நாஜிகளுக்கு பலியானோரின் மூளை பற்றிய ஆராய்ச்சி! (Post.12,100)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,100

Date uploaded in London –  June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!

அத்தியாயம் 13

நாஜிகளுக்கு பலியானோரின் மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி!

.நாகராஜன்

பகுதி 17

 “கர்வம் என்பது ஒரு ஆயுதம் – 2003ஆம் ஆண்டு வெளியான ‘தி ரெய்ஸ் ஆஃப் ஈவில் என்ற படத்தில் ஹிட்லர் கூறுவது

    ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் நடத்தப்பட்ட, ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரமான கொலைகளுக்கு ஒரு கணக்கே இல்லை,

இவற்றில் மிகவும் மோசமான கொலைகள் கருணைக் கொலை என்ற பெயரில் நடத்தப்பட்டவை தாம்!

உடல் ஊனம் அல்லது குறைபாடு ஹிட்லரைப் பொறுத்த மட்டில் ஒரு மருத்துவக் குறைபாடு அல்ல. அது இனத்தின் மரபணுவில் இருக்கும் ஒரு குறைபாடு என்று கருதப்பட்டது.

ஹிட்லர் “தனது ஆர்ய இனம்” என்பது உயரிய இனம் என்று கருதியதால் ஆயிரக்கணக்கான உடல் ஊனமுற்றோரைச் சிறை செய்து கருணக்கொலை செய்து அவற்றின் மூளைகளை ஆய்வு செய்யக் கட்டளையிட்டான். இந்த மூளைகள் இன்னும் இருக்கின்றன.

.

இந்த ஆயிரக்கணக்கான மூளைகள் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட சிலைடுகள் உள்ளிட்டவை அனைத்தும் மாக்ஸ் ப்ளாங்க் சொஸைடியில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது.

 இந்த மூளை ஆய்வுத் திட்டத்திற்கு அகிடன் டி 4 (Akiton T4)  என்று பெயர்.

தனது உயரிய இனத்தைச் “சுத்தமாக” வைத்துக் கொள்ள ஹிட்லர் 1933இல் தான் அதிகாரத்திற்கு வந்தவுடன் இந்த மூளை ஆராய்ச்சியை மேற்கொண்டான். மனம் மற்றும் உடல் ரீதியிலான குறைகள் இனத்தை அசுத்தப்படுத்தும் குறைகள் என்பது அவனது கருத்து.

1940இல் டி4 திட்டம் தொடங்கப்பட்டவுடன் ஆயிரக்கணக்கில் உடல் ஊனமுற்றோர் சிறை பிடிக்கப்பட்டு மரணக் கிடங்கு என்று சொல்லப்பட்ட ஓரிடத்தில் இருந்த கருணைக்கொலைக்கான ‘மருத்துவ தொழிற்சாலை மையங்க’ளுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு குழந்தைகளுக்கு மரண ஊசி போடப்பட்டது. பெரியவர்க்ள் கேஸ் சேம்பரில் விஷ வாயு செலுத்தி கொல்லப்பட்டனர்.

 இப்படி கொல்லப்பட்டோர் சுமார் இரண்டு லட்சத்தி ஐம்பதியாயிரம் பேர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இவற்றில் ஐந்து சதவிகிதம் பேரின் மூளைகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன.

 மூளைகள் அனைத்தும் பெர்லினில் உள்ள கெய்ஸர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பப்பட்ட்ன. இந்த நிறுவனம் ஏராளமான விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற வழி வகுத்த ஒரு அருமையான நிறுவனம்.

இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் இதை மாக்ஸ்பிளாங்க் சொஸைடி தன் வசம் எடுத்துக் கொண்டது. விஞ்ஞானிகள் தாஙகள் மேற்கொண்ட மூளை மற்றும் செல் ஆராய்ச்சிக்கு இங்கு வந்து பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த மூளைகளைப் பயன்படுத்தலாயினர்.

 1980ஆம் ஆண்டு ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள், பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த இன்னும் ஏராளமான மூளைகளைக் “கண்டுபிடித்தனர்”.

மாக்ஸ் ப்ளாங்க் சொஸைடி 1933 முதல் 1945 முடிய ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் கொல்லப்பட்டோரின் மூளைகளை மூனிச்சில் உள்ள ஒரு கல்லறையில் புதைத்து வைத்திருந்தது. இவை இப்போது எடுக்கப்பட்டு விட்டன.

 இந்த மூளைகளை வைத்து அவை யாருடையவை என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சி பெரிய முயற்சி.

அது இப்போது நடைபெறுகிறது!

***

Find the Sashti and Saptami Festivals of Hindus (Post N0.12,099)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,099

Date uploaded in London – –  7 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

WORDS SASHTI AND SAPTAMI ARE LEFT IN THE CROSSWORD TO HELP YOU. IT MAY GO WITH ANY  OTHER WORD IN THE CROSSWORD.

 1      
2   I  3.
    M  
    A⇠4  
SASHTI 
    P  
 6  A  
  7  S  
     8 
 9     

ACROSS

1. Khandoba’s festival is celebrated in Margasirrsha Sukla Prathama to Shasti. On the Shasti day devotees assemble on sixth day in Jejuri and Gudguddapur.

4. – Shashthi Devi is worshipped on this day. The goddess is invoked to ensure the well being of children. Flower buds of this tree is used in the ceremony.

6. She is the goddess of small pox. Magha Sukla paksha sixth day is celebration in Bengal .

6. – She is the goddess of small pox. On sravana Krishna paksha seventh , she is worshipped in Gujarat.

7. -A fast is kept on Pausa sukla sixth day followed by the worship of goddess.

8. – see number 9. Another name for the same.

9.– celebrated on the seventh day after sun enters Makara rasi . it is the worship of sun with placing a platter of seven arka leaves on the head with rice  or lamp and bathe.

XXXX

DOWN

2.– see number 9. Another name for the same.

3. – it is celebrated in November to celebrate lord Subrahmanya s victory over demon Taraka or Sura Padman

xxxx

Another Aranya Sashti is not in the crossword. It is celebrated on Jyeshta Sukla sixth day . Women walk in the woods eating fruits , go to the shrine of goddess Sashti praying for good children .

C 1HAMPA 
B2   I S 3.
H   M K
AKOSA⇠4 A
SASHTIN
K   P D
AS6ITALA
RK 7HAS  
IRAKAM8 
 R9ATHA 

ANSWERS

ACROSS

1.Champa Sashti

4.Asoka Sashti

6.Sitala Sashti

6.Sitala Saptami

7.Khas Sashti

8.Makari Saptami

9.Ratha Saptami

XXXX

DOWN

2.Bhaskari Saptami

3.Skanda Sashti

xxx

Aranya Sashti is not in the cross word.

—subham—

Tags- Sashti, Saptami, crossword, Hindu festivals, Ratha, Skandha, Sitala 

No one can beat Hindus in Fasting– Sir Monier Williams- Part 3 (Last part) – Post No.12,098

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,098

Date uploaded in London – –  7 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Part 3 (last part)

I have given below the names of 24 Ekadasis. Few of them have more than one name; once in two or three years, we come across an extra month called Adhika month. That year we will have extra Ekadasis .

Devotthan Ekadasi occurs on the 11th day of sukla paksha (bright half) of Kartik month. The epithet Devotthan signifies that on this day god Vishnu is believed to wake up from sleep. According to the puranas, Vishnu sleeps for the four months of rainy season. He goes to sleep on Sayana Ekadasi.

This Ekadasi is also known as Prabodhini Ekadasi and followers of Swaminarayan sect consider it very important.

His sleeping period is also known as chaturmasya  vrata. Ascetics stay in one place, avoiding all travels.

Xxx

The Mahabharata gives us a detailed account of the rules for observing Ekadasi vrata.

Take a bath in the early morning without customary oil.

Worship Vishnu repeating his name at least 108 times.

Offer flowers, fruits, Tulsi leaves to god.

Total abstinence from food during day and night. If possible, avoid drinking water.

Some people take milk and fruits or Ganji (gruel) only one time.

Xxx

On Ekadasi days Vishnu temples get a large crowd, particularly in temples like Pandharpur, Guruvayur, Tirupati. Ashada Ekadasi (June- July) is considered most important by devotees of Pandharpur Vitoba.

Vaikunta Ekadasi  (also known Mokshada, Putrada)  that falls in Margasirsha (December- January) is a big event in Tamil Nadu. Most of temples are open throughout the night. Large number of people fast and wait for Darshan in the Vishnu temples.

Following is the list starting from the month Chaitra

Paapavimochana Ekadasi           ,Kamaada Ekadasi

Varuthini Ekadasi  ,Mohini Ekadasi    

Aparaa Ekadasi,Nirjala Ekadasi

Yogini Ekadasi, Shayani Ekadasi          

Kaamika Ekadasi    ,Sravana Putrada Ekadasi          

Annada Ekadasi , Parsva Ekadasi

Indra Ekadasi, Pasankusha Ekadasi    

Rama Ekadasi, Prabodhini Ekadasi     

Utpanna Ekadasi, Mokshada Ekadasi Vaikuntha Ekadasi

Saphala Ekadasi , Pausha Putrada Ekadasi, Vaikuntha Ekadasi

Shattila Ekadasi , Bhaimi Ekadasi

Vijaya Ekadasi,       Amalaki Ekadasi    

(Padmini, Parama sudhdha, if it is Adhika/Extra month)

xxxx

Nirjala Ekadasi means No water Ekadasi. On that day, followers don’t even drink water. Since Bhima also observed it, it is known as Bhimaseni Ekadasi.

Like I said  earlier all the Ekadasis have special stories to illustrate their importance.

–subham–

Tags- List of Ekadasis, Devotthana , Prabhodini, Sayana, Ekadasi

Diamond hunting in Anantapur, Kurnool regions on in monsoon season (Post.12,097)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 12,097

Date uploaded in London – –  7 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Story lifted from Deccan Chronicle

ANANTAPUR, JUNE 2023: A miracle of every monsoon in the agricultural fields between Guntakal and Pathikonda areas in Anantapur and Kurnool district borders has happened this time, again.

The dry lands have turned out to be spots for the hunting of diamonds and precious stones.

A farmer chanced on a big diamond while he was engaged in farming operations for the kharif season in Basinepalli of Maddikera mandal in the Kurnool district. He sold it to a trader for a price of 2 crore. The revenue and police reportedly have no complaint as the traders formed a syndicate and created a veil of secrecy, reports said.

Rayalaseema had been known for trading precious stones and diamonds during the Vijaynagar Empire. Diamonds were sold like vegetables in the market of Hampi in those days.

Areas in Kurnool and Anantapur districts have been favourite spots for diamond hunters testing their luck during the monsoon season every year.

The dry lands in Tuggali, Jonnagiri, Maddikere in Kurnool and Vajrakarur in Anantapur districts had precious stones appearing in the dry lands during the rainy season for decades.

Sources say a farmer found a big diamond while doing cultivation in Basineapalli village in Maddikera mandal. The professional traders in the area fixed a deal with the farmer and purchased it for 2 cr. This may be the first sighting of a diamond during the present season.

Diamond hunters from various parts of AP and TS have been rushing to these areas to try their luck and make good money.

No research has been conducted on how precious stones appear on the surface of dry lands exclusively during the monsoon period. A mines and geology official stressed the need for research in such areas.

In 2019, a farmer reportedly found a diamond that fetched him 60 lakhs. In 2020, two villagers found two precious stones worth 5 lakhs and 6 lakhs and sold them to local merchants for just 1.5 lakhs and 50,000, respectively.

Last year,  a person who got a stone sold it for 40 lakh. Another person in the Jonnagiri area reportedly found a 30-carat diamond and sold it to a local merchant for 1.2 crore a year ago.

Thousands of people these days leave their daily jobs and move into makeshift tents in diamond-rich villages to test their luck.

However, neither revenue nor police officials have shown any interest in law enforcement. Merchants from local and other parts, with the help of middlemen, have been fixing the deals.

Gooty town in Anantapur district has become a shelter for diamond hunters and rooms in lodges were reportedly booked by many merchants and hunters this season.

–source DECCAN CHRONICLE, JUNE 2023

Also read my old article

Science behind Swayambhu Lingams

tamilandvedas.com

https://tamilandvedas.com › 2012/08/29 › science-beh…

29 Aug 2012 — So we can conclude that Swayambu Lingams come from below the earth by ELF or some forces yet unknown to science.

—Subham—

Tags – diamonds, from fields, Andhra, Kurnool, Anantpur, dimond hunting

ஆந்திரத்தில் நிலத்தில் வைரங்கள் தோன்றும் அதிசயம்; வைர வேட்டை ஆரம்பம் (Post.12,096)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,096

Date uploaded in London – –  7 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

உலகப் புகழ் பெற்ற வைரங்கள் ஆந்திரத்தில் கிடைத்ததை வரலாறு நமக்குச் சொல்கிறது ; இப்பொழுதும் அந்த அதிசயம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் பெரிய வித்தியாசம் என்னவென்றால் முன்காலத்தில் கோட்டைகளிலும் , பூமியைத் தோண்டுகையிலும் மட்டும் கிடைத்தன. இப்பொழுதோ பருவ மழை  வந்துவிட்டால் வயல் காட்டில் வைரங்கள் ஜொலிக்கின்றன; அதிர்ஷ்டம் மிக்க விவசாயிகள் அவற்றை  எடுத்து விற்று ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் ஆகிவிடுகின்றனர் . எப்படி இவ்வாறு நிலத்தின் மேற்பரப்பிற்கு வைரங்கள் வருகின்றன என்று இதுவரை தெரியவில்லை. அது பூமாதேவியின் ரகசியம் போலும்!

அந்தக் காலத்தில் விஜயநகரப் பேரரசுக்கு வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள மன்னர்களின் ரத்தினைக் கற்களை உலகில் எந்த இரத்தின வியாபாரியும் விலை    மதிக்க முடியாது என்று எழுதியுள்ளனர். அது மட்டுமல்ல சந்தைகளில் காய்கறி விற்பது போல வைரக் கற்கள் விற்கப்படுகின்றன என்றும் எழுதியுள்ளனர்.

இப்பொழுது பழங்கதைகளை மறந்துவிட்டு 2023ம் ஆண்டுக்கு வருவோம்; இது இன்று  (7-6-2023) டெக்கான் க்ரானிக்கில் DECCAN CHRONICLE வெளியிட்ட செய்தி:

அனந்தபூர் :-  அனந்தபூர்-கர்னூல் மாவட்டங்களின் எல்லையில் குண்டக்கல்-பத்தி கொண்டா வட்டாரங்களில் பருவமழைக் காலங்களில் ஒரு அதிசயம் நிகழ்கிறது .இது இப்பொழுதும் ஆரம்பமாகிவிட்டது . வைரம் முதலிய ரத்தினக் கற்கள், விவசாய நிலங்களில் தோன்றுகின்றன .

கர்னூல் ஜில்லாவில் மடிக்கெரா மண்டலில் பசினபள்ளி கிராமம்  இருக்கிறது. அங்கு விவசாயி உழும்போது பெரிய வைரக் கல் கிடைத்தது. அது ரகசிய மார்க்கெட்டில் இரண்டு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. வியாபாரிகள் ரகசிய பேரம் செய்வதால் போலீசுக்கோ, ரெவின்யூ துறைக்கோ இதுபற்றி எதுவும் தெரியாது; யாரும் புகாரும் செய்யவில்லை.

விஜய நகர சாம்ராஜ்யத்தில் ராயலசீமை வட்டாரம் வைரம் முதலிய ரத்தினக் கற்களின் விற்பனைக்குப் பெயர் பெற்ற இடமாக விளங்கியது ; அந்த காலத்தில் ஹம்பி (Hampi) நகர மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பது போல வைரங்களும் விற்கப்பட்டன  ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்காலங்களில் துக்களி , ஜொன்ன கிரி , மடிக்கெரா ,(கர்னூல் வட்டாரம்), வஜ்ரகரூர் (அனந்தபூர் வட்டாரம்) ஆகிய கிராமங்களில் காய்ந்து போன நிலத்தில் பருவமழை வந்தவுடன் வைரங்கள் கிடைக்கின்றன. இது நீண்ட காலமாக நடந்து வருகிறது; வைர வேட்டை நடத்துவோர் இந்த வட்டாரத்தை மட்டும் குறிவைக்கின்றனர் .

பசினப்பள்ளி கிராமத்தில் விவசாயி கண்டெடுத்த வைரத்தை கைதேர்ந்த வியாபாரிகள் ரகசியமாக இரண்டு கோடி ரூபாய்க்கு பேரம்பேசி முடித்துவிட்டனர் . ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா வைர வேட்டைக்காரர்கள் ஏற்கனவே இந்தப் பகுதிக்கு வந்து முகாமிட்டுள்ளனர்.

பருவ மழைக்காலத்தில் மட்டும் எப்படி ரத்தினக் கற்கள் வயலின் மேற்புறத்துக்கு வருகின்றன என்று எவரும் ஆராய்ச்சி செய்ததாகத் தெரியவில்லை . பூகர்ப்ப, சுரங்க இயல் நிபுணர் ஒருவரும் இது பற்றி ஆராய்வது அவசியம் என்கிறார்.

2019-ம் ஆண்டில் ஒரு விவசாயி கண்டெடுத்த வைரம் 60 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது

2020-ம் ஆண்டில் 2 விவசாயிகள் கண்டெடுத்த , ஐந்து அல்லது ஆறு லட்ச  ரூபாய் மதிப்புள்ள வைரங்களை ஒன்றரை லட்சத்துக்கும், 50000 ரூபாய்க்கும்  விற்று விட்டனர் .

சென்ற ஆண்டு ஒருவர் தான் கண்டெடுத்த வைரத்தை 40 லட்சம் ரூபாய்க்கு விற்றார் ஜொன்னகிரி  வட்டாரத்தில் 30 காரட் எடையுள்ள வைரத்தை  ஒருவர் 1.2 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டார் .

இப்போது பலரும் தங்கள் நல்ல வேலைகளை விட்டுவிட்டு, வைரம் ஜொலிக்கும் கிராமங்களில் முகாமிட்டுள்ளனர் நாடு முழுதுமுள்ள வியாபாரிகள் இடைத்தரகர்கள் உதவியுடன் பேரம் பேசுகின்றனர் பலரும் நிலத்தில் தற்காலிக முகாம் போட்டுள்ளனர் . அனந்தப்பூர் மாவட்ட கூட்டி (Gooty Town) நகரில் வைர வேட்டைக்காரர்கள் லாட்ஜுகளில் தங்கியுள்ளனர்.

MY OLD ARTICLE

ஸ்வயம்பு லிங்கம் தோன்றுவது உண்மைதான்:–

ஸ்வயம்பூ லிங்கங்கள் தோன்றுவது …

tamilandvedas.com

https://tamilandvedas.com › ஸ்…

30 Aug 2012 — இந்தியாவில் ,குறிப்பாக தமிழ் நாட்டில், பல கோவில்களில் இருக்கும் லிங்கங்களை …

–subham —

Tags- வைர வேட்டை, நிலத்தில் வைரங்கள், ஆந்திரத்தில், அனந்தப்பூர், ராயலசீமை, கர்னூல்

ஏகாதசி விரதம் ஏன்? 3 கதைகள் – Part 2 (Post No.12,095)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,095

Date uploaded in London – –  7 June , 2023                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

பகுதி 1 நேற்று வெளியானது.

இரண்டாவது கதை

சாந்திபூரில் ஒரு கற்றறிந்த பிராமணன் இருந்தான் . அவன் பெயர் தேவ மாலி. ஏராளமான செல்வம் இருந்தும் மகப்பேறு இல்லாத குறை இருந்தது. நீண்ட பிரார்த்தனைக்குப் பின்னர் நாரதர் அவன் முன் தோன்றி, யாக யக்ஞங்கள் செய்தால் குழந்தை  பிறக்கும் என்றார் . அவனும் அப்படியே செய்தான். யாகத் தீயிலிருந்து இரண்டு குழந்தைகள் தோன்றின ஒரு குழந்தைக்கு யக்ஞ மாலி என்றும் இரண்டாவது குழந்தைக்கு சுமாலி என்றும் நாமகரணம் செய்தான். பின்னர் அவன் தன் மனைவியுடன் கானகம் சென்று வானப் பிரஸ்தாச்ரமம் கடைப்பிடித்தான். அங்கு ஒருநாள் ஜானந்தி முனிவர் சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்வதைப் பார்த்து தனக்கும் அருளுரை  வழங்க வேண்டும் என்றும் தான் பார்கவ (பிருகு முனிவர்) குலத்தில் தோன்றியவன் என்றும் சொன்னான் ; அவர் விஷ்ணுவை உபாசிக்கும்படி சொல்லவே அவனும் மனைவியும் அவ்வாறே செய்து வைகுண்டப் பிராப்தி ஆனார்கள் .

இதற்கிடையில்  இரண்டு பிள்ளைகளும் வளர்ந்து திருமணம் முடித்து பிள்ளைபெற்று வாழ்ந்தனர். யக்ஞ மாலி நல்லவனாக வாழ்ந்து தந்தையைப்போலவே விஷ்ணுவை வணங்கி  ஏகாதசி விரதம் கடைப்பிடித்து வாழ்ந்தான்; சுமாலியோவெனில் தவறான வழியில் சென்று கடைந்தெடுத்த, கலப்படமில்லாத அயோக்கியன் என்று பெயர் எடுத்தான் .

அவன் செய்த பெரும் தவறுகளுக்கு எல்லாம் கிராம அதிகாரி தண்டனை கொடுத்தார்; சகோதரன் மீது பரிதாபம் கொண்டு யக்ஞ மாலி அவனைக் காப்பாற்றினான் ; ஆண்டுகள் உருண்டோடின. இருவரும் ஒரே நாள் இறக்கவே, சுமாலியை யமதூதர்கள் அடித்து உதைத்து யமலோகத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள் . அதே நேரத்தில் யக்ஞமாலியை உபசாரங்களுடன் வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார்கள். தனது சகோதரனின் துயரத்தைப் பார்க்கச் சகிக்காத யக்ஞமாலி தனது ஏகாதசி விரத புண்ணியத்தில் ஒரு பகுதியை சகோதரன் சுமாலிக்கு கொடுக்கவே எம தூதர்கள் அவனை விடுவித்தனர் ; இருவரும் வைகுண்டம் ஏகினர். ஏகாதசியின் மகத்துவம் அவ்வளவு மகத்தானது .

Xxx

மூன்றாவது கதை

தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமானது ருக்மாங்கதன் கதை ஆகும். இது நாரத புராணத்தில் உளது.

ருக்மாங்கதன், விதர்ப்ப நாட்டை ஆண்டுவந்த மன்னன் ; அவனுடைய மனைவி பெயர் சந்தியாவலி ; அவர்களுடைய  மகன் பெயர் தர்மா ங்கதன். இந்த மன்னன் ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பதில் கடும் சட்டங்களை போட்டான். நாட்டு மக்களும் ஏகாதசி பட்டினி கிடக்கவேண்டும் அல்லது கடுமையான தண்டனை என்று அறிவித்தான். மன்னன் எவ்வழி குடிகளும் அவ்வழி என்பது பழமொழி. அவர்களும் அப்படியே விரதம் இருந்தனர் ; இதனால் எல்லோருக்கும் வைகுண்டப் பிராப்தி கிடைத்தது. யமலோகத்துக்கு வாடிக்கையாளர் Customers  குறைந்தது; பிசினஸ் Business  இல்லாமல்போன யமன் பிரம்மாவிடம் Complaint கம்பளைண்ட் (புகார்) கொடுத்தான். அவரும் விசாரிக்காமல் யாரையும் தண்டிக்க முடியாது; நானும் அவனை எடைபோட்டு தண்டனை கொடுக்கிறேன் என்றார் .

தேவலோக அப்சரஸை அழைத்து நீ அழகிய பெண்ணாகச் சென்று ருக்மாங்கதனை காதல் வலையில் சிக்க வை; கிட்ட நெருங்கும்போது ஏகாதசி விரத்தைக் கை விட்டால்தான் அது நடக்கும் என்று சொல் என்றார் பிரம்மா .

அவளும் பூமியில் அவதரித்து   மோகினி என்ற பெயரில்  பூலோக ரம்பை என வலம் வந்தாள் ; அவளது காம வலையில் சிக்கிய மன்னன், எட்டு ஆண்டு இன்ப வாழ்வுக்குப் பின்னர், அவளை மணம் முடிக்க எண்ணினான். அவளோ வேண்டும் வரம் எல்லாம் தந்தால் கல்யாணம் கட்டலாம் என்றாள் . மன்னனும் மசிந்தான் . ஒரு ஏகாதசி வந்தபொழுது அதைக் கைவிட  வேண்டும் என்று மன்னனுக்கு மோகினி கட்டளையிட்டாள் ; வேண்டுவன யாவும் தருவேன் விரதத்தைக்  கைவிட முடியாது என்றான் . இருவரும் முதல் மனைவியான சந்தியாவலீயிடம் முறையிட்டனர். அவளும் ஏகாதாசியின் மகத்துவத்தைக் சொன்னாள் . அப்படியானால் உங்கள் மகனை உயிர்ப் பலியாகக்கொடு ; நான் விரதம் பற்றிய விஷயத்தை விடுகிறேன் என்று Condition கண்டிஷன் / நிபந்தனை போட்டாள் . மகன் தர்மாங்கதனும் தந்தையின் ஏகாதசி விரதம் காக்க உயிர்த்தியாகம் செய்யத் தயார் என்றான். ருக்மாங்கதன், அவனை வெட்டுவதற்காக கத்தியை உருவியபோது விஷ்ணுவே அவர்கள் முன்னால் தோன்றி மூவரையும் வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

ஒரு வருடத்தில் குறைந்தது 24 ஏகாதசிக்கள் வரும். ஒவ்வொன்றுக்கும்  ஒரு பெயரும் அதற்கான காரணமோ கதையோ இருக்கும். அவைகளை அடுத்த பகுதியில் காண்போம்.

To be continued…………………………..

Xxx suham xxxxx

tags- ஏகாதசி, மோகினி, சந்தியாவலீ,  தர்மாங்கதன் ருக்மாங்கதன், தேவ மாலி யக்ஞ மாலி ,சுமாலி

மோதிலால்ஜியின் கோபம்! (Post No.12,094)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,094

Date uploaded in London –  June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள்! பாகம் 2 –

அத்தியாயம் 3

ச.நாகராஜன்

மோதிலால்ஜியின் கோபம்!

பட்டாபி சீதாராமையா தனது Feathers and Stones என்ற நூலில் ஏராளமான சுவையான சம்பவங்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். அதில் ஒன்று இது:

பண்டிட் ஜவஹர்லால் நேருவின் தந்தையான மோதிலால்ஜி. ஒரு சமயம்  5000 மைல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு கடைசியாக வியன்னாவிற்குச் சென்றிருந்தார். அவருக்கு ஆஸ்த்மா நோய் பாதிப்பு உண்டு.

வியன்னாவில் ஒரு பிரபல டாக்டரைப் பார்க்க வேண்டுமென்று நினைத்த அவர் அந்த டாக்டரிடம் சென்றார்.

மொழிபெயர்ப்புக்காக ஒரு பெண்மணி அமர்த்தப்பட்டார்.

டாக்டரோ மிகப் பிரபலமானவர். அவர் மோதிலால்ஜி எவ்வளவு சுருக்கமாகத் தனது பிரச்சினையைச் சொல்ல முடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்த்தார்.

மோதிலால்ஜியிடம் சுருக்கமாகச் சொல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

ஆனால் மோதிலால்ஜியோ விவரமாகப் பேசிக் கொண்டிருந்தார். மூன்றாவது முறையாகச் சுருக்கமாகச் சொல்லுமாறு டாக்டர் வற்புறுத்தினார்.

மொழிப் பிரச்சினை வேறு அங்கு இருந்தது. ஒவ்வொன்றையும் அந்தப் பெண்மணி மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டும்.

“என்ன தான் பிரச்சினை? எதனால் இப்படி அவஸ்தைப் படுகிறீர்கள்?” என்று பொறுமை இல்லாமல் டாக்டர் கேட்டார்.

ஏமாற்றத்துடனும், கோபத்துடனும் மோதிலால்ஜி கூறினார்; “நானா? ஒரு பொறுமையற்ற, தகாத ஒரு டாக்டரிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படுகிறேன்” என்றார்.

இதைக் கேட்ட மொழிபெயர்க்கும் பெண்மணி பெரிதாகச் சிரித்து விட்டார்.

டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை.

மோதிலால்ஜி சொன்னதை அப்படியே சொல்ல வேண்டுமென்று டாக்டர் பெண்மணியிடம் வற்புறுத்தினார்.

அந்தப் பெண்மணியும் மோதிலால்ஜி சொன்னதை அப்படியே மொழிபெயர்த்துச் சொல்லி விட்டார்.

அவ்வளவு தான் டாக்டரும் சிரித்து விட்டார். போதுமான நேரத்தைக் கொடுத்து மோதிலால்ஜி சொல்வதைப் பொறுமையாகக் கேட்டார். மருந்தையும் சொல்லி விட்டு, பிறகு கேட்டார் :”நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?” என்று.

மோதிலால் தான் ஒரு வக்கீல் என்று சொன்னார்.

“அதானே, அப்படித்தான் நான் நினைத்தேன்” என்றார் டாக்டர்!

யானையின் ஞாபகசக்தி!

யானையைப் பற்றிய இரு சுவையான நிகழ்ச்சிகளையும் பட்டாபி சீதாராமையா தனது Feathers and Stones புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

முதலாவது சம்பவம்.

ஒரு தையற்காரர் தினமும் தன் கடை வழியே செல்லும் ஒரு யானைக்குக் கொஞ்சம் வெல்லம் கொடுப்பது வழக்கம்.

தினமும் அந்த யானை அந்த தையற்காரர் கடை வந்தவுடன் நின்று விடும். வெல்லத்தை வாங்கிக் கொண்டு தனது தும்பிக்கையை உயர்த்தும். ஒரு நாள் அந்தத் தையற்காரரிடம் வெல்லம் இல்லை.

யானை வந்தது. அவர் இல்லை என்று சொல்லிப் பார்த்தார்.

கொஞ்சலாக போகச் சொன்னார். ஆனால் யானை நகரவில்லை.

உடனே தன் கையிலிருந்த ஊசியால் தும்பிக்கையில் ஒரு சின்ன வருடலைச் செய்தார்.

யானை அகன்றது. மறு நாள் யானை திரும்பி வரும் போது கடையின் முன்னே வந்து நின்றது. தையற்காரரைப் பார்த்தது. அவரும் யானையைப் பார்த்தார்.

யானை தன் தும்பிக்கையை உயர்த்தி குளத்தில் இருந்து தான் விசேஷமாகக் கொண்டு வந்திருந்த சகதியை அவர் தலையில் பொழிந்தது.

ஊசிக் குத்தலுக்கு சகதி அபிஷேகம், சரி தானே!

அடுத்த சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்த ஒன்று.

கோவில் யானைக்கு பழம், தேங்காய், வெல்லம் என இப்படி எதையாவது மக்கள் கொடுப்பது வழக்கம்.

ஒரு நாள் ஒரு பையன் முள் நிறைந்த ஒரு உருண்டையைக் கொடுக்க அந்த யானை அதை வாங்கி விழுங்கியது.

மறு நாள் ஏராளமான கூட்டம் கோவிலில்.

யானை அவ்வளவு கூட்டத்திற்கும் இடையே சென்று அந்தப் பையனைத் தன் துதிக்கையால் தூக்கித் தன் காலில் போட்டு மிதித்தது.

அனைவரும் இதைப் பார்த்துத் திடுக்கிட்டு அலறினர்.

இதே போல் தான் ஒட்டகமும் பழிவாங்கும் குணம் கொண்டதாம்.

பாம்போ தீங்கு செய்வோரை நன்கு நினைவில் இருத்திப் பழி வாங்குமாம்!

***

21 பறவைகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.12,093)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,093

Date uploaded in London – –  6 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

  1 2   3 
       
     4   
     5      
 6     7   
8     9  
  10   11 
    12     
       13     14
 15    16 
         17
    18     19  

ACROSS

3.மஞ்சள் நிற அலகு ; இரட்டையாகப் பறக்கும்

4.நன்றாகப் பாடினால் உங்களை இப்படி அழைப்பார்கள்

4.பாரதிக்குப் பிடித்த பறவை ; செல்லம்மா கடன் வாங்கி வந்த அரிசியையும் அதற்குப்போட்டு வேடிக்கை பார்த்தார்  

6.காட்டுக்குள் போனால் இதன் ‘டொக் டொக்’ சப்தத்தைக் கேட்கலாம்

8.நீர்ப்பறவை ஆனால் கொக்கு அல்ல

11.ஆஸ்திரேலியாவின் சிரிக்கும் பறவை

16. காடை என்ற பறவையுடன் சேர்ந்து பேசப்படும் ; பறவைப் பிரியர்கள் உண்ணுவர்

17.மழைக்காக ஏங்கும் பறவை; மழை நீரையே சாப்பிடும் புராணப்பறவை

19.இது அலறினால் கேட்டது நிகழும் என்ற அச்சம் உண்டு; இரவு நேர பறவை

XXXXXXXXXXXXXXX

DOWN

1.இந்தியாவின் தேசீயப் பறவை

2.குறைந்த காலத்தில் அதிக பணம் தரும் பறவை ; கோழிக்கறிக்கு பதிலாக இதை உண்ணுவர் 

5.பெண்ணின் நடைக்கு ஒப்பிடும் பறவை

7. காத்திருந்து செயல்பட்டால் பலன் கிடைக்கும் என்பதற்கு வள்ளுவரும் மனுவும் ,எடுத்துக்காடாகச் சொன்ன பறவை

9.முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் பயன்படும் நீர்ப்பறவை 

10.காலையில் நம்மை எழுப்பும் பறவை

12.குள்ள வாத்து என்பது மற்றொரு பெயர் 

13.வைக்கோலால் மரங்களில் பெருங்கூடுகள் கட்டி, 3 அல்லது 5 வெளுத்த நீலப்பச்சை முட்டைகளிடும். .வளைந்த கழுத்துள்ள நீர்ப் பறவை

14.பறந்து வந்து மீன்களைக் கொத்தித்தின்னும்

15.கிளியின் மற்றொரு பெயர் 

18. நீண்ட கழுத்துள்ள நீர்ப்பறவை; இதனால் பாம்புடன் ஒப்பிடுவர்.

answers 

ம்ம 1கா 2னா மை 3 
ன யிடை   
ன் ல்யிகு  4ருவி
அ    5    க்  து 
ம 6 ம்கொ   7த்தி
நா8ரை வா 9 த்
ராபாகா10க் கூ 11கொ
தா   12 க்  ன்
த்    13  மீ   14
புத15ரிதா  கெள16 
 ம்   த்ம்  கசா 17
பா     18 தை ந்ஆ  19  

—SUBHAM—

TAGS – பறவைகள் , குறுக்கெழுத்து, கண்டுபிடியுங்கள்

No one can beat Hindus in Fasting– Sir Monier Williams- Part 2 (Post No.12,092)

Raviverma’s Picture of Sandhyavali agreeing to sacrifice her child; from Wikipedia

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,092

Date uploaded in London – –  6 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Part One was posted yesterday.

Part Two

The second story about Ekadasi (pronunciation :EEkaadasi) in the Mahabharata is as follows:

There was brahmin named Devamali in Shantipur. He earned a lot of money through various means but had no issue. When he and his wife were praying for a child, sage Narada appeared before them. He asked them to do a Yajna for a child. When they performed the Yajna two boys emerged from the sacrificial Yajna fire. They were named Yajnamali and Sumali (pronunciation: maali). Yajnamali meant ‘child of sacrifice’; Sumali meant ‘the child of beauty’.

When both of them became youths, both Devamali and his wife settled in an Ashram on the banks of River Narmada. There they met a sage called Jananti. He advised them to repeat the name of Vishnu. They spent their retired life happily and went to Vishnu’s abode after their death.

In the meantime, both Yajna Mali and Sumali got married and had sons. Yajnamali worshipped Vishnu and observed Ekadasi fast, but his brother Sumali squandered all his money upon unworthy objects and ultimately became a scoundrel.  When the village headman punished him severely for his bad deeds, only Yajna Mali saved him. When both died on the same day, Yajna Mali was taken to heaven and Sumali was taken to hell by the attendants of Yama. Pitying his brother, Yajna Mali gave a portion of his merit / punya earned by Ekadasi fast and thus saved Sumali. Both of them went to Vishnu’s abode, Vaikunta.

xxx

Third Story

There is one story in Narada Purana that is popular in South India. The story of King Rukmangada of Vidhisha illustrated the greatness of Ekadasi fast. The king was not only very strict in observing the fast, but also insisted all the citizens in his kingdom must observe Ekadasi fast. Since all the citizens obeyed him, Yama, god of death, lost all his customers in Vidisha. No one came to his abode and all got direct tickets to Vaikunta, abode of Vishnu.

Yama was very much worried and approached Brahma for a solution. Brahma told him that he can’t punish anyone without evidence and so asked Yama to wait for the judgement day. In the meantime, Brahma wanted to test the integrity of King Rukmangada and his wife Sandhyavali. They had a son by name Dharmanagada. All of them were devotees of Vishnu and strict observers of Ekadasi fast.

Brahma sent an apsara named Mohini, woman from Indraloka, to entice Rukmangada (here afterwards abbreviated as Ruk.) and make him skip Ekadasi fast. She came to earth and met Ruk. and he easily fell into her trap. After eight years of this dalliance, she insisted that she would marry him only if he promised to fulfil all her wishes. Ruk. Readily agreed. Just before one Ekadasi fast, she asked him to skip the fast. When the king promised her all the things in the world except his Ekadasi vow, she went to Ruk.’s wife Sandhya and asked to give the head of Dhamangada, so that she would not insist on her demand. Their son Dhamangada was equally interested in the fast and so  agreed to lose his head so that his father Ruk.’s vow was not compromised. When Ruk. raised his sword to cut the head of his son Dharmangada, God Vishnu appeared before them and took them to Vaikunta. That Ekadasi was named Mohini Ekadasi.

 For 24 Ekadasis, there are stories like this or reasons for observing them in a particular way. There is one Nirjala (waterless) Ekadasi, which is observed even without drinking water.

Now I will list the important Ekadasis and why they are called with specific names.

To be continued……………………….

Tags- Ekadasi, Rukmangada, Mohini, Devamali, Yajnamalai, Sumali

ஏகாதசி விரதம் ஏன்? 3 கதைகள் – Part 1 (Post No.12, 091)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,091

Date uploaded in London – –  6 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 வழக்கமான சுவையான உணவை  உண்ணாமல் இறைவனின் நாமத்தைச் சொல்லி, புண்ணியம் சம்பாதிக்கும் காலம் நோன்பு அல்லது விரதம் எனப்படும் . இந்துக்கள் குறைந்தது மாதத்துக்கு இரண்டு முறை இதைச் செய்யவேண்டும் என்று புராண, இதிஹாசங்கள் இயம்புகின்றன . அவை ஏகாதசி எனப்படும் . இதன் தமிழ் மொழிபெயர்ப்பு பதினோறாவது நாள்.

இந்துக்கள் நிலவின் இயக்கத்தைப்  பின்பற்றி ஒவ்வொரு மாதத்தையும் இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்கள் . அமாவாசைக்குப் பின்னர் வரும் 14 நாட்கள் சுக்ல பட்ச இருவாரம் (14 நாள்); அதே போல பெளர்ணமி க்குப்பின்னர் வரும் 14 நாட்கள் கிருஷ்ண பட்ச இருவாரம் (14 நாள்). இந்தக் கணக்குப்படி ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி (11 ஆம் நாள்) வரும். அந்த நாளில் உணவு உண்ணாமல் இறைவனின் பெயரைச் சொன்னால் உடலுறுப்புகளுக்கு ஓய்வும் கிடைக்கும்; ஆரோக்கியமும் பெருகும். ஆண்டவன் பெயரைச் சொல்லுவதால் மன அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது இந்துக்களின் மாபெரும் கண்டுபிடிப்பு.

இதுபற்றி இந்துமதத்தை நன்கு ஆராய்ந்த ஸர் மோனியார் வில்லியம்ஸ் (Sir Monier Williams) சென்ற அறிஞர், உண்ணா விரதம்  இருப்பதில் இந்தியாவில் வாழும் இந்துக்களையோ, முகமதியர்களையோ யாரும் மிஞ்ச முடியாது கிறிஸ்தவர்களில் கத்தோலிக்க, ப்ராட்டஸ்டண்ட் ஆகிய இரு பிரிவினரும் இப்படி விரதம் இருப்பதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது . எந்த ஒரு சாக்கினையும், காரணத்தையும் கண்டுபிடித்து நோன்பு அனுஷ்டித்து விடுவார்கள் இந்துக்கள் என்று எழுதியுள்ளார் .

மஹாத்மா காந்தியும்  ஒரு கட்டுரையில் இதையே சொல்கிறார் :

எனக்கு ஒரு விஷயம் புரியமாட்டேன் என்கிறது; என்னவென்றால் எனக்கு நிறைய ப்ராடண்ஸ்ட் பிரிவு கிறிஸ்தவ நண்பர்கள்  இருக்கிறார்கள்; அவர்களது நட்பை நான் மிகவும் மதித்துப் போற்றுபவன் ; ஆனால் ஒரு உண்மையை நான் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறேன். அவர்களுக்கு உண்ணாவிரதம் , நோன்பு என்பன அறவே பிடிக்கவில்லை ; இது ஏன் என்றே எனக்கு விளங்கவில்லை — இது காந்திஜியின் புலம்பல்.

முஸ்லீம்களையும் மோனியர் வில்லியம்ஸ் சொன்னாலும் அவர்கள் விரதம், நம் கணக்குப்படி விரதமே இல்லை. அவர்கள் ரம்ஜான் / ரமலான் மாதத்தில் இருக்கும் விரதம் பகல் நேரத்தில் உணவு அருந்தக்கூடாது என்பதுதான். மற்ற நேரங்களில் வயிறுபுடைக்க சாப்பிடலாம். பகல் நேரத்தில் சாப்பிட முடியாது என்ற பயத்தினால் அவர்கள் இரவு நேரத்தில் கூடுதலாக உண்ணுவதால் ரமலான் விரதத்துக்குப் பின்னர் அவர்களுடைய எடை அதிகரிப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன . ஆக, இந்துக்கள் விரதத்துக்கும் முஸ்லீம்கள் விரதத்துக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது .

தற்காலத்தில் பெரும்பாலான இந்துக்கள் ஏகாதசி இரதம் இருப்பதில்லை. ஆயினும் சிலர் சோமவார விரதம் , செவ்வாய்க்கிழமை விரதம், சனிக்கிழமை விரதம் என்ற பெயரில்– குறிப்பாகப் பெண்கள் — உண்ணாமல் இருப்பதைக் காணமுடிகிறது .

கட்டிட வேலை செய்யும் குஜராத்தி தொழிலாளர்கள் நாள் முழுதும் வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு ஏகாதசி விரதம் இருப்பதை லண்டனில் கூடக் காண்கிறேன். ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர், சுவாமி நாராயணன் இயக்கத்தினர், இன்றும் ஏகாதசி விஷயத்தில் கண்டிப்பு காட்டுகின்றனர் ; வெங்காயம், உள்ளிப் பூண்டு இவைகளைக் கலக்காமலேயே தினமும் சுவையான உணவுகளையும் சமைக்கிறார்கள்.  ஏகாதசி நாட்களில் வயதுக்கு ஏற்ப உப்பு, புளி , மிளகாய் ருசி இல்லாத கஞ்சி குடிப்பதையும் பால் பழம் மாட்டும் சாப்பிடுவதையும் பலர் கடைப்பிடிக்கின்றனர் ; ஆனால் இறைவன் பெயர் நினைவில் இருப்பதுதான் முக்கியம்.

காந்திஜி கூட ஜன்மாஷ்டமி (கிருஷ்ணன் பிறந்த நாள்) விரதக்காரர் களைக் கிண்டல் செய்கிறார்; அவர்கள் கிருஷ்ணன் பெயரைச் சொல்லாமல் பொழுதைக் கழிக்க அன்று சூதாட்டம் விளையாடுவதை அவர் குறிப்பிடுகிறார் .

இந்துக்கள் நிர்ஜல ஏகாதசி அன்று தண்ணீர் (ஜலம் ) கூடக் குடிக்காமல் இருக்கின்றனர். இலங்கை இந்துக்கள் ஸ்கந்த சஷ்டி விரத காலத்தில் இவ்வாறு கடும் விரதம் இருப்பதையும் இங்கே குறிப்பிடுதல் பொருத்தம் .

இப்பொழுது ஏகாதசி பெருமையை விளக்கும் முதல் கதையை மஹாபாரத்திலிருந்து காண்போம்

முதல் கதை

காலவ முனிவரின் மகன் பத்ரசிலா அவருக்கு சின்ன வயது முதலே 

விஷ்ணுவின்  மேல் அபார பக்தி. இதனால் வேத அத்யயனம், சமிதாதானம், யாக, யக்ஞங்களைக் கூட செய்யவில்லை. ஆனால்  ஏகாதசி  விரதம் போன்ற உண்ணாவிரதங்களைக்  கடைப்பைடித்தார்; ஒருநாள்  அவரை தந்தை அழைத்தார் . மகனே! உன் உடம்பை ஏன் இப்படி பட்டினி கிடந்து வாட்டிக்கொள்கிறாய்?  இட்லியும் தோசையும் பொங்கலும் வடையும் சப்பாத்தியும்(Dhal) தால் – உம் சாப்பிட்டு அனுபவிக்க வேண்டிய காலத்தில் ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்டார்.

பத்ரசிலாவவும் தயங்கமால் பதில் சொன்னார். “அப்பா, ஏகாதசி விரதத்தின் மஹிமை மிகப்பெரியது. அதனால் கிடைக்கும் பலன்கள் எல்லையற்றவை; கங்கு கரையற்ற மஹாசமுத்திரம் போனற அளவுக்கு புண்ணியம் கிடைக்கும் வானத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிக மானது அது . இந்த விரதத்தால்  நான் பூர்வ ஜன்மத்தையும் அறிவேன் . அப்போது நடந்த கதையைக் கேளுங்கள்” .

“முன் ஜென்மத்தில் நான் சந்திர குலத்தில் உதித்த அரசன். அப்போது என்பெயர் தர்ம கீர்த்தி . நான் அப்போது செய்யாத பாவமில்லை ; பாவத்தின் மூட்டை நான்; ஆட்சியிலோ கொடுங்கோலன். அப்படி திமிரு பிடித்து ஆண்ட காலத்தில் ஒரு நாள் பரிவார சேனையுடன் வேட்டைக்குச் சென்றேன். அழகான கொழு  கொழு  மான் ஒன்றைக் கண்டேன். வீரர்களே இது தப்பி விடாமல் போக வளையம் போல் இதைக் காத்து நில்லுங்கள் என்று சொல்லி முடிப்பதற்குள் நான் காவலாக நின்ற பகுதியிலேயே அது தப்பித்து ஓடிவிட்டது. அம்பை விட்டு எறிந்தேன் ; பயனில்லை; விடேன் தொடேன் என்று நான் மட்டும் குதிரையில் காற்று வேகத்தில் பறந்தேன் ; மான் கிடைக்கவில்லை; இதற்குள் இரவு நெருங்கவே மரத்தடியில் படுத்தேன். இதற்குள் களைப்படைந்த என் குதிரை மலையிலிருந்து உருண்டு செத்தது. நான் படுத்ததுதான் தெரியும். என் உயிர்போனது கூடத் தெரியாது. எம கிங்கரர்கள் என்னைப் பிடித்து எமன் முன் நிறுத்தியபோதுதான் என்ன நடந்தது என்பதே புரிந்தது . நான் நடுங்கி நடுங்கி ஒவ்வொரு நொடியும் மீண்டும் மீண்டும் செத்துக் கொண்டிருந்தேன் ஆனால் என்ன வியப்பு! என் உயிரை ஏன் தவறாக எமலோகத்துக்குக் கொண்டுவந்தீர்கள்? என்று தனது வேலைக்காரகளைத் திட்டி வசைமாரி பொழிந்தார் எமதர்மன் .

இந்த ஆள் ஏகாதசியில் அல்லவா இறந்தான் ? அதுவும் நாள் முழுதும் சாப்பிடாமல் அல்லவா இறந்தான் ? அது ஏகாதசி விரதம் இருந்ததற்குச் சமம்; இது தெரியாதா ? உடனே இவரை வைகுண்டத்துக்கு அழைத்துக் செல்லுங்கள் என்று கடிந்து, என் அருகே வந்து சல்யூட் Salute  போட்டு மரியாதையுடன் என்னை வழி அனுப்பினார். இதெல்லாம் ஏகாதசியின் பெருமை, மஹிமை அல்லவா ?

இதைக்கேட்டவுடன் தந்தையான காலவ முனிவரும் விஷ்ணு பக்தராக மாறி மாதம் இரு முறை ஏகாதசி  விரதம் இருக்கத் துவங்கினார்..

மஹா பாரதத்தில் மேலும் ஒரு கதையும், நாரத புராணத்தில் ஒரு கதையும் இருக்கிறது. அதையும் கேளுங்கள் . தொடரும் …………………………………………..

TAGS – ஏகாதசி விரதம்,  ஏன்?, 3 கதைகள், காலவ முனி, பத்ரசிலா