ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக் கறக்கனும்

bum bum 2

Article No. 2038

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 2nd August  2015

Time uploaded in London : – 21-04

 

இதுவரை ஆயிரத்துக்கும் மேலான தமிழ்ப் பழமொழிகளை தலைப்பு (சப்ஜெக்ட்) வாரியாகத் தொகுத்துக் கொடுத்துள்ளேன். இதைத் தவிர தமிழுக்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளையும் சம்ஸ்கிருதப் பழமொழிகளையும் கொடுத்து வருகிறேன். இதோ மேலும் பத்து சம்ஸ்கிருதப் பொன்மொழிகளும் அதற்கு இணையான தமிழ்ப் பழமொழிகளும்;—

 

1)பர்வதானாம் பயம் வஜ்ராத்- சாணக்ய நீதி தர்பணம்

மலைகளுக்குப் பயம் இடி மின்னலிலிருந்து

2)பாதபானாம் பயம் வாதாத்- சாணக்ய நீதி தர்பணம்

மரங்களுக்குப் பயம் காற்றிலிருந்து

3)பாடச்சரலுண்டிதே வேஸ்மணி யாமிக ஜாகரணம்

திருடுபோன பின்னால், வீட்டில் காவல்காரனை எழுப்பி என்ன பயன்?

(கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?)

surya namaskar on chalk piece

4)பாணௌ பாயசத்க்தே தக்ரம் பூத்க்ருத்ய பாமர: பிபதி — சுபாஷிதரத்ன பாண்டாகாரம்

பாலால் சுடுபட்டவன் மோரையும் ஊதிக் குடிப்பான்

(அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்)

 

 

5)பாதலக்னம் கரஸ்தேன கண்டகேநைவ கண்டகம் – ஹிதோபதேசம்

காலில் குத்திய முள்ளை கையிலுள்ள முள்ளால்தான் எடுக்கவேண்டும்.

((முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்

வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும்))

 

6)பாதாதாதஸ்ய யத்பாத்ரம் வார்தயா தன்ன துஷ்யதி

காலால் உதைக்க வேண்டியதை சொற்களால் சமாளிக்க முடியாது

((இணையான தமிழ்ப் பழமொழிகள்: அடியாத மாடு படியாது;

அடி உதவுவது போல அண்ணன், தம்பி உதவ மாட்டார்கள்;

ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக் கறக்கனும்;

மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது))

 mayil narai

7)பாவகோ லௌஹசங்கேன முத்கரைரபிஹன்யதே– சுபாஷிதரத்ன பாண்டாகாரம்

இரும்போடு சேர்ந்த நெருப்புக்கும் அடி விழும்

(சஹவாச தோஷம்)

 

8)பிசாசானாம் பிசாச பாசயைவோத்தரம் தேயம்

பிசாசுக்கு பிசாசு பாஷையில்தான் பதில் கொடுக்கவேண்டும்

 

 

9)புஸ்தகம் வனிதா வித்தம் பரஹஸ்தகதம் கதம் – சமயோசித பத்ய மாலிகா

புத்தகம், பெண், பணம் – மற்றவர் கைக்குப் போனால் திரும்பாது

 

10)ப்ரக்ஷாலனாத் ஹி பங்கஸ்ய தூராதஸ்பர்சனம் வரம்- ஹிதோபதேசம்

சேற்றில் விழுந்து கழுவிக் கொண்டிருப்பதைவிட, அது மேலே படாமல் காப்பது சிறந்தது

Prevention is better than cure

 

என்னுடைய பழைய கட்டுரைகள்:

யானை பற்றிய நூறு பழமொழிகள், ஜூன் 5, 2012

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் – Part 1, ஜூன் 22, 2012

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் – பகுதி 2, ஜூன் 22, 2012

இராமன் பற்றிய பழமொழிகள் ஏப்ரல் 10, 2014

இருபதாயிரம் தமிழ் பழமொழிகள், மே 31, 2012,
பெண்கள் பற்றிய 300 பழமொழிகள் (பகுதி 1,2,3) ஜூன் 26, 2012 & ஜூன் 28, 2012
பாரதி பாட்டில் பழமொழிகள், ஜூன் 25, 2012
அப்பர் தேவாரத்தில் பழமொழிகள் (இது மட்டும் எஸ்.நாகராஜன் எழுதியது) ஜூன் 26, 2012

ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே
உடம்பைக் கடம்பால் அடி

மேலும் 33 இந்துமதப் பழமொழிகள் ,ஜூலை 21, 2015

ஆரோக்கியம் தொடர்பான பழமொழிகள், 25 பிப்ரவரி 2015

20,000 Tamil Proverbs (English article)