குற்றம் கண்டுபிடிக்காதே: புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 6 (Post No.3938)

 

 

குற்றம் கண்டுபிடிக்காதே: புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 6 (Post No.3938)

 

 

Research article written by London Swaminathan

 

Date: 24 May 2017

 

Time uploaded in London: 21-15

 

Post No. 3938

 

Pictures are taken from various sources such as Face book, google and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

வள்ளுவர் சொன்னார்,

 

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின்

என்குற்றமாகும் இறைக்கு (திருக்குறள் 436)

முதலில் தன் குற்றம் என்ன என்பதை உணர்ந்து, பின்னர் பிறர் குற்றத்தை ஆராய்ந்து காணக்கூடியவனாக ஒருவன் இருந்தால் அவருக்கு என்ன குற்றம் வரும்?

புத்தர் சொன்னார்

மற்றவர்களுடைய குறைகளை எண்ணிப் பார்க்காதே; அவர்கள் என்ன செய்தார்கள் என்ன செய்யவில்லை என்று சிந்திக்காதே;  உன்னுடைய பாவச் செயல்களை எண்ணிப் பார்.  நீ என்ன செய்தாய், என்ன செய்யவில்லை என்பதை சிந்தித்துப்பார் (தம்மபதம் 50)

 

xxx

 

வாசம் இல்லா மலர்

வள்ளுவர் சொன்னார்,

 

இணரூழ்த்தும் நாறா மலரணையர் கற்றது

உணர விரித்துரையாதார் (திருக்குறள் 650)

 

தான் கற்ற கல்வியின் நறுமணத்தைப் பிறர் அறியாவண்ணம்

எடுத்துரைக்கும் ஆற்றல் இல்லாதவர்கள்,  மலர்ந்து இருந்தும் வாசனை இல்லாத பூங்கொத்து போன்றவர்களே

புத்தர் சொன்னார்

ஒரு அழகான மலர் வாசனை இல்லாமலிருப்பது போலத்தான் ஒருவான் நெய்போலப் பேசிவிட்டு அதைப் பின்பற்றாமல் இருப்பதும் (தம்மபதம் 52)

 

xxx

வெறுப்பு (இகல்)

வள்ளுவர் சொன்னார்,

 

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பாரிக்கும் நோய் (குறள் 851)

 

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

மிகல்காணும் கேடு தரற்கு ((குறள் 859)

 

பொருள்-

வெறுப்பு என்பது, எல்லா உயிர்களையும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்க அனுமதிக்காது. அவைகளை வேறுபடுத்தும் கொடிய நோய் ஆகும்.

 

ஒருவனுக்கு வெறுப்பு இல்லாத போது செல்வம் இருக்கும்; அந்த செல்வம் போவதற்கு அவன் வெறுப்பை மேற்கொள்வான் (விநாச காலே விபரீத புத்தி)

புத்தர் சொன்னார்

 

வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது; வெறுப்பை அன்பினால்தான் வெல்ல முடியும்; இது அழியாத உண்மை (தம்மபதம் 5)

 

xxx

உண்ணா நோன்பும் பொறுமையும்

வள்ளுவர் சொன்னார்,

 

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்

இன்னச்சொல் நோற்பாரின் பின் (திருக்குறள் 160)

 

உணவு உண்ணாமலேயே நோன்பு இருப்பவர்கள் பெரியவர்களே. ஆனால் ஒருவன் சொல்லும் கடும் சொல்லையும் பொறுத்துக் கொள்பவன் அந்த நோன்புடைய பெரியோருக்கும் மேலானவன்

புத்தர் சொன்னார்,

 

தர்ப்பைப் புல்லின் நுனியினால் உணவு எடுத்துக்கொண்டு மாதக் கணக்கில் உண்ணா நோன்பு இருக்கும் முட்டாள், சத்தியதர்மத்தைப் பின்பற்றும் ஒரு மனிதனின் 16-ல் ஒரு பகுதிக்கும் சமம் ஆகான் தம்மபதம்-70

XXX

நாத்திகவாதிகள் பேய்கள்!

 

வள்ளுவர் சொன்னார்,

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் (குறள் 850)

 

உலக மக்கள் உண்டு என்று ஒப்புக்கொள்வதை இல்லை என்று மறுத்துக்கூறும் அறிவற்றவர்கள் மனித வடிவில் வந்த பேய் என்று இகழப்படத் தக்கவர்கள்

புத்தர் சொன்னார்

உண்மையற்ற பொருளை இருக்கிறது என்று எண்ணுவோனும், உண்மையான பொருளை இல்லை என்பானும் என்றும் சத்தியத்தைக் காணவே மாட்டார்கள். அவர்கள் தவறான பாதையில் சென்று வை தப்பிப்போனவர்களாவர் (தம்மபதம் 11)

 

xxx

ஒன்றே செய்க, நன்றே செய்க, இன்றே செய்க

வள்ளுவர் சொன்னார்,

 

அன்றறிவாம் என்னாது அறஞ் செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை (குறள் 36)

 

நாளை செய்வோம், நாளை செய்வோம் என்று ஒத்திப்போடாது, அறஞ்செய்தலைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் உயிருக்குத் துணையாக வரும்

 

புத்தர் சொன்னார்

காலம் தாழ்த்தாது உடனே நல்லது செய்யுங்கள்; கெட்டதிலிருந்து உங்கள் மனது தள்ளியே இருக்கட்டும். ஒரு மனிதன் நல்லது செய்வதை தாமதித்தால் அவன் மனது கெட்டது செய்வதில் இறங்கி ஆனந்தமாக்ச் செயல்படும் (தம்மம் 116.)

 

வள்ளுவர் சொன்னார்,

 

 

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடி உரைந்தற்று (குறள் 208)

ஒருவன் தீங்கு செய்தால் அவன் அதனால் கெட்டுப்போவது நிச்சயம். எப்படி ஒருவனுடைய நிழல் அவன் கூடவே வந்து அவனடியில் தங்குமோ, அது போஅலத் தீமையும் அவனை நிழல்போலத் தொடரும்

புத்தர் சொன்னார்

நல்லவனூகுத் தீங்கு செய்யும் முட்டாள், தன் தலையிலேயே மண்ணைப் போட்டுக் கொண்டவன் ஆவான். பாவமற்ற தூய்மையான ஒருவனுக்குத் தீங்கு செய்தால் அந்தத் தீங்கு காறில் வீசி எறிந்த தூசி ஒருவன் முகத்திலேயே வந்து விக்ழுவது போல தீங்கு செய்தவனையே வந்து சேரும் (தம்மபதம் 125)

 

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-5 (3928) 21 May 2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-4 (3914) 16th May 2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-3 (3901) 12-05-2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-2 (3899) 11-05-2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-1(3896) 10th May 2017

 

 

–to be continued