
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 27 December 2018
GMT Time uploaded in London – 8-20 am
Post No. 5842
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
சங்கத் தமிழ் வளர்த்த மதுரை– இயல் இசை நாடகம் — ஆகிய முத்தமிழையும் வளர்த்தது. மதுரை தந்த எம்.எஸ். சுப்புலெட்சுமியை யாரும் மறக்க முடியாது. பரிதிமாற் கலைஞர் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு தமிழ்ப் பணி ஆற்றிய மதுரை வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியின் தமிழ் நாடகங்களை எவரும் மறக்க முடியாது.
அந்தக் காலத்தில் மதுரை, நாடகங்களின் ஆதார பூமியாக விளங்கியது. நாடகம் வளர்த்த சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் ராஜமாணிக்கம், நாடகம் எழுதிய பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோரையும் மறப்பதற்கில்லை.
ஆயினும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் லைப்ரரிக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வாரம்தோறும் செல்லும்போது அந்தக் காலத்தில் தெருக்கூத்து, நாடகங்கள் ஆகியவற்றை எழுதியோர் பட்டியல் ஒரு நீண்ட பட்டியல் என்பது புரிகிறது; தெரிகிறது.
இது டாக்டர் பட்டம் பெறுவதற்கு நிறைய தகவலுள்ள துறை. நானும் அவ்வபோது கண்ட நாடகங்களைப் பற்றிய தகவல்களைப் பேஸ்புக்கில் வெளியிட்டு வந்தேன்.
மதுரையில் இருந்ததொரு நாடகக் கம்பெனி பற்றிய சுவையான விவரம் இதோ:–
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியை 1910ஆம் ஆண்டில் .எஸ். எம். சச்சிதானந்தம் பிள்ளை துவக்கினார். இளைஞர்களைக் (பால்யர்கள்) கொண்டே இதை இயக்கினார். அவர் பல நாடகங்களை இயற்றினார்; அவற்றில் சில:-
கங்காராம் அல்லது கவர்னர்ஸ் கப்
பஞ்சாப் கேசரி
வீர சிவாஜி
அவர் சொல்லும் தகவல்
நல்ல நீதிகளைக் கொண்ட நாடகங்களால் உலகத்தவர்கள் நல்ல நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்பது பெரியோர் அபிப்பிராயம்; எனக்கும் அந்த அபிப்பிராயம் உண்டு.
காலஞ்சென்ற கன்னையாவைப் போல நானும் ஏராளமான பொருட்செலவில் தசாவதாரம் என்ற பிரயாதிமிக்க நாடகத்தை நடத்தி முடித்தேன்.
பிறகு காலப்போக்கை அனுசரித்து ஜனசாரச் சீர்திருத்தம் சம்பந்தமான நாடகம் நடத்த முற்பட்டு
ராஜாம்பாள், மனோஹரன், கள்வர் தலைவன் முதலியன்வும்
பதிபக்தி, பம்பாய் மெயில் முதலியனவும் நடத்தினேன்.
கிண்டியில் நடக்கும் குதிரைபந்தயம் என்னும் சூதாட்டத்தினால் விளையும் தீமைகளை விளக்க ‘கவர்னர்ஸ் கப்’ என்ற இந்த நாடகத்தை எழுதினேன் (ஆண்டு 1935).
வரகவி அ .சுப்பிரமணிய பாரதியிடம் தந்துஅவர் திருத்தியமைத்தபின் அச்சிட்டேன்; அவருக்கு நன்றி
என் நாடகத்தில் பிரதான நடிகர்கள்
டி ஆர் பாபு ராவ், காளி, என். ரத்தினம்










XXX
தமிழ் கூறு நல்லுலகம் சச்சிதானந்தம் பிள்ளைக்கும் நாடக நடிகர்களுக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளது.
TAGS–
சச்சிதானந்தம் பிள்ளை, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, தமிழ் நாடகங்கள், கன்னையா
–SUBHAM–