
Research Article Written by London swaminathan
Date: 8 APRIL 2017
Time uploaded in London:- 17-59
Post No. 3800
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
சிரியா, துருக்கி ஆகிய இரண்டும் முஸ்லீம் நாடுகள். ஆனால் இரண்டு நாடுகளும் சுமார் 1000 ஆண்டுகளுக்கு காஸைட்ஸ், ஹிட்டைட்ஸ், மிடன்னி என்று (Kassites, Hittites, Mitanni) மூன்று வம்சங்களின் கீழ், இந்துக்களின் ஆட்சியில் இருந்தன.
இப்பொழுது ஹிட்டைட்ஸ் (HITTITES) பற்றி நிறைய விவரங்கள் அடங்கிய பெரிய புத்தகம் (துருக்கி, ஆங்கில மொழிகளில்) வெளியாகியுள்ளது. அதில் மூன்று இந்து தெய்வங்களை எளிதில் அடையாளம் காண முடிகிறது. இதோ எனது ஆராய்ச்சி முடிவுகள்:–

1.நயந்தாரா கோவில்
2.துவாதச ஆதித்யர்/ 12 ஆதித்யர்கள்
3.வருணன்
நயனதாரா:–
சிரியாவின் அலெப்போ (Aleppo, Syria) நகருக்கு அருகில் அயன தாரா (Ayn Dara) என்று உலகின் பழமையான கோவில் ஒன்றைக் கண்டுபிடித்துள் ளனர். இது பழைய செய்தி. ஆனால் இங்கிருந்த தெய்வம் யார் என்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியவில்லை. வெறும் ஊகங்கள் மட்டுமே உள்ளன. எனது ஆராய்ச்சி யில் இது நயனதாரா என்ற தேவியின் கோவில் என்று தெரிகிறது. எப்படி?
1.மொழியியல் ரீதியில் சில சொற்களின் முதல் எழுத்து கீழே உதிரும் என்பது ஆராய்ச்சியாளர் அறிந்ததே. சிரியாவில் அவர்கள் சொல்லும் அய்ன் தாரா (Ayn Dara) என்பது நயன தாராவின் சிதைந்த வடிவமே.
2.முதல் முதலில் இந்தக் கோவில் இருக்கும் இடமே, ஒரு மிகப் பெரிய சிங்கத்தின் சிலை கிடைத்ததால் தெரிய வந்தது. சிங்கம் என்பது, துர்கை முதலிய தேவியர்களின் வாஹனம் ஆகும்.
- நயனதாரா என்றால் கண்ணின் கருமணி, கண்மணி (Star of Eye, Iris) என்று பொருள். இதே போல கண்ணை வழிபடும் கோவில் ஹிமாசல பிரதேசத்தில் நைனா தேவி (Nainadevi) என்ற பெயரில் உள்ளது. அதன் பெயர் நயன தேவி. அங்கே நயனம் (கண்) வழிபாட்டிலுள்ளது. 51 சக்தித் தலங்களில் இதுவும் ஒன்று. இதே போலத்தான் நயன தேவி கோவில் சிரியாவிலும் இருந்திருக்க வேண்டும்.
4.நயனதாரா என்ற தேவியின் வடிவம் நேபாளம், பஞ்சாப், ஹிமாசல பிரதேசம் , காச்மீர் முதலிய பிரதேசங்களில் வழிபடும் தேவியின் உருவம்; இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு காஷ்மீரிப் ப்ராமணன். அவருடைய தங்கை விஜயலெட்சுமி பண்டிட்டின் மகள் பெயர் நயந்தாரா சஹல்; சர்ச்சைக்குரிய, புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியை.
- நாம் எப்படி 51 சக்திக் கேந்திரங்களில் துர்க்கைக்கு பல பெயர் சொல்லி, ஊர் தோறும் புதுக் கதைகள் சொல்லி ஒரே தேவியை வழிபடுகிறோமோ அதே போல மத்தியக் கிழக்கு நாடுகளில் அஷ்டார்த்தி, இஷ்டார், அஷ்டோரத் என்று பல பெயர்களில் தேவியரை வணங்கி வந்தனர். அங்கே 3000 தெய்வங்கள் வழிபட்டது பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளேன் அதில் விவரம் காண்க

- மேலும் அய்ன் தாரா கோவிலுக்கு முன்னர் மர்மமான இரண்டு காலடிச் சுவடுகள் (Massive Foot Prints) உள்ளன. அதைத் தவிர வலது கால் ஒன்று கோவிலின் படிக்கட்டில் உள்ளது. இது ஆரய்ச்சியளர்களைத் திகைப்படையச் செய்யும் விஷயம். ஆனால் இந்துக்களுக்கு இதில் புதுமை இல்லை. மணமகளே, மணமகளே வா வா, உன் வலது காலை எடுதுவைத்து வா என்று நாம் பாடுகிறோம். அதே போல அங்கே வலது கால் கோவிலின் படிக்கட்டில் இருக்கிறது. மேலும் இபோதும் நாம் க்ருஷ்ணன் பிறந்த நாளன்று வாசலிலிருந்து பூஜை அறை வரை க்ருஷ்ணரில் கால்களை வரைந்து கோலம் போடுகிறோம். அதாவது க்ருஷ்ணனை வீட்டிற்குள் அழைக்கிறோம். இதுபோல நயனதாரா கோவிலிலும் செய்திருப்பார்கள். இப்பொழுதும் சிரியாவில் பெரிய காலடிச் சுவடுகள் உள்ளன. காலடிச் சுவடுகள், பாத வழிபாடு பற்றி எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இலங்கையின் சிவனொளி பாத மலை முதல் விஷ்ணு கோவில்களில் தலையில் வைக்கும் சடாரி வரையுள்ள காலடிச் சுவடுகள் பற்றி எழுதியுள்ளேன்.
7.நாம் சஹஸ்ரநாமம் என்று சொல்வது போல ஹிட்டைட்ஸ் மக்களும் “கடவுளின் ஆயிரம் நாமங்கள்” என்று சொல்வர். நம்முடைய விஷ்ணு, லலிதா, சிவ சஹஸ்ரநாமங்கள் போல அங்கும் தேவிக்கு சஹஸ்ரநாமம் இருந்திருக்க வேண்டும்
- இதைவிட இந்தக் கோவில் உள்ள நாடு சிரியா என்பதே சூர்ய என்ற (SYRIA=SURYA) சொல்லிலிருந்து வந்ததே. அதற்குச் சான்றாக அங்கு சூரிய வழிபாடு முதன்மையில் இருந்ததை புதிய புத்தகமும் விளக்குகிறது.

Nainadevi Temple, Himachal Pradesh, India
9.சிரியா–துருக்கி பகுதியில்தான் உலகின் மிகப்பழைய சம்ஸ்கிருதக் கல்வெட்டு கிடைத்துள்ளது. அதாவது கி.மு.1350 ஆம் ஆண்டுக்குரிய க்யூனிபார்ம் களிமண் பலகைக் கல்வெட்டில் ரிக்வேத தெய்வங்களின் பெயரைச் சொல்லி உடன்படிக்கை செய்துள்ளனர். கிக்குலி என்பவரின் குதிரைப் பயிற்சி நூல் வடமொழி எண்களுடன் கிடைத்துள்ளது. இது துருக்கி- சிரியா பகுதியில் கிடைத்தது. ஆக அதே கி.மு1300-ம் ஆண்டுக்குரிய அய்ன் தார கோவில் இந்துக் கோவில் என்பதும் பொருத்தமே.
12 துவாதச ஆதித்யர்
சிரியா எல்லையில் துருக்கி நாட்டிற்குள் எழிலிகாயா (Yazikaya) என்னும் இடத்தில் 12 பெரிய உருவங்கள் பாறை
மீது பொறிக்கப்பட்டுள்ளன. இவர்களும் ஹிட்டைட்ஸ் தொடர்புடையனவே. வேதத்தில் 12 ஆதித்யர்கள் என்று சூரியனின் வடிவங்கள் போற்றப்படுகின்றன. இது சூரியனின் பாதையிலுள்ள 12 மாதங்கள், 12 ராசிகள் என்று பொருள்படும். இதைச் சிறப்பிக்கும் வகையில் அங்கே 12 பெரிய உருவங்கள் உள்ளன. நாட்டின் பெயரே சூர்ய (சிரியா) என்று இருக்கும்போது இதில் வியப்பொன்றும் இல்லை.

வருணன் வழிபாடு
சிரியாவின் மிக முக்கிய தெய்வம் தருணாஸ் (Tarhunas) என்று புதிய புத்தகம் கூறுகிறது. நூற்றுக் கணக்கான களிமண் கல்வெட்டுகளைப் படிக்கப் படிக்க புதுப் புது விஷயங்கள் வெளியாகி வருகின்றன. தருணாஸ் (Tarhunas) என்பது வருணன் என்பதன் சிதைந்த வடிவம். இதை புயல், இடி, மின்னலின் தெய்வம் என்று ஹிட்டைட்ஸ் அறிஞர்கள் (Hittitologists) வருணிக்கின்றனர். நாம் இந்திர, வருணன் பற்றிச் சொல்லும் விஷயங்கள் இவை. மழைக்குக் கூட நாம் இந்திர ஜபம் செய்வதில்லை; வருண ஜபம்தான் செய்கிறோம். ஆகவே இடி, மழை தெய்வமான தாருணாஸ்– வாருண –என்பதன் மறு வடிவமே.
ஹிட்டைட்ஸ் பேசிய மொழி சம்ஸ்கிருதத் தொடர்புடைய மொழி (Indo-European) என்பது எல்லா ஆராய்ச்சியாளரும் ஒப்புக்கொள்வதே. அவர்களை அடுத்துவந்த மிடன்னி மன்னர்களின் பெயர்கள் தசரத, பிரதர்தன என்று இருப்பதால் இதில் வியப்படையத் தேவை இல்லை.
மேலும் காசைட்ஸ் நாகரீகம் பற்றி அதிகம் தெரியவில்லை. இவர்களைப் பற்றிய விஷயங்கள் வெளி வருகையில் மேலும் பல புதுமைகள் வெளியாகலாம்.

வேதத்தின் காலம் பற்றி மாக்ஸ்முல்லர் முதலியோர் சொன்னதெல்லாம் தவறு என்பது தெளிவாகி வருகிறது. துருக்கியிலேயே ரிக்வேத மந்திர தெய்வங்கள் பெயரில் கி.மு.1350 வாக்கில் உடன்பாடு கையெழுத்தானதும், ரிக்வேதத்தில் கங்கை யமுனை நதிகள் வரை குறிப்பிடப்பட்டதும் உலகின் பிரம்மாண்டமான நிலப்பரப்பில் வேத முழக்கம் ஒலித்ததை உறுதி செய்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், சிரியா, துருக்கி, ஈரான் ஆகிய பல நாடுகள் ஒரே காலத்தில் — அதாவது கி.மு.1600க்-கு முன்னரே- வேத தெய்வங்களைப் போற்றுவோர் கையில் இருந்ததைக் காட்டுகிறது.
–subham–
You must be logged in to post a comment.