

கடலுக்கும் புவியின் மேலுறைக்கும் உள்ள இடைமுகப்பில் கடலில் உள்ள உப்பு நீரானது பூமியுடன் எதிர்வினை ஆற்றும் செயலானது செர்பெண்டினைசேஷன்  (Serpentinization) என்று கூறப்படுகிறது. இந்த செர்பெண்டினைசேஷன், ஆற்றல் அதிகம் மிக்க இரசாயனங்களை உற்பத்தி செய்கிறது. ஆட்டோட்ராப்களின் மூதாதையர்களை சக்தி ஊட்டி இயங்கச் செய்த தொடக்க கால ஆற்றல் அவையே என்று லேன் (Lane) ஊகிக்கிறார். நமது வளர்சிதைமாற்றங்களில், க்ரெப்ஸ் சுழற்சி ஒரே திசை நோக்கிச் செல்கிறது – உணவு மூலக்கூறுகள் உள்ளே செல்கின்றன, உடனே ஆற்றல் வெளி வருகிறது.  ஆனால் உண்மையில் இந்த சுழற்சி இரு பக்கங்களிலும்  சுழலக் கூடும், ஒரு சுழலுகின்ற மேடை போல! ஆழ்கடலில் உள்ள புழைகளைச் (vents) சுற்றி உள்ள பாக்டீரியாக்கள் நேர்மாறாக எதிர்ப்பக்கம் ஓடி, புழைகளில் உள்ள ஆற்றலை எடுத்துக் கொண்டு அவற்றுடன் ஒத்து இருக்கின்ற பாகங்களில் உள்ள தங்கள் பொருளை இணைக்கப் பயன்படுத்துகிறது. அவை எரியாத மெழுகுவர்த்திகள் போல!

மென்படலங்கள் இந்த எதிர்வினைகளைச் சுற்றும்போது தான், ஆர் என் ஏ -இன் தேவை பின்னால் தான் எழுகிறது. ஆதியில் உள்ள முதல் உயிரணுக்கள் புழைகளிலிருந்து மிதந்து செல்லும்போது, அவை தங்களது ஆற்றல் ஆதாரத்தின் தொடர்பை இழந்து விடுகின்றன; சரியான ஆர் என் ஏ -க்களை ஏந்திச் செல்பவை மட்டுமே தாங்கள் இருப்பதற்கான அவசியக் கருவிகளைக் கொண்டிருக்கும்.

ஆர் என் ஏ -க்களின் வேலை முன்னர் புழைகளை நம்பி இருந்தவற்றிற்கு கிரியாஊக்கமாக எதிர்வினைகளைச் செய்ய உதவுவது தான். அடுத்த பல நூறு கோடி ஆண்டுகளில், இந்த ஆதிமூல உயிரிகளின் வழித்தோன்றல்கள் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜனை ஒரு கழிவுப் பொருளாகக் கக்கி உமிழ ஆரம்பிக்கும். அப்போது தான் நாம் அறிகின்ற க்ரெப்ஸ் சுழற்சி நடப்பு இருப்பிற்கு வருவதாக ஆகும்; ஆட்டோட்ராப்புகளின் வளர்சிதைமாற்றத்தைத் எதிராகத் திருப்புவதால், அந்த ஆக்ஸிஜன் முழுவதையும் ஒரு உயிரி தனது நன்மைக்காக எடுத்துக் கொள்ளும். தனது உடலை ஒரு கொதிகலம் போல ஆக்கும். இந்த எதிராகத் திருப்பப்படும் மாற்றம் தான் காம்பிரியா வெடிப்பை (Cambrian Explosion) ஏற்படுத்தி உருவாக்கி, சுமார் 5000 லட்சம் வருடங்களுக்கும் முன்னர் வெவ்வெறு வகையான கடும் சிக்கலை உடைய வாழ்க்கையைக் கொண்ட மாபெரும் இனப்பெருக்கத்தை உருவாக்கியது.

எந்தப் புத்தகமாகத்தான் இருக்கட்டுமே அதில் ஒரு விஷயம் உண்டு. அதுவும் விசேஷமாக அந்த நூலை எழுதியவர் அது சரியான கவனத்தைப் பெறவில்லை என்று உணர்ந்தால், அவர் ‘Theory of Everything’ – ‘தியரி ஆஃப் எவ்ரிதிங்’ என்று ஆவதற்கான அபாயத்திற்கு உட்படுவார். ‘டிரான்ஸ்ஃபார்மர்’ என்ற புத்தகத்திலிருந்து நான் பெற்ற அபிப்ராயம் இது தான் – க்ரெப்ஸ் சுழற்சி வாழ்க்கைக்கான மற்றும் அதன் மூலத்திற்கான திறவுகோல் மட்டுமல்ல, ஆனால் அதுவே மூப்படைதல், கான்ஸர் மற்றும் இறப்பிற்கான திறவுகோலும் கூட என்பதை அறிந்தேன். இன்னும் அதிகமாக, அது அந்த அனைத்திற்கும் ஒரு பகுதியாக இருப்பதும் கூட என்றே சொல்லலாம்.

ஆழ்ந்து மூழுகுதல் பற்றி இன்னும் சில விஷயங்கள் சொல்ல உண்டு.

சமீபத்தில், வார இறுதி நாட்களை ஒரு சிறிய வாடகை வீட்டில் கழித்தேன். அந்த இடம் நியூயார்க் நகருக்கு வடக்கே சில மணி நேரப் பயண தூரத்தில் அமைந்திருந்தது. அந்த நாட்கள் முழுவதும் என் மனதில் வளர்சிதைமாற்றமே ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நாள் காலையில் எனது நண்பர்களில் ஒருவரும் நானும் காலை உணவுக்காக வெளியிடத்தில் இருந்த ஒரு உணவு விடுதிக்குச் சென்றோம். காரில் பெட்ரோல் கொஞ்சம் தான் இருந்தது; எனக்கும் எரிபொருள் -எனது மனநிலை – அதே நிலையில் தான் இருந்தது. உணவு விடுதியில் பரிமாறுபவருக்காகக் காத்திருந்த சமயத்தில், நான் அமைதியாக சற்று சலிப்புடனும் கசப்புடனும் அமர்ந்திருதேன். சூரிய ஒளி என் முதுகின் மீது பளீரென்று வீசிக் கொண்டிருந்தது – அதாவது எலக்ட்ரான்கள் தப்பான வடிவில் என் மீது வீசிக் கொண்டிருந்தது. எனக்கு வைக்கப்பட்ட, கிண்டி சமைக்கப்பட்ட முட்டைகளில் சில துண்டுகளை வாயில் போட்டுக் கொண்ட பின்னர் தான் குளுகோஸ் வெள்ளத்தை நான் உணர்ந்தேன்; எனது இயல்பான நிலைக்கு வந்தேன். எனது உயிரணுக்களின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை என்னால் சித்தரித்துக் கொள்ள முடிந்தது. அந்த மனச்சித்திரம் ஒரு பதினெட்டாவது நூற்றாண்டு தத்துவஞானியை கவர்ந்திழுத்திருக்கும். நூறுகோடிக்கணக்கிலான மிகச் சிறிய நீர்சக்கரங்களில் சுழன்று என்னை நானே மின்னேற்றிக் கொள்ளும் ஒரு கடிகாரநேரப்படியுள்ள மனிதன் நான்.

பின்னால், வீட்டிற்கு வந்த பிறகு, நாங்கள் வண்டி ஓடும் ட்ரைவ் வே பாதையில் பேஸ்கட் பால் விளையாடினோம். பந்தை பேஸ்கட்டில் தூக்கிப் போடும் ஒரு ஜம்ப் ஷாட்டிற்கு எவ்வளவு ATP தேவைப்படும்? பேஸ்கட்டை நோக்கி ஓடி மிக்க பாதுகாப்புடன் பந்தைத் தூக்கிப் போடும்போது, நான் எனது உடலை வானில் தூக்கிப் போடுவதைப் பற்றி எண்ணியபோது, புரோடான்களினால் உருவாக்கப்பட்ட வோல்ட்கள் –  ஒரே சமயத்தில் மேல் உதட்டுப் பிளவில் பத்து லட்சம் மின்னிறக்கங்கள் என்று இப்படி எண்ணிப் பார்த்தேன்

ஒவ்வொரு நகர்வும் மின்னல் தாக்குதல் போல கட்டுப்பாடுடன் மிகுந்த அழகுடன் இருந்தது.

விளையாட்டிற்குப் பின்னர் மதிய நேரத்தில் நாங்கள் ஜன்னலுக்கு வெளியில் இருந்த சிறு பறவைகளை வேடிக்கை ஆர்த்தோம். அவற்றின் இதயத்துடிப்புகள் வேகமாக அடித்துக் கொண்டிருந்தன. நான் அவற்றின் உலகில் உள்ள வேகத்தை கற்பனை செய்து பார்த்தேன். அதே போல உங்களது வளர்சிதைமாற்றமும் அதே வேகத்தைக் கொண்டிருந்தால் ஒரு வேளை காலம் மெதுவாகச் செல்லுமோ? அதனால் தானோ உங்கள் கையில் இருக்கும் பூச்சியைப் பிடிப்பது உங்களுக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது?

அன்று இரவு சாக்லட் சேன்ட்விச்சுகளைச் (s’mores) செய்யத் தீர்மானித்தோம். நானும் எனது நண்பர் ஒருவரும் அடுப்பைப் பற்ற வைத்தோம். அருகிலிருந்த விறகுக்குவியலிலிருந்து எலக்ட்ரான்களை ஒன்று குவித்தோம். அவற்றைச் சற்று தளர்த்தினோம். புடேன் வாயுவை வரவிட்டோம். ஒரு தீ ஸ்பார்க் வந்தது. பின்னர் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தோம். 920 லட்சம் மைல்களுக்கு அப்பாலிருந்து  பிணைவிலிருந்து (Fusion) வரும் ஆற்றலானது இப்போது சதுப்புநிலத் துத்தியாக (marshmallow) வடிவம் எடுத்திருப்பதை கற்பனை செய்து பார்க்கவே விசித்திரமாக இருந்தது. சந்தோஷமாக ஒரு சாக்லட் சேண்ட்விச்சை என் வாயில் போட்டுக் கொண்டேன்!

                       ***   ̀           இந்தத் தொடர் நிறைவுறுகிறது.

முடிவுரை

அருமையான இந்தத் தொடர் உணவு எப்படி நமது உடலுக்குச் சக்தியை அளிக்கிறது என்பது பற்றி நாம் அறியாத பிரமிக்க வைக்கும் பல உண்மைகளைத் தருகிறது.

ஒரு தடவைக்கும் மேலாக இதைப் படித்து, படித்ததை சிந்தித்து ஜீரணித்தால் மட்டுமே நாம் எப்படிப்பட்ட படைப்பில் வாழ்கிறோம் என்று எண்ணி வியக்க முடியும்!

நமது உடலானது எப்படிப்பட்ட தெய்வீக வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தோமானால் அதை எப்படி தக்க முறையில் பேணிக் காக்க வேண்டும் என்பதை நன்கு உணர்வோம்.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்.

உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்(று)

உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே 

      -திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 725

***

Sun Worship in Shakespeare’s Song (Post No.12,182)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,182

Date uploaded in London – –  24 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Shakespeare was very familiar with India and its literature. But he may not have visited India. He would have heard a lot about India from travellers and books written by Roman and Greek authors.

I have already dealt with his reference to  Naga ratna (Cobra Ruby) and Miranda-Sakuntala comparison etc.

Here is one more proof where he mentions Surya Worship; it is similar to Vedic and later hymns such as Aditya Hrudaya of Valmiki Ramayana.

Lo,in the orient when the gracious light

Lifts up his burning head, each under ye

Doth homage to his news appearing sight

Serving with looks his sacred majesty;

And having climbed the steep-up heavenly hill,

Resembling strong youth in his middle age,

Yet mortal looks adore his beauty still

Attending on his golden pilgrimage;

But from highmost pitch, with weary car,

Like feeble age he reelth from the day,

The eyes, ‘fore duteous, now converted are

From his low tract, and look another way.

—-William Shakespeare

The point to be noted is the use of words Orient, Homage, Sacred and Pilgrimage . Any poet who sees sun can use red, golden, shining, bight etc. but the usage of homage, sacred and pilgrimage show the influence of Vedic literature on him.

Following is the English interpretation:

In the first twelve lines of this poem the speaker uses the metaphor of a rising and setting sun to describe the aging process. The speaker is trying to convince the listener, the Fair Youth, that it is in his best interests to have a child. Therefore, when the sun sets (he ages) his beauty will not be lost. 

In the first lines, the speaker draws the listener’s attention to “the orient,” or the east. This is where the sun rises and the place to which all eyes are drawn. It is a glorious sight, just like the Fair Youth is. Everyone wants to look at “his sacred majesty”. 

xxx

My Comments

Though Egyptians and Babylonians praise sun, we don’t see anything scientific there. But in the Vedas, we see many scientific facts. Above all, worshipping Sun stopped in Egypt at least 2000 years ago. But in India, Sun or Surya is worshipped until today from Vedic days. We see Sun Goddess in Japan and the very name of the country Nipon comes from Sun; but Sun is not worshipped there  as in India. In India we have sun Temples from Kashmir to Orissa and Sun Idols in all Tamil temples.

Rig Veda described the Solar eclipse. In one poem Indra stealing the Sun is described as Solar eclipse by western interpreters. In another hymn , Atri even says a Mantra and the Sun comes out immediately. That means he knew the totality of the solar eclipse. A total eclipse cant last for more than seven minutes That is the maximum. Atri surprised his disciples by bringing back the stolen Sun.

Other hymns are describing the reflection of sunlight on moon, 360 days, 12 Adityas etc. One again it shows that the Hindus knew the time taken by earth to go round the Sun and 12 zodiac signs etc.

Aditi is most ancient goddess in the world literature. Aditi means Infinity. She is the mother of all Gods including Adityas according to Rig Veda.

Aditya is derived from Aditi.

Shakespeare’s words in the sonnet Sacred, Homage, Pilgrimage can go only with the Hindu scriptures. If we accept the traditional date for the Vedas, at least before the beginning of Kali Yuga (3102 BCE) then all Egyptian and Babylonian references are relegated back.

Gayatri Mantra is found in all the four Vedas which  is nothing but glorification of the Sun. It is repeated by billion Hindus every day. Hindus are the only race who sees God as male, female (Gayatri) and genderless (Brahman).

Aditya is synonym for Number 12. In a conversation, if a Vedic priest says Vasu it is 8, Rudra it is 11 and Aditya, it is 12. It is their jargon. It means Hindus are the one who created Year with 360 +days, 12 Months etc.

(Since I have already given the references in my previous articles, I don’t quote much here).

Since Surya Namaskar is done 12 times every morning even by an illiterate, Sun worship forms an integral part of every Hindu. In astrology and Yajur Veda (Rudra mantra) sun is associated with Eye and general health (Aarogya Kaarah).

For Surya or Sun references in the Vedic literature, one may go to pages 465 to 468 in Vedic Index of Names and Subjects , Volume Two, by A A Macdonell and A B Keith.

My Previous articles:

DATE OF RIG VEDA THROUGH SOLAR ECLIPSE-3000 …

tamilandvedas.com

https://tamilandvedas.com › 2017/12/08 › date-of-rig-…

8 Dec 2017 — DATE OF RIG VEDA THROUGH SOLAR ECLIPSE-3000 BCE (Post No.4470). Compiled by London Swaminathan. Date: 8 DECEMBER 2017.


SUN AND SCIENCE IN THE RIG VEDA :6 DISCOVERIES …

tamilandvedas.com

https://tamilandvedas.com › 2021/11/02 › sun-and-sci…

2 Nov 2021 — A total eclipse can last for a maximum of seven minutes, which is very rare. One of the solar eclipses was well calculated by Atri and his …


Was Jayadratha killed by a Solar Eclipse?

tamilandvedas.com

https://tamilandvedas.com › 2012/01/03

3 Jan 2012 — The earliest reference to a solar eclipse occurs in the Rig Veda. Atri Maharishi speaks of the wonders of the solar eclipse (RV5-40-5).

— subham—-

Tags- Aditya, Sun, Surya, Shakespeare

சாமியே……………….. சரணம் ஐயப்பா குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,181)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,181

Date uploaded in London – –  24 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

123 4 5
   6  
      7 
      
      
   8  
 910    
   , 12 
      
      
13     
14   15 
 16   17

Across குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

7.கிருஷ்ணரின் வாழ்க்கைச் சரிதம்; கிருஷ்ணரின் புகழ்பாடுவோரும் அவரை வழி படுவோரும் தங்களை இந்தச் சொல்லால் குறிப்பிடுவர்

8. நாள் தோறும்  என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்  ;

 11.இந்த ஊர்  கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்.  மணிமாலா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கே வேட்டைக் கோலத்திலான ஐயப்பன் கோயில்  உள்ளது . பேட்டதுள்ளல்  நிகழ்ச்சியால் புகழ்பெற்றது.

13.ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்த்ர்களைத் தன்பால் ஈர்க்கும் மலை. 

14.கடவுளுக்கு அபிஷேகம் செய்யப்படும் முக்கியப் பொருள்  ;

15.அய்யப்பனின் ஸம்ஸ்க்ருதப்பெயர் 

16.இளநீர், பன்நீர் முதலியவற்றைக்கொண்டு கடவுள் சிலையைக் குளிப்பாட்டுதல்

xxxxx

Down கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.இந்த மாதத்தில்தான் ஐயப்ப சாமிகள் மாலை போட்டுக் கொள்ளுவார்கள்   ;

2.நோன்பு என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்  ;

3.ஐயப்பனுக்கு இரவில் பாடப்படும் தாலாட்டு ; ,

4.இந்த நதியில் குளித்துவிட்டு மலை  ஏறுவர்  ,

5.புதிதாக மலை ஏ றவருவோர்

6.ஜனவரி 14ம் தேதி மாலையில் எல்லோரும் காணவிரும்பும் ஒளி

9.காவடி போல எல்லா பக்தர்களும் தலை அல்லது தோளில் சுமந்து செல்லுவது

10.பக்கதர்களுக்கு மாலை அணிவிக்கும் தகுதி உள்ளவர்;

;12.பெண்கள்    இதைத் தாண்டிச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை ; இதில் ஏறுவது கடினம். மதங்க முனிவரின் மகள் பெயரைக்கொண்டது   ;

17.இத்தனை  படிகளைக் கடந்து  சாமியைத்  தரிசிக்கவேண்டும்..

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 answers 

கா1வி2ஹ3 ப4க 5
ர்ரிம6 ம்ன்
த் பா  7னி
திம்ராமா
கை ஜோதிர்
 ம்தி 8 டி
 இ9கு10ம்  
எ11ருமேலி,நீ 12ம்
 சாமு லிடா
 மி டிட்
ச 13ரிலைனெ
நெ14ய்தாஸ்சா15தி
அ 16பிஷேம்ப 17

Answers விடைகள்

Across குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

7.பாகவத 8.தினம் ; 11.எருமேலி; 13.சபரிமலை; 14.நெய் ; 15.சாஸ்தா ;, 16.அபிஷேகம்; 16.அபிஷேகம்;

xxxxx

Down கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.கார்த்திகை ;2.விரதம்; 3.ஹரிவராசனம்; , 4.பம்பா நதி; , 5.கன்னி மார்;

6.மகர ஜோதி; 9.இருமுடி; 10.குருசாமி; 12.நீலிமலை, ; 17.பதினெட்டாம்படி

—-subham—–

 tags—ஐயப்பா , குறுக்கெழுத்துப் போட்டி

QUIZ ஆழ்வார் பத்து QUIZ (Post No.12,180)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,180

Date uploaded in London – –  24 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேள்வி-பதில் QUIZ

1.பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவர்தான் பெண்; அவர் யார், பாடிய பாடல் நூல்கள் எவை?

2.பொய் ,பூதம் ,பேய் — பெயர்களில் உள்ள ஆழ்வார்கள் யார்?

3.பாரதியாருக்கு மிகவும் பிடித்த ஆழ்வார் யார்? அவரது பாடல்களை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து கட்டுரைகள் எழுதினாரே!

4.அரசமரம் என்றால் புத்தர் நினைவுக்கு வருவார். ஆலமரம் என்றால் தட்சிணா மூர்த்தி நினைவுக்கு வருவார். புளிய மரம் என்றால் எந்த ஆழ்வார் நினைவுக்கு வருவார்?

5.தங்கத்தினாலான புத்த விக்ரகத்தைத் திருடி , உருக்கி பெருமாளுக்குச் சேவை செய்த ஆழ்வார் யார் ?

6.அந்தாதி பாடிய ஆழ்வார்கள் பெயரைச் சொல்ல முடியுமா?

7.அயோத்தி நகரில் தோன்றிய மர்ம ஒளியைப் பின்தொடர்ந்து வந்து திருக் குருகூரில் ஒரு பெரியவரைச் சந்தித்தித்த ஆழ்வார் யார் ?

8.சேர நாட்டில் அரசர் குலத்தில் பிறந்த ஆழ்வாரின் பெயர் என்ன ?

9.பட்டர்பிரான், விஷ்ணு சித்தர் என்ற பெயர் தாங்கிய ஆழ்வார் யார் ?

10.இந்திரலோகம் ஆளும் பதவியும் வேண்டாம் என்று பாடிய ஆழ்வாரின் பெயர் என்ன ?

xxxxxxxxxxx

விடைகள்

1.ஆண்டாள் ; அவர் பாடியவை — திருப்பாவை, நாச்சியார் திருமொழி

2.முதல் மூவர் எனப்படும் பொய்கை ஆழ்வார், பேய் ஆழ்வார்  , பூதத்தாழ்வார் .

3.நம்மாழ்வார்

4.மாறன் சடகோபன் என்னும் நம்மாழ்வார்

5.திருமங்கை ஆழ்வார்

6. பொய்கை ஆழ்வார் , பூதத்தாழ்வார் பேய் ஆழ்வார் ஆகிய மூவரும் பாடிய அந்தாதிகளை முறையே  முதல், இரண்டாம், மூன்றாம் அந்தாதி என்பர். திருமழிசை ஆழ்வார் பாடியதை நான்முகன் திருவந்தாதி என்று நாலாயிர திவ்வியப் பிரபந்தம் கூறும். நம்மாழ்வார் பாடியது பெரிய திருவந்தாதி ஆகும் . பன்னிரு ஆழ்வார்களுக்கு வெளியே, இராமாநுச நூற்றந்தாதியை திருவரங்கத்தமுதனார் யாத்துள்ளார்.

7.மதுர கவி ஆழ்வார்;  வட நாட்டில் அயோத்தியில் வானத்தில் தென்பட்ட மர்ம ஒளியைப் பின்தொடர்ந்து வந்து தென் தமிழ் நாட்டிலுள்ள திருக் குருகூரில் புளிய மரத்துக்கு அடியில் தவம் செய்த நம்மாழ்வாரைக் கண்டார்.

8.குலசேகர ஆழ்வார்

9.பெரியாழ்வார்

10.தொண்டரடிப்பொடி ஆழ்வார்

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே!

—–subham—–

Tags- ஆழ்வார், க்விஸ், கேள்வி-பதில்

QUIZ தமிழ் சிற்றிலக்கியப் பத்து QUIZ (Post No.12,179)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,179

Date uploaded in London – –  24 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் கீழ்கண்டவாறு பாடினார்

வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்

     சயங்கொண்டான் விருத்தமென்னும்

ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா

     அந்தாதிக் கொட்டக் கூத்தன்

கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்

     வசைபாடக் காள மேகம்

பண்பாகப் பகர்சந்தம் படிக்காச

     லாலொருவர் பகரொ ணாதே.”

1.வெண்பா பாடுவதில் புகழேந்தி வல்லவர் என்று பாடல் சொல்கிறதே ; அவர் பாடிய வெண்பா என்ன?

2.பரணிக்கு சயம் கொண்டான் என்ற புலவரைப் போற்றுகிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். அது என்ன பரணி நூல் ?

3.இலக்கியத்தில் பரணி என்றால் என்ன?

4.தமிழில் புலவர்களிடையே போட்டியும் பொறாமையும் நிலவியது. புகழேந்தியுடன் மோதிய புலவர் யார்?

5. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று சொல்லி கதவை படார் என்று மூடியவர் யார்?

6.விருத்தமென்னும் ஒண்பாவில் உயர்கம்பன் என்பதற்கு நமக்கு பொருள் தெரியும்; கம்பன் பாடிய ராமாயணம் புகழ்பெற் றது அடுத்ததாக கோவையுலா  அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன் என்பதன் பொருள் என்ன?

7.கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள் (கண்பாய = பெருமையுடைய)— என்ற வரியிலுள்ள இரட்டையர்கள் யார்? அவர்கள் செய்த கலம்பகம் என்ன?

XXXXX

8.வசைபாடக் காள மேகம் என்பதைப் பலரும் அறிவோம். அவர் பாடிய சிலேடைப்பாடல்கள் பலரைத் தாக்கியும் பகடி செய்தும் எழுதப்பட்டவை  அதைத் தொடர்ந்து பண்பாகப் பகர்சந்தம் படிக்காச லாலொருவர் பகரொ ணாதே.” என்கிறார். அதன் பொருள் என்ன?

XXXXXXX

9.இவ்வளவு புலவர்களை ஒரே பாடலில் பெருமைப்பட நமக்கு அறிமுகம் செய்துவைக்கும் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் யார்?

XXXXX

10.அதிவீரராமர் பாடிய இருநூல்களின் பெயர்களைத் தருக

xxxx

விடைகள்

1.நளவெண்பா

2.கலிங்கத்துப் பரணி

3.பரணி என்பது தமிழில் வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்றாகும். போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது பரணி இலக்கியம் ஆகும்.

4.ஒட்டக்கூத்தர்

xxxxx

5.குலோத்துங்க மன்னனோடு ஊடல் கொண்ட

அரசி கோபத்தோடு போய் கதவை மூடிக் கொண்டாள்.

மன்னனுக்காக கதவைத் திறந்துவிடு என்று சொல்ல  ஒட்டக்கூத்தர் தூது போனார்.ஒரு பாடலையும் பாடினார் .அரசிக்கு மேலும் மேலும் கோபம் அதிகரித்தது   ஒட்டக்கூத்தன் பாடலுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று சொல்லி 2 முறை தாழ்ப்பாள் போட்டாள் அரசி.  பாடல் இதோ:

நானே இனியுன்னை வேண்டுவதில்லைநளினமலர்த்

தேனே கபாடந் திறந்திடு திறவா விடிலோ

வானேறனைய வாள் வீரவிகுலாதிபன் வாசல் வந்தால்

தானே திறக்கு நின் கையிதழாகிய தாமரையே !

Meaning

அழகான  மலரில் இருக்கும் தேன் போன்ற இனிமையான பெண்ணே!

மன்னனுக்காகக் கதவைத் திறந்துவிடு என்று உன்னை வேண்டிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம்  எனக்கில்லை. வானளாவிய புகழ் கொண்ட

ஆண் சிங்கத்துக்கு நிகரானவன் என் மன்னன் குலோத்துங்கன். வாள் வீரனாகிய குலோத்துங்கன் உன் அறையின் பக்கம் வந்தாலே போதும்.

தாமரை போன்ற உன் கைகள் தானாக வந்து கதவைத் திறந்து வைத்துவிடும் .

Xxxx

6.மூவர் உலா, தில்லை உலா.

தக்கயாகப் பரணி, கண்டன்  கோவை

கண்டன் அலங்காரம் முதலிய நூல்களை பாடினார்

கண்டன் என்பவன் இரண்டாம் இராசராசன். இவன்மீது ஒட்டக்கூத்தர் பாடிய நூல்கள் கண்டன் கோவை, கண்டன் அலங்காரம் என்பன.

Xxxx

7. இரட்டையர்களின் இயற்பெயர்கள் முது சூரியர்இளஞ்சூரியர் .இரட்டையர்களால் பாடப்பெற்ற கலம்பகம் ‘தில்லைக் கலம்பகம்’. இவ்விருவருள் ஒருவர் முடவர் என்றும் மற்றவர் குருடர் என்றும் கூறப்படுகிறது முடவரைக் குருடர் சுமந்து செல்வார். முடவர் வழி காட்டுவார்.இவர்கள் சோழநாட்டில் இலந்துறை என்ற ஊரினர். ஒரு பாட்டின் முதல் இரு அடியை ஒருவரும், பின் இரு அடியை மற்றவரும் பாடுவர். திருவாமாத்தூர்க் கலம்பகம் . காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் மீது ‘ஏகாம்பரநாதர் உலா’, இவர்களால் இயற்றப்பட்டன.

Xxxx

8.படிக்காசுப்புலவர் என்பவர் தண்டலையார் சதகம் என்னும் சிற்றிலக்கியத்தினை ஆக்கியவர். இந்தத் தண்டலையார் சதகத்தைப் ‘பழமொழி விளக்கம்’ என்றும் சுட்டுவர். நூறு பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பழமொழியும் ஒவ்வொரு பாடலில் அமையுமாறு பாடியுள்ளதனால் இந்நூல் ‘பழமொழி விளக்கம் என்னும் பெயர்பெற்றது.

XXXXX

9.பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எனப் போற்றப்படும் புலவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தேவை உலா, அழகர் கிள்ளை விடு தூது முதலான நூல்களைப் பாடியவர். தனிப்பாடல் திரட்டு நூலில் இவரது தனிப்பாடல்கள் 66 இடம்பெற்றுள்ளன.

XXXXX

10. காசிக் காண்டம்; 2. இலிங்கபுராணம்

—–SUBHAM—–

Tags- சிற்றிலக்கியம், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, இரட்டைப் புலவர்கள், பரணி, சந்தக்கவி

வால்மீகி – கம்பர் – துளசிதாசர் இராமாயணம் – பாலகாண்டம்–ஒரு பார்வை (Post.12,178)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,178

Date uploaded in London –  24 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஆர். சேஷாத்ரிநாதன் அவர்கள் எழுதிய 

இராமாயணம் – பாலகாண்டம்

ஒரு பார்வை 

வால்மீகி – கம்பர் – துளசிதாசர்

பொருளடக்கம்

முன்னுரை

அணிந்துரை

அத்தியாயங்கள்

1. விஸ்வாமித்திரர் வருகை

2. தாடகை வதம்

3. அகலிகை சாப விமோசனம்

4. சீதா கல்யாணம்

பிற்சேர்க்கை

1. பால காண்டம் வால்மீகி ராமாயணம் ஸர்க்கங்கள்

2. பால காண்டம் கம்ப ராமாயணம் படலங்கள்

3. பால காண்டம் துளஸி ராமாயணம் முதல் சோபானம் ஸ்லோக எண்ணிக்கை

4. உதவிய ராமாயண நூல்களின் பட்டியல்

*

பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIA வெளியிட்டுள்ள புத்தகமிது.

 திரு R.சேஷாத்ரிநாதன் அவர்கள் எழுதியுள்ள இராமாயண ஆய்வு நூல் இது.

இதற்கு அவர் வழங்கியுள்ள முன்னுரையில் கூறுவது இது:

வால்மீகி, கம்பர், துளஸிதாஸர் போன்ற மகான்களின் இராமாயணத்திலிருந்து முக்கியக் கருத்துக்களைத் தொகுத்து எழுதப்பட்ட நூல் இது.

இது தவிர பல சான்றோர்கள், உரையாசிரியர்களின் உரைகள், நூல்கள் மற்றும் காணொளிக் காட்சிகளின் முக்கியப் பகுதிகள் ஆகிய அனைத்தையும் தொகுத்து இந்த நூலில் தந்துள்ளேன்.

இராமாயணத்தில் பாலகாண்டத்தில் முக்கிய நிகழ்வுகளையும் அதில் உள்ள இரகசியங்களையும் தொகுத்து எனது முதல் படைப்பாக ‘இராமாயணம் – பால காண்டம் ஒரு பார்வை’ என்ற இந்த நூலை அளிக்கிறேன்.

*

நூலுக்கு திரு ச.நாகராஜன் பொருத்தமான ஒரு அணிந்துரையை வழங்கியுள்ளார். அதில் அவர் குறிப்பிடுவதில் ஒரு பகுதி:

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்

என்பது கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாக்கு.

ராம என்ற இரண்டு எழுத்தை உச்சரித்தால் எப்போதும் நன்மைகளையும் செல்வத்தையும் கொடுத்தருள்வான்; தீய செயலும் அதன் பயனான தீவினையும் அழிந்து கெடும். பிறப்பு இறப்புக்கள் இனி நேராமல் தீர்ந்து விடும் என்ற வார்த்தைகள் வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும் உயர் நோக்கத்தையும் தந்து விடுகிறது.

மனித வாழ்க்கையில் ஒருவருக்கு இதை விட வேறென்ன வேண்டும்?

 ‘கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ’ என்று நம்மாழ்வார் கூறி அருளிய ஒரு கருத்தே போதும் நாம் எதைக் கற்க வேண்டும் என்பதை அறிய!

ஆனால் இந்த வேக யுகத்தில் எளிமையாக ராமாயணத்தைத் தருபவரை நமது மனம் நாடுகிறது.

இந்தச் சமயத்தில் தான் திரு ஆர். சேஷாத்ரிநாதன் அவர்களின் கட்டுரைகள் நமக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்து நம்மை மகிழ வைக்கிறது.

வால்மீகி ராமாயணத்தோடு கம்ப ராமாயணம் துளஸி ராமாயணம் ஆகியவற்றை நன்கு படித்து அதில் முக்கியமான பாடல்களை அழகு தமிழில் அனைவருக்கும் புரியும் படி அவர் தந்திருக்கும் பாங்கே பாங்கு.

அவர் இராமாயண, மஹாபாரத இதிஹாஸங்கள் மற்றும் புராணங்கள் பால் மிகுந்த பக்தி கொண்டவர். பாரம்பரியம் மிக்க சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் இசைக் குடும்பம் என்பது இன்னொரு பெரிய சுவையான செய்தி.

தனது இந்தப் பின்புலத்தைக் கொண்டு அவர் இராமாயணத்தைக் கரும்புப் பாகாகத் தந்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

மூவரின் ராமாயணத்தை ஒப்பிட்டு உயர் கருத்துக்களை நல்குவதோடு மட்டுமின்றி அருணாசலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனை, இராமாயண வெண்பா, வீரபத்திர ராமாயணக் கும்மி, நலுங்கு மெட்டு ராமாயணம், ராமாயண அம்மானை உள்ளிட்ட பல இராமாயண இசை, நாடக நூல்களையும் நன்கு பயின்றுள்ள அவர் இராமாயணம் பற்றி ஆழ்ந்து படித்துள்ள சிறந்த வேத விற்பன்னர்களின் கருத்துக்களையும் ஆங்காங்கே தமது கட்டுரைகளில் தந்துள்ளார்.

அவரது இராமாயணம் பற்றிய படைப்புகளில் முதல் நூலாக இராமாயணம் – பால காண்டம் – ஒரு பார்வை என்ற இந்த நூல் மலர்கிறது.

அவரது பார்வை என்ன பார்வை என்று பார்க்க நூலின் உள்ளே நுழைந்தோமானால் அந்தப் பார்வையின் பல்முக பரிமாணங்களைக் கண்டு பிரமிக்கிறோம்! பால காண்டத்தின் முக்கிய நிகழ்வுகளான விஸ்வாமித்திரரின் வருகை, தாடகை வதம், அகலிகை சாப விமோசனம், சீதா கல்யாணம் ஆகியவற்றில் உள்ள இரகசியங்களையும் மர்மங்களையும் சுவைபட விளக்குகிறார்.

ஒவ்வொன்றும் ஒரு ஆய்வுக் கட்டுரையாக அமைந்திருப்பதோடு, தனது பார்வைக்கான சான்றுகளாக பேரறிஞர்களை மேற்கோள் காட்டுகிறார்.

அறிஞர்கள் சுப்ரமணிய முதலியார், கி.வா.ஜ. ரா.பி.சேதுப்பிள்ளை, ஜவஹர்லால், வாலி, கணபதி உள்ளிட்டோரின் விளக்கவுரைகளைத் தக்க இடங்களில் படிக்கிறோம்; மணிவாசகர், அருணகிரிநாதரின் கருத்துக்களையும் ராமாயணத் தொடர்புடன் படித்து மகிழ்கிறோம்.

மொத்தத்தில் வால்மீகி, கம்பர், துளஸி ஆகியோரின் காவியங்களை ஒன்றாகக் கரைத்து ஏற்பட்ட அதிசயமான ராமாயண அமிர்தத்தைப் பருகுகிறோம். இந்த நல் வாய்ப்பைத் தந்துள்ள அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

***

இந்த நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணைய தளத்தில் காணலாம். நூல் பற்றிய விவரங்களை 99803 87852 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டும் பெறலாம்.

 FIND 20 SIMPLE WORDS IN THE CROSSWORD(Post No.12,177)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,177

Date uploaded in London – –  23 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Look at the clues; begin a word where the number is; follow the  colour.

 1   2  
      
3    A 4
      
J 5 67 8  
      9
10   11 
       12
      13
14 A 15 

 ACROSS

1.Vedic Wind God

3.Medical book ; also a dynasty that followed Gupta dynasty

5.In Sanskrit it means old age; English word Gerontology is derived from this Sanskrit word; also name of a demon in Mahabharata

9.cloth, screen , painting, picture(LEFT TO RIGHT)

10.River where Valmiki lived; Name of Thames river is derived from it. Meaning slow moving

12.Name of Lotus flower; name of girls (LEFT TO RIGHT)

13.Spotless, speckless; name of girls (LEFT TO RIGHT)

14.Deathless,; also the name of a dictionary /thesaurus

15.Garden ; pleasing; delightful(LEFT TO RIGHT)

 DOWN

2.wife of Maheswaran

4. music jargon: the first section of the performance of a raga. Vocal or instrumental,

5.long hair; prefix of Pandya ings

6.Posterior, later, superior (go up), rites done following death

7.girls name; lover, husband, bestowed of love

8.the first of the 7 underground divisions  In Hindu Puranas

11.Equal; English word Same is derived from this Sanskrit word; with long sound it meant the third Veda

ANSWERS

UMA, VAKATA, ALAPANA,JARA, RAMILA, ATALA, JATILA, A/SAMA, APARA, LALA, AMALA, NALINI, TA/MASA, PATA, MANA, AMARA/ ARAMA 18+2=20 words

V 1AYU 2  
 R M  
V 3AKATA 4
 P   L
J 5A 6R7A 8 A
A ATAP 9
T10AMAS 11A
INILA 12
LALAM 13
A14MARA15 

—SUBHAM–

Tags- Simple words, Simple words, Atala, Shiop wreck

QUIZ நெரூர் சதாசிவர் பத்து QUIZ (Post No.12,176)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,176

Date uploaded in London – –  23 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.சதாசிவ ப்ரம்மேந்திர சுவாமிகளுக்கும் கரூர் அருகிலுள்ள நெரூருக்கும் என்ன சம்பந்தம் ?

2. திரு விசை நல்லூரில் சதாசிவருடைய சகமாணவர் யார் ?

3.திரு விசை நல்லூரில், ஒரு கிணற்றிலிருந்து கங்கை நதி பிரவாகம் எடுத்து தெருவெல்லாம் ஓடியபோது ப்ரம்மேந்திராள் பாடிய பாட்டு என்ன?

4.சதாசிவரின் பிரபல முஸ்லீம் சீடர்கள் யார்?.

5.சதாசிவரின் இயற்பெயர், அம்மா, அப்பா பெயர்கள் என்ன?

6.அவருடைய குருவின் பெயர் என்ன?

7.சுவாமிகள் வித்வானாக யாரிடம் வேலை பார்த்தார் ?

8.யாருக்கு மண்ணில் மந்திரம் எழுதிக்கொடுத்தார்?

9.சதாசிவ ப்ரம்மேந்திராள் செய்த நூல்கள் யாவை ?

10.பஜனைகளில் பாடப்படும் அவரது பாடல்களின் முதல் வரிகள் என்ன?

Xxxxx

Answers

1.நெரூரில் சதாசிவ பிரமம்மேந்திராளின்  சமாதி உள்ளது. மானாமதுரை, பாகிஸ்தானிலுள்ள கராச்சியிலும் நர்மதா நதியின் கரையிலுள்ள ஒம்மகாரிலும், காசியிலும் இவர் சமாதி அடைந்ததாகச் சொல்லுவார்கள் .மானாமதுரையிலும் நெரூர் போல சமாதி இருக்கிறது .

2.திருவிசை நல்லூரில் ‘அமாவாசை கிணறு புகழ்’ ஸ்ரீதர ஐயாவாள் இவருடைய கிளாஸ்மேட்Classmate .

3. கிணற்றில் தோன்றிய கங்கையைப் பார்த்து ஆனந்தம் எய்திய சதாசிவர் ,

துங்கதரங்கே கங்கே ஜெய துங்கதரங்கே கங்கே  என்ற பாடலைப் பாடினார்

4.தஞ்சாவூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லீம் சகோதரர்கள் சதாசிவரை வணங்கி , தாங்களும் மகான்கள் ஆனார்கள். அவர்களை இரட்டை மஸ்தான்கள் என்று அழைப்பர் அவர்களுடைய சமாதி தஞ்சாவூரில் இருக்கிறது .

5.மதுரையில் பிறந்த அவருக்கு தாய் தந்தையர் இட்ட பெயர் சிவராமகிருஷ்ணன் . செல்லப்  பெயர் பிச்சுக்குப்பன் ;

தாயார் பெயர் — பார்வதி,  தந்தை பெயர் – சோமநாத யோகி.

6.காஞ்சி காமகோடி பீடம் 57-ஆவது பீடாதிபதி ஸ்ரீ பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகள்

7.மைசூர் மஹாராஜாவிடம் வித்வானாக வேலை பார்த்தார் .

8.புதுக்கோ ட்டை மகாராஜாவுக்கு மண்ணில் மந்திரம் எழுதிக் கொடுக்கவே அதை அவரும், பின்னர் அவரது வாரிசுகளும் பேழையில் வைத்து பூஜித்து வருகின்றனர்.

9.தக்ஷிணாமூர்த்தி தியான ஸ்தோத்திரம், நவமணி மாலா, ஸ்வப்னோ திதம், அத்வைத ரஸ மஞ்சரி, அத்வைத தாராவளி, சிவாநுபூதி, ப்ராகாஷிகா, ஆத்மானு சந்தானம், பிரணவ சஹஸ்ர நாமாவளி ,ஆத்ம வித்யா விலாசம்,மநோ நியமனம் மற்றும் சில நூல்கள் .

10.புகழ்பெற்ற பாடல் முதல்  வரிகள் :

பஜரே கோபாலம்மானஸ…………..

ஸ்மர வாரம் வாரம் சேதஹ…………….

ப்ரூஹி முகுந்தேதி ரஸனே……………..

மானஸ ஸஞ்சரரே ப்ரஹ்மணி………….

க்ரீடதி வனமாலி கோஷ்டே………….

பஜரே யதுநாதம் மானஸ…………..

ப்ரதிவாரம் மானஸ…………..

பிபரே ராம ரஸம்…………………

சிந்தா நாஸ்திகில தேஷாம்…………………..

ஸர்வம் ப்ரஹ்ம மயம் ரே ரே

காயதி வனமாலி மதுரம்………………..

பஜரே  யது நாதம்,  பஜரே ரகு வீரம்

a Muslim cutting off the hand of Naked Swamiji Sadasiva Brahmendral; ltaer he realised that he was a great saint after seeing him  walking like a normal man.

—-subham——

 Tags- சதாசிவ ப்ரம்மேந்திராள், நெரூர், Nerur, Sadasiva Brahmendral

Homer’s Iliad did a Miracle! Power of Words !!(Post No.12,175)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,175

Date uploaded in London – –  23 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Hindus are very familiar with miracles. Though miracles did happen in different parts of the world, Hindus have a unique type of miracles which is not seen in any other part of the world. Our ‘curses and boons’ are very famous. They all followed a common code of conduct. Once pronounced, even Gods can not withdraw them. So much trust in Promises, in other words Truth. They can only modify them without doing much damage. All these miracles showed the power of the word.

In Sanskrit and later Tamil literature, we see miracles of words. World famous poet Kalidasa can make one dead or make one rise him from death with his poem. Tamil saints Sambandhar and Sundarar brought the dead back from the Parallel Universe. Sambandar even changed the sex of the palmyra tree. Appar and Sambandar even opened the temple gates with their songs. Over fifty such word miracles are listed in Tamil.

Gods even wrote poems for Tamil devotees which again did miracles. Lord Shiva wrote a recommendation letter in poetic form and the Chera King (King of Kerala) immediately gave immense wealth to the bearer of the letter.

A poor Brahmin by name Dharumi got a poem from Lord Shiva and presented it to the Pandya king for money. The king had already announced that anyone who clarifies the natural fragrance of a woman’s hair will be given 1000 gold coins. When the Royal poet Nakkiran challenged the contents of the poem, Lord Shiva himself appeared as a counsel to the poor Brahmin and clarified. Even Saint Appar sang this episode in his Thevaram 1400 years ago. There are hundreds of anecdotes that show the power of word. A particular type of poem will bring death sentence to enemies. But when one apologises, they even brought them back to life.

xxxxx

Homer Power

Though we don’t hear such stories in other parts of the world, there is an interesting episode about Homer’s Iliad. Homer ,the blind poet of Greece , wrote Greeks first books Iliad and Odyssey around 800 BCE. His two epics are the store-house of religion, precept and history. Westerners found solutions in them to solve their problems or to surmount their difficulties. A well known instance of this occurred when Ptolemy Philadelphos, King of Egypt sent Sostratos as his ambassador to the camp of Antigonos Gonatas , King of Macedonia.

In Short: Two kings of Greek origin in Egypt and Europe made peace when the envoy quoted a Greek poem.

Here is the full story:

Antigonos had just won a decisive naval battle against the Egyptians and it seemed Antigonos and his allies would soon overwhelm the house of Ptolemy. The Egyptian king Ptolemy ,therefore, sent Sostratos with instructions to detach, if possible, Antigonos from other allies by offering him any reasonable terms of peace. The Macedonian king Antigonos at first refused Sostratos’ offers. In despair the ambassador thought of Iliad and quoted the passage (Iliad 15-1-201) wherein Iris Zeus’ messenger reminded Poseidon that a noble heart did not fear to relent. The quotation at the same time conveyed to the king Antigonos a hint that although he had won a sea battle he was merely Lord of the Ocaen,  and therefore inferior to Ptolemy  whose armies like Zeus were still masters of the land. Antigonos charmed with the envoy’s ready wit abandoned his allies and made peace with Egypt.

This shows the respect and trust they had for Homer’s divine epis.

(Ptolemy and Antigonos were both Greeks, though they ruled different parts of Europe and Africa)

— Subham— 

Tags- Antigonos, Polemy, Iliad, Homer, Peace, Ambassador