தோட்டத்தில் நுழைந்தாலும் கள்ளிச் செடியையே தேடும் ஒட்டகம்! (Post.9774)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9774

Date uploaded in London – –  –25 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

டாக்டர் டி.எஸ்.கௌரிபதி திரிபாதி அவர்கள் தேர்வு செய்து வழங்கிய ஐந்து சுபாஷிதங்கள் கட்டுரை எண் 9753இல் (வெளியான தேதி: 20-6-2021) தரப்பட்டது. அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இந்தக் கட்டுரையில் காணலாம்.

தோட்டத்தில் நுழைந்தாலும் கள்ளிச் செடியையே தான் தேடும் ஒட்டகம்!

ச.நாகராஜன்

சம்ஸ்கிருத அறிஞரான டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி (Dr.T.S. Gouripathi Sastri)   அவர்களிடம் ஆந்திரா பல்கலைக்கழகம் நல்ல சில சுபாஷிதங்களைத் தேர்ந்தெடுக்குமாறு (1978இல்) பணிக்க, அவர் 36 சுபாஷிதங்களைத் தொகுத்துத் தந்தார். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் அவரே செய்துள்ளார். அவற்றில் முதல் ஐந்து சுபாஷிதங்களை சென்ற கட்டுரையில் கண்டோம். அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இதோ:-

ஸ்லோகார்தாஸ்வாதகாலே து சப்தோத்பத்திவிசிந்தகா: |

நீவீ மோக்ஷணவேலாயாம் வஸ்த்ரமூல்யவிசிந்தகா: ||

ஒரு கவிதையை (ஸ்லோகத்தை) ரசிக்கும்போது அதிலுள்ள வார்த்தைகள் எந்த வேர்ச்சொற்களைக் கொண்டுள்ளன என்று கவலைப்படுவோர், ஒரு பெண்மணியின் ஆடைகளை அவிழ்க்கும் போது அவள் இடையில் அணிந்திருக்கும் ஆபரணங்களின் விலை என்னவாயிருக்கும் என்று கவலைப்படுவோரைப் போலத்தான் (என்று சொல்ல வேண்டும்)!

Those who are worried about the derivation of the words at the time of the relishing the poem are really like those who worry about the cost of the lady’s waist garments while undressing them.
                                                               *

கர்ணாம்ருதம் சூக்திரஸம் விமுச்ய தோஷேஷு யத்ன: சுமஹான் கலஸ்ய|

அவேக்ஷதே கேலிவனம் ப்ரவிஷு: க்ரமேலக: கண்டகஜாலமேவ ||

செவிக்கு அமிர்தமான சூக்திகளின் சாறை ஒருவர் தரும் போது அதிலுள்ள நல்லனவற்றை விட்டு விட்டு, குறைகளைக் கண்டுபிடிக்கும் மோசமானவரின் முயற்சி பிரமாதம் தான்! ஒட்டகமானது ஒரு தோட்டத்தில் நுழையும் போது கள்ளிச் செடி எங்கிருக்கிறது என்பதைத் தான் தேடும்.

Greatest is the endeavour of the wicked man in (locating) the defects leaving the quintessence of the wise saying really Ambrosia to the ears. The camel (searches) finds the cactus only when it enters a garden.

                                  *

பரிஸ்ரமஞ்ஞம் ஜனமந்தரேன மௌனவ்ரதம் விப்ரதி வாக்மிநோபி |

வாசம்யமா: சந்தி வினா  வஸந்தம் பும்ஸகோகிலா: பஞ்சமசஞ்சவோபி ||

மிகப்பெரும் பேச்சாளர்கள் கூட, ஒரு அறிவாளியின் முயற்சி எத்தகையதாயிருக்கும் என்று உணரும் ஒருவர் இருக்கும் போது தவிர மற்ற நேரத்தில், மௌன விரதத்தையே மேற்கொள்வர். ஆண் குயில்கள் மிக ரம்யமான ஐந்தாம் ஸ்வரத்தை தனது  குரலில் எழுப்பும் சக்தியைக் கொண்டிருந்தாலும் கூட வசந்த காலத்தைத் தவிர இதர காலங்களில் மௌனமாகவே இருக்கும்.

Even the great orators take the vow of silence except when they find a person who knows what is meant by scholarly endeavor. Although the male cuckoos endowed with the capacity to sing the (charming) fifth musical note in their voices keep quiet except in the spring.

*

யஸ்ய நாஸ்தி ஸ்வயம் ப்ரஞ்ஞா சாஸ்த்ரம் தஸ்ய கரோதி கிம் |

லோசனாப்யாம் விஹீனஸ்ய தர்பண: கிம் கரிஷ்யதி ||

இயல்பான அல்லது உள்ளார்ந்த பகுத்தறிவைக் கொண்டிராத ஒருவனுக்கு ஒரு அறிவாளி அறிவை அடைய எடுத்துக் கொள்ளும் முயற்சி என்ன லாபத்தைத் தரும்? இரண்டு கண்களையும் இழந்த ஒருவனுக்கு கண்ணாடியினால் என்ன பயன்?

How can the knowledge or the discipline wrought by a scholarly endeavour benefit a person who is destitute of inherent or natural discrimination? What can a mirror do to a person who is destitute of both of the eyes?

*

யஸ்ய நாஸ்தி விவேகஸ்து கேவலம் யோ பஹுஸ்ருத: |

ந ஸ ஜானாதி சாஸ்த்ரர்தாத் தர்வீ  பாகரஸாந்வி ||

இயல்பாக பகுத்தறியும் அறிவைக் கொண்டிராமல் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு, ஒரு அகப்பைக்கு உணவின் சுவை என்னவென்று எப்படித் தெரியாதோ அது போலவே, உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்று ஒரு போதும் தெரியாது.                                                               The person who is devoid of discrimination but who reads widely never knows the (real) meaning, i.e., the (real) essence of the disciplines just as the ladle does not know the relish of a dish.

***

Index :

கவிதையை ரசிப்பது எப்படி?

நல்ல சூக்திகளில் குறை காணுபவன்

அறிவாளிகள் மௌனமாக இருக்கும் சமயம்

இயல்பான பகுத்தறிவு இல்லாதவனுக்கு எவ்வளவு படித்தாலும் பயனில்லை.

 –subham–

tags- குயில் , ஒட்டகம், சுபாஷிதம் 

ஒட்டகங்களுக்கு கல்யாணமாம்! கழுதைகள் கச்சேரியாம்!!

camel-stamp-du-t

Compiled by London swaminathan

Post No.2211

Date: 3rd   October 2015

Time uploaded in London: 13-29

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

கீழே சில அழகான சம்ஸ்கிருதப் பழமொழிகளையும் அவைகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளையும் கொடுத்துள்ளேன்.

1).அங்குலீ ப்ரவேசாத் பாஹு ப்ரவேசம்

விரல் அளவு இடமிருந்தால் உடலையே (தோள் மூல) நுழைத்துவிடுவர்.

ஒப்பிடுக: இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவர்

இந்தி பழமொழி: அங்குலீ பகங்கர் போங்சா பகட்னா

Xxx

2).அதி கஹனம் தமோ யௌவனப்ரபவம் – காதம்பரி

இளமையில் உண்டாகும் இருட்டு ஆழமானது.

ஒப்பிடுக: தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

இளமையில் கல்

Xxx

3).அபராதானுரூபோ தண்ட: – சாணக்யநீதி

குற்றத்துக்கேற்ற தண்டணை

Xxx

4).அம்புகர்போ ஹி ஜீமூதஸ்சாதகைர் அபிவந்த்யதே – ரகுவம்சம்

நீர் நிறைந்த மேகத்தைத் தான் சாதக பட்சிகள் வழிபடும்.

ஒப்பிடுக: பழமரத்தை நாடும் பறவைகள்

பணக்காரனைச் சுற்றி பத்துப் பேர் பைத்தியக்காரனை சுற்றிப் பத்துப் பேர்

ஜப் லகி பைசா காண்ட் மேம், தப் லகி தாகோ யார்

Xxx

5).ஆகரே பத்மராகாணாம் ஜன்ம காச்மணே: குத:  — ஹிதோபதேசம்

புஷ்பராகம் இருக்குமிடத்தில் கண்ணாடி மணிகள் எங்கிருந்து வந்தன?

ஒப்பிடுக: இவன் எப்படி இங்க வந்தான்!!!

xxx

camel india   donkey-240x300

6).உஷ்ட்ராணாம் விவாஹேஷு கீதம் காயந்தி கர்தபா:

பரஸ்பரம் ப்ரஸம்சந்தி அஹோ ரூபமஹோ த்வனி: – சமயோசித பத்ய மாலிகா

ஒட்டகத்தின் கல்யாணத்தில் கழுதைகள் பாடுகின்றன. ஒருவருக்கொருவர் புகழ்ந்து தள்ளினர். என்ன அழகு, என்ன குரல் வளம் என்று!

ஒப்பிடுக: ஜைசா கர், வைசா வர்

ஊண்டோம் கே விவாஹ் மேம் கதே கவையே

ஆபஸ் மேம் ஹீ ஏக் தூஸ்ரே கீ பரசம்ஸா கர்னா

Xxx

7).கஞ்சுகமேவ நிந்ததி பீனஸ்தனீ நாரீ

சிறிய மார்பகமுள்ள பெண், ரவிக்கையை வைதாளாம்!

ஒப்பிடுக: ஆடத் தெரியாத ………….ள் , தெருக்கோணல் என்றாளாம்

Xxx

8).கரீ ச சிம்ஹஸ்ய பலம் ந மூஷிகா

யானைக்குத்தான் சிங்கத்தின் பலம் தெரியும்; எலிக்குத் தெரியாது

ஒப்பிடுக: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை!

Xxx

9).காக யாசகயோர் மத்யே வரம் காகோ ந யாசக: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

காகம், பிச்சைக்காரர் ஆகிய இருவரில் காக்கையே உயர்ந்தது; பிச்சைக்காரர் அல்ல.

(காகத்தினால் பயனுண்டு; அசுத்தங்களை அகற்றுகின்றன)

crow plate crow plate2

Xxx

10).காகோபி ஜீவதி சிராய பலிம் ச புங்க்தே – பஞ்சதந்திரம்

காகம் கூட பலிச் சோற்றை உண்டே நீண்ட காலம் வாழ்கின்றன.

(மனிதர்கள் வயிறு வளர்க்கவே வாழ்கின்றனர். காகமோ, பலிச் சோற்றை உண்டு நமக்கு நீத்தாரின் அருளைப் பெற்றுத் தரும். ஊரையும் சுத்தமாக வைக்க உதவும்)

Xxx

11).காணேன சக்ஷுசா கிம் வா சக்சு: பீடைவ கேவலம் – சாணக்யநீதி

தொடர்ந்து வலி இருந்தால் காதால் என்ன பயன்? கண்களால் என்ன பயன்?

Xxx

12).கிம் வா அபவிஷ்யத் அருண: தமசாம் விபேத்தா

தம் சேத் சஹஸ்ரகிரணோ துரி நாகரிஷ்யத்- சாகுந்தலம்

இருளைப் பிளப்பவனாகிய சூரியன், அருணனைச் சாரதியாகக் கொள்ளாவிடில் இருளிலா மூழ்கி விடுவான்?

Xxx

13).குகர்மாந்தம் யசோ ந்ருணாம் – பஞ்ச தந்திரம்

மனிதர்களின் புகழ் கெட்ட செயலால் முடிந்துவிடும்

Xxxx

14).க்ஷணே க்ஷணே யன்னவதாம் உபைதி ததேவ ரூபம் ரமணீயதாயா: – சிசுபாலவதம்

அழகின் லக்ஷணம், நொடிக்கு நொடி புதுமை அடைவதாகும்.(எது நொடிக்கு நொடி புதுமை அடைகிறதோ, அதுவே அழகு)

ஒப்பிடுக: பெண்களின் ‘பேஷன்’!!!!!!!!!!!!

Xxx

15).க்ஷதே ப்ரஹாரா நிபதந்தி அபீக்ஷணம் – பஞ்ச தந்திரம்

விழுந்த இடத்திலேயே அடி விழுகிறது

ஒப்பிடுக:- பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்.

Xxx

India-stamp5886asiatic-lion-lioness

16).க்ஷுதார்த்தோ ந த்ருணம் சரதி சிம்ஹ: — சாணக்ய சூத்திரம்

சிங்கம் பசித்தாலும் புல்லைத் தின்னாது

ஒப்பிடுக: புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.

-சுபம்–