புலவரின் தாயார் முதுகில் ஏறிய புலவர்! (Post No.11,989)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,989

Date uploaded in London –   11 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

கொங்குமண்டல சதகம் பாடல் 51

புலவரின் தாயார் முதுகில் ஏறிய புலவர்! கொங்கு நாட்டின் மீது தொண்டை நாடு செய்த சோதனை!

ச.நாகராஜன்

ஆணூர் என்ற ஊர் கொங்குமண்டலத்தில் பிரசித்தி பெற்ற ஒரு ஊர். இது நொய்யல் நதிக்கரையை அடுத்து இருக்கும் ஊர். இதனையொட்டி நத்தக் காரையூர், பழையகோட்டை என்னும் ஊர்கள் உள்ளன.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியை ஆண்டவர்கள் தமிழுக்கெனில் தம் உயிரையும் கொடுப்பர்.

இந்த நொய்யல் நதி வளப்பத்தில் சிறந்த காங்கேய நாட்டு ஆணூரில் சர்க்கரையாரது சமஸ்தானத்தில் ஒரு புலவர் வாழ்ந்து வந்தார்.

அவர் ஒரு சமயம் தக்க சன்மானம் பெரும் பொருட்டு தொண்டை நாடு சென்று எல்லப்பன் என்பவரை நாடித் தன் திறமையைக் காட்டவே அவர் மிகவும் மகிழ்ந்து தகுந்த வரிசையை அளிக்க முன் வந்தார்.

ஆனால் அந்தக் கொடையைப் பெற வலது கையை நீட்டாமல் தனது இடது கையை நீட்டினார் புலவர்.

எல்லப்பன் புலவரை நோக்கி, “ என்ன புலவர் நீர்? சன்மானம் பெறும் முறை கூட உமக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.

அதற்குப் புலவர், “சீமானே! அதை நன்றாக நான் அறிவேன். ஆனால், அமர்ந்த பொறையும், தமிழ் அறிவும், ஈகைக் குணமும் ஒருங்கே நிறைந்துள்ள சர்க்கரையாரின் சமூகத்தில் வாங்கிப் பழக்கப்பட்ட இந்த வலது கை பிறரிடத்து ஒரு போதும் நீட்டுவதில்லை என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. ஆகவே தான் இங்கு இடக்கையை நீட்டினேன். ஆகவே கோபம் கொள்ள வேண்டாம்” என்று பணிவுடன் கூறினார்.

இதைக் கேட்ட எல்லப்பன் எல்லையற்ற வியப்பை அடைந்தார்.

“அப்படியா? இதை அறிந்து நான் மிகவும் மகிழ்கிறேன். அப்படிப்பட்ட உதாரகுணம் கொண்ட சர்க்கரையாரை நாமே சோதிக்க ஆவல் கொண்டுள்ளோம். அந்தச் சோதனை முடியும் வரை நீர் எனது விருந்தாளியாக இங்கேயே தங்கி இரும்” என்றார் எல்லப்பர்.

தனது சமஸ்தானத்துப் புலவர்கள் சிலரை அழைத்த எல்லப்பர், “நேராக சர்க்கரையரிடம் செல்க; அவரது குணநலன்களை அறிந்து வருக” என்று கட்டளையிட்டார்.

புலவர்கள் சிலரும் கொங்கு நாட்டை அடைந்து சர்க்கரையாரின் சமஸ்தானத்திற்கு வந்தனர்.

அங்கே சர்க்கரையார் வளர்த்திருந்த அருமையான பூந்தோட்டத்திற்குள் நுழைந்தனர். அழகுற வளர்ந்திருந்த மலர்ச் செடிகளையும், கொடிகளையும் தாறுமாறாக வெட்டினர்.

இதைக் கண்ட தோட்டக் காவலாளர் ஓடோடிச் சென்று சர்க்கரையாரிடம் நடப்பதைக் கூறினார்.

இதைக் கேள்வியுற்ற சர்க்கரை மன்றாடியார், “அவர்கள் புலவர்கள் என்றால் அவர்களைத் துன்பப் படுத்தாது இன்சொல் கூறி வரவேற்று என்னிடம் அழைத்து வா” என்று காவலாளியிடம் சொன்னார்.

அவரும் அப்படியே இன்சொல் கூறிப் புலவர்களை அழைத்து வந்தார்.

புலவர்களை வரவெற்ற சர்க்கரையார், “ பெருந்தமிழ்ப் புலவீர்! பூஞ்செடிகள் ஓவ்வாதனவாயின் அவற்றை ஏவலாளரை விட்டு வெட்டுவிக்கலாமே! கற்கள் பதிக்கப்பட்ட கணையாழிகளையும், கனக தோடாக்களையும் அணிந்து கொண்டு புராண இதிஹாஸங்களைத் தொடும் தொழிலை மட்டும் கொண்டிருக்கும் தங்களின் திருக்கரங்கள் இப்படி கடினமான கோடாரி, அரிவாள் ஆகிய ஆயுதங்களைத் தொட்டு வருந்தலாமோ, கைகள் வலிக்குமே” என்று கூறி அவர்களின்  கைகளைத் தடவி விட்டு அதில் தைலம் பூசி வெந்நீர் ஆட்டுவித்தார்.

புலவர்கள் அத்தோடு நில்லாமல் மேலும் அவரைச் சோதிக்கக் கருதினர்.

ஒரு புலவர் அருமையாக விருந்து படைக்கப்பட்ட சமயத்தில் சர்க்கரையாரின் அன்னையார் அதைப்  பரிமாற வந்தபோது அவர் முதுகின் மீது திடீரென்று ஏறினார்.

திடுக்கிட்ட அன்னையார் தன்  மகனை நோக்கினார்.

சர்க்கரையார் தன் அன்னையாரைப் பார்த்து, “அன்னையே! அந்தி பகல் சிரமம் கருதாது தொந்தி சரிய என்னைப் பத்து மாதம் சுமந்தவர் தானே தாங்கள்! இப்புலவரைச் சிறிது நேரம் சுமக்கலாகாதா?” என்று வினவினார்.

இதைக் கேட்ட புலவர் சட்டென கீழிறங்கினார்.

சர்க்கரையாரையும் அவரது அன்னையாரையும் நன்கு பலவாறு புகழ்ந்து வணங்கினார்.

“தங்களின் அன்பையும் பெருகிய ஆதரவையும் புலவர் மக்களுக்கு அளித்து வந்தமைக்காகவே அதன் உண்மைத் தன்மையை அறியக் கருதி இந்தத் தகாத சோதனையைச் செய்தோம். எங்கள் குற்றத்தைப் பொறுத்தருள்க. நாங்கள் தொண்டை நாட்டுப் பெரும் வள்ளலாகிய குன்றை எல்லப்பன் என்பாரது சமஸ்தானப் புலவர்கள்” என்றார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த சர்க்கரையார், “தொண்டை நாட்டாரின் சோதனைகளுக்குக் கொங்கு நாட்டார் ஆற்றவல்லரோ” என்று பதிலை அளித்தார்.

அவர்களுக்குத் தக்க சன்மானம் அளித்துக் கௌரவித்தார்.

நேரடியாக எல்லப்பரிடம் சென்ற புலவர்கள்,

“செங்குன்றை யெல்லாநின் செங்கைக் கொடையதனுக்

கெங்கெங்குந் தேடி யிணை காணேங் – கொங்கதனிற்

சர்க்கரையைப் பாடலாந் தண்டமிழ்க் கொன் றீயாத

எக்கரையாம் பாடோ மினி”

என்ற அழகிய வெண்பாவைக் கூறினர்.

சர்க்கரையாரிடம் சென்றது முதல் அங்கு நடந்தது அனைத்தையும் புலவர் பெருமக்கள் எல்லப்பருக்கு விளக்க அவர் வியந்து மகிழ்ந்தார்.

தனது விருந்தினராக உள்ள கொங்கு நாட்டுப் புலவரை எல்லப்பர் அழைத்து, “நீர் சர்க்கரையாரைப் பற்றிக் கூறியதனைத்தும் உண்மையே” என்று கூறி அவருக்கு வேண்டிய பொருள் அளித்து விடை கொடுத்தார்.

நல்லதம்பி சர்க்கரை காதல் என்னும் நூல்,

“அன்னை வெரிந் மேற்கொளச்சே யானனத்தை நோக்குதலும்

என்னை யீரைந்து திங்க லின்பாய்ச் சுமந்தீரே

இவரை யொருநிமிட மே சுமப்பீர் என்றுரைத்த”

என்று இவ்வாறு சர்க்கரையாரின் தாயார் புலவரைச் சுமந்த வரலாற்றை எடுத்துரைக்கிறது.

எல்லப்பரைப் பற்றிய பாடல்கள் பல உண்டு.

புறவோ டுடற்றிசை போக்கிய வேந்தன் புரிந்ததினு

மறவோ கொடிது கொடிது கண் டீரற னன்று மற்றுப்

பிறவோ மறுத்துரை செய்யான் மிகச்சிரம் பேர்த்துவைத்த

மறவோனைத் தாங்கிய வையமன் றோதொண்டை மண்டலமே

தலையிந் தாவெனு மைந்தா தாலோ தாலேலோ

தண் குன்றைப்பதியெல்லா தாலோ தாலேலோ

ஆலெங்கே யங்கே யரும்பறவை யாற்றுயிலு

மாலெங்கே யங்கே மலர்மடந்தை – சோலை தோறுஞ்

செங்கே தகைமணக்குஞ் செங்குன்றை யெல்லனெங்கே

யங்கே யிரவலரெல் லாம்

எல்லப்பன் எங்கே, அங்கே அனைத்து இரவலரும் கூடி இருப்பர் என்று இப்படிப் புகழ் பெற்றவர் எல்லப்பர்.

இப்படிப்பட்ட அருமையான சர்க்கரையாரையும் அவர் தாயாரையும் கொண்டது கொங்கு மண்டலமே என கொங்குமண்டல சதகம் பாடல் 51இல் கூறிப் பெருமைப் படுகிறது.

பாடல் இதோ:

திருத்து புகழ்பெறு மாணூரிற் சர்க்கரை செந்தமிழோன்

விருத்தமுட னன்னை மேலேறத் தாய் வெகு ளாமலெனைப்

பொருத்த முடன்பத்து மாதஞ் சுமந்து பொறையுயிர்த்தாய்

வருத்த மிதிலென்ன வென்றா னவன்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள்

பெருகிய புகழ் பெற்ற ஆணூர்ச் சர்க்கரை என்பானின் தாயார் அன்னம் பரிமாற, உணவருந்தும் புலவோர்களில் ஒருவர் அவ்வன்னையின் முதுகில் ஏறினார். இக்கொடிய செய்கைக்கு ஆற்றாத தாய் தன் பிள்ளையின் முகத்தை நோக்க, அந்தப் பிள்ளை, “அம்மா! என்னை பத்து மாதம் சுமந்திருந்த தாங்கள், இப்புலவரைச் சிறிது நேரம் சுமக்கலாகாதா? எனக் கூறினார். அப்படிப்பட்ட சர்க்கரை என்பானும் கொங்குமண்டலமே தான்.

அருமையான இந்த வரலாறு தமிழ்ப் புலவர்கள் மீது வள்ளல்கள் எவ்வளவு மதிப்புக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குகிறது அல்லவா?!

***

Kill the Street Dogs and Lunatic Men-  Mahatma Gandhi (Post No.11,988)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,988

Date uploaded in London – –  10, May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Mahatma Gandhi wanted stray dogs and farm raiding monkeys to be killed. He even earned the wrath of animal lovers for killing the sick calf in his Ashram. He argued that is not Himsa.

Here is one article from his magazine:

The dog is a faithful companion. There are numerous instances of the faithfulness of dogs and horses. But that means we should keep them and treat them with respect as we do our companions and not allow them to roam about. By aggravating the evil of stray dogs we shall not be acquitting ourselves of our duty to them. But if we regard the existence of stray dogs as a shame to us, and therefore refuse to feed them, we shall be doing the dogs as a class real service and make them happy.

What then a humane man do for stray dogs? He should set apart a portion of his income and send it on to a society for the protection of those animals if there be one.  If such a society is impossible- and I know it is very difficult even if it is not impossible- he should try to own one or more dogs. If he cannot do so, he should give up worrying about the question of dogs and direct his humanity towards the service of other animals.

“But you are asking us to destroy them?” is the question angrily or lovingly asked by others. Now, I have not suggested the extirpation of dogs as an absolute duty. I have suggested the killing of some dogs as a ‘duty in distress’ and under certain circumstances. When the State does not care for stray dogs, nor does the Mahajan (general public) and one is not prepared to take care of them oneself, then, and if one regards them as a danger to society, he should kill them and relieve them from lingering death. This is bitter dose, I agree. But it is my innermost conviction that true love and compassion consist in taking it.

Terrorist Osama Bin Laden was killed  illegally by President Obama in another country

Taking life may be a duty. Let us consider this position.

We do destroy life as much as we think it is necessary for sustaining the body. Thus for food we take life, vegetable and other, and for health we destroy mosquitoes and the like by the use of disinfectants etc. and we do not think we are guilty of irreligion in doing so.

This is as regards one’s own self. But for the sake of others, i.e. for the benefit of the species we kill carnivorous beasts. When lions and tigers pester their villages, the villagers regard it a duty to kill them or have them killed.

Kill bad men also!

Even manslaughter  may be necessary in certain cases. Suppose a man runs amuck and goes furiously about sword in hand and killing anyone that comes his way, and no one dares to capture him alive. Anyone who despatches this lunatic will earn the gratitude of the community and be regarded as a benevolent man.

From the point of view of Ahimsa (non-violence)  it is the plain duty of everyone to kill such a man. There is indeed one exception if it can be so called. The yogi who can subdue the fury of this dangerous man my not kill him. But we are not here dealing with beings who have almost reached perfection; we are considering the duty of a society of ordinary erring human beings.

The fact that Ahimsa does not simply mean non-killing. Himsa means causing pain to or killing any life out of anger, or from a selfish purpose, or with intention of injuring  it. Refraining from so doing is Ahimsa.

Young India 4-11-1926

–subham—

Tags – Ahimsa, Stray dogs, killing lunatics

இந்து மதத்தில் தாழம்பூ, வெட்டிவேர் கதை (Post No.11,987)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,987

Date uploaded in London – –  10, May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

தாழம்பூவை ஏன் பயன்படுத்தக் கூடாது? என்ற கதை பெரும்பாலோருக்குத் தெரிந்ததுதான்.

தத்தாத்ரேய த்ரிபுர ரஹஸ்யத்தில் உள்ள கதை :–

பிரம்மாவுக்கு முதலில் ஐந்து தலைகள் இருந்தன. அப்போது பிரம்மா விஷ்ணு இருவரிடையேயும் யார் பெரியவர் என்ற போட்டி இருந்தது . அந்த நேரத்தில் சிவபெருமான் பெரும் ஜோதியாகத் தோன்றினார். பிரம்மாவும் விஷ்ணுவும் இது என்ன ஜோதி என்று வியந்தனர். சரி இதன் அடி, முடி இரண்டையும் கண்டுபிடிப்போம். யார் முதலில் கண்டுபிடிக்கிறாரோ அவரே பெரியவர் என்று முடிவு செய்தனர்.. உடனே விஷ்ணு ஒரு பன்றியின் வடிவம் எடுத்து பூமியைத் தோண்டிச் சென்றார். அந்த ஜோதியின் முடிவைக் காண்பது அவரது நோக்கம். அதே நேரத்தில் பிரம்மா, ஒரு அன்னத்தின் வடிவம் எடுத்து மேல் நோக்கிப் பறந்தார். விஷ்ணுவால் ஜோதியின் முடிவைக் கண்டு பிடிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார். பிரம்மாவாலும் ஜோதியின் மேல்பாகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு தாழம்பூ (screw pine flower or Pandanus )  வானத்திலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது.

எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மா கேட்டார்.எனக்குத் தெரியாது என்றது . சிவனின் தலையிலிருந்து வருவதாக  பொய் சாட்சியம் சொல்லு என்று அழைத்துச் சென்றார் பிரம்மா . இருவரும் சிவனிடம் சென்றனர். சிவனின் ஜோதி வடிவின் முடியைக் கண்டுவிட்டதாக பிரம்மா சொல்லி, அதற்கு சாட்சியம் தாழம்பூ என்று சொல்ல, சிவனுக்கு மஹா கோபம் எற்பட்டது  பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார் . தாழம்பூவை எவரும் பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் போட்டார் . பிரம்மாவுக்குக் கோவில் எழுப்பக் கூடாது என்று தடையும் போட்டார் .

இப்போதும் இந்துக்கள் பூஜையில் இதைப் பயன்படுத்துவதில்லை. அதேபோல பிரம்மாவுக்கும் அதிக கோவில்கள் இல்லை .

தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், சின்னப் பெண்களுக்குப் பின்னல் பின்னி தாழம்பூவை கட்டி , அதைக் கண்டு மகிழ்கிறார்கள்.

Xxxx

வெட்டிவேரின் கதை (குச என்னும் புல்)

வங்காளத்தில் கஸ் சஷ்டி என்னும் விழா பெளஸ மாத சுக்ல பக்ஷ ஆறாம் நாள் (சஷ்டி) கொண்டாடப்படுகிறது .

அப்போது கஸ் என்று வங்காளிகள் சொல்லும் குச புல்  வழிபடப்படுகிறது. சஷ்டி என்னும் தேவதையை அந்தப் புல்லின் அம்சமாகக் கருதுகின்றனர். தமிழில் அதை வெட்டிவேர் என்று சொல்கிறோம் (Khas or Khus அல்லது Andropogon muricatus)  . சஷ்டி தேவதை குழந்தைகளுக்கு பாதுகாப்பு தருபவள்.

இந்த கஸ் சஷ்டி பற்றி வங்காளத்தில் வழங்கும் கதை பின் வருமாறு:-

ஒரு மாமியாருக்கு அடங்காத ஒரு நாட்டுப்பெண் (மருமகள்) வந்து வாய்த்தாள். கடவுளுக்குப் படைப்பதற்காக செய்யப்பட பிரசாதங்களைக்கூட , நைவேத்த்யம் செய்யும் முன்பாகவே உண்டு விடுவாள். . அவளுக்குப் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் இறந்துபோயின. இதற்குக் காரணம், மருமகளின் தெய்வ நிந்தனையே என்று மாமியார் கருதினார்.. எப்படியாவது அவளை சஷ்டி விரதம் அனுஷ்டிக்க வைக்கவேண்டும் என்று மாமியார் கருதினாள் .

நிறைய அழுக்குத் துணிகளை மூட்டை கட்டி, ஆற்றங்கரைக்குச் சென்று துவைத்துக் கொண்டுவா என்று அனுப்பினாள் . மருமகளும் துணி மூட்டையை சுமந்து கொண்டு நதிக்கரைக்குச் சென்று நாள் முழுதும் துவைத்தாள் ; சாப்பிடக்கூட நேரமில்லை. அவ்வளவு துணிகள்.

அவள் மாலையில் வீடு திரும்புவதற்குள்  சஷ்டி தேவதை பூஜைக்கான  ஏற்பாடுகளை மாமியார் செய்து முடித்தாள் . மண்ணை எடுத்து, குளம் போல நடுவில் குழி தோண்டி கரைப்பகுதியில் வெட்டிவேரின் புல்லை நட்டு நாள் முழுதும் விரதம் இருப்பது வழக்கம். மாமியாரும் அவ்வாறே செய்து , பிராமண புரோகிதரையும் அழைத்து, மேள தாளம் கொட்ட ஏற்பாடு செய்தார்  மருமகளுக்குப் பிடித்த தின்பண்டங்களை நைவேத்யத்த்துக்கு தயாரித்தாள் .

மாலையில் வீடு திரும்பிய மரு மகளுக்கு அதிசயம் கார்த்திருந்தது . அவள், நாள் முழுதும் சாப்பிடாமல் இருந்தது விரதம் போல ஆயிற்று. மாமியாரின் திட்டமும் வெற்றி பெற்றது. அவளுக்கும் தெய்வ பக்தி ஏற்படவே, பின்னால் பிறந்த குழந்தைகள் எல்லாம், நீண்ட ஆயுளுடன் வாழ் ந்தார்கள் . அதிலிருந்து இந்த குச புல் (வெட்டிவேர்) விரதம் பரவியது .

-subham—

Tags- குச, கஸ் , சஷ்டி, தேவதை, வெட்டிவேர், தாழம்பூ , பிரம்மா, விஷ்ணு, சிவன்

சரணாகதி அடைந்த விபீஷணரிடம் ஶ்ரீ ராமர் செய்த ப்ரதிக்ஞை! (Post No.11,986)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,986

Date uploaded in London –   May 10, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயண வழிகாட்டி!

சரணாகதி அடைந்த விபீஷணரிடம் ஶ்ரீ ராமர் செய்த ப்ரதிக்ஞை!

ச.நாகராஜன்

வால்மீகி ராமாயணத்தில் 7 பிரதிக்ஞைகள் இடம் பெறுகின்றன.

அவற்றில் ஆறு ப்ரதிக்ஞைகளை இது வரை பார்த்தோம்.

கடைசியில் ஏழாவது ப்ரதிக்ஞையை இங்கு பார்க்கலாம்.

யுத்த காண்டத்தில் 19வது ஸர்க்கத்தில் இடம் பெறுவது இது.

விபீஷணர் ராமரிடம் சரணாகதி அடைகிறார்.

உடனே ஶ்ரீ ராமர் கூறுவது இது:

அஹம் ஹத்வா தசக்ரீவம் சப்ரஹஸ்தம் சபாந்த்வம் |

ராஜானம் த்வாம் கரிஷ்யாமி சத்யமேதத்ப்ரவீமி தே ||

                                          ஸ்லோகம் 21

அஹம் – நான்

தசக்ரீவம் – தசக்ரீவனை

சப்ரஹஸ்தம் – பிரஹஸ்தனுடனும்

சபாந்த்வம் – பந்துக்களுடனும்

ஹத்வா – கொன்று

த்வாம் – உன்னை

ராஜானம் – மன்னனாக

கரிஷ்யாமி – ஆக்கப் போகிறேன்

ஏதத் – இதை

தே – உனக்கு

சத்யம் – சத்தியமாக

ப்ரவீமி – சொல்லுகிறேன்

ரஸாதலம் வா ப்ரவிஷேத்பாதாளம் வாபி ராவண: |

பிதாமஹசகாஷம் வா ந மே ஜீவன்விமோக்ஷ்யதே ||

                                ஸ்லோகம் 22

ராவண: – ராவணன்

ரஸாதலம் வா – ரஸாதலத்திற்குத் தானாகட்டும்

பாதாளம் வா – பாதாளத்திற்குத் தானாகட்டும்

பிதமஹ சகாஷம் வா – பிரம்மதேவரின் சந்நிதிக்குத் தானாகட்டும்

ப்ரவிஷேத் அபி – (எங்கு) சென்றாலும்

ஜீவன் – உயிருடன்

மே – எனக்கு

விமோக்ஷயதே ந – தப்ப மாட்டான்

அஹத்வா ராவணம் சங்க்யே சபுத்ரபலபாந்த்வம் |

அயோத்யாம் ந ப்ரவேக்ஷயாமி த்ரிபிஸ்தைர்ப்ராத்ருபி: ஷபே ||

                                           ஸ்லோகம் 23

சங்க்யே – போரில்

ராவணம் – ராவணனை

சபுத்ரபல பாந்த்வம் – புத்திரர்களுடனும், சேனைகளுடனும், பந்துக்களுடனும்

அஹத்வா – கொல்லாது

அயோத்யாம் – அயோத்தி மாநகருக்குள்

ப்ரவேக்ஷ்யாமி ந – புகப் போவதில்லை

தை:- அந்த

த்ரிபி – மூன்று

ப்ராத்ருபி: – தம்பிமார்களின் மீது

ஷபே – ஆணையிட்டுச் சொல்கிறேன்

ஶ்ரீ ராமர் வீண் சொல்லை ஒரு போதும் சொல்பவர் அல்லர். தன்னை சரணாகதி அடைந்த விபீஷணரிடம் இப்படி பிரதிக்ஞையை ராமர் செய்கிறார்.

அத்துடன் மட்டுமல்ல, விபீஷணர் அரக்கர்களின் அழிவு விஷயத்தில் தம்மால் இயன்றதைச் செய்வதாக உடனே உறுதி அளித்ததால் பெரிதும் மகிழ்ந்த ராமர், லக்ஷ்மணரிடம் , “சமுத்திரத்திலிருந்து தீர்த்தத்தைக் கொண்டு வருவாயாக! அதைக் கொண்டே அரக்கர்களின் மன்னனாக விபீஷணனை இப்போதே அபிஷேகம் செய்து வைப்பாயாக” என்று கூறுகிறார்.

அந்த ஆணையை சிரமேற்கொண்ட லக்ஷ்மணர் அப்படியே  வானரர்களுக்கு மத்தியில் விபீஷணருக்கு மன்னராக அபிஷேகம் செய்து வைக்கிறார்.

ஒரு நொடியில் ராமரது அனுக்ரஹத்தைப் பார்த்த வானரர்கள் வியப்பு மேலிட ‘நன்று நன்று’ என்று கோஷமிடுகின்றனர்.

இறைவனின் அனுக்ரஹம் ஒரு கணத்தில் கிடைக்கும் என்பதை இந்த விபீஷணருக்கு கிடைத்த அனுக்ரஹம் புலப்படுத்துகிறது.

இது வரை இராமாயணத்தில் வந்த 7 பிரதிக்ஞைகளைப் பார்த்தோம்:

1) ஶ்ரீ ராமர் லக்ஷ்மணரிடம் செய்த பிரதிக்ஞை

(சீதையை குகையில் பத்திரமாகக் கூட்டிக் கொண்டு செல் என்று சொல்வது)

2) சீதை அக்னியில் ப்ரவேசிக்கும் போது செய்யும் பிரதிக்ஞை

3) ஶ்ரீ ராமர் விபீஷணர் சரணாகதி அடையும் போது செய்யும் பிரதிக்ஞை

4) இந்திரஜித்தை வதம் செய்யும் போது லக்ஷ்மணர் செய்யும் பிரதிக்ஞை

5) ஶ்ரீ ராமர் சீதையின் பதிவிரதைத் தன்மையின் மீது பூரண நம்பிக்கை வைத்து செய்யும் பிரதிக்ஞை

6) சீதையின் பதிவிரதா தர்மம் பற்றி வால்மீகி முனிவர் செய்யும் பிரதிக்ஞை

7) சீதை தனது சுத்த பதிவிரதா தர்மத்தைப் பற்றிச் செய்யும் பிரதிக்ஞை

இதைச் செய்தவுடன் பூமி பிளக்கிறது. ஒரு சிம்மாசனம் வெளிப்பட்டு அவளை ஏந்திச் செல்கிறது.

ஆக உலகில் எந்தக் காவியத்திலும் இல்லாதபடி அபூர்வமான பிரதிக்ஞைகள் இப்படி வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி மஹரிஷியால் சித்தரிக்கப்படுகிறது.

இராமாயணம் படிப்போம்; உயர்வோம்!

ஜெய் ஶ்ரீ ராம்!  சீதா மாதா கீ ஜெய்!

***

Story of Screw pine (தாழம்பூ) flower and Bena Grass (வெட்டிவேர்) (Post No.11,985)

Story of Screw pine (தாழம்பூ) flower and Bena Grass (வெட்டிவேர்) (Post No.11,985)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,985

Date uploaded in London – –  May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Story of Screw pine (தாழம்பூ) flower and Bena Grass (வெட்டிவேர்)

“Brahma originally had five heads. He and Vishnu were once contesting each other’s superiority. Just then a huge column of light appeared in front of them and they wondered what it was. They agreed that he who found either end of the column earlier would be the greater of the two. Vishnu became a boar and sought the bottom; Brahma became a swan and flew up towards the top. Vishnu returned disappointed. Brahma at the point of despair came across a falling screw pine flower (Pandanus , தாழம்பூ) . He stopped its descent and asked from where it was coming. All that it knew was that it was falling from space and nothing more. Brahma persuaded it to bear false witness and claimed superiority over his rival. Siva was enraged, snipped off that head which spoke the lie, and declared himself as the column of light.”

Then the flower was also banned from the prayer rooms and temples. Nowadays Hindus don’t use it for Pujas.
― Sri Dattatreya, Tripura Rahasya

South Indians, particularly , Tamils use this flower , for decorating the hair of girls. It is a very fragrant flower.

xxx

The story of Bena Plant in Bengal

Khas or Khus (Andropogon muricatus வெட்டிவேர்).

is a grass known as Bena (வெட்டிவேர்)  in Bengal.

Khas Shasti is celebrated on the sixth day (Shasti) of the bright half of Pausa month. It corresponds to December-January in English calendar. The goddess presiding over the day is also called Shasthi.

The story present in Bengal where the vrata/ fast is observed runs that a certain Brahmana’s daughter in law was a naughty girl.  She did not work well and ate things prepared for the worship of gods. Her children therefore died young. With the object of improving her conduct under the influence of goddess Shasti, her mother in law found out a way so that she would fast for the whole day. She gave her a large number of clothes  to wash and sent her away to the river for the purpose. The woman took nearly the whole day to finish her job. She did not even time to have food and she fasted unknowingly.

During her absence, her mother in law cooked different dishes for the goddess and made arrangement for the worship of bena plant/khus grass (வெட்டிவேர்). It was the symbol of goddess Shasthi. She dug up a small ditch to represent a tank, planted the sacred grass on its bank, and arranged the materials for the puja in front of it. The family priest and the musicians were kept in readiness. When the woman heard the music, and saw on her return that so much trouble was taken for her by her kind mother in law, she repented, and devoutly worshipped the goddess. The result was that her children henceforth lived long, and her sin was expiated. She and her neighbours therefore adopted the puja.

–subham—

Tags- Vettiver, Khas, Khus,Bena, Khas Shasthi, Pandanus, Screw pine flower, Brahma, Vishnu, Shiva

–subham—

Tags- Vettiver, Khas, Khus,Bena, Khas Shasthi, Pandanus, Screw pine flower, Brahma, Vishnu, Shiva

ஜோதிர் லிங்க ஸ்தலம் வைத்யநாதம்;  108 மஹாராஷ்டிர புனித தலங்கள் – PART 12 (11,984)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,984

Date uploaded in London – –  May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள் பற்றிய ஸ்லோகம்

சௌராஷ்ட்ரே ஸோமனாதம் ச ஸ்ரீ சைலே மல்லிகார்ஜுனம்;

உஜ்ஜயின்யாம் மஹாகாளம்  ஒங்காரமமலேச்வரம்;

பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீம சங்கரம் 

ஸேது பந்தே து ராமேசம் நாகேசம் தாருகாவனே ;

வாரணஸ்யாம் து விச்வேசம் த்ரயம்பகம் கௌதமீ தடே ;

ஹிமாலயே து கேதாரம் குஸ்மேசம் ச சிவாலயே .

ஏதாநி ஜ்யோதிர்லிங்காநி ஸாயம் ப்ராத: படேந் நர:

ஸப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி .  

ஸோமநாதமும், ஸ்ரீ சைலமும், உஜ்ஜைனி மஹாகாளமும்,ஒங்காரேச்வரமும்,பரலி வைத்யநாதமும், பீமசங்கரமும், ராமேச்வரமும்,, நாகேசமும்,காசி விச்வேசமும், த்ரயம்பகமும், கேதாரமும்,குஸ்மேசமும் ஜோதிர் லிங்க ஸ்தலங்கள் என்று குறிக்கப்படுகின்றன.   இந்த 12 தலங்களை காலையிலும் மாலையிலும் நினைத்தாலே  ஏழு ஜென்மங்களில் செய்த பாபங்களும்       விலகிவிடும்; அழிந்துபோகும் என்று புராதன ஸ்லோகம் சொல்லுகிறது.

12 ஜோதிர் லிங்க தலங்களில் ஐந்து, மகாராஷ்டிரத்தில் இடம்பெற்றுள்ளன. இன்று பரலி என்னும் இடத்திலுள்ள வஜ்ஜிநாத் என்னும் வைத்யநாதரை தரிசிப்போம் .    

     45. பரலி வைத்தியநாதர் கோவில்  ज्योतिर्लिंग परळी वैद्यनाथ         

மஹாராஷ்டிர மாநிலத்தில் பீட் BEED என்னும் நகரிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பெங்களூர், ஹைதராபாத் மும்பை ஆகிய நகரங்களிலிருந்து ரயிலிலும் செல்லலாம்.

இந்தக் கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இதுபற்றி பல   கதைகள் இருக்கின்றன. சத்தியவான் – சாவித்திரி கதையை அறியாத இந்துக்கள் இல்லை. எமனிடமிருந்து சத்தியவானின் உயிரை வாதாடி      வாங்கி வந்த சாவித்ரியின் தந்தை அஸ்வபதி ஆண்ட மாத்ரா Madra Desa தேசம் இது. ஆகையால் இங்கேதான் அந்த சம்பவம் நடந்ததாக ஐதீகம் (செவிவழி வரலாறு).     

 இன்னொரு கதையும் உண்டு. சிவபெருமானை அதிகம் துதிபாடிய ராவணனுக்கு சிவனே ஒரு லிங்கத்தைக் கொடுத்து , இலங்கையில் கொண்டுபோய் கோவில் கட்டு; ஆனால் வழியில் எங்கேயாவது வைத்தால் அது அங்கேயே ஸ்தாபிக்கப்பட்டுவிடும் என்று சொன்னார் . ராவணன் அதை வாங்கிக்கொண்டு வருகையில் கை,  கால் கழுவுவதற்காக         ஒரு பையனிடம் கொடுத்துவிட்டுச் செல்ல, அதன் எடை கூடிக்கொண்டே வந்ததாம். கனத்தைத் தாங்க முடியாதபடி அந்தப் பையன் அந்த லிங்கத்தை கீழே வைக்க அது பரலி க்ஷேத்திரமாகப் பரிணமித்தது.

கடைசி கதை என்னவென்றால், இங்குள்ள விஷ்ணுதான் தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க உதவினார் ஆகையால் இதை வஜ்ஜி நாத (அமிர்த) என்று மராத்தியில் அழைக்கின்றனர் என்பதாகும் .

இந்தக் கோவில் மிகவும் சிறியது. அரை மணி நேரத்துக்குள் கோவிலிருந்து வெளியே வந்துவிடலாம். சிறப்பு என்னவென்றால் ஒரு பெரிய தேக்கு மர மண்டபம் தூண்கள் இல்லாமலே கட்டப்பட்டிருப்பதாகும்.

நந்திக்கு மேலே பெரிய Chandelier தொங்கும் விளக்கு இருக்கிறது. ஜரோகா ஜன்னல்களும் இருக்கின்றன. கல்லிலான இந்த வகை ஜன்னல்கள், நின்று பார்க்கக்கூடிய பால்கனி போன்ற இடம் உடையது. மன்னர்கள் அந்தக் காலத்தில், இத்தைகைய ஜன்னல்களில் நின்று மக்களுக்கு காட்சி அளிப்பர் .

Xxxx

எலிபெண்டா குகைக் கோவில் திரிமூர்த்தி

முந்தைய பகுதிகளில் விவரங்களைக் கொடுத்துவிட்டேன.

Xxx

46. கோண்டேஸ்வர் மஹாதேவ் மந்திர் , சின்னார் , நாசிக் மாவட்டம்

நாசிக் நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது; ஷீரடி சாய்பாபா கோவிலுக்குச் செல்லும் வழி . 12ம் நூற்றாண்டில் யாதவ குல சேனா வம்ச மன்னர் கட்டியது . இதை கலை உலக அற்புதம் என்று சொல்லும் அளவுக்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றன . சுவரிலும் தூண்களிலும் இவற்றைக் காணலாம். ஒரு மேடையின் மேல் கோவில் அமைந்திருக்கிறது நடுவில் சிவ லிங்க சந்நிதி. நாற்புரமும்  விஷ்ணு, பார்வதி, கனேஷ் , சூரியன் ஆகியோருக்கான சந்நிதிகள். சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காலத்தில் கோவிலின் மீது படும் ஒளிக் கிரணங்கள் அற்புத ஜாலங்களைச் செய்யும் ..

Xxx

47. பாபுல்நாத் சிவன் கோவில் மும்பை बाबुलनाथ

மும்பை நகரில் உள்ள பழமையான சிவன் கோவில் இது.

சிவராத்திரி விழாவின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் குவியும் கோவில்..

செளபாத்தி வட்டாரத்தில் இருக்கிறது மரைன் லைன்ஸ் ரயில் நிலையாத்திலிருந்து 15 நிமிடம்தான் ஆகும். ஒரு குன்றின் மேல் அமைந்த இந்தக்கோவில் குறைந்தது 200  ஆண்டுப் பழமை உடைத்து.அந்தக் கால மும்பையைக் குறிக்க இந்தக் கோவில் படம்தான் இருக்கும்.. படிகளில் ஏறி ச் செல்லலாம் அல்லது எலிவேட்டரில் செல்லமாம். கருவேல (பாபுல் மரம்) மரக்கா ட்டில் கண்டுபிடிக்கப்பட்ட லிங்கம் என்றும் பாபுல் என்னும் இடையன் கண்டுபிடித்த லிங்கம் என்றும் பொருள்.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் புகழ்பெற்று விளங்கிய இந்தக் கோவில் காலப்போக்கில் மண்ணில் புதையுண்டு கருவேலமரக் காடாகியது . பின்னர் 4 விக்ரகங்களுடன் கண்டுபிடிக்கப்பது. ஐந்தாவது சிலை கடலில் தூக்கி எறியப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது . துவக்க காலத்தில் பார்சி மதக் கோவிலாக இருந்ததாகவும் சொல்லுவார்கள் .

Xxxx

பூலேஸ்வர் சிவன் கோவில்

முந்தைய பகுதிகளில் விவரம் உளது

xxx

48.வாகேஸ்வர் – பாண கங்கா கோவில்

மும்மை நகரில் மலபார் குன்ற ப் பகுதியில் அமைந்த கோவில் . இதன் அருகிலேயே பாண கங்கா குளம் உள்ளது சிலஹார வம்சத்தினர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாகேஸ்வரர் கோவிலைக் கட்டினர் . அதற்கு முன்னர், ராமபிரான் மண்ணினால் செய்து வழிபட்ட லிங்கம் இது என்பது ஐதீகம் . கடந்த காலத்தில் இருமுறை பெரிய திருப்பணிகள் நடந்தன.தற்காலத்தில் இந்துஸ்தானி இசை விழாக்கள் இங்கே நடத்தப்படுகின்றன.

Xxx

49. அம்ருதேஸ்வர் சிவன் கோவில், அஹமதுநகர் மாவட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் ரத்தன்வாடி கிராமத்தில் ப்ரவரா நதிக்கரையில் அம்ருதேஸ்வர் கோவில் அமைந்துள்ளது  இது மிகவும் பழங்காலக்  கோவில். இதனால் தொல்பொருட் துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள பண்டார் தரா பல்வேறு பொழுதுபோக்குகளுக்கு பயன்படும் இடம். அருகில் ரத்தன்காட் கோட்டையும் இருக்கிறது பண்டார் தரா என்னும் இடம் அஹமது நகரிலிருந்து 96 மைல் . பண்டார் தராவிலிருந்து இந்தக் கோவில் சுமார் 10 மைல். சுமார் 1200 ஆண்டு பழமையான இந்தக்கோவிலை சிலஹார வம்சத்தினர் கட்டினார்கள் . ஜாஞ்ஜா என்னும் மன்னர் கட்டிய 12 கோவில்களில் இதுவும் ஒன்று நல்ல சிற்பங்கள் அமைந்த இந்தக் கோவில் கட்டுவதற்கு  சிவப்பு, கருப்பு நிற பஸால்ட்  பாறைக்கற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.. சுவர்களிலும் கூரைகளிலும் வண்ண ஓவியங்களையும் காணலாம். பூக்கள் வடிவங்கள் வரையப்பட்ட 12 தூண்கள் உடைய மண்டமும் காண வேண்டிய காட்சி ஆகும்.

கோவிலின் சிகரம் அப்படியே உள்ளது . கலை வேலைப்பாடு மிக்கது;  கூ ரையில் சில கற்களைக் காணவில்லை கோவிலுக்கு அருகில் படிக்கட்டுகள் நிறைந்த குளம் கட்டப்பட்டுள்ளது.

சாலையில் செல்லுவதை விட படகில் செல்வது எளிது. மலைப்பாதை கரடுமுரடானது பண்டாரதராவையும் ரத்தன் வாடியையும் பிரிக்கும் ஆர்தர் ஏரியில் ஆறு கிலோமீட்டர் படகு  சவாரி செய்தால் பின்னர் 4 கி.மீ. நடந்து ரத்தன் வாடியை அடையலாம்.

ரத்தன்வாடி கிராமம்தான் கோட்டைக்கு செல்லும் வழி

To be continued…………………………………..

Tags- அம்ருதேஸ்வர் கோவில், வாகேஸ்வர், பாண கங்கா,  கோவில் , பன்னிரு, ஜோதிர்லிங்க, தலங்கள், ,ஸ்லோகம், பரலி வைத்தியநாதர் கோவில்

இந்திரஜித்தை வதைக்கும் போது லக்ஷ்மணர் செய்த ப்ரதிக்ஞை!(Post.11,983)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,983

Date uploaded in London –   May 9, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ராமாயண வழிகாட்டி! 

இந்திரஜித்தை வதைக்கும் போது லக்ஷ்மணர் செய்த ப்ரதிக்ஞை!

ச.நாகராஜன்

வால்மீகி ராமாயணத்தில் இந்திரஜித்திற்கும் லக்ஷ்மணருக்கும் நடக்கும் சண்டை ஆச்சரியகரமான ஒன்று.

அதை அவர் வர்ணிக்கும் விதமே தனி.

யுத்த காண்டத்தில் 91வது ஸர்க்கத்தில் இந்த யுத்த வர்ணனையைக் காணலாம்.

இந்திரஜித்து விபீஷணன் மேல் கோபம் கொண்டு யமனால் தனக்கு அளிக்கப்பட்ட பாணத்தை (சிற்றப்பன் மேல்) விடுகிறான்.

அதை லக்ஷ்மணன் எதிர் கொள்கிறான். எப்படி?

அளவற்ற மஹிமை கொண்ட குபேரனால் கனவில் நேரில் அளிக்கப்பெற்றதும் தகைக்க அரியதும், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் மற்றும் அசுரர்களாலும் சகிக்க ஒண்ணாததுமான ஒரு பாணத்தை எடுத்தார்; விடுத்தார்.

பாணங்கள் ஒன்றையொன்று தாக்கி வீழ்ந்தன.

லக்ஷ்மணர் ஆவேசத்துடன் வாருண அஸ்திரத்தைத் தொடுத்தார்.

அதை ருத்திர அஸ்திரத்தால் எதிர் கொண்டான் இந்திரஜித்.

ருத்ராஸ்திரத்தால் வாருணாஸ்திரம் அழிந்தது.

இந்திரஜித் ஆக்னேயாஸ்திரத்தை விடுத்தான்.

அதை சூர்ய அஸ்திரத்தால் எதிர் கொண்டு தடுத்தார் லக்ஷ்மணர்.

இந்திரஜித் ஒரு கொடிய அசுர அஸ்திரத்தை எடுத்து விடுத்தான்.அதில் கூடாயுதங்களும் முத்கராயுதங்களும் சூலாயுதங்களும் புசுண்டி என்னும் ஆயுதங்களும் கதைகளும் கத்திகளும் கோடரிகளும் வெளி வந்தன.

லக்ஷ்மணரோ அந்த ஆஸுர அஸ்திரத்தை சுலபமாக மாகேஸ்வராஸ்திரத்தால் தகைத்தார்.

உவமையற்ற யுத்தம் இப்படி நீண்டு கொண்டே போனது.

லக்ஷ்மணர் ஒரு கணம் யோசித்தார்.

பின்னர் ஹரி என்னும் குதிரையை வாஹனமாகக் கொண்ட இந்திரன் முன்னொரு காலத்தில் தேவாசுரப் போரில் எந்த அஸ்திரத்தை வீசி அசுரர்களை வெற்றி கொண்டானோ அந்த அஸ்திரமான ஐந்திர அஸ்திரத்தை எடுத்து, தன் வில்லால் பூட்டினார்.

வில்லை வளைத்துத் தொடுத்து இழுத்தார்.

அப்போது அவர் செய்த பிரதிக்ஞை அற்புதமான ஒன்று.

ஶ்ரீ சம்பன்னரான லக்ஷ்மணர் சிறந்த வில்லில் தொடுத்து இழுப்பவராய் தனக்கு காரியசித்தியைத் தரும் ஒரு திருமொழியை பின்வருமாறு சாற்றி அருளினார்:

தர்மாத்மா சத்யசந்தஸ்ச ராமோ தாசரதிர்யதி |

பௌருஷே சாப்ரதித்வ்ந்து: சரைணம் ஜஹி ராவணிம் ||

                     யுத்த காண்டம் ஸர்க்கம் 91 ஸ்லோகம் 96

பௌருஷே – பிரதாப விஷயத்தில்

அப்ரதிதந்து: – ஒப்பற்றவராகிய

தாசரதி: – தசரத சக்ரவர்த்தியாரின் திருமகனாராகிய

ராம: – ஶ்ரீ ராமர்

தர்மாத்மா ச – தர்மாத்மாவும்

சத்யசந்தஸ்ச: ச – ஸத்தியசந்தராகவும்

யதி – இருக்கிறார் எனில்

ஷர – ஓ, பாணமே!

ஏனம் – இந்த

ராவணிம் – இந்திரஜித்தை

ஜஹி – வதைப்பாயாக

இப்படி ராமர் மீது பிரதிக்ஞை செய்து இந்திராஸ்திரமந்திரத்தால் அபிமந்திரித்து பாணத்தை காதுவரை இழுத்து இந்திரஜித்தை நோக்கிக் குறி வைத்து லக்ஷ்மணர் விடுத்தார்.

அது இந்திரஜித்தின் தலையை தலைப்பாகையுடனும் குண்டலங்களுடனும் சேர்த்து அறுத்து பூதலத்தில் வீழ்த்தியது.

வானிலும் பூமியிலும் பெருத்த ஆரவாரம் எழுந்தது.

அனைவரும் ஆனந்தித்தனர்.

ஆக இந்திரஜித்தை வதைக்கும் போது கூட ராமர் தர்மாத்மா என்பதும் சத்யசந்தர் என்பதும் ஸ்தாபிக்கப்பட்டது.

இப்படி ஒவ்வொரு அரிய முக்கியமான தருணத்திலும் ஶ்ரீ ராமரின் எல்லையற்ற மஹிமையை உரிய விதத்தில் அற்புதமாக வால்மீகி முனிவர் எடுத்து நம் முன் கொணர்வது நம்மை பிரமிக்க வைக்கிறது.

ஜெய் ஶ்ரீ ராம்!

***

Parali Vaidhyanatha Temple: 108 Famous Hindu shrines- Part 11 (Post No.11,982)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,982

Date uploaded in London – –  May 8 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Part 11

45.PARALI VAIDHYANATH TEMPLE  ज्योतिर्लिंग परळी वैद्यनाथ

Vajjinath (Vaidhyanaatha in Sanskrit) in Parali town is in Beed district of Maharashtra. It is one of the five Jyotirlingas in the state. From Rameswaram to Himalayas we have 12 Jyotirlinga shrines. It is on top of a small hill. It is located 89 KM towards East from District head quarters Beed. It has a train station with daily trains to Hyderabad, Secunderabad, Bangalore, Nanded, Purna, Manmad, Mumbai.Bus Route: To reach the temple, one can easily get buses from Parbhani, Latur, Nanded, Pune and Mumbai.Parali temple has many stories. Since it was part of ancient Madra kingdom, where from Savitri’s father Asvapathi ruled , it is considered the birth place of Savitri. Anther story associates this place with Ravana. He got a Shiva linga from Shiva which should have gone to Sri Lanka. The condition was that he should not place it anywhere else. When he gave it to a boy he placed it in Parali because it was becoming heavier and heavier. It stayed there permanently. It is here   Lord Vishnu successfully helped the Devas to obtain Amrit. Therefore, this place is also known as ‘Vaijayanti”.

To reach the sanctum of the Parali Vaijnath Temple, there are two door – north and south. Within the temple complex, there is a huge teak wood hall and spacious corridor for circumambulation. It is a pillarless hall. Further enhancing the beauty of the temple are two ponds that too have religious significance.

The darshan can be completed within 10 minutes and you can also spend sometime inside the temple. Devotees are allowed to touch the linga while taking photos inside the temple is prohibited. As far as the design is concerned there is a huge Chandelier in the centre above Nandiji & Jharoka windows in four directions for natural light & air to pass.

Festivals are held during Maha Shivratri and Sravan month.

Xxx

The Elephanta Cave Trimurti Temple

Please go to previous parts where it is already dealt with

Xxxx

46.Gondeshwar Mahadev Temple at Sinnar, Nasik District

Gondeshwar Mahadev temple is at Sinnar, is located 35 kilometres from Nasik.

It is architectural marvel lies on way to the famous temple of Saibaba at Shirdi. This belongs to 12th century built during Sena (Yadava) dynasty.

Gondeshwar Temple is built in the Hemadpanthi style of architecture with exquisitely beautiful stone carvings on the wall.

The temple is on a raised platform. It comprises of a principal shrine dedicated to Shiva and four subsidiary shrines. The four subsidiary shrines at four corners face the principal shrine and are similar in size. They belong to Vishnu, Surya, Parvati & Ganesh. There is a Nandi pavillion in front of the main shrine..The temple presents a pretty sight at sunrise or sunset. As the sun cast its rays, the entire temple complex gets bathed in a golden hues.

Xxx 

47. Babulnath Shiva Temple, Mumbai 

Babulnath is an ancient Shiva temple in Mumbai and one of oldest temples in the city. The temple is visited by thousands of devotees on annual Mahashivratri festival.

 It is located in the Malabar region of Mumbai and is just 15 minutes away from Marine Lines Railway Station. The temple is also one of the most iconic temples in Mumbai.

Babulnath Temple Shiva Linga and Idols were originally consecrated in the 12th century by the then Hindu king Bhimdev of the region. Over a period of time the temple was buried and lost over a period of time. The idols were re-discovered (unearthed) during the period of 1700 to 1780. The first temple was built in the 1780 year.

When rediscovered, 5 original idols were dug out. That of the main Shiva Linga, Ganesh, Hanuman, Parvati and one more. Out of this the first four are in the temple. The fifth one was immersed in the sea because it was broken when it was dug out in the 18th century.

Mandir is situated on a small hillock near Girgaum Chowpatty, it is at least 200 years old. Shiva in the form of the Lord of the Babul tree is the main deity in this temple. The faithful climb up to the mandir and obtain Darshan of the shivalinga and it is also possible to take an elevator up to the temple.

 xxx

 Bhuleshwar Shiva Temple 

Please earlier parts and I have given the details.

xxx

48. Walkeshwar /Baan Ganga Temple, Mumbai

Walkeshwar Temple also known as the Baan Ganga Temple,located in Walkeshwar near Malabar Hill in the city of Mumbai. Banganga Tank is situated at the highest point of the city.

The Walkeshwar temple holds a historical as well as cultural significance to the city of Mumbai. According to legend, Lord Rama made a shivling from sand to conduct his puja. The temple was built by the Shilahara Dynasty about a thousand year ago on the Malabar Hill. The temple pays homage to the legend of Lord Rama as well as the Silhara Dynasty and is dedicated to Lord Shiva.

The world Walkeshwar is derived from Valuka Ishwar, which translates to Lord of the Sand. The temple has undergone renovations twice, in the seventeenth century and once during the 1950s. The temple also plays hosts to several Hindustani Classical music festivals. Location: Teen Batti, Malabar Hill, Mumbai

Xxx

49.Amruteshwar Shiva Temple in Ahmednagar District

 Amruteshwar Temple is an ancient Shiva temple situated on the banks of holy river Pravara at Ratanwadi village in the Igatpuri region of Maharashtra. It is among the popular Bhandardara tourist places and is maintained by the Archaeological Survey of India.

 It is at a distance of 17 km from Bhandardara, which is about 185 kilometers (115 mi) from Mumbai and 155 kilometers (96 mi) from Ahmednagar.

 The temple is dedicated to Lord Shiva and is considered to be over 1,200 year old. This beautiful stone carved temple was built by the rulers of Shilahara dynasty in 9th century AD. This is one of 12 Shiva temples built by King Jhanj. Ratangad Fort is also located at a close distance from this Shiva temple.

 The Amruteshwar Temple has been constructed in Hemadpanthi architectural style with beautiful rock carvings on the main shrine. It was built with black and red stones. The ceiling and the walls of the temple are decorated with some impressive and lovely murals. There is a mantapa with 12 pillars. All the pillars have beautifully carved statues and flowers.

 The temple is located in Ratanwadi village which is the base village for famous Ratangad Fort. Travelling by road to this temple is very difficult due to rough roads on the hills. Ratanwadi is separated from Bhandardara by Arthur Lake. Ratanwadi village is also approached by boat from Bhandardara. By boat, it is a 6 km journey and further it is a 4 km walk till Ratanwadi.

 Amruteshwar Temple is an intricately carved Shiva temple located in Ratanwadi. This temple is over 1200 years old. This beautiful temple was built by the rulers of Shilahara dynasty in 9th century CE. This is one of twelve Lord Shiva temples built by King Jhanjha.

The temple is located in a very picturesque location.

The shikhara over the shrine is intact and is very ornamental, while the roof of the mandapa has disappeared leaving the inner lintels of the ceiling. The ceiling at places where the original roof slabs are missing is filled in with Hero stones, undressed stones and other architectural members at a later period.

A stepped square tank is also provided near the temple, with stepped entrances from three directions. Archaeological Survey of India declared it a monument of national importance.

To be continued……………………………………

மாமிச உணவு சாப்பிடலாமா? காந்திஜி, விவேகானந்தர் பதில் (Post No.11,981)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,981

Date uploaded in London – –  May 8 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

காந்திஜி ‘யங் இந்தியா’ (YOUNG INDIA)  பத்திரிகையில் எழுதிய விஷயம் கீழே தரப்பட்டுள்ளது.

“இந்தக் கடிதம் எழுதியவர் மாமிச உணவு சாப்பிடும் குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர்கள் வற்புறுத்தியும் கூட மாமிச உணவுக்குத் திரும்ப மறுத்துவிட்டார். ஆனால் எனக்கு முன்னால் இருக்கும் ஒரு புஸ்தகத்தில் இந்த விஷயம் பற்றி சுவாமி விவேகானந்தர் சொன்ன அபிப்ராயத்தைப் படித்துவிட்டுக் கலங்கிப் போனேன்.என்றும் இப்போது இந்தியர்கள் உள்ள நிலைமையில் , மாமிச உணவு மிக அவசியம் என்றும் தாராளமாக மாமிசம் சாப்பிடுங்கள் என்று அவருடைய நண்பர்களுக்கு சுவாமிகள் சொல்லியிருக்கிறாரே என்றும் எனக்கு கடிதம் எழுதியவர் சொல்லியிருக்கிறார். மாமிசம் சாப்பிடுவதால் ஏதேனும் பாவம் வருமானால் அதை என் மீது சுமத்துங்கள்; அதை நான் ஏற்கத்  தயார்  என்று கூட விவேகானந்தர் சொல்லிவிட்டாரே ; நான் மாமிச உணவு சாப்பிடலாமா கூடாதா என்று குழம்பிக்கிடக்கிறேன் என்று கடிதத்தில் கூறியுள்ளார் .

காந்திஜி மேலும் எழுதுகிறார்

எதையும் குருட்டுத்தனமாக பின்பற்றுவது மனதின் பலவீனத்தைக் காட்டுகிறது .மாமிச உணவு சாப்பிடுவது தவறு என்பது கடிதம் எழுதியவரின் கருத்து ஆனால் உலகம் முழுதும் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு கொள்கைக்கு எதிரான ஒரு கொள்கையைக் கேட்டு  அவர் ஏன் கலங்க  வேண்டும் ? ஒருவர் எந்த ஒரு கொள்கையை ஏற்பதிலும் முதலில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். . ஒரு கொள்கையை ஏற்றபின்னர் என்ன எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்த்து நிற்க வேண்டும்..

மதிப்பிற்குரிய சுவாமிகள் எழுதிய கருத்தை நான் படித்ததில்லை. ஆயினும் கடிதம் எழுதியவர் அவரை சரியாக மேற்கோள் காட்டுகிறாரா என்பதை நான் சந்தேகிக்கிறேன். . இந்த விஷயத்தில் என் கருத்து எல்லோருக்கும் தெரிந்ததே .ஒரு மனிதன் சாதாரண சூழ்நிலையில் உயிர்வாழ முடியுமானால் அப்போது எந்த இடத்திலும், இந்தக் காலத்திலும் மாமிச உணவு தேவையே இல்லை . மனித இனத்திற்கு மாமிச உணவு உகந்தது அல்ல . மிருகங்களுக்கும் மேலானவர்கள் மனிதர்கள் என்றால் மாமிச உணவு சாப்பிடுவது மிருக்கங்களைப் போல நடப்பதாகும் . புலன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு மாமிச உணவு சரியானதல்ல என்பதை அனுபவம் காட்டுகிறது.

ஆயினும் உணர்ச்சிகளை அடக்குவதற்கோ ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்கோ உணவு மட்டும் போதும் என்றும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது . உணவு என்பது மிகவும் சக்திவாய்ந்த அம்சம்.. ஆனால்  இந்தியாவில் உணவுப்  பழக்கம்  என்பதை மதத்துடன் தொடர்புபடுத்திப் பேசுவதும் தவறு. அதே போல உடலுக்கு உணவே பிரதானம் என்று நினைத்து அத்தனை கட்டுப்பாடுகளையும் உடைத்து  எறிவதும் தவறு. காய்கறி உணவை மட்டும் சாப்பிடவேண்டும் என்ற கருத்து உலகிற்கு இந்துமதம் அளித்த மாபெரும்விலை மதிக்கவொண்ணாத கொடை ஆகும் .. அந்தக் கொள்கையை எளிதில் புறக்கணிக்கக் கூடாது .

உடலையும் மனதையும் பலவீனப்படுத்துவது காய்கறி உணவு;  செயல்படாத , மந்த புத்தியை உண்டாக்குவது காய்கறி உணவு என்ற தவறான கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும் . இந்து மதத்தின் மாபெரும் சீர்திருத்தவாதிகள் மிக உற்சாகத்துடன் செயல்பட்டுள்ளார்கள் . அவர்கள் அனைவரும் காய்கறி உணவை உண்டவர்களே . சங்கரர் அல்லது தயானந்தரை விட அதிக சேவை செய்த எவரையாவதுயாராவது காட்ட முடியுமா?

ஆயினும் எனக்குக் கடிதம் எழுதியவர் நான் சொல்கிறேன் என்பதற்காக இதை ஒப்புக்கொள்ள வேண்டாம். ஒருவரின் உணவுப் பழக்கம் அவரது மத நம்பிக்கையின் அடிப்படையில் அமைவதல்ல. தாமே காரணங்களை சிந்தித்து ஏற்க வேண்டிய கொள்கை.. காய்கறி உணவின் சிறப்பு பற்றி மேலை நாடுகளிலும் நிறையபேர் எழுதியுள்ளார்கள். அவைகளைப் படிப்பதும்  பலன் தரும். பிரபல மருத்துவர்களும் இதுபற்றி எழுதியுள்ளனர் இந்தியாவில் காய்கறி உணவின் அவசியத்தை உணர்த்த,  ஊக்குவிக்க எதுவும் தேவையே இல்லை . ஏனெனில் இதுதான் மிகவும் விரும்பத்தக்கது, மதிப்புமிக்கது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்ட இடம் இது.  ஒருவேளை எனக்குக் கடிதம் எழுதியவரைப் போல எவருக்கேனும் மனக் குழப்பம் இருக்குமானால் மேல் நாடுகளில் இதற்குக் கிடைத்து வரும் ஆதரவு பற்றி படிக்கலாம்.

–யங் இந்தியா பத்திரிகை 7-10-1926

–subham—

Tags- சங்கரர் ,தயானந்தர், காந்திஜி, மாமிச உணவு, சுவாமி விவேகானந்தர்,  காய்கறி உணவு

லக்ஷ்மணரிடம் ஶ்ரீ ராமரின் ப்ரதிக்ஞை! (Post No.11,980)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,980

Date uploaded in London –   May 8 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

  ராமாயண வழிகாட்டி! 

லக்ஷ்மணரிடம் ஶ்ரீ ராமரின் ப்ரதிக்ஞை!

ச.நாகராஜன் 

வால்மீகி ராமாயணத்தில் ஶ்ரீ ராமர் லக்ஷ்மணரிடம் செய்யும் பிரதிக்ஞை குறிப்பிடத் தகுந்த ஒன்று.

இது ஆரண்ய காண்டத்தில் 24ஆம் ஸர்க்கத்தில் இடம் பெறுகிறது.

கொடிய பராக்கிரமுள்ள கரன் வரும் போது ஏராளமான துர்சகுனங்களை ராமர் பார்க்கிறார்.

உடனே அவர் லக்ஷ்மணனைப் பார்த்துக் கூறுகிறார் :-

“மேகங்கள் ஆகாயத்தில் விகாரமான சப்தங்களை இட்டுக்கொண்டு ரத்த தாரைகளை உடையவனவாய் செம்பட்டை நிறமுற்றனவாய் கொடியவைகளாகத் திரிகின்றன. லக்ஷ்மண! எனது பாணங்கள் புகைகின்றன. யுத்தத்தில் உற்சாகம் கொண்டவையாக இருக்கின்றன. எனது வில்கள் துடிக்கின்றன. வனத்தில் உள்ள பறவைகள் இம்மாதிரியாகக் கூவுகின்றன. நமக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் வீரனே! எனது இந்தக் கை இடைவிடாமல் துடிப்பதாய், சமீபத்தில் நமக்கு வெற்றியையும் எதிரிக்கு தோல்வியையும் ஏற்படுவதை உணர்த்துகிறது.

ஆபத்தை எதிர்பார்க்கின்றவனும் வெற்றியைக் கோருகிறவனும் புத்திமானுமான ஒரு மனிதனால் முன்னேற்பாடு தான் செய்யத் தக்கது.”

இப்படிக் கூறிய ஶ்ரீ ராமர் லக்ஷ்மணனுக்கு ஒரு கட்டளையை இடுகிறார்:

“ஆகவே, கையில் அம்பு கொண்டு வில் தரித்தவனாய், வைதேஹியை அழைத்துக் கொண்டு மலையினது மரங்கள் அடர்ந்து புக முடியாமல் இருக்கும் குகையை அடைவாயாக!”

பின்னர் தன் பிரதிக்ஞையை அவர் கூறுகிறார் இப்படி:

ப்ரதிகூலிதுமிச்சாமி ந ஹி வாக்யமிதம் த்வயா |

ஷாபிதோ மம பாதாப்யாம் கம்யதாம் வத்ஸ மா சிரம் ||

இதம் வாக்யம் – இந்தச் சொல்லை

த்வயா – உன்னால்

ப்ரதிகூலிதும் ஹி – மறுத்துரைக்கவும்

இச்சாமி ந – நான் உடன்பட மாட்டேன்.

மம – எனது

பாதாப்யாம் – இரு பாதங்களின் மீதும்

ஷாபித: – நீ ஆணையிடப்பட்டு இருக்கிறாய்.

வத்ஸ –  குழந்தாய்

மா சிரம் – தாமதம் வேண்டாம்!

கம்யதாம் – செல்லப்படட்டும்.

இரு பாதங்களின் மீதும் ஆணையிடப்பட்டு ஶ்ரீ ராமர் இந்தக் கட்டளையை இடுகிறார்.

“சீதையை அழைத்துக் கொண்டு குகையை அடைந்து அங்கு இருக்க வேண்டும்.”

அவ்வளவு தான், வேறு வழியின்றி லக்ஷ்மணர் ராமரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டியதாயிற்று.

ஆரண்ய காண்டத்தின் அடுத்த 25ஆம் ஸர்க்கத்தில் கர சைன்ய வதம் கூறப்படுகிறது.

பிரதிக்ஞை வரிசையில் ஶ்ரீ ராமரது இந்த பிரதிக்ஞையும் சேர்கிறது.

***