Post No. 10,160
Date uploaded in London – 1 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் எழுதிய சர் ஆர்தர் கானன் டாய்ல் (Post No.10,160)
ஷெர்லக் ஹோம்ஸ் SHERLOCK HOLMES என்ற புகழ் பெற்ற கற்பனை கதாபாத்திரத்தைப் படைத்தவர் சர் ஆர்தர் கானன் டாய்ல் SIR ARTHUR CONAN DOYLE என்ற ஆங்கில டாக்டர் ஆவார். ஷெர்லாக் ஹோம்ஸ், உலகின் புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர் ஆவார் . உண்மையில் எவரும் அப்படி இல்லை. இது கானன் டாயில் கற்பனையில் உருவான ஒரு ஆள்தான்.
ஆர்தர் கானன் டாய்ல் , ஸ்கட்லாந்திலுள்ள எடின்பரோவில் பிறந்தார். அங்குள்ள பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயின்றார். அங்கு பல்கலைக் கழகத்தில் பல்துறைப் பேராசிரியர்களைச் சந்தித்தார். அவர்களுடைய ஆராய்ச்சி மனப்பான்மையினயும் அணுகு முறைகளையும் ஒரு கதாபாத்திரத்தில் ஏற்றி ஷெர்லக் ஹோம்ஸ் என்ற கற்பனைத் துப்பறியும் நிபுணரை உருவாக்கினார். அதாவது எதையும் துப்புத் துலக்க, ஏன், எப்படி, எதற்காக , எவ்வாறு இதை செய்திருப்பார்கள் என்று சிந்தித்து அணுகும் முறை.
கானன் டாய்ல் படிப்பு முடிந்தவுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் டாக்டர் பணியை ஏற்று தென் ஆப்பிரிக்காவில் போயர் BOER WAR யுத்தம் நடந்த போது அங்கே டாக்டராக இருந்தார். பின்னர் இங்கிலாந்துக்குத் திரும்பிவந்து போயர் யுத்தம் பற்றி இரண்டு புஸ்தகங்கள் எழுதினார். இதற்காக அவருக்கு SIR ‘ஸர்’ பட்டம் வழங்கப்பட்டது .
கானன் டாய்ல் , இருபது , முப்பது வயது இருக்கும்போதே , டாக்டராகப் பணியாற்றும் போதே , ஷெர்லக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தைப் படைத்தார். போலீஸார் வேறு ஒரு வழியைக் கடைப்பிடித்துத் துப்புத் துலக்க முடியாமல் திணறும்போது அங்கே ஷெர்லாக் ஹோம்ஸ் சென்று தர்க்கரீதியில் சிந்தித்து துப்புத் துலக்கி விடுவார். இதற்கு அவருக்கு உறுதுணையாக நிற்பது மற்றோரு கதாபாத்திரமான டாக்டர் வாட்ஸன் DR WATSON ஆவார். டாக்டர் வாட்சன் வாய்மொழி மூலமாகவே கதைகள் வெளியாகும். இவ்விருவரும் இனிய நண்பர்கள் . மேலும் பணத்துக்காக துப்புத் துலக்காமல் பொழுது போக்கிற்காக, இந்தப் பணியைச் செய்வது போல கதைகள் எழுதப்பட்டிருக்கும் .
இவ்வகைக் கதைகளுக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது. இதனால் 32 வயதில் முழு நேர எழுத்தாளர் ஆனார். இவ்வளவு இளம் வயதில் வெற்றி பெற்ற ஒரு சிலரில் கானன் டாய்ல் முதலிடம் வகிக்கிறார். அவருடைய கதைகள் உலகில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. நாடகம், திரை ப்படங்கள் முதலியவற்றுக்கு மூலக் கதைகளாக அமைந்தன.
ஒரே கதா பாத்திரத்தை வைத்து நிறைய கதைகள் எழுதியவுடன் அவருக்கே BORE போர் அடித்துவிட்டது. ஒரு கதையில் ஷெர்லாக் இறக்கப் போவதாகக் காட்டியவுடன் ரசிகர்கள் பலத்த எதிர்ப்பையும் ஏமாற்றத்தையும் தெரிவித்தனர் . உடனே கானன் டாய்ல் , அவருக்குப் புத்துயிர் கொடுத்து நடமாடவிட்டார்! அவருக்கு கதைகள் தவிர வேறு பல விஷயங்களிலும் ஈடுபாடு உண்டு. இதனால் ஆன்மிகம், வரலாறு, அரசியல் பற்றியும் நிறைய புஸ்தகங்களை எழுதினார். ஆயினும் அவருடைய துப்பறியும் கதைகளே அவருக்குப் புகழ் ஈட்டித்தந்தன
XXX
பேக்கர் ஸ்ட்ரீட் FAKE BAKER STREET ADDRESS
சர் ஆர்தர் கானன் டாய்ல் தன் கதாபாத்திரத்துக்கு பேக்கர் ஸ்ட்ரீட்டில் ஒரு வீடு இருப்பதாக முகவரியையும் கொடுத்து எழுதுவார். இதனால், லண்டனுக்கு வரும் பயணிகள் . அந்த வீட்டைத் தேடி , அலைவார்கள். ஆனால் அப்படி ஒரு இடம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்புவார்கள் (1987-ம் ஆண்டில் நான் லண்டனுக்கு வந்தபோது என் நண்பர்களுடன் இப்படி அலைந்ததுண்டு) இப்பொழுது பேக்கர் ஸ்ட்ரீட் ஸ்டேஷன் வாசலிலேயே ஷெர்லாக் ஹோம்ஸ் சிலை வைத்துள்ளனர். அதற்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வோர் ஏராளம். இது தவிர பல போலி மியூசியங்களும் அவர் பெயரில் உள்ளன. காசு கொடுத்து ஏமாந்துவிடாதீர்கள்
பிறந்த தேதி -மே 22,1859
இறந்த தேதி – ஜூலை 7, 1930
வாழ்ந்த ஆண்டுகள் – 71
கானன் டாய்ல் எழுதிய முக்கியக் கதைகள், நூல்கள் :–
1887 – A STUDY IN SCARLET
1890 – THE SIGN OF FOUR
1892 – THE ADVENTURES OF SHERLOCK HOLMES
1894 – THE MEMOIRS OF SHERLOCK HOLMES
1902 – THE HOUND OF BASKERVILLES
1905 – THE RETURN OF SHERLOCK HOLMES
1914 – THE VALLEY OF FEAR
XXX
6-1-2016ல் நான் எழுதி இந்த பிளாக்கில் பதிவான சுவையான சம்பவம் இதோ
துப்பறியும் கதை நிபுணரை அசத்திய டாக்ஸி டிரைவர்! (Post No. 2465)
ஆங்கிலக் கதை படிக்கும் அனைவர்க்கும் தெரிந்த துப்பறியும் கதா பாத்திரம் ஷெர்லாக் ஹோம்ஸ். அந்தக் கற்பனைக் கதா பாத்திரத்தை உருவாக்கியவர் சர் ஆர்தர் கானன் டாய்ல். அப்பேற்பட்ட துப்பறியும் நிபுணரை ஒரு டாக்சி டிரைவர் பிரமிக்கவைத்த ஒரு சம்பவம்:-
நாவல் ஆசிரியர் ஆர்தர், பாரிஸில் வந்து இறங்கினார். ரயில்வே ஸ்டேஷன் வாசலில் வரிசையாக நிற்கும் ஒரு டாக்ஸியில் ஏறினார். ஹோட்டல் வாசல் வந்தவுடன் கட்டணத்தைக் கையில் கொடுத்தார் சர் ஆர்தர் கானன் டாயில்.
நன்றி, திரு.கானன் டாயில் – என்றார் டாக்சி ட்ரைவர்.
ஆர்தர்: ஏய், நில். என் பெயர் எப்படி உனக்குத் தெரியும்?
டாக்ஸி டிரைவர்: அதுவா? இன்று காலையில் பத்திரிக்கையில் ஒரு செய்தி படித்தேன். அதில் நீங்கள் இன்று தென் பிரான்ஸ் பகுதியிலிருந்து பாரீஸ் மாநகரம் வரப்போவதை அறிந்தேன். நீங்கள் வந்தவுடன் உங்கள் முகத்தைப் பார்த்தவுடன் ஆங்கிலேயன் என்று புரிந்துகொண்டேன். எங்களுக்கு உங்கள் நாட்டுக்காரர்களின் நடை, உடை, பாவனை எல்லாம் அத்துபடி. மேலும் உங்கள் தலையைப் பார்த்தேன். தென் பிரான்ஸ் பகுதி நாவிதர்கள் முடிவெட்டிய பாணி (ஸ்டைல்) அதில் தெரிந்தது. உடனே நீங்கள்தான் சர் ஆர்தர் கானன் டாயில் என்று நினைத்தேன்.
ஆர்தர்- பலே, பலே! இதைவைத்து மட்டும் கண்டுபிடித்த உன் மூளை அபார மூளை. சரி, அது எப்படி நான் தான் ஆர்தர் என்று உறுதி செய்தாய்?
டாக்ஸி டிரைவர்: ஓ, அதுவா? உங்கள் பெட்டியில் தொங்கும் அடையாள அட்டையில் உங்கள் பெயர் எழுதியிருக்கிறதே!!!!!!!
ஆர்தர்:- !!!!! ??? !!!!!! ???? !!!!!!!!!!!!!!
XXX SUBHAM XXX
tags – ஷெர்லக் ஹோம்ஸ் , சர் ஆர்தர் கானன் டாய்ல் , Sherlock Holmes, Sir Arthur Conan Doyle