
Written by S.NAGARAJAN
Date: 11 NOVEMBER 2017
Time uploaded in London- 5-32 am
Post No. 4385
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
நண்பரா, கைக்கூலியா!
மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017
இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.
மாக்ஸ்முல்லர் மர்மம்! – 7
ச.நாகராஜன்
10
பாரிஸிலிருந்த தனது தாயாருக்கு அவர் 1845ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள அம்மா, உங்களிடமிருந்து பணம் வாங்கியதற்கு பதிலாக கொஞ்சம் மகிழ்ச்சியை நான் கொடுத்திருக்கலாம். ஆனால் அது முடியாத காரியம் – எனது எதிர்காலத்தை நான் முற்றிலுமாக தியாகம் செய்தாலொழிய…. லெடர்ஹோஸிடமிருந்து இன்னும் 200 ஃபிராங்குகளை நான் வாங்க வேண்டியிருந்தது. நீங்கள் இப்போது அனுப்பியுள்ள பணத்தை வைத்து ஜனவரி அல்லது பிப்ரவரி வரை ஓட்ட முடியும்” என்று எழுதியுள்ளார்.
கடிதத்தின் ஆங்கில மூலத்தைக் காண்போம்.
TO HIS MOTHER. PARIS, December 23, 1845.
“…instead of taking money from you, my dearest mother, I could have given you some little pleasure. But it was impossible, unless I sacrificed my whole future… I have again had to get 200 francs from Lederhose, and with the money you have just sent shall manage till January or February.”
1847ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று அவர் தன் தாயாருக்கு எழுதுகையில்,”எனது லண்டன் அறைகள் பிரமாதமாக இருக்கின்றன.கீழ்த்திசை ஆராய்ச்சியாளரான டாக்டர் ட்ரிஹென்னும் அதே வீட்டில் தான் தங்கி இருக்கிறார். அவரை எனக்கு பாரிஸிலேயே தெரியும். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவர் வெளியுறவு இலாகாவில் பணிபுரிந்து வந்தார். இன்னும் பல கீழ்த்திசை ஆராய்ச்சியாளர்கள் எனக்கு அருகிலேயே வசித்து வருகின்றனர். உலகின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களையும் கொண்டு ஒரு ஓரியண்டல் காலனியையே இங்கு உருவாக்கியுள்ளோம். நல்ல வேடிக்கை பொழுதுபோக்குகளை எங்கள் காஸ்மாபாலிடன் தேநீர் அருந்தும் மாலை நேரங்களில் கொண்டுள்ளோம்” என்று எழுதுகிறார்.
கடிதத்தின் ஆங்கில மூலத்தைப் பார்ப்போம்:
TO HIS MOTHER. September 1, 1847.
“My rooms in London are delightful. In the same house lives Dr. Trithen, an orientalist, whom I knew in Paris, and who was once employed in the Office for Foreign Affairs in St. Petersburg. Then there are a great many other orientalists in London, who are mostly living near me, and we form an oriental colony from all parts of the world… We have a good deal of fun at our cosmopolitan tea-evenings.”
அதாவது மாக்ஸ்முல்லர் லண்டனில் ஒருவாறாக ‘செட்டில்” ஆகி விட்டார்.
ஆக கடுமையான பணத்தட்டுப்பாட்டில் இருந்த மாக்ஸ்முல்லருக்கு ஈஸ்ட் இந்தியா கம்பெனி மூலம் ஒரு வழி பிறந்தது. மளமளவென்று “எதையாவது” செய்து அவர்களைத் திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார்.
மனம் போனபடி அவர் வேதங்களின் மொழி பெயர்ப்பைத் “தயார்” செய்யலானார்.
தனது மொழி பெயர்ப்பைப் பற்றி அவரே தனது “Vedic Hymns” என்ற புத்தகத்தில், “எனது வேத மொழியாக்கம் ஊகத்திற்கிடமானது” (“My translation of the Vedas is conjectural”) என்று கூறியுள்ளார்.
வேதத்திற்கு பல பொருள்கள் உண்டு. அதை உள்ளுணர்வு பெற்றவர்களே சரியாக அறிய முடியும். வெறும் கற்றுக் குட்டிகளை வைத்து வார்த்தைகளைத் தனக்குத் தோன்றிய பொருளில் அவர் மொழியாக்கம் செய்தது தவறு.
பல கொள்கைகளை அவர் உருவாக்கினார். ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள், வேதத்தின் காலம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது போன்ற கருத்துக்களை அவர் வித்திட்டார்.
இப்படிச் சொன்னதால் அவர் “அறிஞராக்கப்பட்டார்.”
மிஷனரிகளுக்குத் தேவையான அனைத்து விதைகளும் அவர் தந்து விட்டதால் ‘செடிகளை வளர்ப்பது” அவர்களுக்குச் சுலபமானது.
ஆனால் பின்னால் இதே மாக்ஸ்முல்லர் தன் கருத்துக்களைத் திருத்திக் கொள்ள முற்பட்டபோது அதே கிறிஸ்தவ மிஷனரிகளால் கடுமையாக விமரிசிக்கப்பட்டு தாக்கப்பட்டார்.
அதையும் பார்ப்போம்.
–தொடரும்
****