
WRITTEN BY S NAGARAJAN
Post No.7628
Date uploaded in London – 28 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ச.நாகராஜன்
ஏழு விஷயங்கள் ஒருவனின் கவலையை உடனடியாகத் தீர்க்கக் கூடியவையாகும்.
அவை யாவை?
- பண்டிதர்களின் சபை
- மஹாபாரதம்
- நல்ல கவிதையைப் படிப்பது
- வாத்திய இசை
- அருமையான பாட்டு
- அன்பான மனைவி
- நல்ல நண்பன்
இந்த ஏழும் இருப்பின் கவலை ஏது?
இதைக் கூறும் சுபாஷிதம் இதோ:
வித்வத்கோஷ்டி பாரதம் காவ்ய சிந்தா தந்த்ரி வாத்யம் சுப்ரயுக்தம் கேயம் |
இஷ்டா பார்யா தத்சமானம் ச மித்ரம் சத்ய: சோகம் நாசயந்தீஹ சப்த ||
Seven things could put an immediate stoppage to worry, viz –
An assembly of scholars,
The text of Mahabharata
Study of poetry
Instrumental music
Well accomplished song
A loving wife
And a suitable friend (Translation by Dr N.P.Unni)
ஏழு ‘ஸ்’காரம் இருந்தால் கவலையே இல்லை!
ஒருவனுக்கு ஏழு ஸகாரம் இருந்தால் கவலையே இருக்காது. அந்த ஏழு ‘ஸ’காரங்கள் எவை தெரியுமா?
- ஸம்பத்
- ஸரஸ்வதி
- ஸத்யம்
- ஸந்தானம்
- ஸதனுக்ரஹ:
- ஸத்தா
- ஸுக்ருதஸம்பார:
செல்வம், நல்ல கல்வி, சத்யம், நல்ல புத்திரர்கள்,நல்லோரின் ஆசீர்வாதம், இருத்தல், புண்யத்தின் சேர்க்கை இந்த ஏழும் இருந்தால் கவலை தான் ஏது? இவை கிடைப்பது துர்லபம் தான்!
இதைக் கூறும் சுபாஷிதம் இதோ:-
ஸம்பத்ஸரஸ்வதி ஸத்யம் ஸந்தானம் ஸதனுக்ரஹ: |
ஸத்தா ஸுக்ருதசம்பார: ஸகாரா: ஸப்த துர்லபா: ||
The seven Sakaras (words beginning with the syllable ‘Sa’ are said to be Sampat (wealth),Saraswathi (learning), Satyam (Truth), Santhanam (Childern) Sadanugrah (blessing of the noble), satta (existence) and sukrutasambhara (collection of merit).
(Translation by Dr N.P.Unni)
மூர்க்கரை எப்படி அடையாளம் காண்பது?
மூர்க்கரை அடையாளம் காண ஒரு சுலபமான வழி உள்ளது. அவர்களின் ஆறு குணங்களைப் பார்த்தாலே போதும் அவன் மூர்க்கன் தான் என்பதை உறுதிப் படுத்த. அந்த ஆறு குணங்கள் எவை?
- கர்வம்
- கெட்ட வார்த்தைகள்
- பகைமை
- அனாவசியமான விதண்டாவாதம்
- கடமையைச் செய்ய மறுப்பது
- ஒரு செயலைச் செய்யும் போது அலட்சியமாகச் செய்வது
இதை விவரிக்கும் சுபாஷிதம் இது தான்:-
மூர்க சின்ஹானி பீடதி கர்வோ துர்வசனம் முகே |
விரோதி தீர்கவாதி க்ருத்யக்ருத்யம் ந மன்யதே ||
There are six characteristics for a wicked fellow – pride, nasty words, enemity, given to much talk, refusal to do duty, and carelessness in actions.
(Translation by Dr N.P.Unni)
தீயே இல்லாமல் உடலை எரிக்கும் ஐந்து விஷயங்கள்!
தீயே தேவை இல்லை. கீழ்க்கண்ட ஐந்து விஷயங்கள் உடலைத் தானே தஹித்து விடும்!
- மனைவியைப் பிரிந்திருப்பது
- உறவினர்கள் வதந்தியைப் பரப்புவது
- கடன் இருப்பது
- மோசமான ஒருவனிடம் வேலை பார்ப்பது
- தரித்திரமான காலத்தில் பிரியமான ஒருவரைப் பார்ப்பது
இந்த ஐந்தும் தானே உடலை எரித்து விடும்.
இதைக் கூறும் சுபாஷிதம் இது:
பார்யா வியோக: ஸ்வஜனாபவாதோ க்ருணஸ்ய சேஷம் க்ருபணஸ்ய சேவா |
தாரித்ர்ய காலே ப்ரியதர்சனம் ச விநாக்நினா பஞ்ச தஹந்தி காத்ரம் ||
Five things burn one’s limbs without the use of fire – viz.,
Separation from the wife
Scandal from relatives
The balance of debt
Attendance on a wretched person
And the sight of a dear one in times of penury
(Translation by Dr N.P.Unni)

பட்டு பட்டென்று விஷயங்களை பிட்டு பிட்டு வைக்கும் சுபாஷிதங்களிடமிருந்து வாழ்க்கைக்கான பாடங்கள் பலவற்றைக் கற்கலாம்!
***