செருப்பால் அடி — தமிழ்ப் பாடல் (Post No.5539)

written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 14 October 2018

 

Time uploaded in London – 10-31 am (British Summer Time)

 

Post No. 5539

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

தற்காலத்தில் சில சொற்களைப் பயன்படுத்த நாம் தயங்குகிறோம். உதாரணமாக மயிர், செருப்பு. ஆனால் அந்தக் காலத்தில் அப்படி இல்லை. மயிர் , செருப்பு முதலிய சொற்களைத் தேவைப்பட்ட இடத்தில் பயன்படுத்துவர்.

 

மேலும் வள்ளுவர் போன்றோர் அஹிம்ஸை முதலியவற்றில், தேவையில்லாமல் நம்ப மாட்டார்கள். ‘ஆடுற மாட்டை ஆடி கற; பாடுற மாட்டைப் பாடிக் கற’ என்பது அவர்களின் பாலிஸி. மரண தண்டனை இருந்தல்தான் சமூகம் சிறக்கும் என்பது அவர்கள் கூற்று. வள்ளுவரே மரணதண்டனைப் ப்ரியர். அது மட்டுமல்ல. கஞ்சப் பயல்களைக் கண்டால் ஓங்கி தாடையில் ஒரு குத்து விட்டு கையை  முறுக்கி காசு வாங்கு என்கிறார்.

 

முதலில் செருப்படிப் பாடலைப் பார்த்துவிட்டு குறளுக்குப் போவோம்.

பொருட்பாலை விரும்புவார்கள் காமப்

பாலிடை மூழ்கிப் புரள்வர் கீர்த்தி

அருட்பாலா மறப்பாலைக் கனவிலுமே

விரும்பார்கள் அறிவு ஒன்றில்லார்

குருபாலர் கடவுளர்பால் வேதியர்பால்

புரவலர்பால் கொடுக்கக் கோரார்

செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே

கோடி செம்பொன் சேவித்தீவார்

–விவேக சிந்தாமணி (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)

 

பொருள்

செல்வத்தில் அதிக விருப்பம் கொள்பவர்கள் அருளாகிய செல்வத்தைத் தரும் தருமத்தைக் கனவிலும் விரும்பமாட்டார்கள் ஆசிரியருக்கும். கடவுளுக்கும், பிராஹ்மணர்களுக்கும், புரவலர்க்கும் ஒரு பொருளும் தர மாட்டார்கள். கோடி செம்பொன்னாக இருந்தாலும்   செருப்   பால் அடித்துப் பறிப்போருக்கே சலாம் போட்டுக் கொடுப்பார்கள்.

xxx

 

கன்னத்தில் அடி, கையை முறுக்கு, கரும்பு போல நசுக்கு!

 

தமிழ் வேதம் ஆகிய திருக்குறள் சொல்லும்:

 

அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்

கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)

 

பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.

 

பரிதியார் உரை:  கொறடாலே அடிப்பவர்க்குக் கொடுப்பர்

காளிங்கர் உரை: கொடிறு போல இடுக்கிப் பிடித்து உடம்பை உடைக்கும் திறமையால் கூனிய கையினை உடையோர்.

 

இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ் (1078)

 

மரண தண்டனைக்கு ஆதரவு

மரண தண்டணைக்கு ஆதரவு தருபவன் வள்ளுவன். அவன் தீவிர அஹிம்சாவாதி அல்ல. தீயோரை அழிப்பது பயிர்களின் களைகளை நீக்குவது போல என்று அழகான உவமை தருகிறான். இதோ அந்தக் குறள்:

 

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனோடு நேர் (550)

 

பொருள்: நாட்டில் உள்ள கொடியோரை மரண தண்டனை கொடுத்து அழிப்பது, பயிர்கள் நன்றாக வளர உழவர்கள் களை எடுப்பது போல் ஆகும்.

 

காதலர் இல்வழி மாலை கொலைகளத்து

ஏதிலர் போல வரும் – குறள் 1224

 

காதலர் இல்லாத மாலைப் பொழுது , கொலைக்களத்தில் மரணதண்டனையை  நிறைவேற்ற வரும்  ஆளைப் போல வருகிறது

பாரதியும் பாடுகிறான்

பாதகம் செய்பவரைக் கண்டால்—நாம்
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

 

‘’வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்

நெஞ்சகத் தருக்குடை நீசர்கள் இன்னோர்

தம்மொடு பிறந்த சகோதரர் ஆயினும்

வெம்மையோடொறுத்தல் வீரர் தம் செயலாம்’’.

 

வாழ்க வள்ளுவன்!! வளர்க வன்முறை!!!! (அயோக்கியர்களுக்கு எதிராக)

 

–subham–