
RANI PADMAVATI; CHITTOOR RANI PADMINI
WRITTEN by London Swaminathan
Date: 15 May 2018
Time uploaded in London – 10-23 AM (British Summer Time)
Post No. 5013
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
தமிழர்கள் வீரத்துக்குப் பெயர் எடுத்தவர்கள். புற நானூற்றில் காணப்படும் வீரத்தாய் வேத காலம் முதல் இருந்து வருவதை முந்தைய கட்டுரைகளில் மொழிந்தேன். வீர மாதா என்பதே ஸம்ஸ்க்ருதச் சொல். வீரம் என்பதும் ஸம்ஸ்க்ருதமே இதிலிருந்து ஆங்கிலச் சொல் ஹீரோ (VEERA=HERO) வந்தது. நிற்க.
இக்கட்டுரையில் யாம் உரைக்க வரும் விஷயம் காஷ்மீரப் புலவன் கல்ஹணன் உரைத்தது தமிழில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருப்பதைக் காட்டுவதாகும்.
கல்ஹணன் ராஜ தரங்கிணியில் சொல்கிறான்:
Courage
The heroic think an object attainable by courage, the timid by caution; otherwise between them there could be little difference. Rajatarangkini of Kalhana 6-363
துணிந்து செய்தால் எதையும் அடையலாம் என்று வீரன் எண்ணுகிறான்; கோழையோ எதிலும் உஷாராகப் போகவேண்டும், கவனமாகச் செல்ல வேண்டும் அப்பொழுதுதான் நினைத்ததைப் பெறலாம் என்கிறான். இதுதான் வீரனுக்கும் கோழைக்கும் உள்ள வேறுபாடு.
இதிலுள்ள தாத்பர்யம் என்ன?
துணிந்தவர்களுக்கே உலகம் கிடைக்கும். நின்று நிதானித்து அசைபோட நினைப்பவனை காலம், வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல அடித்துச் சென்றுவிடும். ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த வீர சிவாஜி, தென்னகத்தில் முஸ்லீம்களை வேரறுத்த விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் இத்தகைய வீரர்கள்.
பழந்தமிழகத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் மாவீரர்களாகத் திகழ்ந்தனர். இதனால் சுமார் 1500 ஆண்டுகளுக்கு தமிழர்கள் ஆட்சி நடந்தது. இது ஒரு சாதனையே! அவர்கள் 1500 ஆண்டுகளுக்குத் தங்களுக்குள் போரிட்டு அழிந்ததும் ஒரு சாதனையே. அதாவது ரிக்கர்ட் புஸ்தகத்தில் (BOOK OF RECORDS) இடம் பெறும் சாதனை. தமிழ் அரசர்கள் போல நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர் உலகில் எவருமிலர்; உட் சண்டை போட்டவர்களும் எவருமிலர். இதற்குக் காரணம் வீரம்.

KITTOOR RANI CHANNAMMA
‘துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சு மெத்தை’ என்று எண்ணியதால்தான் வீர் பாண்டிய கட்ட பொம்மன், மருது சஹோதர்ரகள், சுக தேவ், ராஜகுரு, பகத் சிங், தாந்தியா தோபே முதலிய வீர ர்களைக் கண்டது இந்நாடு.
பெண்களும் வாள் எடுத்து போரிட்டதற்கும் இதுவே காரணம்.
ஜான்ஸி ராணி, துர்கா தேவி, ருத்ராம்பாள், ராணி மங்கம்மாள், கங்காதேவி, சம்யுக்தை எனப் பல வீராங்கனைகளைக் காண்கிறோம்.
‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ – என்பதை அறிந்து போரிட்டவர்களுக்கே வெற்றி கிட்டியது. அப்படி வெற்றி கிட்டாவிட்டாலும் காலத்தால் அழியாத புகழ் கிடைத்தது. அத்தனை வீர ர்களையும் பட்டியலிடுவது கட்டுரையின் நோக்கம் அன்று. கல்ஹணனின் கருத்து இமயம் முதல் குமரி வரை — குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தில் இருப்பதைக் காட்டவே எழுந்தது இக்கட்டுரை.
Death devours lambs as well as sheep
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு

RANI LAXMIBHAI
‘க்லைப்யம் மா ஸ்ம கமஹ’ (2-3) (கோழைத்தனத்தை விட்டு எறி) என்று பகவத் கீதையில் கண்ணன் சொல்லும் ஸ்லோகம், ஸ்வாமி விவேகாநந்தருக்கு மிகவும் பிடித்த ஸ்லோகம். வீரனுக்கு உதவாத ஆண்மையின்மை உனக்கு எங்கிருந்து வந்தது? என்று அர்ஜுனனைத் தட்டி எழுப்புகிறான் கிருஷ்ணன். ‘உத்திஷ்ட’ (எழுந்திரு) என்று கட்டளையிடுகிறான்.
திரு வள்ளுவன் சொல்கிறான்:
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக்கெடும் (குறள் 763)
பொருள்:
பகைவரின் படை ஒரு எலிக்கூட்டம்; அது எவ்வளவு சப்தம் போட்டு என்ன பயன்? பாம்பு மூச்சுவிட்டாலேயே அவை ஓடிவிடும் (763)
கூற்றுடன் மேல்வரினும் கூடிஎதிர் நிற்கும்
ஆற்ற லதுவே படை (765)
எமதர்மனே எதிர்த்து வந்தாலும் அஞ்சாமல் நிற்பதுவே படை எனப்படும்
கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது (772)
முயல் மீது வேலை எறிந்து வெற்றி பெறுவதைவிட யானை மீது வேல் எறிந்து தோற்பது மேல். (வாழ்க்கையில் பெரிய குறிக்கோள் இருக்க வேண்டும்; பெரிய வீரனையும் விழுத்தாட்ட முயற்சிக்க வேண்டும்; சின்ன ஆளை அடித்து விட்டு மார் தட்டுதல் வீரம் அன்று.)
ஆக, கல்ஹணன் சொன்னதை வள்ளுவனும் அழகாகச் சொல்கிறான். அவனுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னான்.
புற நானூற்றில் உள்ள வீரத் தாய் முதலிய எழுச்சி மிகு பாடல்களை வீரத்தாய் பற்றிய என் கட்டுரையில் காண்க.


வீரத் தாயும் வீர மாதாவும் | Swami’s Indology Blog
https://swamiindology.blogspot.com/2012/09/blog-post_23.html
இந்தியா ஒரே நாடு! இந்திய சிந்தனை ஒரே சிந்தனை! “செப்பு மொழி …
September | 2012 | Tamil and Vedas
https://tamilandvedas.com/2012/09
All posts for the month September, 2012. … வீரத் தாயும் வீர மாதாவும் . … வீரத் தாய், வீர …
https://tamilandvedas.com/tag/மேவார்
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) ராஜஸ்தானில், … அவள் ஒரு வீரத்தாய்!
–சுபம்–