
WRITTEN by London Swaminathan
Date: 23 May 2018
Time uploaded in London – 17-28 (British Summer Time)
Post No. 5039
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘அங்குத்த நிகாய’ என்ற புத்த மத நூலுக்கு புத்தகோஷர் எழுதிய பாஷ்யத்தில் பின்வரும் சம்பவத்தை விவரிக்கிறார்:
கப்பினா என்ற அரசன் 1000 மந்திரிகளுடன் கங்கைக் கரைக்குச் சென்றான்.
(இந்துக்கள் 60,000 என்பதை பயன்படுத்துவது போல பௌத்தர்கள் 500 அல்லது 1000 என்ற எண்ணைப் பயன்படுத்துவர். பொருள்= அதிகமான)
கங்கை நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. மன்னன் சொல்கிறான்: படகுகள் செய்ய நம்மிடம் அடிமை வேலை ஆட்களோ நம்முடைய சேவகர்களோ இல்லை. ஆனால் வானம் முதல் பூமி வரை புகழும், அருளும் பரப்பிய நம் குருநாதர் உண்மையிலேயே ஞானம் பெற்ற புத்தராக இருப்பாரானால் என்னுடைய குதிரைகளின் குளம்புகளில் கூடத் தண்ணீர் படாமல் இருக்கட்டும். இதைச் சொல்லிவிட்டு மன்னன், தனது குதிரைகளை ஆற்றின் மீது நடக்கவிட்டான். குதிரைகளின் காலில் ஒரு துளி கூடத் தண்ணீர் படவில்லை மறு கரைக்குச் சென்றனர்.
நெடுந்தொலைவு சென்றனர். மீண்டும் ஒரு ஆறு வந்தது. அதுவோ ஆழமான நதி. ஆயினும் முன்னர் சொன்ன ஒரு சொல்லை வைத்துக் கொண்டே துணிச்ச்சலாக குதிரைகளை விட்டனர். அவை நனையாமல் ஆற்றின் மீது நடந்து சென்றன. கடைசியாக சந்திரபாகா என்ற பெரிய நதியை அடைந்தனர். அங்கும் புத்தர் பெயர் சொல்லி எளிதில் நதி மீது நடந்தனர். இறுதியில் மன்னன் புத்தர் காலடியில் சரண் புகுந்தான்.

அவனது மஹாராணி அநோஜாவும் இச்செய்தியைக் கேட்டாள். அவள் 1000 ரதங்களுடன் புறப்பட்டாள். கங்கை நதிப் பிரவாஹத்தைக் கண்டவுடன் தன் கணவன் செய்தது போலவே புத்தர் உண்மையான குருவானால் எனக்கும் வழி திறக்கட்டும் என்றாள். அப்படியே நிகழ்ந்தது.
ஆக ரிக் வேதத்தில் துவங்கி பைபிளின் புதிய ஏற்பாடான பீட்டர் சம்பவம் வரை இந்து, சமண, பௌத்தர்கள் ‘நீரின் மேல் நடந்த அற்புதம்’ உள்ளது (விவரங்களை முதல் இரண்டு கட்டுரைகளில் காண்க)
இன்னொரு அற்புதமும் புத்தர் கதையில் இணைக்கப்பட்டுள்ளது. மன்னன் கப்பினாவும், மஹா ராணி அநோஜாவும் புத்தர் பக்கத்தில் வந்து நின்ற போது ஒருவரை ஒருவர் காண முடியாதபடி புத்தர் செய்துவிட்டாராம். ஏனெனில்
காதல் மலர்ந்து விடும்; காமம் பரவிவிடும் என்று.
இருவரும் பௌத்த மதத்தைத் தழுவிய பின்னர் அந்த மாயத் திரையை புத்தர் விலக்கி விட்டாரம். அதாவது ஒருவரை ஒருவர் கண்டனர். ஆனால் காமம் மலரவில்லை.
இதே போல மஹாவம்ச பாஷ்யத்திலும் உளது. இவை எல்லாம் ரிக்வேத துதியின் எதிரொலி என்றால் மிகை ஆகாது.
திலீபன் என்ற ரகுகுல மன்னன் நீரின் மீது சென்ற போது அவன் தேர் தண்ணீரில் மூழ்கவிலை என்று மஹாபாரதம் பகரும்.
இதே போல யசா என்பவர் புத்தரிடம் ஓடிச் சென்றவுடன் அவனுடைய அம்மாவுக்கு வருத்தமாம; கணவனை விரட்டி மகனக்கூட்டி வர அனுப்பினாள் புத்தரிடம் அவர் போனார். என் மகன் இங்கே வந்தானா? என்று கேட்டதற்கு புத்தர் ஈரெட்டாக, மழுப்பலாகப் பதில் தந்தார்; யசனை கண்ணுக்குத் தெரியாதபடி மறையச் செய்து விடுகிறார்.
அவனது அப்பாவுக்கு ஞான உபதேசம் செய்து மதம் மாற்றிய பின்னர் கண்ணுக்குத் தெரியாமல் வைத்திருந்த யசனக் காட்டுகிறார். யசனைத் தாயின் துயரத்தைத் துடைக்க த்நதை அனுப்பிய காலையில் புத்தரும் அவஓடு சென்று யசனின் தாயார், மனைவி மகள் ஆகியோரையும் மதம் மாற்றுகிறார்.
இப்படிப் பல கதைகள் பௌத்த நூல்களில்!! புத்தரே நீரின் மீது நடந்ததாகவும் கடலின் மீது பறந்து இலங்கைக்கு வந்ததாகவும் சில கதைகள் உண்டு. ஏசு பற்றியும் இப்படிப் பல கதைகள் உண்டு.
–சுபம்–