
பெரியோருக்கு வந்தனம் சொன்னால் என்ன கிடைக்கும்? மநு பதில் (Post No.4871)
WRITTEN by London Swaminathan
Date: 1 April 2018
Time uploaded in London – 15-06 (British Summer Time)
Post No. 4871
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

மநு நீதி நூல்- Part 14 (Post No 4871)
குருவின் ஆசனத்திலும் படுக்கவும் உட்காரவும் கூடாது; ஒரு மாணவன் தனது படுக்கையில் படுத்திருக்கும் போது அல்லது உட்கர்ந்திருக்கும்போது குரு வந்தால் எழுந்து நின்று வந்தனம் (வணக்கம்) செய்ய வேண்டும். 2-117 (235)
வயதிலும் கல்வியிலும் பெரியவர்களானவர்கள் வரும்போது ஒருவன் உடகார்ந்திருந்தால் அவனுடைய பிராண வாயு மேலெழுந்து வெளியே செல்ல முற்படும்; எழுந்து நின்றால் அது சம நிலையை அடையும். 2-118 (236)
நான்கு கிடைக்கும்!
பெரியார்களை நாள்தோறும் வந்தனம் செய்கிறவனுக்கும் தரிசிக்கிறவனுக்கும் நான்கு கிடைக்கும்:- அவையாவன- ஆயுள், கல்வி, புகழ்/கீர்த்தி, பலம் 2-119 (237)
பெரியோர்களுக்கு வணக்கம் சொல்லுகையில் தன்னுடைய பெயர், குலம், கோத்திரம், தான் படிக்கும் வேதம், ஷாகை ஆகியவற்றைச் சொல்லி அபிவாதனம் செய்ய வேண்டும்.
அபிவாதனம்– மிகவும் அடக்கத்துடன் குனிந்து எதிரேயுள்ள பெரியோரின் காலைத் தொட்டுச் சொல்லுதல்
யாருக்கு ஆசீர்வாதம் செய்யத் தெரியாதோ அவர்களுக்கும் பெண்களுக்கும் வணக்கம் சொல்லுகையில் அபிவாதயே மந்திரம் சொல்லத் தேவை இல்லை. தன்னுடைய பெயரை மட்டும் சொன்னால் போதும்
பெயரைச் சொன்ன பின்னர் ‘போ’ (தாங்கள் = தங்களை வணங்குகிறேன்) என்று சொல்லி முடிக்க வேண்டும்.அந்த சப்தமானது பெயர்களின் ஸ்வரூபம் (நிறைவு பெற்றது) என்று ரிஷிகளால் சொல்லப்படுகிறது.
சிறியோர்கள் வந்தனம் சொல்லும்போது பெரியோர்கள் “நீ நீண்டகாலம் வாழ்வாயாக” என்று வாழ்த்த வேண்டும்; சம்ஸ்க்ருதத்தில் ஆயுஷ்மான் பவ,
என்று வந்தனம் சொன்னவர் பெயரை நெடில் எழுத்தில் சொல்ல வேண்டும் (உ.ம். ஆயுஷ்மான் பவ ஸ்வாமிநாதா, கார்த்திகேயா)
இவ்வாறு எந்தப் பிராமணனுக்கு ஆஸீர்வாதம் செய்யத் தெரியவில்லையோ அவனுக்கு வந்தனம் செய்யக்கூடாது- அவன் சூத்திரனுக்குச் சமம்.
இவ்வாறு வணக்கம் செய்பவனை – பிராமணனாக இருந்தால் குசலம் (நலமாக இருக்கிறீர்களா?) விசாரிக்க வேண்டும்; க்ஷத்ரியனாக இருந்தால் நோயற்ற வாழ்வு வாழ்கிறீர்களா? எனக் கேட்க வேண்டும்; வைஸ்யனாக இருந்தால் நல்ல பணம் வருகிறதா? என்றும் சூத்திரனாக இருந்தால் சுகமாக இருக்கிறீர்களா? என்றும் கேட்கவேண்டும்.
யாகம் செய்வதற்காக தீக்ஷை அணிந்தவன் – வயதில் சிறியவனாக இருந்தாலும் அவரைப் பெயரைச் சொல்லி அழைக்கக்கூடாது. ‘போ’, ‘பவான்’ (தாங்கள்) என்றே அழைக்க வேண்டும்
வயதான மாதர்கள் பிறருடைய மனைவியாகவோ, உறவினர் அல்லாதவர்களாகவோ இருந்தால் ‘பவதி’, ‘சுபகே’, ‘பகினி’ என்று அழைக்க வேண்டும் அதாவது அவர்களை அக்கா, அம்மா, அம்மணி என்ற மரியாதையுடன் நடத்துவதாகும்.
அம்மான், சிற்றப்பன், பெரியப்பன், மாமனார், யாக புரோகிதர்கள், குரு வந்தால் எழுந்து நின்று அபிவாதனம் செய்து மரியாதை செய்தல் வேண்டும்.
அண்ணன் மனைவியை நாள் தோறும் வணங்க வேண்டும். ஞாதி- சம்பந்திகளின் மனைவிமார்களை ஊருக்குப் போய் வந்தபோது மட்டும் வணங்க வேண்டும்- 132
பெரிய அத்தை, தாயுடன் பிறந்த பெரிய தாய், சிறிய தாய்- ஆகியோரிடத்தில் தாயைப் போல மரியாதை காட்டவேண்டும்; ஆனால் தாயார், இவர்கள் எல்லோரையும் காட்டிலும் உயர்ந்தவள்

யாரை நண்பன் ஆக்கலாம்?
ஓர் பட்டணம், ஊரில் வசிப்பவன் தனக்கு பத்து வயது மூத்தவனோடும், சங்கீதம் முதலிய வித்தைகள் தெரிந்தவன் ஆனால் ஐந்து வயது மூத்தவனோடும், வேதம் தெரிந்திருந்தால் மூன்று வயது மூத்தவனோடும், ஞாதி ஆகியோருடன் கொஞ்சம் வயது வயது மூத்தவனோடும் சிநேகம் செய்யலாம் (நட்புறவு கொள்ள வேண்டும்).
பத்து வயதுள்ள பிராமணனையும் 100 வயதுள்ள க்ஷத்ரியனையும் தகப்பன்- பிள்ளயாக கவனிக்க வேண்டியது. அதாவது பிராமணனை தகப்பன் மரியாதையுடனும் க்ஷத்ரியனை புத்திரன் மரியாதையுடனும் நடத்த வேண்டும்.
பூஜிக்கத்தக்க 5 அம்சங்கள்
நியாயமாய்த் தேடிய பொருள், சிற்றப்பன் முதலிய உறவினர்கள், உயர்ந்த வயது, நல்ல ஒழுக்கம், கல்வி ஆகிய ஐந்தும் ஒருவனை பூஜிப்பதற்குரிய /மதிப்பதற்குரிய ஐந்து அம்சங்கள் – வரிசைக் கிரமத்தில் பார்த்தால் இவை ஒன்றைக் காட்டிலும் ஒன்று உயர்ந்தது. இந்த ஐந்து அம்சங்/தகுதி/களில் ஏதேனும் இரண்டு, மூன்று அம்சங்கள்/தகுதிகள் உடையோரை ஒன்று மட்டுமே உடையவர்கள் பூஜிக்க வேண்டும்; 90 வயதுக்கு மேற்பட்ட சூத்திரர்களுக்கு எல்லோரும் மரியாதை செய்ய வேண்டும்.
90 வயதுக்கு மேற்பட்டவன், நோயாளி, சுமையாளி, மாதர்கள், அநுஷ்டானமுள்ள பிராமணர்கள்,அரசன், கலியானம் செய்யப்போகும் மாப்பிள்ளை ஆகியோருக்கு வண்டி வாஹனங்களில் வருவோர் வழிவிட வேண்டும்.
இவர்களில் பலரும் வந்தால் அனுஷ்டானமுள்ள பிராமணனுக்கும் மன்னனுக்கும் முதலில் வழிவிட வேண்டும். பிராமணனும் அரசனும் வந்தால் பிராமணனுக்கே முதலில் வழிவிடவேண்டும்.

யார் ஆச்சார்யன்?
எவன் உபநயனம் செய்வித்து வேத, யாக மந்திரங்களையும், வேதாந்தங்களையும் ஓதுவிக்கிறானோ, அவனே ஆச்சார்யன் எனப்படுவார்.
எவன் கர்ப்பதானம் முதலிய கிரியைகளைச் செய்வித்து ஜீவனோபாயத்தைக் கற்பிக்கிறானோ அவன் குரு எனப்படுவான்.
எவன் அக்னிசந்தானம், அக்னிஷ்டோமம் முதலிய யாகங்களைச் செய்விக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு அதனைச்
செய்விக்கிறானோ அவனை ரித்விக் என்று சொல்லுவார்கள்.
எவன் ஸ்வரத்தோடு கூடிய வேத ஒலியினால் தன் காதுகளை நிறைவிக்கின்றானோ அவன் தாய், தந்தைக்குச் சமமானவன்; அவனுக்கு ஒருக்காலும் துரோகம் செய்யக் கூடாது.
உபத்தியாயனைவிட ஆச்சார்யன் பத்து மடங்கு உயர்ந்தவன். ஆச்சார்யனைவிட உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்வித்த தந்தை நூறு மடங்கு உயர்ந்தவன்.. அவரைவிட ஒருவனுடைய தாய் ஆயிரம் மடங்கு உயர்ந்தவள்.
பெற்ற தகப்பனை விட இரண்டாவது ஜன்மம் உண்டாக்கும் பிரம்மோபதேசம் செய்த ஆச்சார்யன் உயர்ந்தவன்; அவ்விரண்டாவது பிறப்பானது இம்மையிலும் மறுமையிலும் அழியாதது.
மாதாவும் பிதாவும் புணர்ந்து அதன் காரணமாக யோனி வழியாகப் பிறக்கும் உடல் மிருகங்களைப் போல உறுப்புகளை மட்டும் உண்டாக்கும் (2-147)

எனது கருத்து
மேற்கூறிய ஸ்லோகங்கள் பற்றி எனது கருத்துகள்:
வயதானோருக்கு வந்தனம் சொன்னால் புகழ், வலிமை, ஆயுள், கல்வி கிடைக்கும் என்ற ஸ்லோகமும் ஒருவனைப் பூஜிக்க அடிப்படையான ஐந்து அம்சங்களை விளக்கும் ஸ்லோகமும் அருமையானவை
.தமிழ்நாட்டிலும் மஹாராஷ்டிரத்திலும் தோன்றிய அரசியல்வாதிகள் பிராமணர் அல்லாதோர் அனைவரையும் சூத்திரர் ஆக்கிவிட்டார்கள். உண்மையில் அந்த நாலாவது வருணத்தார் மிகவும் குறைவே.
அவர்களில் மிகவும் வயதானோரை மற்ற மூன்று வருணத்தாரும் மதிக்க வேண்டும் என்ற ஸ்லோகம் குலத்தால் ஒருவர் தாழ்ச்சி இல்லை என்பதைக் காட்டுகிறது.
ஒவ்வொருவரையும் நலம் விசாரிப்பது எப்படி என்ற ஸ்லோகத்தில் சூத்திரனை, சுகமாக இருக்கிறீர்களா? என்று மரியாதையுடன் விசாரிக்க வேண்டும் என்று மநு விதிக்கிறார். ஆகையால் எவ்வளவு சம நிலையுடன் அணுகப்படுகிறது என்பது புலப்படும். விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகத்திலும் “சூத்ர சுகம் அவப்னுயாத்” என்று வேண்டப்படுகிறது. எங்குமே அவனுக்கு எதிராக நெகட்டிவ் – வசவு வாக்கியம் கிடையாது.
வேதப் படிப்பு முதலியவற்றில் அவன் தொடர்பு இருக்கக் கூடாது என்ற கடுமையான வாசகங்களைக் காண்கிறோம்; அவர்கள் ஏதோ வேதம் கற்க ஆர்வத்தோடு ஓடி வந்த போது பிராஹ்மணர்கள் அதைத் தடுத்துவிட்டார்கள் என்று எண்ணுவது நகைப்புக்குரிய விஷயமாகும்; பிராஹ்மணர்களே வேதம் கற்பதை நிறுத்திவிட்ட இன்றை நிலையைப் பார்க்கையில் இது இன்னும் நன்றாக விளங்கும்.

ஜாதி என்பது உலகம் முழுதும் உளது. இந்தியாவில் அரசியல்வாதிகள், தங்கள் குடும்பத்தினரை மந்திரி பதவியில் அமர்த்துகின்றனர்; கட்சிப்பதவிகளில் நியமிக்கின்றனர். கீழ்ஜாதி மக்கள் தங்களி மேலும் கீழ் ஜாதிகளாக அறிவித்து எப்போதும் வேலை, கல்வி நிறுவனச் சலௌகை தரவேண்டும் என்கின்றனர். அவர்கள் செல்வந்தர்களாக இருந்தும் ஜாதி ஒதுக்கீட்டு ம்சலுகைகளைப் பெறுவதிலிருந்து அவர்கள் செய்யும் மோசடி அம்பலம் ஏற்கிறது. பிரிட்டனிலும் ஆதிகள் உண்டு; அரச ஜாதியினரே அரசனாக முடியும்; பிரபுக்களின் வம்சாவளியினரே பிரபு வாக முடியும்; இவை அனைத்தும் பிறப்பு மூலமே கிடைக்கின்றன. நடிக,நடிகையர் மகன்கள், மனிவிகள் மட்டும் ஏதாவது ஒரு சினிமாத் துறயில் புகுந்து விடுகின்றானர்.
ஆயிரம் தகப்பன் = ஒரு தாய்
பெண்ணின் மதிப்பை மநு தொடர்ந்து போற்றி வருகிறார். இங்கே ஒரு ஸ்லோகத்தில் ஒரு தந்தையைவிட தாய் ஆயிரம் மடங்கு உயர்ந்தவள் என்ற ஸ்லோகம் மிகவும் அருமையானது.
வண்டிகள் போக்குவரத்தில் யார், யாருக்கு வழிவிட வேண்டும் என்ற விதிமுறை போன்றவற்றைப் பார்க்கையில் , இக்காலத்தில் உள்ள ப்ரயாரிட்டி PRIORITY, RIGHT OF WAY ரைட் ஆf வே நினைவுக்கு வருகிறது. மநு இந்தப் போக்குவரத்து பற்றி கூட பேசுகிறார்
அண்ணன், மனைவி முதலியோருக்குக் கூட மதிப்பும் மரியாதையும் தரப்படுகிறது.
உபாத்யாயன், ஆச்சார்யன், குரு, ரித்விக் முதலிய வருணனைகள் இக்காலத்துக்குத் தேவை இல்லாதாகிவிட்டது..
தொடரும்………………….