
Written by London swaminathan
Date: 3 JULY 2018
Time uploaded in London – 11-19 am (British Summer Time)
Post No. 5175
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
—பாரதியாரின் திருப்பள்ளி எழுச்சி
நேற்றைய கட்டுரையில் பிரம்ம முஹூர்த்தம் பற்றிய தமிழ்ப் பாடல்களைக் கொடுத்தேன். இன்று சில ஸம்ஸ்க்ருத பாடல்களையும் காண்போம்.
எல்லா சங்கராச்சார்ய, சாது, சந்யாஸி மடங்களில் அனைவரும் அதிகாலை4-30 மணிக்கு எழுந்து அனுஷ்டானங்களைத் தொடர்கின்றனர். நாடு முழுக்க ஆர். எஸ்.எஸ் காரர்கள் நடத்தும் முகாம்களில் எல்லோரையும் 4-30 மணிக்கு எழுப்பி விடுகிறார்கள். இந்த நேரத்தில் மனம் மிகத் தெளிவாக இருக்கும். படித்ததும், செய்யும் பயிற்சியும் பன்மடங்கு பலன் தரும்.
விஹாங்க யோகம் என்பதை பரப்பிவரும் சத்குரு தரம் சந்திர தேவ்ஜி, அதிகாலையில் எழுந்திருப்பதோடு பிரஹ்ம முஹூர்த்தத்தின் சிறப்பையும் எடுத்துக்காட்டியுள்ளார் அமிர்த வேளை எனப்படும் நேரத்தில் மனதும் தூய்மையாக இருக்கிறது. வெளியிலுள்ள புறச்சூழலும் தூய்மையாக இருக்கிறது; இதனால் புத்துணர்வு பிறக்கிறது. எதையும் எளிதாகச் செய்ய முடிகிறது என்கிறார்.

இதை அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.
மனிதர்கள் நல்ல ஆரோக்கியமாக வாழ உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகள் சில வகை ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இதில் ஒன்று பிளாஸ்மா கார்டிசால் (PLASMA CORTISOL). இது மன உளைச்சல், மன வடு ஆகியவற்றிலிருந்து விடுபட உதவி செய்கிறது ஏ.ஸி.டி.எச். (ACTH) என்பதன் செல்வாக்கில் ADRENAL அ ட் ரினல் கார்டெக்ஸிலிருந்து இது சுரக்கும். இந்த ஏ.ஸி.டி.எச். காலையில் அதிகமும் மாலையில் குறைவாகவும் சுரப்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால் காலையில் படிக்கக்கூடிய விஷயங்களை அதிகம் நினைவு வைத்துக் கொள்ள முடியும்.
ஆயுர்வேத கணக்குப்படி காலை நேரம் வாத கட்டுப்பாட்டிலுள்ள நேரம் (வாதம், பித்தம், கபம் என்பன மூன்று வகை தோஷங்கள் அல்லது குணங்கள்)
சுவாமி நித்யானஎந்தாவும் பிரஹ்ம முஹூர்த்த்தின் சிறப்பை விதந்து ஓதுகிறார்.
பிரஹ்ம முஹுர்த்தே உத்திஷ்டதேத் ஸ்வஸ்தே ரக்ஷார்த்தம் ஆயுஷே
தத்ர ஸர்வதா சாந்த்யர்த்தம் ஸ்மரேச்ச மதுசூதனம்
-அஷ்டாங்க ஹ்ருதயம்
பொருள்; ஒவ்வொருவரும் பிரஹ்ம முஹூர்த்தத்தில் எழுந்திருப்பதானால் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமான வாழ்வையும் அமைதியையும் பெறலாம். மது சூதனனையும் சிந்திப்பாயாக

ஆயுர்வேத கணக்குப்படி
மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை- கப ஆதிக்கம்
இரவு 10 மணி முதல் இரவு 2 மணிவரை- பித்த ஆதிக்கம்
இரவு 2 மணி முதல் காலை 6 மணிவரை- வாத ஆதிக்கம்
வாதத்தின் ஆதிக்க காலமே யோகப் பயிற்சிகளுக்குச் சிறந்தது.
சீக்கியர்களும் பௌத்தர்களும்
சீக்கியர்கள் ஒரு நாளை எட்டு, ‘மூன்று மணிக்கூறு’களாக (8×3 = 24) பிரித்து அதி காலை மூன்று மணி நேரமே சிறந்தது என்பர்.
பௌத்தர்கள் இந்து தர்மம் சொன்ன யோகத்தையே பின்பற்றுவதால் அதிகாலையில் எழுந்தே பயிற்சி செய்வர்.
இஸ்லாமும் முதல் பிரார்த்தனை அறைகூவலை சூர்யோதயத்துக்கு முன்பாகவே செய்கிறது.
இந்துக்களின் கணக்குப்படி
ஒரு நாழிகை என்பது 24 நிமிஷம்;
ஒரு நாளில் 60 நாழிகைகள்;
ஒரு முஹூர்த்தம் என்பது 48 நிமிஷங்கள்.
கட்டுரையாளர்,—- ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா அவர்கள் செய்துவந்த கணபதி ஹோமங்களுக்குச் செல்வதுண்டு. அவர் வாழ்நாள் முழுதும் சூர்யோதயத்துக்கு முன்னால் – கிட்டத்தட்ட காலை 5 மணி அளவில் ஹோமத்தை முடித்து விடுவார். அந்த நெய்ப்புகை மணம் காற்று ம
ண்டலத்தையும் மனதையும் தூய்மைப் படுத்தும்
இவ்வாறு பல பலன்களைத் தரும் பிரஹ்ம முஹூர்த்ததில் படிப்பது மாணவர்களுக்கு நன்மை பயக்கும். இதற்கு முதல் படியாக இரவு ஒன்பது மணிக்குத் தூங்கச் செல்ல வேண்டும். அதற்கு முதல் படியாக டெலிவிஷன், மொபைல் போனை அணைத்துவிட்டு புஸ்தகம் வாசிக்கத் துவங்க வேண்டும். நித்திரை தேவி நம்மை ஆட்கொள்வது நிச்சயம். காலை 4 மணிக்கு படுக்கையிலிருந்து துள்ளி எழலாம்! இது எனது 20, 30 ஆண்டு அனுபவம். இரவுச் சாப்பாட்டை இரவு 7 மணிக்குள் முடித்தால்தான் தூக்கமும் வரும்; நேரம் கழித்துச் சாப்பிட்டு உடனே உறங்கப் போனால் ‘துக்கம்’ வரும் தூக்கம் வராது; அனுபவ உண்மை.
பிரஹ்ம முஹூர்த்தம் வாழ்க!
Previous Article:
பிரம்ம முகூர்த்தம்- வைகறை துயில் எழு- அவ்வையார் -Part 1(Post No.5172)
–சுபம்–