பசுமை இயக்கம் பரவட்டும்!

alapuza

எழுதியவர்:–  ச.நாகராஜன்

Date: 11 November 2015

Post No:2319

Time uploaded in London :– காலை- 4-46

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015;Part 2 posted on 7th Nov.;Part 3 on 8th Nov. ;Part 4 on 9th nov.;Part 5 – 11th Nov.

crop

5.பசுமை இயக்கம் பரவட்டும்!

 

உலகெங்கும் சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்தும் விதமாக பசுமை இயக்கம் பரவி வருகிறது. பச்சை நிறம் பாரம்பரியம் பாரம்பரியமாக வளத்துடனும், செழிப்புடனும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடனும் அனைத்து நாகரிகங்களினாலும் போற்றப்பட்டு வருகிறது. ஆகவே பூமியைப் பசுமையாக வைக்க எண்ணும் நல்ல நோக்கத்திற்கு பசுமை  இயக்கம் என்று சூட்டப்பட்டுள்ள பெயர் பொருத்தமானதே!

இந்தப் பசுமை இயக்கத்தின் அங்கமாக புதிதாகக் கட்டப்படும் இல்லங்கள் மற்றும் நிறுவனங்கள் பசுமைக் கட்டிடங்களாக அமைக்கப்படுகின்றன. அதாவது சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு மாசு ஏற்படாவண்ணமும் தூய நீர் தூய காற்று ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படாமலும் ஆற்றலைச் சேமிக்கும் விதத்திலும் இவை அமைக்கப்படுகின்றன. காற்று நீர், ஆற்றல் இவற்றை சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு இவற்றை அனாவசியமாக வீணாக்காமல் பாதுகாக்கும் நடைமுறைகளை பசுமைக் கட்டிடக் கலை கொண்டுள்ளது.

வானளாவ உயரும் கட்டிடங்கள் ஒரு புறம் இருக்க அருகில் திறந்தவெளியாக நிலப்பரப்பு அதிகம் உருவாக்கப்படுவதும் இதன் ஒரு அம்சம் தான்!

இப்படிப்பட்ட பசுமைப் புரட்சியில் அனைவரும் பங்கு பெறலாம்; தன் அளவு முடிந்தவரை இயற்கை ஆதாரங்களை வீணாக்காமல் பாதுகாக்கலாம்.

தேவையற்றபோதெல்லாம் விளக்குகளை அணைப்பது, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, குழாயைத் திறந்து விட்டு வேலைகளைச் செய்யாமல் அளவோடு நீரைப் பயன்படுத்துவது,காம்பாக்ட் ப்ளோரஸண்ட் பல்புகளை வாங்கி வீட்டில் பொருத்துவது, நாம் அன்றாடம் வாங்கிப் படிக்கும் செய்தித் தாள்களை மறுசுழற்சிக்கு உரிய முறையில் அனுப்புவது உள்ளிட்ட ஏராளமான எளிய பழக்க வழக்கங்களை ஒவ்வொருவரும் மேற்கொண்டால் ஆற்றல் சேமிப்பு அதிகமாகும்; ஆதார வளங்கள் வீணாவது குறைவாகும்!

தகவல் புரட்சி ஏற்பட்டு கணினி மயமாகி வரும் இன்றைய சூழ்நிலையில் அடுத்த பெரும் புரட்சியாக பசுமை இயக்கப் புரட்சி ஏற்படப்போவதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். உலகைப் பசுமைத் தாயகமாகக் காப்பதற்கெனவே புதிய புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் அவை சுமார் ஒன்றரைக் கோடி பேருக்கு உலகமெங்கும் வேலை வழங்கும் என்ற நல்ல செய்தியையும் அறிவிக்கின்றனர்.

இந்தப் பசுமைப் புரட்சியின் பெருமை வாய்ந்த ஒரு அங்கமாக நம்மில் ஒவ்வொருவரும் ஆவோமாக!

to be continued………………………….