கம்போடியாவில் மாளய பக்ஷம் (Post No.5482)

RESEARCH ARTICLE WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 28 September 2018

 

Time uploaded in London – 6-48 AM (British Summer Time)

 

Post No. 5482

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

இறந்துபோன முன்னோர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விழா அல்லது புனிதச் சடங்கு புரட்டாஸி மாதத்தில் பௌர்ணமியில் துவங்கி அமாவாஸை முடிய நடைபெறும். அந்த அமாவாஸையை, மஹாளய (மாளய) அமாவாசை என்றும் அதற்கு முந்தைய 15 நாட்களை (பக்ஷம்), மாளய பக்ஷம் என்றும் இந்துக்கள் அழைப்பர்.

 

இதை கம்போடிய பௌத்தர்களும் கொண்டாடுகிறார்கள். இதன் ஒற்றுமையைக் காண்போம்

 

  1. இந்துக்கள் மாளய பக்ஷம் நடத்தும் காலத்தில் (செப்டம்பர், அக்டோபர், புரட்டாசி மாதம்) கம்போடியர்களும் முன்னோர்களுக்கு கடன் செலுத்துவர்.

 

2.இந்துக்களைப் போலவே சோற்றுப் (RICE BALLS) பிண்டங்களை இறந்தோருக்கு அளிப்பர்.

 

3.இந்துக்களைப் போலவே 15 நாள் (பக்ஷம் FORTNIGHT) கொண்டாடுவர்.

 

4.இந்துக்கள் மந்திரம் சொல்லிச் செய்வர். கம்போடியாவில் புத்த பிஷுக்கள் பாலி மொழி (PALI SUTTAS) சுத்தங்களை (சூக்தம்) சொல்லுவர்.

 

  1. இந்துக்கள் மாளய பஷம் என்பர்; கம்போடிய பௌத்தர்கள் ‘சம் பென்’ PCHUM BEN என்பர்.

 

  1. இந்துக்கள், முன்னோர்களை ‘பித்ருக்கள்’ என்று மரியாதையுடன் அழைப்பர். கம்போடியாவில் பாமர மக்களை நம்ப வைப்பதற்காக இறந்தோரின் ‘ஆவிகள்/பேய்கள்’ என்பர்.

 

  1. இந்துக்கள், இறந்தோர்கள் யமலோகத்தில் இருப்பார்கள் என்று சொல்லுவது போல கம்போடியர்களும் யம தர்மனை நினைவு கூறுகின்றனர்.

 

 

  1. ஒரே வேற்றுமை- கம்போடியர்கள், இறந்தோர் நரகத்தின் வாயில் திறந்தவுடன் ஆவிகளாக வெளியே வருவதாகச் சொல்லுவர். ஆனால் இந்துக்கள், அவர்களுடைய முன்னோர்கள் பரம மங்களகரமான ஆசிகளை வழங்குவதற்காக மேலுலகத்திலிருந்து பூவுலகிற்கு வருவதாக நம்புகின்றனர்.

 

ஒரு அதிகாரியோ, அமைச்சரோ நம்முடைய ஊருக்கு வரும்போது நாம் எளிதில் சிரமம் இன்றி மனு கொடுப்பது போல, நம் முன்னோர்கள், பூவுலகிற்கு வருகையில் நாம் எளிதில் ஆஸிகள் பெறும் காலம் இது.

 

  1. மநு தர்ம சாஸ்திரம் முதல் தமிழ் வேதமான திருக்குறள் வரை ஏழு தலைமுறை (எழுமை) பற்றிப் பேசும். இந்துக்களைப் போலவே கம்போடியர்களும் ஏழு தலைமுறைக்கு படைப்பு படைப்பதாக நம்புகின்றனர்.

 

10.இந்துக்கள், வெப்ப மண்டல நாடான இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்ததால் எல்லாவற்றிலும் அரிசி (பிண்டம்), எள், தண்ணீரைப் பயன்படுத்துவர். கம்போடியர்கள் ஊதுவத்திகளையும் மெழுகு திரிகளையும் பயன்படுத்துகின்றனர்.

11.கம்போடிய மாதமான போத்ர்பாத்ரில் (POTRBOTR) இதை அனுஷ்டிப்பதாகச் சொல்லுகிறார்கள். இது பாத்ரபத என்னும் ஸம்ஸ்க்ருத மாதப் பெயர். இதை தமிழர்கள் புரட்டாசி ஆக்கிவிட்டனர். கம்போடியர் போத்ர் போத்ர் ஆக்கிவிட்டனர்.

 

 

இந்தியாவில் பெரும்பாலோர்- காத்மாண்டு முதல் கண்டி வரை– ஏப்ரல் 14 புத்தாண்டு கொண்டாடுவது போல தென்கிழக்காசிய நாடுகள் அனைத்தும் கொண்டாடும். கம்போடியர்களுக்கு ஏப்ரல் 14ம் இந்த மாளய பக்ஷமும் தேசிய விடுமுறை. அவர்கள் வாழ்க்கையில் முக்கியமான பண்டிகை மாளய பக்ஷம். யாரும் புத்தமத கோவிலுக்குப் போகாமல் இருக்க மாட்டார்கள்.

 

இது போல இலங்கைப் பௌத்தர்களும் முன்னோர்களுக்கு படைப்பு படைக்கின்றனர். அவர்கள் எல்லோரும் இறந்துபோன முன்னோரை ‘பேய்’ என்று நினைக்கின்றனர். இந்துக்கள் மட்டும் இறந்தோரை தெய்வ நிலைக்கு உயர்த்தி நம்மை என்றும் ஆசிர்வதிக்கக் காத்திருப்பதாக நம்புகின்றனர்.

 

படங்கள் இன்றைய டெக்கான் க்ரானிக்கிள் DECCAN CHRONICLE பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டவை; நன்றி

 

–சுபம்–