
Post No. 9333
Date uploaded in London – – 3 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞான மொழிகள் – 28
Kattukutty

மின்சாரத்திற்கும், மின்னலுக்கும் உள்ள வேற்றுமைகள் என்னென்ன???
மின்னலுக்கு பில் கட்டவேண்டிய அவசியமில்லை!!!
xxx
ஏன் சிரிக்கிறாய்???
சட்டையின் முதுகுக்குப் பின் பெரிய கிழிசல்………
போய் வேறு சட்டை போட்டுக்கொண்டு வராமல் ஏன் சிரிக்கிறாய் ?
கிழிசல் உன்சட்டையில் !!!!
xxx
நமது உலகில் எட்டு வகை கேலண்டர்கள் உண்டு
LUNAR YEAR -லூனார் வருடம்- 354 நாட்கள்
COMMON YEAR – சாதாரண வருடம் – 365 நாட்கள்
LEAP YEAR – லீப் வருடம் -366 நாட்கள்
JULIEAN YEAR – ஜூலியன் வருடம் 365 நாட்கள்,6மணி நேரம்
SOLAR YEAR- சோலார் வருடம் 365 நாட்கள்,5 மணி நேரம்,48 நிமிடங்கள்,46 வினாடிகள்.
SIDEREAL YEAR – சிட்ரியல் வருடம் 365 நாட்கள் 6மணி நேரம்,
9 நிமிடங்கள், 9 வினாடிகள்
ANOMALISTIC YEAR – அனோமலிஸ்டிக் வருடம் 365 நாட்கள்
6 மணி நேரம், 13 நிமிடங்கள், 49.3 வினாடிகள்
GREGOREAN YEAR – கிரி கோரியன் வருடம் 365 நாட்கள்,5 மணி நேரம், 49 நிமிடங்கள், 13 வினாடிகள்
xxxx
அனபுள்ள ஆசிரியருக்கு
கேள்வி பதில் பகுதியில், “ SCIENCE” என்றால் என்ன என்ற கேள்விக்கு “I KNOW” என்று எழுதியிருக்கிறீர்கள். ஆனால்
ENCYCLOPEDIA வில், SCIENCE என்ற சொல்லுக்கு ஆதாரம்
“SCIENTICA” என்பதே!!! இதன் மூல வார்த்தை “SCIRE”………
அதாவது “TO LEARN” என்று அர்த்தம் !!!
Xxx

திருவாரூர் தியாகராஜா , சிதம்பரம் நடராஜா , காஞ்சிபுரம் வரதராஜா , ஸ்ரீ ரங்கம் ரங்க ராஜா, திருப்பதி கோவிந்தராஜா
ராஜ மான்யத்தை இந்திராவின் அரசாங்கம் ஒழித்த போது
கதை சொல்லும் நீடா மங்கலம் கிருஷ்ண மூர்த்தி பாகவதர்
கூறியது :-
எந்த ராஜாவை ஒழித்தாலும், ராஜ மான்யத்தை நிறுத்தினாலும்
இந்த ராஜாக்களையோ, அவர்களது மான்யத்தையோ எதுவும்
செய்து விட முடியாது.
திருவாரூர் தியாகராஜா – இவரிடம் செல்வம் அதிகமாக இருக்கிறது.
ஆனால் அவற்றை அனுபவிக்கத் தெரியாதவர்…….
சிதம்பரம் நடராஜா – இவருக்கு எந்தச் சொத்தும் கிடையாது.ஆனால்
ஒரு குறையும் இல்லாமல் பல கட்டளைகளின் மூலம் இவருக்கு எல்லாம் நடந்து வருகிறது……
காஞ்சிபுரம் வரதராஜா – இவரிடம் நிறைய செல்வம் இருக்கவும் இருக்கிறது.அதை இவர் தட புடலாக செலவு செய்து அனுபவிக்கவும் தெரிந்தவர்!!!
ஸ்ரீ ரங்கம் ரங்க ராஜா – இவர் நம்மிடம் செல்வம் இருக்கிறதா இல்லையா என்னு
ஒரு கவலையும் இல்லாதவர்.சயன மூர்த்தியாகவே
காலத்தை கடத்திவிடும் திறமை பெற்றவர்!!!இவரைச் சுற்றி இருப்பவர்கள் இவருக்கு செல்வத்தை சேர்த்து விடுகிறார்கள்!!!
திருப்பதி கோவிந்தராஜா – இவர் ஒரு வசூல் சக்கரவர்த்தி!!! எவரையும் விட்டு வைக்க மாட்டார். தனக்கு வேண்டிய அளவற்ற
நிதியை வசூலித்துவிடும தனித்திறமை பெற்றவர்!!!
***


tags- நீடாமங்கலம்,கிருஷ்ணமூர்த்திபாகவதர், மகா ராஜா, இந்திராகாந்தி