வேத காலத்தில் வாணிபம் (Post No.5076)

Written by London Swaminathan 

 

 

Date: 4 JUNE 2018

 

 

Time uploaded in London – 18-28

 

Post No. 5076

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

வேத காலம் முதல் நாம் கடல் வணிகம் செய்து வருகிறோம். வேதத்தில் இரு புறமுள்ள கடல்கள் என்ற சொற்றொடர் வருவதால் மேலைக் கடற்கரையையும் கீழைக் கடற்கரையையும் அவர்கள் ஒருங்கே ஆண்டது தெரிகிறது.

சிலப்பதிகாரத்தில் மாசாத்துவான் மகன் கோவலன் என்றும் மாநாய்க்கன் மகள் கண்ணகி என்றும் நாம் பயில்கிறோம். இது அவர்களுடைய பெயர்கள் அன்று. அவை பட்டங்கள் ஆகும். அதாவது தலா ய்லாமா, போப்பாண்டவர், சங்கராச்சார்யார் போன்ற பட்டங்கள். அல்லது டாக்டர், வக்கீல் என்பது போலத் தொழில் பட்டங்கள் எனலாம். இரண்டும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்.

 

சார்த்தவாஹன என்றால் வணிகர் தலைவன். அதாவது வணிகர்கள் ஒரு கூட்டமைப்பு வைத்து அதில் ஒருவரைத் தலைவர் ஆக்குவர். அவர் மஹா சார்த்தவாஹனன் ; தமிழில் மாசாத்துவான். கப்பல் வணிகர்கள்  மஹா நாயக்கன் என்பவரைத் தலவராகக் கொள்வர். அவர் மாநாய்க்கன். ஆக கோவலன், கண்ணகி ஆகியோரின் தந்தை பெயரை நாம் அறியோம் ஆனால் அவர்கள் பட்டங்க ளையே அறிவோம். அக்காலத்தில் ஜாதி முறைக் கல்யாணம் இருந்ததால் வணிகர் குலத்துக்குள் அத்திருமணம் முடிந்தது.

 

சார்த்தவாஹன என்பதற்கு அமரகோஷம் போன்ற ஸம்ஸ்க்ருத நிகண்டுகள் பொருள் தருகையில் “ஒரே/ சம அளவு முதலீடு செய்த வணிகர் குழு” என்று சொல்லும்; அவர்கள் ஊர் விட்டு ஊர் போய் அல்லது நாடு விட்டு நாட்டுக்குப் போய் வியாபாரம் செய்வர்.

 

வேதத்தில் இந்தச் சொல் இல்லாவிடினும் ‘பாணி’ என்ற சொல் உள்ளது. அது வணிகரைக் குறிக்கும்; பிற்காலத்தில் ‘பனியா’ என்ற சொல் வணிகரைக் குறித்தது.

 

வேத காலத்தை அடுத்து வந்த பாணினி என்ற உலகப் புகழ்பெற்ற இலக்கண வித்தகர் (கி.மு. ஏழாம் நூற்றாண்டு) போகிற போக்கில் ஒரு எடுத்துக் காட்டாக ‘உத்தரபத’ (வட பெரும் வழி) என்று சொல்கிறார். அப்படியானால் ‘தென் பெரும் வழி’ ஒன்றும் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.

அதர்வண வேதத்தில் ப்ருத்வி சூக்தத்தில் (பூமி) பல வழிகளில் செல்லும் வணிகர் பற்றிய குறிப்புகள் உள. ஆக வேத காலம் முதல் வணிகம் நடந்தது தெளிவு. அது மட்டுமல்ல; அதே துதியில் பல மொழி பேசும் மக்கள் பற்றிய குறிப்பும் உளது. ஆகவே அக்காலத்திலேயே மக்கள் பல்வேறு மொழி பேசும் பகுதிகளுக்கோ நாடுகளுக்கோ சென்றதும் தெரிகிறது.

 

மக்கள் பயணிக்க பல வழிகள் உளது;

ரதங்களும் மாட்டு வண்டிகளும் செல்ல அவை உள்ளன;

நல்லோரும் தீயோரும் அவற்றில் செல்லலாம்;

அவைகள் எங்கள் கட்டுப்பாட்டில் வரட்டும்;

வழிப்பறி கொள்ளையர்களையும் எதிரிகளையும் விரட்டுவோம்.”

அதர்வ வேதம் 12-47

 

வற்றாது பால் சுரக்கும் பசுக்கள் போல

இந்த பூமியும் எங்களுக்கு ஆயிரம் நதிகள் (வழி) மூலம் வளம் சுரக்கட்டும்;

பல்வேறு மொழிகளையும் சமய வழிகளையும்,

வாழும் இடங்களுக்கு ஏற்ப

பின்பற்றும் பூமி இது

அதர்வ வேதம் 12-45

 

இந்தத் துதியிலிருந்து தெரிவதென்ன?

பூமியில் பல சாலைகள்/ பயண வழிகள் இருந்தன

மக்கள் தொடர்புக்கு இவைகளே சிறந்த வழிகள்

ரதங்களும் வண்டிகளும் அதில் ஓடின;

எல்லோரும் அதில் பயணிக்க முடியும்;

ஆயினும் வழிப்பறி திருடர்கள் உண்டு;

பாதுகாக்கப்பட்ட வழிகள் இன்பம் தரும் பாதைகள் ஆகும்.

அரசனும் அதிகாரிகளும் அவைகளைப் பாதுகாப்பர்.

 

அகஸ்தியர் கடல் குடித்த வரலாறு, விந்திய  மலையை கர்வ பங்கம் செய்த வரலாறு முதலியன மறை பொருளில் வரலாறு உணர்த்தும் நூல்களாகும். கடலைக் குடித்தார் என்றால் அகஸ்தியர்தான் முதலில் வணிகர் குழுவுடன் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றார் என்பது பொருள்.  அவர் விந்திய மலையைக் கர்வ பங்கம் செய்தார் என்றால், விந்திய மலையின் தலையைத் தட்டி, சாலை அமைத்தார் என்பது பொருள். ஆக அகஸ்தியர் காலத்தில் இருந்து இந்தப் பயணம் துவங்கிவிட்டது. அதை நமது புராணங்கள் விளக்குகின்றன.

அந்தக் காலத்தில் வடக்கில் பூபாரம்/ ஜனத்தொகை அதிகரித்தவுடன் சிவபெருமானே அகஸ்தியரை அழைத்து தென் பகுதிக்கு அனுப்பியது ஆளே இல்லாத தென் பகுதிக்கு ஆட்களை குடியேற்றியது தெரிகிறது. அகஸ்தியர் தலைமையில் 18 குடிகள் வந்தனர். இவை இல்லாம் கி.மு.800 முதல் 1000 வரை நடந்ததால் அந்தக் காலத்திலேயே மக்களின் பெரும்பயணம் துவங்கியதை நாம் அறிகிறோம். அதற்கு முன்னதாக ராமன் காலத்தில் கடலோர போக்குவரத்து நடந்தது. காடுகள் வழியே போகச் சாலைகளோ முறையான பாதைகளோ இல்லை அந்தப் பெருமை அகஸ்தியர் என்னும் முனிவரையே /இஞ்சினீயரையே சாரும்!!!

 

–சுபம்–