
Radio Talk written by S NAGARAJAN
Date: 20 November 2015
POST No. 2344
Time uploaded in London :– 5-50 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

உலகெங்கும் உள்ள வனப் பகுதிகள் பல்வேறு காரணங்களுக்காக அழிக்கப்படும் நிலை கூடிக் கொண்டே போகிறது.
வன விலங்குகளை வேட்டையாடுவது, வனப்பகுதிகளை அழித்து விவசாயம் பரவலாக்கப்படுவது, வனத்தில் இருக்கும் மரங்களை வெட்டுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் வனச் செல்வம் அழிவு பட்டு அதனால் உலகளாவிய அளவில் பல்வேறு அபாயங்கள் ஏற்பட்டு வருகின்றன.
உலகின் மிகப் பெரிய மழைக் காடுகள் அமைந்துள்ள அமேஸான் பகுதியும் இந்த அபாயத்திற்கு உள்ளாகி இருப்பது அனைவரையும் கவலையுற வைத்துள்ளது.
பிரேஜில் நாட்டில் உள்ள 19 நகரங்களின் ஜனத்தொகையானது கடந்த பத்து ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. இந்த 19 நகரங்களில் 10 நகரங்கள் அமேஸான் வனப் பகுதியில் உள்ளவையாகும். நாளுக்கு நாள் அமேஸான் காடுகள் அழிக்கப்பட்டு வருவதையே இது குறிக்கிறது.
காட்டுச் செல்வம் அழிக்கப்படும் போது அங்குள்ள வன விலங்குகள் வேட்டையாடப்பகுகின்றன. இதனால் பல விலங்கினங்கள் முற்றிலுமாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களை ஏற்படுத்தவும் அன்றாட உபயோகங்களுக்காகவும் மரங்கள் அழிக்கப்படுவதால் மழை வளம் குறைவதோடு புவி வெப்பம் உயரும் அபாயமும் ஏற்படுகிறது. இது உலகளாவிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
நூறாண்டுகள் வாழ்ந்த மரங்கள் வெட்டப்படும் போது பல உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரமாக அவை விளங்குவதை மறந்து விடக் கூடாது. 30 சதவிகித பறவை இனங்கள் கூடுகள் கட்டி வாழவும், பல்வேறு விலங்கினங்கள் இளைப்பாறவும் உதவும் மரங்கள் பெருமளவு கார்பனை உறிஞ்சி சேமிக்கின்றன. மண் வளத்தின் மறு சுழற்சிக்கு மரங்கள் பெரிதும் உதவுகின்றன. பெரிய மரங்கள் மனிதர்களுக்கும் பல்வேறு விலங்கினங்களுக்கும் ஏராளமான உணவை அளிக்கின்றன.பழங்கள், காய்கள், மலர்கள் என அமுதத்திற்கு நிகராக அவை வழங்கும் உணவுச் செல்வம் மதிப்பிட முடியாத ஒன்று.

சமீபத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி நமது நாட்டின் 14 நகரங்களில் வனப்பகுதிகள் குறைந்து கொண்டே வருகிறது. இதுவரை 367 சதுர கிலோமீட்டர் வனப்பரப்பு குறைந்துள்ளது.ஒவ்வொரு மரமும் வெட்டப்படும் போது வாழ்வாதாரம் சிறிது வெட்டப்படுகிறது என்பதே பொருள்.
எதிர்கால சந்ததியினருக்கு மழைவளத்தையும் குறைக்கிறோம் என்பது நீண்ட கால விளைவுகளில் ஒன்று. ஆகவே அரிய வனப் பகுதிகளை எந்தக் காரணத்திற்காகவும் அழித்தல் கூடாது; அவற்றைப் பாதுகாக்க சட்டம் இயற்றியுள்ள அரசோடு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
***
You must be logged in to post a comment.