ஆண் குழந்தைக்கு ஏன் மதிப்பு அதிகம்?- மநுநீதி நூல் -44 (Post No.7142)

மநு நீதிச் சோழன்

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 26 OCTOBER 2019

British Summer Time uploaded in London – 18-36

Post No. 7142

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

இதுவரை 8 அத்தியாயங்களை முடித்து 9-ம் அத்தியாயத்தில் 120 ஸ்லோகம் வரை கண்டோம். மநு  நீதி நூல் –44 ம் பகுதியில் மேலும் சில முக்கிய விஷயங்களை முதலில் புல்லட் (BULLET POINTS) பாயிண்டுகளில் தருகிறேன். பகுதி-4-10-2019ல் தேதி இந்த பிளாக்கில் பதிவிடப்பட்டது

இதோ இன்று மநு நீதி நூல் – பகுதி 44

ஒன்பதாம் அத்தியாயம் 123 முதல் காண்போம்

ஆண் குழந்தைக்கு ஏன் மதிப்பு அதிகம்?

இந்தப் பகுதியில் சொல்லப்படும் விஷயங்கள் இப்போது பயனற்றவை. ஆராய்ச்சியளருக்கு மட்டும் பயன்படக்கூடிய விஷயங்கள்தான். மநு சொல்லக்கூடிய 12 வகை புத்திரர்கள் பற்றிய விதிகள் பின்பற்றப்பட்டனவா என்பதே சந்தேகம். ஏதோ ஒரு காலத்தில் இவை எழுதப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சில சுவையான செய்திகளும் உள.

பிள்ளைக்கு ஏன் `புத்`ரன் என்று பெயர்? ஏன் என்றால் அவன் `புத்` என்னும் நரகத்திலிருந்து அவனது தந்தையை விடுவிக்கிறான். இதனால்தான் ஆண் குழந்தைகளுக்கு மதிப்பு அதிகம்- 9-138

ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் சம அளவில் இருப்பது உலகில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நீதியை நிலைநாட்ட உதவும். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்; பெண்கள் அளவுக்கு அதிகம் உள்ள சமுதாயத்தில் என்ன நிகழும்? ஒருவனுக்கு பல பெண்கள் என்ற அவல நிலை ஏற்படும். பின்னர் திரைப்படங்களில் காணப்படும் நீலாம்பரிகள் அதிகரிக்கும். கொலை, சதி முதலியன அதிகரிக்கும்.

மேலும் பழைய காலத்தில் ஆண் மட்டுமே சம்பாதித்து பெரிய குடும்பங்களைப் பராமரித்தான். உலகம் முழுதும் முக்கியத்தொழில் வேளாண்மையும் போர் புரிதலுமே. ஆகையால் நாட்டைக் காக்க வீர மகன்கள் தேவைப் பட்டது; வீரமாதா என்ற கொள்கையினை வேதத்திலும் புறநானூற்றிலும் காண்கிறோம் ஆகையால் அப்போது ஆண்களே விரும்பப்பட்டனர்.

போரில் சண்டையிட்டு இறந்தால் சொர்க்கத்துக்கு நேரடி டிக்கெட் கிடைக்கும் என்று புறநானூறும், பகவத் கீதையும், குரானும் சொல்கிறது.

எந்த ஒரு நூலையும் மதிப்பிடுவதற்கு முன்னர் அது எப்பொழுது எழுதப்பட்டது? அதை அப்படியே பின்பற்றியதற்கு ஆதாரம் உளதா? மேலும் அதே காலத்தில் வேறு சமுதாயங்கள் எப்படி இருந்தன? என்பதையெல்லாம் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.

சந்திரனுக்கு ஏன் 27 மனைவிகள்?

மநு வேறு ஒரு சுவையான செய்தியையும் சொல்கிறார் (9-128)

இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் யார் மூத்தவன்? ஏனெனில் மநுவின் வாதப்படி மூத்தவனுக்கே அதிகம் சொத்துரிமை; ஏனெனில் அவன் தான் நீர்க்கடன் செலுத்தி முன்னோர்களை நரகத்திலிருந்து விடுவிக்கிறான். இரட்டைக் குழந்தைகளில் யார் இரண்டாவதாக தாயின் ஜனன உறுப்பிலிருந்து வெளி வருகிறதோ  அந்தப்பிள்ளையே மூத்தவன். ஏனெனில் அதுதான் முதலில் உருவான கரு. வை யெல்லாம் உரைகாரர்களின் வியாக்கியானம் (9-126)

9-126 ல் மநு சொல்லும் இந்திரன் துதி ஐதரேய பிராஹ்மண (6-3) நூலில் வரும்  சுப்ரஹ்மண்யா துதிகள் என்பதையும்

உரைகாரர்கள் சு ட்டிக்காட்டுவர்.

சரி, ஒருவருக்கு ஆண் குழந்தையே இல்லை; அப்படியானால் அவருக்கு நரக வாசம்தானா? இல்லை. அவருக்குப் பிறந்த பெண்களின் குழந்தைகள் நீர்க்கடன் செலுத்துவர் ( இறந்து போன மூதாதையருக்கு).

பாருங்கள்; அந்தக் காலத்தில் தட்சனுக்குப் பிறந்த 50 பெண்களை எப்படி மணம் செய்வித்தான் என்று (9-129).

தட்சன் 50 பெண்களில் பத்துப் பேரை தர்மனுக்கும், 13 பேரை காஸ்யபருக்கும் 27 பேரை சோமனுக்கும் (சந்திரன்) கொடுத்தான் அல்லவா?

மக்களைப் பெற்ற மகராசி

ஒருவனுக்குப் பிறக்கும் மகன்,  தந்தையைப் போன்றவன்.மகளோ மகனுக்கு சமமானவள்; அப்பாடியிருக்கையில் அவளுக்கு சொத்துரிமையை எப்படி மறுக்க முடியும்? 9-130

தட்சனின் கதை மஹாபாரஹத்திலும் உள்ளதை (1-70; 12-329-57) உரைகாரர்கள் எடுத்துரைப்பர்.

பின்னர் 12 வகை உறவினர்களில் எந்த ஆறு பேர் நீர்க்கடன் செலுத்தலாம், எந்த ஆறு பேர் செலுத்த முடியாது  என்றும் (9-158 முதல்) விளக்குகிறார்.

இவையெல்லாம் ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் பாகப் பிரிவினை சண்டை வரும்போது பயன்பட்டிருக்கலாம்.

பிராமணனுக்கு 4 மனைவி

ஒரு பிராஹ்மணனுக்கு 4 மனைவி இருந்தால் என்ன நிகழும்? 9-149

கல்யாணமாகாத பெண் தகப்பன் வீட்டில் ரகசியமாகக் குழந்தை பிறந்தால் என்ன நிகழும்? (9-172) என்றெல்லாம் மநு விவாதிக்கிறார். அபூர்வமாக இப்படியெல்லாம் நிகழக்கூடும் என்பதை யோசித்து எழுதிய மநு மஹா ‘ஜீனியஸ்’தான். எதையும் அவர் மறைக்கவும் இ ல்லை; மறக்கவும் இல்லை.

ஆனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால், பாரத நாட்டில் ஒழுக்கமிக்க சமுதாயமே இருந்தது. இதை 2000 ஆண்டுகளாக வந்த வெளிநாட்டு யாத்ர்ரீகர்கள் எழுதி வைத்துள்ளனர். இந்த நாட்டில் எதுவும் பத்திரத்தில்  எழுதுவதில்லை இல்லை. வாய்ச்சொல் போதும் (சத்தியம்) ; அவ்வளவு நேர்மையானவர்கள் என்றும் எழுதி வைத்துள்ளனர். மேலும் பல விஷயங்களை ஸ்லோகங்களில் காண்க .

up to 9-220

–subham–