பேயை விரட்ட, நோயை விரட்ட அதர்வண வேதம்- பகுதி 2 (Post No.3976)

Written by London Swaminathan

 

Date: 6 June 2017

 

Time uploaded in London- 16-13

 

Post No. 3976

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

அதர்வண வேதத்திலுள்ள 20 காண்டங்களில் என்ன இருக்கிறது என்பதை அறிய நேற்று முதல் பத்து காண்டங்களின் பொருள் அடக்கத்தினைக் கொடுத்தேன். இன்று மேலும் பத்துக் காண்டங்களில் எது சம்பந்தமான மந்திரங்கள் இருக்கின்றன என்பதைக் காண்போம்.

 

11 ஆம் காண்டம்

பதினோராம் காண்டத்தில் 10 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 31 மந்திரங்கள் இருக்கும்.

 

மூன்றாவது துதி உரைநடையில் இருக்கிறது. பாலில் சோறு பொங்கும் விஷயம் இது. எட்டாவது துதி, பல கடவுளரின் தோற்றம் பற்றியும் மனிதனின் படைப்பு பற்றியும் பாடுகிறது.

எதிரிகளை அழிப்பதற்கான மந்திர உச்சாடனங்கள், கடைசி இரண்டு துதிகளில் இடம்பெறும்.

 

ருத்ரனைப் பற்றிய நீண்ட துதி இருக்கிறது.

பிரம்மசர்யத்தின் சிறப்பு

உணவு தானியம் பற்றிய பிரார்த்தனை

பிரம்மனைப் பற்றிய மந்திரங்கள்

இந்தக் காண்டத்தின் சிறப்பு

12 ஆம் காண்டம்

 

தாய்நாடு பற்றிய அருமையான நீண்ட கவிதை

காச நோயைத் தடுக்கும் மந்திரம்- இந்தக் காண்டத்தின் சிறப்பு

 

பன்னிரெண்டாம் காண்டத்தில் 5 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 60 மந்திரங்கள் இருக்கும்

 

இரண்டாவது துதி அந்திம யாத்திரை பற்றியது. இதன் பாதிப் பகுதி ரிக்வேதத்தில் (10-18) இருந்து எடுக்கப்பட்டது. ஒரு பிராமணனிடமிருந்து பசுவைத் திருடினால் என்ன பாவம் வரும் என்பதை 4, 5 துதிகளில் காணலாம்.

 

13 ஆம் காண்டம்

பதிமூன்றாம் காண்டத்தில் 4 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 47 மந்திரங்கள் இருக்கும்

 

சிவப்பு (ரோஹித) வர்ணத்தைப் போற்றும் துதிகள் இதில் அடங்கும். சிவப்பு வர்ணம் என்பது சூரியனையும் அக்னியையும் குறிக்கும்.

அந்திமக் கிரியை பற்றிய மந்திரங்களைக் கொண்ட காண்டம்

 

14 ஆம் காண்டம்

 

இரண்டே துதிகள்; ஆனால் மொத்தம் 139 மந்திரங்கள். கல்யாணம், சாந்தி முகூர்த்தம் தொடர்பான விஷயங்கள் உள; ரிக் வேத துதி 10-85 சில மாறுதல்களுடன் காணப்படும்.

 

15 ஆம் காண்டம்

இதில் 18 துதிகள் உள. உரைநடையில் உளது. புரியவில்லை என்று வெள்ளைக்காரர்கள் எழுதியுள்ளனர். இதில் விராத்தியர்கள் எனப்படும் நாடோடிப் பிராமணர்கள் பற்றி உளது. அவர்கள் யாக யக்ஞாதிகளைச் செய்யாதவர்கள்; சித்தர்கள் போல!

பரமாத்மனைப் போற்றும் மந்திரங்களும் உண்டு

 

16 ஆம் காண்டம்

இதில் 9 துதிகள் உள. பெரும்பாலும் உரைநடை. தாயத்துகள், குளிகைகள் பற்றிய அதிசய விஷயங்கள் நிறைய உள்ளன.

 

17 ஆம் காண்டம்

ஒரே துதி! ஆனால் 30 மந்திரங்கள். இந்திரனைக் குறித்த துதியில் விஷ்ணு, சூரியன் ஆகியோருடன் அவரை ஒப்பிடுவர். மனிதர்கள், மிருகங்கள் ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் நலன் வேண்டும் துதி!

வெற்றிக்கான பிராத்தனை மந்திரங்கள்.

 

18 ஆம் காண்டம்

 

நாலே துதிகள்; ஒவ்வொன்றிலும் சராசரி மந்திரங்கள் 70; அந்திமக் கிரியைகள், திதி முதலியன இதில் அடக்கம். பல துதிகள் ரிக் வேத துதிகள்- சில மாறுதல்களுடன்.

முதல் துதி யமா-யமி உரையாடல்.

 

19 ஆம் காண்டம்

72 துதிகள்; ஒவ்வொன்றிலும் சராசரி மந்திரங்கள் 8. பல இடைச் செருகல் இருப்பதாக வெள்ளையர் கணிப்பர். தாயத்துகள், குளிகைகள் பற்றிய பகுதிகளும் உள. ரிக்வேத புருஷ சூக்தம் 10-90 கொஞ்சம் மாறுதல்களுடன் காணப்படும்.

 

நதிகள், தண்ணீர், பரமாத்மன் பற்றிய மந்திரங்கள்

28 நட்சத்திரங்கள் பற்றிய மந்திரங்கள்

அமைதி, சமாதான மந்திரங்கள்

இதன் சிறப்பு அம்சங்கள்

 

20 ஆம் காண்டம்

 

இருபதாம் காண்டம்தான் கடைசி காண்டம்; இதில் 143 துதிகள் உண்டு. பெரும்பாலும் இந்திரனைப் பற்றிய ரிக் வேத துதிகள்; குண்டபா பிரிவு (127-136) மிகவும் வியப்பான மந்திரம்- வயிற்றைச் சுற்றியுள்ள 20 உறுப்புக  ள், நாளங்கள், சுரப்பிகள் பற்றீயன. பல பாடல்கள் விடுகதை போன்றவை. அசுரர்களை விடுகதை போட்டே தோற்கடித்தனர் கடவுளர்.

 

இது போன்ற சிந்தனைகள் இந்த வேதம்— அறிவாளிகளின் வேதம்— என்பதைக் காட்டும். முதல் துதி வாக் (பேச்சு) பற்றி துவங்கியது. இப்படிப்பட்ட அறிவு தொடர்பான செய்திகளை சுமேரிய, எகிப்திய துதிகளில் காணமுடியாது. விருந்தினரைப் போற்றும் உயரிய பண்புகள், சத்தியத்தைப் போற்றும் கொள்கைகள் இவைகள் வெளிநாட்டுச் துதிகளில் இல்லை. இவை எல்லாம் பாரதீய   சிந்தனையின் முன்னேற்றமடைந்த நிலையைக்  காட்டும்.

 

—சுபம்–