QUIZ பதிற்றுப்பத்து QUIZ (Post No.12,162)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,162

Date uploaded in London – –  21 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.பதிற்றுப்பத்து என்றால் என்ன ?

2.பதிற்றுப்பத்து நூல் யார் மீது எழுதப்பட்டது ?

3.பதிற்றுப்பத்து நூலைப் பாடியவர் யார் ?

4.இந்த நூலில் யார், யார் வரலாறு உள்ளது?

5.இந்த நூல் கூறும் ஆட்சி ஆண்டுகளில் என்ன வியப்பான விஷயம் தெரிகிறது?

6.இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் யார்?

7.இந்த நூலில் உள்ள மர்மச் செய்தி, அதிசயச் செய்தி என்ன ?

8.இந்த நூலிலிருந்து நமக்குக் கிடைக்கும் சேரமன்னர்களின் வேறு பெயர்கள் என்ன ?

9.இந்த நூலில் அக்குரன் பற்றி என்ன வியப்பான தகவல் கிடைக்கிறது?

10. புலவர்க்குக் கிடைத்த வியப்பான பரிசுகள் என்ன ?

XXXXX

ANSWERS

 1.பதிற்றுப்பத்து என்பது சங்க கால நூல் . எட்டுத்தொகையில் ஒரு நூல்.

இதன் பொருள் 10 x 10 பாடல்கள்

2.சேர மன்னர்களின் கொடைச் சிறப்பையும், படை மறத்தையும் கூறும் வரலாற்று இலக்கிய நூல்

3. இந்த நூலில் முதல் பத்தும் இறுதிப்பத்தும் கிடைத்தில.; ஏனைய 8 x 10=80 பாடல்களைப்  பாடியவர்கள் 8 புலவர்கள் ; அவர்களுடைய பெயர்கள்:குமட்டூர் கண்ணனார், பாலைக் கெளதமனார் , காப்பியாற்றுக் காப்பியனார் , பரணர், காக்கைபாடினியார் நச்செள்ளையார் , கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார்.

4.பதிற்றுப்பத்து நூலில் குறைந்தது எட்டு சேர மன்னர்களின் வரலாறு இருக்கிறது; அவர்களுடைய பெயர்கள் -இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானை செல்கெழுகுட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் , கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ,  ஆடுகோட்பாடுச் சேரலாதன், செல்வக்கடுங்கோ வாழியாதன் பெருச்சேரல் இரும்பொறை , குடக்கோ இளஞ் சேரல் இரும்பொறை.

5.பொதுவாக ஒரு மன்னருக்கு 25 ஆண்டுகள் சராசரி ஆட்சி ஆண்டுகள் என்பது மேலை நாட்டுக் கணக்கு . ஆனால் எட்டு சேர மன்னர்கள் 259 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக நூலின் பதிகம் சொல்லுவதால் சராசரி ஆட்சி ஆண்டு 32 வருகிறது ; குப்தர்களைப் போலவே சீரான, அமைதியான, திறமையான அசரசாட்சியை இது காட்டுகிறது.

மேற்கூறிய மன்னர்கள், 58, 25, 25, 55, 38, 25, 17, 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகப் பதிகச் செய்யுட்கள் பகர்கின்றன.

6.இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ; 58 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். பிற்கால நூல் சிலவற்றில் கரிகாலன் இதை விட நீண்ட ஆண்டுகள் ஆண்டதாகச் சொன்னாலும் அதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை. இங்கு இலக்கிய ஆதாரம் இருக்கிறது

7. பாலைக் கெளதமனார் என்னும் அந்தணப் புலவரை என்ன வேண்டும் என்று பல்யானைச் செல்குழு குட்டுவன் கேட்டான். தானும் தனது பார்ப்பனியும் (மனைவி) நேராக சொர்க்கம் போக வேண்டும் என்று சொல்ல, அவர் சொன்னபடி பத்து வேள்விகள் செய்தபோது, அவர்கள் இருவரும் மாயமாய் மறைந்தனர்

8.சேரன் தவிர, அவர்கள் ஆதன், குட்டுவன், இரும்பொறை என்ற பெயர்காளாலும் அழைக்கப்பட்டனர் 3 ஆதன், 2 இரும்பொறை, இரண்டு குட்டுவன் , ஒரு சேரன் பெயர்கள் உள்ளன.

9.இரண்டாம் பத்தில் அக்குரன் போன்ற வள்ளல்தன்மை (கைவன்மை) என்று வருகிறது. இவர் தலை எழு வள்ளல் களில் ஒருவராக இருக்கலாம் அல்லது கர்ணன் ஆக இருக்கலாம் என்று உ.வே.சா. கருதுகிறார் .

10.ஆயிரக்கணக்கில் பொற்காசுகளும் , லட்சக் கணக்கில் பொற் துகளும் பரிசாகக் கொடுக்கப்பட்டுள்ளது. செங்குட்டுவன் தன் மகனையே பரணருக்குப் பரிசாகக் கொடுத்து, நாட்டின் ஒரு பகுதியை யும் அளித்தான் . குமட்டூர் கண்ணனாருக்கு 500 ஊர்களும் தென்னாட்டு  வருவாய் ஒரு பகுதியும் கிடைத்தது. கபிலருக்கோ மலை உச்சி மீது நின்று கண்ணில் கண்ட ஊர்கள் அனைத்தும் உமக்கே சொந்தம் என்கிறான் செல்வக் கடுங்கோ வாழியாதன் .

—subham—

Tags– பதிற்றுப்பத்து, Quiz அக்குரன், சேரன் , ஆதன், குட்டுவன்,  இரும்பொறை

அறிவியல் வியக்கும் யோகா! – முதல் பகுதி (Post.12,161)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,161

Date uploaded in London –  21 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

21-6-23 யோகா தினத்தையொட்டி 20-6-23 மாலைமலர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை – இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.

அறிவியல் வியக்கும் யோகா! – முதல் பகுதி

ச.நாகராஜன்

அகில உலக யோகா தினம்

உலகெங்கும் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் நாள் யோகா தினமாக 2015ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

2014ஆம் ஆண்டு ஐ.நா.வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றும் போது ஜூன் 21ஆம் நாள் யோகா தினமாக உலகெங்கும் கொண்டாடப்படலாம் என்றும் ஒரு ஆண்டில்  நீண்ட பகல் பொழுதைக் கொண்டிருக்கும் இந்த நாள் உலகில் உள்ள பல பகுதியினருக்கும் சிறப்பான நாள் என்றும் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து ஐ.நா. வில் ஜூன் 21ஐ யோகா தினமாகக் கொண்டாடப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யோக சூத்திரம்

பதஞ்சலி முனிவர் வகுத்த அட்டாங்க யோகம் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்,பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு அடுக்கு எனப்படும் அட்டாங்க வழியைக் காண்பிக்கும் ஒன்று.

இதனால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும், சமுதாய நலனும் மேம்படும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டதால் உலகெங்கும் யோகா இப்போது நடைமுறைப் பழக்கமாக ஆகி விட்டது.

இதற்கென தனி இடமோ அல்லது விசேஷமான சாதனங்களோ தேவை இல்லை. உடலே இதற்கான கருவி. உள்ளமே உயரத்தை எட்டுவதற்கான ஏணி.

யோகத்தினால் மூச்சை அடக்கிய யோகி

உலகெங்கும் உள்ள சோதனைச்சாலைகளில் யோகா பற்றிய ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவை வியத்தகு முடிவுகளை அறிவித்துள்ளன.

மஹராஜா ரஞ்சித் சிங் லாகூரை ஆண்ட போது அவருடன் இணைந்து பிரிட்டிஷ் ஜெனரலான சர் க்ளாட் வேட் (British Feneral Sir Claude Wade)  ஒரு சோதனையை நடத்தினார். அரசு முத்திரை பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியில் யோகியான ஹரிதாஸ் என்பவர் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டார். 120 நாட்கள் கழித்து குழி தோண்டப்பட்டு பெட்டியைத் திறந்து பார்த்த போது முன்னர் எப்படி அமைதியாக இருந்தாரோ அதே போல அவர் எழுந்து வந்தார். இதைப் பார்த்த அனைவரும் பிரமித்தனர்.

1986ஆம் ஆண்டு பிரிட்டன் ராணுவ ஆய்வு மையம் ப்ரெனர் மற்றும் கனாலி ஆகிய இரு விஞ்ஞானிகளை மூச்சை அடக்கும் யோகா திறன் பற்றி ஆய்வு செய்ய நியமித்தது.

‘தியானத்தின் மூலமாக மிக அதீத ஓய்வு நிலையைப் பெறுவதால் உடல் இயக்கம் நம்ப முடியாதபடி குறைந்து ஆக்ஸிஜன் தேவையை வெகுவாகக் குறைக்கிறது; ஆகவே இது சாத்தியமாகிறது’ என்று அவர்கள் ஆய்வின் முடிவைக் கூறினர்.

1927ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த பன்னாட்டு அதீத உளவியல் மாநாட்டில் பேராசிரியர் வான் ஷ்ரெங் நாட்ஜிங் முன்னிலை வகிக்க மாநாட்டில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க ஒரு இளைஞர் 27 முறை மேலே பறந்து காண்பித்தார். யோகத்தால் வந்த – மிதக்கும் – ‘லெவிடேஷன்’ சக்தி இது என்று அவர் கூறிய போது அனைவரும் வியந்தனர்.

யோகம் தரும் பயன்கள்

தியானம் மற்றும் எளிய ஆசனங்கள் எல்லையற்ற பயனைத் தருபவை.

தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை இதற்கு ஒதுக்கினால் போதும்.

நல்ல ஒரு ஆசானிடம் எளிய ஆரம்பப் பயிற்சிகளைக் கற்று ஒருவர் இதில் ஈடுபட்டால் ஏராளமான பயன்களைப் பெறலாம்.

சில பயன்களின் பட்டியல் இதோ:

1) பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தியானம் ஒருவருக்கு ஆக்கபூர்வமான தொடர் வரிசை விளைவுகளை ஏற்படுத்துகிறது.

2) நடத்தையைச் சீராக்கும் மருத்துவ சிகிச்சையில் இது தன்னைத் தானே கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த வழிமுறையாக ஆகிறது.

3) மன அழுத்தத்தை இது நீக்குகிறது. நல்ல ஒய்வை உறுதி செய்கிறது.

4) ஒருவரின் உண்மையாக தற்போது இருக்கும் ஆன்ம அடையாளத்தை அவரது இலட்சியபூர்வமான ஆன்ம அடையாளத்துடன் சமப்படுத்துகிறது.

5) அனைத்தும் உள்ளடக்கிய முழு மருத்துவத்தைத் தன்னுள்ளே கொண்டது இது.

6) அகங்காரத்தை நீக்குகிறது.

7) நிகழ்காலத்தில் வாழ வழி வகுக்கிறது.

8) எண்ணங்களைத் தளர்த்தி வெளியேற்றும் சிறந்த உத்தியாக அமைகிறது இது.

9) ஆரோக்கியத்திற்கான அற்புதத் திறவுகோல் இது. மாரடைப்பு, கான்ஸர், பக்கவாதம் போன்ற கொடிய நோய்களை வரவிடாமல் செய்ய உள்ள அற்புத வழி இது.

10) தியானத்தால் நம்பமுடியாத உடல் ரீதியான சாகஸச் செயல்களைச் செய்ய முடியும்.

11) தியானத்தினால் தானியங்கி நரம்பு மண்டலத்தை நமக்கு உகந்த படி கட்டுப்படுத்த முடியும்.

12) மன அழுத்தம், மன இறுக்கம் சம்பந்தமான உளவியல் மற்றும் இதர பிரச்சினைகளை நீக்குவதற்கு உதவுவது இது.

13) மனிதனுக்கு அகண்ட பார்வையைத் தருவது இது.

14) வேக யுகத்தில் நமக்குள்ள தொழில்நுட்ப கலாசாரத்தின் தீமைகளை எளிதில் அகற்றுவது இது.

15) மனித வாழ்வின் மாண்புகளையும் மதிப்புகளையும் உணர்த்துவது இது.

16) நமக்குத் தெரிந்த கலைகளிலேயே மிக எளிதாகக் கற்கக் கூடிய கலை யோகக் கலையே.

17) நமக்குத் தெரிந்த உத்திகளிலேயே மிக எளிதாகப் பயிற்சியை நடைமுறைக்குக் கொண்டுவருவது இதுவே.

18) இதைச் செய்ய பணம் தேவை இல்லை.

19) இதற்கு வயது வரம்பு கிடையாது.

20) ஆண், பெண் என்ற பால் பாகுபாடு இல்லை.

21) எந்த இடத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.

22) தியானத்தை எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம்.

23) இனம், மதம், நாடு, அந்தஸ்து என்ற பாகுபாடோ பேதமோ இல்லை.

24) மனதைப் பண்படுத்தி உயரலாம்.

25) உடலை மேம்படுத்தலாம்.

26) ஆன்மீக சக்தியை அதிகப்படுத்தலாம்.

27) மனித குலத்தின் பாரம்பரியத்தின் சிறந்த குணங்கள் தியானத்துடன் சம்பந்தமுள்ளவையாக இருக்கின்றன.

28) தியானத்தின் போது ஆச்சரியகரமான அற்புத அனுபவங்கள் ஏற்படும்.

29) நீண்ட ஆயுளை உறுதி செய்யும்.

30) கெட்ட கனவுகள் அகலும்.

31) இரவில் நல்ல தூக்கம் வரும்.

32) தாடைகளை இறுக்குதல், முதுகெலும்பு, தோள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அகலும்.

33) அனைவரையும் கவரும் வண்ணம் எல்லையற்ற அமைதியுடன் எப்போதும் இருக்க முடியும்.

34) புன்னகை ஒளிர முகத்தில் ஒரு ஒளி தோன்றும்.

35) வெட்கம் அகலும்.

36) விளையாட்டு வீரர்கள், கணினி நிபுணர்கள், விஞ்ஞானிகள், பைலட்,- என இப்படி எந்தத் துறையினருக்கும் இது பொருந்துவதோடு அவர்களின் திறனை வியத்தகு அளவில் கூட்டும்.

*** தொடரும்

Englishman mocking at ‘Lazy’ Dravdidans! (Post No.12,160)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,160

Date uploaded in London – –  20 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Sydney Low, an arrogant London journalist sent by Standard magazine to accompany Prince of Wales to India, wrote a book titled ‘A Vision of India’ in 1906.

Here is an excerpt from page 234

“These Canarese , Telugus and Tamils command no respect either from Europeans or the natives of other Provinces. They are not among the fighting races; they furnish a very small contingent to the amies of King- Emperor, and the head quarter staff thinks so poorly of them  that it has almost abolished Madras as a recruiting ground. Yet all the virtues of the world are not military, and these Southerners seem to me a rather attractive people. They have the reputation of ill looking , except the high caste Brahmans, among whom, indeed, you will find faces not easily beaten for perfection of feature and intellectual distinction.  I have seen a Brahman lawyer of Madras who could have sat the model for the model of Giotto’s Dante, and another who might have passed for Phoebus Apollo in crème coloured marble.

It needs no ethnological expertness to select the Aryan strain of this aristocracy of birth from the Dravidian masses. These same Dravidians are dark and low of stature and sometimes negroid in type; but they seem healthy and sturdy, their chocolate skins are sleek and clear. They are a lively good tempered folk; very poor, I am told; extremely lazy, I make no doubt; but kindly humorous, and placable except when they are roused into frenzy by fanaticism. They have the Southern insouciance (indifference, lack of concern) and some touch of Southern artistry , in their selection of bright colours that go unerringly with their dusky tones of skins and in the classic grace with which they loop their scanty drapery over one shoulder leaving the other bare as the Greeks often did.

Giotto’s Dante

For picturesqueness  I saw no festal crowds in India to beat those assembled to greet Prince of Wales on his entry into Madras and Mysore. Some of the groups of women, in robes of orange and majenta or deep blue, made splendid clumps of colour, as they lined the roofs or were framed in the recesses of verandahs and arcaded windows.

Madras itself seemed to me one of the most desirable of the larger Indian towns. I did not notice anything which struck me as resembling the attitude of demeanour often ascribed to this fine city. We have been told to see in the capital of the South only

A withered beldame now,

Dreaming of ancient fame.

But Madras looks more like a matronly beauty than a faded old hag. She may be dreaming of ancient fame, but she many present amenities to comfort her. It is a city of ‘magnificent distances’—far ampler even than those of Washington. The five thousand inhabitants were spread out over an area almost comparable to that occupied by the five million of Londoners. And, like London, the capital of the South is not so much a town as agglomeration of villages. They are linked together by wide open tree shaded roads, flanked by gardens and meadows.

In Madras , you find the compounds the largest in India,  so that quite insignificant official personages or private individuals have their three or four acres of land ground and many have small estates, like miniature parks, with lawns and groves and kitchen gardens and pasture land. They are well housed, for they are able to live in handsome roomy bungalows, such as people built in the spacious old Anglo-Indian days, before they began to be cramped  by rising prices and falling rupee. Space is treated with a kind lavish disdain in Madras, where in the middle of the municipal area, you come upon a great grassy maidan, a sort of Hampstead Heath or Putney Common, upon public offices are surrounded  by leafy glades and flower beds, upon water courses and river channels, and  native hamlets and plantations of palm trees.

Phebus Apollo

(He continues with describing the Adyar Club, Marina beach and Fort St George. He also regrets that no monument for Robert Clive is found anywhere in India. He wants a statue for Clive saying , ‘more than any other human being, we owe our Empire of the East’ to Clive.

(My Comments : Now we know that scoundrel Robert Clive committed suicide in England. We must celebrate by burning the effigies of Robert Clive instead of Ravana in Ram Leela Festival. That demon caused millions of deaths in India; He made the British plunder the whole of India for 300 years. )

–subham—

A vision of India, Dravidians,

பா, பா,  என்று முடியும் சொற்கள் Crossword (Post No.12,159)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,159

Date uploaded in London – –  20 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பா பா  என்று முடியும் சொற்கள்

1.கந்தனின் மற்றோர் பெயர்

2. தேவலோக ஆளாகி 

3.பூ தான இயக்கத் தலைவர் ,

4 .குருவை போல ஒரு நெற்பயிர்

5.மஹாராஷ்டிரத்தில் வணங்கப்படும் சிவனின் ஒரு ரூபம்

6.ஷீரடியிலும் புட்டபர்த்தியிலும் முழங்கும் நாம ம்

7.மஹாத்மா காந்தியின் மனைவி

 8.திருவனந்தபுரம்  ,அருகிலுள்ள ராக்கெட் ஏவுதளம்

     1  
  8   2
       
 7     3
       
      4
 6  5  

ANSWERS

1.கடம்பா,  2. ரம்பா, 3.வினோபா, 4 .சம்பா, 5.க ண் டோ பா, 6.சா ய் பா பா, 7.க ஸ் தூ ரி பா,  8. தும்பா ,

    க 1  
  து 8  ர 2
   ம்ம்ம் 
க 7ஸ்தூரி பானோவி3
   பாடோம் 
  ய் ண் ச4
 சா6  க5  

XXXXXXSUBHAMXXXXXXX

Tags- பா, பா,  முடியும், சொற்கள் ,

முஸ்லீம்களை படுகொலை செய்த வெள்ளைக்காரன்! (Post No.12,158)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,158

Date uploaded in London – –  20 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பஞ்சாப் மாநில அமிர்தசரஸில் ஜாலியன் வாலா பாக் தோட்டத்தில் 400 பேரை, குருவி சுடுவது போல, வெள்ளைக்காரன் சுட்டுக்கொன்றதை நாம் அறிவோம். இது தவிர கட்டபொம்மன், பகத் சிங், சுகதேவ், ராஜ குரு போன்றோரைத் தூக்கில் போட்டுக் கொன்றதை நாம் அறிவோம். ஆனால் இது தவிர பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவித்ததை பலரும் அறியார். இதனால்தான் சுவாமி விவேகானந்தர் அவரது பிரசங்கத்தில் இந்து மஹா சமுத்திரத்தில் உள்ள அத்தனை சகதியையும் உங்கள் மீது வீசினாலும் போதுமான பதிலடி கொடுத்தது ஆகாது என்று வெள்ளைக்காரர்களை ஏசினார் .

பிரின்ஸ் ஆப் வேல்ஸ் Prince of Wales இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் செய்தபோது அவருடன் வந்த சிட்னி லோ என்ற பத்திரிக்கை நிருபர் எ விஸன் ஆப் இந்தியா  (A Vision of India by Sidney Low; year 1906) என்ற நூலில் தரும் தகவல் இதோ:

“அதோ ஹுமாயுன் கல்லறை கண்களில் படுகிறது. காலை இளஞ் சூரியன் வெளிச்சத்தில் காணும் போதும், மாலை சூரிய அஸ்தமனத்தின் செந்நிற வானத்தில் காணும்போதும் கடந்தகாலத்தில் இந்தக் கல்லறையில் நடந்த புனிதமற்ற ஒரு காட்சி மனக் கண்களில் ஓடுகிறது. 1857-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் இந்த இடத்திலிருந்துதான் ஹாட்சனும் (Hodson) அவனுடைய குதிரை வீரர்களும் கடைசி மொகலாய அரசனை வெளியே இழுத்து வந்தார்கள். அந்த அரசன் சிப்பாய்கள் நடத்திய கலகத்தின் பொம்மை அரசன் (Puppet King of Rebellion ) (1857ம் ஆண்டு சுதந்திர போரை வெள்ளைக்காரர்கள் சிப்பாய்க் கலகம் என்ற சொல்லால் ஏசுவர் ).

நடு நடுங்கிக்கொண்டிருந்த அந்தக் கிழட்டு  சதிகாரனை , இங்கிலாந்தின் பிடியிலி ருந்தும் சிறையிலிருந்தும் ஹுமாயுன் கல்லறை காப்பாற்ற முடியவில்லை. அவனுடைய மகன்களின் கொடூர முடிவுகளையும் காப்பாற்ற இயலவில்லை. துணிச்சல் மிக்க, எதற்கும் அஞ்சாத ஹாட்சன் (Hodson) அங்கே ஒளிந்து கொண்டிருந்த மொகலாய இளவரசர்களை மறுநாள் (புரட்சி வெடித்த மறுநாள்) வேட்டை ஆடினான்.

நல்ல உயரமானவன் (ஹாட்சன்); செம்ப ட் டைத் தலையன்; நீல நிற கண்களுடையவன்; ஆங்கிலேயர்களின் கோபம் முழுவதையும் இதயத்தில் கொண்டவன். அந்தக் கல்லறையை  சூழ்ந்திருந்த கும்பல் நின்ற இடத்தில் 100 குதிரை வீரர்களுடன் பாய்ந்தான் அந்த கொரில்லா வீரன்.

பழிவாங்கும் அந்த மனிதன் முன்னால் , முஸ்லீம்களின் வெறி பின்வாங்கி ஓடியது. கல்லறையின் தோட்டத்தில் நின்றவர்கள் கைகளில் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் பத்தே வீரர்களின் உதவியால் பறிமுதல் செய்தான். ஆயிரம் வாட்களையும் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தான்  கல்லறைக்குள் ஒளிந்து கொண்டிருந்த ஆட்களை வெளியே கொணர்ந்து கொலைகார டில்லி வாயிலுக்கு (Delhi Gate) விரட்டிச் சென்றான். தன்னுடைய கையில் இருந்த துப்பாக்கியால் அவர்களைச் சுட்டுக்கொன்றான். அதை பார்த்துக்கொண்டிருந்த முகமதியர்கள் வெலவெலத்து, நடுநடுங்கி பயத்தில் ஸ்தம்பித்து நின்றார்கள் . இரத்தக் களரி ; கொலைவெறிதான். ஆயினும் இதைச் செய்த ஹாட்ஸனின் செயல்பற்றி அவசரப்பட்டு விமர்சனம் செய்து விடாதீர்கள். அதே ஆண்டில்தான் கான்பூர் படுகொலை நடந்தது என்பதை நாம் (பிரிட்டிஷ்காரர்கள் ) நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் “

1906ம் ஆண்டில் சிட்னி லோ எழுதியது

(இணைத்துள்ள ஹாட்ஸன் படத்தையும் காணவும் )

–சுபம்— .

tags- ஹாட்சன் , சிட்னி லோ , வெள்ளைக்காரன், முஸ்லீம்கள், படுகொலை 

QUIZ தெய்வத் தமிழ் பத்து QUIZ (Post No.12,157)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,157

Date uploaded in London – –  20 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

1.தமிழில் ஓரெழுத்து, ஐந்தெழுத்து, எட்டெழுத்து , ஆறெழுத்து (ஏகாட்சரம், பஞ்சாட்சரம் , அஷ்டாக்ஷரம், சடாக்ஷரம் ) என்றெல்லாம் போற்றப்படும் மந்திரங்கள் என்ன?

2.சந்தக் கவிகளாலேயே முருகனைப் போற்றியவர் யார் ?

3.தமிழ் மொழியில் மஹாபாரதம் பாடிய முக்கியப் புலவர்கள் யார்?

4.தமிழ் மொழியில் திருவிளையாடல் புராணம் பாடிய முக்கியப் புலவர்கள் யார்?

5.ஆதிசங்கரர் வகுத்த அறு சமயம் யாவை ?

6.விநாயகர் அகவல் பாடியவர் யார்?

7.முருகன், கணபதி, நடராஜர் வதைத்த முக்கிய அசுரர்கள் பெயர்கள் என்ன?

8.சிவபெருமான் எரித்த முப்புரங்களுக்கு உரிய அசுரர்கள் யார்?

9.பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறை எது?

10. துதிகளில் 5, 8, 10, 100, 108, 1008 எண்களில் பாடல்களோ ஸ்லோகங்களோ இருந்தால் அவற்றை எப்படி அழைப்பர் ?

xxxxx

விடைகள்

1.ஓம் (1) , நமசிவாய (5), ஓம் நமோ நாராயணாய (8), சரவணபவ (6)

2.அருணகிரிநாதர்; திருப்புகழில்

3.வில்லிபுத்தூரார்  (பாதி கிடைத்தது); பெருந்தேவனார் (முழுதும் கிடைக்கவில்லை)

4.பரஞ்சோதி முனிவர் , பெரும்பற்றப் புலியூரார்

5.காணாபத்யம் (பிள்ளையார் ); கெளமாரம் (குமரன்/முருகன்); செளரம் (சூரிய வழிபாடு), சாக்தம் (சக்தி); சைவம் (சிவன்), வைஷ்ணவம் (விஷ்ணு).

6. ஒளவையார் (சங்க கால ஒளவையார் வேறு)

7.சூரபத்மன் (முருகன்); கஜமுகாசுரன் (கணபதி); முயலகன் (நடராஜர்)

8.தாரகாக்ஷன் , கமலாக்ஷன், வித்யுன்மாலி

9. மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம்

10. பஞ்சகம் /பஞ்ச ரத்ன ம் (5), அஷ்டகம் (8); பதிகம் (10; பல ஸ்ருதியுடன் 11); சதகம் (100), அஷ்டோத்தரம் (108); ஸஹஸ்ரநாமம் (1008).

—subham—

Tags- தெய்வத் தமிழ், பத்து, QUIZ 

நட்சத்திரங்களில் ஒளிந்திருக்கும் ஆன்மீக ரகசியங்கள்! – 2 (Post No.12,156)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,156

Date uploaded in London –  20 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

15-6-23 மாலைமலர் இதழில் வெளிவந்த கட்டுரை

 இரண்டாம் பகுதி இங்கு வெளியிடப்படுகிறது.

நட்சத்திரங்களில் ஒளிந்திருக்கும் ஆன்மீக ரகசியங்கள்! – 2

ச.நாகராஜன்

கந்தனை வளர்த்த கார்த்திகை!

தமிழர் தம் தனிப்பெரும் தெய்வம் முருகன். முன்பொரு காலத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த போது சிவபிரானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆறு முகங்களும் பன்னிரெண்டு கரங்களும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் முருகனே தமிழ் தந்த முருகன்.

கார்த்திகை மாதர் அறுவர் முருகனை வளர்த்ததாகப் புராணம் கூறுகிறது.

அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி ஆகிய ஆறு நட்சத்திரங்களே அவைகள்!

கார்த்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி. கிருத்திகா என்றால் வெட்டும் கருவி என்று பொருள். தீ நாக்குப் போலத் தோற்றம் அளிப்பவை இந்த ஆறு நட்சத்திரங்களூம்.

பிளையாடிஸ் என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் இந்த நட்சத்திரம் சூரியனுடன் உதித்து சூரியனுடன் அஸ்தமனம் ஆகும் நாட்களே வருடத்தில் மிகவும் உஷ்ணமான நாட்கள். இதை கார்த்தி நாட்கள் என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுகிறோம்.

சூரியனுக்கே இப்படி கூட்டு சேர்க்கையாலேயே அதிக வெப்பம் தரும் இதன் உண்மையான உஷ்ணம் எப்படி இருக்கும்? கற்பனை செய்ய வேண்டியது தான்.

இது 250 ஒளி வருட தூரத்தில் உள்ளது. பைபிளும் கார்த்திகை நட்சத்திரத்தை மூன்று இடங்களில் குறிப்பிடுகிறது. (Job 9.9,38.31. Ams 5.80)

அழுக்குகளையும் பொய்யையும் சுட்டுப் பொசுக்கும் இந்த நட்சத்திரம் ஒளி, தீபம் ஆகியவற்றுடன் இணைத்துப் பேசப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாள் வாழ்வில் ஒளிமயமான ஏற்றத்தைக் குறிக்கும் நாள்!

சங்க இலக்கியத்தில் தனியொரு இடத்தை இந்த நட்சத்திரம் பெறுகிறது.

அகஸ்திய நட்சத்திரம்

கானோபஸ் என்று மேலை நாட்டினரால் குறிப்பிடப்படும் அகத்திய நட்சத்திரம் எப்போதெல்லாம் பூமியை நெருங்குகிறதோ அப்போதெல்லாம் ஒரு பூ மலரும். அதுவே அகத்திப்பூ. அந்தக் கீரையே அகத்திக் கீரை.

“தூய கடல் நீரை முழுது உண்டு அது துரந்தான்” என்று கவிச்சக்கரவர்த்தி கம்பனால் வர்ணிக்கப்படும் அகத்தியர் தெற்கு வான மண்டலத்தில் தெரியும் நட்சத்திரம்.

சூரியன் சிம்ம ராசியில் மறையும் போது கும்ப ராசி உதிக்கும் அதே சமயம் அகத்திய நட்சத்திரமும் உதிக்கும். இதைக் கண்ட நமது முன்னோர் அவருக்கு கும்ப முனி என்ற பெயரை இட்டனர்.

அகத்தியர் தோன்றியவுடன் சரியாக மழைக்காலம் முடிகிறது. ஆகவே தான் மழைக்காலம் நீங்கிய உடனேயே தோன்றும் அகத்தியர் நீரைக் குடித்து விட்டார் என்ற வழக்கு வந்தது.

இன்னொரு அறிவியல் கூற்றுப்படி எப்போதெல்லாம் அகத்திய நட்சத்திரம் பூமியை நெருங்குகிறதோ அப்போதெல்லாம் கடல் நீர் கூடுதலாக வற்றுகிறது.

***

COMMON (SANSKRIT) WORDS CROSSWORD(Post No.12155)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,155

Date uploaded in London – –  19 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1 2   3  4
  5a      
    5 b   
6       4a
      7 8 
9       
       10   4b
  11     
12       
       13 

ACROSS

2. The term has its origin in Malayalam which refers to a committee or a board. Several Viadhyasalas are run by them

5b.One of the three daughters of King of Kasi

6.   in India it is the name of a plant defined with Calotropis gigantea ; also Sun

8. Not the right time, Untimely in Sanskrit

9.Soul used in Bhagavad Gita, Upanishads

11. Mythical animal sculpted in temple pillars (Lion+Elephnat look)

12.orderly, succession, step by step

13. it is the main character of a story in canto 6 of the Bhagavata Purana. In Hinduism, the story is used to illustrate that by uttering God’s divine name, there is hope for even the sinful to be redeemed from their propensity to commit sins.

XXXX

DOWN

1.One of the three daughters of King of Kasi (go diagonal)

1.Customary rules, laws for Hindus

3.Vedic Deity with highest number of hymns

5.a Hanuman’s another name connected with Wind

7. it is a Sanskrit term, derived from the Sanskrit root kri, meaning ‘to do’. It means ‘action, deed, effort’. One yoga is named with this word

4.Kalidasa’s famous poem on Six Seasons

4a Destroying, Finishing, Killing

4b Name of Shiva

10.Short sound means Fourth Yuga; long sound means Fiery form of Goddess Shakti

xxx

answers

A 1 V2ARI 3AR 4
CM 5a   NYT
HABMA5 bDIU
A6RKAIRRS 4a
RU ALAK7 A8 
A 9TMAAI M
 I    10 KH 4b
  Y11ALI A
K12RAMA  R
 ALIMAJA13 

ACROSS

2.VARIAR, 5b.AMBA, 6.ARKA,8.AKALA, 9.ATMA, KRAMA, 11.YALI, 12.KRAMA,

13.AJAMILA

XXXX

DOWN

1.AMBALIKA, 1.ACHARA, 3.INDRA, 5.a MARUTI, 7.KRIYA , 4.RTU SAMHARA,

4a SAMHARA, 4b HARA, 10.KALI.

—SUBHAM–

Tags- sanskrit ,crossword,

British massacred Muslims in India (Post No.12,154)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,154

Date uploaded in London – –  19 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Sidney Low in his book ‘Vision of India’ writes

“But as we gaze upon the distant dome of Humayun’s tomb, floating in the luminous gaze of morning or the amber and emerald of the sunset sky, we remember that once, at least , the sanctuary was violated. It was from these vaults, after Delhi had fallen, in September 1857, that Hodson, of Hodson’s horse, that dashing, daring, reckless adventurer dragged out the last of the Moghuls, the puppet king who had been made the nominal head of the rebellion. The coffin of his ancestor could not shield the trembling old intriguer from the arm of England and an English prison. Nor could it save his sons from a darker room. It was Humayun’s monument that the princes were hiding in when this same Hodson sought them out the following day. Tall and thin, with red hair, and faming blue eyes all alright with the concentrated wrath that was burning in English hearts in that grim autumn, a hundred of his wild horsemen at his heels, the fierce guerilla chief burst into the crowd that beset the mausoleum. Before that Spirit of Vengeance, Mosleme fanaticism quailed. With ten men, Hodson disarmed the clamorous mob in the  garden of the tomb and took a thousand swords and fire arms from them. Then he brought the fugitives through the throng, and carried them on that famous and fatal drive to the Delhi Gate, where he shot them with is own hand, while a host of Mohammedans looked on, paralysed with fear and horror. Al bloody deed; but let us remember that it was the year of the Cawnpore massacres before we pass hasty judgement upon it and its author.” (written in 1906)

Please see the attached picture

—subham—

 Tags- Hodson, Muslims,Mogul princes, shooting, Delhi gate, British

QUIZ இன்பப் பத்து QUIZ (Post No.12,153)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,153

Date uploaded in London – –  19 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 1.எல்லார்க்கும் இன்பம் என்று சொன்னவர் யார் ?

2. ‘கொள்ள மாலா இன்ப வெள்ளம்’ என்று செப்பிய ஆழ்வார் யார் ?

3.’யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ — என்று பாடியவர் யார் ?

4.’ஆராத இன்பம் அருளும் மலை’ — என்று சிவபெருமானைப் பாடியவர் யார் ?

5.’இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ – என்று அடித்துக்கூறியவர் யார் ?

6.’லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து’  என்ற கருத்தை தாயுமானவர் எப்படிச் சொல்கிறார்?

7.’உலகு இன்பக் கேணி’ — என்று பாடிய புலவர் யார்?

8.உலகம் முழுதும் இன்பம் உறுக/ லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து — என்று எந்தப் பாடலைப் பாடி பாரதியார் கதையை முடிக்கிறார் ?

9.வள்ளுவர் திருக்குறளில் இன்பம் என்ற சொல்லை எவ்வளவு முறை பயன் படுத்துகிறார் ?

10. இன்பம் என்றால் என்னவென்று  திரைப்பம் ஒன்றில் மருதகாசி கொடுத்த இலக்கணம் என்னவோ ?

XXXXX

விடைகள்

1.தொல்காப்பியர்

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் (தொல்காப்பியம்)

XXXXX

2.நம்மாழ்வார்

3181     கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்

வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்று என்று

நள் இராவும் நன் பகலும் நான் இருந்து ஓலம் இட்டால்

கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே       –திவ்வியப் பிரபந்தம்

XXXXX

3. திருமூலர்

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்

ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே—திருமந்திரம்

XXXX

4.மாணிக்க வாசகர்

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி– (சிவபுராணம்), திருவாசகம்

XXXXX

5.திருநாவுக்கரசர் (அப்பர்) தேவாரத்தில் சொல்கிறார்

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;

நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;

ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;

இன்பமே எந்நாளும், துன்பமில்லை.– அப்பர் தேவாரம்

XXXX

6.தாயுமானவர் பாடலில் வரும் வரிகள்

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே

                         (பராபரக்கண்ணி – 221)– தாயுமானவர்.

XXXXX

7.ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்

உலகின்பக்கேணியென்றே – மிக

நன்று பல்வேதம் வரைந்த கை பாரத

தேவி தன் திருக்கை (பாரதியார்)

XXXX

8.பாஞ்சாலி சபதம் கவிதை நூலை பாரதியார் இப்படி முடிக்கிறார்

சாமி தருமன் புவிக்கே- என்று

சாட்சி யுரைத்தன  பூதங்களைந்தும் !

நாமும் கதையை முடித்தோம் — இந்த

நானிலம் முற்றும் நல்லின்பத்தில் வாழ்க

XXXXX

9. குறைந்தது 29 இடங்களில் திருவள்ளுவர் திருக்குறளில் இன்பம், இன்புறுவது என்ற சொற்கள் வருகின்றன  . இதோ  சில குறள்  வரிகள் –

‘’அறத்தான் வருவதே இன்பம்’’ (குறள் 39) (தருமத்தைப் பின்பற்றினால் இன்பம் கிடைக்கும்)

‘’மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’’ (குறள் 65) (குழந்தைகள் இன்பம் தருவர்)

‘’இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்’’ (98) (இன்சொல் இன்பம் தரும்)

‘’இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்’’ (ஆசையை ஒழித்தால் இன்பம்)

‘’ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப்பெறின்’’ (1330) (கணவன் –மனைவி ஊடல் பின்னர் சமாதானத்தில் முடியும்போது கூடுதல் இன்பம் தரும்)

XXXX

10.இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு – அது

எங்கிருந்த போதுமதை நாடி ஓடு (2 முறை)

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

இன்றிருப்போர் நாளை இங்கே

இருப்பதென்ன உண்மை – இதை

எண்ணிடாமல் சேர்த்து வைத்து

காத்து என்ன நன்மை (2 முறை)

இருக்கும் வரை இன்பங்களை

அனுபவிக்கும் தன்மை

இல்லையென்றால் வாழ்வினிலே

உனக்கு ஏது இனிமை

இன்பம் எங்கே

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்

கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம் (2 முறை)

இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் – அவள்

இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

இன்பம் எங்கே

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது

எங்கிருந்த போதுமதை நாடி ஓடு

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்

வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம் (2 முறை)

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் – உன்

மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

இன்பம் எங்கே

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது

எங்கிருந்த போதுமதை நாடி ஓடு

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

இன்பம் எங்கே இன்பம் எங்கே – மருதகாசி

(திரைப்படம்: மனமுள்ள மறுதாரம் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்)

—SUBHAM—-

Tags- இன்பம், மருதகாசி , திருவள்ளுவர், இன்பமே எந்நாளும், பாரதியார், எல்லோரும் இன்புற்று, யான் பெற்ற இன்பம் பெறுக