
Written by London swaminathan
Date: 6 FEBRUARY 2017
Time uploaded in London:- 19-56
Post No. 3611
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
தமிழர்களின் நானிலத்துக்கும் யார் யார் தெய்வம், என்ன விளக்கம், எந்தெந்த தொழில் செய்வோர் அங்கு வசிப்பர் என்பதை நாலே வரிகளில் சொல்லும் ஒரு பழைய பாடல் உவமான சங்ரக- இரத்தினச் சுருக்கம் என்னும் நூலில் உள்ளது. எளிதில் நினைவு வைத்துக்கொள்ள இது பேருதவி புரியும்.
காடாகு முல்லை கழிநெய்தலாகுங் கல்லாம்குறிஞ்சி
நாடா மருத நடலை வெம்பாலையிந் நாட்டிற் றெய்வங்
கோடார் கான் வருணன் குகனிந்திரன் கூறுதுர்க்கை
மாடாயர் மீன்புல்லர் குன்றவர் கானவர் மன்னருமே
காடும் காடுசார்ந்த இடமும் = முல்லை
உப்பங்கழியும் கடற்பிரதேசமும் = நெய்தல்
கல்/மலையும் மலை சார்ந்த இடமும் =குறிஞ்சி
நாடு, அதைச் சுற்றிய நெல்வயல் = மருதம்
நடலை வெம் = துன்பம்தரும் வெம்மைமிக்க இடம் = பாலை

தெய்வங்கள் யார்?
முல்லை = கோடு ஆர் கரன்= சங்கு கையில் ஏந்திய விஷ்ணு
நெய்தல் = வருணன்
குறிஞ்சி= குகம்/முருகன்
மருதம் = இந்திரன்
பாலை = எல்லோரும் புகழும் துர்கை

ஒவ்வொரு நிலத்திலும் தொழில் செய்வோர் எவர்?
மாடு மேய்க்கும் ஆயர்/இடையர்
மீன் புல்லர் – வலைஞர், மீனவர்
குன்றவர்- குறவரும்
கானவர்- வேடரும்
மள்ளர் – உழவர்
இதையே தொல்காப்பியம் வேறு வரிசைக் கிரமத்தில் கூறும்:
தொல்காப்பிய பொருள் அதிகாரம் (1-5)
‘’ மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’’
–SUBHAM–