
Compiled by London Swaminathan
Date: 5 October 2016
Time uploaded in London: 6-30 AM
Post No.3219
Pictures are taken from various sources; thanks.
Contact swami_48@yahoo.com
ஒரிஸ்ஸா, ஆந்திரப் பிரதேசம், வங்காளம், மத்தியப் பிரதேச எல்லைப் பகுதி காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் கோண்ட் இன மக்களை திராவிடர்கள் வெள்ளைக்கார அறிஞர்கள் முத்திரை குத்தி வைத்துள்ளனர். நட்புறவு ஒப்பந்தம் முதல் நரபலி வரை பலவகை விநோத வழக்கங்களை உடையவர்கள் இவர்கள்.
எல்லா கருப்புத் தோல் ஆட்களையும் திராவிடர்கள் என்று வெள்ளைக்காரர்கள் முத்திரை குத்தினாலும் ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இடையில் “ஸ்நானப் ப்ராப்தி” உறவு கூடக் கிடையாது! இதைப் பற்றி படித்தவர்கள் அவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கலாம்!
காண்டவ இனப் பழங்குடி நாகர்கள் பற்றி மஹாபாரதத்தில் உள்ள விஷயங்களையும், கிருஷ்ணனுக்கும் அவர்களுக்கும் நடந்த மோதலுக்குப் பிறகு அவர்கள் தென் அமெரிக்காவுக்குக் குடியேறி அஸெடெக், மாயன் நாகரீகங்களுக்கு அடிகோலியதையும் முன்னரே எழுதியுள்ளேன். கோண்ட் என்னும் சொல், காண்டவ வனம் என்பதிலிருந்து வந்ததையும் அதிலிருந்தே GONDWANA LAND கோண்ட்வானா (காண்டவ+வன) லாண்ட் என்ற சொல் வந்ததையும் முன்னரே எழுதிவிட்டேன்.

சில வழக்கங்களை மட்டும் காண்போம்.
கோண்ட் இன மக்கள் மண் சுவர் எழுப்பிக் குடிசை கட்டுகின்றனர்.
(சிந்துசமவெளியிலிருந்து விரட்டப்பட்டவர்களாக இருந்திருந்தால் அவர்கள் இப்படி மண்குடிசைகளில் வசிக்காமல் செங்கல் வீட்டில் வசித்திருப்பார்கள். வெள்ளைக்கார திருடன் தத்துப் பித்து என்று உளறியதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு).
அவர்கள் மஞ்சள் முதலியவற்றைப் பயிரிடுகின்றனர். மஞ்சளை இரத்த பலி தொடர்பான சடங்குகளில் பயன்படுத்துவர். மஞ்சளே இரத்தத்தின் சிவப்பு நி ற த்திற்குக் காரணம் என்பது அவர்களின் நம்பிக்கை.
ஆண்களும் பெண்களும் முடியை நன்கு அலங்கரிப்பர். பெண்கள் மலர் சூடி மான் கொம்பு ஊசிகளை கொண்டை ஊசியாகப் பயன்படுத்துவர்.
ஆண்கள் வேஷ்டி போன்ற ஒரு துணியையும், பெண்கள் புடவை போல ஒன்றையும் மேலே சுற்றிக்கொள்வர். பெண்கள் கல்யாணம் ஆகும்வரை காதில் தோட்டுக்குப் பதிலாகக் குச்சியைச் சொருகிக் கொள்வர். கல்யாணமான பின்னர் காதில் தோடுகள் அணிவர். காப்பு, மூக்குத்திகளையும் அணிவர்.
(சில அறைகுரை ஆராய்ச்சியாளர்கள் இந்த மூக்குத்தி அணியும் வழக்கமெல்லாம் வெளி நாட்டிலிருந்து வந்ததென்று எழுதியுள்ளனர். ஆனால் பழங்குடி மக்களிடையே இதை யார் புகுத்தியது?)
பெண்களிடையே ஒழுக்கம் குறைவுதான். பழம் பறிக்க, மீன் பிடிக்க என்று காட்டிற்குள் போவார்கள்; கள்ளத் தொடர்பு ஏற்படும் பின்னர் பெற்றோர்கள் கல்யாணம் செய்துவைப்பர்.
பெண்களுக்கு ஒரு “கோண்டி” சீதனம் தர வேண்டும்; ஒரு “கோண்டி” என்பது ஒரு ஆடு அல்லது ஒரு பன்றி அல்லது, ஒரு பித்தளைப் பானை ஆகும்.
கோண்ட், தனது கிராமத்துகாரரைத் திருமணம் செய்யக் கூடாது (பிராமணர்கள் ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யமாட்டார்கள் என்பதைப் போல)
பெண்ணை, அவளுடைய மாமன் தூக்கிக் கொண்டுபோய், மணமகன் வீட்டில் விட வேண்டும். அவளை ஒரு சிவப்புக் கம்பளத்தில் சுற்றி தூக்கிக் கொண்டு செல்வர் ( பிராமணப் பெண்கள் சிவப்பு நிறக் கூரைப் புடவை கட்டிக் கொண்டு தாலி கட்டிக்கொள்வதையும், மாமன் தோளில் ஏறி மால மாற்றிக் கொள்வதையும் ஒப்பிடுக)

(ஆரியர்- திராவிட என்று பகச் சொல்லி கேளிர் பிரிப்போரைப் பார்த்து நகைக்க இவை எல்லாம் உதவும்).
கிராம எல்லையில் பெண் வீட்டுக்காரர்களை மணமகன் வீட்டுக்காரர்கள் கம்பு கொண்டு தாக்கி வேடிக்கை செய்வர். சில நேரத்தில் பெண் வீட்டுக்காரகள் தா குவதும் உண்டு. மணமகன் வீடு செல்லும்வரை இந்த சண்டை நீடிக்கும். ( பிராமணர் திருமணத்தில் நடக்கும் காசி யாத்திரை, திரு மணத்துக்குப் பின்னர் நடக்கும் நலுங்குப் போட்டிகள் ஒப்பிடற்பாலது)
திருமண விருந்தில் ஒரு பன்றி அல்லது எருமையை வெட்டி உண்ணுவர். குடித்துவிட்டு கூத்தாடுவர். மூன்று நான்கு நாட்களுக்குப் பின்னர் மணமகனின் சகோதரன் ஒரு விருந்து கொடுப்பார்.
பெண்ணே நீ நல்லபடி நடந்துகொண்டால், புலி போல ஒரு மகன் பிறப்பான். கண்டபடி நடந்தால் உனக்கு குரங்குதான் பிறக்கும் என்று சகோதரன் புத்திமதி சொல்லுவான். கூடியிருக்கும் பெரியோர் அனைவரும், உனக்கு நிறைய ஆண்பிள்ளைகள் பிறக்கட்டும் என்று ஆசீர்வாதம் செய்வர்.
சில கோண்ட் இன மக்கள் பெண்ணின் கைகளில் 20 அல்லது 30 பவுண்டு எடையுள்ள பித்தளை விலங்கு பூட்டுவர். அப்படி மூன்று நாட்களுக்கு வைப்பர். அப்பா வீட்டுக்கு (பிறந்தகத்துக்கு) ஓடிவிடக்கூடாதென்பதற்காக.
(அந்தக் காலத்தில் பெண்ணை கடத்தி வந்து கல்யாணம் செய்ததால் இது வழக்கத்தில் வந்திருக்கலாம் (மனுவும் தொல்காப்பியரும் சொல்லும் எண்வகை திருமணங்களில் இவ்வகை இராக்கத திருமணமும் ஒரு வகையாகும்).
சிலந்தியின் சாம்பல்
பிரசவம் பார்க்கும் தாதி கர்ப்பிணியின் வயிற்றில் விளக்கெண்ணை தடவுவார். ஒரு சிலந்தியை மெழுகுவர்த்தித் தீயில் எரித்து சாம்பலை விளக்கெண்ணையில் குழைத்து பிறந்த குழந்தையின் தொப்புளில் தடவுவார். ஒரு மாதம் வரை குங்குமப்பூ/ விளக்கெண்ணை சாந்தையும் பூசுவர்.
பிறந்த ஆறாவது மாதத்தில் பெயர் சூட்டும் வைபவம் நடக்கும். ஒரு அரிவாளையும் அரிசியையும் பயன்படுத்துவர்.முன்னோர்களின் பெயர்க ளைச் சொல்லுவர். மேலிருந்து தொங்கும் அரிவாள் எந்தப் பெயர் சொல்லும்போது நகர்கிறதோ அந்தப் பெயரை குழந்தைக்கு வைப்பர். எல்லோருக்கும் விருந்து படைப்பர்.
கோண்ட் இன மக்களின் ஈமச் சடங்குகளும் வேறுபட்டவையே. சடலத்தை எரித்துவிட்டு அந்த இடத்தில் சமைத்த சோறை வைப்பர்; (பிராமணர்களின் பிண்டக் கிரியை ஒப்பிடுக) மந்திர உச்சாடனம் செய்து உணவைச் சாப்பிடச் சொல்லுவர். அந்த ஆவியை புலி உடலிலோ, பேயின் உடலிலோ புகாமல் இருக்க வேண்டுவர்.
ஒருவர் இறந்த மூன்றாம் நாளன்று இறந்தவரின் உருவ பொம்மை செய்து, அதை இறந்தவரின் வீட்டுக் கூரையில் வைப்பர். எல்லா உறவினர்களும் நண்பர்களும் அதைப் பார்த்து அழுவர். ஏழாவது நாளில் ஒரு எருமை மாட்டை பலி கொடுத்த பின்னர் தீட்டு கழியும்.
சில கோண்ட் இனங்களில் பிணத்தின் காலில் ஒரு ஆட்டை கட்டி தர தர என்று இழுத்துச் செல்லுவர். சுடுகாட்டுக்குச் சென்ற பின்னர் கட்டி அதை அ வி ழ்த்து விடுவர்.
ஈமச் சடங்குகளில் ஆண்களின் நடனமும் இருக்கும். 12ஆம் நாளன்று பெரிய ஆட்டமும் எருமை மாட்டு மாமிசத்துடன் விருந்தும் நடைபெறும்.
(எனது கருத்து:– இறந்தோருக்கு எருமை மாட்டை பலி கொடுப்பது நீலகிரி தோடர்கள் இனத்திலும் உண்டு. சொல்லப்போனால் எங்கு எல்லாம் எருமைகள் வசிக்கின்றனவோ அங்கெல்லாம் இது இருக்கிறது. எமனின் வாஹனம் எருமை என்பதால் இப்படி இருக்கலாம். இந்தோநேஷியாவின் செலிபிஸ் தீவுகளில் 10 எருமைகள் வரை பலி கொடுப்பர்)
நட்புறவு ஒப்பந்தம், நர பலி முதலியன குறித்து அடுத்த பகுதியில் காண்போம்
தொடரும்……………….
You must be logged in to post a comment.