
படம்: பஞ்சவடியில் வால்மீகி முனிவர்
This article was published already in English
Written by London swaminathan
Date: 12 December 2015
Post No. 2383
Time uploaded in London :–9-38 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

படம்: பஞ்சவடியில் சீதா தேவி
நாசிக்கிலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் பஞ்சவடி என்னும் தலத்துக்குச் சென்றோம். ‘பஞ்ச’ என்றால் ஐந்து, ‘வட’ என்றால் ஆலமரம்; இங்கே ஐந்து ஆலமரங்கள் இருக்கின்றன. இங்குள்ள குகையில் ராம, லெட்சுமணர், சீதை ஆகியோர் தங்கினர். இங்குதான் சூர்ப்பநகை வந்து ராமன் மீது காதல் கொள்ள, அவளுடைய மூக்கை லெட்சுமணன் அறுக்க, மாரீசன் வந்து பொன் மான் வேடம் பூண்டு ராம, லெட்சுமணர்களையும் சீதையையும் ஏமாற்ற, அதே நேரத்தில் ராவணன் தவ வேடம் பூண்டு சீதையைக் கடத்த — ராமாயணம் புதிய திருப்பத்தை அடைகிறது.
ஊருக்குள் நுழைந்தவுடனே ராமாயணக் காட்சிகள், சுவரில் பளிச்செனத் தெரிகின்றன. அருகிலுள்ள பூங்காவில் வால்மீகீ, சுவாமி விவேகாநந்தர் சிலைகளும் உள்ளன.
இந்தக் காட்சிகளையெல்லாம் பஞ்சவடியில் சித்திரமாக செதுக்கியும் வரைந்தும் வைத்துள்ளனர். அருகிலேயே காளா ராம் (கறுப்பு ராமன்) கோவில் இருகிறது.

முனிவர் வேஷத்தில் ராவணன்
(ராமன், கிருஷ்ணன், வியாசர், திரவுபதி ஆகியோர் எல்லாம் கறுப்பர்கள்! ஆரிய- திராவிட பேதம் கற்பிக்கும் மூடர்களுக்கு இவர்கள் உருவம் செமை அடி கொடுக்கும்!!)
காளா ராம் கோவில், மிகவும் நல்ல படிமங்களைக் கொண்ட கோவில். கோவிலுக்குள் சென்று வணங்கிவிட்டு வெளியே வந்து கொஞ்சம் விளக்கு முதலிய பித்தளைப் பொருட்களை வாங்கினோம்.எல்லாம் இந்தியில் எழுதபட்டிருப்பதால் விவரங்களை அறியமுடியவில்லை. இந்தி தவிர தமிழ் முதலிய பிராந்திய மொழிகளிலோ அல்லது ஆங்கிலத்திலோஒ போர்டு இருந்தால் நலம்.
சீதை குகையை, குடிகாரர்கள் மிகவும் மோசமாக்கி விட்டதாக டிரைவர் சொன்னதாலும், இரவில் சென்றதாலும் தொலைவிலிருந்தே பார்த்தோம். அருகில் வேறு ஒரு மண்டபத்தில் எல்லா காட்சிகளையும் உருவங்களாகச் செய்து வைத்துள்ளனர். மாரீசன் வதை, சீதையை அபஹரித்தல் முதலியன சித்தரிக்கப்பட்டுள்ளன. அனைவரும் பார்க்கவேஎண்டிய இடம் இது.

ஐந்து ஆலமரங்களையும் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் பெரிதாக எண்/ நம்பர் எழுதி வைத்துள்ளனர். பொதுவாக மகாராஷ்டிரத்தில் நிறைய ஆலமரங்கள் காணப்படுகின்றன. ஆலமரங்களில் நூல் கட்டி வைத்துள்ளனர். அருகிலுள்ள பூங்காவில் வால்மீகி சிலை, சுவாமி விவேகாநந்தர் சிலை ஆகியன உள்ளன. சுவரில் ராமாயணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
வெளியில் கடைகளில் ஆமை யந்திரம், சூரியன் யந்திரம் முதலினவற்றை விற்றனர் (முந்தைய கட்டுரையில் ஆமை மர்மம் பற்றி படிக்கவும்).

(கறுப்பு ராமன்/ காளா ராம் கோவில்
முக்திதாம் யாத்திரை
பஞ்சவடிக்கு அருகில் முக்திதாமென்ற ஊர் உள்ளது. அங்கு பெரிய சலவைக் கல் கோவில் இருக்கிறது. அதில் ராம லெட்சுமணர் மூர்த்திகளும், 12 ஜோதிர்லிங்க தலங்களின் மாதிரி உருவங்களும் நவக்ரஹ உருவங்களும் உள.
கார்த்திகேயர்/ முருகன் சந்நிதிக்குள் பெண்கள் அனுமதிக் கப்படமாட்டார்கள் என்று எழுதிப் போட்டுள்ளனர். பெண்கள் யாரும் அங்கே வருவதில்லை. இந்த நம்பிக்கை சங்க இலக்கியத்திலும், காளிதாசன் கவிதையிலும் உளது (இது பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே பிளாக்கில் கட்டுரை எழுதியுள்ளேன்).
வடநாட்டில் நாங்கள் சென்ற எந்தக் கோவிலுக்கும் அனுமதிக் கட்டணம் கிடையாது. பட்டு வேட்டி, கறுப்பு-சிவப்பு துண்டுகளின் இடையூறும் கிடையாது. எந்த தலங்களிலும் வியாபாரிகளும், விஷமிகளும் உண்டு. நாம் உஷாராக இருந்தால் ஏமாறமாட்டோம்.

முக்திதாம் கோவிலில் 50 ரூபாய்க்கு கோவில் சாப்பாடு உண்டு. எங்கள் குழுவில் சிலர் வலியுறுத்தவே, அதே காம்பவுண்டிலுள்ள புரோஹித் என்ற ஹோட்டலில் நுழைந்தோம். சாதத்தைத் தவிர மீதி எல்லா, கறி கூட்டுகளும் எண்ணையில் மிதந்தன. ஒரு சாப்பாட்டின் விலை 230 ரூபாய்! தப்பித் தவறி உள்ளே நுழைந்துவிடாதீர்கள்.
முக்திதாம் கோவிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. கோவில் படங்களுடன் ஏதாவது புத்தகம் விலைக்குக் கிடைக்குமா என்று விசாரித்ததில் அப்படி புத்தகம் எதுவுமில்லை. கோவில் நிர்வாகம், எல்லா சிலைகளின் படங்களுடன் புத்தகமோ, பட அட்டைகளோ விற்க வேண்டும். அல்லது ஒரு கட்டணம் வசூலித்துக் கொண்டு, கூட்டமில்லாத நேரத்தில் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும்
பஞ்சவடி, நாசிக், திரயம்பகேஸ்வர் முதலிய இடங்கள் கோதாவரி நதியின் தோற்றுவாய்க்கு அருகில் இருப்பதால், இஅயற்கையை ரசிக்கவிரும்புவோர் பகற்பொழுதில் செல்ல வேண்டும். நாங்கள் திரயம்பகேஸ்வர் கோவிலில் நன்கு மணி நேரம் கியூவில் நின்றதால் இஅயற்கைக் காட்சிகளை ரசிக்க இயலவில்லை.

அனுபவ முத்துக்கள்!!!
கடவுளைப் பார்க்க வேண்டுமானால் மற்ற காட்சிகளையும், காமெராவையும் மறக்கவேண்டும்.
காட்சிகளைக் கண்டுகளிக்க வேண்டுமானால் கடவுளை மறந்து விடவேண்டும் – சுவாமிநாதன் பொன்மொழி
வடக்கத்தி ஹோட்டலில், மசாலாதோசை ‘ஆர்டர் ‘ செய்யாதே. தெற்கத்திய ஹோட்டல்களில் சப்பாத்தி ஆர்டர் செய்யாதே- அவரவர்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பயன்படுத்தவேண்டும் — சுவாமிநாதன் அனுபவ மொழி.
சாமியார் ஆஸ்ரமத்தில் “பார்ட்டிக்கிள் பிஸிக்ஸ்” கேள்விகளைக் கேட்காதே; அறிவியல்கூடத்தில் கடவுள் ஆராய்ச்சி செய்யாதே; அறிவியல் முடியும் எல்லையில் ஆன்மீகம் துவங்குகிறது- சுவாமிநாதன் பொன்மொழி.
வடதுருவத்தில் பெங்குவின் பறவையைப் பார்க்கமுடியாது; தென் துருவத்தில் வெள்ளைக் கரடிகளைக் காணமுடியாது; இருக்குமிடத்தைவிட்டு இல்லாத இடமெல்லாம்………………….
சுவாமிநாதன் அனுபவ மொழி



சூர்ப்பநகையின் மூக்கறுக்கும் காட்சி



பஞ்சவடி கடைகளில் சூர்ய யந்திரம், ஆமை யந்திரம் விற்பனை


பஞ்சவடி காட்சிகள்
-சுபம்-
You must be logged in to post a comment.