
Image of Augustus, Roman Emperor
Written by London Swaminathan
Date: 3 JUNE 2018
Time uploaded in London – 20-59
Post No. 5073
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
ரோமானிய மன்னன் அகஸ்டஸ் (கி.மு/கி.பி. முதல் நூற்றாண்டு) ரோமானிய சாம்ராஜ்யத்தை ஆண்டபோது ‘பாண்டியோன்’ என்னும் மன்னன் அங்கே ஒரு தூதனை அனுப்பினான். அவனுடன் ஒரு சந்யாஸி சென்றார். அவருடைய பெயர் ஜார்மனோசேகஸ் என்று கிரேக்க எழுத்தாளர்கள் எழுதி வைத்துள்ளனர். இவர்கள் சந்திப்பு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கி.மு.19 வாக்கில் நடந்தது. இதற்குப் பின்னர் அந்த சந்யாஸி கிரேக்க நாட்டின் தலநகரான ஏதென்ஸ் மாநகரில் எல்லோர் முன்னிலையிலும் பஹிரங்கமாக தீக்குளித்தார். இதைக் கண்டு ஏதென்ஸ் மாநகரமே அதிசயித்து நின்றது. ஊரெங்கும் அதே பேச்சு.
இப்படி தமிழ்நாட்டு பாண்டிய மன்னனின் தூதனுடன் சென்றவர் பெயர் ஜார்மனோசேகஸ் என்பதை சிரமனாச்சார்யா என்று மாற்றி இவர் புத்தமதத்தினராக இருக்கக்கூடும் என்று ராலின்ஸன், கென்னடி போன்றோர் பிதற்றி வைத்தனர். இதைச் சற்று ஆராய்வோம்.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய மன்னனின் தூதருடன் வடநாட்டு சந்யாஸி போக வாய்ப்புகள் மிகவும் குறைவு. காரணங்கள் என்ன?

- நமக்குத் தெரிந்தவரை புத்த மத, சமண மத சந்யாஸிகள் எவரும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த வரலாறு இல்லை. ஏனெனில் இது இந்துக்களின் வழக்கம்.
2.கபிலர் என்ற பிராஹ்மணப் புலவன்தான் தமிழ் இலக்கியத்தில் அதிகமான பாடல்களை யாத்தவர். அவர் பாரி மன்னனின் இரு புதல்விகளையும் கல்யாணம் கட்டிக் கொடுத்த பின்னர் திருக்கோவிலூரில் தீக்குளித்தார். இன்றும் சுற்றுலாப் பயணிகள் அங்கே சென்று கபிலர் பாறையில் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்து சாமியார்கள், சாது சந்யாஸிகள் வாழ்க்கையின் குறிக்கோள் முடிந்தவுடன் இப்படித் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்வது ராமாயண, மஹாபாரத கால வழக்கம்.
- ராமனைச் சந்தித்த சபரி என்ற வேடுவக் கிழவி உன்னை சந்தித்ததால் வாழ்க்கையின் பயனை எய்திவிட்டேன் என்று சொல்லி தீக்குளித்து மோட்சம் எய்தினாள்
4.சரபங்கர் என்ற முனிவரும் வேதவதியும் இவ்வாறு தீப்புகுந்ததை ராமாயணத்தில் காண்கிறோம்.
5.இதே போல ஆதிசங்கரர் ஆர்வத்தோடு வாதாட வந்த குமாரில பட்டர், எரியும் உமிக்கு நடுவில் தன் உடலை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாகக் கருகி இறந்த சம்பவத்தையும் நாம் அறிவோம். “நீங்கள் நான் உயிர்த் தியாகம் செய்யும் தருணத்தில் வந்து விட்டீர்கள் ஆயினும் என் சிஷ்யரிடம் வாதாடுங்கள்” என்று சொல்லி சங்கரரை அனுப்பி வைத்தார். அத்தகைய சாது சந்யாஸிகளுக்கு உடல் என்பது அழுக்கான ஆடை போல. அதைத் தூக்கி எறிவதில் எந்தக் கஷ்டமும் இல்லை.

6.வெளி நாடுகளுக்குச் சென்று கலாசாரத்தைப் பரப்பியது இந்துக்கள் என்பதை தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் 1500 ஆண்டுகளுக்கு நிலவிய இந்துக் கலாசாரம் காட்டுகிறது; அதை நிறுவியவர்கள் கௌன்டின்யன், அகஸ்தியர் என்ற இரண்டு பிராஹ்மணர்கள் என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் காட்டி நிற்கின்றன. ஆக பாண்டிய மன்னருடன் சென்றவர் இந்து சாமியாரே என்பதற்கு அதுவும் அத்தாட்சி.
7.ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தோபர் கொலம்பஸ் போன்ற மாலுமிகள் கொள்ளைக்காரர்கள் மட்டுமல்ல; கிறிஸ்தவக் கொலைகாரர்களும் கூட; சென்ற நாடுகளில் உள்ள பழங்குடி மக்களை அழித்து அங்குள்ள தங்கம் அனைத்தையும் கொள்ளையடித்தனர். இவர்கள் அங்கு செல்லும் முன் ஒரு இந்து சாது அங்கே சென்று அவர்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பித்தார். 1200 ஆண்டுகளுக்கு முன்னர் பகிரங்கமாகத் தீக்குளித்தார். அப்படி உயிர்த் தியாகம் செய்யும் முன்பு ‘’நான் திரும்பி வருவேன்’’ என்று அறிவித்தார். இதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அங்கே சென்ற கிறிஸ்தவர்களைப் பார்த்து அவர்கள்தான் ஆரூடம் சொன்ன இந்து சந்யாஸி என்று கருதி காலில் விழுந்து வணங்கினர். அந்தக் கிறிஸ்தவக் கொலைகாரர்களோ அவர்களைக் கொன்று அங்குள்ள நூலகங்களை எரித்து, தங்கத்தை எல்லாம் ஸ்பெயின் நாட்டுக்குக் கொண்டு சென்றனர். எஞ்சிய சில தஸ்தாவேஜுகளில் இருந்து நமக்கு இந்தத் தகவலகள் கிடைத்தன.

ஆகவே மாயன், கிரேக்க எழுத்தாளர்கள் மூலம் நாம் அறிவது இந்து சந்யாஸிகள் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்வர் என்பதாகும்.
ராமாயண, மஹாபாரத்திலிருந்தும் தமிழ் இலக்கியத்திலிருந்தும் நாம் அறிவது வாழ்க்கையின் குறிக்கோள் முடிந்த இந்துக்கள் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்வர் என்பதாகும். குமாரிலபட்டர் போன்றோரும் இவ்வாறு உயிர் துறப்பது அல்லது வடக்கிருந்து உயிர் துறப்பதை நாம் ஸம்ஸ்க்ருத இலக்கியத்தில் இருந்தும் அறிகிறோம். பாண்டிய மன்னனே தூதனை அனுப்பியது இந்த இந்து சந்யாஸியை அறிமுகப்படுத்தத்தானோ!!!
-சுபம்–


