
Post No. 8168
Date uploaded in London – – –14 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ச.நாகராஜன்
பாரத ஸ்தலங்களின் பட்டியல் தொடர்ச்சி..
17. தேவாரத் தலங்கள்
தேவாரத் தலங்கள் பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன.
குறிப்பிடத்தகுந்த நூல்கள் : உ.வே.சாமிநாதையர் நூல்கள்
ராவ்பகதூர் வ.சு.செங்கல்வராய பிள்ளை எழுதிய தேவார ஒளி நெறி,தேவார ஒளிநெறிக் கட்டுரைகள் முதலியன.
தி.வெ.கோபாலையர் அவர்களின் பல ஆய்வு நூல்கள்.
இங்கு தரப்படுவது பெரும் அறிஞரான தி.வெ.கோபாலையரின் ஆய்வை ஒட்டியது. அவரது தேவாரம்- ஆய்வுத் துணையில் தரப்பட்டுள்ள பட்டியல் இது.
அகரவரிசையின் படி தரப்பட்டுள்ள ஸ்தலங்களின் பட்டியல் இது: (திரு என்ற அடைமொழி வார்த்தை இருக்காது. திருவையாறு என்பது ஐயாறு எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.)
- அகத்தியான் பள்ளி 2) அச்சிறுபாக்கம் 3) அஞ்சைக்களம் 4) அண்ணாமலை 5) அதிகைவீரட்டம் 6) அம்பர் பெருந்திருக்கோயில் 7) அம்பர்மாகாளம் 8) அரசிலி 9) அரதைப்பெரும்பழி 10) அரிசிற்கரைப்புத்தூர் 11) அவள் இவள் நல்லூர் 12) அவிநாசி 13) அழுந்தூர் 14) அறையணிநல்லூர் 15) அனேகதங்காவதம் 16) அன்பில் ஆலந்துறை 17) அன்னியூர் 18) ஆக்கூர் 19) ஆடானை 20) ஆப்பனூர் 21) ஆப்பாடி 22) ஆமாத்தூர் 23) ஆரூர் 24) ஆரூர் அரநெறி 25) அரூர்ப் பரவையுள்மண்டலி 26) ஆலங்காடு 27) ஆலம்பொழில் 28) ஆலவாய் 29) ஆவடுதுறை 30) ஆவூர்ப்பசுபதீச்சுரம் 31) ஆனைக்கா 32) இடும்பாவனம் 33) இடைச்சுரம் 34) இடைமருதூர் 35) இடையாறு 36) இந்திரநீலப்பருப்பஹம் 37) இரமனந்தீச்சுரம் 38) இராமேஸ்வரம் 39) இரும்பூளை 40) இரும்பைமாகாளம் 41) இலம்பையங்கோட்டூர் 42) இன்னம்பர் 43) ஈங்கோய்மலை 44) உசாத்தானம் 45) ஊறல் 46) எதிர்கொள்பாடி 47) எருக்கத்தம்புலியூர் 48) எறும்பியூர் 49) ஏடகம் 50) ஐயாறு 51) ஒற்றியூர் 52) ஓணகாந்தள்தளி 53) ஓத்தூர் 54) ஓ(ம)மாம்புலியூர் 55) கச்சி அனேகதங்காவதம் 56) கச்சி ஏகம்பம் 57) கச்சிநெறிக்காரைக்காடு 58) கச்சிமேற்றளி 59) கச்சூர் 60) கஞ்சனூர் 61) கடம்பந்துறை 62) கடம்பந்துறை 63) கடம்பூர் 64) கடம்பூர்மயானம் 65) கடவூர் வீரட்டம் 66) கடிக்குளம் 67) கடுவாய்க்கரைப்புத்தூர் 68) கடைமுடி 69) கண்டியூர் 70) கண்ணார்கோயில் 71) கரவீரம் 72) கருகாவூர் 73) கருக்குடி 74) கருப்பறியலூர் 75) கருவிலிக்கொட்டிட்டை 76) கருவூர் ஆனிலை 77) கலயநல்லூர் 78) கலிக்காமூர் 79) கழிப்பாலை 80) கழுக்குன்றம் 81) களர் 82) கள்ளில் 83) கற்குடி 84) கன்றாப்பூர் 85) காட்டுப்பள்ளி (கீழை) 86) காட்டுப்பள்ளி (மேலை) 87) காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சுரம் 88) காழி (சீகாழி உள்ளிட்ட 12 பெயர்களை உடைய தலம் இது) 89) காளத்தி 90) காறாயில் 91) கானப்பேர் 92) கானாட்டுமுள்ளூர் 93) கானூர் 94) கிளியன்னவூர் 95) கீழ்வேளூர் 96) குடந்தைக்காரோணம் (விசுவநாதர்கோயில்) 97) குடந்தைக்கீழ்க்கோட்டம் ( நாகேஸ்வரர் கோயில்) 98) குடமுக்கு 99) குடவாயில் 100) குரக்குக்கா 101) குரங்கணில்முட்டம் 102) குரங்காடுதுறை (தென்) 103) குரங்காடுதுறை (வட) 104) குருகாவூர் 105) குறுக்கைவீரட்டம் 106) குற்றாலம் 107) கூடலையாற்றூர் 108) கேதாரம் 109) கேதீச்சுரம் 110) கைச்சினம் 111) கொடிமாடச்செங்குன்றூர் 112) கொடுங்குன்றம் 113) கொட்டையூர் 114) கொண்டீச்சுரம் 115) கொள்ளம்பூதூர் 116) கொள்ளிக்காடு 117) கோகரணம் 118) கோடி 119) கோடிகர் 120) கோட்டாறு 121) கோட்டூர் 122) கோணமலை 123) கோயில் 124) கோலக்கா 125) கோவலூர் 126) கோழம்பம் 127) கோளிலி 128) சக்கரப்பள்ளி 129) சத்திமுற்றம் 130) சாத்தமங்கை 131) சாய்க்காடு 132) சிக்கல் 133) சிராப்பள்ளி 134) சிவபுரம் 135) சிறுகுடி 136) சிற்றேமம் 137) சுழியல் 138) செங்காட்டங்குடி 139) செம்பொன்பள்ளி 140) சேய்ஞலூர் 141) சேறைச் செந்நெறி 142) சோபுரம் 143) சோற்றுத்துறை 144) தண்டலைநீள்நெறி 145) தருமபுரம் 146) தலைச்சங்காடு 147) தலையாலங்காடு 148) திருந்துதேவன்குடி 149) திலதைப்பதி 150) தினைநகர் 151) துருத்தி (குத்தாலம்) 152) துறையூர் 153) தூங்கானைமாடம் (பெண்ணாடகம்) 154) தெங்கூர் 155) தெளிச்சேரி 156) தென்குடித்திட்டை 157) தேவூர் 158) நணா (பவானி முக்கூடல்) 159) நல்லம் 160) நல்லூர் 161) நல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள்புரம்) 162) நள்ளாறு 163) நறையூர்ச் சித்தீச்சுரம் 164) நனிபள்ளி 165) நன்னிலத்துப் பெருங்கோயில் 166) நாகேச்சுரம் 167) நாகைக்காரோணம் 168) நாட்டியத்தான்குடி 169) நாரையூர் 170) நாலூர்மயானம் 171) நாவலூர் 172) நின்றியூர் 173) நீடூர் 174) நீலக்குடி 175) நெடுங்களம் 176) நெய்த்தானம் 177) நெல்லிக்கா 178) நெல்வாயில் (சிவபுரி) 179) நெல்வாயில் அரத்துறை 180) நெல்வெண்ணெய் 181) நெல்வேலி 182) பட்டீச்சுரம் 183) பந்தணைநல்லூர் 184) பயற்றூர் 185) பரங்குன்றம் 186) பராய்த்துறை 187) பரிதிநியமம் 188) பருப்பதம் (ஸ்ரீ சைலம்) 189) பழனம் 190) பழுவூர் 191) பழையாறை வடதளி 192) பள்ளியின் முக்கூடல் 193) பறியலூர் 194) பனந்தாள் 195) பனையூர் 196) பாசூர் 197) பாச்சில் ஆச்சிராமம் 198) பாண்டிக்கொடுமுடி 199) பாதாளீச்சுரம் 200) பாதிரிப்புலியூர் 201) பாம்புரம் 202) (வன்) பார்த்தான் பனங்காட்டூர் 203) பாலைத்துறை 204) பாற்றுரை 205) புகலூர் 206) புகலூர் வர்த்தமானீச்சுரம் 207) புத்தூர் 208) புள்ளமங்கை 209) புள்ளிருக்கு வேளூர் 210) புறம்பயம் 211) புறவார் பனங்காட்டூர் 212) புனவாயில் 213) புன்கூர் 214) பூந்துருத்தி 215) பூவணம் 216) பூவணூர் 217) பெரும்புலியூர் 218) பெருவேளூர் 219) பேணு பெருந்துறை 220) பேரெயில் 221) பைஞ்ஞீலி 222) மங்கலக்குடி 223) மணஞ்சேரி 224) மண்ணிப்படிக்கரை 225) மயிலாடுதுறை 226) மயிலாப்பூர் 227) மயேந்திரப்பள்ளி 228) மருகல் 229) மழபாடி 230) மறைக்காடு 231) மாகறல் 232) மாணிகுழி 233) மாந்துறை 234) மாற்பேறு 235) மீயச்சூர் 236) மீயச்சூர் இளங்கோயில் 237) முண்டீச்சுரம் 238) முதுகுன்றம் 239) முருகன்பூண்டி 240) முல்லைவாயில் (தென்) 241) முல்லைவாயில் (வட) 242) முக்கீச்சுரம் (உறையூர்) 243) வக்கரை 244) வடுகூர் 245) வலஞ்சுழி 246) வலம்புரம் 247) வலிதாயம் 248) வலிவலம் 249) வல்லம் 250) வன்னியூர் 251) வாஞ்சியம் 252) வாட்போக்கி (இரத்தினகிரி) 253) வாய்மூர் 254) வாழ்கொளிபுத்தூர் 255) வான்மியூர் 256) விசயமங்கை 257) விடைவாய் 258) வியலூர் 259) விளநகர் 260) விளமர் 261) விற்குடி வீரட்டம் 262) விற்கோலம் (கூவம்) 263) வீழிமலை 264) வெஞ்சமாக்கூடல் 265) வெண்காஎஉ 266) வெண்டுறை 267) வெண்ணியூர் 268) வெண்ணெய்நல்லூர் 269) வெண்பாக்கம் 270) வேட்களம் 271) வேட்டக்குடி 272) வேதிகுடி 273) வேள்விக்குடி 274) வேற்காடு 275) வைகல்மாடக்கோயில் 276) வைகாவூர்
இந்தத் தலங்களின் பெருமை, பெயர்க்காரணம், இங்கு நடந்துள்ள திருவிளையாடல்கள், மகான்களின் அற்புதங்கள், இந்தத் தலங்களில் பாடப்பட்ட பாடல்கள் உள்ளிட்ட ஏராளமான சுவையான செய்திகளைப் படித்து உணர்வதற்கு ஒரு வாழ்நாள் போதாது.

tag- பாரத ஸ்தலங்கள்-3
***